இனிதான பொழுது நமதாகுமோ.!
அத்தியாயம் – 01
உன்னுடன் வாழும்
கனவு வாழ்க்கையை
நிஜமாக்கி கொடுத்து
விடு என்னிடம்..
இல்லையென்றால்
கனவோடு சேர்ந்து
நானும் கரைந்து போவேன்
காற்றில்….!
திருவனந்தபுரம் பன்னாட்டு விமானநிலையம்…
அந்த அதிகாலை வேலையிலும் ஜனத்திரலோடும் விமானங்களின் அறிவிப்போடும் பரபரப்புடன் காட்சியளித்தது… அடுத்துவரும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்திற்காக, பயணிகள் காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தாள் சஷ்டிகா…
தன்னைச்சுற்றிலும் ஒருமுறைப் பார்வையை சுழற்றியவள், உடைகளையும் உடமைகளையும் ஒருபார்வைப் பார்த்துவிட்டு கண்ணீர் பொங்கி அவளது இருபுறமும் செவியின் ஓரம் வழிய, அதை ஒரு பொருட்டாய் கூட உணராமல் ‘எப்போது அழைப்பார்களோ’ என்று ஒருவித அவசரத்துடனே தலையை பின்னோக்கி சாய்த்து அமர்ந்திருந்தாள்…
நொடிகள் நிமிடங்களானதோ, நிமிடங்கள் மணிகளானதோ, ஒர் இரும்புக்கரம் தன்தோள் மேல் கொடுத்த அழுத்தத்தில் பட்டென்று விழித்தவள், எதிரே சிவந்தவிழிகளுடன் முகமெல்லாம் கோபத்தில் ஜொலிக்க, இறுகியத் தோற்றத்துடன் நின்றிருந்தவனைப் பார்த்து அரண்டு போய் எழுந்து நின்றாள்…
‘சென்னையில் இருப்பவன் அதற்குள் இங்கு எப்படி வந்தான்…’ என்ற குழப்பத்தில் நெற்றி சுருங்க நின்றவளுக்கு விடை கொடுத்தது போல் அவனுக்குப் பின்னே “பாலா… வெயிட் பாலா…” என்று மூச்சிரைக்க கிட்டத்தட்ட அவனை தள்ளிவிடுவது போல் வந்து நின்றாள் ஸ்ருதி… பாலனின் தங்கை, சஷ்டிகாவின் உயிர்த்தோழி…
மூன்று கோணங்களாய் நின்று கொண்டிருந்த மூவரின் மத்தியிலும் அடுத்த சில நொடிகள் அமைதியே ஆட்சி செய்தது… அந்த அமைதியை களைக்கும் பொருட்டு, “சஷ்டி… நான் வந்து…” என்று தோழியை சமாதானம் செய்ய முயன்ற ஸ்ருதியை ஒரு பொருட்டாய் கூட மதிக்காமல், அங்கிருந்தவர்கள் அவர்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலை கூட இல்லாமல் தன்னுடன் வந்த தங்கையையும் கவனிக்காமல் சஷ்டியை இழுத்துக் கொண்டு நகர்ந்தான் சிவபாலன்…
“விடு… விடுடா… என்னை விடுடா…” என்றவளின் திமிறலை சற்றும் பொருட்படுத்தாமல் இழுத்துக் கொண்டு காரில் தள்ளியவன், தானும் ஏறி அதை புயல் போல் இயக்கினான்…
பாலனின் இந்த செய்கையை கண்டு, அவனிடம் உண்மையைக் கூறிய தன்னையே நொந்து கொண்ட ஸ்ருதி, அங்கிருந்த சஷ்டியின் லக்கேஜை பார்த்தபடி தன்னை தனியாக அம்போவென்று விட்டுச்சென்ற தன் அண்ணனை என்ன செய்வது என்ற யோசனையில் அங்கிருந்த சேரில் பொத்தென்று அமர்ந்தாள்.
ஆனால் அதற்கு நேர்மாறாக அவளது எண்ணங்கள் தன் உயிர்த் தோழியான சஷ்டியிடமே சென்றது…
காரின் உள்ளே இருந்தவள் தன் இருபக்கமும் உள்ள கதவுகளைத் திறக்க முயற்சித்து தோற்றுப் போய் அவனை முறைத்துக் கொண்டிருக்க, அவனோ முகத்தில் இருந்த இறுக்கம் குறையாமல், காரை ஓட்டுவது மட்டுமே தன் வேலை என்பது போல், அதிலேயே குறியாக இருந்தான்…
தன்னுடைய எந்த செயலுக்கும் அவனிடம் ஒரு பிரதிபலிப்பும் இல்லை என்று உணர்ந்தவள், தலையைக் கைகளில் தாங்கிய படி குணிந்திருந்தாள்…
கண்களில் உதிரும் நீர் அவளது மனதின் வலியைக் கூறியது…
முன்பக்கம் இருந்த கண்ணாடியின் வழியே அவளது ஓய்ந்த தோற்றம் தெரிய அவன் முகமும் வலியயைக் காட்டியது… மனம் அவளுக்காய் இளகத் தொடங்கியது அதுவும் ஒரு நொடியே…
‘அவள் தன்னை விட்டு போவதற்கான முடிவை எடுத்தவள்’ என்ற உண்மை உணர, முகத்தை மீண்டும் கடுமையாக்கினான்… கார் மார்த்தாண்டத்தை தாண்டிய நெடுஞ்சாலையில் செல்லாமல், கிளைச்சாலையில் செல்லவுமே அவளுக்கு புரிந்துவிட்டது…
‘கடவுளே…’ என்று மனம் கூக்குரலிட, தனக்குள் உருவாக்கிய கட்டுப்பாட்டையும் மீறி “சிவா… ப்ளீஸ் நான் உன்கிட்ட சொன்னேன் தானே, மறுபடியும் நீ அதேயே செய்தா என்ன அர்த்தம். ப்ளீஸ் அண்டர்ஸ்டேன்ட்… யூ ஆர் போர்ஸிங் மீ, நான் ஒன்னும் சென்டிமென்டல் இடியட் இல்ல, இப்படியெல்லாம் செய்து என்னை மயக்க முடியாது…”
“எத்தனை தடவை எங்க வச்சு எப்படி கேட்டாலும் என்னோட பதில் ஒன்னே ஒன்னுதான்… ஐ ஹேட் யூ… நான் உன்னை வெறுக்கிறேன். என்னால உன்னை மேரேஜ் பண்ணிக்க முடியாது… எப்பவுமே முடியாது… நான் என் பேமிலிக்குத் துரோகம் செய்யமாட்டேன்…” என்று பலவாறு கத்திக் கொண்டே வந்தாள்…
சடன் ப்ரேக் போட்டுக் காரை நிறுத்த, அதுவும் ஒரு குலுக்கலுடன் நிற்க, அதிர்ந்து போய் பயத்துடன் அவனையேப் பார்த்தாள் சஷ்டிகா…
“என்னைக் கல்யாணம் செய்துக்க மாட்ட? ரைட்.. ஓகே… நான் உன்னை போர்ஸ் பண்ணல, யூ டோண்ட் வொரி… ஐப்ராமிஸ் யூ. பட்..” என்று நிதானமாய் இழுத்தவன் “நான் உன்னை மேரேஜ் செய்துருக்கேனே, அத என்ன செய்ய, அதுவும் ரிஜஸ்டர் மேரேஜ்… உன்னால எதுவும் செய்ய முடியாது… இப்போ நான் என்ன செய்யனும்னு சொல்லிட்டா, நான் என்னோட வேலையைப் பார்த்துட்டு போயிட்டே இருப்பேன்…” மிகவும் கூலாக வந்தது அவனிடமிருந்து…
“வாட்… மேரேஜா… அதுவும் ரிஜிஸ்டர் மேரேஜ்… இது எப்போ நடந்தது… நான் எப்போ சைன் பண்ணேன்… நோ… நோ…. நீ என்னை ஏமாத்துற… பொய் சொல்ற…” அவனது மனநிலைக்கு எதிராய் கத்தினாள் சஷ்டி…
அவளது கத்தலைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், காரின் டேஷ்போர்டில் இருந்து ஒரு கவரை எடுத்து அவளிடம் நீட்டினான்… அதைப் பறித்து வேகவேகமாய் பார்வையை ஓட்டியவளின், முகத்தில் தெரிந்த உணர்வுகளை மௌனமாய் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா என்ற சிவபாலன்…
‘இதுஎப்படிசாத்தியம்….’ கண்களை மூடி யோசித்தவளுக்கு நொடியில் விடை கிடைத்தது… ஸ்ருதி… ஸ்ருதியோட வேலைதான் இது… அன்று ஊருக்கு கிளம்பும் அவசரத்தில் தன்னிடம் கையெழுத்து வாங்கியது ஞாபகம் வந்தது… ஆனால், அது ப்ரபசர் கேட்டதாகத்தானே சொன்னாள்… படிக்காமல் அவள்மேல் இருந்த நம்பிக்கையில் செய்ததன் முட்டாள்தனத்தை எண்ணி நொந்து கொண்டு, அனல் பார்வையை அவனை நோக்கி வீசினாள் சஷ்டி…
பெண்ணவள் முகத்தில் தோன்றிய அடுத்தடுத்த உணர்வுகளை, மௌனமாய் உள்வாங்கியவன், அவளுக்கு எதிரே வந்து நின்று, “நீ என்னை அவாய்ட் பண்றது கூடத் தெரியாத அளவுக்கு நான் என்ன முட்டாளா…? லாஸ்ட் டைம் நீ என்கிட்ட இயல்பா பேசினது நடந்துக்கிட்டது, உன்னோட காதலை உணர்ந்து என்னை காதல் மழையில் நனைய வச்சது எல்லாம் இதோ இந்த அருவிக்கரையில்தான்… தெரியுமா..? ” என்று ரசனையாய் சொன்னவன், அன்றைய நாளை நினைவு கூர்ந்தான்.
சிவா அவளிடம் காதலைச் சொல்லி, பதிலுக்காக காத்திருந்த சமயம் அது. எத்தனை முறை முயன்றும் அவள் அவனுக்கான பதிலைக் கொடுக்க முன்வரவில்லை. ஆனால் அவனை மனதளவில் உயிராக விரும்புகிறாள் என்று அவனுக்குப் புரியத்தான் செய்தது. அவள் வாய்வழியாக சம்மதத்தைப் பெற்றே ஆகவேண்டும் என்று முடிவு செய்து அதற்காக் ஒரு திட்டமும் தீட்டினான்.
இயற்கையின் அழகை ரசிப்பதில் அவளைப் போல் யாரையும் பார்த்ததில்லை என்று ஒருமுறை ஸ்ருதி கூற கேட்டிருக்கிறான். அப்படியான இடத்திற்கு அழைத்துச் சென்றால் தன்னைச் சுற்றி போட்டு வைத்திருக்கும் வேலியை உடைத்து வெளியே வந்துவிடுவாள் என்று நினைத்தான்.
அதன்படியே அவளை அழைத்துக் கொண்டு அருவிக் கரைக்குச் சென்றான். சுற்றிலும் மரங்கள் சூழ, சூரியனின் கரங்கள் அந்த இடத்தை முற்றிலும் அணுகாமல், ஆங்காங்கேத் தன் கதிர்களைப் பரப்பியிருக்க, அதுவோ கொட்டு அந்த அருவியின் நீரில் பட்டு வெள்ளியாய் தகதகத்தது.
சுற்றிலும் பசுமை, பாலாய் கொட்டும் அருவி, அருவி நீரில் பட்டுத் தெரிக்கும் வெள்ளிக் கம்பிகளாக சூரியனின் கதிர்கள் அத்தனை ரம்மியமாய் அந்த இடம் அமைய, அருகில் நின்றவனின் கைகளைப் பற்றியிருந்தவளின் இறுக்கம் மெல்ல மெல்ல கூடிக்கொண்டே போக, ஒருக்கட்டத்தில் அவன் தோள்வளைவில் சாய்ந்தபடியே அந்த இயற்கையின் வரப்பிரசாதத்தை அள்ளிப் பருக ஆரம்பித்திருந்தாள்.
அவளது மோனநிலையை அறிந்தவன், சற்றும் யோசிக்காமல் தன் கைகளுக்குள் அள்ளி, கொட்டும் நீரின் நடுவில் நிற்க, மேலு அவனோடு ஒன்டிக்கொண்டாள் பெண். அன்றைய ந்னாளின் தாக்கத்தில் அவன் முகத்தில் மலர்வும், அவள் முகத்தில் இறுக்கமும் ஒரு சேர வந்தமர்ந்தது.
அவனை வெறுமையாய் பார்த்தவள், தலையை குனிந்து கொண்டாள். “நீ ஹர்ட் ஆகனும்னு சொல்லல, இட்ஸ் மை ஃபீல்..” என்றபடியே தலையை வருட, பட்டென்று அவனை தள்ளிவிட்டு, “ஏண்டா.. உன்னை நான் பார்க்கனும்… எதுக்கு உன்மேல லவ் வரனும்… என்னோட சிச்சுவேஷன் தெரிஞ்சும் நான் ஏன் இப்படி பண்ணேன்.. உன்னை விடவும் முடியாம, விலக்கவும் முடியாம நான் படுற கஷ்டம் உனக்கு புரியுதா…” எனக் கத்தியவளின் இரு கைகளையும் பிடித்தவன்..
“எனக்கு புரியாம வேற யாருக்கு புரியும்… நீ ஒட்டி வரது போல தெரியும்.. ஆனா அப்படி எதுவுமே நடக்காத மாதிரி ஒதுங்கி போயிடுவ.. உன்னை உனக்கு தெரியனும்.. என் மேல இருக்க லவ் உனக்கு புரியனும்னு தான் அன்னைக்கு இங்க கூப்பிட்டு வந்தேன்.. இந்த மாதிரி ஒரு சூழல்ல நீ வேற எதைப் போட்டும் குழப்பிக்க மட்டேன்னு நம்பினேன்.. அது தான் நடக்கவும் செஞ்சது..”
“இங்க வந்ததும் உன்னை சுத்தி இருக்குற எல்லாத்தையும் மறந்துட்ட.. உன் முன்னாடி நான் மட்டும் தான் தெரிஞ்சேன்… உன்னால என்னை தள்ளி வைக்க முடியல.. உன் ஆழ்மனசுல இருக்குற நேசத்தை வெளியில் கொண்டு வரனும்னு தான் இப்படியெல்லாம் பண்ணேன்…”
“ஏன்னா நான் உன்னை என்னோட உயிருக்கும் மேலா விரும்புறேன்.. ‘ஐ லவ் யு சோ மச்..’ உன்னை எப்பவும் எந்த சூழ்நிலையிலையும் விட முடியாது. விடவும் மாட்டேன்…” என தீர்மானமாய் ஆழ்ந்த குரலில் கூறினான் சிவா.
“நோ… சிவா… உனக்கு என்னைப் பத்தி தெரிஞ்சா… நான் இங்கே ஏன் வந்துருக்கேன்னு தெரியும் போது உனக்கு என்னை பிடிகாது… யு ஹேட் மீ… ஐ நோ….” என்றவள்,
பின் “நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்கேன் தெரியுமா…? கடவுளே..! இது வெளியேத் தெரிஞ்சா உன்னோட பேரன்ட்ஸ் என்னைப் பார்க்குற பார்வையும் எப்படி மாறும்… அதை நினைக்கும் போதே நான் ஏன் உயிரோட இருக்கேன்னு தோனுது… என்னையே நம்பி இருக்க என் அம்மா என்னைப்பத்தி என்ன நினைப்பாங்க… அவங்க வளர்ப்பு தப்பாயிடுச்சோன்னு தினம் தினம் அவங்க மனசளவுல செத்துப் போயிடுவாங்க…” என்று முகத்தை மூடிக் கதறியவளை தன்மேல் வலுக்கட்டாயமாய் இழுத்துப் போட்டுக் கொண்டவன் இறுக்கமாய் அனைத்துக் கொண்டான்…
“சசிம்மா… ப்ளீஸ் இவ்வளவு எமோசன் ஆகாத, நான் சொல்றதை பொறுமையா கேளு, நீ பயப்படுற அளவுக்கு இன்னும் எதுவும் நம்ம கையை விட்டுப் போயிடல. புரிஞ்சுக்கோடா, தப்பு உன்மேல இல்ல… எல்லாத் தப்பும் என்னோடது தான்… நான்தான் வேண்டாம் வேண்டாம்னு விலகிப் போனவளை வலுக்கட்டாயமாக காதலிக்க வச்சேன்… உன்னைப்பத்தி யோசிக்காம சுயநலமா இருந்துட்டேன்… சாரிடா… வெரி சாரி… தயவுசெய்து மன்னிச்சுடு ப்ளீஸ் அழாதே… என்னால உன்னை இப்படி பார்க்க முடியல…” என்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் அவனது இறுக்கம் கூடிக்கொண்டே போனது…
அவனது செய்கையில் முதலில் திமிறியவள் அதுமுடியாமல் போக அவனது மேலேயே சாய்ந்து கதறினாள்… மங்கையவள் முதுகை வருடிவிட்டவன் அவள் இயல்புக்கு வந்துவிட்டாள் என்று புரிய, நேராக நிமிர்த்தி அவளது விழிநீரைத் துடைத்து விட்டவன் மீண்டும் தன்மேலே சாய்த்துக் கொண்டான்… அவளுக்கும் அது தேவையோ என்பது போல் வாகாய் சாய்ந்துக் கொண்டாள்… நிமிடங்கள் கடந்த நிலையில், தன் உணர்வு பெற்றவள் அவனிடம் இருந்து விலகி, காரைவிட்டு வெளியே வந்தாள்.
“ஹேய் சசி… சசி… என்ன…” என்றபடியே அவளைப்பின் தொடர்ந்தவன், அவள் முகத்தில் தெரிந்த தீவிரத்தில் அவன் முகமும் தீவிரமடைந்தது… ஏதோ கிறுக்குத்தனமாகப் பேசப் போகிறாள் என்றும் புரிந்தது மன்னவனுக்கு….
மீண்டும் சில நொடிகள் மௌனம்…
எதிரில் ஆர்ப்பரித்துக் கொட்டிய அருவியின் நீரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள், ஒரு பெருமூச்சுடன் திரும்பி, “சிவா… நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும், நீங்க அதை முழுசா கேட்கனும்… அதுக்குப் பிறகு உங்க முடிவை சொன்னா போதும் சரியா…” என்று பீடிகையுடன் ஆரம்பித்தாள்…
அவளது ஆரம்பமே சிவாவுக்கு பயத்தை கொடுத்தது… அவன் எதிர்பார்த்ததைப் போலவே இவள் ஏதோ விபரீதமாக பேசப் போகிறாள் என்று புரிகிறது… என்னத்தான் சொல்லப்போகிறாள் அவள்… தீர்க்கமாய் அவளையே பார்த்தான்…
“ஹலோ… ஸ்ருதி… ஸ்ருதி இருக்கியா…? என்னாச்சு? ஏன்..? இவ்வளவு நேரம் போன் எடுக்காம இருந்த…? ஹலோ ஸ்ருதிம்மா என்னடா…? என்று படபடப்புடன் கத்தியவன் மறுமுனையில் ‘இம்சை’ என்று இவளால் அன்பாய் அழைக்கப்படும் அவள் இம்சைக்காதலன் அரவிந்த்…
“ஹேய்… ஸ்டாப்… ஸ்டாப்… எதுக்கு இப்படி கத்துற? நான் நல்லாத்தான் இருக்கேன்… முதல்ல நீ எங்க இருக்க? இந்த பாலா என்னை ஏர்போட்ல அம்போன்னு விட்டுட்டு போயிட்டான்…” என அவனின் படபடப்பைக் கண்டுக்கொள்ளாமல், தன் பிரச்சனையை எரிச்சலாய் கூறிக் கொண்டிருந்தாள். ராட்சசி என்று அவனால் காதலாய் அழைக்கப்படும் காதல் ராட்சசி ஸ்ருதி…
இவள் பேசி முடிக்க, அவள் முன்னே வந்து நின்றான் அரவிந்த்… அவனைப் பார்த்ததும் ‘ஊப்ஸ்’ என்று தன் பெருமூச்சையெல்லாம் ஊதியவள், “ஷ்ப்பா… வந்துட்டியா… எங்கடா இவ்வளவு லக்கேஜையும் அள்ளிக்கிட்டு எப்படிடா தனியா மேனேஜ் பன்றதுன்னு நினைச்சேன். நல்லவேளை வந்துட்ட, வா.. வா… சீக்கிரம் இந்த லக்கேஜை எடு போவோம்… டென்ஷன்ல அலைஞ்சது பசி எடுக்குது…” என்று நிறுத்தாமல் பேச,
அவளை முறைத்தவன், ஒன்றும் பேசாமல் அனைத்தையும் அள்ளிக்கொண்டு இவளைக் கண்டுகொள்ளாமல் முன்னே நடக்க, அதில் கடுப்பானவள், “ஏய்… இருடா… என்னை விட்டுட்டுப் போற… லூசு… லூசு…” என்றுக் கத்திக்கொண்டே அவன் பின்னாடியே ஓடினாள்…
லக்கேஜை காரில் அடுக்கியவன் முன்புறம் அமர்ந்திருந்தவளிடம், “லக்கேஜை மட்டும்தான் உன்பாசமலர் எடுத்துட்டு வரச்சொன்னான்… நீ என்ன எக்ஸ்ட்ரா லக்கேஜா..” என்று வார்த்தையைக் கடித்து துப்ப…
“என்ன சொன்ன எக்ஸ்ட்ரா லக்கேஜா… என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது இரு உன்னை…” என்று அவன் மேல் பாய்ந்தவளை ஒரு கையால் அடக்கி “பின்னே பாரு நீ எப்படி இருக்க…? உன்னை கண்ணாடியில் நீ பார்க்குறீயா இல்லையா…? உருளைக் கிழங்குக்கு ட்ரஸ் மாட்டிவிட்ட மாதிரி உருண்டையா சேப்பா இருக்க உன்னை லக்கேஜ்னு சொல்லாம வேற என்ன சொல்ல சொல்ற…” என மீண்டும் சீண்ட,
அவன் பேசப்பேச முகம் சிறுத்து மூக்கு நுனி மேல் கோபம் வந்து உட்கார்ந்து கொள்ள, “நான் உருளைக் கிழங்கா… உன்னைக் கவனிச்சுக்கறேன்டா…” அவன் கைகளை தட்டிவிட்டு மேலே பாய்ந்து முடியை பிடித்து ஆட்ட,
“ஏய் ராட்சசி விடுடி… விடுடி…” என அவளிடமிருந்து தன்னை பெரும்பாடுபட்டு விடுவிடுத்துக் கொண்டவன் அவளை உள்ளேத் தள்ளி விட்டுவிட்டு மறுபக்கம் அமர்ந்து காரை எடுத்தான் அரவிந்த்…
அத்தியாயம் – 02
ப்ரியமானவர்களின்
நினைவுகள் ப்ரியமாக
இருக்கிறதோ இல்லையோ..?
ப்ரியாமல் இருந்து விடுகிறது
இதயத்தில்…!
காரில் இருந்த இருவரது முகமும் உர்ரென்று இருந்தது. அரவிந்தின் கோபத்தில் கார் பறந்தது. காரின் வேகத்தைப் பார்த்துப் பயந்தவள், “எதுக்கு இவ்ளோ ஸ்பீடா போற, எனக்குப் பயமாயிருக்கு அர்வி…” நீ இன்னும் உன்னோட லைசென்சையும் ரெனிவல் பண்ணல, எதாச்சும் விபரீதமா ஆச்சு உன்னை என்ன பண்ணுவேன்னு தெரியாது…” என்று அவள் சொல்ல சொல்ல அவனது வேகம் அதிகமானதே தவிர குறையவில்லை…
அரவிந்தின் வேகத்தைப் பார்த்து பயந்தவள், “டேய் உனக்கு ஒரு தடவை சொன்னாப் புரியாதா, எருமை மெதுவா போடா…” என்றதும், பட்டென வேகத்தைக் குறைத்து சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தினான்…
அந்த செயலில் அவனைத் திரும்பி பார்த்தவள், அவன் முகம் இறுக்கியிருப்பதை உணர்ந்து, ‘ஐயோ, ஓவரா பேசிட்டோமோ இவன் ஏடாகூடமா எதையாவது பேசப்போறான் கடவுளே… காப்பாத்து…’ என்று எச்சிலை விழுங்கியபடி பதட்டத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்…
“வெல்… உன்கிட்ட பேசனும் எனக்கு, நானே யோசிச்சு பொறுமையா உன்னை ஹேன்டில் பண்ணனும்னு நினைச்சேன், பட் உன்னோட இந்த கிறுக்குத்தனம் எல்லாம் பார்த்தா, என்னோட பொறுமையே எருமை ஏறி செவ்வாய் கிரகத்துக்கு போயிடும் போல. சோ இப்பவே உன் கிட்ட பேசிடுறது நல்லது… இனி ஒரு சந்தர்ப்பம் நாம தனியா பேச கிடைக்குமோ கிடைக்காதோ… என்ன நான் சொல்றது சரிதானே…?” என்றான் வில்லன் ரேஞ்சில்.
“ஆங்… என்ன… என்ன பேசப் போற, எதுவா இருந்தாலும் வீட்டுல போய் பேசிக்கலாம், இப்போ நீ காரை எடு…” பதட்டத்தில் பெண்.
“ஆஹா… புரிஞ்சிடுச்சு போலயே, என் ராட்சசிக்கு… ம்ம்… அப்போ இப்பவே பேசிடுவோம்… சொல்லு உன் கிட்ட நான் லவ் சொல்லி எத்தனை வருஷம் ஆச்சு…?” அமைதியாக ஆரம்பித்தான் அரவிந்த்.
“…..” அமைதி பெண்ணிடம்
“ம்ம்… சொல்லு மா ஸ்ருதி தேவி சொல்லு…” கொஞ்சம் கிண்டல் தொணி
“…..” இப்போதும் அதே அமைதி அவளிடம்.
“ஹேய் இப்போ சொல்றியா, இல்லையா…” அமைதியும், கிண்டலும் சற்று மாறி இறுகியக் குரலில் அவன் குரல்.
“…..” இப்போது பேரமைதி பெண்ணிடம்.
“நீ சொல்ல மாட்ட” அதட்டலாக மாறிவிட்டது குரல்.
“ஓகே வெல், தென் நீ சொல்லாம இந்தக் கார் இந்த இடத்தை விட்டு ஒரு அடி கூட நகராது…” ஜன்னல் எல்லாவற்றையும் ஏற்றி விட்டு, ஏசியை ஆன் செய்து சீட்டில் நன்றாக சாய்ந்து விட்டிருந்தான்… கை தானாக fm ஐ ஆன் செய்திருந்தது…
“வணக்கம் இது கோடை பண்பலை 100.8 நீங்கள் இப்போது கேட்டுக்கொண்டிருப்பது காதல் கலட்டா…” என ஆர்பார்ட்டமாய் ஒரு பெண் தொகுப்பாளினி பேசிக் கொண்டிருந்தாள்…
தொடர்ந்து, “காதல் சொல்லும் காதலன்/ காதலி அலட்சியப் படுத்தும் காதலி/ காதலனைப் பற்றி தங்கள் அபிப்ராயங்களை நீங்கள் சொல்லலாம்… அதற்கு முன் காதலுக்காக, காதலர்களுக்காக இளைய தளபதி விஜயின் நடிப்பில் வெளிவந்த வசீகரா எனும் படத்தில் இருந்து ஒரு அருமையானப் பாடல் என்று கூறி அந்தப் பாடலை ஒலிக்க விட்டாள்…
‘ஒரு தடவை சொல்வாயா… உன்னை எனக்கு பிடிக்கும் என்று..’ எனத் தொடங்கிய பாடலை தானும் சேர்ந்து ஹம் செய்தபடியே கண்களை மூடியிருந்தான் அரவிந்த்…
ஸ்ருதிக்குத் தான் அய்யோ என்றிருந்தது. நேரம் காலம் தெரியாம இந்த எப் எம் வேற, என்றுத் தலையிலடித்துக் கொண்டாள்…
‘வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம் வலியோடு போராடும் காதல் தானே, ஒரு தடவை…’
“அர்வி…” மெதுவாய் ஆரம்பித்தாள் ஸ்ருதி.
“….” இப்போது அரவிந்திடம் அமைதி.
“அர்வி ப்ளீஸ்…” கெஞ்சல் குரலில் பெண்.
சீட்டில் சாய்ந்தபடியே பார்வையை மட்டும் திருப்பி அவளைப் பார்த்தான்…
விழிகளில் தவிப்புடன், கையைப் பிசைந்தபடியே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘என்ன’ என்பது போல் புருவத்தை உயர்த்த, அந்தப் பாவனையில் சட்டென்று பார்வையை தழைத்தவள், “பைவ் யேர்ஸ் ஆச்சு” முணுமுணுப்போடு சொல்ல,
“ம்ம் கேட்கல, சத்தமா சொல்லு…” என்றான் குரலில் பழைய குறும்பு எட்டிப் பார்த்ததோ…! அதை உணர்ந்தவள், “பைவ் யேர்ஸ், பாஞ்ச் சால், அஞ்சு வருஷமாச்சு…” கடுப்பாய் கத்தியவளை, கூர்ந்து நோக்கியவன்,
“ம்ம்… பைவ் யேர்ஸ்… இந்த பைவ் யேர்ஸ் நீ ஓகே சொல்லாம எனக்கு எப்படி போயிருக்கும் நீயே சொல்லேன்” என்றான் குரலில் வலியோடு.
‘அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு’ என்று ஹரிஹரனின் குரலில் பண்பலையில் அடுத்து ஒலித்த பாடலை நிறுத்தியவன், அவள் பக்கம் திரும்பி அமர்ந்தான்…
“ம்ம் பதினைஞ்சு வயசு பொண்ணுக்கிட்ட லவ் சொல்லும் போது அந்தறிவு இருந்திருக்கனும்” என்றாள் அவளும் எரிச்சலாய்…
அவளையே ஆழ்ந்து பார்த்தவன் ஒரு பெரு மூச்சை விட்டு, “ம்ம்… இல்லை தான், அப்போ உன் மேல இருந்தக் காதல் என் அறிவை மறைச்சுடுச்சு… நீ மட்டும் அந்த செம்பட்டைத் தலையனோட சேர்ந்து என்னைக் கிண்டல் பண்ணாம இருந்திருந்தா, நான் தான் முக்கியம்னு அவன் கிட்ட சொல்லியிருந்தா, நான் ஏன் உன்னை டிஸ்டர்ப் பண்ணியிருக்க போறேன்…”
“அவன் கூட சேர்ந்துட்டு என்னை இன்சல்ட் செய்யவும், அவன் உன்னை கேரிங்கா பார்க்கவும் ஒரு பயம். அதான் நீ என்னை விட்டுப் போயிடக்கூடாது, நான் தான் உனக்கு எல்லாமுமா இருக்கனும்னு நினைச்சு, உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க பயந்து தான், அந்த வயசுல உனக்குப் புரியுமா, புரியாதான்னு கூடத் தெரியாம உன்கிட்ட வந்து அந்த மாதிரி லவ்வை சொன்னேன்…” என்றபடியே அவளது நடுங்கிய கரங்களை தனது கைகளுக்குள் வைத்து அழுத்திக் கொண்டான்…
நடுக்கம் மெல்லக் குறைய, “நீ சொல்லிட்டு போனதும் எனக்கு பெரிய ஷாக், அப்போ தான் விஷ்ணு வந்தான். என்னன்னு விசாரிக்கும் போது உன்னைக் காட்டிக் கொடுக்கத் தோனல, ஒன்னுமே சொல்லாம போயிட்டேன். நைட் முழுதும் தூங்கவே இல்ல. அடுத்த நாள் நீயும் சிவாவும் ஹாஸ்டல் போயிட்டீங்க, எனக்கு ஒரு மாதிரி வருத்தமா இருந்துச்சு…”
“ஏன் என் கிட்ட சொல்லாம போயிட்டன்னு தோனுச்சு, ஒருவேளை என் மேல கோபமா, அதனால் பிடிக்காம என்னைப் பார்க்காம போயிட்டியோன்னு நினைச்சேன்… உன் மேல கோபம் அதிகமாச்சு, அதான் அதுக்கப்புறம் விஷ்ணு கூட சேர்ந்து உன்னை வெறுப்பேத்தினேன். ஆனா அவன் என்னோட க்ளோஸ் ப்ரண்ட், நீ என்னை லவ் பன்றதை அவன் கண்டுப்பிடிச்சுட்டான். நீ அவனையும் முறைச்சிட்டே இருப்பியா, அதான் அவனும் என் கூட சேர்ந்து உன்னை வெறுப்பேத்தினான்…” என அவளும் அன்றைய சம்பவத்தை நினைவு கூற,
“சோ… உங்க போதைக்கு என்னை ஊறுகாயா ஆக்கிருக்கீங்க ரெண்டு பேரும் அப்படித்தான…” என்றபடி இன்னும் நெருங்கியிருந்தான் அவளிடம்…
“இப்போ எதுக்கு இவ்வளவு பக்கம் வர, நான் இன்னும் உனக்கு ஓகே சொல்லல….” என்றாள் கதவை ஒட்டிக் கொண்டு.
“அப்போ சீக்கிரம் ஓகே சொல்லு…” என அவள் முகத்தைக் கையில் ஏந்தி விழிகளில் பார்வையை பதித்தான் ஆழமாக…
அவன் பார்வையில் திணறியவள், “என்ன இப்படியெல்லாம் பண்ற…” என முணுமுணுக்க,
“எப்படி பண்றேன்… இப்படியா பண்றேன்…” என அவளது நெற்றியில் இதழ் பதிக்க, அவள் அதிர்ந்து நோக்க முன்னே “இல்லை இப்படி பண்றேனா….” என கன்னங்களில் அடுத்தடுத்து தன் தாக்குதலை தொடர்ந்தான்.
அவனது தாக்குதலில் முதலில் அதிர்ந்தவள் தொடர்ந்து ஒரு கட்டத்தில் அவனிடம் மயங்கி முகத்தில் மூழ்கிப் போயிருந்தாள்… பல நிமிடங்கள் கழிந்த இருவரது மோன நிலையையும், அரவிந்தின் போன் அடித்து களைக்க, வேகமாய் அரவிந்தை தள்ளிவிட்டவள், ஜன்னல் புறம் திரும்பி தன் முகத்தை இரு கைகளாலும் மூடிக் கொண்டு மூச்சுக்களை ஆழமாய் எடுத்து விட்டாள்…
ஸ்ருதியின் செயலில் முதலில் திகைத்தவன் பின் தனக்குத் தானே சிரித்துக் கொண்டு, அடித்து ஓய்ந்த செல்லை எடுக்க, அது மறுபடியும் ஒலித்தது… திரையில் சிவா என்றிருக்க, எடுத்து ஹலோ சொல்லு முன்னே, சிவா சொன்ன செய்தியில் அரவிந்தின் முகம் பயத்தைக் காட்டியது….
—-
“சசி இன்னும் எவ்வளவு நேரம் இந்த அருவியவே பார்த்துட்டு இருப்ப… என்ன சொல்லனுமோ, அதை சீக்கிரம் சொல்லு…”– சிவா.
“சொல்லனும்… நிறைய சொல்லனும்… ஆனா, எப்படி ஆரம்பிக்கத் தெரியல.. இதை உங்ககிட்ட சொல்ல எனக்குப் பயமா இருக்கு.. நீங்க என்னைத் தப்பா நினைச்சிடக் கூடாதே…” – சஷ்டி
“எதுக்கு இவ்வளவு தயக்கம். நான் உன்னை தப்பா எடுத்துக்கவே மாட்டேன்.. நீ பயப்படாம சொல்லு..” – சிவா
“ம்ம்…” என்று ஆழமூச்செடுத்தவள், நேரே சிவாவிடம் சென்று, அவனின் முகத்தை இருகைகளிலும் ஏந்தி, கண்ணை நேர்கொண்டுப் பார்த்தபடியே, “ஐலவ்யூசிவா.. லவ்யூசோமச்..”என்று கூறியபடியே அவனது இதழில் தன் இதழைப் பொறுத்தினாள்…
சஷ்டியின் ஒவ்வொரு செயலையும் வியப்பு மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் “ஐலவ்யூ..” என்றபடியே முத்தம் கொடுக்கவும், அந்த முத்தத்தில் திளைக்க வேண்டும் என்பதையும் மீறி அவனுக்குள் பயம் துளிர்விட, ஆரம்பித்தது. இது தான் நினைத்தது போல மிகச்சிறிய விஷயம் இல்லையோ.?
ஏதோ ஒரு பெரிய சிக்கலில் மாட்டியிருக்கிறாள் என அவன் யோசிக்கும் முன்னே, அவனை விட்டு நகர்ந்தவள், “என்னோட காதல் பொய்யில்லை சிவா, இது இப்போ ஆரம்பிச்ச காதல் இல்லை, எப்போ நீங்க ஸ்ருதியோட எங்க காலேஜுக்கு வந்தீங்களோ அப்போ ஆரம்பிச்சது..” என தன் மனதில் இருந்த பெரிய உண்மையை அவனிடம் ஒத்துக் கொண்டாள் சஷ்டிகா.
ஸ்ருதியை காலேஜில் விடும்போது என்றால் மூன்று வருடங்களுக்கு முன்பா அப்போதிருந்தேவா, வியப்பும் மகிழ்ச்சியும் ஒருசேர, அவளையேப் பார்த்தான்.
அவளுக்கு அப்படி ஒன்னும் இல்லை போல, மீண்டும் அருவியில் பார்வையைப் பதித்தவள், “எனக்கு ஒரு அக்கா இருக்கா, அவ பேரு ஷ்ரவந்தி.” அந்தப் பெயரைக் கேட்டதும் சிவாவின் முகம் பல உணர்ச்சிகளைக் காட்டியது.
“அவ இருக்கா, ஆனா இல்லை.” என்று விரக்தியாக கூறியபடி, அவன் முகத்தைப் பார்த்தாள். அவனுக்கும் சிலது புரிவது போல தோன்றியது.
“இருக்கா, ஆனா இல்லைன்னு சொன்னா என்ன அர்த்தம், எனக்கு புரியல, உன்னோட அம்மா கூட இருக்காங்க தானே” என்றான் யோசனையாக.
“ம்ம்… இருக்காங்க ஏதோ இருக்காங்க..”குரல் முழுவதும் விரக்தி அவளிடம்.
“ப்ளீஸ் சசி, ஆதி முதல் அந்தம் வரை முழுசா உன்னைப்பத்தி என்கிட்ட எதையும் மறைக்காம சொல்லு. நீ சொன்னாதான் எனக்கும் தெரியும், உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸாகும். ..ப்ளீஸ்..” என்றான் அவளை நெருங்கித் தனக்குள் கொண்டு வந்து.
“ஆமாம், சொல்லனும், எல்லாதையும் சொல்லனும் உங்ககிட்ட சொல்லிட்டா எனக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.” என்றவள் தன் குடும்பத்தைப் பற்றி கூற ஆரம்பித்தாள்.
ராஜவேலு – பத்மா இருவரும் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள். ராஜவேலுவிற்கு பூனேவில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசியர் வேலை. பத்மா இல்லத்தரசி… இவர்களுக்கு ‘ஷ்ரவந்தி – சஷ்டிகா’ என்ற இரு பெண் குழந்தைகள்… மூத்தவள் ஷ்ரவந்தி இளையவள் சஷ்டிகா…
பறவை தன் சிறகை விரித்துப் பறப்பது போல் அழகாய் நகர்ந்தது அவர்களது வாழ்க்கை… ஷ்ரவந்தி தன் கல்லூரிப் படிப்பை, அவள் தந்தை பணியாற்றும் அதே கல்லூரியில் படித்தாள். தன் பெண்களின் சந்தோசம் தான் முக்கியம் என்று அவர்களை உயிராய் நினைத்து வந்தனர். சஷ்டிகாவும் தன் பள்ளிப் படிப்பை முடிக்க, அவள் பெங்களூரில் தான் சேருவேன் என்று அடம்பிடிக்க, வேறு வழியின்றி மூவரும் சேர்ந்தே வந்து அவளை கல்லூரியில் சேர்த்து விட்டு சென்றனர்.
அந்தக் கல்லூரியில் தான் ஸ்ருதி சஷ்டிகாவிற்குத் தோழியானது. முதல் வருடம் மிகவும் அழகாக சென்றது… சீனியர்களின் ராகிங் ஒரு புறம் வருத்தம் என்றாலும், காலப்போக்கில் அவர்களும் தோழமையாகப் பழக அந்தக் கல்லூரி மிகவும் பிடித்து விட்டது சஷ்டிக்கு…
அப்போது காவிரி நீர் பிரச்சனை உண்டான நேரம் கல்லூரியெல்லாம் விடுமுறை என்று அறிவித்து விட, யாரிடமும் தெரிவிக்காமல் பூனே சென்றாள்… அங்கு சென்ற போது அவள் கண்ட காட்சி, இப்போது நினைத்தாலும் அவள் உயிரை கசக்கியது…
அத்தியாயம் – 03
என் நியாபகங்கள்
உன்னில் உயிர்பெரும்
போதெல்லாம் எழுதிக்கொள்..
என் காதல் தொலைந்திருக்காது
தொலைத்து விட்டாயென…
அதுவரை அனைத்தையும் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல் கூறிவள், அதற்கடுத்து எதையும் கூற முடியாமல் திணறினாள்…
அவளது தோள்களை இதமாக அழுத்தியவன், “கஷ்டமா இருந்தா சொல்ல வேண்டாம்டா, உன்னை வருத்திக்காதே ப்ளீஸ்…” எனவும்,
“இல்லை முதலும் கடைசியுமா இதை சொல்லி முடிச்சிடுறேன்…” என்றவள், “நான் அங்க போனதை யாருமே எதிர் பார்க்கல போல மூணு பேரும் என்னை ஷாக்கா பார்த்தாங்க, சந்தோசமே இல்லை. என்னன்னு கேட்கும் போது அப்பாவுக்கு ‘மைல்ட் அட்டாக்’ அப்படின்னு சொன்னாங்க. தாங்கவே முடியல… ரெண்டு நாளா அப்பா எதுவும் பேசல, அக்கா அப்பாகிட்ட பேசுறதுக்கு போறா, ஆனா அவர் இவளை அவாய்ட் பன்றார். அம்மாவும் ஷ்ரவ் கிட்ட அதிகமா பேசல…”
“வீட்டுல வேற ஏதோ பிரச்சனைன்னு புரிஞ்சது… யாருக்கிட்ட கேட்டாலும் எதுவும் சொல்ல மாட்டேங்கிறாங்க… ஷ்ரவ் அழுதுட்டே இருக்கா… காலேஜும் போகல, பொறுக்க முடியாம அம்மாவை தனியா பிடிச்சு கேட்கும் போது, ‘ஷ்ரவ் ஒருத்தரை லவ் பண்றதாகவும், அது தெரிஞ்சு தான் இவ்ளோ பிரச்சனைன்னும் சொன்னாங்க…’ இந்தப் புள்ளப் பூச்சியா இப்படின்னு.. எனக்கு கொஞ்சம் சிரிப்புக் கூட வந்தது…
என்னோட முகத்துல சந்தேகத்தைப் பார்த்ததும் ‘அந்தப் பையனும் தமிழ் நாட்டுக்காரன் தான், நல்ல பையன் தான், அப்படின்னு அப்பாக் கூட சொன்னார். ஷ்ரவ் பிடிவாதம் அதிகமாகவும் அப்பா அவரைக் கூப்பிட்டு பேசினார்…’
“அவரும் நல்ல விதமா பேசிட்டு போனார்… என்னோட வீட்டுல கண்டிப்பா ஒத்துகுவாங்க, நீங்க என்னை முழுசா நம்பலாம்னு சொல்லிட்டுப் போனார்… போனவர் தான் இப்போ வரைக்கும் வரவே இல்லை. ஒரு மாசம் முழுசா ஆகிடுச்சு, காலேஜுல கொடுத்த அட்ரஸ் எல்லாம் வச்சு விசாரிக்கும் போது, அப்படி ஒரு பையனே எங்களுக்கு இல்ல, இனி இதைப் பத்தி விசாரிக்க எதுக்கும் இங்கே போன் பண்ணாதீங்கன்னு சொல்லிட்டாங்களாம்.”
“அதுவே பெரிய ஷாக் அப்பாவுக்கு, இதுல உன் அக்கா வேற, அவரைக் கண்டுபிடிக்கனும் சென்னைப் போக கிளம்பியிருக்கா, எங்களுக்குத் தெரியாம அது தான் அப்பாவை படுக்க வச்சுடுச்சு… அவளை நம்பினதுக்கு எப்படி பண்ணிட்டா…?” என்று தாயின் அழுகை அவளை மிகவும் வருத்தியது…
அதையும் இதையும் சொல்லி அவரை சமாதானப்படுத்தியவள், மற்றவர்களிடமும் பேசி ஓரளவுக்கு சரி செய்திருந்தாள். அவள் விடுமுறை முடிந்து கிளம்பும் நாளில் தான் அவளது அப்பா அவளிடம் நீண்ட நேரம் பேசினார். அப்போது தான் ஷ்ரவந்தியின் காதலனைப் பற்றி முழுமையாக தெரிந்தது.
“காலேஜில் நல்ல பையன்னு பேர் வாங்கினான்மா, பொண்ணுங்க கூட அளவாதான் பழகுவான்… அவனுக்கு நம்ம ஷ்ரவந்தியை எப்படி பிடிச்சதோ தெரியல, முதல்ல யோசிச்சாலும், பிறகு நான் சரின்னு தான் சொன்னேன்… வீட்டுல பெரியவங்ககிட்ட பேசிட்டு வரேன்னு போனவர் தான், திரும்ப வரவே இல்லை… நாங்க போன் செய்து பார்த்தும் எந்த ரெஸ்பான்சும் இல்ல, அவங்க வீட்டுல பேசினேன். ஒரு அம்மா பேசினாங்க எங்களுக்கு அப்படி ஓரு பையனே இல்லை, உங்களை ஏமாத்திருக்கான்னு சொல்றாங்க…”
“அந்தப் பையனோட ப்ரண்ட்ஸ்கிட்ட கேட்டாலும் எந்தத் தகவலும் இல்லை… நான் சரியாகிடுவேன், ஆனா ஷ்ரவ் அவளை… அவளை… எப்படி சரி பண்றதுனே தெரியல… ‘She is mentally shock…’ கடவுள் தான் துணையிருக்கனும்.” என்று தன்னுடன் பேசிய தந்தை, தன்னை ரயில்வே ஸ்டேசனில் கையசைத்து வழியனுப்பிய தந்தை அடுத்து அவள், அவரைப் பார்த்தது உயிரற்ற உடலாக…!
தலையில் அடித்துக் கொண்டு கதறினாள் சஷ்டி… “அப்பாவுக்கு எங்க மூனு பேரையும் இப்படி விட்டுட்டுப் போக எப்படி மனசு வந்துச்சோத் தெரியல… நான் பெங்களூர் வந்து சேரக் கூட இல்லை… எனக்கு மெசேஜ் வந்தது… மறுபடியும் என்னைத் தனியா அனுப்ப யோசிச்சு வார்டன் ஸ்ருதியைக் கூட அனுப்பினாங்க…”
“காரியம் எல்லாம் முடிஞ்சது…. அப்பாவுக்கு மறுபடியும் அட்டாக். எங்க ரிலேட்டிவ்ஸ் எல்லாம் எங்களை தஞ்சாவூருக்கு கூப்பிட்டாங்க. அடுத்து அது தான் சரின்னு நான் கூட யோசிச்சேன். ஆனா அம்மா, இப்பவே வேண்டாம். கொஞ்ச நாள்ல நாங்களே வந்துடுறோம்… உங்களை மதிக்காம பேசுறதா நினைக்காதீங்கன்னு சொல்லி போக மறுத்துட்டாங்க…”
“இத்தனை நாள் இங்க ஊரில் இருந்துட்டு, இப்போ போறதுக்கு வருத்தப்படுறாங்க போலன்னு நானும் நினைச்சேன். ஏன்னா அப்பா இறந்த பிறகு அதுவரைக்கும் நாங்க மூனு பேரும் ஒன்னா எந்த விசயத்தையும் முழுசா பேசிக்கவே இல்லை…”
“ஒவ்வொருத்தரா எல்லாரும் போனாங்க. நாலு பேர் மூனு பேரானோம்… அன்னைக்கு நைட் அம்மா சொன்ன விசயம் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்துச்சு. எனக்கே இப்படி இருந்தா, அப்பாவுக்கு அந்த அதிர்ச்சி தான் அவரைக் கொன்னுருக்கு…” என்று அதுவரை அவன் கைகளுக்குள் இருந்தே சொல்லியவள், இப்போது அவனை விலக்கி நிறுத்தி விட்டாள்…
“என்ன சசி…” என்ற சிவாவின் குரலும் கலங்கித்தான் இருந்தது… தன்னவள் கதறுவதை அவனாலும் தான் சகிக்க முடியவில்லையே… வேண்டாம்… சொல்ல வேண்டாம் என்றாலும் கேட்க மாட்டேன் என்று தன்னை முழுதாக வருத்திக் கொண்டு சொல்லிக் கதறுகிறாளே… என்று மனதுக்குள்ளே அழுதவன், அவள் விலக்கிய கைகளை மீண்டும் பற்றி, “உனக்கு எல்லா வகையிலும் துணை இருப்பேன், நீ அழக் கூடாது… உன்னோட இந்தப் பிரச்சனை இனி என்னோட பிரச்சனை. ப்ளீஸ் அழாத சசி… நீ விடுற ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும் என் இதயத்துல இருந்து வர ரத்தக் கண்ணீர். ப்ளீஸ் புரிஞ்சுக்கோடா…” என்றுக் கெஞ்சினான் சிவா.
“இல்ல சிவா… ஒரு தப்புமே செய்யாம எதுக்கு என்னோட அப்பா எங்களைவிட்டுப் போகனும்…? எங்களை விட மானம் மரியாதை முக்கியமா…? நாங்க மூனு பேர்… மூனு பேரும் லேடீஸ்… யாரை நம்பி விட்டுட்டு போனார்… எப்படி அப்படி ஒரு மனசு வந்தது…? நானும் படிச்சுக் கூட முடிக்கல அப்போ…” எனக் கத்தியவளை என்ன சொல்லித் தேற்றுவது எனக் கூடத் தெரியவில்லை அவனுக்கு…
பிடித்திருந்த கைகளில் அழுத்தம் கொடுக்க, சஷ்டி நிமிர்ந்து அவனைப் பார்த்தாள், அதில் தெரிந்த வேதனையும் வலியும் அவனைக் கொல்லாமல் கொன்றது… அதே வலி சிறிதும் குறையாமல் அவனிடமும் உண்டாகி, அது அவன் விழிகளிலும் தெரிந்தது….
“என்னை அனுப்பிட்டு வீட்டுக்கு வந்த அப்பா, ஷ்ரவ் கிட்ட பேசியிருக்கார்… அம்மா தான் சொன்னாங்க இதெல்லாம்… எல்லாத்தையும் மறந்துடு, நீ ஜாபுக்கு போறதுனாலும் சரி, உனக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்… உடனே முடியாது தான் எல்லாம் போக போக பழகிடும்… அப்பா உன் நல்லதுக்காத் தான் சொல்றேன்… உடனே உனக்கு நான் யாரையும் மாப்பிள்ளை பார்க்கல, பொறுமையா செய்யலாம்… அப்பாவுக்காக இதை நீ செய்டான்னு சொல்லிருக்கார்…”
“அவளும் அவர் மடியில் படுத்திக்கிட்டு, ‘என்னை மன்னிச்சிடுங்க டாடி, என்னைத் தப்பா நினைக்காதீங்கன்னு சொல்லிட்டே இருந்திருக்கா… ரெண்டு பேரையும் சமாதானம் செய்து நான் தான் அனுப்பி வைச்சேன்… நான் அப்பா கூட பேசிட்டு வரேன்னு, அவர் ரூமுக்கு போயிட்டு வரதுக்குள்ள, பேன்ல சேலையைப் போட்டு இவ சேர் மேல நிக்குறா…”
“நான் என்ன செய்வேன், அவளைக் கீழேத் தள்ளி அப்பாவை வரச்சொல்லி, என் ஆத்திரம் தீர வரை அடிச்சுட்டேன்… யாரோ ஒருத்தனுக்காக எங்களை பத்தி யோசிக்கவே இல்லையே இவ…”
‘இல்லைம்மா… நீங்க நினைக்குற மாதிரி இல்லை, என்னால இனி வாழ முடியாதும்மா… நான் வாழத் தகுதியே இல்லம்மா… என்னைக் கொன்னுடுங்கம்மா, நான் உங்களை ஏமாத்திட்டேன், நான் தப்பு பண்ணிட்டேன்…’ தலையில அடிச்சிட்டு அழறா… ஏதோ பெருசா ஒன்னை சொல்லப்போறான்னு பயந்துட்டே அவளைப் பார்த்தேன்… அவளோ எங்க ரெண்டு பேரையும் பார்க்காம முகத்தை மூடிட்டு ‘நான் கெட்டுப் போயிட்டேன் அவன் குழந்தை இப்போ என் வயித்துல வளருதுன்னு இடியைத் தூக்கித் தலையில போட்டுட்டா…”
“என்னடி சொல்ற, என்னடி சொல்றன்னு அவளை நான் உலுக்க, உங்க அப்பாவோ “பத்மா” என்று அதட்டியவர் ‘அவளை உள்ளேக் கூப்பிட்டுப் போ… இப்போ எதுவும் பேசாத’ என்று மகளைக் கண் கொண்டும் பார்க்காமல் அறைக்குள் நகர,
“அப்பா” என்று கூவியவள் அவர் காலில் விழுந்து, ‘என்னை மன்னிச்சுடுங்க அப்பா… என் கூட பேசுங்க டாடி…. ப்ளீஸ் டாடி… என்னை அடிங்க டாடி, கொன்னுடுங்க டாடி…’ எனக் கதறியவளை பிடித்துத் தூக்கியவர்… “உங்க ரெண்டு பேரையும் அவ்வளவு பலவீனமாவா வளர்த்தோம்” என்றார்… ஒரே கேள்விதான் அந்தக் கேள்வியிலேயே அவள் உயிர் கருகித் தான் போனது…
மனைவியைக் கண்ணால் அழைத்தவர், “முதல்ல இவளை சமாதானப் படுத்தி தூங்க வை…” என்றுக் கூறிவிட்டு அறைக்குள் போய்விட்டார்… எதுவும் சொல்லாமல் அவளை அழைத்துச் சென்று படுக்க வைத்தாலும், இருவரது உடலும் அழுகையில் குலுங்கிக் கொண்டுத்தான் இருந்தது…
“அம்மா… ப்ளீஸ் ம்மா… நீயாச்சும் பேசும்மா…” என்றதும், “உன் கூட பேசாமல் வேற யார் கூட பேசப் போறோம்… நீ கொஞ்சம் அமைதியா தூங்கு… அடுத்து என்ன செய்றதுன்னு அப்பாவும் நானும் யோசிக்கறோம்…” மகளை கொல்லும் அளவுக்கு கோபம் இருந்தாலும், தாய் மனம் அல்லவா, ஈருயிராய் இருப்பவளிடம் எதையும் காட்ட முடியவில்லை… அதே சமையம் தனியாக இருக்கும் கணவனையும் காண மனம் நாடியது…
ஷ்ரவிடம், “நீ கொஞ்சம் படுடா, நான் அப்பாவைப் பார்த்துட்டு வரேன்…” என்று சமதானப் படுத்தி கணவனைத் தேடிச் சென்றார்… கட்டிலில் சாய்ந்திருந்தவரிடம் பதறிப் போய் வந்த மனைவியைப் பார்த்து, “எனக்கு ஒன்னும் இல்ல பத்மா பதறாம வா…” என்று சொன்னவர், “அழறாளா? படுத்துட்டாளா…?” என்றார்…
“ம்ம்…” என்றவருக்கு என்ன முயன்றும் தன் ஆதங்கத்தையும் அழுகையையும் நிறுத்தவே முடியவில்லை… “நான் சரியா வளர்க்கலையாங்க நம்ம பொண்ணுங்கள, எப்படி இந்தளவுக்குத் தைரியம் வந்துச்சு, நான் தான் சரியா கவனிக்காம விட்டுட்டேனா… அவ மேல அந்தளவுக்கு நம்பிக்கை வச்சேனேங்க…” என கதறிய மனைவியை என்ன சொல்லித் தேற்ற எனக் கூட தெரியவில்லை ராஜவேலுவிற்கு….
அவருக்குள்ளும் அதேக் கேள்விகள் தானே, “அவ ஏன் அவனைத் தேடி போக இருந்தான்னு இப்போ தான் புரியுது… இந்த விசயம் நமக்குத் தெரியறதுக்குள்ள போயிடலாம்னு நினைச்சிருப்பா போல…” மெதுவாய் தனக்குத் தானேப் பேசிக் கொண்டார்… பத்மாவுக்கும் புரிந்தது…
அடுத்து என்ன செய்வது என்று இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை… அறை முழுவதும் மௌனம் மட்டும் தான்… கடிக்காரக் குயில் நேரம் இரவு எட்டு என்பதை எட்டு முறைக் கூவி நினைவு படுத்த, “எனக்கு பால் மட்டும் போதும், அவளை சாப்பிட வை…” எதுவும் வேண்டாம் என்றால் மனைவி விட மாட்டாள் என்றுணர்ந்து சொன்னார் ராஜவேலு… சிறிது நேரத்தில் பாலோடு வந்தவரிடம், “சாப்பிட்டாளா…” என்க,
“நல்லாத் தூங்குறா…” என்றார் பத்மா.
“ம்ம்… இத்தனை நாளா, நமக்குத் தெரியாம சொல்லப் பயந்து, மனசுக்குள்ள ரொம்ப பயந்து, கஷ்டப் பட்டுருப்பா… அதான் நமக்குத் தெரியவும் ரிலாக்ஸா தூங்குறா போல, விட்டுடு எழுப்ப வேணாம்…” என்பது தான் ராஜவேலு கடைசியாக மனைவியிடம் பேசியது…
அவர் கூறியதும் தலையசைத்து விட்டு மகளிடம் வந்த பத்மா, விடிந்து வெகு நேரமாகியும் கணவர் வராததை உணர்ந்து அறையில் சென்று பார்க்க, அவரது உயிர் பறவை உயிர்க் கூட்டை விட்டுப் பறந்து வெகு நேரமாகி இருந்தது…
அன்று நடந்ததை இளைய மகளிடம் கூறிய பத்மா, “அப்பா உடம்பு சரியில்லாம இறந்துட்டதா தான் எல்லாருக்கும் தெரியும், இப்போ ஷ்ரவ் பத்தி தெரிஞ்சா என்ன ஆகும்…? தஞ்சாவூர் போனா எதையும் மறைக்க முடியாது… எல்லாரும் அசிங்கமா கேவலமா பேசுவாங்க, அதனால தான் அங்க வரலேன்னு சொன்னேன்…” எனவும் அன்று தாய் எதற்காக தஞ்சாவூர் வரவில்லை என சொன்னார் என்று புரிந்தது…
“ம்ம்… புரியுதும்மா… ஷ்ரவ் எப்படிம்மா, எனக்கு இன்னும் நம்பவே முடியல, இனி என்ன செய்யலாம்மா… நீங்க ஏதோ ப்ளான்ல இருக்கீங்க போல…” எனவும்,
“ப்ளான்லாம் இல்லடா, உனக்கு இன்னும் 3 மாசம் தான காலேஜ்… இங்கையும் இருக்க முடியாது… இப்பவே நம்மளைப் பார்த்தும் பார்க்காத மாதிரி பேசுறாங்க, அதனால மூனு பேரும் பெங்களூர்ல செட்டில் ஆகிடலாம்னு தோனுது… பணம் நமக்கு ஒரு பிரச்சனையும் இல்ல… ஷ்ரவ் அவளை சரி செய்யனும் அது தான் பிரச்சனை…” என்ற தாய் கூறியதும் சரியே எனப்பட, அடுத்த ஒரே வாரத்தில் அனைத்தையும் முடித்து பெங்களூருவில் குடியேறினர் மூன்று பெண்களும்…
அத்தியாயம் – 04
உன்னுடன் பேசிய
நினைவுகளை சுமந்துக்கொண்டு
வாழ்கிறேன் நீ
என்னுடன் இல்லாத
தருணங்களில்!!!
சஷ்டி வீட்டில் இருந்து கல்லூரி சென்று வர, அவர்களது வாழ்க்கை மட்டும் இயல்புக்கு மாறவே இல்லை… தன்னுடைய செய்கை தான் அப்பாவைக் கொன்று விட்டது என்று உறுதியாக நினைத்த ஷ்ரவ் அறைக்குள்ளேயே முடங்கிக் கொண்டாள்… யாரிடமும் பேசுவது இல்லை… வயிற்றில் வளரும் குழந்தையின்பால் கூட அன்பு உண்டானதா என்று கேட்டால் தெரியாது யாருக்கும்…
நாளடைவில் மன அழுத்தத்திற்கு ஆளாகி மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டாள்… “சரியாகி விடுவாள் எல்லாம் சரியாகி விடும்…” என்று எண்ணிய எதுவுமே சரியாகவே இல்லை… பத்மாவும், சஷ்டியும் மிகவும் பயந்தே போனார்கள்…
தன் குடும்பம் இப்படி ஒரு நிலைக்கு வந்ததற்கு அவன் தானேக் காரணம், அவனையும் அவன் குடும்பத்தையும் பழி வாங்காமல் விடக்கூடாது என தனக்குள்ளே உறுதி பூண்டாள் சஷ்டி… இதற்கிடையில் ராஜவேலுவின் நண்பர் ஒருவரின் உதவியால் ஷ்ரவை மலேசியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஸ்பெஷல் சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் வெஸ்லின் என்பவரிடம் அழைத்துச் சென்றனர்…
இப்போது அவர்கள் இருப்பது அதே மருத்துவமனையில் தான்… கர்ப்ப கால ஆரம்பக் கட்டத்தில் ஷ்ரவ் மருந்துகள் எடுத்துக் கொள்ளாததால், இப்போது பிரச்சனை ஆகியிருந்தது…
மருத்துவர் கொடுத்த தேதிக்கு இன்னும் ஒரு வாரம் இருக்க, திடிரென ஷ்ரவ்க்கு பிட்ஸ் வந்ததாக நேற்று பத்மா அழைத்து சஷ்டியிடம் கூறியிருந்தார்… அதனால் தான் அவளும் யாருக்கும் தெரியாமல் மலேசியா கிளம்பியிருந்தாள்…
இதெல்லாம் ஸ்ருதியின் உதவியில்லாமல் நடக்காது என்றுதான், அவளிடம் சொல்லி கிளம்பினாள். அவளோ சிவாவிடம் எல்லாவற்றையும் கூறி இங்கே வர வைத்து தன் பயணத்தையும் கெடுத்து வைத்திருக்கிறாள்…
கோபம், பாசம், அழுகை, பழி வெறி என கலந்து கட்டி, அனைத்தையும் அவனிடம் சொன்னவள், ஸ்ருதியைத் திட்டாமலும் இல்லை… “நான் உங்களை விட்டு நிரந்தரமா போகப் போறத சொன்னேன்… இனி இங்க வர மாட்டேன்னு சொன்னேன்….” என்றதும்,
“ம்ம்… அது தான் அவளை என் கிட்ட சொல்ல வச்சிருக்கு… நீயும் நானும் லவ்வே பண்ணலன்னாலும் நம்ம ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் பண்ணனும்னு வீட்ல சொல்லிட்டே இருப்பா… அவ சொல்லி சொல்லி தான் உன் மேல எனக்கு ஈர்ப்பு வந்ததோ என்னமோ, ஆனா அது தான் உன்னைக் கவனிக்க வச்சது…”
“ஸ்ருதி பார்க்க விளையாட்டுப் பொண்ணு மாதிரி தெரிஞ்சாலும் ரொம்ப கேரிங்… அதுவும் என் மேல அளவுக்கதிகமான கேரிங்…. அவ எனக்கு ப்ரண்டா கிடைச்சது வரம் தான்…”
“அது இருக்கட்டும், அவளப் பத்தி பேச நமக்கு இன்னும் லைப் புல்லா இருக்கு, அப்போ பேசுவோம்… இப்போ நீ சொல்லு, நீ இங்க வந்த வேலை முடிஞ்சதா, நீ தேடின அவன் கிடைச்சானா…? நீங்க எல்லாரும் சொல்ற அவன் யாரு…? அவன் பேர் என்ன…? சொல்லு…? எனக்கும் தெரியனும்…” என்றவனிடம்,
பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தவளின் தோளைப் பற்றியவன், “சொல்லு சசி… அவன் பேர் என்ன…? சொல்லு…” என்று உலுக்கியும் அமைதியாய் இருந்தவளின் முகம் பற்றி கண்களை நேருக்கு நேராய் நோக்கியவன், “அவன் பேர் கார்த்திக், கார்த்திக்கேயன் ஜெகதீஷ்வரன்… தி கிரேட் லிங்கஷ்வரனோட இரண்டாவது மகனான சிவபாலனோட அண்ணன் காத்திக்கேயன் சரியா…” என்றான் அழுத்தமாய்…
தெரியுமா…? எப்படித் தெரியும்…? கடவுளே… அப்போ நான் பழிவாங்கத்தான் இவனை லவ் பண்ணேன்னு நினைச்சிருப்பானோ…? இருக்கட்டும் அப்படியே நினைக்கிறது தான் சரி, நானும் இவனை விட்டு போக முடியும்…
ஆனா முடியுமா… இவன் இல்லாமல் இருக்க முடியுமா…? கண்களில் நீர் கோர்க்கத் தொடங்கியது… தன் கைகளில் இருந்த அவளது முகத்தில் தெரிந்த உணர்வுப் போராட்டத்தை அறிந்தவன், அதைத் தாங்க முடியாமல், தன் நெஞ்சில் இழுத்து சாத்திக் கொண்டான்…
“நீ உங்க அக்காவுக்காக இதை செய்யும் போது, நான் என் அண்ணனுக்காக எதையும் செய்ய மாட்டேனா…”? என்றான் பொறுமையாய்… அனைத்தும் புலப்பட்டது அவளுக்கு, தன் அண்ணணுக்காக புனே வரை சென்று விசாரித்திருக்கிறான் என்று புரிகிறது…
அதைத் தொடர்ந்து அனைத்தும் அவனுக்கு தெரிய வந்திருக்கும் என்பது புரிகிறது… அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை, பீறிட்டு எழ, அவனை இறுகக்கட்டிக் கொண்டு கொட்டித் தீர்த்தாள் சஷ்டி…
***********
“அர்வி எதுக்கு இவ்வளவு ஸ்பீடா போற, பயமாயிருக்குடா…” பயத்தில் அலறியவளை..
“பயமா இருந்தா என்னை கட்டிப்பிடிச்சுக்கலாம் பேபி, அதுக்காக மெதுவா போக முடியாது… உன் அண்ணன் பண்ணி வச்சிருக்க வேலைக்கு… ஏண்டி உங்களுக்கெல்லாம் அடுத்தவங்க ப்ளீங்சை புரிஞ்சக்கவே முடியாத…?” என்று பதிலுக்கு கத்தினான்.
“என்ன… சிவா என்ன சொன்னான், சஷ்டி கூட சண்டையா… அவ திரும்பி வர மாட்டேன்னு சொல்லவும் தான், சிவாக்கிட்ட சொன்னேன்… அவன் இப்படி பண்ணுவான்னுத் தெரியாது…”
“நீ எதைத் தான் தெரிஞ்சு வச்சிருக்க, சரி விடு, நமக்கு முக்கியமான வேலை இருக்கு… உன் அண்ணன் சீக்கிரம் இதெல்லாம் வாங்கிட்டு, உங்க கோவிலுக்கு வரச் சொன்னான்… அந்த ஐயரையும் இழுத்துட்டு…”
“என்ன திங்க்ஸ்… கோவிலுக்கு எதுக்கு… சிவா என்ன சொன்னான்…” ஒரு விதப் பயத்துடனே வந்தது அவளது குரல்…
“அதுவா… நம்ம ரெண்டு பேரையும் இனி தனியா விடக்கூடாது, நமக்கு மேரேஜ் செய்து வச்சுடலாம்னு சொல்றான்… அதான், நானும் சரின்னு சொல்லிட்டேன்… இனியும் உன்னைப் பிரிஞ்சு என்னால இருக்க முடியாது பேபி…” முகம் தீவிரமாய் இருந்தாலும் கண்களில் குறும்பு வழிந்தது…
“ஐயோ… நான் மாட்டேன், உனக்கு இன்னும் நான் ஓகேன்னு சொல்லவே இல்ல, என்னை வீட்ல விட்டுடா, ப்ளீஸ்…” என அரண்டவளைப் பார்த்து வாய் விட்டுச் சிரித்தவன், “அது ஒரு பிரச்சனையே இல்ல பேபி… நமக்கு ரெண்டு பேபிஸ் பிறந்த பிறகு கூட நீ ஓகே சொல்லலாம்… நல்லா டைம் எடுத்துக்கோ… பட், இன்னைக்கு நம்ம மேரேஜ் கண்டிப்பா நடக்கும்…” என்று மேலும் அவளை சீண்டி விட,
“நோ… நோ… அர்வி, நீ நல்ல பையன், இப்படியெல்லாம் செய்யக் கூடாது… நம்ம ரெண்டு வீட்லயும் நமக்குத் தான் மேரேஜ் செய்து வைப்பாங்க, முன்னாடியே அப்பா சொல்லியிருக்கார் தானே… ப்ளீஸ் அர்வி இப்படித் திருட்டுக் கல்யாணம் எல்லாம் வேண்டாம்… நான் சிவாக்கிட்ட வேணும்னா பேசுறேன்டா…”
‘இதோ வந்து விடுவேன்’ என இருந்த கண்ணீரோடு பேசியவளை, ஒரு நிமிடம் நேராகப் பார்த்தவன், “ஓகே. உன்னோட விருப்பம் இல்லாம எதுவும் நடக்காது…” பட், “நீ நினைக்குற மாதிரி நம்ம கல்யாணத்தை நம்ம ரெண்டு வீட்லயும் செய்து வைக்க மாட்டாங்க…” என்றான் இறுக்கமாய்…
இவ்வளவு நேரம் இருந்த இலகு நிலை போய், இப்போது ஏன் இப்படி பேசுகிறான் என்பது போல அவனைப் பார்க்க,
“உனக்கும் சிவாவுக்கும் உன் அப்பா வேற இடத்துல மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டார்… அதுவும் பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்குற மாதிரி ப்ளான்…”
“வாட்… இது எப்படி முடியும்… அப்போ அங்கிள் ஒன்னும் சொல்லலயா… ஏன்… சஷ்டி… அவளை அண்ணா லவ் பண்றான்…” அதிர்ச்சியாய் பேச…
“ஹான்… அங்கிளா… அவர் என்ன சொல்ல முடியும்… அவரை தான் உன்னோட டாடி தன் பிஸ்னஸ்ல இருந்து கழட்டி விட்டுட்டார்… சிவா பிரச்சனை தெரிஞ்சு தான், என்னைக் கூடவே வச்சிருக்கான்… லவ் பண்ணா பண்ணட்டும், ஆனா அதை எப்படி உடைக்கிறதுன்னு உன் அப்பாவுக்குத் தெரியாதா என்ன…? ஆல்ரெடி ஒரு லவ்வை ப்ரேக் பண்ண ஆள்தானே டேமிட்…” என்று கார்க் கதவைக் குத்த,
“என்ன சொல்ற, எதையும் முழுசா சொல்லாம எனக்கு எப்படி புரியும்… சொல்லு அர்வி… என்ன நடக்குது, யாருக்கு என்ன நடந்துச்சு…” பயந்தவளாய் கேட்க,
“சஷ்டி ஏன் இங்க வந்தான்னு தெரியுமா உனக்கு…? உன்னைப் பார்க்க, உன் கூட இருக்க எல்லாம் வரல, உன் குடும்பத்தை பழி வாங்க… ஆனா, அப்படி எதையும் செய்யல, ஏன் தெரியுமா…? அவளும் சிவாவை லவ் பண்றா அதான்…. ஆனால் என்னைக் கேட்டா மொத்தக் குடும்பத்தையும் அவ ஏதாவது பண்ணியிருக்கனும், அவ சிச்சுவேசன்ல நான் இருந்தா, அதைத் தான் செஞ்சிருப்பேன்…” என்றான் கோபம் கொஞ்சமும் குறையாத குரலில்…
“அர்வி… நீ என்ன சொல்ற, சஷ்டி என்னோட ப்ரண்ட், அவ எப்படி இதை செய்ய முடியும், ஏன் செய்யனும், சொல்லு அர்வி எனக்கு ஒன்னும் புரியவே இல்ல…” என்றதும்,
“என்ன புரியல, சஷ்டி இன்னைக்கு அவ அப்பா இல்லாம இருக்குறதுக்கு முழு காரணமும் உன்னோட ப்ளடி கிரிமினல் மைண்ட் அப்பா தான்…” என்று கத்தியவன்…
அவள் முகத்தில் தெரிந்த பயத்தில், தன்னை சமன் படுத்திக் கொண்டு, ஷ்ரவந்தியைப் பற்றி அனைத்தையும் சொல்லி, கார்த்திக்கைப் பற்றியும் முழுதாக சொல்லிவிட்டான்…
அனைத்தையும் கேட்டவளுக்கு எதுவும் பேசவேத் தோணவில்லை… “அப்பாவா இப்படி…” நம்பவே முடியாமல் திரும்பத் திரும்ப அதையேக் கேட்டாள்…
அவளது அலைப்புறுதலை காண சகிக்காமல், “ரதிம்மா… இங்கே பாரு, ரதி என்னைப் பாரு. நாம எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்… கார்த்திக்கையும், ஷ்ரவந்தியையும் சேர்த்து வைக்கனும், அவங்களுக்கு செய்த துரேகத்துக்கு உன் அப்பா கஷ்டப்படனும்…”
“அதோட சிவா சஷ்டிப் பத்தியும் ஏதோ டவுட் வந்துருக்கும் போல, அதான் ப்ராப்ளமே இல்லாத கம்பெனிக்கு எங்க ரெண்டு பேரையும் சென்னை அனுப்பிக்கார்… நாங்க சென்னை போன கேப்ல, இவர் போய் அவங்க வீட்டுல ஓகே சொல்லிட்டு வந்துருக்கார்… உங்க அப்பா தான் அப்படின்னா உங்க அம்மா அதுக்கும் மேல… இப்படியெல்லாம் உங்களுக்கு ஒரு பேரண்ட்ஸ்…” என்று பல்லைக் கடித்தான்…
“அப்போ, கார்த்திண்ணா USAல இல்லை… டாடி சொன்னார், அவன் மேரேஜ் செய்துட்டு நம்மளை அசிங்கப் படுத்திட்டுப் போயிட்டான்னு…” எனவும்,
“எல்லார்க்கிட்டையும் அதையே தான் சொல்லி ஏமாத்தி வச்சுருக்கார்… உண்மைத் தெரியும் வர நாங்களும் நம்பினோம்… சரி விடு இனி பேசி நேரத்தை வீணாக்க முடியாது… உனக்கு என்ன தெரியனுமோ, அதை உன் அண்ணனும் அப்பாவும் தான் சொல்லனும்… இப்போ நாம கல்யாணத்துக்கு என்ன வாங்கனுமோ அதை வாங்கலாம்… உனக்கு அந்த அறிவு கொஞ்சமாவது இருக்கா…” என கிண்டலில் இறங்க,
“அப்போ நிஜமாவே கல்யாணம் நடக்கப் போகுதா… நீ என்னை மிரட்ட சொல்றன்னு நினைச்சேன்…” உள்ளே போன குரலில் சொல்ல…
“உன் டாடி பிசினஸ்ல இருந்து என் அப்பாவை ரிலீவ் பண்ணவுமே, இப்படி எதாவது செய்வார்னு தோணிச்சு, நீயும் உன் டாடி சொல்றதை அப்படியே கேட்ப, என்னை லவ் பண்றேன்னு சொல்லியிருந்தா கூட, எனக்கும் பயம் இருக்காது… ஆனா, நீ அதுவும் சொல்லல…”
“உன்னை லவ் பண்றது உண்மை, உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்பதும் உண்மை… உனக்கும் கொஞ்சம் டைம் கொடுக்கனும் அதுவும் எனக்குத் தெரியும், ஆனா அந்த டைம் கல்யாணத்துக்கு முன்னாடி என்னால கொடுக்க முடியல…”
“நம்ம மேரேஜ் வேனும்னா உன்னோட மனக் குழப்பத்துல நடக்கலாம்… ஆனா, நம்ம வாழ்க்கை உன்னோட விருப்பம் இல்லாம அடுத்த கட்டத்துக்கு கண்டிப்பா போகாது… ட்ரஸ்ட் மீ…” என்றதும்…
“என்னோட வாழ்க்கையில வர எல்லா மொமன்ட்லையும் நீ என் கூட இருக்கனும் அர்வி… நீ இல்லாத வாழ்க்கை எனக்கு எப்பவுமே கிடையாது… கண்டிப்பா கிடையவே கிடையாது…”
“அப்பா சொன்னா கேட்பேன் தான், ஆனா அதுக்காக எல்லாமே கேட்பேன்னு நீ சொன்னது தப்பு… என்னோட வாழ்க்கை அது என் அர்வி கூட மட்டும் தான்… அதை யாராலும் மாத்தவே முடியாது… இன்குலீடிங் மை டாடி… உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா…? என்னை நம்புவியா அர்வி…” என்று கேட்டவளை விழியகலாமல் பார்த்தவன்,
சட்டென தனக்குள் இழுத்துக் கொண்டு, “அடிக் குள்ளச்சி அப்போ இத்தனை நாளா, அந்த செம்பட்டையன் கூட சேர்ந்து என்னை வெறுப்பேத்திருக்க… ஹாஹா… காட் தேங்க்யூ… தேங்க்யூ சோ மச் ரதி பேபி… லவ் யூ டி குள்ளச்சி… லவ் யூ சோ மச்…” என்று தன் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவளுக்கு முத்தத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்தான் அரவிந்த்….
அத்தியாயம் – 05
என்னுள் நீயும்
உன்னுள் நானுமாய்
இருந்தாலும்….
என்றும் உன்னுளே
நான் இருக்க
விரும்புகிறேன்…
காதலனாக கணவனாக
காவலனாக
என்றும் நீயிருக்கும் வரை
ஏதோ நியாபகத்தில் இணைந்திருந்த அந்தக் கைகளைப் பற்றியேக் கவலைப்படாமல் இருவரும் அமர்ந்திருந்தனர்… தன்னையறியாமலே ஒரு இனம் புரியாத சுகம் சூழ்வதையும், பெரும்பலத்தை அந்த தீண்டல் தருவதையும், அவளால் புரிந்துகொள்ள முடிந்தது…
சிப்பிக்குள் விழுந்த மழைத்துளி முத்தாக உருமாறும் இயற்கையின் ரசவாதமாய்… அவனுடைய நினைவுத்துளி இதயத்தில் வீழ்ந்து காதலாய் உருமாறி குளிர்ச்சியாய் உள்ளே பரவுவதை அவளால் உணரமுடிந்தது…
இருவரிடமும் ஆழ்ந்த அமைதியை சஷ்டியே கலைத்தாள்… “சிவா நான் போகனும், அம்மா ரொம்ப பயந்துட்டு இருக்காங்க… நான் கூட இருந்தா பெட்டரா பீல் பண்ணுவாங்க இந்த டைம்ல ஷ்ரவ் கூட நான் இருக்கனும்…” என்றதும்,
“ம்ம்… போலாம், கண்டிப்பா போகலாம்… பட், நீ மட்டும் தனியா இல்லை, உன் கூட நானும் வரேன்… இனி தனியா எதையும் பேஸ் செய்து கஷ்டப்பட வேணாம்… நான் உன்கூட எப்பவும் இருப்பேன்… ஆனா, அதுக்கு முன்னாடி நீ எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணனும்… நான் என்ன செய்தாலும், என்கூட துணையா இருப்பேன்னு உறுதி கொடுக்கனும்…” என்று அவன் கூற,
அவன் கைகளுக்குள் இருந்த தன்கைகளை எடுத்து அவன் கன்னத்தைப் பற்றியவள், “தேங்க்ஸ் சிவா, வேற என்ன சொல்ல, நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்… உங்க மேல எனக்கு முழுநம்பிக்கை இருக்கு… நான் இந்த உலகத்தை விட்டு போறவரைக்கும் உங்களை விட்டுப் போகமாட்டேன்… இட்ஸ் ப்ராமிஸ் சிவா… மதர்ப்ராமிஸ்…” என அவளும் அவன் கைகளைப் பிடித்துக்கொள்ள,
“லூசுதாண்டி நீ… இன்னும் லைப்பே ஸ்டார்ட் பண்ணல, அதுக்குள்ள, என்னென்னமோ பேசுற, இனி இதுமாதிரி பேசினா, நான் உன்கூட பேசமாட்டேன்…”
“இல்ல… இல்ல… இனி இப்படி பேசவே மாட்டேன்… நீங்க சொல்லுங்க…”
“ஓகே… அதுவந்து, உனக்கு கார்த்திக் மேல கொஞ்சமாச்சும் நம்பிக்கை இருக்கா… அவன் நல்லவன்னு, ஏதோ ஒரு காரணம் இருக்கு, அவன் இப்படி ஒதுங்கிப் போகன்னு உன்னாலப் புரிஞ்சுக்க முடியுதா…” என்றான் சிறுதயக்கத்துடன்…
சில நொடி மௌனத்திற்குப் பிறகு, “பல இளைஞர்களுக்கு வழிகாட்டியா இருக்குற ஒரு ப்ரொபசர் தப்பானவரா இருக்க வாய்ப்பில்லை சிவா… அதோட ஷ்ரவ் ஒரு தப்பானவரை செலக்ட் பண்ணியிருக்க மாட்டான்னு எனக்குத் தெரியும்…”
“அப்புறம் அப்பாவும் கார்த்திக்சார் கூட ஒர்க் பண்ணிருக்கார்… எப்படித்தான் நல்லவனா நடிச்சிருந்தாலும், ஏதோ ஒரு சந்தர்பத்துல அவங்களோட உண்மையான முகம் வெளியே வரும்… ஆனா அத்தானைப்பத்தி அப்படியாரும் எந்தக் குற்றமும் சொன்னதே இல்ல… அப்பா என்கிட்ட சொல்லும் போது கூட,
“கார்த்திக் ஒரு பிசினஸ் மேனோட தொழிலதிபரோட மகன், ஒரு தொழில் சாம்ராஜியமே இருக்கு, அவங்ககிட்ட.. ஆயிரக் கணக்குல லேபர்ஸ் சம்பளம் வாங்கி வேலை செய்றாங்க, ஆனா கார்த்திக் டீச்சிங் சூஸ் பண்ணியிருக்கார்… ஒரு தொழிலதிபரா இருக்கறதை விட, பல தொழிலதிபர்களை உருவாக்குவது தான் பெஸ்ட்னு… என்கிட்டயே சொல்லியிருக்கார்… அவர் தப்பானவரா இருக்க வாய்ப்பே இல்லைன்னு சொன்னார்… எனக்கும் அதே தாட் தான் இருக்கு…” என்றாள் நீளமாய்…
அவள் கூறியதை மௌனமாய் உள்வாங்கியவன், “எனக்கு உன் அம்மாக்கிட்ட பர்ஸ்ட் பேசனும் சசி… சில விஷயங்கள் நான் பேசி தெளிவு பண்ணிடுறது நல்லது… அதனால கால் பண்ணு அவங்களுக்கு…” என்றான் சிவா…
மறுப்பேதும் சொல்லாமல் தாய்க்கு அழைத்து, நலம் விசாரித்தவள், சிவாவிடம் கொடுக்க, அவனும் “வணக்கம் ஆன்டி” என ஆரம்பித்து, புனேவில் இருந்து கார்த்திக் வந்ததில் இருந்து இந்த நிமிடம் வரை நடந்தது, என அனைத்தையும் கூறிவிட்டு, அடுத்து அவன் செய்யப்போவதையும் சொல்ல, சஷ்டிக்குதான் பயமாக இருந்தது…
பத்மா என்ன சொல்லுவாரோ என்ற பயம் வேறு… இவளும் காதல் அது இதென்று வந்து நிற்கிறாளே எனக் கோபப்படுவாரோ என்ற பயம் வேறு…
அனைத்து உணர்வுகளையும் முகத்தில் காட்டியபடி சிவா பேசுவதையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்… அதற்குள் அவனும் பேசிமுடித்து அவளிடம் கொடுக்க, என்ன பேசுவது என்று,
“அம்மா…” என்றதும், “உன்னைத் தப்பா நினைக்கவே இல்லை, அவர் என்ன சொல்றாரோ அதை செய்…” எனவும்,
“மம்மி…. என்னைத் தப்பா நினைக்கல இல்ல… ப்ளீஸ் மம்மி…” என்று கூற,
“இல்லைடா எனக்குப் புரியுது, நீ சிவா சொல்றதை கேளு சரியா, இப்போ ஷ்ரவோட லைப்பும் அதுலதான் இருக்கு… என்னோட ஆசிர்வாதம் உனக்கு எப்பவும் உண்டு, மனசைப் போட்டு குழப்பாத, நான் பிறகு பேசறேன்டா…” என்று வைத்துவிட்டார்…
யோசனையோடு இருந்தவனை, “சிவா” என, “நான் பேசினதைக் கேட்டதானேடா, நான் என்ன செய்தாலும், ஏன் எதுக்குனு கேள்வி கேட்காம என்கூடவே இருக்கனும்… நமக்கு டைம் ரொம்ப கம்மியாதான் இருக்கு… அண்ணிக்கு நார்மல் டெலிவரிக்கு சான்ஸ் இல்லைன்னு சொல்லிட்டாங்க, நாளைக்கு ஈவ்னிங்தான் ஆப்ரேஷன் செய்ய போறாங்க… நம்ம குடும்ப வாரிசு, எந்தப் பிரச்சனையும் இல்லாம, இந்த உலகத்தைப் பார்க்க வரனும்… இன்னைக்கு எல்லா வேலையும் முடிச்சிட்டு நாம எல்லாரும் போகலாம்… இப்போ கிளம்புவோம் டைமாச்சு…” என்று கூறி அவளையும் அழைத்துக் கொண்டு காரில் கிளம்பினான்…
‘யாரோ மந்திரக்கோலை ஆட்டி எல்லாமே சரியாகிடுச்சு… சொன்ன மாதிரி இருக்கு என்ற எண்ணம் தான் வந்தது அவளுக்கு… அவனிடம் கேட்க பல கேள்விகள் இருந்தாலும் விடையளிக்கத் தயாரான நிலையில் அவன் இப்போது இல்லை… ஆனாலும், கார்த்திக் எங்கே என மண்டையை உடைக்கும் அந்த ஒரு கேள்விக்காவது அவன் பதில் சொன்னால் போதும்…” என்று நினைத்து,
“சிவா… நீங்க சொல்ற எல்லாத்தையும் கேட்குறேன் பட் என்னோட ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க போதும்… அத்தான் எங்க இருக்கார்…? ஷ்ரவ் பத்தி அவருக்கு எல்லாமே எப்போத் தெரியும்?” என்றாள்…
“ம்ம்… நீதான் அண்ணியோட சிஸ்டர்னு தெரிஞ்சதுமே உங்களை கண்டுப்பிடிக்கிறது கஷ்டமா இல்லை… ஆனா, கார்த்திக்கை கண்டுபிடிக்கிறது தான் கஷ்டமா இருந்துச்சு… அவனைத் தேடத்தான் இவ்வளவு நாளாச்சு…”
“ஒன் வீக் முன்னாடிதான் அவன் இருக்குற இடம் தெரிஞ்சது… அவன்கிட்ட அண்ணியைப் பத்தி சொல்லி, இப்போ இருக்குற சூழ்நிலை எல்லாம் சொல்லிக் கிளம்ப வச்சிருக்கேன்…”
“நான் பொய் சொல்றதா நினைச்சு நம்பமாட்டேனுட்டான்… உங்க பேமிலி போட்டோஸ் அனுப்பி, டாக்டர் வெஸ்லினைப் பேசவச்சு அப்புறம் தான் நம்பினான்… சர்ஜரிக்கு முன்னாடி ஹாஸ்பிடல் வந்துடுவான் டோன்ட்வொரி…” என்றதும்,
“அப்படியா… அப்போ இவ்ளோ நாள் எங்கே இருந்தாங்க, ஏன் எங்களைத் தேடி வரவே இல்லை…” என்றாள் படபடவென..
“அவன் உங்களைத் தேடி வரலன்னு உனக்குத் தெரியுமா…? வேலைக்குன்னு போனவன் லவ் பண்றேன், கல்யாணம் பண்ணி வைங்கன்னு வந்து நின்னா எந்த அம்மா அப்பா ஏத்துப்பாங்க… “
“அதுவும் இவ்வளவு சொத்துள்ள ஒருவன் அவனோட மதிப்பு அவனுக்கேத் தெரியல… அதுதான் இங்கப் பிரச்சனை… போரடி அவங்க மனசை மாத்திடலாம்னு நினைச்சான்… ஆனா அவனே எதிர்பார்க்காத பல திருப்பங்கள் வந்து கார்த்திக் லைப்பை டோட்டலா மாத்திடுச்சு…” என்றுத் தனக்குத் தெரிந்த உண்மைகளை அவளிடம் கூற, அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாய் இருந்தது சஷ்டிகாவிற்கு….
அனைத்தையும் நெஞ்சில் ஒருவித வலியோடு கூறியவன், “போதும்… இனி இதைப்பத்தி எதுவும் பேச வேண்டாம்…” என்று வருத்தமான குரலில் பேசவும், எதுவும் சொல்லாமல் அவன் இடக்கையை தன் இருகைகளாலும் வளைத்து, தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்… அவளது கண்ணீர் சட்டையை நனைக்க,
“சாரி சிவா, ஐயாம் வெரி சாரி… நான் வேண்டின கடவுள் என் நம்பிக்கையைக் காப்பாத்திட்டார்… அத்தானோட அன்பு பொய்யா இருக்கக்கூடாது… நான் உங்கமேல வச்சகாதல் அழியக்கூடாதுன்னு வேண்டினேன்… என் வேண்டுதல் வீண் போகல சிவா…” என்று அழுதவளை, ஒருகையால் அனைத்து ஆறுதல் படுத்தியபடியே காரை செலுத்தினான் சிவா…
அத்தியாயம் – 6
உன் விழியில் விழுந்தேன்….
வெளிவர முடியாமல் இல்லை
வெளிவர விரும்பம் இல்லாமல்….
அதில் குடியிருக்க விரும்புகிறேன்
ஆயுள் வரை கைதியாக!!!
“மச்சான் டிக்கெட்ஸ் கன்பர்ம் ஆகிடுச்சுல்ல, லாஸ்ட் டைம்ல சொதப்பிடப் போகுது…”– சிவா
“அதெல்லாம் பக்காவா முடிச்சுட்டேன் மாப்ள, ரிட்டன் டிக்கெட்ஸ் கூட புக்கிங் தான்… உங்க டைமிங் பொறுத்து சேஞ்ச் பண்ணிக்கலாம்… நீ அதையெல்லாம் நினைச்சு டென்ஷன் ஆகவேண்டாம்…”– அரவிந்த்
“சரி மச்சான், நாங்க வரவரைக்கும் நீ தனியா மேனேஜ் பண்ணு, ஸ்ருதியை எங்க வீட்டுக்கு மட்டும் கூப்பிட்டு போயிடாதே, அவளோட மனசை ரொம்ப ஈஸியா கலைச்சுடுவார் எங்கப்பா… என்ன நடந்தாலும், அவர் எப்படி ரியாக்ட் பண்ணாலும் நீ ஸ்டராங்கா இரு… அங்கிள் கிட்ட நான் பேசிட்டேன்…” சிவா.
“அப்பா எனக்கும் பேசினார்டா, கொஞ்சம் பயந்தாரு, ஸ்ருதி பேசவும் ஓகே சொல்லிட்டாரு, எனக்கு என்ன பயம் தெரியுமா, என் மாமனாரை கூட சமாளிச்சுடுவேன், ஆனா, அவர் பெத்த பொண்ணைத்தான் எப்படி சமாளிக்கறதுன்னு தெரியாம முழுச்சிட்டு இருக்கேன்…”
“டேய் மச்சான், உன் காரியம் ஆகவும் என்னைக் கழட்டிவிட்டு போயிடாதடா, எனக்கு இன்னைக்கு பர்ஸ்ட்நைட், நானும் என்னோட ரதி பேபி மட்டும் இருக்குற மாதிரி ப்ளா… ப்ளாவா… கனவெல்லாம் வருதுடா, உன் தங்கச்சியோட எனக்கு எப்படியாச்சும் பர்ஸ்ட்நைட் நடக்க வச்சுடு மச்சான்… என்னோட நாலாவது பையனுக்கு உன்பேரை வைக்கிறேன்…” என்று நீளமாக பேசிய அரவிந்தை, கண்களில் சிரிப்புடன் பார்த்திருந்தான் சிவா…
திருமணப் புடவையை பெண்கள் இருவரும் மாற்ற சென்றிருக்க, கிடைத்த கேப்பில் தான் இவர்களது பேச்சுக்கள் நடந்தது…
தான் பேசியதற்குப் பதில் பேசாமல் சிரித்துக் கொண்டு நின்றிருந்த சிவாவை விசித்திரமாய் நோக்கியபடியே அவன் பார்வைப் போன திசையை பார்க்க, அவனுடைய ரதி பேபி, சக்திதேவியாய் மாறி முறைத்துக் கொண்டிருந்தாள்…
‘துரோகி…’ என்று நண்பனை மனதிற்குள் திட்டியபடியே, ஸ்ருதியைப் பார்த்து, “அதுவந்து ரதிபேபி, சும்மாடா, உன் அண்ணன் நமக்கு இன்னைக்கே பர்ஸ்ட்நைட் வைக்கனும் சொல்றான்… நான் உடனே வேண்டாம்னு சொல்லிட்டேன்… என் பேபியோட மனசு மாறுற வரைக்கும் நான் வெயிட் பண்ணுவேன்னு சொல்றேன். ஆனா, இவன் விடமாட்டேங்குறான்டா… நீயே சொல்லு, இப்போ இருக்குற பிரச்சனைல அது ரொம்ப முக்கியமா…” என பாவமாய் பேச…
“சிவா வந்து உன்கிட்ட கம்பல் பண்ணி சொன்னான், நீ வேண்டாம்னு சொல்லிட்ட, இதை நான் நம்பனும்…” என்று கடுப்பாய் பேசியவள், பின் சிவாவிடம் திரும்பி, “சிவா, அதுதான் அர்வி இவ்ளோ தூரம் சொல்றார் இல்ல, கேட்கமாட்டியா, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நம்ம பிரச்சனை முடிஞ்சு, கார்த்திக் அண்ணா, அண்ணியோட நம்ம வீட்டுக் குட்டி இளவரசனோ இல்லை இளவரசியோ வரட்டும் அதுக்குப் பிறகு எங்களைப் பத்தி யோசிக்கலாம்…சரியா…” என்று உள்ளுக்குள் சிரித்தாலும் வெளியே கோபமாய் பேசியவளை கொலைவெறியுடன் பார்த்தான் அரவிந்த்…
“ஹேய் என்னடி இது… அவ்ளோ நாளெல்லாம் வெயிட் பண்ண முடியாது, நீ சொல்ற டைம்படி பார்த்தா, நமக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணிதான் பர்ஸ்ட்நைட்டே நடக்கும்… அந்த வேலையே ஆகாது, உனக்காக வேணும்னா, இன்னைக்கு நைட் பத்துமணி வரைக்கும் டைம் தரலாம்… அவ்ளோதான் அதுக்குமேல… ஹூகும்… சான்சே இல்லை பேபி…” என்று அவளுக்கு மேலேக் கடுப்பாய் பேசியவனை…
“எதுக்கு இப்படி என் மானத்தை வாங்கித் தொலையுற…” என்று முணுமுணுத்தபடியே அவ்விடம் விட்டு ஓடினாள் ஸ்ருதி…
“ஏய் நில்லுடி… நில்லு…” என்று அவளின் பின்னாடியே ஓடிய அரவிந்தைப் பார்த்து சிவாவும், சஷ்டியும் வாய்விட்டு சிரித்தனர்…
“ஸ்ருதிக்கு அரவிந்த் அண்ணா மேல லவ்வோ லவ்வு, ஆனா யாருக்கிட்டையும் சொல்லவே இல்லை… அவரைப் பார்த்தாலே ஓவரா கடுப்படிப்பா… பிடிக்காத மாதிரியே நடிப்பா, இப்போ என்ன நடந்துச்சு, எப்படி ஓகே சொன்னா…” ஆர்வமாய் கேட்டாள் ஷஷ்டி.
“ம்ம்… அவ ஸ்கூல் படிக்கும்போதே இவன் லவ் சொன்னான்… நான் கூட சப்போர்ட் பண்ணேன்… ஆனா, கார்த்திக் இவனை உண்டு இல்லைன்னு பண்ணிட்டான்… அவ படிச்சு முடிக்கிறவரை, எந்த வகையிலும் டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு கொஞ்சம் கண்டிப்போடு சொல்லிருந்தான்…”
“கார்த்திக்னா பயம் அரவிந்த்துக்கு, அதோட என் அப்பா சொன்னா எப்படி அச்சுபிசகாம அப்படியே ஸ்ருதி கேப்பாளோ, அதே அளவு கார்த்திக் சொன்னாலும் கேட்பா… அதனால தான் சார் அடக்கி வாசிச்சது… இப்போ பிசினஸ்ல இருந்து அங்கிளை ரிலீவ் பண்ணவும் பையனுக்கு பயம் வந்துடுச்சு போல, அதான் ஸ்ருதியை மிரட்டி எப்படியோ ஒத்துக்க வச்சுருக்கான்…”
“அத்தை இருக்கும் போதே ஸ்ருதியை தன் மருமகளா கொண்டு போகனும்னு ஆசை… எங்க ஆச்சிக்கும் அதுல விருப்பம்தான்… அவங்க இருக்குறவரை எல்லாமே நல்லாத்தான் போச்சு…” என்று கண்களை மூடி பெருமூச்சு விட்டவனின் கைகளைப் பிடித்து அழுத்தினாள் சஷ்டிகா…
“இனியெல்லாம் சரியாகும் சிவா… சரி பண்ணிடலாம்…” என்றதும்… “ம்ம்… உனக்கு என்கிட்ட கேட்க நிறைய கேள்விகள் இருக்கும், கேட்கனும்னு தோனலையா…” என்றான் சிறுவருத்ததுடன்…
“நீங்களே சொல்லுவீங்கன்னு வெயிட் பண்றேன்… எப்போ சொல்லனும்னு தோனுதோ சொல்லலாம்…” அவனின் சிறுவருத்தத்தைக் கூட போக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பளிச்சென்று புன்னகை புரிந்தாள் ஷஷ்டி…
“தேங்க்ஸ்டா, என்னைப் புரிஞ்சுக்கிட்டதுக்கு… சீக்கிரம் உன்னோட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்றேன்… ஆனா, நான் சொல்றதுக்கு முன்னாடி நடக்குறதை வச்சு நீயே தெரிஞ்சுக்குவ…” என்றதும்…
“ம்ம்… ம்ம்…” என்றபடியே அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள் சஷ்டி…
“ஹேய்… இது கோவில், எல்லாரும் உங்களைத்தான் பார்க்குறாங்க, அந்த ஐயர் வேற வரச்சொல்லி கடுப்படிக்குறார்… இங்க ரொமான்ஸ் சீன் ஓடுது… என் வயித்தெரிச்லைக் கொட்டாம வந்து தொலைங்க…” என்று எரிச்சலாய் கத்திய அரவிந்தை பார்த்து,
“என்ன மச்சான் என் தங்கச்சி கால்ல விழுந்தும் கூட ஒன்னும் தேரல போலயே… போடா… போடா… அதுக்கெல்லாம் மச்சம் வேணும் மச்சான்… எனக்கு இருக்கு தானா கிடைக்குது…”
“யூ சி மச்சான், நீ இன்னும் கொஞ்சம் வளரனும், சரி சரி என்னைப் பார்த்து வயிறெரியாதே, பிறகு உன்காத்து எனக்கும் பட்டுடப் போவுது… நீ வாடி செல்லம்…” என உசுப்பேற்றிய படியே தன்னவளை அனைத்துக் கொண்டு நகர,
“ஏய்… ஸ்ருதி உன்னால என் மானம் கண்டமேனிக்குப் பறக்குதுடி, இன்னைக்கு என்ன சொன்னாலும் நம்ம பர்ஸ்ட் நைட் நடந்தே ஆகனும்…” என பக்கத்தில் இருந்தவளின் கையைப்பிடித்து இழுத்தப்படியே நகர,
“மானத்தை வாங்காதேடா…” என்று கோபமாகப் பேசினாலும், அவள் முகமும் சிரிப்பால் மலர்ந்திருந்தது…
சிவாவின் ஆட்கள் சிலரையும், அவனது நண்பர்கள் சிலரையும் மட்டும் வரவைத்திருந்தான்… ஏற்கனவே ரிஜிஸ்டர் முறைப்படி திருமணம் செய்து முடித்திருந்தாலும், முறைப்படி திருமணம் செய்து கொள்வது நல்லது என்பதாலும் தான் இந்த ஏற்பாடுகள்…
ஹோமப் புகைக்குள் ஆண்கள் இருவரும் ஆளுக்கொரு மனையில் அமர்ந்திருக்க, பெண்கள் இருவரையும் அழைத்து வரச்சொல்லி ஐயர் கூறியதும், அவரவர் துணைகளின் அருகில் பெண்களும் அமர, கெட்டிமேளம்… கெட்டிமேளம்… என்ற ஐயரின் வார்த்தைகள் முடியும் முன்னே சர்ரென்று இரண்டு கார்கள் வந்து நின்றன…
“ரதிமா… எங்க என்னோட மாமனார் இல்லாம நம்ம மேரேஜ் நடக்கப் போகுதேன்னு ரொம்ப பீல் பண்ணேன்டி செல்லம்… அந்த பீலீங்க்ஸ் தெரிஞ்சதும் கடவுள் உடனே அனுப்பிவச்சுட்டார் பாரு… ‘காட் இஸ் கிரேட்னு…’ சும்மாவா சொன்னாங்க…” என அருகில் இருந்தவளின் காதை கடித்துக் கொண்டிருந்தான் அரவிந்த்…
“வாயை மூடு… நானே பயத்துல இருக்கேன்… உனக்கு நக்கலு… என் டாடிய பத்தி எதுவும் சொன்ன அவ்ளோதான்…” என்று முறைக்கவும், கப்பென்று வாயை மூடிக்கொண்டான் அரவிந்த்…
கார் வந்த வேகத்தைப் பார்த்ததும், சிவாவின் கைகளை அழுந்தப் பிடித்தவளின் கைகள் பயத்தில் வேர்த்திருந்தது…
“நான்தான் கூடவே இருக்கேனே, எதுக்கு இப்படி பயம் வருது… நான் பேசிக்கிறேன்… நான் மட்டும் பேசிக்கிறேன்… நீ அமைதியா வேடிக்கை மட்டும் பாரு போதும்…” என்று அவளுக்குத் தைரியம் கூறியவன் ஐயரின் முகத்தைப் பார்த்தான்…
“தகவல் சொல்ல லேட்டாகிடுச்சா மாமா…. லேட்டா வந்துருக்காங்க உங்க முதலாளி…” எனவும்,
“அதுவந்து… அதுவந்து தம்பி, நான் சொல்லக்கூடாதுன்னு தான் நினைச்சேன்… ஆனா…. தம்பி…” என ஐயர் திணற,
“நீங்க அவர்கிட்ட சொல்லனும்னு தானே உங்ககிட்ட வந்தோம்… என் திட்டமும் அதுதான்… உதவி செய்ததுக்கு நன்றி மாமா…” என்றவன்…
“நல்ல நேரம் முடிய இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு…” என்றுக் கேட்கவும்…
“பத்து நிமிஷம்தான் இருக்கு…” என்றார் ஐயர் தவிப்புடன்…
“மச்சான்” என்ற நொடி அரவிந்த் தன்கையில் உள்ள மாங்கள்யத்தை ஸ்ருதியின் கழுத்தில் கட்டி திரும்பி நண்பனைப் பார்க்க, அவனோ வெகுநிதானமாய் சஷ்டியின் கழுத்தில் மூன்று முடிச்சுகளைப் போட்டுக் கொண்டிருந்தான்…
புயல் வேகத்தில் லிங்கேஸ்வரன் நெருங்கும் முன்னே திருமணம் முடிந்திருந்தது… கோபம் பொங்க நால்வரையும் உறுத்து நோக்கிய சிலநொடிகளை தனக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொண்டார் அரவிந்தின் அப்பா தனஞ்செயன்…
“நான் அவ்வளவு தூரம் சின்னப்புள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லியும் கேட்காம, இந்த துரோகியோட பொண்ணையே கல்யாணம் செய்திருக்க…” எனக் கத்த, அங்கிருந்த அனைவருமே இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களின் அதிர்ந்த முகத்திலேயே தெரிந்தது…
அத்தியாயம் – 07
உன்னை புரிந்து கொண்டேன்
என்று நினைக்கும் பொழுது….
நீயோ
புரியாத புதிராய் உள்ளாய்….
புதிராய் இருந்தாலும்
உன் காதலை மட்டும்
நான் புரிந்து கொள்ளும்
மாயம் என்னவோ!!!
“வாம்மா ஸ்ருதி… வலது காலை எடுத்து வச்சு உள்ளே வா… இந்த நாளுக்காக நான் ஏங்கிப் போயிருந்தேன்மா… நீ இந்த வீட்டுக்கு மருமக மட்டும் இல்ல, எங்க எல்லாருக்கும் மகாராணி, என் செல்லப்பொண்ணு… உங்களை இப்படி பார்க்க உன் அத்தைக்குத்தான் கொடுத்து வைக்கல…” என்று கரகரத்த குரலில் பேசியவர், “விளக்கேத்துமா…” என்றதும், அருகில் நின்ற அரவிந்தை ஒரு பார்வைப் பார்த்தாள்…
என்ன புரிந்ததோ, தந்தையின் ஒரு பக்கம் வந்து நிற்க, மறுபுறம் ஸ்ருதி அவரது கையைப் பிடித்துக்கொண்டு, “மாமா எல்லாம்… எல்லாமே சீக்கிரம் சரியாகும்… நம்ம ரெண்டு குடும்பமும் ஒன்னு சேரப்போற காலம் நெருங்கிடுச்சு… அப்பா உங்களுக்கு செய்தது நம்பிக்கைத் துரோகம், அதை மன்னிச்சு அவரை ஏத்துக்கோங்கன்னு சொல்லமாட்டேன்… அவரே திருந்தி வரும்போது மாட்டேன்னு மட்டும் சொல்லாதீங்க… மன்னிப்பு கொடுக்கறதை விட பெரிய தண்டனை அவருக்கு கிடையாது… இனி எதுக்கும் கவலைப்படாதீங்க… நான் இருக்கேன் உங்ககூட, மகளா… மருமகளா.. மகாராணியா.. இந்த இம்சைக்கு இம்சை கொடுக்குற இம்சையா எப்பவும் உங்களோடவே இருப்பேன்… வருத்தப்படாதீங்க மாமா ப்ளீஸ்…” என சோகமாய் ஆரம்பித்து குறும்பாய் முடிக்க,
“ஏய்… நான் உனக்கு இம்சையா, டாடி பாருங்க நீங்க இவளுக்கு சப்போர்ட் பண்ணவேக் கூடாது… நான்தான் உங்க செல்லப் பையன்… இவ இல்ல…” என்று சிறுபிள்ளைப் போல் சினுங்கவும்,
“ஆமாண்டா கண்ணா, நீதான் என் செல்லப்பையன், என் மருமக என்னோட தங்கப்பொண்ணு…” என ஸ்ருதியின் தலையைத் தடவ,
“வெவ்வெவ்வே…” என கணவனுக்குப் பழிப்புக் காட்டியபடியே தனஞ்செயனின் தோளில் சாய்ந்துக் கொள்ள, கோபமாய் இருப்பதுபோல் காட்டினாலும், அரவிந்தின் முகமும் நிறைவான மகிழ்ச்சியையேக் காட்டியது…
*****************
“சிவா…. கார்த்திக் அத்தான் வந்திருப்பாரா…? ஷ்ரவ் எப்படி ரியாக்ட் பண்ணுவாளோத் தெரியல, அம்மா மேனேஜ் பண்ண முடியாம கஷ்டப்படப் போறாங்க…” அவன் தோளில் சாய்ந்தப்படியே புலம்பியவளை, சிறுபுன்னகையுடன் பார்த்தான்…
பதிலேதும் வராமல் போக, திரும்பி அவனைப் பார்த்தவள், சிரிப்பதைக் கண்டதும், “ம்ப்ச் சிவா… நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி சிரிக்கிறீங்க…” என சிணுங்கியபடியே அவன் புஜத்தில் குத்த,
வாய்விட்டுச் சிரித்தவன்… “ப்ளைட்ல ஏறினதுல இருந்து, இதோ இப்போ லேண்டாகப் போகுது, இதுவரைக்கும் ஒரே கேள்வியை டிசைன் டிசைனா மாத்திக்கேட்டா, நானும் மாத்தி மாத்தியா பதில் சொல்லுவேன் என் அழகுப் பொண்டாடி, ரோசம் மட்டும் வரும்… ஆனா, காரணமே இருக்காது…” என்றதும்,
“உங்களுக்கென்ன, என் கவலை எனக்கு… ஷ்ரவ் நினைச்சாலே பயமா இருக்கு சிவா…” என்றாள்…
“ம்ம்… புரியுதுடா, நானும் யோசிச்சேன், அதான் ஒரு பிளான் பண்ணியிருக்கேன்… டாக்டர் வெஸ்லின்கிட்ட அண்ணியைப் பார்க்க, கார்த்திக்கை அலோவ் பண்ண வேண்டாம்னு சொல்லிருக்கேன்… நாம போனதும் விடுங்க, அதுவரைக்கும் அண்ணியைப் பத்தி அவங்க மனநிலையைப் பத்தி எடுத்துச் சொல்லுங்கன்னு சொல்லிருக்கேன்… அவங்களும் செய்றேன்னுதான் சொல்லி இருக்காங்க… வெயிட் பண்ணுவோம்…” என்றான் அமைதியாக…
“பிளான் பக்காதான் சிவா… ஆனா, மாமா ஒத்துக்கனுமே…” என்று மறுபடியும் பாவமாய் சொல்ல,
“ஏண்டி, என்னைத் தவிர மத்தவங்க எல்லாம் உனக்கு பாவமாதான் தெரிவாங்களா… இன்னைக்குத்தான் நம்ம கல்யாணம் ஆச்சு… ஒரு கிஸ், ஒரு ஹக், எதுவும் இல்ல, அந்த அரவிந்த் ஜாலியா பர்ஸ்ட்நைட் கொண்டாடுவான்… ஸ்ருதி பார்க்கத்தான் அப்படி, ஆனா, அரவிந்த்காக என்ன வேணும்னாலும் செய்வா, நீயும் இருக்கியே, நீயெல்லாம் அவ ப்ரண்ட்… போடி” என எரிச்சலாய் கத்த…
விழிகளிரண்டும் விரிந்து பார்வை அவனையே மொய்க்க, திகைப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள்… அவளின் திகைத்த பார்வை அவனை என்னமோ செய்ய, ஒருகை இடையை வளைக்க மறுகை அவள் முகத்தை மார்போடு இறுக்கிக்கொண்டது…
“ரிலாக்ஸ் பேபி, ரிலாக்ஸ் ஒரு குட்டி டென்சன் அவ்ளோதான்… நம்மளைப் பத்தி யோசிக்காம அடுத்தவங்களையே யோசிக்கவும் அதுல வந்த டென்ஷன்… இப்போ இல்ல… இங்கப் பாரு…” என சமாதானப் படுத்த,
“போயா நீ ஒன்னும் என்னைக் கொஞ்சாத நீ என்னை திட்டுற, போ… போடா…” என அவனைத் தள்ளி விட, “என்னடி மரியாதை இல்லாம பேசிட்ட..
என அவனும் பதில் கொடுக்கவென்று, சில நிமிட ஊடல் அவர்களிடம்…
பிறாகு “சிவா தனாப்பாவை நீங்க தான் அப்படி பேச சொன்னீங்களா…” என்றாள் சஷ்டி.
“இல்லடா… எனக்கும் ஷாக்தான்… ஆனா, அவர் என்னைப் பார்த்துக் கண்சிமிட்டவும் தான் புரிஞ்சது… ஏதோ பிளான்ல தான் இப்படி பேசுறாங்கன்னு… அதான், நானும் அவர்கூட சண்டை பண்ற மாதிரி சப்போர்ட் செய்து டாடியை பேசவே விடாம பண்ணிட்டேன்… டாடி பேசியிருந்தா, நிச்சயம் ஸ்ருதி ஹர்ட் ஆகியிருப்பா… முதல்நாளே வேண்டாம்னுதான் இப்படி ஒரு நாடகம்…”
“ம்ம்.. எனக்கும் கூட பயம் வந்துருச்சு சிவா… ஆனா, நீங்க ஆப்போசிட்டா பேசவும் புரிஞ்சது ஏதோ பிளான்னு… ஆனா, அரவிந்த் அண்ணா இதெல்லாம் உண்மைன்னு நினைச்சு.. ஹா…ஹா… ரியல்லா பைட் பண்றார் தனாப்பாக்கூட…”
“இந்த ஸீனை யாருமே எதிர்பார்க்கலயே, அதோட டாடியோட வீக்னஸ் இத்தனை வருஷமா ப்ரண்டா இருந்த அங்கிளுக்குத் தெரியாம இருக்குமா…? மம்மி டாடியோட வீக்னஸ் ஷ்ருதிதான்.. அதான் எங்களையும் அவளை மேரேஜுக்கு கம்பல் செய்யவச்சது… டாடி கூப்பிட்டு அவ மட்டும் போயிருந்தா டோட்டல் பிளானும் சொதப்பிருக்கும்…”
“ம்ம்ம்… ஆனா எல்லாம் முடிஞ்ச பிறகு நீ என்னமோ ஸ்ருதி காதுல சொன்னியே, வெட்கம்னா என்னன்னு கேட்பா, அவளே வெட்கப்படுற அவளவுக்கு என்ன சொன்ன இந்த அரவிந்தும் மந்திரிச்சுவிட்ட கோழி மாதிரி அவ பின்னாடியே போறான்….”
“ஹா… ஹா… அதெல்லாம் ரகசியம் சொல்லக்கூடாது…”
“ம்ம்ம்… ரகசியம் ரகசியமாவே இருக்கட்டும்… நமக்கு எதுவும் ரகசியம் இருக்கா என்ன…?”
“ரகசியம் எல்லாருக்குமே இருக்கும் சிவா… உங்களுக்கும் இருக்கும்தானே…? அதேமாதிரி தான் ஸ்ருதிக்கும்…”
“ஸ்ருதிக்கு இருக்குற ரகசியம் அரவிந்த்க்கு தெரியாம இருக்கக்கூடாது… உன்னோட ரகசியங்களை என்கிட்ட சொல்லாம இருக்கக்கூடாது சரியா…”
“ம்ம்ம்… ஆசை தோசை… இதெல்லாம் நீங்கதான் கண்டுபிடிக்கனும் சார்… கண்டுபிடிங்க அதுதான் லைப்பை எண்டர்டைன்மெண்டா கொண்டுபோகும்…”
“நீ சொன்னா சரிதான்… இப்பவே பாதி கண்டுப்பிடிச்சுட்டேன்னு நினைக்கிறேன்…” என்று கண்சிமிட்டி சிரிக்க…
அன்று அருவியில் நடந்ததை கூறுகிறான் என்பது புரிய, “ச்சு… சிவா, போங்க நீங்க. நான் பிஸிக்கலி சொல்லல மென்டலா சொன்னேன்…” என்றாள்…
அவள் சொல்வதை ரசனையாகப் பார்த்தவன் வாய்விட்டு சிரிக்க, “அச்சோ ஏன் இப்படி எல்லாரும் நம்ளையேப் பார்க்குறாங்க… ப்ளீஸ் சிவா…” என்றபடியே அவன் வாயை தன்கையால் மூட, மூடிய உள்ளங்கையில் அழுத்தமாய் தன் முத்தத்தைப் பதித்தான் சிவா…
சிறு ஊடலும், அழுகையும், சிரிப்பும். சீண்டலும், சினுங்களுமாய் முடிவுக்கு வந்த போது, அவர்களது விமானம் தரையிறங்கி இருந்தது…
பார்மாலிடிஸ் முடிந்து வெளியில்வர, இவர்களை அழைத்துச் செல்ல சிவாவின் நண்பன் விபின் வந்திருந்தான்… நண்பர்கள் அளவளாவி முடித்ததும், சிவா தன் மனைவியை விபினுக்கு அறிமுகப்படுத்தினான்… பிறகு, மனைவியிடம், “என்னோட ப்ரண்ட் விபின்… நம்ம ஊர்தான் மார்த்தாண்டம்… டாக்டர் வெஸ்லினோட ஹஸ்பண்ட்… லவ்மேரேஜ்…” என்றுஅறிமுகப்படுத்த…
வணக்கம் சொல்ல வேண்டும் என்பதுகூட உணராமல் சிவாவையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்…
‘விபின் சிவாவோட ப்ரண்ட், வெஸ்லின் விபினோட வைப், அப்போ… ஷ்ரவ் கேசை வெஸ்லின் அட்டெண்ட் செய்தது, மலேசியாக்கு சிப்ட் பண்ணது எல்லாம் சிவாவோட வேலையா…?’ என்று யோசித்தவளின் முகத்தில் உணர்வுகள் சுற்றிப் பறந்தன…
மனைவியின் முகத்தில் தெரிந்த உணர்வுப் போராட்டத்தில், அவள் கையைப் பிடித்து அழுத்தியவன், நண்பனைக் கண்ணால் காட்ட, சட்டென்று நிகழ்வுக்கு வந்தவள், விபினைப் பார்த்து, “சாரிண்ணா, வெரிசாரி, அண்ட் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்… உங்க உதவிக்கெல்லாம் காலம் முழுக்க நன்றி சொன்னாலும் பத்தாது… தேங்க்யூ சோ மச் அண்ணா…” என்றாள் அழுகையோடு…
“ஐயோ என்ன சிஸ்டர் இப்படி எமோஷனல் ஆகறீங்க, நான் இந்த ஹெல்ப் உங்களுக்காக செய்யல, கார்த்திக் அண்ணாக்காக மட்டும்தான்… கார்த்திக் அண்ணா இவனுக்கு மட்டும் ரோல்மாடல் இல்ல… எங்க ப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் தான்… நான் அவருக்காத்தான் செய்றேன்… இது ஒருவகையில என்னோட கடமையும் கூட… அதனால இனி தேங்க்ஸோ சாரியோ எதுவும் வேண்டாம்…” என்றவன் சிவாவிடம் திரும்பி, “போகலாம்டா கார்த்திக் அண்ணா வந்து 2 ஹவர்ஸ் ஆச்சு… இனியும் லேட் பண்ண முடியாதுன்னு வெஸ்லின் கால் பண்ணிட்டே இருக்கா…” எனவும்,
“ம்ம்… கிளம்பலாம் மச்சான்…” என்று சிவாவும் நடக்க ஆரம்பித்தான்…
“ஆனாலும் அர்வியோட நிலமையை நினைச்சுப் பார்த்தாதான் கவலையா இருக்கு… ஹாஹா… ஏண்டா இன்னும் அப்படியேதான் இருக்கான் ஸ்ருதி விசயத்துல… எனக்கே ஆச்சரியம் தான்…” விபின்…
“ம்ம்… எனக்கும் ஆச்சரியம் தான்… அப்போ கார்த்திக் போட்ட போடுல திரும்பிக்கூட பார்க்க மாட்டான்னு நினைச்சேன்… கடைசில இப்படி வந்து நிக்கறான்…”– சிவா
“அவனோட கேரட்டருக்கு நம்ம ஸ்ருதிதான் சரியான ஆளு… ரெண்டுவாலும் சேர்ந்து அங்கிள ஒருவழி பண்ணட்டும்…” என்றான் விபின்…
“இவங்க ரெண்டு பேரால அங்கிளுக்கு நல்ல பொழுதுபோக்குதான்… அவரும் இதுங்களோடு சேர்ந்து ஜாலியா எஞ்ஜாய் பண்ணுவார் லைப்பை… அங்கிளும் வாலுதான்…” என்று சிவா கூற, காரில் இருந்த மூவருமே சிரித்து விட்டனர்…
அத்தியாயம் – 08
ஆறுதல் சொல்ல
ஆள் இருந்தால்
அழுவதில் கூட
சுகம் தான்
“ரதி…”
“ம்ம்…”
“ரதிம்மா…”
“ம்ம்ம்…”
“ரதிபேபி…”
“ம்ம்ம்…. என்னஅர்வி…”
“தூங்கிட்டியா…”
“தூங்குறவளை எழுப்பித் தூங்கிட்டியான்னு கேட்குற நீ என்ன டிசைன்…”
“ம்ம்ம்… நியூ டிசைன்… அவனவன் தூக்கம் வராம அல்லல்படுறான், இவ என்னடான்னா, படுத்த பத்து செகண்ட்ல குறட்டை விட்டுத் தூங்குறா, கொஞ்சமாச்சும் பீலிங்ஸ் வரனும்டி… அதெல்லாம் இல்லாம, நீ என்ன டிசைன்…” கடுப்பாகிப் போனான்…
“ஹான்… உனக்கே புதுடிசைன் ஒன்னு வரும்போது… எனக்கு வராதா, எரிச்சல் பண்ணாம இடத்தைக் காலிபண்ணு… வந்துட்டான் பெருசா நியூ டிசைன் ரிசெர்ச் பண்ண…” என முணுமுணுத்தவளின் முகத்தைத் தன்பக்கம் திருப்பியவன்,
“ம்ம்ம்… ரிசெர்ச் பண்ணத்தான் போறேன்… என்னோட நியூ டிசைனை உன்னால என்ன செய்ய முடியும்…” என்றவன் அவள் சுதாரிக்கும் முன்னே இதழ்களைச் சிறை செய்திருந்தான்…
அவன் செய்கையில் முதலின் திமிறி தடுத்தவளை, அடக்கித் தனக்குள்ளேக் கொண்டு வந்து முத்தயுத்தத்தை தொடங்கினான்…
தானும் அனுபவித்து, அனுபவிக்க வைத்து என மிக நீளமாய் போய் கொண்டிருக்க, நிமிடங்கள் கழிந்த நொடியில், ஆரம்பித்தவனே முடிக்கவும் செய்தான்…
அவனது முத்தத்தில் கிறங்கிப் போனவள், அவன் மார்பிலேயே துவண்டிருந்தாள்… முன்னே விழுந்த குழல்களை காதோரம் ஒதுக்கியவன், “ரதி…” எனவும்,
“ம்ம்ம்…” என்றவளிடம், “உனக்கு ஓகேவா… உன்னோட சம்மதம் இல்லாம, அடுத்து எதுவும் நமக்குள்ள நடக்காது… ஐ ப்ராமிஸ் யூ…” என்று உணர்வுப் பூர்வமாக பேசியவன் அடுத்த நொடி கட்டிலில் விழுந்திருந்தான்….
“ஏய் என்னடி பண்ற,” என அவன் கேட்டு முடிக்கும் முன், அவனைத் தள்ளி அவன் மீதேறி அமர்ந்திருந்தாள் அவனின் ராட்சசி…
“ம்ம்.. என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது…” அவனது தலைமுடியைப் பிடித்து உலுக்கியபடியே கத்த,
“அய்யோ… அம்மா…. டாடி… டாடி, என்னைக் காப்பாத்துங்க, இவளுக்கு பேய் பிடிச்சிருக்கு, காப்பாத்துங்க டாடி…” எனக் கத்த,
“டேய்… என்னடா சொன்ன, எனக்கு பேய் பிடிச்சுருக்கா, எனக்கா, ஆமாண்டா, பேய், பிசாசு எல்லாம் மொத்தமா வந்துருக்கு, இப்போ உன் ரத்தத்தைக் குடிக்கப் போறேன்டா…” என அவன் கழுத்தைக் கடிக்கப் போக, அடுத்த நொடி, அவளைக் கீழேத் தள்ளி, இவன் மேலிருந்தான்…
“ஏய்…. லூசு, எருமை மாடு மாதிரி இருந்துக்கிட்டு, என்மேல உட்கார்ந்திருக்க, இறங்குடா, வெயிட்டா இருக்கடா பக்கி…” என்று அவனைக் கீழே தள்ள முயன்றபடியே கத்தியவளை,
“வாயை மூடுடி, என் மானம் மொத்தமும் போச்சு, இதுக்கே இப்படின்னா, இனிமேல் நடக்குறதுக்கு என்ன சொல்லுவ…” என்றபடியே அவளது கைகளை மடக்கி, அதரங்களை அடக்கியிருந்தான் தன் இதழ்களால்…
மீண்டுமொரு முத்தயுத்தம் இதழ்களுக்குக் கிடையே இதழ்களின் போரட்டங்கள் ஆரம்பித்தால் இடையில் முடியுமா என்ன…? அவர்களே அறியாமல், அவர்களது இல்வாழ்க்கை இனிமையாய் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்திருந்தது…
இதழ்களால் ஆரம்பித்த போராட்டம், மெய்யோடு மெய்யாக இணைந்து, ஆதவன் தன் ஒளிக்கரங்களை பூவுலகுக்கு அனுப்பியும் அவர்களது தேடல் தீர்ந்த பாடில்லை…
“ரதி… ரதிம்மா…” என்றவனின் கிசுகிசுப்பான குரலில்,
“அர்வி ப்ளீஸ் கொஞ்ச நேரம் தூங்கலாம்…” என சிணுங்கியபடியே, அவனில் மேலும் ஒன்றிட, அவளை இறுக்கியப்படியே,
“மணி எட்டாச்சு பேபி, நமக்காக டாடி வெயிட் பண்ணிட்டு இருப்பார்… உங்க வீட்டுக்கு வேற போகனுமே… உன் டாடி ஆபிஸ் போறதுக்குள்ள…” என்றான் மீண்டும் அதேகுரலில்…
“டாடி…” என்ற வார்த்தை மந்திரம் போல் வேலை செய்ய, போர்த்திருந்த போர்வையோடு குளியலறைக்குள் ஓட, “ஹேய் அறிவு இருக்கா போர்வையும் எடுத்துட்டு போற,” என்றான் அங்கிருந்த அவளது புடவையை எடுத்துத் தன்மேலே போட்டுக்கொண்டு,
“ச்சீ… உனக்கே மானம் போகும் போது, எனக்குப் போகாதா, இம்சை… இம்சை…” என்று உள்ளேயிருந்து கத்தியவள், “அர்வி எனக்கு சேஞ்சிங் ட்ரெஸ் எடுத்துக் கொடுடா…” என்றாள். தான் மாற்றுடை கூட எடுத்துப்போகாத தன் முட்டாள்தனத்தை எண்ணி…
“ஆஹா… ஸ்ருதிக்கு ஸ்ருதி குறையுதே அரவிந்த் அப்போ உனக்கு இன்னோரு சான்ஸ் இருக்கும் போலயே… ட்ரை பண்ணு ராசா…” என்றபடியே அவளது ஆடைகளை எடுத்துக்கொண்டு, அவளே எதிர்பாராத நேரத்தில் உள்ளே நுழைந்தான்…
“ஏய்… ஏண்டா உள்ளே வந்த, என்ன பண்ற, வெளியே போடா குரங்கு… அர்வி ப்ளீஸ்..” என்றவளின் அதட்டல்கள் எல்லாம் கெஞ்சலயாய் மாறி கொஞ்சலாய் முடிய, களித்து, குளித்து அவர்கள் வெளியேவர மதியத்தை தாண்டியிருந்தது பொழுது…
மருத்துவமனையிலோ அசதியில் ஆழ்ந்து உறங்கும் மனைவி அருகில் அவளையே உரித்து வைத்தாற் போலொரு அழகு தேவதை… அவன் தொலைத்த அவனது வசந்தம் திரும்பவும் அவனிடமே வந்து விட்டதா…? இன்னுமே அவனால் நம்பமுடியவில்லை…
அவன் வாழ்வில் நடந்த, வாழ்க்கையையே மாற்றிப் போட்ட நிகழ்வுகள், வீட்டைவிட்டு வெளியேறி, உயிரானவளைத் தேடிய தருணங்கள் கொடுமையாய் கழிந்த கொடூர நாட்களை எண்ணியவன் விழிகள் கலங்கிச் சிதறின…
புள்ளிமானாய் தன் பின்னேத் துள்ளித் திரிந்தவளை, இப்படி நிம்மதியில்லாமல் ஆக்கிவிட்டேனே, என்று மனம் நொந்து, அமர்ந்த வாக்கிலேயே அவளது பாதங்களில் தன் கண்ணீர் முகத்தைப் புதைத்துக் கொண்டான் கார்த்திக்…
அறைக்கு வெளியில் இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர் அனைவரும்… அழுகிறான் என்று கார்த்திக்கின் உடல் குலுங்குவதிலேயே மற்றவர்களுக்குப் புரிந்தது. ராஜவேலு இறந்த சில தினங்களில் தான் பத்மா அழுததை பார்த்திருப்பாள் சஷ்டி…
அதன் பிறகு அவர் அழுது பெண்கள் இருவரும் பார்த்ததே இல்லை… ஆனால் இன்று சஷ்டிகாவின் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தார்… அனைத்தும் சரியாகி விட்டது… தன் பெண்களின் வாழ்க்கை சீராகிவிட்டது என்ற மகிழ்ச்சியில் வந்த கண்ணீர்…
அவரை சமாதானம் செய்து கொண்டே சிவாவைப் பார்த்தாள் சஷ்டி… இவை அனைத்திற்கும் காரணம் என் அனைத்துமான இவன்தானே என்ற உணர்வுகள் கண்களில் பொங்க, பெருமிதமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்…
சஷ்டியின் பார்வையை உணர்ந்து, அவளைப் பார்த்து, ‘என்ன’ என்பது போல் புருவத்தை ஏற்றி இறக்க, அவள் அவசரமாய் தலையசைத்து ‘இல்லை’ என்பதுபோல் கூற, அவளது செய்கையில் இளநகை மின்ன மீண்டும் ஒருமுறை கண்ணாடி வழியே உள்ளே ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, மனைவியின் அருகே, ஒரு சேர் இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டான்…
அவளும் பார்வையால் இடைவெளியைச் சுட்டி ‘ஏன்’ என்பது போல் புருவத்தை சுருக்க, அதில் சிவாவின் பார்வை மின்ன, சஷ்டியின் தோளில் சாய்ந்திருந்த பத்மாவைக் கண்ணால் காட்டிவிட்டு, அவளைப் பார்த்து நமுட்டு சிரிப்பொன்றை உதிர்த்தான்…
அதை உணர்ந்த அவளும் சட்டென தன் பார்வையை தாயை நோக்கித் திருப்பினாள்… “எங்கே அவர் பார்த்து விட்டாரோ…”? என்பது போல் பதட்டம் வேறு… நல்லவேளை அதையெல்லாம் அவர் கவனிக்கும் நிலையில் இல்லை… அதைப்பார்த்து ஒரு ஆசுவாசப் பெருமூச்சு விட்டவள், கணவனைப் பார்த்து முறைத்தாள்…
அவள் முறைக்க, இவன் சிரிக்க என சில நொடி நேர ஊடலில் இருவரும் தாங்கள் இதுவரைப் பட்ட கஷ்டங்களை மறந்து அவர்களது உலகத்தில் லயித்திருந்தனர்…
கார்த்திக்கை எப்படி சமாதானம் செய்து ஊருக்கு அழைத்துச் செல்வது என்ற யோசனை வேறு அவனுக்கு, கார்த்திக் ஒத்துக் கொள்ள வேண்டுமே என்ற வேண்டுதலும் வேறு… யார் கூப்பிட்டால் அவன் வருவான் என்று யோசித்தவன், “எஸ் அவளேதான்…” முகத்தில் கீற்றாக புன்னகை தோன்றியது தன்னையும் அறியாமல்….
ICU கதவு திறக்கவும், எழுந்தவனை நோக்கி, வந்தான் கார்த்திக்… சிவாவின் அருகே அமர்ந்திருந்த இருவரையும் பார்த்தவன் குற்ற உணர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டான்… அவன் சங்கடத்தை உணர்ந்து கார்த்திக்கின் அருகில் சென்ற சிவா, “அண்ணி இப்போ எப்படி இருக்காங்க கார்த்திக்… கண் முழிச்சாங்களா… குட்டிப்பொண்ணு என்ன எழுந்துட்டாளா…”? என்றான் அவன் சங்கடம் தீர்க்கும் பொருட்டு…
சிவாவின் கரங்களைப் பிடித்தவன், பத்மாவைப் பார்த்துக் கொண்டே, “இல்ல… அதுவந்து… வது… எழுந்துக்கல, ஆனா பாப்பா முழிச்சிட்டா… அதான் என்ன செய்யனும்னு” என்று மென்று முழுங்கியவனை பார்த்துவிட்டு, அமைதியாக அவனைக் கடந்து ICUவை நோக்கிப் போனார் பத்மா… அதுவே அவர் இன்னும் அவனை மன்னிக்கவில்லை என்று சொல்லாமல் சொல்லியது. தலையில் கை வைத்து அப்படியே அமர்ந்துவிட்டான் கார்த்திக்…
அத்தியாயம் – 09
அன்பு என்ற வார்த்தைக்கு
ஆயிரம் அர்த்தம் இருப்பினும்
நான் கண்ட மெய் அர்த்தம்
நீதான்…!
“டாடி நீங்க இதுவரைக்கும் செஞ்சதெல்லாம் போதும், நாங்க பட்டதெல்லாம் போதும்… இதுக்குமேல நீங்க என்ன செஞ்சாலும் அதைப் பொறுத்துக்க எங்களால முடியாது… நீங்க என்னோட அப்பா, என்ன சொன்னாலும் செய்வேன்… ஆனா, கார்த்திக் அண்ணா என்னோட ஹீரோ, ரோல் மாடல், நான் ஒரு ஒழுக்கமான பொண்ணா உங்க முன்னாடி நிற்க, அவர்தான் காரணம், நீங்களோ, மம்மியோ கிடையாது… அவருக்கு செய்த துரோகத்தை எங்களால் மன்னிக்கவே முடியாது…”
“அந்த பாவத்தைத் தீர்க்கனும்னா, அவரையும், அண்ணியையும், குழந்தையையும் நீங்களேப் போய் கூப்பிட்டு வாங்க, இல்ல.. நாங்க செய்யமாட்டோம்னு சொன்னா உங்களுக்கு நாங்க யாருமே இருக்கமாட்டோம்… நானோ, சிவாவோ இந்த வீட்டுக்கு வரமாட்டோம்… உங்களை மம்மி டாடின்னு கூட சொல்லமாட்டோம்… இட்ஸ் எ ப்ராமிஸ்…” என்ற ஸ்ருதியின் ஆவேசப் பேச்சில் அதிர்ந்து தான் போயிருந்தனர் லிங்கேஸ்வரனும் அவரது மனைவியும்…
“ஹேய் டாடிகிட்ட என்ன பேசுற, அவன் ஒன்னும் உன்னோட சொந்த அண்ணன் கிடையாது… அவனுக்காக நீங்க ரெண்டு பேரும் எங்களையே எதிர்த்துப் பேசுவீங்களா…? அறிவில்லை…? எப்படி டி என் வயத்துல பிறந்தீங்க…” என்றார் அமராவதி ஆத்திரமாக.
“என்கூட பிறக்கலன்னாலும் கார்த்திக் அண்ணாதான் என்னோட ஃபஸ்ட் அண்ணா… அதுதான் உண்மை, பெத்தவங்க வேறனாலும் ரத்தம் ஒன்னுதான்… இந்தப் பரம்பரை ரத்தம் தான் எங்க மூனுபேர் உடம்புலயும் ஓடுது… அதை இல்லைன்னு உங்களால் சொல்ல முடியுமா…?” நெற்றியடியாகப் பதில் கொடுத்தாள் ஸ்ருதி.
‘ஆச்சி இருந்தவரைக்கும் எந்தப்பிரச்சனையும் வந்ததுல்ல அவங்க இறந்ததும் தான் உங்க நடவடிக்கைகள் மாறிப்போயிடுச்சு… எப்படி.. டாடி, உங்க அண்ணனுக்கு உங்களால துரோகம் பண்ண முடிஞ்சது… பெரியம்மாவும், பெரியப்பாவும், ஆச்சிக்கிட்ட கூட அண்ணனைக் கொடுக்காம, உங்க கையலதான் கொடுத்தாங்களாமே… எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தா அதை செய்திருப்பாங்க… அந்த நம்பிக்கையைக் கொன்னுட்டீங்களே டாடி… அவங்க ஆன்மா உங்களை மன்னிக்கவே மன்னிக்காது டாடி…” என்ற மகளின் வார்த்தைகள் லிங்கேஸ்வரனை வருத்தியதோ, அமைதியாக எழுந்து சென்றுவிட்டார்…
அமராவதி தான் ஸ்ருதியுடன் விடாமல் பேசிக் கொண்டிருந்தார்… அவளும் விடவில்லை, பேசியதையே பேசுவது போல் இருக்க, அரவிந்த் தான் ஸ்ருதியை அடக்கினான்… மாமியாரை முறைக்கவும் தவறவில்லை… அரவிந்த் முறைக்கவும், கோபமாக அந்த இடத்தை விட்டுக் கணவரைக் காண சென்றார் அமராவதி…
“ரதிம்மா… நாமளும் கிளம்பனும், நைட் ப்ளைட்…” என்று அரவிந்த் கூற.
“ம்ம்… போகலாம், நான் டாடிக்கிட்ட சொல்லிட்டு வந்துடுறேன்…” என்றுக் கிளம்பியவள், அறைக்குள் நுழையும் முன்னே, பெற்றோர் இருவருக்கும் காரசாராமான விவாதங்கள் நடந்துகொண்டிருந்தது…
இறுதியாக லிங்கேஸ்வரன் மனைவியிடம், “நான்போய் அவங்களை அழைச்சுட்டு வரத்தான் போறேன்… அவங்களை ஏத்துக்கிட்டு எந்த பழி உணர்ச்சியும் காட்டாம, பக்குவமா நடந்துக்க உன்னால முடியும்னா என்கூட கிளம்பு, ரெண்டு பேரும் போவோம்…”
”இல்ல, என்னால முடியாது அப்படின்னா, கார்த்திக்கோட சேர்த்து நம்ம ரெண்டு பிள்ளைகளையும் மறந்துடு… இனிமேல் அதுதான் நடக்கும்… உன் பேச்சைக்கேட்டு கார்த்திக்குக்கு நான் துரோகம் செய்யல, என் அண்ணன் என்மேல வச்ச நம்பிக்கைக்கு துரோகம் பண்ணிட்டேன்… அதுக்கானத் தண்டனையா, இது இருக்கட்டும்… “
“என்னோட அண்ணனும், அண்ணியும் எப்படி கார்த்திக் கூட கடைசி வரைக்கும் இருக்க முடியலயோ, அதேமாதிரி நாமளும் நம்ம பிள்ளைங்க கூட இருக்க முடியாது போகும்…”
“செய்த பாவத்துக்குப் பரிகாரமா அவங்களை அழைச்சுட்டு வந்து இந்த வீட்ல வைப்போம்… அதேசமயம், நீயும் நானும் இந்த வீட்ல இருக்கமுடியாது…”
“ஏத்துக்கிட்டு சந்தோஷமா இருக்குறது வேற, வேண்டா வெறுப்பா முகத்தைத் திருப்பிக்கிட்டு இருக்குறது வேற, அவங்க வந்ததும், நாம் கிளம்பிடனும்…” என்றார் நீளமாக…
“நீங்க என்னை ஏமாத்துறீங்க, அவனுக்காக, அவனுக்காகப் போய் எல்லாத்தையும் விட சொல்றீங்க, உங்கம்மா உயிரோட இருந்த வரைக்கும் என்னை நிம்மதியா இருக்கவிடல, இப்போதான் என் இஷ்டத்துக்கு சந்தோஷமா, நிம்மதியா இருக்கேன் அதுவும் இப்போ பொறுக்கல…”
“எங்க சொந்தத்துல ஒரு கழுததையை அவனுக்கு கட்டிவச்சு ரெண்டு பேரையும் எங்கையாச்சும் துரத்தி விடலாம்னு பிளான் பண்ணா, காதல் கருமாதின்னு வந்து நிற்குறான்…”
“அவளுக்காக வளர்த்த நம்மளையே எடுத்தெரிஞ்சு பேசுறான்… அதையெல்லாம் மறந்துட்டீங்க போல, இதை என்னால ஒத்துக்கவே முடியாது… அவன் இங்கே வரவேக்கூடாது…”
“நீ என்ன கத்தினாலும், நான் சொன்னது சொன்னதுதான்… என்னோட முடிவு மாறாது… தப்பு செய்றது இயற்கைதான், அதை தகுந்த நேரத்துல உணர்ந்து திருந்திக்கனும் அவன்தான் மனுசன்… அதுதான் வாழ்க்கைக்கும் நல்லது…”
“எனக்கும் என் பிள்ளைகளோட சந்தோஷம் தான் முக்கியம்… அதுக்காக நான் இறங்கிப் போறதுல தப்பில்லை… அதோட, தப்பு செய்தது நம்ம ரெண்டு பேரும், தண்டனை என் பிள்ளைங்களுக்கா…?”
“ஸ்ருதி சொன்ன மாதிரி நம்ம பாவத்தை அவங்க தலையில இறக்க வேண்டாம்… அதுதான் பெரிய பாவமே…! நான் போய் அந்தப் பொண்ணோட அம்மாக்கிட்ட மன்னிப்புக் கேட்டு, கார்த்திக்கையும் அவன் மனைவியையும் அழைச்சுட்டு வரேன். அதுவரைக்கும் உனக்கு டைம் இருக்கு…”
“என்னோட கஷ்டமும், நஷ்டமும் உனக்கும் சேரும்னு தோணிச்சுன்னா, அவங்களை ஏத்துக்கிட்டு ஆரத்தி எடுத்து உள்ளேக் கூப்பிடு, இல்லையா… இதோ, பண்ணை வீட்டுசாவி” என்று அவர் முன்னே ஒரு சாவியைப் போட்டுவிட்டு அங்கேப் போய் தங்கிக்கோ… இனிமே நமக்கான வீடு அதுதான்…” என்றவர் அறையை விட்டு வெளியேற, வாயிலில் நின்றிந்த ஸ்ருதி அவரைப் பிடித்து, “சாரி டாடி, வெரி சாரி, நான் கோவத்துல அப்படி பேசிட்டேன்… மன்னிச்சிடுங்க டாடி ப்ளீஸ்…” என்றுஅழவும்,
“இல்லைடா, நீ அப்படி பேசலன்னா, நானும் என்னோட தப்பை உணர்ந்திருக்க மாட்டேன்… தப்பு என் பேர்ல தான்… ம்ம்… சரி விடு, பர்ஸ்ட் உன் மாமனார் கிட்ட மன்னிப்புக் கேட்கனும், அவனையும் இத்தனை வருஷம் பழகின பழகத்தையும் மறந்து ரொம்பக் கஷ்டப் படுத்திட்டேன்… என்னை மன்னிப்பானான்னு தெரியல…” என்றார் வருத்தமாய்…
“நோ.. டாடி, அங்கிளுக்கு உங்க மேல கோபம் இல்லை வருத்தம் தான் பட்டார்… நீங்க ஏன் இப்படி மாறீட்டீங்கன்னு… இது என் நண்பனோட குணமே இல்லன்னு சொன்னார்… அவன் தப்பை உணர்ந்துட்டா அவனே என்னைத் தேடி வருவான்னு சொன்னார்… அவர் சொன்னது இப்போ நிஜமாயிடுச்சு… ரியல்லி கிரேட் ப்ரண்ட்ஸிப் டாடி… உங்களோடது… வாங்க போகலாம் அங்கிள் வெயிட் பண்ணுவார்…” என்றவள் அறைக்குள்ளே எட்டிப் பார்க்க, அங்கே கார்த்திக், சிவா, ஸ்ருதி, அரவிந்த் நால்வரும் இருந்த போட்டோவை கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் அமராவதி…
“எல்லாம் சரியாகும், அவளும் சரியாகிடுவா யோசிக்கட்டும்…” என்று மகளை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார்…
“ஏண்டா அரவிந்த் எங்க…? இங்கதானே இருந்தான்…” காரை ஓட்டியபடியே லிங்கேஸ்வரன் கேட்க,
“சிவா போன் பண்ணவும், அவசரமா பேசிகிட்டே கிளம்பிட்டான் டாடி… இருங்க கால் பண்றேன்…” என்றாள்…
“குட்டிமா, என்ன இது, மாப்பிள்ளையை போய் அவன் இவன் சொல்லிட்டு இருக்க, மத்தவங்க முன்னாடியாவது மரியாதையா சொல்லி பழகு சரியா…” என்றார் கண்டிப்பான குரலில்…
“சரிப்பா” என்ற ஸ்ருதியின் குரலில் ஸ்ருதி இறங்கிவிட்டது…
“ஹலோ… என் புருஷனை நான் எப்படி வேணும்னாலும் கூப்பிடுவேன்னு சொல்லுடி ரதிக்குட்டி…” என்ற அரவிந்தின் குரல் காதில் கேட்க,
“ஐயோ… கால் பண்ணதையே மறந்துட்டேன்…” என்று தலையில் அடித்தவள்,
“லூசு… லூசு…” என்று முணுமுணுத்தப் படியே, “அர்வி எங்க போயிட்டீங்க சொல்லவே இல்ல…” எனவும்,
“ஆஹா… என்ன ஒரு இன்பம், என் பொண்டாட்டி மரியாதையா பேசுறதைக் கேட்கும் போது, பாரதி ஏன் ‘தேன் வந்து பாயுது காதினிலேனு…’ பாடினாருன்னு புரியுது… ஆஹா… ஆஹா” என,
“அர்வி…” என்று ஸ்ருதி பல்லைக் கடிக்க, “கூல் பேபி… கூல் நான் வீட்டுக்குப் போயிட்டு இருக்கேன்… சண்டைப் போட்ட ரெண்டு ப்ரண்ட்ஸ்ங்க ஒன்னு சேரப் போறாங்க… மூழ்காத ஷிப்பே ப்ரண்ட்ஸ் ஷிப் தான்னு பாடப் போறாங்க… அவங்க அலும்புல வீடு ஏதும் ஆகிட்டா… அதான் வீட்டை ரெஸ்கியூ பண்ண டீம் ரெடி பண்ண போயிட்டு இருக்கேன்…” என்று சிரிக்காமல் சொல்ல, அவனது பேச்சில் இவள் வாய்விட்டு சிரித்து விட்டாள்…
உண்மைக் காரணம், தனஞ்செயனிடம் லிங்கேஸ்வரனின் மாற்றங்களைக் கூறி தயார்படுத்தவும், மலேசியா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் தான் அவன் முன்னமே கிளம்பியது… அவளுக்கும் புரிந்தது…
“ல வ்யூ அர்வி…” என்று முணுமுணுப்பாகக் கூறிவிட்டு, வைத்துவிட்டாள்… தான் பேசியதை தந்தைக் கேட்டுவிட்டாரோ என்று அவரைப் பார்க்க, அவரோ சாலையில் கவனமாக இருக்க “ஷ்ஷ்”… என்ற பெருமூச்சோடு போனை அனைக்க, மகளது செயலில் லிங்கேஸ்வரனுக்கும் புன்னகை மலர்ந்தது…
அடுத்து இருவரும் வீட்டிற்கு வர, தயக்கத்துடன் ஆரம்பித்த அவர்களது நலம் விசாரிப்பு சில பல மன்னிப்புகளில் முடிந்தே போனது…
சில நாட்களாக இருவருக்குள்ளும் இருந்த மனக் கசப்புகள் மறைய, அடுத்து என்ன செய்யலாம், கார்த்திக்கை எப்படி வரவைப்பது, ஷ்ரவந்தியின் அம்மாவிடம் பேச வேண்டியவை எனப் பலவற்றையும் பேசி முடிவுக்கு வந்தனர்…
அதன் பொருட்டு, அரவிந்தையும் ஸ்ருதியையும் முன்னே அனுப்பி, முடிந்தளவு அமராவதியை அழைத்துக்கொண்டு இவர்கள் அடுத்தநாள் கிளம்புவதாக உறுதிசெய்தனர்… ஆனால் அமராவதியின் மனநிலை தெரிந்தால் இப்படி யோசித்திருப்பார்களா….?
அத்தியாயம் – 10
உன் பார்வையைப் போல் யாரும்
என்னைத் தாக்கிடவில்லை..
உன் வார்த்தைப் போல் யாரும்
என்னோடு பேசியதில்லை…
உன் காதல் போல் யாரும்
எனக்குள் வந்ததுமில்லை..
புனே :
அன்றைய வகுப்பின் கேள்வி பதில்கள் நெரம் தொடங்க, முதலில் இருந்து அனைத்துக் கேள்விகளையும் ஷ்ரவந்தியேக் கேட்க, அவன் அளித்த பதிலகளில் இருந்தும் சிலக் கேள்விகளைக் கேட்க, அன்றுதான் அவளை கவனமாக பார்த்தான் கார்த்திக்.
வேண்டும் என்றோ, இல்லை மற்றவர்கள் முன் தான் ஒரு அறிவாளி என நிரூபிக்க வேண்டியோ அவள் செய்யவில்லை. எனக்குத் தேவையானது பதில்கள் தான் என்பது போல் அலட்சியமாக நின்றிருந்தாள்.
அறிவுச்சுடர் ஒளிரும் கண்கள், அதுதான் முதலில் அவனை ஈர்த்தது. ‘கன்னியரின் கடைக்கண் பார்வைப் பட்டால் காளையருக்கு மாமலையும் சிறு கடுகாம்’ என்று பாடிய பாடல்தான் நினைவுக்கு வந்தது. இவளது கடைவிழிப் பார்வைத் தன்னை தொடருமா..? என்று எண்ணம் நொடியில் உருவாக, அவனுக்கே தன்னை நினைத்து ஆச்சரியமாய் இருந்தது.
யார் இவள் தனக்குள்ளும் ரசாயன மாற்றங்களை உருவாக்குபவள் என்று எண்ணியவன், வகுப்பு முடியவும் அவளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்து வகுப்பை ஆரம்பித்தான். அன்றைய நாள் முழுவதும் அவளைப் பற்றியே யோசிக்க வைத்தவள், ராஜவேலுவோடு கார்த்திக் பேசிக் கொண்டிருக்கும் நேரம் அவர்களுக்கருகே வந்தாள்.
அப்போதும் கார்த்திக்கை கவனியாதது போல், ராஜவேலுவைப் பார்த்து, “டாடி ஆஃப்னவர் வைட் பண்ணுங்க, என்னோட ரெகார்ட் பூனம் காபி பன்னிட்டு இருக்கா.. வாங்கிட்டு போயிடலாம்..” எனவும்,
“ஓ.. ஓகே டா…, பூனம் வந்துட்டாளா, அவ ஹெல்த் இப்போ ஒகே தான,..” என்று கேட்கவும், “நோ டாட்… ஷீ இஷ் சோ டயர்ட்… லீவ் போட சொன்னாலும், வேண்டாம்னு சொல்ரா..” அழுத்துப் போனக் குரலில் கூற,
“விடும்மா… செமஷ்டர் வேற வருதே, அதான் பயந்துட்டு வந்துருப்பா… நீ டென்ஷன் ஆகாத,” என்று அவளை சமாதானப் படுத்தியவர்.. என்றவர் கார்த்திக்கிடம் திரும்பி, “கார்த்திக் இவ என்னோட பொண்ணு ஷ்ரவந்தி, இங்கே தான் M.Tech 2nd year” என்று அறிமுகப்படுத்த,
“என் க்ளாஷ் ஸ்டூடன்ட், எனக்கே இன்ட்ரோ கொடுக்குறீங்க. ஐ நோ ஷ்ரவந்தி, ஷீ இஷ் வெரி ப்ரில்லியன்ட், ஒரு க்ளாஸ்ல எத்தனை கொஸ்டீன்ஷ், எத்தனை , டவுட்ஸ் நம்மளோட ஆன்சர்ல இருந்தே ஒரு கொஸ்டீன் கேட்பாங்க பாருங்க, அதுதான் அவங்க ஹை லைட்டே…” என்றான்.
அவன் கண்களில் குரும்புத் தவழ்ந்ததோ, ஷ்ரவந்தி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு ராஜவேலுவைப் பார்க்க, அவரோ தன் மகளின் செயல்களை லிஸ்ட் போட ஆரம்பித்தார்.
“டாடி..” என்று அவள் பலமுறை அழைத்தும் கண்டு கொள்ளாமல் பெசிக்கொண்டே இருக்க, இந்தப் பூனம் வந்தால் போதும் என்பது போல் வழியைப் பார்க்க, பூனமும் வர, ‘ஷப்பா..’ என்று பெருமூச்சு விட்டவள், அவளிடம் இருந்த நோட்டை வாங்கிக் கொண்டு, பை சொல்லி அனுப்பிவிட்டு இவர்களிடம் வந்தவள்.. “டாடி, கிளம்பலாம், எனக்குப் பசிக்குது…” எனக் காதைக் கடிக்க,
“ஓ.. ஓகே டா.. போகலாம்..” என்றவர், கார்த்த்க்கிடம், “நாளைக்குப் பார்ப்போம் கார்த்திக்..” எனக் கைக் குலுக்கி கிளம்பிவிட்டார்.
ராஜவேலுவோடு நடந்தவளையே கண்ணிமைக்காமல், பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக். ஸ்கை ப்ளு ஜெக்கின்சும், அதே ஸ்கை ப்ளுவில் எம்ப்ராய்டரிகளும், மணிகளூம், டிசைன் செய்த வைட் கலர் டாப்பும், கழுத்தைச் சுற்றி ஸ்கை ப்ளு ஸ்டோலும் அணிந்திருந்தாள். இடையைத் தாண்டிய கூந்தல் ஒரு போனி டெயிலில் அடங்கி இருந்தது. அவள் நடக்க, அவளது கார் குழலும் நடைக்கேற்ப லயத்துடன் அசைந்தது.
ஷரவந்தியின் ஒவ்வொரு செயலையும் உண்ணிப்பாய் உள்வாங்கி ரசித்துக் கொண்டிருந்தான், தனக்குள் இப்படி ஒரு மாற்றம் வருமென்று நேற்று யாரெனும் சொல்லியிருந்தால், விழுந்து விழுந்து சிரித்திருப்பான்.
இன்று ஒரு பெண்ணை நினைத்து பைத்தியம் ஆகிக் கொண்டிருக்கிறோம்’ என்று நினைத்தவன் அவளையேப் பார்த்திருக்க, காரில் ஏறப்போனவள், சட்டென்று அவன் புறம் திரும்பி நொடியில் குறும்பு புன்னைகையுடன் கண் சிமிட்டிவிட்டு ஏறி அமர்ந்து விட்டாள். என்ன நடந்தது இப்போது, அவள் பார்த்தாளா..? சிரித்தாளா..? நிஜமா..? என்று அவன் யூகிக்கும் முன்னே கார் பறந்திருந்தது.
நகர்ந்து சென்ற காரையே பிரம்மைப் பிடித்தவன் போல் பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக். அப்போது காரில் இருந்து தலையை மட்டும் எட்டிப் பார்த்தவள், அவன் அப்படியே நிற்பதை உணர்ந்து, தலையை மட்டும், ‘போய் வருகிறேன்..” என்பது போல் அசைக்க, தன்னைப்போல் கார்த்திக்கின் தலையும் அசைய, மீண்டும் சிறு புன்னகை அவனிடம் உதிர்த்துவிட்டு, தலையை உள்ளிழுத்துக் கொண்டாள் ஷ்ரவந்தி.
இவளுக்கு என்னைப் பிடிக்குமா..? எப்போதிருந்தது..? ஆனால் அப்படி ஒரு அசைவு கூட அவளிடம் இருந்து வந்ததில்லையே, ஒருவேளை நான் காதலிக்க வேண்டும், அதன்பிறகு அவள் காதலை என்னிடம் கூறலாம் என்று நினைத்திருப்பாளோ..? என்றுக் குழம்பியவன், சமயம் வரும் போது அவளிடமேக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம், என முடிவு செய்துவிட்டு, அவனும் கிளம்பினான்.
அடுத்து வந்த நாட்கள் வழக்கம் போலவே சென்றது. கார்த்திக்கிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் இருக்க, ஷ்ரவந்தி குழம்பிப் போனாள். ‘இவன் இப்போ தான் நம்மளைக் கவனிக்க ஆரம்பிச்சான், அதுக்குள்ள என்னாச்சு… மருபடியும் சாமியாரா போயிட்டானா…?” என்று மனதுக்குள் புலம்பினாலும், வெளியெ அமைதியாக இருந்தாள்.
வழக்கம் போல நடக்கும் கேள்வி பதில் பகுதியிலும் கூட, அவன் அவளைக் கண்டு கொள்ளவில்லை. அவளது கேள்விகளைக் கொண்டே அவளை மடக்கி, பதில்களை கூறி என சுவாரஷ்யமாகப் போனாலும், அவனது கண்டு கொள்ளாத் தன்மை, ஷ்ரவந்தியை சோர்வடையச் செய்தது.
அதன் காரணமாக, அடுத்த இரண்டு நாட்கள் வகுப்பில் அமைதியாக இருந்தாள். இப்போது கார்த்திக் அவளை விசித்திரமாகப் பார்க்க, அவள் கண்டு கொள்ளவில்லை. ‘என்னடா.. இது நாம ஒதுங்கினா அவளே வந்து பேசுவான்னு பார்த்தா.. அவளும் ஒதுங்கின மாதிரி, அமைதியா இருக்கா.. ரொம்ப ஹர்ட் பன்ற மாதிரி நடந்துக்கிட்டோமோ..’ என்று அவன் யொசிக்க ஆரம்பித்தான்.
அன்று மாலை வகுப்பு முடிந்து அவன் வெளியேவர, ராஜவேலு ஷ்ரவந்தியைத் தோளில் சாய்த்தவாறு நடத்திக் கூட்டி வந்து காரில் உட்கார வைத்துக் கொண்டிருந்தார். இரண்டு நாட்களாக சோர்வாகவே அவள் இருப்பதை உணர்ந்தவன், வேக எட்டுக்களில் அவர்களிடம் சென்று, கார்க்கதவை திறந்து விட, “தேங்க்ஸ் கார்த்திக்..” என்றவரைக் கவனிக்காமல், தன்னவளையே பார்த்தான்.
‘அவள் விழிகளைத் திறப்பேனா..’ என்பது போல, இமைக்கதவுகளை மூடியே வைத்திருந்தாள். கருமணிகள் உருளுவதிலேயே அவன் மேல் ஏதோ கோபமாக இருக்கிராளோ என்று தோன்றியது கார்த்திக்கிற்கு.
“என்னாச்சு சார்..” என்றான் பார்வையை அவளிடம் இருந்து விலக்காமல்.
“த்ரீ டேசா ஃபீவர் கார்த்திக்.. அசைன்மென்ட் சப்மிட் பண்ணனும்னு லீவ் போடல, தூங்காம நோட்ஸ் எடுத்துட்டு இருந்தா.. நான் ஹெல்ப் பண்றேனு சொன்னாலும், வேண்டாம்னு சொல்லி எல்லாத்தையும் இழுத்துப் போட்டு, இப்போ ஃபீவர் வந்துடுச்சு…” என்று பேசிக்கொண்டே இருக்க,
“ டாடி..” என்றவளின் அனத்தல் அவர்களை நிகழ்வுக்கு கொண்டு வர, எதையும் யோசிக்காமல் கார்த்திக்கும் காரில் ஏறினான்.
“ஃப்ர்ஸ்ட் ஹாஸ்பிடல் போயிடலாம் சார், ஹை ஃபீவர் போல, தாங்க முடியாம அனத்துறாங்க பாருங்க, நீங்க அவங்க கூட பின்னாடி உட்காருங்க,” என்றுக் காரை எடுத்தான். மறுக்க நினைத்தவரும், மகளின் நிலையைக் கண்டு அமைதியாகி விட்டார்.
பொறுமையாக பரிசோதித்த டாக்டர், “ஃபீவர், டய்ர்டா வேற இருக்காங்க, சோ.. சலைன் ரெண்டு பாட்டில் போட்டுக்கறது பெட்டர். ஷீ இஷ் அனிமிக்..” என்றதும், தயங்கிய ராஜவேலுவை, “சார் நீங்க போய் ஆன்டியை அழைச்சிட்டு வாங்க, நான் இங்க இருக்கேன், கூட லேடிஸ் இருக்குறது தான் பெட்டர்.” என்றதும்,
“தேங்க்ஸ் கார்த்திக், அவளே வந்துடுவா, பட் டென்சன் ஆகி, அவளுக்கு எதுவும் ஆகிடும், அதான் யோசனை செஞ்சேன், வேறொன்னுமில்ல, உங்களூக்கு சிரமம் இல்லையே, நான் போய் பத்மாவைக் கூப்பிட்டு வரேன்..” என்றதும்,
“நோ.. சார், எனக்கு ஒரு பிராப்ளமும் இல்லை. நான் வீட்ல போய் வெட்டியா தான் இருக்கப்போறேன், பிறகென்ன, யோசிக்காம போயிட்டு வாங்க சார்..” என தயங்காமல் கூறவும்,
“ஓகே கார்த்திக், பார்த்துக்கோங்க, நான் சீக்கிரம் வந்துடுறேன்,” என்றுவிட்டு, மகளிடமும் கூறிவிட்டு கிளம்பினார்..
ஒரு மணி நேரம் ஆழ்ந்த உறக்கத்திற்குப் பிறகு விழித்த ஷ்ரவந்தி, தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கைத் தான் பார்த்தாள். அவனும் பார்க்க, அவளும் பார்க்க சில நொடிகள் பார்வையால் வருடிக்கொள்ள, மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள் அவள்.
சேரில் அமர்ந்திருந்தவன், எழுந்து அவளுக்கருகில் கட்டிலில் அமர, அவளுக்கு இதயத்துடிப்பு ஒவ்வொன்றும் டம் டம் என்று அடித்துக் கொள்ள, ஊசியில்லாத மற்றொரு கையால் மெத்தையை இறுக்கிப் பிடித்தாள். சட்டென்று முகமெல்லாம் வியர்த்து வலிந்தது. இமைகள் இறுக்கமாய் மூடியிருந்தாலும், படபடப்பில் கண்மணிகள் நாட்டியமாடுவது அவனுக்குத் தெரிந்தது.
அவளது அவஸ்தைகளை ரசித்தவனின் உதடுகளில் குறும்பு புன்னகை ஒட்டிக்கொள்ள, “என்னாசு ஷ்ரவந்தி, ஏன்.. இப்படி ஸ்வெட்டிங் ஆகுது, அப்னார்மலா ரியாக்ட் பன்றீங்க, டாகடரை வரச் சொல்லட்டுமா..?” உதட்டுக்குள் பூத்த புன்னகையை உள்ளையே மறைத்து, மிகவும் சீரியசாக கேட்க, அவளது உணர்வுகள் எல்லாம் சட்டென்று வடிய, விழிகளைத் திறந்து, அனல் பார்வை ஒன்றை அவனை நோக்கி வீச,
அதுவரைக் கஷ்டப்பட்டு அடக்கி வைத்திருந்த புன்னகையை வெளியே விட்டவன், “என்னை லவ் பண்றேன்னு எங்கிட்ட வந்து சொல்றதுக்கு உனக்கு என்ன கஷ்டம்..” என்றான் சீரியசாய்.
அவன் சீண்டியிருக்கிறான், தன் அவஸ்தைகளைப் பார்த்து சிரித்திருக்கிறான், அதைவிட, அவனை விரும்புவதை அவன் உணர்ந்திருக்கிறான். இருந்தும் அவனிடம் எந்தப் பிரதிலிப்பும் இல்லை. எல்லாம் செர்ந்து கோபமாக மாற, “என்ன..? நான் உங்களை லவ் பன்ட்றேனா..? சும்மா காமெடி பண்ணாம, இடத்தைக் காலி பண்ணுங்க..” என்றாள் ஷ்ரவந்தி கோபமாய்.
நொடியில் அவளது உனர்வுகளைப் படித்தவன், “ஹேய்… என்ன விளையாடுறியா..? நீ என்னை லவ் பன்ற, எனக்குத் தெரியும். இல்லைன்னுப் பொய் சொல்லாத..” என்றான் கோபமாய் அவனும்.
“உங்களைப் போய் நான் லவ் பண்றேனா..? அப்படி ஒரு நினைப்பு, நான் என்ன, இந்த காலேஜ்ல இருக்குற எல்லா பொண்ணுங்களும் தி க்ரேட் கார்த்திகேயனைத் தான் லவ் பன்றாங்க, ஏன்னா அவங்களுக்கு எல்லாம் வேற வேலை இல்லைல, உங்களுக்கு கர்வம்…”
“எல்லாப் பொண்ணுங்களும் உங்கப் பின்னாடி அலையுறாங்கன்னு ஒரு ஆனவம். அதான் உண்மையா யார் விரும்புறாங்க, என்ன பன்றாங்க, அவங்க ஃபீலிங்க்ஸ் என்னனு கூட புரிஞ்சுக்க முடியல, இல்ல புரிஞ்சிக்கிட்டாலும் வெளிய சொல்ல உங்க ஈகோ விடல. நாம போய் ஒரு பொண்ணு பின்னாடி சுத்துறதான்னு. ச்சே… இப்படி ஒரு சேடிஸ்ட போய் நான் லவ் பன்னேன்னு நினைக்கும் போது..” என்று அவள் முடிக்கும் முன்னே அவனது கை அவளது கன்னத்தை பதம் பார்த்திருந்தது.
அதுவரைக் கோபமாய் கத்திக் கொண்டிருந்தவள், அவனது அறையில் கை தானாக கன்னத்தைத் தாங்கிப் பிடிக்க, விழிகளில் நீர் பொங்கி வழிந்தது.
அறை விழுந்த அதிர்ச்சியில் அவனைப் பார்க்க, கார்த்திக்கின் முகம் இறுகியிருந்தது. அது மேலும் பயத்தைக் கொடுக்க, கண்களில் கண்ணீரோடு மிரட்சியும் வந்து ஒட்டிக் கொண்டது.
அந்தப் பார்வையில் என்னக் கண்டானோ, அவளை இழுத்து தன்னோடு மிக, இறுக்கமாக அணைத்து, அவன் கை பதம் பார்த்த கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்தான்.
அத்தியாயம் : 11
நீயும் நானும்
ஒன்றாய் போகும்போது
நீளும் பாதை
இன்னும் நீள
நெஞ்சம் ஏங்குதடி..
“கார்த்திக்.. எதுக்கு இப்படி இருக்கீங்க, நடந்து முடிஞ்சதை நினைச்சு உங்களை விட எனக்குத் தான் வருத்தமா இருக்கு, அதைவிட பயம்மவும் இருக்கு. என் பேரண்ட்ஸ் என் மேல வச்சுருந்த நம்பிக்கையை கொன்னுட்டு உங்க முன்னாடி இப்படி நிக்குறேன். அவங்ககிட்ட நான் என்ன சொல்லுவேன், எனக்குத் தெரியல, அவங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்க வேண்டியது தான். ஆனால் அதுக்காக நீங்க இப்படி இருக்குரது சரியில்ல..”
“இப்போ இங்கே நடந்ததுக்கு, நாம ரெண்டு பேருமே தான் பொறுப்பு. அதுக்கான தீர்வை நாம தான் தேடனும். அதை அப்புறம் பார்ப்போம். இப்போ வாங்க ஹாஸ்பிடல் போயிட்டு வருவோம்.. ப்ளீஷ் கார்த்திக்..” என ஷ்ரவந்தி அவனைக் கட்டாயப்படுத்த,
“இல்லை வது எனக்கு இப்போ ஒன்னும் இல்ல, ஃபீவர் கூட இல்ல, விட்டுடுச்சு, ரெஸ்ட் எடுத்தா போதும். பட் நான் உன்னை இப்படி பண்ணிட்டேனே, எப்படி நான் இவ்ளோ கீழ்தரமா போயிட்டேன். நான் உன்னை உன் மனசைத் தானே விரும்பினேன். ஆன எப்படி தடம் மாறி உன்னை மனைவின்னு அங்கீகாரம் கொடுக்காம எடுத்துக்கிட்டேன். உணர்ச்சி வசத்தால உன்னையும், நம்ம காதலையும் அசிங்கப்படுத்திட்டேன்..” என்றவன் சற்றும் யோசிக்காமல் அவள் கால்களில் விழுந்திருந்தான்.
“என்னை மன்னிச்சுடு வது.. என்னை தப்பா நினைச்சுடாதே.. நான் உன்னை உண்மையாதான் நேசிக்குறேன். உனக்குப் புரியுதா… ஐ யாம் சாரி டா.. ப்ளீஸ்..” எனக் குரல் கரகரக்க கூற,
அவன் காலில் விழுந்ததுமே, பட்டென்று தரையில் அமர்ந்தவள் “ஏய் உனக்கு அறிவு இருக்கா.. இல்லையா, என்ன பன்றநீ? உன்னை..” என்று கத்தியவள், “நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன். இதுக்கு நீ மட்டும் காரணம் இல்லன்னு புரியுதா..? புரியலையா..?” என்று அவன் சட்டையைப் பிடித்து உழுக்கவும், அவனும் எழுந்து அமர்ந்தான்.
அன்று மருத்துவமனையில் அவளை அடிக்கவும், அவள் மிரண்டுத் தன்னைப் பார்த்ததைக் கண்டதும், அணைத்துக் கொள்ள, அவளுக்குள்ளும் அதுவரை உண்டான குழப்பங்களும், போராட்டங்களும் முடிவுக்கு வந்ததைப் போல் இருந்தது.
அப்படியேக் கழிந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, இருவரும் தங்களது காதலை உணர்ந்து வெளிப்படுத்திக் கொள்ள, நாட்கள் அதன் போக்கில், அழகாக சென்றது அவர்களுக்கு..
பட்டாம்பூச்சியாய் திரிந்த அவர்களுக்குள் அழகான புரிதலும் உண்டாகி இருந்தது. வண்ணமாய் கழிந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஒருனால் மிகவும் சோர்வாய் கார்த்திக் வகுப்பெடுப்பது புரிந்தது.
எப்பொழுதும் அவளைப் பார்க்காமல் தான் வகுப்பெடுப்பான். பார்த்தால் தன் மனம் தன் பேச்சைக் கேட்காது என்பது அவன் எண்ணம். உண்மையும் கூட.. அவளுக்கும் அப்படித்தான். அதற்காக முற்றிலும் தவிர்க்கவும் மாட்டான். ஆனால் இன்று என்னவோ, அவளை முழுவதும் பார்ப்பதைத் தவிர்ப்பது போல் தோன்றியது.
வகுப்பு முடிந்தும் கூட அவன் தன்னைக் கானாமல் சென்றது, வருத்தம்மய் இருந்தாலும், கார்த்திக்கின் கண் சிவப்பு அவளுக்கு குழப்பமாய் இருந்தது. அடுத்த நாளும் அப்படியே செல்ல, அதற்கடுத்த நாள் கல்லூரிக்கே வரவில்லை.. அதில் பயந்து அன்று மதியமே அவனைக் காண சென்றிருந்தாள்.
வீடு உள்பக்கமாய் பூட்டியிருக்க, காலிங்க்பெல்லை விடாமல் அழுத்தியிருந்தாள். இரவெல்லாம் காய்ச்சலின் வீரியத்தில் உறங்காமல் இருந்த கார்த்திக், விடியலில் தான் உறங்கியிருந்தான். எங்கோ ஒலிப்பது போல் சத்தம் வந்ததைக் கண்டு கொள்ளமால் மீண்டும் உறக்கத்திற்குச் சென்றவன், தொடர்ந்து ஒலித்த சத்ததில், எழுந்தவன், சற்று சூழ்னிலையை உள்வாங்கி, அதன்பிறகு தடுமாறியபடியே கதவை நோக்கி நடந்தான்.
நம்மளைத் தேடி யார் வந்திருப்பார்கள் என்று யோசித்தபடியே கதவைத் திறக்க, அங்கு ஷ்ரவந்தியை சற்றும் எதிர்பார்க்கவில்லை. முகம் முழுவதும், பதட்டமும், பயமும், விழிகளில் தேங்கிய நீருமாய் அவள் நின்று கொண்டிருந்தாள்.
கதவைத் திறக்கவும், “என்னாச்சு, கார்த்திக்… ஏன் இப்படி இருக்கீங்க, காலேஜுக்கும் வரல, உடம்பு சரியில்லையா..? என்ன பன்னுது..?” என்று வரிசையாக கேள்விகளை கேட்டவள், அவன் நெத்தி, கழுத்து, தலை என்று அனைத்தையும் தொட்டு பார்த்திருந்தாள்.
“என்ன கார்த்திக் இது, ஃபீவர் இப்படிக் கொதிக்குது, என்ன பன்னிட்டு இருந்தீங்க..? டாக்டர்கிட்ட போனீங்களா..? ஏன் எங்கிட்ட சொல்லல, டேப்லட் எதுவும் போட்டீங்களா..?” கதவைச் சாத்திவிட்டு சோபாவில் அமர வைத்திருந்தாள்.
“நீ எப்படி வந்த..? காலேஜ் போகலையா.. யாரும் பார்த்தா தப்பாகிடும் கிளம்பு..” என்றான் சோர்விலும் பதட்டமாய்..
“என்ன பேசுறீங்க, உங்க கூட சண்டை போடனும்னு தான் வந்தேன், இப்படி இருக்கவும் தான் சும்மா விடுறேன், யாரும் எதுவும் நினைச்சா நினைச்சிட்டு போகட்டும். நீங்க ஏன் எங்கிட்ட சொல்லாம விட்டீங்க, நான் சொல்லாம விட்டா, உங்களுக்கு ஃபீல் ஆகாதா.? அதே மாதிரி தானே எனக்கும். ஏன் உங்களுக்கு ஒன்னுனா அது எனக்கும் தானே கார்த்திக்..” என்று கரகரப்பாய் பேசியவள்,
“சரி என்ன சாப்பிட்டீங்க.. எதுவும் செஞ்ச மாதிரியே தெரியலயே..” என்று கிட்சனுக்குள் நுழைந்தவள், அடுப்பில் வென்னீரை வைத்துவிட்டு, கஞ்சி வைக்கலாம் என அரிசியைத் தேட, அது இல்லை. அதர்கு பதிலாக அங்கிருந்த ஓட்ஸை எடுத்து, வறுத்து மிக்ஸியில் சுத்தி கஞ்சியாக்கினாள்.
அவனுக்கு வென்னீரில் முகத்தைத் துடைத்து, கஞ்சியைக் கெடுக்க, பதிலேதும் பேசாமல் வாங்கிக் கொண்டான். ஏதேனும் உள்ளே போனால்தான் பேசுவதற்கு கூட தெம்பு வரும் என்பதால் ஒன்றும் சொல்லாமல் குடித்தான்.
குளிர் வேறு, கொதித்த காய்ச்ச்கலில் உடல் வேறு தூக்கிப் போட்டது. உடல் சோர்வும் சேர, அவளிடம் பேச சக்தியே இல்லை. அவளே பேசிக்கொண்டிருந்தாள். கண்கள் மூடியிருந்தாலும், காதுகள் அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தது.
அவனது அறையைச் சுத்தம் செய்து, கட்டிலில் படுக்க வைக்க அழைத்துப் போனாள். கார்த்திக்கும் அவளது அருகாமையை உள்வாங்கியபடியே மெதுவாக எழுந்தான். எழுந்ததும் சாப்பிடாமல் இருந்து சாப்பிட்டது வயிற்றைப் பிரட்ட, அப்படியே அவள் மீது மொத்தமாய் வாந்தி எடுத்திருந்தான்.
“சாரிடா… சாரி.. சாரி…” என்றபடியே மயங்கிவிட, “கார்த்திக்.. என்ன… இங்கே பாருங்க, கார்த்திக்.. கார்த்திக்..” என்று வேகமாய் தண்ணீரை எடுது அவன் முகத்தில் தெளிக்க, அவன் லேசாக அசையவும், சோர்வு தான் என்று தெரிய, வேகமாய் அவந்து உடைகளில் ஒன்றை எடுத்து பாத்ரூமிற்குள் நுழைந்தவள், தன்னதைக் கழட்டி அலசி ட்ரையரில் போட்டுவிட்டு, அந்த உடைகளை மாட்டி வந்திருந்தாள்.
பிறகு கார்த்திக்கிற்கு அனைத்தையும் சுத்தம் செய்துவிட்டு, கட்டிலில் படுக்கச் செய்தாள். ‘இவன் இப்படி இருந்தால் என்ன செய்வது. சுய உணர்வே இல்லாமல் காய்ச்சல் வரும் அளவிற்கு என்ன செய்து கொண்டிருந்தான்,’ என்ற யோசனையிலேயே அவரது உடையை காயப்போட்டிருந்தாள்.
அவனிடம் கேட்டுத் தன் அப்பாவிடம் சொல்லலாம் என்று அவனிடம் செல்ல, அவன் முன்னிலும் இப்போது அதிகமாய் அனத்துவது தெரிய, தனக்கு நேரம் போகும் பின்விளைவுகள் எதைப் ப்ற்றியும் யோசிக்காமல், அவனது ரஜாயிற்குள் அவளும் நுழைந்து, அவனை இறுக்கமாய், மிக இறுக்கமாய் அணைத்திருந்தாள்.
அவன் உடற்சூட்டை தணிப்பதாக நினைத்து மேலும், மேலும் அவனிடம் நெருங்க, அவனோ குளிருக்கு இதமாய் அவளுக்குள் புதைய, இருவருக்கும் என்ன நடந்தது என்று புரிந்து கொள்ளுமுன் அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.
யாரைத் தப்பு சொல்ல, என்று தெரியாத நிலை. தப்பென்றால் இருவர் மீதும் உண்டு, அல்லது இருவர் மீதும் இல்லை . விதியின் மீதா..? அவர்களின் கூடல் முடிந்து, அது கூடலா.. எப்படி என்று யோசிக்கும் முன்னே கார்த்திக்கின் கொதிக்கும் காய்ச்சலும் விட்டிருந்தது.
குற்ற உணர்ச்சியில் அவள் முகத்தைப் பார்க்காமல் தரையைக் குணிந்திருந்தவனின் கைகளை எடுத்த் தனக்குள் வைத்துக் கொண்டவள்,
“கார்த்திக்… அடுத்து என்ன செய்யலாம்னு தான் யோசிக்கனுமே தவிர, நடந்ததையே நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்க கூடாது. இனி என்ன செய்றது அதை சொல்லுங்க… டாடிக்கிட்ட பேசுவோமா…” என்றாள்.
“இல்ல.. இல்ல.. வேண்டாம் அது சரியா வரும்னு தோனல, ஃப்ர்ஸ்ட் என்னோட வீட்டுல பேசுறென். அவங்க நான் சொன்னதும் உடனே ஒத்துப்பாங்க, என்னோட அப்பா அம்மாவோட வந்து உங்க வீட்ல முறையா பேசுறேன். அதுதான் சரி, எல்லாமே முறையா நடந்து, நீ நம்ம வீட்டுக்கு முறையா வரனும். அதுதான் நான் உனக்கும் நம்ம காதலுக்கும் கொடுக்குற மரியாதை..” என்றவன்,
தன் கழுத்தில் இருந்த செயினை அவள் கழுத்தில் போட்டுவிட்டு, “இந்த நிமிசத்துல இருந்து நீ என்னோட மனைவி, அதை எப்பவும் மறந்திடாதே, நான் எந்த சூழ்னிலையிலயும் உன்னை விட்டுட மாட்டேன். ஐ ப்ராமிஸ் யு.. ட்ரஸ்ட் மீ..” என்றதும்,
“உங்களை நம்பலன்னா நான் என்னையே நம்பலன்னு அர்த்தம். நீங்க என்னை விரும்புறதுக்கு முன்னமே உங்களை நான் விரும்பி என்னோட ஹஸ்பண்டா மனசுல பதிய வச்சிருக்கேன். அப்படி இருக்கும் போது, இப்போ நீங்களும் என்னை உயிரா நேசிக்கிறீங்கன்னு தெரிஞ்சும் உங்களை நான் எப்படி நம்பாம விடுவேன்… இந்த செயின் இதெல்லாம் ஒன்னுமே இல்ல, நான் உங்க மனைவி, நீங்க என்னோட கணவர், இதுல எப்பவும் மாற்றம் இல்ல, என அவன் கணகளைப் பார்த்து சொல்ல,
அவள் கைகளை எடுத்துக் கண்களில் வைத்தவன், “நான் ஊருக்கு கிளம்புறேன், இனி எதையும் தள்ளிப் போட முடியாது. நான் வர வரைக்கும் நீ வீட்ல எதையும் சொல்ல வேண்டாம். நானே அங்கிள்கிட்ட சொல்லிட்டு பொரேன். என் பேரன்ட்ஸோட வந்து பேசுறேன், அதுவரைக்கும் பொறுமையா இருக்கனும் சரியா..” என்றான் ஆழமாய்.
“இன்னைக்கேவா ஹெல்த்த இப்படி வச்சுக்கிட்டு, வேண்டாம் கார்த்திக் ஒரு டூ டேஸ் போகட்டும்..” என அவள் கூற,
“இல்லடா.. இப்போ எனக்கு ஒன்னுமில்ல… ஐ யாம் ஆல்ரைட்.., டாக்டரை விட பெஸ்ட் மெடிசின் நீங்க கொடுத்தீங்களே.. சோ என் ஃபீவர் போயிடுச்சு, ஆனாலும் பவர் ஃபுல்லான மெடிசின் தான் மேடம் ப்ரிஸ்க்ரைப் பண்ணது..” என அவன் குறும்பாய் ஆரம்பிக்க,
“ச்சூ.. போங்க கார்த்திக்… என சினுங்கியபடியே அவன் தோளில் சாய்ந்துக் கொண்டு, “எப்போ வருவீங்க, உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் கார்த்திக்…” என்றாள் இன்னும் ஆழமாய் அவன் தோளில் புதைந்துக்கொண்டு..
“உன்னை விட்டுட்டு நான் எப்படி இருக்கப்போறேன்னு எனக்கேத் தெரியலடா.. ஆனால் இப்ப போனாதான் நான் உன்னை முழுசா என் கூட வச்சுருக்க முடியும். இனிமேலும், ஒளிஞ்சு மறைஞ்சு உங்கூட பேசுறது, பழகுறது என்னால முடியாது. உன்னை நிமிசம் கூட பிரியாம என் கைக்குள்ளயே வச்சுக்கனும் வது. அதுக்காக சில பிரிவுகள் நமக்குள்ள வருவதை ஏத்துக்கத் தான் செய்யனும்..” என்றான் பொறுமையாய். காலம் அவனுக்கு வைத்திருக்கும் அவலத்தை எண்ணாமல்.
அத்தியாயம் – 12
நீ சொல்லி நானும்
நான் சொல்லி நீயும்
கேட்காத ஒன்று…
நீ எனக்காக அழுவதும்
நான் உனக்காக அழுவதும்..
கார்த்திக் ஷ்ரவந்தியிடம் கூறிவிட்டு, அடுத்த இரண்டு நாளில் ஊருக்கு வந்திருந்தான். திடீரென வந்த மகனை ஆராய்ச்சியாய் பார்த்தாலும் எதுவும் கேட்கவில்லை லிங்கேஷ்வரன். மகன் முன்னே அமைதியாக இருந்தாலும், தனியாக கணவரை நச்சரித்துக் கொண்டுதான் இருந்தார் அமராவதி. எப்போதும் யோசனையோடு அலையும் மகனைப் பர்க்க, அவருக்கு எதுவோ இருப்பது போல் தோன்றியது. அவர் நினைத்ததைப் போல் அடுத்த இரண்டு நாளில் கார்த்திக் தன் காதலைப் பற்றி வீட்டில் சொல்லியிருந்தான்.
“இதெல்லாம் சரிபட்டு வராது, வாக்கு கொடுத்துட்டேன். அது இதுன்னு உளராம போய் வேலையைப் பாரு, இனி நீ அங்க போக வேண்டாம். ஜாப் ரிசைன் பண்ணிடு..!” என்று திட்டவட்டமாய் கூறிவிட்டார் லிங்கேஷ்வரன். அவருக்கு கார்த்திக்கை நன்றாகத் தெரியும், விளையாட்டுத் தனமாய் பேசமாட்டான் என்று. அதனால் தான் முடிவாய் கூறிவிட்டார்.
“இல்லப்பா.. என்னால விடமுடியாது, விட்டுட்டு வரமாதிரியான சூழலை நான் எப்பவோ கடந்து வந்துட்டேன். அவள் எனக்கு மனைவியா வரது மட்டும் தான் இனி நடக்கனும். நீங்க என்னோட முடிவை மறுக்க மாட்டீங்கன்னு நம்பி அவளுக்கு வாக்கு கொடுத்துட்டேன். னீங்க எனக்காக இதை செய்து தான் ஆகனும். ப்ளீஸ் அப்பா… என்னோட நிலைமையும் புரிஞ்சுக்கோங்க…” என்றான் அமைதியாய், அதே சமயம் திடமாய்.
“என்ன பேசுற நீ… அவர் சொல்றது உனக்கு காதுல விழுதா..? இல்லையா..? அவர் என்ன சொல்றாரோ அதை மட்டும் செய்..” இடையில் புகுந்து கத்தினார் அமராவதி.
“அமரா நீ கொஞ்சம் அமைதியா இரு.. நான் பேசுறேன்..” என்று மனைவியை அடக்கியவர், “இங்க பாரு கார்த்திக், உன்னோட பேக் கிரவுண்ட் உனக்குத் தெரியுமா… தெரியாத..? உன் பணத்துக்காகவும், இந்த வசதிக்காகவும் கூட பொண்ணூங்க உயிரா இருக்குற மாதிரி நடிப்பங்க, அந்த நடிப்பை நம்பி ஏமாந்திடக் கூடாது, புரிஞ்சுக்கோ..? நீ சின்ன பையன் கிடையாது..” என்றார் பொருமையாய்.
“எனக்கு எல்லாம் தெரியும்ப்பா, ஆனா நான் யாரு, என்னனு எதுவுமே அவளுக்குத் தெரியாது. தெரியாம தான் என்னை விரும்பினா..? அவளூக்கு என்னாலத் துரோகம் பண்ண முடியாது டாடி, ப்ளீஸ்” என்றான் மன்றாடியபடியே.. ‘தான் செய்த தவறாய் எப்படி வெளியே சொல்லுவது, சொன்னாலும் தன்னை விட்டுவிட்டு அவளைத்தானே அசிங்கமாய் பேசுவார்கள்’ என பயந்தான்.
“னான் சொல்லல, இவன் இப்படித்தான் வந்து நிப்பான்னு, இனம் இனத்தோட தானே சேரும். இவங்கப்பா புத்தி தானே இவனுக்கும் வரும். அந்த மனுசனும் போய் சேத்துல கால் வச்ச மாதிரி, இவனும் போய் வச்சுருக்கான். நான் அன்னைக்கே சொன்னேன். சொந்தத்துல ஒன்ன பார்த்து கட்டி வச்சுட்டு எங்குட்டும் அனுப்புவோம்னு, கேட்டாத்தானே, இப்போ எப்படி வந்து நிக்குறான் பாருங்க, என் புள்ளைங்களுக்கு எமனா..?” என்று ஆங்காரமாய் அமராவதி கத்த,
“அம்மா.. அமரா…” என்று இருவரும் ஒரு சேரக் கத்த, “எதுக்கு இப்படி கத்துறீங்க, நீங்க என்ன வேனும்னாலும் பன்னுங்க, ஆனா இவன் யாரோ ஒருத்திய இந்த வீட்டுக்கு கோண்டு வரக்கூடாது.. இல்லை அப்படித்தான்னு நீங்க யோசிச்சா, நான் என்னோட பிள்ளைங்களோட, இந்த வீட்டை விட்டுப் போயிடுவேன். யாரை கொண்டுவந்து என்ன வேணும்னாலும் பண்ணுங்க.. தலை தலையா அடிச்சிக்கிட்டேன், கேட்டாத்தானே, இப்போ என்ன செய்யப் போறீங்க, உங்கம்மா இருந்த வரைக்கும் என்னை கொஞ்சம் கூட நிம்மதியா விட்டதில்ல, நீங்களும் உங்கம்ம பேச்சைக் கேட்டு என்னை மனுசியா கூட மதிச்சதில்ல..”
“அந்த மகராசி போனதும் தான், நான் சொல்றது மாதிரி கேட்டீங்க, இப்போ, இதோ வந்து நின்னுட்டானே, உங்கம்மா விவரமா சொத்துல சரி பாதிய இவன் பேருக்கு வச்சிட்டு போயிடுச்சு, ஒன்னுமே இல்லாம வந்தவளோட புள்ளைக்கும் அதே சொத்து, சொத்து சுகமா வந்த என் புள்ளைங்களுக்கும் அதே சொத்தா… என்ன நியாயம், நான் கேட்கும் போதெல்லாம் பார்த்துக்கலாம்னு வாயை அடைசிட்டு, இன்னைக்கு நீங்க வாயடைச்சுப் போய் நிக்குறீங்க, என்ன செய்யப் போறீங்க, எனக்கு கொடுத்த வாக்கை மறக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். இதோ நிக்குறானே இவங்கிட்ட தெளிவா பேசி ஒரு முடிவுக்கு வாங்க..” என்றாள் ஆங்காரம் குறையாமல்.
லிங்கேஸ்வரனுக்கும் கோபம் தான், ஆனால் எடுத்துச் சொல்லி அவனை எப்படி வழிக்கு கொண்டு வரலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார். தன்னுடைய நன்பன் தனாவிடம் பேசிப்பார்க்கலாம், என்றும் நினைத்தார். ஆனால் அமராவதி இடையில் பேசி அனைத்தையும் கெடுத்துவிட்டார். இனி கார்த்திக்கையும் சமாளிக்க வேண்டும், மனைவியையும் சமாளிக்க வேண்டும், என்ன செய்வது புரியாமல் நின்றிருந்தார்.
அமரா பேசியதில் கார்த்திக்கின் மூளை நரம்புகள் அனைத்தும் செயலிழந்தது போல் ஆகிவிட்டன. அவர் பேசியது நிஜமா என்று அவனால் நம்பவே முடியவில்லை. “அம்மா… அம்மா..” என்று அவர் பின்னையே அலைந்த நாட்களை நினைத்துப் பார்த்தான்.
தன்னைப் பெற்ற தாயின் நினைவு கூட அவனுகு இல்லை. இவர்கள் இருவரையும் தான் பெற்றோர் என்று எண்ணியிருந்தான். அந்த எண்ணங்கள் எல்லாம் தண்ணீரில் எழுதிய கவிதைகள் போல ஒன்றிற்கும் பலன் இல்லாமல் போயிருந்தது. அடுத்து என்ன செய்ய வேண்டும் தெரியவில்லை, மூளைதான் மரத்திருந்ததே. யாரையும் பார்க்காமல், வீட்டை விட்டு வெளியேறியிருந்தான். ‘இந்தப் பணத்துக்காகவா என்னிடம் பாசம் காட்டினார்கள்’ இந்த ஒரு எண்ணம் தான் அவன் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. கால்கள் தன்னைப் போல் எங்கேயோ சென்றது.
கார்த்திக் வெளியேறியதைக் கூட உணராமல், லிங்கேஸ்வரனும் அமைதியாய் யோசித்துக் கொண்டிருந்தார். அறையை விட்டு வெளியே வந்த அமராவதி, கணவர் தனியே இருப்பதைப் பார்த்து, “என்ன அவங்கிட்ட எல்லாத்தையும் பேசியாச்சா, அவன் இஷ்டப்படி எல்லாம் நடக்கட்டும், ஆனா அவனுக்கும் இந்தக் குடும்பத்துக்கும், சொத்துக்கும் சம்மந்தம் இல்லைன்னு எழுதிக் கொடுத்துட்டுப் போகச் சொல்லுங்க. அவன் யாரைக் கட்டி என்ன செஞ்சா நமக்கென்ன..?” என்றதும்,
“இது நாக்கா இல்லை விஷக்கொடுக்கா.? நீயெல்லாம் என்ன ஜென்மம், ச்சே.. நாந்தான் அவங்கிட்ட பேசுறேன்னு சொல்றேன் இல்ல, அப்புறம் என்னத்துக்குப் பேய் மாதிரி கத்துற, இனிமேல் இதைப்பத்தி நீ பேசவேக் கூடாது. காத்திக் உன்மேல எப்படி பாசமா இருந்தான். அவங்கிட்ட பாசமா பேசியிருந்தா போதும், அவனே வேண்டாம்னு வந்திருப்பான். இவ்வளவு உறுதியா வேணும்னு சொல்றானா, தவிர்க்க முடியாத பிரச்சினையில இருக்கானோ என்னவோ… இதுவே நம்ம ரெண்டு பேரும் செத்து, நம்ம பிள்ளைங்களுக்கு இந்த நிலமை வந்திருந்தா என்ன பண்ணிருப்ப.. எந்த ஒரு விசயத்தையும் பேசும் போது யோசிச்சுப் பேசனும்..” என்று சத்தம் போட்டவரின் போன் அலற, எடுத்துப் பேசியவருக்கு கிடைத்த செய்தியில் ‘கடவுளே’ அப்படியே தொப்பென்று அமர்ந்து விட்டார்.
கணவர் பேசியதில் கோபமாய் இருந்தவர், அடுத்து அவரது செயலில் பதறிப்போய் , “என்னங்க..? என்னாச்சு..? யார் என்ன சொன்னாங்க..? என்றதும்,
“போச்சு.. எல்லாம் போச்சு.. என்னை நம்பி விட்டுட்டுப் போனாங்க, அவங்களுக்கு நான் உண்மையாவே இல்ல, யாரும் என்னை மன்னிக்க மாட்டாங்க.. கடவுளே..” என்றுத் தலையிலடித்துக் கொண்டு கதறினார்.
என்னங்க… என்னனு சொல்லுங்க..” என மீண்டும் கேட்க, “உன்னால தான் எல்லாம் உன்னால தான், கார்த்திக் அவனுக்கு ஆக்ஸிடென்டாகிடுச்சாம்..” என்று கோபத்தில் கத்தியவர், அங்கிருந்த சோபாவில் அவரைத் தள்ளிவிட்டு மருத்துவமனைக்கு விரைந்தார். அடுத்தடுத்து நடந்த அனைத்தும் அவரது கையை மீறிய செயல்களாகவே மாறியிருந்தன.
தன்னிலை மறந்து போய் கொண்டிருந்த கார்த்திக் ஒரு தெருமுனையில் திரும்ப, உள்ளிருந்து வந்த லாரி ஒன்று அவனைத் தூக்கி எரிந்தது. எரிந்ததில் எதிரே இருந்த கம்பவுன்ட் சுவரில் மோதி விழுந்திருந்தான்.
மிகவும் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். தலையில் அடி என்றாலும், அவனது இடுப்புக்கு கீழேதான் பலத்த அடி. ரத்தமும் அதிகம் போயிருந்தது. தலையின் பின்பக்கம் அடிப்பட்டிருந்ததால் மயக்கம் தெளியவே இல்லை.
கொடுமையாய் கழிந்தன பலநாட்கள், தனா தான் லிங்கேஸ்வரன் கூடவே இருந்தார். அமரா வந்தலும், கணவர் அவருடன் பேசுவதில்லை என்று வருவதை நிறுத்தியிருந்தார். மாதம் முழுதாய் கழிந்தாலும் சுய உணர்வு பெற்றால் மட்டுமே அடுத்து என்ன செய்யலாம் என்பதை முடிவு செய்யலாம்,’ என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இதற்கிடையில் தான் ராஜவேலு கார்த்திக்கைத் தேடி போன் செய்ததும், கனவரின் அலட்சியத்தில் உண்டான கோபத்தில் அமராவதி உண்மையை மறைத்துக் கூறியதும் நடந்திருந்தது.
தனாவின் அறிவுரைப்படி கார்த்திக்கை மங்கலூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு முதலில் MRI ஸ்கேன் எடுத்து குணமாக்கி விடலாம் என்று நம்பிக்கையளிக்க, அப்போது தான் மற்றவர்களுக்கு நிம்மதியே வந்தது.
அடுத்தடுத்து கார்த்திக்கின் உடலில் அனைத்தும் முன்னேற்றம் தான். திடிரென ஒரு நாள் உறக்கத்தில் இருந்து எழுவது போல, எழுந்து ‘வது.. வது..’என்று அரற்றினான். அதன்பிறகு அவனது நினைவும் வந்து உணர்வுகளும் விழித்துக் கொண்டன. அவன் எழுந்து அமரவே மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. அவனது காதலைப்பற்றி சுத்தமாய் மறந்திருந்தார் லிங்கேஸ்வரன்.
கார்த்திக்கும் எதையும் யாரிடமும் பேசவில்லை, “ஸ்ருதியிடமும், பாலாவிடமும் சொன்னீங்களா..” என்றான் ஒரு நாள். இல்லையென்பது போல் தலையாட்ட, “சொல்ல வேண்டாம்… எப்பவுமே..” என்று விட்டான். அவரும் பதில் பேசவில்லை.
இடுப்பில் அடிப்பட்டிருந்ததால், அவனுக்குப் பிசியோதெரபியும் கொடுக்கப் பட்டது. வலியும் அதிகமாய் இருக்க, மீண்டும் ஒரு ஸ்கேன் செய்து விடலாம்’ என்றார் டாகடர். ஸ்கேன் செய்ததுமே ‘கார்த்திக்கிற்கு இனி குழந்தைப் பெற்றுக்கொள்ளும் தகுதியே இல்லை’ என்று விட்டார்.
இதைக்கேட்ட லிங்கேஸ்வரன் நொருங்கி விட்டார் என்றால், எதேச்சையாக கேட்ட கார்த்திக்கோ மனதளவில் இறந்தே விட்டான். ‘நான் ஒரு ஆன்மையற்றவனா… என்னால் என் வதுவிற்கு ஒரு குழந்தை கொடுக்க தகுதியில்லாதவனா..? கடவுளே ஏன் இன்னும் என்னை உயிரோடு வைத்திருக்கிறாய்.. நான் வருவேன் என்று நம்பி வாழும் அவளுக்கு நான் என்ன சொல்லப் போகிறேன்.. இல்லை என்ன செய்யப்போகிறேன்…’ தன் அறைக்கு வந்த கார்த்திக் துவண்டு விட்டான்.
அவளுக்குத் துரோகம் செய்தது போல் எண்ணங்கள் படையெடுக்க, அவள் வாழ்க்கையை சீராக்க ஏதேனும் செய்தே ஆகவேண்டும் என்று உறுதியாய் நினைத்தான்.
அது அவளை விட்டு விலகியிருந்தால், அவனை மறந்து பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணாந்து கொள்வாள் என்று முட்டாள்தனமாய் நம்பினான், தன் வாரிசை அவள் சுமக்கிறாள் என்றுத் தெரியாமல்… குணமாகும் வரை அங்கையே இருந்தான். இந்த செய்தி தனக்கு தெரியும் என்று துளியும் காட்டிக் கொள்ளவில்லை.
லிங்கேஸ்வரனும் ஓடிக்கொண்டே இருந்தார். அவருக்கு கார்த்திக் இந்தளாவு சரியாகி வந்ததேப் போதும் என்று எண்ணியிருந்தார். அமராவதியின் போக்கை தனா விமர்சிக்க இருவருக்குள்ளும் மனஸ்தாபம் உண்டானது. இப்படியே போக ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் காணாமல் போயிருந்தான்.
கார்த்திக் இப்படி செய்வான் என்று அறியாத லிங்கேஸ்வரனோ நிலை குழைந்துப் போய்விட்டார். எல்லாப் பக்கமும் அவனைத் தேட ஆட்களை வைத்தார். தெரியாமல் தொலைந்து போனால் கண்டுபிடித்து விடலாம். தெரிந்தே கானாமல் போனவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது..
கார்த்திக் நேராக சென்றது புனேவிற்கு தான். அங்கு சென்றதும், அவன் கேட்ட செய்தி கார்த்திக்கை குற்ற உணர்ச்சியில் தள்ள, அவர்களது சொந்த ஊரான தஞ்சாவூருக்கே சென்றான். அங்கும் அவர்கள் இல்லையென்ற செய்தி கிடைக்க, முற்றிலுமாய் ஒடிந்து போனான்.
ஒரு பெரும் பணக்காரன் பிச்சைக் காரனைப் போல் தெரு தெருவாய் அலைந்தான். அவளை விலக்க வேண்டும் என்று எண்ணியவனே, அவள் வேண்டும், வேண்டும் என்று அலைந்தான்.
பாலாவும், அரவிந்தும் வந்து விட, கணவரை முந்திக்கொண்டு அமரா ‘கார்த்திக் ஒரு பெண்ணொடு ஒடிவிட்டான்’ என்று சொல்லிவிட்டார். அவரும் நடந்த எதையும் கூறவில்லை. பிறகு கார்த்திக் எங்கே என்று கேட்பார்களே..? அதனால் மனைவி சொல்வது உண்மை என்பது போல் அமைதியாகி விட்டார்.
இளையவர்களீன் கேள்விக்கு எந்தப்பதிலும் கிடைக்க வில்லை. நண்பனின் நிலையறிந்து தனாவும் எதுவும் சொல்லவில்லை. மாதங்கள் இரண்டான போது, கரூரில் இருக்கும் நண்பன் ஒருவனிடமிருந்து பாலாவிற்கு போன் வர, அடுத்த நாளே அங்கு வந்திருந்தான். தன் உணர்வின்றி பிதற்றியபடியே இருந்த கார்த்திக்கைப் பார்த்து அதிர்ச்சியாகி விட்டான் பாலா.
கார்த்திக்கின் இந்த நிலைக்கு யார், என்ன காரணம் ஒன்றும் புரியாமல் இருந்தவனுக்கு விடையாக லிங்கேஸ்வரன் வந்து நின்றார் அவன் மனக் கண்ணில். மறுபடியும் அவனை ஒரு பாதுகாப்பான ஹாஸ்பிடலில் சேர்த்துவிட்டு, தன் தந்தையிடம் வந்தான்.
“கார்த்திக் பத்தி எனக்கு எல்லாம் தெரியனும்..?” என்றவனின் இறுகிய குரலில் அவரால் எதையும் மறைக்க முடியவில்லை. அவர் கூறிய அனைத்தையும் கேட்டவன், அடுத்து ஒரு வார்த்தை பேசாமல் கிளம்பிவிட்டான். லிங்கேஸ்வரனுக்கும் மனம் அமைதியாகி விட்டது.
அனைத்தும் தன் கையை மீறி சென்று விட்டதை அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது. இனி எது நடந்தாலும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் என்றும் புரிந்தது. நடப்பது நடக்கட்டும் என்று இறைவனின் மேல் பாரத்தைப் போட்டு மனதை அமைதியாக்கிக் கொண்டார்.
அடுத்து நடந்தது எல்லாம் பாலாவும், அரவிந்தும் சேர்ந்து யோசித்து எடுத்த முடிவுகள் தான். கார்த்திக் குணமாகி வரும் வரை அமைதியாக இருந்தார்கள். அவன் மன நிலையில் முன்னேற்றம் ஆனதும் தான் திருமண ஏற்பாடுகளே நடந்தது.
கார்த்திக் மற்றும் ஸ்ரவந்தியின் விசயத்தைத் தவிர்த்து மற்றதெல்லாம் அரவிந்த் சொல்லிக் கொண்டிருந்தான் எல்லாரிடமும். கார்த்திக்கும் இதே செய்தியைத் தான் ஷ்ரவந்தியிடம் உள்ளே பேசிக்கொண்டிருந்தான்.
காலங்கள் தானே இதற்கு மருந்து.. யார் யாரை குற்றம் சொல்வது.. குறை இல்லாத மனிதர்கள் யாரும் இல்லையே, கடைசி வரை யாரும் குறையோடு இருப்பதில்லையே… அமராவதியும் மாறுவார் என்ற நம்பிக்கையோடு அந்த நொடி சந்தோசங்களை அனுபவித்துக் கொண்டிருந்தனர்…
அத்தியாயம்– 13
அழகுக்கு குழந்தை
அன்புக்கு அன்னை
அறிவுரைக்கு தந்தை
ஆற்றலுக்கு ஆசான்
உயிர்ப்பிற்கு உதரம்
உதிரத்திற்கு சகோதரம்
காதலுக்கு மனைவி
கனிவிற்கு கணவன்
ஆளுமைக்கு அரசு
தோழமைக்கு நட்பு
உறவாகும் சொந்தங்கள்
உயர்வாகும் பந்தங்கள்
“சிவா இன்னும் உள்ள என்ன பன்றீங்க… சீக்கிரம் வாங்க, உங்களுக்குத் தான் எல்லாரும் வைடிங்…” என்று கதவைத் தட்டிக் கொண்டிருந்தாள் சஷ்டிகா..
“ம்ச்… இருடி வரேன்… சும்மா நொய்யி நொய்யினுட்டு…” என அவளுக்கு மேல் கத்தியபடி கதவைத் திறந்தான்.
“எதுக்கு இப்படி கத்துறீங்க, சீக்கிரம் வாங்கன்னு தான் சொன்னேன்… கீழ என்னை இருக்க விடாம விரட்டி விடுறாங்க அத்தை.. போ.. போய் பாலாவைக் கூப்பிட்டு வான்னு.. நான் என்னமோ உங்களை பூட்டி வச்சிட்டு வந்த மாதிரி.. க்கும்..”
“வரேன்.. வரேன்னு சொல்லிட்டு இருக்கும் போது ஏன் கதவை அந்த தட்டு தட்டுற, அதான் கத்திட்டேன்.. ஏன் நீயும் தான் கத்துன, நான் எதுவும் சொன்னேனா.. இப்போ எதுக்கு எங்கம்மாவை இழுக்குற.. பாவம் அவங்க…” என்று அவளைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தவனை மொத்தியவள், கதவை தள்ளிக்கொண்டு உள்ளே போகப் பார்க்க, அவளை லாவகமாக மடக்கியவன் தனக்கு பின்னே கொண்டு வந்து, கதவை இழுத்துப் பூட்டி சாவியையும் தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.
“அதான் அம்மா கூப்பிடுறாங்களே, அங்க போலாம், ரூமுக்குள்ள போய் என்ன செய்ய போற…” என்றபடியே அவளைத் திருப்ப…
“ஹேய் என்ன பன்றீங்க… விடுங்க… எனக்கு உள்ள போகனும்.. என் கூடவே தான கிளம்புனீங்க… மறுபடியும் ரூமுக்குள்ள போய் என்ன செஞ்சீங்க…. அதுவுமில்லாம ஏன் டோர் லாக் பன்னீங்க… சொல்லுங்க சிவா…” என்று அவன் கைகளை விலக்க போராடியபடியே பேச,
“அதெல்லாம் தெரியும் போது தெரியும்… இப்ப ஃபங்க்ஷன் அட்டெண்ட் பன்னலாம்… வாங்க மேடம்…” விடாமல் கீழே அழைத்து வந்தான். இவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த அரவிந்த் ஸ்ருதியை கண்களால் தேட, அவளோ அமராவதியின் அருகில் அமர்ந்து தன் மருமகளை கொஞ்சிக் கொண்டு இருந்தாள்.
‘எல்லாருக்கும் எப்படி அமையிறாங்க, நமக்கு மட்டும் எப்படி அமையுது பாரு…’ என்று மனதுக்குள் அவளை வறுத்த படியே, கண்களில் கடுப்பைக் காட்டிக் கொண்டிருந்தான்.
“கார்த்திக், உனக்கு எதுவும் தீயிற ஸ்மெல் வருதா… எனக்கு வாமிட் வர அளவுக்கு வருது..” என அரவிந்தை சிவா கலாய்க்க,
“ஹா..ஹா… எனக்கும் கூட இப்ப ஸ்மெல் வருது கார்த்திண்ணா, காஞ்சிப் போய் கிடந்தா தானே தீயும்… நாங்க என்ன இவங்க மாதிரி காஞ்சி போயா கிடக்குறோம்..” என்று அரவிந்த் பதிலுக்கு கலாய்க்க,
“ஹேய் வேனாம்… ஹனிமூனுக்கு போயிட்டு வந்துட்டமேன்னு அதப்புல பேசுற, அதெல்லாம் எங்கிட்ட வச்சுக்காத மாப்ள, நாங்களும் போவோம்…” என்றவனின் கடுப்பைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் “போடா… போடா.. உனக்கு டியுஷன் வேனுமான்னு சொல்லு… ஃபீஸ் வாங்காம சொல்லித் தரேன்.” என்றதும், சிவா மீண்டும் முறைக்க, அதைக் காற்றில் விட்டவன், கார்த்திக்கிடம் திரும்பி “யூ நோ கார்த்திண்ணா இந்த காட் கனேஷ் இருக்காருள்ள, அவர் எப்படி ஞானப்பழத்தை டேக் பண்ணாருன்னு தெரியுமா..?” என்றதும் சிவா அவனை கொலைவெறியோடு முறைக்க,
“ஹா ஹா, எதுக்கு இப்போ முரைச்சிங்க் மச்சான்… நானும் அதே மாதிரி தான் எங்க ஃபஸ்ட் நைட் மேட்டரை டேகிள் பன்னேன். ஆனா சிலர் முருகன் பேரையே வச்சிட்டு, முருகன் மாதிரி உலகத்தையே சுத்தி வந்தும், ஒன்னும் கிடைக்காம அலையுறாங்க..” என்று மேலும் தன் நக்கலைத் தொடர,
“டேய்… என் தங்கச்சி வாழ்க்கை வீனா போனாலும் பர்வாயில்லன்னு, உன்னை சாவடிச்சிடுவேண்டா..” என அரவிந்தின் மேல் பாய இருந்த சிவாவைத் தடுத்து நிறுத்திய கார்த்திக், “விடு…விடு டா… அவன் உன்னைக் கிண்டல் தான் பன்றான், அதுக்கு ஏன் இவ்ளோ ரியாக்ஷன்.. அவன் நம்ம வீட்டு மாப்பிள்ளை அதை மனசுல வச்சுக்கோ…” என்று ஆரம்பிக்க, அதில் அரவிந்த் மீண்டும் சிவாவை நக்கலாய் பார்க்க…
‘போங்கடா….ங்க…’ என்று ஒரு பார்வையை அற்பமாய் அவர்களை நோக்கி வீசிவிட்டு, ஷ்ருதியிடம் சென்றான்.
அவன் செல்வதைப் பார்த்த அரவிந்த், ‘இவன் ஏன் அவக்கிட்ட போறான், எதுவும் சொல்லிக்கொடுத்து நம்ம வாழ்க்கையில சூனியம் வச்சுட போறான்.’ என்று மனதில அலறியவன், அதை வெளிப்படையாய் கார்த்தியிடமும் புலம்ப, அவனோ “இதுக்குத்தான் அவனை ரொம்ப சீண்டாதேன்னு சொன்னேன் கேட்டியா.. இப்போ பாரு… இனி சிவாக்கிட்ட பார்த்து இரு…” என்று கடுப்படித்து விட்டு சென்றான்.
அரவிந்தோ ‘இந்த மூனுங்களும் ஒரே மாதிரி தானே இருக்கும், கார்த்திண்ணா சப்போர்ட் பன்ற மாதிரி பன்னி, இப்படிக் கவுத்துட்டு போயிட்டாரே..” என்று நொந்து போனான், பார்வை மட்டும் ஸ்ருதியிடமே இருந்தது.
“அமரா… நல்ல நேரம் போகுது பாரு, குழந்தையைத் தூக்கித் தொட்டில்ல போட சொல்லு, மஹாலக்ஷ்மியே உனக்கு மூத்த வாரிசா வந்து பிறந்துருக்கா, எல்லாம் இனி சரியாகிடும்..” என்று வயதில் மூத்த பெண்மனி ஒருவர் சொல்ல,
“இதோ அத்தை..” என அவரிடம் சொல்லிவிட்டு, கார்த்தியைக் கண்களால் தேட, அவனும் சிவாவும் ஏதோ மும்முரமாகப் பேசுவது தெரிந்தது. அவர்களது ஒற்றுமையைப் பார்த்து, தான் அவர்களை பிரிக்க எண்ணீயதை நினைத்து மனதுக்குள் வருந்திக் கொண்டார்.
பின் அருகில் சென்று கார்த்திக்கின் தோல் தொட்டு, “கார்த்திக், நான் கூப்பிட்டது கேட்கல, நல்ல நேரம் முடியப்போகுது, வாங்க குழந்தையைத் தொட்டில்ல போடனும்..” என்றார் மிகவும் கனிவோடு.
“இல்லை.. கேட்கலம்மா… சரி வாங்க போகலாம்…. வாடா நீயும்….” என சிவாவையும் அழைக்க,
“பாருடா… உங்க கண்ணூக்கு நானும் தெரியிறேனே… மம்மி நீ பன்றது ஓவர் பார்த்துக்கோ…” என்று கிண்டலடிக்க…
அமராவோ சிவாவின் செய்கையை பொருட்டாக கூட கருதாமல் ‘போடா..போடா..’ என்ற பார்வையை பரிசளித்துவிட்டு, கார்த்தியின் கையைப் பிடித்து நடக்க ஆரம்பித்துவிட்டார். அவர் செய்கையில் சிவாவின் உள்ளம் எத்தனை நிம்மதியடைந்தது என்று அங்குள்ள, அவனை சார்ந்த அனைவருக்கும் தெரியும்.
“ம்ம்.. போலாம்மா…” என அமராவின் பின்னே வந்தவன், குழந்தையைக் கையில் வைத்திருந்த ஷ்ரவந்தியைப் பார்த்து மூச்சு விடவும் மறந்தான். முதன்முதலாக அவளைச் சேலையிலும், அதற்கேற்ற அலங்காரத்திலும் பார்க்கிறான். முன்னே இருந்ததற்கு அவள் உடல் மெலிவைக் காட்டினாலும், குழந்தைப் பிரந்ததும் உண்டாகும் அந்தப் பொழிவு, குடும்பத்தாரின் கவனிப்பு என அவள் இப்பொழுது நன்றாகவே மெருகேறியிருந்தாள்.
இப்படி மனைவியைப் பார்த்தவனுக்கு, அவளைத் தவிர அந்த இடத்தில் வேறெதுவுமோ, மற்றவர்களோ யாருமேத் தெரியவில்லை. கண்களில் காதல் வழிய, விழிகள் மூடாமல் அவளையேப் பார்த்திருந்தான்.
“ப்ரோ… திஸ் இஸ் நாட் யுவர் ஃபங்க்ஷன்… திஸ் இஸ் யுவர் பேபி ஃபங்க்ஷன்… சோ.. க்ளோஸ் த டோர்…” என்று அரவிந்த் கார்த்திக்கின் வாயை லேசாய் மூடுவது போல் சைகை செய்ய, மற்ற அனைவரும் சிரிக்க, கார்த்தியோ ஸ்ருதியை ஒரு பார்வைப் பார்த்து விட்டு, கொலைவெறியோடு அரவிந்தைப் பார்த்தான்.
“நோ.. நோ… கார்த்திண்ணா.. நான் உங்க உடன்பிறவா தம்பி, நீங்க பார்த்து வளர்ந்த பையன், என் ஆருயிர் பொண்டாட்டியோட பாஸ்மலர், உங்க ஒரே தங்கச்சிக்கு வாக்கப்பட்டு வாயில புண்ணான மாப்பிள்ளை, அண்ணன் தம்பி ரெண்டு பேரும் சேர்ந்து என் குடும்பத்துல கும்மியடிச்சிட்டு போயிடாதீங்கடா… நான் ரொம்ப பாவம்…” என்று கதறியவனை ஒருத்தரும் கண்டு கொள்ளவில்லை. ஸ்ருதி மட்டும் அடிக்கடி அவனை நமுட்டுச் சிரிப்போடு பார்த்து வைத்தாள். அதுவே அவன் வயிற்றில் புளியைக் கரைத்தது.
அந்த பெரிய வீட்டின் ஹாலில் நடுநாயகமாய் வீற்றிருந்தது. அந்தக் குடும்பத்தினரின் வாரிசுகளை முதன்முதலில் தாங்கும் தேக்குமரத்திலாலான தொட்டில். அன்னப்பறவையின் வடிவத்தில் அமைந்திருந்த அந்த தொட்டில் முழுவதும் அழகான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, உள்ளே பட்டு மெத்தை விரிக்கப்பட்டிருந்தது.
கார்த்தியும், ஷ்ரவந்தியும் குழந்தையை அந்த தொட்டிலில் இட்டு, “வர்ணா” என்று மூன்று முறை அழைத்து விழாவை ஆரம்பித்து வைத்தனர். அடுத்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குழந்தையின் பெயரைச் சொல்லி விழாவைக் கொண்டாடித் தீர்த்தனர்.
தங்கள் வெறுமையான வாழ்க்கையில் வண்ணங்களை வாரி இறைத்து வர்ணஜாலங்களை மாயங்களாய் செய்த மகாலக்ஷ்மிக்கு வர்ணா என்றுப் பெயரிட்டான் கார்த்திக். வீட்டிலும் இதையே சொல்ல, அவர்களுக்கும் மறுப்பு ஏதும் இல்லை. பிள்ளைகளீன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்து அமராவிற்கு தான் செய்த தவறின் அளவு புரிந்தது. சிவாவும், ஸ்ருதியும் அப்படி செய்யவில்லை என்றால், வீடே சூனியமாகி, கார்த்திக்கின் நிலை முற்றிலும் மோசமாகி, பாவத்திற்கு மேல் பாவம் சேர்த்திருப்போம் என்று தன்னையே நொந்து கொண்டார்.
அன்றைக்கு நடந்தது இப்போது மனக்கண்ணில் ஓடியது.. ஸ்ருதியும், லிங்கேஸ்வரனும் கிளம்பியதும், அவரால் அங்கே இருக்க முடியவில்லை.. கார்த்திக், சிவா, அரவிந்த் மற்றும் ஸ்ருதி நால்வரும் சேர்ந்து எடுத்த போட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தார். மனம் முழுவதும் கார்த்திக்கிற்கு செய்த துரோகமே படமாய் ஓடியது.. ‘அம்மா.. அம்மா என்று தனக்கு பின்னே திரிந்த அந்த ஐந்து வயது சிறுவன் தான் கண் முன்னே வந்தான்.
கண்களை இறுக மூடினாலும் போகவில்லை… அழுத முகமாய் அவனே வந்தான். மற்றவர்களீன் பேச்சைக் கேட்டால் வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து விடுவோம் என்று அந்த நொடி அவருக்கு புரிய, கார்த்திக்கையோ தன் பிள்ளைகளையோ ஒரு போதும் தன்னால் இழக்க முடியாது என்று தோன்ற, யாரிடமும், எதையும் சொல்லாமல், சிவாவிடம் சில விசயங்களைப் பேசிவிட்டு, அடுத்த ஐந்து மணி நேரத்தில் கார்த்திக்கின் மகளை, தன் வீட்டு முதல் வாரிசை கையில் வாங்கியிருந்தார். இப்படி ஒரு திருப்பத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. அமராவிடம் நிறைய போராட வேண்டியிருக்கும் என்று நினைத்த அனைவருக்கும் அத்தனை அத்தனை மகிழ்ச்சி.
அடுத்து அவர் சென்று நின்றது ஷ்ரவந்தியிடம்தான். அவளது கைகளைப் பிடித்தபடியே நின்றிருந்தார் சில நிமிடங்கள். பிறகு “உன் வாழ்க்கைல நடந்த அத்தனை இழப்புக்கும் நான் மட்டும் தான்மா காரணம். உன்னால என்னை மன்னிக்க முடிஞ்சா மன்னிச்சிடு, நான் ஏன் எதுக்கு இப்படி செஞ்சேன்னு என்னால காரணம் சொல்ல முடியல, ஏன்னா அந்த அமராவை எனக்கேப் பிடிக்கல. அவ்வளவு மோசமானவளா நான் இருந்துருக்கேன். தெரிஞ்சோ, தெரியாமலோ உங்கப்பா உங்களை விட்டுப் போக நான் காரணமாயிட்டேன். அப்போ இப்படியெல்லாம் நடக்கும்னு எனக்குத் தோனவே இல்ல. தப்புத்தான், ரொம்ப பெரிய தப்புத்தான். நானே என் பிள்ளைங்கள பிரிச்சுப் பார்த்திருக்கக் கூடாது.”
“’அம்மா.. அம்மான்னு’ என் பின்னாடி அலைஞ்சவனுக்கு துரோகம் பன்னிருக்க கூடாது. என் பையன் என் மேல வச்ச நம்பிக்கையை, பாசத்தை நானே கொன்னுட்டேன். என்னால அவன் பட்ட கஷ்டத்தை… ஐயோ… நான் எந்தளவுக்கு மோசமானக் கொடுமைக்காரியா மாறிப்போயிருக்கேன்… கடவுளே.. என் பிள்ளை என்னை மன்னிக்கனுமே.. இல்லை மாட்டான்… என்னை மன்னிக்கவே மாட்டான்..” சாதாரணமாய் பேச ஆரம்பித்தவர், பெருங்குரலெடுத்துக் கதற, சத்தத்தில் அழுத குழந்தையை எடுத்துக் கொண்டு பத்மா வெளியேற, அமராவின் தோளைத் தாங்கிப் பிடித்தது வேறு யாரும் இல்லை கார்த்திக் தான்.
“அம்மா.. ப்ளீஸ், நீங்க என்ன செய்தீங்க, உங்க மேல ஒரு தப்பும் இல்லை. எந்த அம்மாவும் தன் குழந்தையைக் கஷ்டப் படுத்த மாட்டாங்க, இப்படித்தான் ஆகனும்னு இருந்தா, அது நடக்கத்தான் செய்யும். தயவு செய்து எமோஷனல் ஆகாதீங்க.. ப்ளீஸ்..” என்று பலவாறு அவரைத் தேற்றி, அங்கே அனைவரிடமும் ஒரு மன்னிப்புப் படலத்தை முடிக்க, லிங்கேஸ்வரன், தனஞ்செயன், அரவிந்த் ஸ்ருதி என நால்வரும் வந்திறங்க, அந்த அறையே உறவினர்களால் சூழ்ந்து கிடந்தது.
பத்மா மட்டும் நடப்பதை அமைதியாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். மகள்களின் வாழ்க்கை சீராகிவிட்டது, அடுத்து அவர் என்ன செய்ய வேண்டும் என்ற யோசனை. நிச்சயம் மகள்கள் இருவரும் தன்னைத் தனியாக விடப்போவதில்லை. அதற்கு ஒரு போதும் அவர் சம்மதிக்கப் போவதில்லை, தஞ்சாவூருக்கே போவது தான் முடிவு. நாளைத் தன் பிள்ளைகளுக்கு தாய்வீடு என்பது கண்டிப்பாக வேண்டும் என்று நினைத்து அதில் உருதியாகவும் இருந்தார்.
அமராவும், லிங்கேஸ்வரனும் பத்மாவிடம், மன்னிப்பைக் கேட்க, அவர் “நான் பழசை மறந்துட்டேன், இதுதான் விதின்னா அதை யாரால் மாற்ற முடியும்’ என்று கூறி ஒதுங்கி விட்டார். பட்டும் படாமலும் பேசுவதில் இருந்தே அவரது கோபம் புரிய, சில நாட்கள் பொறுக்கத்தான் வேண்டும் என்று நினைத்து அமைதியாகிவிட்டனர். அடுத்த இரண்டு நாட்களில் அனைவரும் தாயகம் திரும்ப, அடுத்து வர நல்ல நாளில் குழந்தைக்குப் பெயர் வைத்து தொட்டிலில் இடும் விழாவை முடித்து, பத்மா தஞ்சாவூர் கிளம்புவதாக முடிவு செய்யப்பட்டது.
அன்று காலைதான் பெரியவர்கள் மட்டுமே சூழ நெல்லையப்பர்– காந்திமதி தாயாரின் சன்னதியில் கார்த்திக் ஷ்ரவந்தியின் கழுத்தில் பொன் மாங்கல்யத்தை அணிவித்தான். குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழா பற்றி பேச்சு வர, முதன் முதலாக பத்மா வாய் திறந்து பேசியது ஷ்ரவந்தியின் கழுத்தில் கார்த்திக் மாங்கல்யம் அணிவிக்க வேண்டும் என்பது தான்.
அதுவரை யார் கருத்திலும் உரைக்காதது அவர் கூறியதும் உரைக்க, விழா நாளன்று காலையில் திருமணமும் மாலையில் பெயர் சூட்டும் நிகழ்வும் நடத்தலாம்’ என்று முடித்தனர். அதன்படியே விழாவும் மிகவும் சிறப்பாக முடிய, தங்கள் பிள்ளைகளின் ஜோடிப் பொருத்தத்தை எண்ணி பெருமிதப்பட்டுக் கொண்டனர்.
விழாவிற்கு வந்த அத்தனை பேரின் பார்வையும் மூன்று ஜோடிகளின் மேலுமே விழ, அன்றிரவு அனைவரையும் நிற்க வைத்து திருஷ்டி பூசனிக்காயொன்றை சுற்றிப் போட வைத்துதான் அவர்களது அறைகளுக்குள் விட்டார் அமராவதி.
உள்ளே வந்த ஸ்ருதி, கொஞ்சமும் தாமதிக்காமல் அரவிந்தைப் போட்டு வெளுத்துக் கொண்டிருந்தாள். ‘என்னை மேரேஜ் செஞ்சு உனக்கு வாயெல்லாம் புண்ணா போச்சா.. இதெல்லாம் கேட்குற என்னோட காதுதாண்டா புண்ணா போச்சு..’ என்று அவனை மொத்த, ‘ஏய்.. இருடி.. விடுடி… ராட்சசி…’ என்று அவளிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தவவன், முடியாமல் அவளை இழுத்து இதழில் அழுத்தமாய் இதழ் பதிக்க, தினறி, தடுமாறி ஒரு வழியாய் அடங்கிப் போனாள்.
தன் ராட்சசியின் பேச்சை நிறுத்த அவனது முத்தத்தால் மட்டுமே முடியும் என்று அவனுக்குத் தெரியும். ஆழ்ந்து அமிழ்ந்துப் போனவளின் இதழை விட்டவன், தன் உதட்டால் செவிகளை உரசி, “லிப் கிஸ்ஸடிச்சா வாய் புண்ணாகாதா, அதைத்தான் சொன்னேன்..” என்று ஹஸ்கியில் பேச, “ம்ம்… ம்ம்” என்றபடியே அவனது அடுத்தக் கட்டத் தாக்குதலில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தாள் இம்சையின் ராட்சசி.
மகளுக்கு தன் உதிரத்தை உணவாக்கிக் கொண்டிருந்தவளை விழியெடுக்காமல் பார்த்திருந்தான். கைகள் குழந்தையை வருடினாலும், கண்கள் என்னமோ அவனையே தான் பார்த்திருந்தது. காதல் சொட்டும் பார்வை. நீ எனக்கு எந்த விளக்கமும் கொடுக்க வேண்டாம் என்பது போல் ஒரு பார்வை. உன்னை, உன் சூழ்நிலைகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்பது போல் ஒரு அர்த்தமான பார்வை. வாய்ப் பேச்சுத் தேவையில்லை அவர்களுக்கு, அவர்களது விழிகளே மௌனமாய் தங்களது கடந்து போன காலங்களில் நடந்த நிகழ்வுகளைப் பேசிக் கொண்டது. கடந்தது கடந்ததாகவே இருக்கட்டும், நடந்ததும் நடந்ததாகவே இருக்கட்டும், இனி நடக்கப் போவது மட்டும் நல்லதாகவே நடக்கட்டும். அவர்களது வாழ்க்கையும் நட்சத்திரங்களாய் ஜொலிக்கட்டும்….
“சசி…”
“ம்ம்ம்..”
“சரி..”
“ம்ம்..”
“தூங்கிட்டியா..”
“ம்ம்ம்ம்..”
“ஏய் அதுக்குள்ள தூங்கிட்டியா..”
“ம்ம்ம்..”
“ம்ப்ச்..” என்று சலித்தவன், அவனது அணைப்பை இறுக்க, அதில் அவளது உடல் குழுங்க, சிரிக்கிறாள் என்று தெரிந்து விட்டது அவனுக்கு. அணைப்பை இறுக்கியபடியே அவளது மேனியை தீண்ட, அதில் நெளிந்து திமிறியவள், அவனிடமிரிந்து வெளியேறி வாய்விட்டு சிரிக்க,
“ஹேய் சிரிக்காதடி… என் ஃபீலிங்க்ஸ் உனக்கு சிரிப்பா..” என்று மீண்டும் அவளைத் தனக்குள் கொண்டு வந்தவன், தன் தேடலைத் தேட துவங்க,
“ம்ம்..சிவா… ப்ளீஸ்… மறுபடியும் ஆரம்பிக்காதீங்க, நான் பேசனும்னு சொல்லும்போது விடாம உங்க காரியத்தை சாதிச்சிட்டீங்க, இப்போ மறுபடியும் போங்க… நீங்க..” என்று சினுங்கினாலும், அவனிடமிருந்து விலகவில்லை.
“ம்ம்..ம்ம்ம்… பேசலாம்.. பேசலாம்… இன்னும் கொஞ்ச நேரம்..” என்று ஆரம்பித்தவன், சில மணி நேரங்களில் அவளை விட்டு,
“நீ டயர்டா இருக்க, இப்பவும் பேசனுமா.. என்ன..?” என்று கண் சிமிட்ட
“ப்ராடு… ப்ராடு…” என்று கணவனை மொத்தியவள், “இன்னைக்கு சிவராத்திரின்னு தெரிஞ்சிடுச்சு, அப்புறம் எங்க தூங்க, எனக்கு நெறைய கேட்கனும், சோ எனக்கு சொல்லிட்டு நீங்க தூங்குங்க..” என்றபடியே அவன் மீதேறி அமர, அவனும் அவளை வாகாக பிடித்தபடி, “இப்படி கேட்டா என்னோட பதில் வேற மாதிரி தான் இருக்கும், உனக்கு ஓகே வா…” என,
“நோ வே..” என்று அவன் மீசையைப் பிடித்து ஆட்டியபடியே,
“எல்லாமே நீங்களூம், மாமாவும், தனாப்பாவும் சேர்ந்து போட்ட ப்ளான் அப்படித்தானே.. அரவிந்த் அண்ணாக்கு கூட தெரியல,கார்த்திக் அத்தானைப் பத்தி உங்களுக்கு முன்னாடியே டவுட் வந்துருக்கு, அதான் அத்தை அவரைப் பத்தி சொன்னதும் எதுவும் சொல்லாம, ஆனா அத்தைக்கு டவுட் வராம, அவரைப் பத்தி விசாரிச்சிட்டே இருந்துருக்கீங்க… அப்படித்தானே…” என்று மூச்சு விடாமல் கேட்க, அவனிடம் புன்னகை மட்டுமே பதிலாக இருந்தது.
அவன் சிரிப்பில் கடுப்பானவள், கையில் சிக்கியிருந்த மீசையை வேகம் கொடுத்து இழுக்க, அந்த வலியில் அவளைக் கீழேத் தள்ளி, இவன் மேலேறி, “வலிக்குதுடி பிசாசு…” என தன் மீசையை தடவி விட்டுக் கொண்டே, “நாங்க இங்க வந்து கொஞ்ச நாள்லயே எனக்கு எல்லாமேத் தெரியும், ஆனா அப்போ கார்த்திக் எங்க இருக்கான்னு தெரியாது, அவன் கிடைக்கவும் தான் எல்லாத்தையும் ப்ளான் பன்னனும்னு முடிவு பன்னேன்.”
“அரவிந்த் கிட்ட சொல்ரது பெரிய விசயம் இல்ல, அவன் ஸ்ருதிகிட்ட போய் கத்துவான், அவ அம்மாட்ட சண்ட போடுவா… அப்புறம் அம்மா கர்த்திக் மேல இன்னும் கோபத்த வளர்த்துப்பாங்க, அதான் அமைதியா எல்லாத்தையும் செய்ய வேண்டியதா போச்சு.. அதுவும் உன்னை டேக் பன்றது தான் எனக்கு பெரிய வேலையே, அன்னைக்கு மட்டும் உன்னை தனியா போக விட்டுருந்தா, என்னோட எல்லா ப்ளானும் சொதப்பி, ஏறுக்கு மாறா போய்ருக்கும்…”
“தனா அங்கிள் ரொம்ப ஹெல்ப் பன்னார், அப்பா மேல எனக்கு இருந்த கோபத்தை சொல்லி புரியவச்சதும் அவர்தான். ரெண்டு பேரும் எனிமிஸ் மாதிரி நடிக்க ஒத்துக்கவே இல்ல, ஆனா ஸ்ருதியும் அம்மாவும் நம்பனும்னு தான் ஒத்துக்கிட்டாங்க, அம்மாவோட நச்சரிப்புத் தாங்க முடியாம தான் வேற இடத்துல சம்மந்தம் பேசவே அப்பா கிளம்புனாங்க, அதுக்கப்புறம் நடந்தது எல்லாம் உனக்குத் தெரியுமே, அம்மா ஒன்னும் கெட்டவங்க இல்லடா, சொல்பேச்சுக் கேட்டு இப்படி ஆகிட்டாங்க, இப்போ திருந்திட்டாங்க, எப்படி இருந்தாலும் அவங்க என்னோட அம்மா… அவங்களை நீங்க தான் மரியாதையா நடத்தனும், எந்த சூழ்நிலையிலும் அவங்க செஞ்ச தப்பை சொல்லிக் காட்டி, குற்ற உணர்ச்சியைக் கொடுத்துடக் கூடாது… எனக்காக இதை செய்யனும் ப்ளீஸ்..” எனவும்,
உணர்வுப் பெருக்கோடு பேசியவனை இழுத்து, இதழோடு இதழனைத்து மீண்டுமொரு யுத்தத்தை அவள் ஆரம்பித்து வைக்க, அவள் செய்கையை எப்பொழுது தனதாக்கிக் கொண்டானோ…. ஈருடலும், ஓருடலாய் காதல் யுத்தத்தில் போரிட்டுக் கொள்ள, வெண்ணிலவு வெட்கம் கொண்டு, மறைந்து கொள்ள, கீழ்வானம் மெல்ல மெல்ல புலரத் தொடங்கியது போல் அவர்களது வாழ்வும் புலர ஆரம்பித்தது…
முற்றும்