Home Love - Family - Romance2.நவிலனின் கோதையானவள்

2.நவிலனின் கோதையானவள்

by Viyan Milir

ஏன் மீனா மிஸ், இன்னைக்கு பூம்பனி வரலைங்களா?

நேத்து நைட் மெஸேஜ் போட்டு இருந்தாங்க இன்னைக்கு திடீர்னு எமர்ஜென்சி லீவ் ன்னு..

என்னது எமர்ஜென்சி லீவா?

ஆமா ஏன் காயு ?

இல்ல இன்னைக்கு அவங்களுக்கு தான் ஸ்பெஷல் கிளாஸ் அதை வேற அவங்க பிரபா கிட்ட ஆர்கியூ பண்ணி வாங்கினாங்க…

ஏன் ஆர்கியூ…

அவங்களுக்கு சண்டே கிளாஸ் போட்டு இருந்தாங்க அவங்க தான் லீவ் நாள்ல கேம்பஸ்குள்ள வரமாட்டாங்களே அதனால் இன்னைக்கு வாங்கினாங்க அப்புறம் திடீர்னு எப்படி எமர்ஜென்சி லீவ்…

மீனா,”அதுசரி ஏன் அவங்க லீவ் நாள்ல கேம்பஸ் வரது இல்ல”?

காடு,”அது என்ன என்னம்மோ சொல்லுறாங்க மிஸ் ஷி இஸ் நாட் ஏ நார்மல் பர்சன் அது என்ன விஷயம் ன்னு தெரியல…

ஏய் என்ன பேசுற?

ஆமா மீனா மிஸ்.. நம்ம இன்டலிஜென்ட் ரிப்போர்ட் அப்படி தான் சொல்லுது.

மண்ணாங்கட்டி எப்ப பாரு யாரையாவது குறை கண்டுபிடிக்கிறதே இந்த பிள்ளைங்களுக்கு வேலையா போச்சு.அவ நல்ல பொண்ணு…

நான் கெட்ட பொண்ணுன்னு சொல்லலையே ஆனா அவ எல்லா இடத்திலும் ஒரு நேர்த்தியும் அந்த வேலையை சரியா சரியா ன்னு செக் பண்ணிட்டே இருப்பா நீங்க வேணும் ன்னா பாருங்க..மீனா அவள் சொன்னதை கேட்டு கடுப்பாகி வேற வேலை இருந்தா பாரு காயு..அடப் போங்க மேம் என்றவள் எழுந்து சென்று பிறகு மீனா யோசித்து கொண்டு இருந்தாள் பூம்பனி பற்றி…அதை கலைக்க அவள் அலைபேசி அழைக்க யாரை பற்றி யோசித்து கொண்டு இருந்தாலோ அவளே அழைக்க திகைத்து சொல்லு பனி…அக்கா இன்னைக்கு நான் லீவ்..அதான் நேத்தே மெஸேஜ் போட்டு இருந்தியே , என்ன திடீர் ன்னு?

திடீர் ன்னு தான் வீட்டில் என்னைய லாக் பண்ணிட்டாங்க..

புரியல பனி

இன்னைக்கு என்னைய பொண்ணு பார்க்க வராங்களாம் அம்மா லாக் பண்ணிட்டாங்க என்று சாதாரணமாக பூம்பனி பேச இந்த பக்கம் மீனா ஆவென வாயை பிளந்து கேட்டு கொண்டு இருந்தாள்..இந்த பொண்ணா இத்தனை நீளமா பேசுது என்று, ஒரே துறையில் மூன்று வருடமாக வேலை செய்கின்றனர் இவள் மட்டுமே பொறியியல் துறையில் படித்து விட்டு பள்ளிக்கு வேலைக்கு வருகிறாள் ஏன் பனி நீ ஸ்கூல் க்கு வந்துட்டு நிறைய ஆப்சன் கிடைக்குமே என்று சொன்னதற்கு கூட சிரித்து மழுப்பி விட்டாள் ஆனால் இன்று இவ்வளவு நீளமாக பேசவும் அவளுக்கே ஆச்சரியம் தான்..

பூம்பனி, “ அக்கா லைன் ல இருக்கீங்களா?

இருக்கேன் பனி நான் ஷாக் ஆகிட்டேன்

ஏன் கா?

நீ இவ்வளவு நீளமா பேசுவியா பனி..ஹாஹாஹா என்னக்கா ஜோக் பண்ணுறீங்க..நானா நீயா ?

பனி ஏன் க்கா என்னாச்சு..

இல்ல நீ இப்படி பேசி இன்னைக்கு தான் பார்க்கிறேன் சாரி நான் எதுவும் உங்களை தொந்தரவு..அச்சோ பனி நீ பேசுறதை கேட்க நான் ஆவலோடு இருக்கேன் அக்கா..சரி சரி நீ உன் விசேஷத்தை முடிச்சிட்டு வா நாங்க பார்த்துக்கிறோம்..அக்கா ஒரு ஹெல்ப் ..

சொல்லு பனி

இன்னைக்கு ஒரு டெஸ்ட் வச்சு இருக்கேன் அங்க என் டிரால அந்த கொஸ்டீன் பேப்பர் இருக்கும் ..ஓகே நான் டிக்டேட் பண்ணுறேன் பனி..இல்லக்கா மொத்தம் முப்பத்தி ஏழு கொஸ்டீன் பேப்பர் இருக்கு அதை டிஸ்ரிபியூட் பண்ணிடுங்க அதுக்கு தான் பண்ணேன் எப்பவும் போல ஒரு பென்ச் க்கு ஒருத்தர் ன்னு அந்த லெவென்த் ஸ்மார்ட் ஃபோர்டு கிளாஸ் ல உட்கார சொல்லிடுங்க அப்ப தான் எல்லாரும் ஒரே ரூம் ல இருக்க மாதிரி இருக்கும்..

ஓஓ ஓகே பனி..

தேங்க்ஸ் க்கா மான்டே பார்க்கலாம் என வைத்து இருந்தாள்..இதுவரை பனி சொன்னதை எல்லாம் கேட்ட மீனா ஆச்சரியப்பட்டு இருந்தாள் எவ்வளவு தெளிவு இந்த பொண்ணு ஆனா ஏன் ஒரு ரிசெர்வ்டா வே இருக்கா?சரி நாம நம்ம வேலையை பார்க்கலாம் இன்னைக்கு போல என்னைக்காவது பேசத்தான் போறா அன்னைக்கு தெரிஞ்சுக்கலாம்.. நாமளா போய் கேட்டு அவளுக்கு சங்கடத்தை தர வேண்டாம் என்று எண்ணிய மீனா அவள் வகுப்பிற்கு சென்று பரீட்சை எழுத மாணவர்களிடம் சொல்ல மாணவர்களோ பனி க்கு மேல் எள் என்றால் எண்ணெய் போல் கடகடவென பனி எப்படி மீனாவிடம் சொன்னாலோ அதே போல் சென்று அமர்ந்து விட பனியை மெச்சிக்கொண்டாள் மீனா..இங்கே போனை வைத்து நொடி பூவு என்று அம்சாவின் குரலில் சொல்லுங்க அம்மா…ரெடியா..அதான் அப்பவே ரெடி ஆகிட்டேனே…இல்லடா இருந்தாலும் அவங்க வந்த நேரத்தில் கொஞ்சம் பிரைட் டா இருக்க வேண்டாமா..நக்கலாக சிரித்தாள் என்னம்மா உன் பொண்ணுக்கு முதல் தடவை ன்னு நீ பேசுறியா..பூவு..பின்ன என்னம்மா நான் தான் வேண்டாம் இது சரிவராதுன்னு ஏற்கனவே சொன்னேன் நீங்க அதையெல்லாம் காதுல வாங்காம மறுபடி மறுபடி இப்படி பண்ணிட்டு ஒவ்வொரு முறையும் நீங்க தான் அழுதுட்டு இருக்கீங்க அதெல்லாம் ஒன்னு இல்ல நீ அதைப்பத்தி எதையும் யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை எல்லாத்தையும் பேசி முடிவு பண்ணி தான் இன்னைக்கு வராங்க

ஓஓஓ அப்ப விஷயம் தெரிஞ்சு தான் வராங்க

ஆமா அம்மு…

ஓஓஓ சரி தான்..என்னாச்சு பூவு..ஒன்னு இல்ல எதையும் மனசுல போட்டு குழப்பிட்டு இருக்காத டா நான் ஏன் குழம்ப போறேன் எனக்கு அதெல்லாம் வராது வரவங்களும் வந்து இருக்கிறவங்களும் குழப்பாம இருந்தா போதாது..பூவு..ப்ச் அடுத்த அவமானத்துக்கு நான் தயாராக தான் இருக்கேன் என்றவள் புத்தக அலமாரியில் கவனத்தை திருப்ப..

கார்த்திகேயன், ‘அம்சா வந்துட்டாங்க சீக்கிரம் வா என்றவர் வாசலை நோக்க செல்லராணி அலட்சியமாக ப்ச் பொம்பளை பிள்ளை ஒழுங்காவும் பிரச்சினை இல்லாததா இருந்தா இப்படி ஓடனும் ன்னு என்ன அவசியம் இருக்கு எல்லாம் படிச்சு இருக்கோம் ன்னு திமிரும் ஆடினா இப்படித்தான்.அடியேய் வினிதா இப்பவே சொல்லிட்டேன் இந்த மாதிரி கூனி குறுகி எல்லாம் என்னால் உபசரிப்பு பண்ண முடியாது ஒழுங்கா இருந்துக்க அப்புறம் நான் என்ன பண்ணுவேன் ன்னு எனக்கே தெரியாது..

சாம்பசிவம், “ஏன் ராணி உன் பொண்ணை அடிமைக்கு வீட்டுக்கா அனுப்ப போற ஏன் என்று பார்வையை திருப்பபின்ன எல்லாரும் மனுசங்க வந்தவர்களை வரவேற்கிறது தானே முறை உன்னையும் தான் கட்டி குடுத்தாங்க அப்ப உங்க அப்பா அம்மா எங்களுக்கு மரியாதை தரக்கூடாதா?இங்க பாருங்க நான் சொல்ல வரதே வேற இப்படி போய் போய் வழிய நிற்கனும் ன்னு அவசியம் என்ன இருக்கு மாப்பிள்ளை அமையாதது தானே?

சாம்பசிவம், “ ராணி போதும் நீயும் பொண்ணை வச்சு இருக்க ஒரு நேரம் போல் எப்பவும் இருக்காது..போதும் நிறுத்துங்க என் பொண்ணையும் என் வளர்ப்பையும் அசிங்கப்படுத்த நினைக்காதீங்க என்று கத்தவும் உள்ள வாங்க என்று கார்த்திகேயன் வந்தவர்களை உள்ளே அழைத்து வர சாம்பசிவம் அவர்களோடு இணைந்து வந்தவர்களை வரவேற்று அமர வைக்க,ராணி அதே இடத்தில் வந்தவர்களை அலட்சியமாக பார்த்தபடி அமர்ந்து இருந்தார்..வந்ததும் வந்தவர்களை வரவேற்காமல் திமிராக அமர்ந்து இருக்கும் ராணியை பார்த்து இவங்க யாரு என்று கவிதா அவள் பங்கை ஆரம்பித்து வைத்து இருந்தாள்..அம்சா சூழ்நிலையை கையாளத் தயங்கி கார்த்திகேயனை பார்க்க,அவங்க என் அக்கா அவங்களுக்கு கொஞ்சம் தலசுத்தலா இருந்தது அதான் அப்படியே உள்ள உட்காருக்கா ன்னு உட்கார வச்சுட்டேன் அக்கா தான் காலைல இருந்து பம்பரமா வேலை செஞ்சுட்டு இருந்தாங்க அதான் என்று கார்த்திகேயன் சமாளிக்க..அப்படியா என்பது போல் கவிதா பார்வையை பார்க்க சரி சரி உட்காருங்க தங்கச்சி மா வந்தவர்களுக்கு குடிக்க எடுத்துட்டு வா என்று சாம்பசிவம் அடுத்து தாவ பட்டென அம்சா சமையல் அறைக்குள் நுழைந்து கொள்ள உட்காரு கவி நவிலா உட்காரு டா என்று மங்கை அமர்த்தி கொள்ள.,கவிதா தான் வீட்டை எடைபோட்டு கொண்டு இருந்தாள் அடுத்து என்ன பேச என்று தெரியாமல் அனைவரும் அமைதியாக அமர்ந்து இருக்க..

ராணி, “ இவரு தான் மாப்பிள்ளையா?

கவிதா, “ஆமா இது தான் மாப்ள என் தம்பி நவிலநேயன்…

ராணி, “அதென்ன நவிலநேயன் ஒன்னு நவின் இல்ல நேயன் ன்னு வைக்கனும் இதென்ன இப்படி பெயர்”அதுல என்ன குறை என்று கவிதா ஆரம்பிக்க..

அக்கா ..

என்னடா..

விடுக்கா அவங்களுக்கு அதுக்கான அர்த்தம் தெரியல..

ராணி, “என்ன தெரியல தம்பி அப்ப நாங்க என்ன ஒன்னும் தெரியாதவங்களா?சிரித்தான் உண்மை தானே… சரி அதை விடுங்க அம்மா நாம் வந்த வேலையை பார்க்கலாம் என்று தாயை பார்க்க ராணிக்கு கடுகடுவென வந்தது..சூழ்நிலை மோசமாவதை உணர்ந்து சாம்பசிவம், “ ராணி அவங்க பொண்ணு பார்க்க வந்து இருக்காங்க நீ ஏன் தேவையில்லாம பேசிட்டு என்று கிசுகிசுக்க..அம்சா காபி உடன் வந்தார்…

கவிதா, “ இதை அப்படியே பொண்ணு கையில் கொடுத்தா அப்படியே பொண்ணு பார்த்த மாதிரி இருக்கும் இல்லையா..அதுவும் சரிதான் தங்கச்சி அம்மு கிட்ட குடுத்து அழைச்சிட்டு வா வினி போ என்று சாம்பசிவம் அனுப்ப உதட்டை சுழித்து வினிதா உள்ளே செல்ல சற்று நேரத்தில் ட்ரேயுடன் வந்தவள் அனைவருக்கும் காபியை தந்துவிட்டு அங்கே இருந்த சோஃபாவில் அமர்ந்து கொள்ள வந்தவளை ஸ்கேன் செய்து கொண்டு இருந்தாள் கவிதா

நவிலனோ அவள் எப்போது நிமிர்ந்து பார்ப்பாள் என்று பார்க்க அவளோ அவன் பக்கம் திரும்பவே இல்லை..எங்களுக்கு பொண்ணை பிடிச்சு இருக்கு என்று மங்கை சட்டென விஷயத்தை உடைக்க..

ம்மா..

என்ன கவி உங்க மகனுக்கு மட்டும் தான் பிடிச்சு இருக்கு அதை எடுத்ததும் சொல்லனுமா என்றவள் உன் பேர் என்ன?

பனி, “ ஓஓஓ அத்த மாதிரி இங்க ஒரு கேரக்டர் போல எப்படியோ இங்க போனா மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடின்னு சொல்லுற மாதிரி தான் இருக்கும் போல..

உன்னையே தான் கேட்டேன் என்ன யோசனை..

ஹான் ஒன்னு இல்ல என்னோட பேரு பூம்பனி..என்னது பூம்பனி இங்க மட்டும் என்ன வாழுது அதென்ன பூம்பனி என்று எள்ளலாக சொல்ல ராணி கார்த்திகேயனை முறைக்க..சரி சரி என்ன இரண்டு பேரும் சின்ன பிள்ளைங்க மாதிரி கவி பேசாம இரு நவிலனுக்கு பிடிச்சு தான் வந்தோம் இன்னும் என்ன நேரம் பார்த்ததுட்டு நேர்ல பார்த்தாச்சு முடிவு பண்ண தான் வந்தோம் என்றதும் பனிக்கு திக் என்று இருந்தது..அப்ப நம்ம வாழ்க்கை மத்தளம் தான் போல என்று அம்மாவை பனி பார்க்க அவரோ கண்கலங்க முகத்தில் புன்னகையை தவழ விட்டு பார்த்து இருந்தார்..அந்த புன்னகை பனியை மேற்கொண்டு எதையும் யோசிக்க விடவில்லை அமைதியாக அமர்ந்து விட..என்ன படிச்சு இருக்கு பொண்ணு என்று ஆரம்பித்து அடுத்து அடுத்து பேசிக்கொண்டே போக…சரி இவ்வளவு நேரம் கேட்டியே மா உன் தம்பி என்ன படிப்பு என்ன வேலை எவ்வளவு சம்பளம் என்று ராணி கேட்க..என் தம்பி டாக்டர் ..

என்னது..

கவிதா, “ஏன் பொண்ணோட அப்பா சொல்லலையா உங்களுக்கு”…சொன்னாலும் நீங்க இவ்வளவு பேசும் போது நாங்க பொண்ணை தரவங்க கேட்க கூடாதா…எங்க பையன் படிச்சது டாக்டர் அதோட அவன் பேர்ல தான் என்என் பிரைவேட் லிமிடெட் கம்பெனி ரன் ஆகுது அதுக்கு உரிமைபட்டவன் அவன் தான் என்றதும் ராணி அதிர்ந்து பார்க்க என்என் கம்பெனி ஓனரா என்று பனி பல யோசனைக்கு சென்று இருந்தாள் அவள் யோசனை பலவித தாக்கத்தை தரும் என்பதை அப்போது உணரவே இல்லை…

தொடரும்

You may also like

Leave a Comment

About Me

Featured