முத்தமழை – 28
“ம்மா.. நான் எத்தனை தடவை சொன்னேன். அவ மேல ஒரு கண்ணை வைன்னு, கேட்டியா? இப்போ பாரு, இந்த வீட்டுக்கு உறுத்தான வாரிச சுமந்துட்டு, வயித்த தள்ளிட்டு வந்து நிக்கப்போறா.. அதையும் கையாலாகாத தனத்தோட நாம கைகட்டி வேடிக்க பார்க்க போறோம்..” என எரிச்சலும், கோபமுமாக வனிதா கத்த,
“ஆமாண்டி.. அவளுக்கு விளக்கு பிடிக்கிற வேலை மட்டும் தான் நான் செய்யல. இனி அதையும் செஞ்சிடுறேன்..” என ராஜலட்சுமியும் பதிலுக்கு கத்த,
“ம்மா.. எதுக்கு இப்போ நீ கத்துற? நீ கொஞ்சம் கவனமா இருந்திருந்தா, இந்த பிரச்சினையே வந்திருக்காது. இப்போ நாம எதுவும் செய்ய முடியாது. அப்படியே செஞ்சாலும் அது நம்ம பக்கம் தான் திரும்பும்..” என சலிப்படைந்த குரலில் வனிதா பேச,
‘நல்ல அம்மா.. நல்ல பொண்ணு, நல்ல குடும்பம்.. இந்த கரண் மாமா வந்ததுனாலதான் இவங்களோட சுயரூபமே நமக்கு தெரிஞ்சிருக்கு. இல்லைன்னா இவங்களப்பத்தி நமக்கு ஒன்னும் தெரிஞ்சிருக்காது..’ என இவர்களின் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுமித்ரா மனதுக்குள் முனங்கியபடியே வெளியில் அமைதியாக இருக்க,
“ம்ச் வனி.. கர்ணா போன் பண்ணி சொல்லிருக்கான். தெரிஞ்சும் போகாம இருக்க முடியாது. அப்புறம் உங்க அப்பா சொன்னதை செஞ்சிடுவார். நாம ஓரெட்டு போய்ட்டு வந்துடலாம். இல்லைன்னா கர்ணா மனசுல நம்மளப்பத்தி தவறான அபிப்ராயம் வந்துட வாய்ப்பிருக்கு.” என்றார் யோசனையாக.
“அதெல்லாம் ஆல்ரெடி வந்துருக்கும் அத்த.. நாம தான் கவனிக்காம விட்டிருப்போம்.” என சுமித்ரா இடையில் வர,
“எங்க இருந்துடி இவளைப் பிடிச்ச?” என பல்லைக் கடித்த ராஜி, “அது எனக்கும் தெரியும். அதை இன்னும் பெருசாக்க வேண்டாம்னு பார்க்குறேன். முதல்ல அவளை இங்க வர வைக்கனும். இந்த வீட்டுல இருந்தாதான், நாம தைரியமா எதுவும் செய்ய முடியும். இப்படி அங்க போகாம, பார்க்காம இருந்தா, கர்ணா அவளை இங்க கூட்டிட்டு வரமாட்டான். அப்புறம் குழந்தையோடதான் இந்த வீட்டுக்கு வருவா..” என்ற ராஜி, சுமித்ராவிடம் திரும்பி “நாங்க பேசினதை எல்லாம் நீ எங்கையாவது மூச்சு விட்டன்னு தெரிஞ்சது, யோசிக்கவே மாட்டேன்.. மொத்தமா உன் அம்மா வீட்டுக்கு அனுப்பி வச்சிடுவேன்..” என்றார் வில்லத்தனமாக.
“நான் எதுக்கு அத்தை இதெல்லாம் சொல்லப்போறேன்.” என்ற சுமித்ரா, “அத்தை.. அப்படியெல்லாம் என்னை அனுப்பிட முடியாது. அப்படி அனுப்பிட்டு எங்க அம்மாவுக்கு உங்களால பதில் சொல்லிட முடியுமா? இல்ல என் அம்மாதான் உங்களை சும்மா விட்டுருவாங்களா.?” என சற்றே குரல் உயர்த்தி பேசிட, அது உண்மைதான் என உணர்ந்த வனிதா,
“அண்ணி.. அம்மா ஏதோ கோபத்துல பேசுறாங்க. நீங்க ஏன் அத்தைக்கிட்ட சொல்லனும்னு நினைக்கிறீங்க..” என பம்ம ஆரம்பித்தாள்.
“நீங்க நினைச்ச நேரம் இங்க வந்து ஜம்பமா உட்கார்ந்துக்குறீங்க.. நான் அங்க வந்து அப்படி உட்கார ரொம்ப நேரம் ஆகாது. எங்க வீட்டுல என்னை அப்படி வளர்க்கல.. நான் அமைதியா இருக்கிறேனா அது உங்களுக்கு அடங்கி போறதா இல்ல, எந்த வீண் பிரச்சினையும் வேண்டாம்னு நினைக்கிறதாலதான். இதுக்கு மேலையும் என்னை சீண்டாம இருக்கிறது தான் உங்களுக்கு நல்லது..” என கோபமாக பேசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட, ராஜிக்கு ஆத்திரமாக வந்தது.
“பார்த்தியா எப்படி பேசிட்டு போறான்னு.. எல்லாம் நீ இழுத்து வச்ச வினை. அவ வந்த நேரம், இந்த புள்ள பூச்சி கூட எப்படி எதிர்த்து பேசிட்டு போகுது பாரு..” என மகளிடம் காய,
“ம்மா.. இப்போ என்ன பிரச்சினை போயிட்டு இருக்கு.. நீ ஏன் அண்ணிக்கிட்ட எகிறிட்டு இருக்க. நீ பேசினதும் தப்புத்தான. அங்க என்னைப்பத்தி தெரிஞ்சும், அத்தை என்னை ஒரு வார்த்தை தப்பா பேசினது இல்ல. ஆனா நீ தொட்டதுக்கெல்லாம் அண்ணியை குறை சொல்ற.. இதெல்லாம் எங்க வீட்டுக்கு தெரிஞ்சா, என் நிலமையை யோசிச்சு பாரு.. என் மாமியார் என்னை மொத்தமா இங்க அனுப்பிடுவாங்க..” என வனிதாவும் பதில் கூற, அமைதியாகிவிட்டார் ராஜி.
சில நிமிடங்களில் வேறுவழியில்லாமல் மூவரும் திருப்பூரை நோக்கி கிளம்பிவிட்டனர்
***
“யாழி இன்னும் உன் கோபம் போகலையா? உனக்கே தெரியும் வல்லி விசயத்துல நான் இப்படித்தான் இருப்பேன்னு. அன்னைக்கே ஏதோ ஒரு கோபம். லூசத்தனமா பேசிட்டேன். அதுக்காக இப்போ வரை நீ பேசாம இருப்பியா?” என்ற வெற்றியை நிமிர்ந்தும் பார்க்கவில்லை யாழினி.
“யாழி ப்ளீஸ்.. நான் இப்போ கிளம்பிடுவேன். லீவே கிடைக்கல. வல்லிக்கு போன் பண்ணி விஷ் பண்ணிருக்கலாம். ஆனா உன்னை பார்க்கனும்னு தான் அவ்ளோ பிசிலயும் ஓடி வந்தேன். ப்ளீஸ் யாழி.. இனி இப்படி பேச மாட்டேன். காட் ப்ராமிஸ்” என கிட்டத்தட்ட கெஞ்சவே ஆரம்பித்திருந்தான் வெற்றி.
“வீரன் மண்டியிட்ட தருணம்..” என வந்தனாவின் குரல் எங்கேயோ கேட்க,
“முதல்ல இவளை இங்க இருந்து துரத்தனும். பக்கி! எங்க இருந்து தான் பார்க்குறாளோ..?” என முனங்கியபடியே அந்த அறையைச் சுற்றி சுற்றி பார்வையிட்டான் வெற்றி.
ஆனால் அவளோ யாழினியின் போனில் லைனில் இருந்தாள்.
“எருமை.. ஒருத்தி போன் பேசிட்டு இருந்தாளே.. அவ யார் கூட பேசிட்டு இருக்கா? போனை கட் பண்ணாளா? இல்லையா? எதையும் பார்க்காம, நீயா வந்து புலம்பிட்டு, இல்ல இல்ல கால்ல விழுந்து கெஞ்சிட்டு, இப்போ என்னை துரத்தி விடனும்னு சொல்றியா? மண்டைய மறைச்சியே கோபால்.. மண்டைக்கு மேல இருந்த கொண்டய மறைச்சியா..” என வந்தனா அறைக்குள் வந்து வெற்றியை கலாய்க்க, இப்போது யாழினியும் சேர்ந்து சிரிக்க, கடுப்பாகிவிட்டது வெற்றிக்கு.
“பைத்தியங்களா.. ஒரே வீட்டுக்குள்ள இருந்துட்டு எதுக்குடி போன் பேசிட்டு இருக்கீங்க..?” என கடுப்பாக கத்திவிட்டு வெளியில் செல்ல, வந்தனாவும் யாழினியும் வெடித்து சிரித்தனர்.
“ஹேய் பாவம்ப்பா வெற்றி.. உன் பேச்சைக் கேட்டு நான் வேற அவரை டென்சன் பண்ணிட்டேன்..” என யாழினி வருந்த,
“இவனையெல்லாம் நல்லா சுத்தல்ல விடனும் யாழி.. இல்லைன்னா இன்னும் திமிர் பேச்சு பேசுவான். இதுக்கு பிறகு உங்கிட்ட இப்படி பேசவே யோசிக்கனும்.. எப்படி என் ஐடியா?” என நம்பியார் பாணியில் பேச, அவள் தலையில் நங்கு நங்கென்று கொட்டு விழுந்தது.
“எனக்குத் தெரியும்டி.. இந்த சதி வேலைக்கு காரணமே நீயாத்தான் இருப்பன்னு.. என் யாழிக்கு இப்படியான கொடூரமான குணமெல்லாம் கிடையாது..” என பேசிக்கெண்டே மேலும் கொட்டினான்.
“விடு விடுடா.. தடிமாடு.. ம்மா.. வல்லி..” என கத்திக்கொண்டே அந்த அறையை விட்டு ஓடியவளை கண்ணில் நீர் வருமளவிற்கு சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி.
அந்த புன்னகையை ரசனையோடு பார்த்தவன், அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு “நிஜமாவே ரொம்ப ரொம்ப சாரி யாழிமா.. நான் அப்படி பேசியிருக்கக்கூடாது.. இனி அப்படி பேசமாட்டேன்… என்னை நம்பு ப்ளீஸ்..” என்றதும்,
“அப்போ எனக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது. அப்புறம் அண்ணாக்கிட்ட பேசும் போது அதெல்லாம் போயிடுச்சு.. ஆனாலும் ஒரு கோபம்.” என மெல்லிய புன்னகையோடு வெற்றியைப் பார்க்க,
“தேங்க்ஸ்.. தேங்க்ஸ் யாழி..” என்றவன், அவள் என்ன என்று உணரும் முன்னே இறுக்கமாக அனைத்திருந்தான்.
“ம்மா.. வெற்றி யாழினியை கட்டிப்பிடிச்சிட்டு இருக்கான்..” என்ற வந்தனாவின் சத்தத்தில் தான் நிகழ்வுக்கு வந்தனர் இருவரும்.
“ஷப்ப்பா முடிலடா இவளோட..” என புலம்பியபடியே, அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறினான் வெற்றி.
அன்று வெற்றிப் பேசியதில் மிகவும் வருத்தமாகவே இருந்தாள் யாழினி. அதனால் காரில் செல்லும் போது கர்ணனுடன் கூட அவளால் சாதாரணமாக பேச முடியவில்லை.
‘என்னைப்பற்றி தெரிந்தும் வெற்றி எப்படி அப்படி பேசலாம்?’ என்ற கோபம் அவளை நிலையிழக்க செய்திருந்தது.
கர்ணன் ‘என்ன.?’ என்று கேட்டும் பதில் கூறவில்லை பெண்.. அந்த நாள் முடிவில் அவளே கர்ணனிடம் கூறிவிட, அவனுக்கும் வெற்றி பேசியது வருத்தம் தான். அதே நேரம் அவன் யோசித்ததும் சரியென்றுதான் தோன்றியது. இப்போது அதை தங்கையிடம் சொல்லி, அவளை மேலும் வருத்த நினைக்கவில்லை.
அவளுக்குப் புரியும் படி கூறவேண்டும், அதே நேரம் அவள் வருந்தவும் கூடாது என்று நினைத்தான். அவனுக்கு எப்படி வல்லியும், யாழியும் முக்கியமோ, அதே போல்தான் வெற்றிக்கும். அதை யாழிக்கும் தெரியும், தெரிந்ததினால் தான் இந்த கோபம் என்றும் கர்ணனுக்குத் தெரிந்தது.
“அண்ணா ஏன் அமைதியா இருக்கீங்க?”
“வெற்றி இப்படி பேசியிருக்கக்கூடாது தானே டா..”
“கண்டிப்பா பேசியிருக்கக்கூடாது தான். ஆனா அவர் அப்படி பேச, நம்ம வீட்டு சூழல் தானே காரணம். அம்மாவும், வனியும் செய்ற பிரச்சினையைப் பார்த்ததுனாலத்தான் வெற்றி வாயை விட்டுட்டார்.”
“ஹ்ம்ம்.. அந்தளவுக்கு வெற்றியோட உனக்கு புரிதல் இருந்தா போதும் குட்டிம்மா.. அவனும் இனி அப்படி பேசமாட்டான்னுதான் நினைக்கிறேன். நானும் அவன்கிட்ட பேசுறேன்..”
“அதெல்லாம் வேண்டாம்ண்ணா.. அப்பவே வெற்றி தப்பை உணர்ந்துட்டார்னுதான் நினைக்கிறேன். அதுக்குப்பிறகும் நாம இதை பேசினா நல்லா இருக்காதுதானே..”
“ம்ம்.. எங்க விசயத்துல நீ மூக்கை நுழைக்காதன்னு, இன்டைரக்டா சொல்றியா குட்டிம்மா..”
“ண்ணா.. நான் ஒன்னும் அப்படியெல்லாம் யோசிக்கல. வெற்றி வருத்தப்படுவாங்கன்னு தான் சொன்னேன்.”
“சரிடா.. சரிடா நானும் சீரியசா பேசல.. உன்னை சீண்டினேன், அவ்ளோதான்..” என்றதும் இருவருக்குமே சிரிப்பு வந்துவிட்டது.
அன்றைய நாளை அசைபோட்டபடியே வெளியில் வந்தவளை வரவேற்றது, எரிச்சல் கோடுகள் முகத்தில் தாங்கி அமர்ந்திருந்த வனிதா தான்.
‘இவ எப்போ வந்தா.?’ என யோசித்தபடியே அவளருகில் செல்ல,
“இங்க என்னடி பண்ற.? எதுக்கு இங்கெல்லாம் வர..?” என முகத்தில் இருந்த எரிச்சலை அப்படியே பேச்சில் காண்பித்தாள் வனிதா.
“நீ இங்க எதுக்கு வந்தியோ, அதுக்குத்தான் நானும் வந்துருக்கேன். இங்க வந்தும் உன் அதிகாரத்தைக் காட்டனும்னு நினைக்காத. இது ஒன்னும் நம்ம வீடு இல்ல..” என யாழினியும், யார் கவனத்தையும் கவராமல் மெல்லிய குரலில் கூறினாலும், கடுமையான குரலில் கூறினாள்.
அந்த குரலில் வனிதா அதிர்ந்தாலும், இப்போது இதை பேச வேண்டிய இடம் இது இல்லை என புரிந்து பல்லைக் கடித்து அமைதியாகிவிட்டாள்.
அதே நேரம் ராஜி பேச ஆரம்பித்தார். “என் மகனுக்கு கல்யாணம் நடக்கனும்னு நான் ஏறாத கோவிலே இல்ல. இன்னைக்கு அவன் ஒரு முழுமையான வாழ்க்கை வாழ, நான் கும்பிட்ட கடவுளும், என்னோட வேண்டுதலும் தான் காரணம். அதுக்காகவாவது இன்னைக்கு அங்க வீட்டுக்கு வந்து இந்த சந்தோசமான விசயத்தை எங்களுக்கு சொல்லிருக்கலாம்..” என குறையாக கூறினார் ராஜி.
“ம்மா..” என யாழி பல்லைக் கடிக்க,
“ஏண்டி அம்மாவை அடக்குற.. அம்மா பேசினதுல என்ன தப்பு இருக்கு சொல்லு..” என வனிதாவும் முணுமுணுக்க,
“நீங்க சொல்றதும் நியாயம்தாங்க சம்மந்தி. ஆனா எனக்கு புள்ளைக்கு சுத்தமா மேலுக்கு முடியல.. அதுதான் ரெண்டு நாள் வச்சி அனுப்பலாம்னு நினைச்சோம். மாப்பிள்ளையும் இங்கேயே இருக்கட்டும்னு சொன்னதாலதான்..” என சீதாவும் இழுக்க,
“அவங்களுக்கு என்ன தெரியும்? நீங்கதான் வீட்டுக்கு பெரியவங்க.. எடுத்து சொல்லி புரியவைக்கனும்..” என வழக்கம்போல வனிதா ஆரம்பிக்க,
“வனி..” என அதட்டிய பாட்டி “பெரியவங்க பேசும் போது நீ ஏன் இடையில வர.. அவங்க பேசட்டும்..” என முறைத்து கூற..
“பாட்டி..” என சற்றே குரலுயர்த்திய வனிதா, கர்ணன் பார்த்த பார்வையில் சட்டென அமைதியாகிவிட்டாள்.
1 comment
இப்படி அடக்கி வைக்கலைன்னா இந்த வனிதா அடங்கியே இருக்க மாட்டாப்போல.
😀😀😀
CRVS (or) CRVS 2797