Home Love - Family - Romanceஉனக்கெனப் பிறந்தவள் நானே – 19.

உனக்கெனப் பிறந்தவள் நானே – 19.

by infaalocious

பகுதி – 19.

கார்முகிலுக்கு தன் கையில் இருக்கும் கவரைப் பார்த்துவிட்டு, அவளைப் பார்க்கையில் முகத்தில் அத்தனை திகைப்பு, ஏமாற்றம். அது அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிய, அவளையும், அந்த கவரையும் மாற்றி, மாற்றி பார்த்தான்.

அவன் அப்படி அதையே பார்த்துக் கொண்டு நிற்பது அவளுக்கே ஒரு மாதிரியாகிப் போயிற்று. “என்ன அப்படியே நின்னுட்டீங்க?” அவனைச் சீண்டினாள்.

“ஏலியன்… இது… இது… நிஜமாவா?” அந்த நேப்கினை கையில் வைத்துக்கொண்டு பரிதாபமாக கேட்டான்.

“என்ன கேட்கறீங்க நீங்க? எவ்வளவு நேரம் இப்படி ஈரத்திலேயே நிற்க? முதல்ல அதை என்கிட்டே கொடுங்க” அவள் படபடக்க, நகர மறுத்த காலை நகர்த்தி நடந்து வந்து அதை அவளிடம் கொடுத்தான்.

“ஏய்… என்ன இது?” விட்டால் அழுதுவிடுவேன் என்பதுபோல் நின்றிருந்தான்.

“ஏன்? இது என்னதுன்னு உங்களுக்குத் தெரியாதா?” நக்கல் குரலில் கேட்டவள், அதை அவன் கரத்தில் இருந்து வெடுக்கென பிடுங்கிக் கொண்டாள்.

“அது இல்ல… சுமி… ம்ச்…” என்றவனது முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது. அவளோ இதழ்களுக்குள் புன்னகைத்துக் கொண்டிருக்க, அவனுக்கு கோபம் கூட வந்தது.

“என்ன?” புன்னகையோடு அவனைச் சீண்டினாள்.

“என்னன்னு உனக்குத் தெரியாதா? இங்கே பார்… என் நிலைமை தெரியாமல் விளையாடற?” என்றவன் செய்த செயலில் அவளிடம் அப்படி ஒரு அதிர்ச்சி.

“ஐயோ…” கிட்டத்தட்ட கத்தியவள், அவன் கரத்தில் இருந்து அந்த கவரைப் பிடுங்கிக் கொண்டு, அவன் முகத்திற்கு நேராக கதவை அறைந்து பூட்டினாள்.

இதயம் வெளியே விழுந்துவிடுவேன் என்னும் அளவுக்கு வேகமாக துடித்தது. கண்களை இறுக மூடிக்கொண்டு அவள் கதவின் மீதே சாய்ந்து நிற்க, கண்களுக்குள் அவன் ‘கோலம்’ விரிய, ‘யம்மா…’ என்ற அலறலோடு கண்ணைத் திறந்து கொண்டாள்.

“ஆப்பிரிக்கா க*தை… ஆப்பிரிக்கா க*தை… ஆப்பிரிக்கா க*தை…ன்னு நான் சும்மாவா சொல்றேன். ஐயோடா… நான் எப்படி தாங்குவேன்?’ வாய்விட்டே புலம்பிக் கொண்டாள்.

“ஏலியன்… ஏலியன்… சும்மா விளையாடற தானே…?” கதவை படபடவென தட்டி அவளிடம் கேட்டான். அவன் குரலில் தெரிந்த ஏமாற்றம் அவளைச் சுட, அவளுக்கோ சிரிப்பு.

“இல்ல… நல்லபிள்ளையா படுத்து தூங்குங்க… நான் கொஞ்ச நேரத்தில் வர்றேன்” அவள் சொல்ல, அவன் விலகிச் செல்வது அவனது காலடி ஓசையை வைத்து அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.

“அச்சோ… ரொம்ப படுத்தறோமோ?” தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.

“கொஞ்ச நேரம் தானே… பிறகு சர்ப்ரைஸ் பண்ணிட்டா போச்சு” குதூகலித்துக் கொண்டாள். அப்படி தான் அவனை சர்ப்ரைஸ் செய்கையில் அவனது முகம் எப்படி பூவாக மலர்ந்து போகும் எனவும், தன்னை எப்படியெல்லாம் கொண்டாடித் தீர்ப்பான் எனவும் அவள் கற்பனைகள் விரிந்தது.

ஆனால் இந்த நொடி அவன் மனதுக்குள் கவிழ்ந்த ஏமாற்றத்தின் அளவு எப்படி, எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அவள் புரிந்து கொள்ளாமல் போனாள். அப்படி தெரிந்திருந்தால் இப்படி ஒரு விளையாட்டை அவள் விளையாடிப் பார்த்திருக்கவே மாட்டாளே.

சுமித்ரா உள்ளே குளிக்கத் துவங்க, தன் உடைகளை கிட்டத்தட்ட கழட்டி விசிறி அடித்த கார்முகில், தலையில் கை வைத்துக் கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டான். நிஜத்தில் அப்படி ஒரு ஏமாற்றமாக இருந்தது.

அவள்மேல் கொள்ளை நேசம் வைத்துவிட்டான். எப்பொழுது அவளை முழுதாக காண்போம், அனுபவிப்போம் என அவன் உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லும் திணறித் தவித்துக் கொண்டிருக்க, ‘இப்படி’ என அவள் சொன்னால் அவனும் என்னதான் செய்வான்?

‘ஆண்டவா… நிஜமாவே என்னைப் பழி வாங்கறியா? இப்படி ஒரு அழகியையும் கொடுத்து, அவளை அனுபவிக்க கொடுக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்?’ அவனுக்கு கோபமாக, வெறுப்பாக வந்தது.

‘இங்கே இருந்து சென்று விடுவோமா?’ என அவன் சிந்திக்க, அப்படிப் போனால் வெளியே யாராவது தன்னைப் பார்த்துவிட்டால் பிரச்சனைதான் வரும் எனப் புரிய, அப்படியே அமர்ந்துவிட்டான்.

சுமித்ராவோ குளித்து முடித்தவள் வெளியே வந்து கண்டது, உள்ளாடையும், வெள்ளை பனியனோடும் அப்படியே தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த அவனைத்தான். நிச்சயம் அப்படி ஒரு கோலத்தில் அவனை அவள் எதிர்பார்க்கவே இல்லை.

அவன் அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்க்க, அந்த பார்வை அவளை என்னவோ செய்தது. “இதென்ன இப்படி உட்கார்ந்து இருக்கீங்க? குளிச்சுட்டு ட்ரஸ் மாத்தலையா?” அந்த வெள்ளை உள் பனியன் அவன் தேகத்துக்கு கொடுக்கும் கம்பீரத்தை உள்ளுக்குள் ரசித்து பார்த்தாள்.

“குளிச்சு மட்டும்…?” என்றவன் புயல் வேகத்தில் அவளை நெருங்கினான். அவள் ஒற்றை டவ்வலோடு மட்டுமே அவன் முன்னால் நிற்க, அவன் பார்வை அவள் வெற்று தோள்களில், கழுத்தின் கீழ் என அழுத்தமாக பதிந்தது.

அவன் அவளை இடித்துக்கொண்டு நிற்க, அவன் மொத்த தேகமும் அவள்மேல் உரச, அவனை முழுதாக உணர்ந்தாள். ‘முரட்டுப்பயலே…’ அவளுக்குள் அடிவயிற்றில் ஒரு அவஸ்தையான உணர்வு எழுந்து அவளை இம்சித்தது.

அவனுக்கோ தன்னை கொஞ்சம் கூட கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத நிலை. ‘அவள் வேண்டும்’ மனம் அதை மட்டுமே நினைக்க, அவளிடமிருந்து வந்த சோப்பு வாசனை அவனுக்கு அந்த நொடி பிடிக்கவில்லை.

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வேற வாசமா இருந்தா’ அவன் மனம் சொல்ல, அந்த அவளது வாசனை வேண்டும் என மனம் எதிர்பார்த்தது, ஆசைப்பட்டது. அவளுக்கோ அவன் போட்டிருந்த பாடி ஸ்ப்ரேயின் மெல்லிய வாசத்தோடு அவனது ஆண்மை வாசனையும் சேர, அப்படி ஒரு கிறக்கம்.

அவன் பனியனை அவள் கொத்தாக பற்றிக் கொள்ள, சற்று மூர்க்கமாகவே அவள்மேல் சாய்ந்து, அவள் மூக்கோடு மூக்கை உரசி, மீசை ரோமங்களால் அவள் இதழில் உரசினான்.

“சத்தியமா முடியலை… என்ன ஆனாலும் பரவாயில்லைன்னு உன்னை இப்படியே எல்லாம் செஞ்சுக்க சொல்லுது” அவளது இரு பக்கமும் சுவரில் கை ஊன்றி அவளை சிறை செய்தவாறு அவளோடு இழைந்தவன் குரல் கரகரக்கச் சொன்னான்.

அவள் இதழ்களோ மெல்லியதாக நடுங்கி, லேசாக திறந்துகொள்ள, அவன் மீசை ரோமத்தை பல்லால் மெதுவாக கடித்து இழுத்தாள். அவனுக்கு சுள்ளென வலித்தாலும், அவள் இதழ்களைத் தீண்டும் தைரியம் இன்றி அப்படியே நின்று இருந்தான்.

“இதை உன்கிட்டே இருந்து பறிக்க எனக்கு ஒரு நொடி கூட ஆகாது. ஆனாலும்… அதுக்குப் பிறகு…?” அவனது கரம் அவள் கட்டியிருந்த டவ்வலின் முடிச்சில் பதிய, அவள் பதறவெல்லாம் இல்லை. ‘முடிந்தால் செய்துகொள்’ என ஒரு பார்வையும், பாவனையையும் கொடுத்தாள்.

அது அவனுக்கும் புரிய, “கொஞ்சம் கூட பயமே இல்ல?” அவனது கரம் தானாகவே விலகிக் கொள்ள, அவ்வளவு நெருக்கத்தில் அவள் கண்களைப் பார்த்தவாறே கேட்டான்.

“எதுக்கு பயப்படணும்? ஐ’ம் யுவர்ஸ்…” என்றவள், “கிஸ் மீ…” என்றவாறு அவன் இதழை பூட்டிக்கொள்ள முயல, பட்டென அவளை விட்டு விலகி நின்றான். இப்பொழுது அவள் முகத்தில் அப்பட்டமாக ஒரு ஏமாற்றம் படர்ந்தது.

“ம்ஹும்… நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்… உன் இதழைத் தீண்டிவிட்டு என்னால் விலக எல்லாம் முடியாது. எனக்கு நீ மொத்தமா, முழுசா கிடைப்பன்னு தெரிந்தால்தான் அது என்னால் முடியும்” என்றவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக, மிகவும் அழுத்தமாக தன் இதழைப் பதித்தான்.

அதில் தெரிந்த அவன் வேட்கையில் அவள் தேகம் உருகியது. அந்த ஒற்றை முத்தம் அவள் உயிர் வரைத் தீண்ட, அவனோ நொடியில் அவளை விட்டு விலகிச் சென்றிருந்தான். அவன் செல்லவே, இரவு உடையை அணிந்தவள், அவனது வரவுக்காக காத்திருந்தாள்.

அவன் வந்தவுடன் அவனை நெருங்கி, அவனைக் கட்டிக்கொண்டு அவனிடம் உண்மையைச் சொல்லிவிட்டு, அவனோடு ஒன்றாக கலக்க வேண்டி அவள் காத்திருக்கத் துவங்கினாள். ஆனால் பாத்ரூமுக்குள் சென்றவனுக்கு வெளியே செல்லும் தைரியம் கொஞ்சம் கூட இருக்கவில்லை.

அவனுக்காக காத்திருந்தவளோ, ஒரு கட்டத்தில் கொஞ்சம் படுக்கலாம் எனப் படுத்தவள், இரவில் சரியாக உறங்காதது, இப்பொழுது ரிசப்ஷனில் நின்ற களைப்பு என எல்லாம் சேர நொடிகளில் உறங்கி இருந்தாள்.

குளித்துவிட்டு இடையில் கட்டிய டவ்வலோடு வந்தவன் கண்டது, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சுமித்ராவைத்தான். சில பல நொடிகள் நின்று அவளை அப்படியே பார்த்திருந்தான். அந்த மதி முகமும், தன் அறைக்குள் அவளும் என அவன் உணர்வுகள் கட்டுக்கடங்காமல் பொங்க, முயன்று தன் விழிகளை அவள்மீது இருந்து அகற்றிக் கொண்டான்.

‘இவளுக்கு இன்னைக்கு, அதுவும் இப்போ எப்படி தூக்கம் வருது?’ அவனுக்கு மூச்சு அனலாக வெளியேறியது. நிச்சயம் ஒரு மிகப்பெரும் ஏமாற்றம் மனதை அழுத்த, ‘அதுதான் அவ உன் வாழ்க்கைக்குள்ளே வந்துட்டா தானே… கிணற்றுத் தண்ணியை ஆற்று வெள்ளமா அடிச்சுட்டு போய்டும்? விடு…’ என தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான்.

உடை மாற்றியவன் அவள் அருகே படுத்துக்கொண்டு அவளையே பார்த்திருந்தான். பார்க்கப் பார்க்க என்னென்னவோ உணர்வுகள்… ‘இது வேலைக்கு ஆகாது’ எனப் புரிய, அவளுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்துக் கொண்டான்.

அவனுக்கு விளையாட்டு காட்டிய உறக்கம் விடியற்காலையில் அவனை நெருங்க அப்படியே உறங்கியும் போனான்.

நல்ல உறக்கத்தில் இருந்த சுமித்ராவுக்கு விழிப்பு வர, மெதுவாக இமைகளைப் பிரித்தாள். இமைகளை கசக்கிக் கொண்டு கண் விழித்தவள், ஒரு நொடி தான் இருந்த அறையை இமை சுருக்கிப் பார்த்தவள் மறு நொடி பட்டென எழுந்து அமர்ந்தாள்.

ஜன்னலின் வழியாக வந்த வெளிச்சமே நன்றாக விடிந்துவிட்டதைச் சொல்ல, வேகமாக சுவர் முழுக்க பார்வையை ஓடவிட்டாள். அவளை ஏமாற்றாமல் நேர் எதிர் சுவரிலேயே கடிகாரம் மாட்டப் பட்டிருக்க, நேரமோ காலை பத்துமணியைக் கடந்து காட்டியது.

அதைப் பார்த்தவளது விழிகள் தெறித்துவிடும்போல் விரிந்துகொள்ள, இதயமோ… ‘என்ன?’ என அதிர்ந்து அடங்கியது. வேகமாக தன் அருகில் பார்க்க, அங்கே கார்முகில் அவளுக்கு முகம் காட்டி படுத்திருந்தான்.

அவனது நெஞ்சுக்கூடு ஏறி இறங்கிய விதத்திலும், மூச்சுக்காற்று அத்தனை அழுத்தமாகவும் வெளியேற அவன் நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை அவளுக்கு உணர்த்தியது. இதயம் தாறுமாறாக துடிக்க, கண்கள் இரண்டும் கலங்கிப் போனது.

அவனை எழுப்ப நீண்ட கரங்களை சட்டென தன்னை நோக்கி இழுத்துக் கொண்டாள். அவன் முகத்தில் அப்பொழுதும் ஒரு சுணக்கம் விரவிக் கிடக்க, அதைப் பார்த்தவளுக்கு தன்னையே மன்னிக்க முடியவில்லை.

‘என்ன காரியம் செய்து வச்சிருக்கேன்?’ எண்ணியவளுக்கு கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது. ஒரு பத்து நிமிடங்கள் மட்டுமே அவனிடம் அவள் விளையாடிப் பார்க்க நினைத்தாள். ஆனால் அந்த விளையாட்டு விபரீதமாக முடிந்தது புரிந்தது.

‘தப்பு பண்ணிட்டேன்… ரொம்ப பெரிய தப்பு… இதை எப்படி சரி செய்யப் போறேன்?’ அவள் நினைக்க, அந்த தவறை சரி செய்யவே முடியாது என அவளுக்கு யார் சொல்வது? அப்படியும் அவனை எழுப்ப நினைக்க, ‘அவன் எப்பொழுது தூங்கினானோ தெரியலையே?’ எண்ணியவள் தன் நினைப்பை கைவிட்டாள்.

வெளியே தன்னைப் பெற்றவர்களின் குரல் கேட்பதுபோல் இருக்க, அதற்கு மேலே அறைக்குள் தாமதிக்க முடியாது என புத்தி இடித்து உரைத்தது. வேகமாக எழுந்து அவள் குளிக்கச் செல்ல, அவள் எழுந்து சென்ற வேகத்தில் படுக்கை அசைய அந்த அசைவில் அவன் கண் விழித்தான்.

அவனது பார்வை அவள் முதுகை வெறிக்க, அவனுக்கோ அப்பொழுதும் தன்னை நிலைப்படுத்த முடியவில்லை. அப்பொழுது எழுந்து அவள் முகத்தையும் காண முடியாமல் அப்படியே அவன் படுத்துக் கிடந்தான்.

‘ஏன்டா இப்படி ஃபீல் பண்ற? இன்னையோட இந்த உலகம் அழியப் போகுதா என்ன? இன்னும் ஒரு நாலு ஐந்து நாள் அவ்வளவுதானே… அதுக்காக இப்படி இருப்பியா? அவ மட்டும் சந்தோஷமாவா இருப்பா? நேற்று அவளை கிஸ் பண்ணச் சொல்லி எவ்வளவு ஆசையா கேட்டா.

‘நீதான் முடியாதுன்னு சொல்லி விலகி நின்ன. காலையிலேயே அவ மூடையும் ஸ்பாயில் பண்ணாதடா. அவகிட்டே சாதாரணமா பேசு…’ தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன் கொஞ்சம் மீண்டான்.

பத்தே நிமிடங்களில் குளித்து முடித்து அவள் வெளியே வர, அவன் படுக்கையில் எழுந்து அமர்ந்தான். “குட் மார்னிங் ஏலியன்?” அவன் சொல்ல, அவன் குரலைக் கேட்டு அவனைப் பார்த்தவளது கண்களில் அத்தனை பரிதவிப்பு.

“சாரி… நேற்று கொஞ்சம் அப்சட் பண்ணிட்டேன் தானே? அதுக்குத்தான் சாரி…” அவன் மன்னிப்பை வேண்ட, அவளுக்கு பதில் சொல்லக் கூட முடியவில்லை. தொண்டைக்குழிக்குள் எதுவோ அடைத்துக் கொண்ட உணர்வு.

“அது… அது… பரவாயில்லை… நான்…” அவனிடம் உண்மையைச் சொல்லிவிட மனம் பரபரத்தது. அவள் முகமே அதிர்ச்சியில் ஒரு மாதிரி சிவந்து போயிருக்க, கண்களில் தெரிந்த தவிப்பில் சற்று கவலையானான்.

“விடு… தப்புதான்… ரொம்ப எதிர்பார்த்தேனா… அதான் கொஞ்சம் மூட்ஆஃப் ஆயிட்டேன். இப்போ ஓகே தான்… நீ வெளியே போ, நானும் குளிச்சுட்டு வர்றேன்” என்றவன் பாத்ரூமுக்குள் செல்ல, அவள் உடை கூட மாற்ற முடியாமல் அப்படியே தோய்ந்துபோய் படுக்கையில் அமர்ந்துவிட்டாள்.

‘ஹையோ… நான் என்ன செய்து வைத்திருக்கிறேன்? அம்மாவும், அக்காவும் அவ்வளவு தூரம் படிச்சு படிச்சு சொன்னாங்களே. அதையெல்லாம் கேட்காமல் இப்போ இப்படி செய்து வைத்துவிட்டேனே?’ அவளால் தன்னையே சமாதானம் செய்துகொள்ள முடியவில்லை.

‘ஒரு ரெண்டு நிமிஷம் கண்ணை மட்டும் மூடிக்கலாம்னு யோசித்து செய்தது எத்தனை பெரிய பிழை?’ தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள். அதே நேரம் வெளியே ஏதோ சத்தம் கேட்கவே, வேகமாக தன்னை சுதாரித்தவள் எழுந்து உடை மாற்றினாள்.

அவளுக்கென அவன் ஆசையாக நிறைய உடைகளை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறான் என அவனே சொல்லியிருக்க, அவனது கப்போர்டை திறந்து பார்த்தாள். உள்ளே சில புடவைகள், குர்தாக்கள், மார்டன் உடைகள் என நிறைய இருக்க, ஒரு புடவையை தேர்வு செய்து அணிந்து கொண்டாள்.

அவள் புடவை கட்டி முடிக்கையில் அவன் வெளியே வர, அவனைப் பார்த்து புன்னகைக்க முயன்று தோற்றாள்.

“அடடா… இன்னும் அதையே யோசிச்சுட்டு இருக்கறியா?” அவன் கேட்கையில் அவர்களது அறைக்கதவு மிகவும் மெதுவாக தட்டப் பட்டது.

“நீ இரு, நான் போய் பார்க்கறேன்” என்றவன், “இதோ வர்றேன்” என குரல் கொடுத்துவிட்டு, ஒரு பெர்முடாசும், டிஷர்ட்டும் அணிந்து கொண்டவன் கதவை நோக்கி விரைந்தான்.

“சொல்லுங்கம்மா… இதோ வர்றோம்…” வெளியே நின்ற தாயிடம் அவன் சொல்ல,

“உன்னோட மாமனார் வீட்டில் இருந்து வந்து நேரமாகுதுப்பா, அதுதான் கூப்பிட வந்தேன்” இல்லையென்றால் உன்னை தொல்லையே செய்திருக்க மாட்டேன் என்ற விதத்தில் அவர் சொல்ல, மெல்லியதாக புன்னகைத்தான்.

“அதுக்கென்னம்மா நாங்க எழுந்துட்டோம், இப்போ வர்றோம்” என்றவன், உள்ளே வந்து தலையை துவட்டிவிட்டு, வேகமாக ட்ரையரைப் போட்டுக் கொண்டான்.

“நீயும் முடியை காய வச்சுட்டு வா… ஒன்றும் அவசரம் இல்லை, நான் அவங்ககிட்டே பேசிக்கறேன்” என்றவாறு அவன் வெளியே விரையப் போனான்.

“முகி… ஒரு நிமிஷம்…” உண்மையை அவனிடம் சொல்லிவிட தவித்தாள்.

“எல்லாமே நாம பேசிக்கலாம்… நீ வா… ரொம்ப நேரமாச்சு” கடிகாரத்தைப் பார்த்தவாறே அவன் சொல்லிவிட்டு வெளியே விரைந்துவிட்டான். அவன் என்னவோ இயல்பாக இருக்க, அவளுக்குத்தான் சுத்தமாக முடியவில்லை.

ஆனாலும் தன் யோசனையோடு அங்கேயே இருக்க முடியாதே. எனவே தானும் ட்ரையரால் தலை முடியை காய வைத்தவள், முடியை ஒதுக்கி சின்னதாக பின்னலிட்டுவிட்டு வெளியே வந்தாள்.

அவள் வெளியே வருகையில் கார்முகில் அவளைப் பெற்றவர்களிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். அவனைப் பெற்றவர்களும் அவனுடன் இருக்க, மெதுவாக நடந்து அவர்களை நெருங்கினாள்.

மகளைப் பார்த்தவுடன் அனிதா எழுந்து அவள் அருகே வர, தாயைப் பார்த்தவுடன் அவளது தவிப்பு இன்னும் அதிகரித்தது. அவள் தன் தாயின் கரத்தைப் பற்றிக் கொள்ள, மகளது முகத்தை ஆராய்ந்தார்.

“அம்மாடி… பூஜை ரூம்ல விளக்கேற்றும்மா” சுதா சொல்ல, கார்முகில் வேகமாக தாயின் முகம் பார்த்தான்.

‘அடடா… இப்படி சொல்லிட்டாங்களே… இப்படின்னு தெரிந்திருந்தால் வந்த உடனேயே அம்மாகிட்டே விஷயத்தை சொல்லி இருக்கலாம்’ அவன் நினைக்க, சுதாவோ மகனைப் பார்த்தார்.

“முகில்… நீயும் மருமக கூட போப்பா… சாமி படத்துக்கு விளக்கேற்றிவிட்டு கும்பிட்டுக்கோங்க. போ…” கார்முகில் அசையாமல் போகவே மீண்டுமாக அவனைப் போகச் சொன்னார்.

“அம்மா…” அவன் துவங்க,

“என்னங்க… வாங்க…” குரல் தன் முதுகின் பின்னால் இருந்து கேட்கவே சட்டென திரும்பி சுமித்ராவைப் பார்த்தான். ‘நிஜமாகவே அவளா அழைத்தாள்?’ அவன் யோசிக்கையிலேயே, “வாங்க…” அவள் மீண்டும் அழைக்க, அவன் கால்கள் தானாகவே எழுந்து கொண்டது.

அவன் பார்வை அதிர்ச்சியும், சிறு கோபமும்… ‘என்னை ஏமாற்றினாயா?’ என்ற கேள்வியுமாக அவளை வெறித்தது. அந்த பார்வையில் உள்ளுக்குள் மொத்தமாக நொறுங்கிப் போனாள். அவளால் அவனுக்கு என்ன சமாதானம் சொல்லிவிட முடியும்?

‘சாரி… சாரி…’ மனதுக்குள் புலம்பியவாறே கெஞ்சலாக அவனைப் பார்க்க, அவன் பார்வையில் அத்தனை உணர்வுகளும் துடைக்கப் பட்டு, முகம் மொத்தமும் இறுகிப் போனது. அவள் பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே அவனது அந்த மாற்றம் அவள் பார்வையில் பட்டு, அவளை நிலை குலையச் செய்தது.

“என்ன முகில் அசையாமல் அப்படியே நிக்கற… மருமக கூப்பிடறா பார், போ…” தாய் சொல்ல, நகர மறுத்த காலை நகர்த்தி அவளுக்கு அருகே சென்றான்.

“உள்ள போய் விளக்கேற்று சுமி” அனிதா சொல்ல, தன் கணவனோடு பூஜை அறைக்குள் நுழைந்தாள். அத்தனைபேர் முன்னிலையில் அவளால் அவனுக்கு என்ன விளக்கத்தை கொடுக்க முடியும்?

விளக்கை ஏற்றியவள், அங்கேயே விழுந்து வணங்க, அவனும் விழுந்து வணங்கியவன் வெளியே வந்தான். அவனோடு அவனுக்கு அருகே வந்தவள், அவன் கரத்தை மற்றவர்கள் அறியாதவாறு பிடிக்க, அவன் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

அந்த புன்னகையில் உயிர்ப்பு என்பது கொஞ்சம் கூட இருக்கவில்லை. அதைப் பார்த்தவள் உள்ளுக்குள் நொறுங்கிப் போனாள்.

You may also like

1 comment

kothai suresh March 27, 2026 - 5:21 pm

விளையாட்டு வினையாயிடுச்சு

Reply

Leave a Comment

About Me

Featured