Home Love - Family - Romanceமுத்தமழை -30

முத்தமழை -30

by Vathani S

முத்தமழை – 30

வாசலின் முன் நின்ற காரின் எஞ்சின் சத்தம் மெதுவாக அடங்கியது.

அந்த காலை நேர அமைதியில், அந்த சத்தம் மட்டும் அந்த வீட்டின் கவனத்தை ஈர்த்தது. இன்னும் முழுவதுமாக விழிக்காத வீடு, ஆனால் அந்த சத்தம், புதிய நாளை அறிவிக்கும் மணி ஒலி போலிருந்தது.

வாசலைத் திறந்து நின்ற சுமித்ரா, காரை நோக்கி ஒரு அடியளவு முன்னே வந்தாள்.

இந்த நேரத்தில் யார் வருவார்கள் என்ற கேள்வி அவளது மனதில் எழுந்தது. சொல்லாமல் வருவது யார்? அந்த எண்ணமே அவளது இதயத் துடிப்பை வேகப்படுத்தியது.

கதவு மெதுவாக திறந்தது.முதலில் வெளியில் வந்தது ஒரு மென்மையான பாதம். பின் புடவையின் முந்தானை காற்றில் அசைந்தது. அந்த அசைவிலேயே அது யாரென்று புரிந்து போனது.

அதற்குள் அடுத்த பக்கம் இருந்து இறங்கியவரைப் பார்த்து சிரிப்பு வந்தது.“பாவம் பாட்டி..” என தனக்குள் சிரித்தக்கொண்டே “வாங்க பாட்டி” என்றாள்.

“வராம எங்க போக..? இனி இவ கூட எங்கேயும் போகக்கூடாது சுமி.. விடிஞ்சும் விடியாம இழுத்துட்டு வந்துட்டா, நான் கொஞ்சம் படுக்கிறேன்.. 10மணிக்கு மேல எழுப்பு..” என முறைத்துக் கொண்டே உள்ளே செல்ல, சுமியின் சிரிப்பு விரிந்தது.

அதே சிரிப்புடன் சுமித்ராவின் உதடுகள் “இறங்கி வா வல்லி…” என உரிமையாக அழைத்தது.

காரிலிருந்து முழுவதுமாக இறங்கியவள், ஒரு நொடி நேராக நின்றாள். பயண சோர்வு அவள் முகத்தில் தெரிந்தது.

ஆனால் அவள் கண்களில் மட்டும் உயிரோட்டம். அந்த வீடு… அவள் கணவனின் வீடு… அவள் வாழ வேண்டிய இடம், அவள் வாழ வேண்டிய வீடு..வாசலை நோக்கி அவள் பார்வை சென்றது. ஒரு நொடி, அந்த வாசல் அவளை வரவேற்கிறதா அல்லது சோதிக்கிறதா என்ற கேள்வி ஆழ் மனதில் தோன்றியது.

ஆனால் அடுத்த நொடியே அவள் முகம் மலர்ந்து சிரித்தாள். இது அவள் கணவனின் வீடு, அது எப்போதும் அவளை சோதிக்காது என்று தெரியும்.“என்ன சுமிக்கா… இப்படி பார்த்துட்டே இருக்கீங்க?” என்றாள் மெதுவாக.அந்த குரல், அதிலிருந்த வெட்கமும் தயக்கமும் சுமிக்கு மேலும் புன்னகையை கொடுத்தது.சுமித்ரா சிரித்தாள்.“இப்படி காலையிலேயே சர்ப்ரைஸ் குடுக்கணும்னு யாரு சொன்னது?” என்றாள்.வல்லி தன் தோளை குலுக்கியப்படியே, “அவருக்குத் தெரியாது சுமிக்கா… எனக்கு தான் வரணும்னு தோணிச்சு வந்துட்டேன்.”அந்த வார்த்தைகள் சாதாரணமாக இருந்தாலும், அதன் பின்னால் ஒரு உண்மை இருந்தது, அவளால் காத்திருக்க முடியவில்லை. இந்த வீட்டை மிஸ் செய்கிறாள், இல்லை இல்லை. அவனை மிஸ் செய்கிறாள்.அது அப்பட்டமாகவே அவள் சிவந்த முகத்தில் தெரிந்தது.“எப்படி விட்டாங்க..?” என அடுத்த கேள்வியை கேட்டாள்.“ரொம்பவே கெஞ்ச வச்சுட்டாங்க.. ஹ்ம்ம் சீதாம்மாவை கூட சமாளிச்சிட்டேன். இந்த வந்தனாவை தான் சமாளிக்க முடியல..” என்றாள் சிரிப்பு கலந்த பெருமூச்சுடன்..“நேத்து பார்த்தேனே.. அத்தையை கூட விட்டு வைக்காம கலாய்ச்சிட்டு இருந்தாளே..” என்ற சுமிக்கும் சிரிப்பு..“ஹ்ம்ம் க்கா.. என்னை ரொம்ப மிஸ் பண்றா, அதான் இவ்ளோ பீலிங்க்ஸ்..”“அப்போ கூப்பிட்டு வந்துருக்கலாமே..”“அப்புறம் இங்க தினம் ஒரு பஞ்சாயத்து நடக்கும்.. நமக்கு அதை தீர்த்து வைக்கிற தெம்பு இல்லக்கா..”“அதுவும் சரிதான்.” என்ற போது இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.அதே நேரத்தில் மாடிப்படியில் ஒரு காலடிச்சத்தம் கேட்டது.அவள் நினைவுகளில், கனவுகளில், நிஜங்களில் என அனைத்திலும் உயிரோட்டமாய் கலந்தவன், அவளை நோக்கி இறங்கி கொண்டிருந்தான்.காலை வெளிச்சம் அவன் முகத்தின் ஒரு பக்கத்தில் மட்டும் விழுந்தது. அவன் அசையாமல் நின்றான்.கீழே, அவனின் ஆருயிர் மனைவி. பேச்சு மும்முரத்தில் அவள் அவனைப் பார்க்கவில்லை. ஆனால் அவன் பார்வை அவளிலிருந்து விலகவில்லை.மூன்று வருடங்களுக்கு முன் பார்த்த அந்த பெண். இன்று அவனின் மனைவி, மிஸஸ் வல்லபி கர்ணன்.! அவன் குழந்தையை சுமக்கும் அன்பான, அழகான தாய்.!நினைக்கும் போதே அவன் கை கர்வமாக தன் மீசையை நீவிக் கொண்டது.அவனின் மெய் சிலிர்த்து அடங்கியது.கர்ணனை முதலில் கவனித்த சுமி “மாமா…” என்று மேலே பார்த்தாள்.வல்லி தலை நிமிர்ந்து ஆர்வமும், வெட்கமுமாக அவனைப் பார்த்தாள்.இருவரின் பார்வையும், ஒன்றோடொன்று மோதி நின்றது.ஒரு நொடி சத்தமில்லாத உரையாடல்.‘நீ வந்துட்டியா?’‘உங்ககிட்ட வராம, என்னால இருக்க முடியுமா?’ என இருவரும் பார்வையிலேயே கேள்வி கேட்டு பதிலளித்து கொண்டனர்.வல்லியின் கண்களில் மென்மையான ஈர்ப்பு. கர்ணனின் கண்களில் அடக்கப்பட்ட மகிழ்ச்சி.அவன் விரைந்து கீழே வரவில்லை. ஓடி வரவில்லை. அவன் அமைதியாக படிகளில் இறங்கினான். அந்த அமைதியே அவன் உள்ளம் எவ்வளவு கலங்கியிருக்கிறது என்பதை மறைக்க முயன்றது.ஒவ்வொரு படியும் இறங்கும் போது, அவன் பார்வை அவளை விட்டு விலகவில்லை. நேற்றைய சோர்வு இன்றும் அவளுக்கு இருக்கிறதா என்று ஆராய்ந்தான்.கண்களில் அப்பட்டமாக சோர்வு தெரிந்தது. அதை கவனித்ததும் சற்று கோபம் கூட வந்தது.மனைவியின் முன் வந்து நின்றான்.“சொல்லாம வந்துட்ட?” என்றான்.கோபம் இல்லை. ஆனால் ஒரு சிறிய குற்றச்சாட்டு. அது கணவனின் உரிமை, ஆதங்கம்.வல்லி மெல்ல சிரித்தாள்.“நானே அங்க தான் கிளம்பிட்டு இருந்தேன்?” அவன் காதுக்குள் முனுமுனுத்தான்.“எனக்கு உங்களை உடனே பார்க்கணும் போல இருந்தது..” அவளும் முனுமுனுத்தாள்.“ஹ்ம்ம் அதுக்காக இந்த மாதிரி நேரத்துல, இப்படி கிளம்பி வருவியா.. யார் கூட வந்த..?” என்றான் சற்றே இயல்பிற்கு திரும்பி கடுப்பாக,“ம்ச் எதுக்கு இப்போ கத்துறீங்க, அப்பா கூட வந்தேன்.. அவர் எங்களை விட்டுட்டு அப்படியே கிளம்பிட்டார். ஈவ்னிங் வரேன்னு சொன்னார்..” என அவளும் கடுப்பாக ஆரம்பிக்க,சுமித்ரா மெதுவாக அங்கிருந்து பின்வாங்கினாள். அந்த தருணம் அவர்களுக்கே உரியது. அவளுக்கு புரிந்தது.காலை ஒளி மேலும் அந்த வீட்டிற்குள் பரவியது. வாசல் முன் நிற்கும் இருவரையும் சுற்றி, அந்த ஒளி ஒரு மென்மையான வளையம் போல சுற்றி படர்ந்தது.சூழ்நிலை காரமாவதை உணர்ந்து “ஏன் இவ்ளோ ரிஸ்க்.. டயர்டா இல்லையா?” கர்ணன் மெதுவாக கேட்டான். “ஆமாம்…” என்றாள் வல்லி உண்மையாக. மறைக்கவில்லை.“ஆனா… இங்கே வந்ததும், உங்களை பார்த்ததும் சரியாகியிடுச்சு.” என்றாள் மலர்ந்து.அந்த ஒரு வரி அவன் உள்ளத்தை நெருடியது. அவள் சொன்னது உடல் சோர்வு பற்றியதல்ல. அவள் மனம் — அவன் அருகில் தான் அமைதியடைகிறது என்ற உண்மை.அவன் சொல்லாமல் திரும்பி பார்த்தான் சுமி அங்கு இல்லை.“வா.” என கைகளில் அள்ளிக்கொண்டான்.“மிஸ் யூ லாட் பாவா..” என்றவாறே அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.“ஹ்ம்ம்..” என்றவனும் தன் தேகத்தின் சூட்டை அவளுக்கு கொடுத்து, அவள் உடலின் குளுமையை தான் வாங்கிக் கொண்டிருந்தான்.“இது ஹால்..” என மெல்ல கிசுகிசுக்க,“ம்ம் ஆமாம் இது ஹால். நாம, நம்ம அந்தபுரத்துக்கு போய்டலாம்..” என மனைவியோடு படியில் ஏற ஆரம்பித்தான்..அதே நேரத்தில், ஓர் அறையின் கதவு மெதுவாக திறந்தது.ராஜலக்ஷ்மி தான்.! அவர் அங்கேயே நின்றார். யாரும் கவனிக்காமல் வாசல் அருகே நின்று, படியேறும் இருவரையும் பார்த்தார். பார்த்துக் கொண்டே இருந்தார். அவரது முகத்தில் சிரிப்பு இல்லை. கோபமும் இல்லை.ஆனால் அவரது கண்கள் கணக்கிட்டன.அவள் வந்துட்டாளா…இவ்வளவு சீக்கிரமா…இந்த வீட்டில் இவளுக்கு, இவ்வளவு உரிமையா…வல்லி அந்த பார்வையை கவனிக்கவில்லை.கர்ணன் கவனிக்கவில்லை.சுமித்ரா மட்டும் கவனித்தாள்.அவளது உள்ளத்தில் ஒரு குளிர் பயம் ஓடியது.இனி அத்தை அமைதியாக இருக்கமாட்டார் என்று சுமித்ராவிற்கு புரிந்தது. அதே நேரம் “சுமிக்கா…” என்றாள் வல்லி திரும்பி.“எனக்கு ரொம்ப பசிக்குது.” என்றாள் சிறுபிள்ளை போல.அந்த சின்ன, இயல்பான வார்த்தை, அந்த வீட்டில் ஒரு சாதாரண நாளை, அழகாக ஆரம்பித்து வைத்தது போல இருந்தது.“எனக்கு தெரியும்.. நான் எடுத்துட்டு வரேன்..!” என்றாள் சிரிப்புடன்.வல்லியும் சிரித்தாள். அந்த சிரிப்பில் நன்றி இருந்தது. உரிமை இருந்தது. இந்த உறவை அவள் சாதாரணமாக விடமாட்டாள் என்பதற்கான, அமைதியான உறுதி இருந்தது.கர்ணன் அவளை ஒரு நொடி பார்த்தான். அவள் இந்த வீட்டில் எவ்வளவு எளிதாக கலந்து விடுகிறாள். அவன் உள்ளத்தில் ஒரு அமைதி பரவியது. அவன் அறியாமலே ஆழமாக மூச்சை எடுத்து விட்டான். அவள் அருகில் இருந்தால் தான் அவனுக்குள் ஓடும் பதட்டங்கள் அடங்கும் போல.வாசலுக்கு வெளியே காலை சூரியன் முழுவதுமாக உதித்திருந்தான்.அறைக்குள் நுழைந்ததுமே, மனைவியை இறக்கி கூட விடவில்லை, அவள் அதரங்களை, தன்னிதழ் கொண்டு ஆராய ஆரம்பித்திருந்தான்.கணவனின் செய்கை, அவளை மேலும் மேலும் இளக்க, அதுவரை அவன் தானே முத்தமிட்டுக் கொண்டு இருந்தான்..இப்போது அவளும் பதிலுக்கு முத்தமிட ஆரம்பித்தாள்…“பேபி.. பேபி..” என அவன் பிதற்ற, அவள் கண்களோ மெதுவாக மூடிக் கொண்டன…முத்தத்தை விடாமலே கட்டிலில் அமர்ந்து, அவளை தன் மடியிலமர்த்தி, வசதியாக மீண்டும் முத்தமிட ஆரம்பித்தான்.அதுவரை தொய்ந்து இருந்த அவள் கரங்கள் மெதுவாக மேலே எழுந்து அவன் பின்பக்க சிகையை பற்றி நெறித்தது.கணவனின் கரமோ, அவளுக்கு முத்தமிட்டுக் கொண்டே, அவள் மேனியில் பயணத்தை தொடர, மனைவியானவளோ உணர்வுகளின் ஆர்ப்பரிப்பில் நிலை குலைந்து போனாள்…அவனுக்கோ அவளை மொத்தமாக கொள்ளையிடும் வேகம்…இது.. இது மட்டுமே அவனுக்கு போதாது.. அவள் மொத்தமாக அவனுக்கு வேண்டும். ஆனால் சூழ்நிலயும், அவளின் உடல்நிலையும் அதற்கு ஒத்தபோகாதே..உடல்நிலை என்றதும் சட்டென அவன் உணர்வுகள் வடிய, “சாரி, சாரி அம்மு..” என பதற,அவளோ ‘இப்போ என்னாச்சு?’ என்பது போல் புருவம் சுருக்க,“அது.. அது இந்த மாதிரி நேரத்துல..” என பயந்து கொண்டே கேட்க, அதில் கடுப்பானவள் “போய்யா..” என அவனைத் தள்ளிவிட்டு, உதட்டைச் சுழித்து, முறைத்துப் பார்க்க,“ஹாஹா.. அடியே கள்ளி..” என வாய்விட்டு சிரித்தவன், “ஒரு முடிவோட தான் வந்துருக்க, ஏண்டி..?” என சுழித்த உதட்டை நிமிண்டியவன், மின்னல் வேகத்தில் அந்த இதழில் ஒரு முத்தத்தை பதித்து நிமிர்ந்தான்.அதே நேரம் “அம்மா.. அம்மா..” என எரிச்சலாக கத்தியப்படியே அந்த வீட்டுக்குள் நுழைந்தாள் வனிதா.

You may also like

Leave a Comment

About Me

Featured