Home Love - Family - Romanceஉனக்கென பிறந்தவள் நானே – 15.

உனக்கென பிறந்தவள் நானே – 15.

by infaalocious

பகுதி – 15.

கார்முகில் சுமித்ராவின் வீட்டுக்கு வந்த பொழுது அவள் வீட்டில் அவளைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. அவளது அம்மாவும் அப்பாவும் திருமணப் பத்திரிக்கையை தங்கள் ஊரில் இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டி சென்றிருந்தார்கள்.

அவனது தாய் சுமித்ராவிடம் உணவு கொடுக்கச் சொல்லி அனுப்பி இருக்கவே, அதைக் கொடுக்க வேண்டிதான் வந்தான். இன்னும் ஒரு மாதத்துக்கு உள்ளாகவே திருமணம் என முடிவாகி இருக்க, நாளுக்கு நாள் அவனுக்கு அவள்மேல் நேசம் பெருகியது.

அதை அவளிடம் வெளிக்காட்ட அவன் மறுக்க, அவளுக்கோ பெரும் கோபம். அன்று நடந்ததற்குப் பிறகு, அவன் அலைபேசியில் கூட அவளிடம் பேசாமல் போக, அவன்மேல் அவளது கோபம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

அவனுக்கோ ‘இவ எனக்கே எனக்கு…’ என்ற எண்ணம் கொடுக்கும் உணர்வுகளை அவனால் அடக்கவே முடியவில்லை. ஒவ்வொரு இரவும் அவளோடு அவன் வாழவே துவங்கி இருக்க, ஒன்று இரண்டு முறை அவளை உரிமையாக வேறு பார்த்து வைத்திருந்தான்.

அந்த பார்வைகளால் அவளிடம் அவன் சிக்கியும் இருக்க, அவளோடான தனிமைகளை முழுதாக தவிர்க்க விரும்பினான். கடந்த ஒன்று இரண்டு முறைகள் அவள் வீட்டுக்கு வந்திருந்த பொழுதும் அவளிடம் அவன் முகம் கொடுத்து பேசவே இல்லை.

அவளை நேருக்கு நேராக பார்ப்பதையே அவன் தவிர்த்திருக்க, அவளுக்கோ அத்தனை தவிப்பு. ‘ஏன் அப்போ எல்லாம் நல்லாத்தானே பார்த்தார், நாள் நெருங்க நெருங்க ஏன் இப்படி தள்ளிப் போகிறார்?’ என அவள் உள்ளுக்குள் யோசித்துக் கொண்டிருந்தாள்.

அழைப்புமணியை அழுத்தவே, அவள் வந்து கதவைத் திறக்க, வீட்டுக்குள் வந்தான். “எங்கே வீட்ல யாரையும் காணோம்?” அவன் உள்ளே வந்தவாறே கேட்டான்.

“அம்மாவும் அப்பாவும் இப்போதான் ஊருக்கு பத்திரிகை வைக்க கிளம்பிப் போனாங்க” அவள் பதில் கொடுக்கவே, அவனுக்குள் திடுமென ஒரு மாற்றம்.

“ஓ அப்படியா? அப்போ சரி, இதை அம்மா உன்கிட்டே கொடுத்துட்டு வரச் சொன்னாங்க, அதுக்குத்தான் வந்தேன். நான் கிளம்பறேன்…” அங்கே இருக்கும் ஒவ்வொரு நொடியும் கண்ணி வெடியின்மேல் கால் வைத்திருக்கும் உணர்வு.

“என்ன நீங்க? இப்போதான் வந்தீங்க, உடனே போகணும்னு சொல்றீங்க? காபியாவது குடிச்சுட்டுதான் போகணும்” அவள் பிடிவாதம் பிடித்தாள்.

“இல்ல, அதெல்லாம் எனக்கு எதுவும் வேண்டாம், வீட்ல காபி குடிச்சுட்டுதான் வந்தேன்” என்றவன் கிளம்புவதிலேயே குறியாக இருந்தான். வீட்டுக்கு என ஒரு லாங் ஸ்கேர்ட்டும், மேலே இறுக்கமான ஒரு டாப்பும் அவள் அணிந்திருக்க, அவன் பார்வை அவள் மேனியில் தழுவத் துடித்தது.

“முகி… என்னை ஏன் அவாய்ட் பண்றீங்க? எனக்கு ரீசன் தெரிஞ்சாகணும்” அவள் திடுமென குரல் உயர்த்த திடுக்கிட்டான்.

“என்ன? அப்படியெல்லாம் எதுவும் இல்லை…” சமாளிக்க முயன்றான்.

“இல்ல… கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் நான் பார்த்த முகி இல்லை நீங்க. நீங்க நடந்துக்கறதைப் பார்த்தால், என்னவோ என்னை கட்டாயத்துக்காக கல்யாணம் பண்ணிக்கப் போற மாதிரி இருக்கு.

“என்னைப் பிடிச்சு… எனக்காக இந்த கல்யாணத்துக்கு நீங்க ஒத்துக்கலையோன்னு எனக்குத் தோணுது. அழகுங்கறது நம்ம மனசுக்குப் பிடிச்சவங்க எல்லாமே அழகுதான்னு சொல்வீங்களே. எனக்கென்னவோ உங்க கண்ணுக்கு நான் அழகா தெரியலையோன்னு சந்தேகமா இருக்கு.

“அதைவிட நமக்குள்ளே ஒரு ஈர்ப்பு இருக்கறதாகவே எனக்குத் தோணலை. அதுவும் ஸ்பெஷலா… உங்களுக்கு என்மேலே அட்ராக்ஷன் வரவே இல்லையா? அப்படி ஒன்றும் கட்டாயத்துக்காக இந்த கல்யாணம் வேண்டாம்…” அவள் சொல்ல, அப்படியே அதிர்ந்து போனான்.

“என்ன? ஏய் ஏலியன்… என்ன சொன்ன?” நிஜத்தில் எதையும் தாறுமாறாக செய்துவிடக் கூடாதே என அவன் நினைத்தால், அவள் என்னவென்றால் அவள் தன்னை வசீகரிக்கவில்லையா எனக் கேட்டு வைத்தால் அதிராமல் என்ன செய்வான்?

“நம்ம ரெண்டு பேருக்கும் இன்னும் மூன்று வாரத்தில் கல்யாணம். எங்க வீட்ல யாரும் இல்லை, நாம தனியா இருக்கோம்… ஆசையா ஒரு பார்வை இல்லை, குட்டியா ஒரு நெருக்கத்தை காட்டலை, இங்கே இருந்து ஓடறதிலேயே குறியா இருக்கீங்க. அப்போ… நான் வேற என்னதான் நினைக்கட்டும்?” அவள் நியாயம் கேட்க, திகைத்தான்.

“ஏலியன், எல்லாம் உன் நல்லதுக்கு வேண்டிதான்… சொன்னா புரிஞ்சுக்கோ… நான் கிளம்பறேன்…” அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனது எல்லைக் கோட்டை கடக்கத் தூண்ட, அதை அவன் தவிர்க்க முயன்றான்.

“நான் இவ்வளவு சொல்றேன் அப்படியும்… போங்க…” என்றவள் கீழே சுபிதா.. குழந்தை பிறந்த பொழுது இருந்த அறைக்குச் சென்று மறைந்தாள்.

அவள் இப்படி கோபித்துக் கொள்ள அவனால் எப்படி செல்ல முடியும்? அவள் பின்னாலேயே சென்றவன், “என் நிலைமை புரியாமல் பேசிகிட்டு இருக்க ஏலியன். என்னை போக விடு… அதுதான் உனக்கு நல்லது” அவளை எச்சரித்தான்.

“என்னவோ என்ன என்னை ரேப் பண்ணிடுவீங்கங்கற அளவுக்கு பேசறீங்க. அந்த தைரியம் உங்களுக்கு இருக்கா? இல்ல அது எப்படின்னாவது தெரியுமா?” அவள் வார்த்தைகளை விட, அவன் நிலையை சொல்லவும் வேண்டுமா?

சும்மாவே உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருப்பவன், அப்படி இருக்கையில் அவள் இப்படிப் பேசி வைத்தால் அவனும் என்ன செய்ய?

“ஏலியன் வேண்டாம்…” எச்சரித்தான்.

“இல்ல எனக்குத் தெரிஞ்சாகணும்…” அவள் சொல்லி முடிக்கும் முன்னர் அவன் செயல்பட்டிருந்தான். அவளுக்கு காவலாக அரணாக இருந்த மேலாடை மொத்தமும் காணாமல் போயிருக்க, தன் தேகத்தில் உணர்ந்த சுள்ளென்ற வலியில் தான் நடப்பது இன்னதென அவளுக்குப் புரிந்தது.

“முகி…” அவன் செய்கையில் திகைத்து, பயந்து… கிட்டத்தட்ட அலறி இருந்தாள். இப்பொழுது அவன் கவனம் அவளை ஆண்டுவிடும் முனைப்பில் பதிய, பயந்து போனாள். அதுவும் கண்ணிமைக்கும் நொடியில் அவள் ஆடைகள் அவனிடம் தங்களை இழக்க, அவனது முரட்டுத் தனத்தை உணர்ந்தாள்.

“டேய்… ஆப்பிரிக்கா க*தை… என்ன பண்றீங்க?” அவளது அலறலில் தெளிந்தானா? இல்லையென்றால் வெளியே கேட்ட கார் சத்தத்தில் தெளிந்தானா எனத் தெரியவில்லை. சரேல் என அவளிடமிருந்து விலகி எழுந்தவன், அறைக்கு வெளியே பாய்ந்திருந்தான்.

திறந்திருந்த அறைக் கதவை தன் முதுகின் பின்னால் பூட்டியவன், ஒரே பாய்ச்சலில் அங்கே இருந்த சோபாவில் வந்து அமர்ந்துகொண்டான். அவள் ஆடைகளைக் களைந்தவன், தன் ஆடைகளைக் கலைக்க கூட இல்லை என்பதால் எதுவும் அங்கே தவறாகப் போகவில்லை.

ஆனாலும் அவளது ‘ஆப்பிரிக்க க*தை’ என்ற அலறல் காதுக்குள் ஒலிக்க, வேக வேகமாக தன்னை ஆசுவாசப்படுத்த முயன்றான். ஆழமாக மூச்செடுத்து, அங்கே சாப்பாட்டு மேஜைமேல் இருந்த தண்ணீரைப் பார்த்தவன் ஓடிப் போய் அதை எடுத்து குடித்தான்.

கொதித்துக் கிளம்பிய உணர்வுகள் அவன் வேகத்துக்கு இறங்க மறுக்க, அப்படியே சாப்பாட்டு மேஜையின் முன்னால் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

அதே நேரம் அனிதாவும் உள்ளே வர, செல்வமும் மனைவியின் பின்னால் வந்தார். “மாப்பிளையோட வண்டி வெளியே நிக்குது… ஒரு வேளை சுதா சாப்பாடு கொடுத்து அனுப்பி இருப்பாங்க” அனிதா சொன்னவாறே பார்வையை சுழற்றினார்.

“நான் இங்கே இருக்கேன் அத்த…” என்றவன் அங்கே இருந்த ஆரஞ்சு பழத்தை உரித்து சாப்பிடத் துவங்கினான்.

“நீங்க இங்க இருக்கீங்க, அவளை எங்கே? சுமி… சுமி…” அவள் மாடி அறையில் இருப்பதாக எண்ணிக் கொண்டு அனிதா குரல் கொடுத்தார்.

இங்கே கீழே அறையில் அவன் மூட்டிய நெருப்பின் கனல் அடங்காமல், போர்வைக்குள் புகுந்து சுருண்டிருந்தவள் தாயின் குரலை அந்த நொடி எதிர்பார்க்கவே இல்லை.

‘என்ன வேலை பார்த்து வச்ச சுமி? போச்சு… போச்சு… உன்னை முழுசா அவர் பார்த்துட்டார்… அது மட்டும் இல்லை. அவர் கொஞ்சம் நிதானத்தில் இல்லாமல் போயிருந்தாலும்…’ என எண்ணியவளுக்கு நேரவிருந்ததை நினைக்கவே தூக்கிப் போட்டது.

அந்த நேரம் அனிதாவின் குரல் கேட்க, வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள். வேகமாக பார்வையைச் சுழற்றி தன் ஆடை எங்கே எனத் தேடக் கூட அவகாசமின்றி, அங்கே பீரோவின் உள்ளே இருந்த சுபிதாவின் நைட்டி ஒன்றை எடுத்து அணிந்து கொண்டாள்.

அதன் பிறகே அங்கே அறை முழுக்க சிதறிக் கிடந்த தன் அத்தனை ஆடைகளையும் எடுத்து, வேகமாக கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்தாள். அவன் அடாவடியில் தேகம் நோவு கண்டிருக்க, ‘அம்மா எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்தாங்க?’ என எண்ணியவள் அங்கே இருந்த கண்ணாடியில் தன் முகம் பார்த்தாள்.

முகத்தில் ஒரு சின்ன மாறுதல் கூட இல்லாமல் போக, ‘அடப்பாவி, மொத்த டார்கெட்டும்…’ என எண்ணியவளை, “சுமி… இங்கே என்ன பண்ணிட்டு இருக்க? வெளியே மாப்பிள்ளை வந்து உட்கார்ந்து இருக்கார்.

“அவர் வந்து குரல் கொடுத்தது கூடத் தெரியாமல் இங்கே என்ன பண்ணிட்டு இருக்க? இப்படித்தான் கவனமில்லாமல் கதவைத் திறந்து போட்டுட்டு இருக்கறதா?” தாய் கேட்க, அப்பொழுதுதான் கார்முகில் இன்னும் அங்கேயே இருப்பது அவளுக்குப் புரிந்தது.

இப்பொழுது வெளியே சென்று அவனது முகத்தைக் காண முடியும் என்றே தோன்றவில்லை. அந்த தைரியம் அவளுக்கு கொஞ்சமும் இருக்கவில்லை. அவன் அவ்வளவு தூரம் செல்கிறேன் எனச் சொல்லியும் கேட்காமல் எல்லாம் செய்துவிட்டு இப்பொழுது எப்படி அவன் முகம் காணவாம்?

அவன்மட்டும் கொஞ்சமே கொஞ்சம் தெளிவாக இல்லையென்றால் இந்த நேரம் என்ன நடந்திருக்கும் எனப் புரிய தேகம் நடுங்கியது.

“வெளியே வா… மாப்பிள்ளை வந்திருக்கார் பார்…” தாய் அழைக்க,

“அம்மா, நான் தூங்கிட்டு இருக்கேன்னு சொல்லிடறீங்களா? ப்ளீஸ்ம்மா…” அவள் கேட்டுக் கொள்ள, மகளை ஒரு நொடி நின்று பார்த்தார்.

“என்ன சுமி, ஏன் உன் முகமே சரியில்லை? தலை வலிக்குதா? இல்லன்னா ஜுரம் அடிக்குதா? நாங்க கிளம்பும்போது நல்லாத்தானே இருந்த?” அவள் நெற்றி, கழுத்து என கை வைத்துப் பார்த்தார்.

“கொஞ்சம் தலை வலிம்மா…” தாய் சொன்னதை ஒட்டியே அவள் சொல்ல, அவள் முகம் ஒரு மாதிரி வெளிறிப் போயிருக்கவே அனிதா அதற்கு மேலே ஒரு வார்த்தையும் கேட்கவில்லை.

“சரி, நீ படுத்துக்கோ… நான் மாப்பிள்ளை கிட்டே சொல்லிடறேன்” என்றவர் வெளியே செல்ல, அப்படியே தோய்ந்து போய் படுத்துவிட்டாள். தேகம் மொத்தமும் உதறியது…  ஒரு நடுக்கம் ஓட, அவளால் முடியவில்லை.

வெளியே வந்த அனிதா, அவளுக்கு தலைவலி எனச் சொல்ல, கார்முகிலுக்கு இதயம் கிடந்தது அடித்துக் கொண்டது. அவளை நேரில் ஒரு நொடி கண்டுவிட்டால் பரவாயில்லை எனத் தோன்ற, அதை எப்படி அவர்களிடம் சொல்வது என்றும் தெரியவில்லை.

“அப்படியா? அப்போ நான் கிளம்பறேன், அவளைப் பார்த்துக்கோங்க…” என்றவன் மனமே இன்றி அங்கிருந்து சென்றான். அவர்களிடம் கேட்டு, அவள் முன்னால் சென்று நிற்க அவனுக்கு ஒரு நொடி கூட ஆகாது. ஆனால் தன்னைப் பார்க்க வேண்டாம் என அவள் தவிர்ப்பது புரிய, அதைச் செய்ய அவன் விரும்பவில்லை.

வீட்டிற்கு வெளியே வந்தவன் தன் அலைபேசியை எடுத்து, “ஏலியன், ஆர் யூ ஓகே?” எனக் கேட்டு ஒரு குறுந்தகவலை அனுப்பி வைத்தான். அந்த நேரம் அவளது அலைபேசி அவளது மாடி அறையில் இருக்க, அதை அவள் பார்க்கவே இல்லை.

அன்று மாலை வரைக்கும் அவள் அதைப் பார்ப்பாள், தனக்கு பதில் அளிப்பாள் என அவன் காத்திருக்க அது நடக்கவே இல்லை. அன்று மதியமே சுமித்ராவுக்கு ஜுரம் அடிக்கத் துவங்கி இருந்தது. பெரிய அளவில் இல்லை என்றாலும், உடல் சூடு நன்றாகவே இருந்தது.

‘ஹையோ… அவரோட பல்த்தடம் கொஞ்சம் அச்சு பதிந்து இருந்ததே, அதனால் வந்த ஜுரமா இது? டிடி இன்ஜெக்ஷன் போடணுமா?’ எண்ணியவளுக்கு எதுவும் முடியவில்லை.

‘கூகிள் செய்து பார்க்கலாம்’ என நினைக்க அப்பொழுதுதான் தன் அலைபேசி தன்னிடம் இல்லை என்பதையே உணர்ந்தாள்.

அனிதாவின் உறவினருக்கு பத்திரிகை வைக்கப் போக, அவர்கள் தேடிச் செல்லும் உறவினர்கள் வெளியூருக்கு ஒரு வேலை விஷயமாக போயிருப்பதாக சொல்லவே, வழியிலேயே திரும்பி விட்டார்கள்.

“என்ன சுமி ஜுரம்? அதுவும் திடீர்ன்னு எப்படி?” அவளுக்கு பொதுவாகவே உடலுக்கு எதுவும் வருவதே கிடையாது. அப்படி இருக்கையில் திருமணம் நெருங்கும் நேரம் இப்படி ஆகிவிட, அனிதா பெரும் கவலை கொண்டார்.

“எல்லாம் என் பொண்ணுக்கு திருஷ்டிங்க… சுத்திப் போடாமல் விட்டுட்டேன், அதான்… நாம ஊருக்குப் போகாமல் திரும்பி வந்ததும் நல்லதுக்குதான் போல…” தாயின் மடியில் அவள் சுருண்டிருக்க, அனிதா கணவனிடம் புலம்பினார்.

‘ஆமாம்மா… நல்ல வேளை நீங்க திரும்பி வந்தீங்க… இல்லன்னா…’ எண்ணியவளது உடல் உதறல் எடுக்க,

“சுமி… அம்மாடி… என்ன பண்ணுது? என்னங்க காரை எடுங்க, உடனே ஹாஸ்பிடல் போகலாம்” அனிதா படபடத்தார்.

அதைப் பார்த்த செல்வம், “டெம்பரேச்சர் அந்த அளவுக்கு இல்லை அனிதா… குழந்தை எதையாவது பார்த்து பயந்துட்டாளா கேளு” செல்வம் கேட்க, இமைகளை பட்டென இறுக மூடிக் கொண்டாள்.

‘அம்மாடியோ… அவர் மட்டும் இருந்த வேகத்தில் எனக்குள் ஊடுருவ முயன்று இருந்தால்…’ அடுத்த உதறல் அவளிடம் பிறக்க, அனிதா பயந்தே போனார்.

“என்னங்க, இது வேலைக்கே ஆகாது… வாங்க ஹாஸ்பிடல் போகலாம். உடம்பு அவளுக்கு தூக்கி தூக்கி போடுது” அனிதா எழ முயல, தாயின் இடையைக் கட்டிக் கொண்டாள்.

“கொஞ்சம் சூடா ஏதாவது குடிக்க குடுங்கம்மா, அது போதும். வேற எதுவும் வேண்டாம், தொடர்ந்து மூன்று வேளை மருந்து போட்டால் சரியா போய்டும். அப்படியும் சரி ஆகலன்னா பிறகு ஹாஸ்பிடல் போகலாம்” அவள் சொல்ல, மகளை செல்வத்தின் மடிக்கு இடம் மாற்றிவிட்டு கிச்சனுக்குச் சென்றார்.

அன்று அவர்கள் வெளியூருக்குச் செல்வதால், அன்னம்மாவை இன்றைக்கு வர வேண்டாம் எனச் சொல்லி இருந்தார்கள். சுமித்ராவுக்கு சுதா உணவு கொடுப்பதாகச் சொல்லி இருக்கவே, அதைத்தான் கார்முகில் அவளுக்கு கொண்டு வந்திருந்தான்.

அவன் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்ற கூடையில் இருந்த உணவைத்தான் அவர்கள் மதியம் சாப்பிட்டார்கள். மகளுக்கு கொஞ்சம் சூடாக வெஜிடபிள் சூப் செய்தவர், அதைப் பதமான சூட்டுக்கு ஆற்றி கொண்டு வந்து கொடுத்தார்.

அவள் அதை குடித்து முடிக்கவே, “அம்மா, நான் என் ரூமுக்கு போய் படுத்துக்கவா? என்றவள் அங்கே செல்ல முயல, அவளைத் தடுத்தார்.

“ஜுரம் அடிக்குது தானே, இங்கேயே அந்த ரூமிலேயே இரு…” அனிதா சொல்ல,

“என் ஃபோன் மேலே என் ரூம்ல இருக்கும்மா, அதை மட்டும் எடுத்துட்டு வர்றேன்” அவள் சொல்ல, அவளை அவர் தடுக்கவில்லை. தாய் கிச்சனுக்கு இரவு உணவு வேலையைப் பார்க்கப் போக, செல்வம் வீட்டுக்கு வெளியே செல்லவே, வேகமாக கீழே இருந்த அறைக்குள் சென்று தன் உடைகளை அள்ளிக்கொண்டு தன் அறைக்குச் சென்றாள்.

அந்த ஆடைகளைப் பார்க்கையிலேயே உள்ளுக்குள் என்னென்னவோ நினைவுகள் ஓட, அதை தன் கப்போர்டுக்குள் திணித்து மூடினாள். அதில் அப்படியே சாய்ந்து சில நொடிகள் நின்றவள், தன் அலைபேசி குரல் கொடுக்கவே சற்று கலைந்தாள்.

தன் அலைபேசியைப் பார்க்க, அதில் நிறைய குறுந்தகவல்களும், ஏகப்பட்ட அழைப்புகளும் கார்முகிலிடமிருந்து வந்திருந்தது. அந்த நேரம் அவனது அழைப்பை ஏற்று பேச முடியும் என்றே அவளுக்குத் தோன்றவில்லை.

அதை விடுத்தவள், தன் ஜுரத்துக்கான காரணம் அறிய வேண்டி, கூகிளின் உதவியை நாடினாள். மனிதர்களோ, விலங்குகளோ மனிதர்களைக் கடித்து பல் ஆழப் பதிந்து ரத்தம் துளிர்க்காத வரைக்கும் பயப்படத் தேவை இல்லை எனப் போட்டிருக்க, சற்று நிம்மதியானாள்.

அப்பொழுது மீண்டும் கார்முகிலிடம் இருந்து அழைப்பு வர, அதை விடுத்தவள், “Will Call” என தகவல் அனுப்பிவிட்டு அலைபேசியை அணைத்துப் போட்டாள். அது ஒரு லாங் வீக் என்ட் ஆகையால் அலுவலகம் செல்ல வேண்டும் என எந்த கவலையும் அவளுக்கு இருக்கவில்லை.

கார்முகில், அடுத்த இரண்டு நாட்கள், அவளிடமிருந்து அழைப்பு வரும் என எதிர்பார்த்து சோர்ந்து போனான். அவளிடமிருந்து அது வராமலே போக, அவன் அழைத்தால் அது அணைத்து வைத்திருப்பதாக வேறு சொல்ல, பயந்து போனான்.

வேகமாக அவன் செல்வத்துக்கு அழைக்க, அவர் அழைப்பை ஏற்றார். அனைவரின் நல விசாரிப்புகளுக்குப் பிறகு, “சுமி எப்படி மாமா இருக்கா? அவளுக்கு ஃபோன் பண்ணா ரீச் ஆகவே இல்லை” என நூல் விட்டான்.

“அதுவா மாப்ள, அன்னைக்கு நீங்க வந்துட்டுப் போனீங்களே, அன்னையில் இருந்து கண்ணம்மாவுக்கு ஒரே ஜுரம். ரொம்ப பெருசா இல்லைன்னு வச்சுக்கோங்க, ஆனா அதே நேரம் அவ நார்மலாகவும் இல்லை. அதனால் உங்க ஃபோனை எடுக்காமல் விட்டிருப்பா.

“நீங்க ஃபோன் பண்ணீங்கன்னு அவகிட்டே சொல்றேன், அவ உங்களுக்கு கூப்பிடுவா” அவர் சொல்ல, இந்தப் பக்கம் இவன் தவித்துப் போனான்.

“என்ன மாமா சொல்றீங்க ஜுரமா? என்கிட்டே சொல்லவே இல்ல?” கவலையானான்.

“உங்களையும் எதுக்கு கஷ்டப்படுத்தணும்னு சொல்லாமல் விட்டிருப்பா மாப்ள. அதென்னவோ அவளுக்கு என்ன கஷ்டம்ன்னாலும் நம்மகிட்டே சொல்லவே மாட்டா, அப்படியே வளர்ந்துட்டா. இப்போ நீங்க பதட்டப்படற அளவுக்கு எதுவும் இல்லை மாப்ள…” அவர் சொல்ல, அவன் சமாதானமாவானா என்ன?

“என்ன மாமா ஈசியா சொல்லிட்டீங்க? நான் வர்றேன்” என்றவன் அலைபேசியை வைத்துவிட்டு கிளம்பிவிட்டான்.

“அனிதா மாப்பிள்ளை வர்றார்… நம்ம பொண்ணுகிட்டே சொல்லு” செல்வம் சொல்ல, அனிதா மகளை அழைத்தார்.

“சுமி…” தாயின் குரலுக்கு மாடியில் இருந்து எட்டிப் பார்த்தாள்.

“உனக்கு ஜுரம்னு உங்க அப்பா மாப்பிள்ளை கிட்டே சொல்லிட்டார், அவர் கிளம்பி வர்றாராம்…” தாய் சொல்ல, சற்று பதட்டமானாள்.

“என்னப்பா நீங்க? நான்தான் அவர்கிட்டே சொல்ல வேண்டாம்னு சொன்னேன் தானே” தகப்பனை கடிந்து கொண்டாள்.

“அதெப்படிம்மா சொல்லாமல் இருக்க முடியும்? இப்போ நீ எங்களுக்கு மட்டும் பொண்ணு இல்லை, அவரோட சரி பாதி. அவருக்கே விஷயம் வேற வழியா தெரிய வந்தால், அப்போ ரொம்ப வருத்தப்படுவார். அதான் நானே சொல்லிட்டேன்… இப்போ என்ன? அவர் வந்து உன்னை பார்த்துட்டு போகப் போறார் அவ்வளவு தானே?” செல்வம் சுலபமாகச் சொல்ல, அது அவளுக்கு அத்தனை சுலபமா என்ன?

“சரிப்பா…” என்றவள் அறைக்குச் சென்றுவிட்டாள். எப்படி அவன் முகத்தில் முழிக்கப் போகிறோம் என அவளுக்கு சுத்தமாகப் புரியவில்லை.

‘வேண்டாம் என்னை விட்டுவிடு’ எனச் சொன்னவரை, ஒரு எக்ஸ்ட்ரீம் வரைக்கும் கொண்டு சென்றது அவள் ஆயிற்றே. ‘அதுவும்…’ இப்பொழுது கூட அதை நினைக்கையில் நெஞ்சம் நடுங்கியது.

அவனது முரட்டுத்தனமான அணைப்பு, அவனது புயல் வேகம், அவன் முன்னால் தான் இருந்த கோலம்?’ முகத்தை தன் கரங்களால் மூடிக் கொண்டாள். அவன் தேகத்தின் வெம்மை, சுள்ளென்ற ஒரு வலியும், கூடவே அலை அலையாக விரவிய அந்த உணர்வும், தகிப்பும்… அதை நினைக்கையிலேயே மூச்சடைத்தது.

அப்படி இருக்கையில் அவனை மீண்டும் நேருக்கு நேராக சந்திக்க முடியும் என்றே தோன்றவில்லை. அவள் யோசனையில் இருக்கையிலேயே கீழே அவனது கார் வரும் ஓசை கேட்க, தன்னை தயார் படுத்திக் கொண்டாள்.

அனிதா, செல்வத்தின் நல விசாரிப்புகள் முடிய, “சுமி…” அனிதா குரல் கொடுக்கவே,

“அவளுக்கு ஜுரம்னு சொன்னீங்க தானே… நானே போய் பார்க்கவா?” அவன் கேட்க, இன்னும் இரண்டு வாரங்களில் திருமணத்தை வைத்துக்கொண்டு அவர்கள் எப்படி மறுக்க? அதுவும் அவர்கள் கீழே இருக்கையில் அப்படி என்ன நடந்துவிடுமாம்?

“நீங்க போங்க… போய் பாருங்க மாப்ள…” செல்வம் சொல்ல, மாடிப் படிகளை இரண்டு இரண்டாக தாண்டிச் சென்று அவள் அறை வாயிலில் நின்றான்.

தாய் அழைத்த பிறகும், ‘எப்படி கீழே இறங்கிச் செல்வது?’ என்ற தடுமாற்றத்தில் இருந்த சுமித்ரா, கார்முகில் இப்படி தன் அறைக்கே வந்து நிற்பான் என அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை.

அவள் அனுமதி இன்றியே அவளது அறைக்குள் நுழைந்தவன், அறைக்கதவை அகலமாக திறந்து வைத்துவிட்டு, நிதான நடையோடு அவளை நோக்கிச் சென்றான்.

You may also like

Leave a Comment