Home Love & Romanceமுத்தமழை – 27

முத்தமழை – 27

by Vathani S

முத்தமழை – 27

சோர்வுடன் மலர்ந்து புன்னகைத்த மனைவியை மேலும் இறுக்கமாக அனைத்து கொண்டான் கர்ணன் 

மனைவியின் தோளில் முகம் புதைத்திருந்தவன், சில நிமிடங்கள் ஆகியும் நிமிராமல் இருக்க, “என்னப்பா.?” என ஆதரவாக கேட்டாள்.

‘ஹ்ம்ம்..’ என்றவன் ‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையை அசைத்தாலும், நிமிர்ந்து மனைவியைப் பார்க்கவுமில்லை கர்ணன்.

“என்னப்பா நீங்க.?” என கணவன் உணர்ச்சிவசப்பட்டிருப்பதை உணர்ந்து, அவன் முதுகை வருடி ஆசுவாசப்படுத்த,

“நீ எனக்கு கிடைச்சது, நம்ம கல்யாணம் நடந்தது, இதையே நான் இன்னும் கனவுன்னு நினைச்சுட்டு இருக்கேன்.. அதுக்குள்ள இன்னொரு அதிசயம் என் வாழ்க்கையில நடந்திருக்கு..” என்றான் கரகரப்பாக, 

“ஹ்ம்ம்..” என்ற மனைவிக்கு இப்போது பேச்சு வரவில்லை. 

“நீ என் வாழ்க்கையில் வந்ததே எனக்கு கிடைச்ச வரம்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா வரம் மட்டும் உனக்கு பத்தாதுடா, இந்த பொக்கிஷத்தையும் சேர்த்து, நீயே வச்சுக்கோன்னு, என் பொண்ணையும் எனக்கு கொடுத்திருக்கிறார் கடவுள்.. இது எல்லாமே உன்னால மட்டும்தான் சாத்தியமாச்சு அம்மு.. லவ் யூ டா அம்மு… லவ் யூ சோ மச்..”  என்றான் உணர்ச்சி பெருக்குடன்.

அதில் வல்லபி கணவனை காதல் பொங்க பார்த்து “பொண்ணா?” என வில்லென புருவத்தை உயர்த்த, மனைவியின் பார்வையிலும், பரிபாசையிலும் சொக்கித்தான் போனான் கர்ணன்.

“அம்மு.. இப்படியெல்லாம் பார்க்கக்கூடாது. நான் ஏற்கனவே சொக்கிப்போய் தான் இருக்கேன். நீ இப்படி பார்த்தா நான் என்னாவேன்..” என்றவனின் குரல் குழைந்து வந்தது.

“ம்ம்ஹ்ம்ம்..” என்று சினுங்கினாலும் பார்வை மாறவில்லை பெண்ணிடத்தில்.

அதில் கணவனுக்கு மோகம் முத்தாக முளைக்க, “அம்மு ஒரே ஒரு கிஸ் மட்டும் பண்ணிக்கிட்டா..?” என்றான் பெண்ணவளின் இடையில் அழுத்தத்தைக் கூட்டி, அனைப்பில் நெருக்கத்தை கூட்டி.

“ம்ச் பாவா.. போதும்..” என்ற வல்லபி கணவனின் மார்பில் முகம் புதைத்துக் கொள்ள, அவள் ‘போதும்’ என்பதை ‘வேண்டும்’ என்ற அழைப்பாக எடுத்தவன், மனைவியின் இடையின் அழுத்தத்தைக்கூட்டி, தன்னைப் பார்க்கச் செய்து, தன் பெருவிரலால் பெண்ணவளின் மென்னிதழை வருடத் தொடங்கினான்.

கணவனின் அனைப்பும், நெருக்கமும், அவனின் வருடலும் மங்கைக்குள் பித்தத்தை உண்டாக்கி, சித்தம் கலங்க செய்ய, பெண்ணின் விழிகள் கணவனுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக இமைகளை மெதுவாக போர்த்திக் கொண்டாள்.

மனைவியின் துடிக்கும் இதழ்களைப் பார்த்தவன் “அம்மு..” என காற்றான குரலில் அழைத்து, முதலில் அவள் காது மடலில் அழுத்தமாக முத்தம் பதித்து, அவளின் மோகத்தை தூண்டிவிட்டான்.

அதில் நடுக்கமே வந்துவிட்டது பெண்ணுக்கு. “பாவா..” என்ற மனைவியின் நடுங்கிய குரல் அவன் செவிகளில் எட்டவே இல்லை.

தன் நடுக்கத்தை மறைக்க, கணவனின் மார்புக்குள் ஒழிந்து கொள்ள போனவளை தடுத்து, அவளின் செவ்வதரங்களை வன்மையாக கவ்விக் கொண்டான்.

நீண்ட சில நிமிடங்கள் கழித்து அவளின் அதரங்களை விட்டாலும், அவளை விடவில்லை. 

தன் அனைப்பிலேயே வைத்திருந்தவன் “அம்மு ப்ளீஸ்.. இன்னும் ஒன்னே ஒன்னு டி. இந்த கிஸ்ஸெல்லாம் எனக்கு பத்தவே இல்ல..” என்றவனின் கரகரத்த குரலில் ‘அது உண்மைதான்’ என்று புரிந்து தான் போனது பெண்ணவளுக்கு.

“ப்ம்ச் பாவா போதும்.. இது நம்ம வீடு இல்ல..” என அவனை அடக்க,

“அப்போ வீட்டுக்கு போனதும் ஓக்கே வா… நோ சொல்லக்கூடாது..” என அவனும் பேரம் பேச,

“போதும் மேன் உங்க ரொமான்சும், எக்சைட்மென்டும்.. நீங்க பேசுறது எல்லாம் கேட்கும் போது எனக்கு.. அவ்வ் எனக்கு ஒரு மாதிரி ஷைய்யா இருக்குல்ல.. இன்னும் கல்யாணம் ஆகாத கன்னிப் பெண்கள் இருக்கும் இடம்னு உங்களுக்கு தெரியலையா.?” என அந்த அறையின் வெளியில் இருந்து சத்தம் மட்டும் வந்தது. அந்த குரலுக்கு சொந்தக்காரி வேறு யாரு? வழக்கம்போல வந்தனாவே தான்.

“முதல்ல இவளுக்கு ஒரு கல்யாணத்தை முடிச்சி துரத்தி விடனும்டி.. எப்போ பாரு நம்ம ரெண்டு பேருக்கும் இடைல டிஸ்டர்பன்ஸா வந்துடுறா..” என கர்ணனும் வழக்கம்போல பல்லைக் கடித்தான்.

‘நீங்க என்னமோ சொல்லிக்கோங்க’ என்பது போல் அசட்டையாக நின்ற வந்தனா “வல்லி உன்னை கூப்பிடுறாங்க..” என்றதும், கர்ணன் முறைத்துப் பார்த்தான்.

“பொய் சொல்லாதடி பக்கி.. நாங்க ரெண்டு பேரும் ஒன்னா இருக்கக்கூடாது. அதுதானேடி உனக்கு வேணும். அதுக்காக யாரும் கூப்பிடாமலே கூப்பிட்டாங்கன்னு வந்து பொய் சொல்வியா?” என கத்த,

“ஓ.. உங்களுக்கு தெரிஞ்சிடுச்சா..?” என பயம் வந்தது போல் நடித்தவள், “அதான் தெரிஞ்சிடுச்சு இல்ல.. இப்போ கிளம்புங்க.. நான் வல்லி கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும். வல்லி இல்லாம எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. மிஸ் யூ லாட் வல்லி..” என கொள்ளைக் கூட்டத் தலைவி போல் ஆரம்பித்து, குழந்தை போல் பாவமாக முடிக்க, உண்மையிலேயே கர்ணனுக்கு வருத்தமாகிவிட்டது.

“ஹேய் இதுக்கெல்லாம் ஃபீலாவியா? நீ மிஸ் பண்றேனு சொன்னா நான் உடனே கூப்பிட்டு வந்துருக்க போறேன்..” என வந்தனாவின் தலையை ஆட்டி சமாதானம் செய்ய,

“அதெல்லாம் தேவையே இல்ல. நானே வந்து பார்ப்பேன். ஆனா உங்க தாய்க்கிழவி வாய்தான் சரியில்ல. அவங்க மட்டும் பேசினா கூட பரவாயில்ல, உங்க தொங்கச்சி ஒன்னு இருக்கே உருண்டு புரண்டு பேசுமே, வெள்ளக்கலரு பாண்டா.. அது பேசினாதான் எனக்கு கடுப்பாகும். எங்க நான் கத்து வச்சிருக்கிற கராத்தேக்கும், குங்க்ஃபூக்கும் வேலை வந்துடுமோன்னு பயந்துட்டு வரதில்ல. அப்புறம் சீதாக்கிட்ட யார் அடி வாங்குறது..” என நீளமாக பேசி முடிக்க, கண்ணில் பொங்கிய நீருடன் சிரித்துக் கொண்டிருந்த மனைவியை ஆதுரமாக பார்த்தவன், வந்தனாவைப் பார்த்து பொய்யாக முறைத்தான்.

அதற்குள் ஹாலில் யாழினியின் பேச்சுக்குரல் கேட்க, “ஹேய் யாழி..” என்றபடி வந்தனா அங்கிருந்து ஓட,

“நிஜமாவே இவளை சமாளிக்கிறது கஷ்டம்தான் போல..” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேகமாக உள்ளே வந்த வந்தனா, “வல்லி.. இந்த யாழி பாப்பாக்கு நிறைய கிப்ட் வாங்கிட்டு வந்துருக்கா.. எனக்கும் வாங்கி கொடுக்கனும்னு ஆசையா இருக்குடி.. ஒரு டென் தௌசன்ட் ருபீஸ் ஸ்பான்சர் பண்ணுடி..” என பாவமாக கேட்க, ‘இதெல்லாம் திருந்தவே திருந்தாது’ என வல்லபி வந்தனாவை முறைத்துவிட்டு வெளியில் செல்ல, கர்ணனோ வெடித்து சிரித்தான்.

“யாழி அவளோட சேவிங்க்ஸ்ல வாங்கி தரா.. நீயும் வாங்கிக்கொடு.” என சிரிப்பினூடே பேச,

“அதுவும் சரிதான் மாமா. மாமா இதுவரை என்கிட்ட சேவிங்க்ஸே இல்ல மாமா. இப்போ மாமா, நீங்க எனக்கு கொடுத்து மட்டும் பாருங்க மாமா. நான் எப்படி சேவின்க்ஸ் பண்றேனு..” என ஒவ்வொரு வார்த்தைக்கும் மாமா போட, அதில் அசந்தவன் கையெடுத்து கும்பிட்டு “உனக்கு கொடுத்துட்டு, அவக்கிட்ட அடிவாங்கவா.. போடி.” என தலையில் தட்டிவிட்டு போய்விட்டான்.

“மாமா..” என கத்தியவள் “நம் முயற்சி அனைத்தும் வீணாகிவிட்டதே.. இன்னும் பயிற்சி தேவையோ..” என வடிவேலு பாணியில் தனக்குள் முனங்கியபடியே ஹாலுக்குள் சென்றாள்.

You may also like

Leave a Comment

About Me

Featured