இரு வருடங்கள் கழித்து… “வீட்டுல எட்டுப் பொம்பளைங்கள வச்சுட்டு, கோவிலுக்குப் போறதே பெரும்பாடா இருக்கு” விடிந்தும் விடியாத வேளையில், மதுசூதனன் தலைவாரியபடியே புலம்பிக் கொண்டிருந்தான். “வீட்டுப் பெரியவங்களலாம் கணக்குல சேக்காதீங்க. அவங்களுக்கு வயசாகிடுச்சு. இப்போதைக்கு உங்க தங்கச்சிங்க நாலு பேரும் நானும் …
Ezhilmathi GS
ஒரு வாரம் கழித்து... “நான் முன்னமே சொல்லிருக்கணும். சொல்லாதது என் தப்பு தான்” ஏழு நாட்களாக உள்ளுக்குள்ளே புழுங்கி, வெந்து, தணிந்த பிற்பாடே சுலோச்சனா வாய் மலர்ந்தாள். “பரவால்ல. அதான் தெரிஞ்சுடுச்சே. முடிஞ்ச கதைய விடு” சத்யா சர்வ சாதாரணமாக அவளின் …
அந்த இக்கட்டான நிலையில் மதுசூதனின் வருகை மாதுளைக்குப் பக்கபலமாக அமைந்தது. சற்றே தெம்பு பெற்றவள் மும்முரமாகத் தீயை அணைக்கத் திட்டமிட்டாள்; மாணவர்களை ஏவி வெவ்வேறு தளங்களில் இருந்த தீயணைப்பான்களைக் கொண்டு வரச் செய்தாள். அதை ஆளுக்கொன்றாக உபயோகித்து, ஒரே நேரத்தில் தீயை …
இரவு முழுக்கக் கணவனை விட்டுப் பிரியாமலும் பிரிய இயலாமலும் அவன் நெஞ்சத்திலே குடி கொண்டிருந்தாள் மாது. விடியலில் அலாரம் அடிக்க, இருவராலும் இமைகளைப் பிரிக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து அலைபேசி அழைப்பு வர, அவன் சிரமப்பட்டு அதை ஏற்றுப் பேசினான். “மாது, …
ரிஷியை இவனது அங்காடியில் இறக்கிவிட்டு, மதுசூதனன் மீண்டும் வந்து பார்த்தபோது மாதுளை அவ்விடம் இல்லை. அன்றிலிருந்து அவள் தனியாகத் தான் சுற்றி வந்தாள். பலமுறை மதுவின் கண்களில் சிக்கியிருக்கிறாள். ஒன்றிரண்டு முறை பார்த்துப் பழகினாலே ஒருவரின் முகம் மூளையில் நிரந்தரமாகிவிடும். அவளோ …
சற்று நேரத்திலேயே மாதுளை உறங்கிவிட, மதுசூதனனின் அலைபேசி அலறியது. அதை எடுத்து நோக்கியவன் அவசர கதியில் அர்ச்சனாவின் இல்லத்திற்குச் சென்றான். அங்கே “மாப்ள! என்னால குடிக்காம இருக்க முடியாது, மாப்ள. குடியை நிறுத்தணும்னு நினைச்சாலே கையெல்லாம் நடுங்குது. கண்ணெல்லாம் இருட்டிட்டு வருது. …
ஏற்கனவே துரோகமெனும் நஞ்சைச் சுவைத்துக் கொண்டிருந்த மதுசூதனனுக்கு, அடுத்த அதிர்ச்சியை வாரி வழங்கியது முத்துமாரியிடமிருந்து வந்த அழைப்பு. “மாமா, மாமா… அக்… அக்காக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு. ஜி. ஹெச். ல இருக்கோம். உடனே வாங்க” மாரி ஒரே வரியில் அமிலத்தைக் கொட்டித் …
அங்கிருந்த யாருமே மாதுளை கண்ணீரும் கம்பலையுமாக வெளியேறியதைக் கவனிக்கவில்லை. முழுதும் முற்றாக உள்ளம் கலங்கிய நிலையில் அவள் எங்குச் செல்வாள்; தன் ஆருயிர் அன்னை வீட்டினில் தஞ்சம் புகுந்திருந்தாள். நியாய விலைக் கடையிலிருந்து போராடி வாங்கிய கோதுமையைப் புடைத்தபடி அர்ச்சனா தேவி …
மறுதினம் மாலை… சுலோச்சனாவும் மாதுளையும் மிஸ்டிக் மது விடுதியின் இரண்டாவது மாடியில் காத்திருக்க, மதுசூதனன் அங்கே வந்தான். “ஹேப்பி பர்த்டே, அண்ணா!” இளையவள் அவனை மேம்போக்காக அணைத்து, கன்னத்தில் முத்தம் வைத்தாள். அவள் சிறுமியாக இருந்தபோது அக்கம் பக்கத்தினர் யாரோ பகிர்ந்த …
முந்தைய இரவு மதுசூதனன் வீடு திரும்பிய பொழுது, தங்கையின் பேச்சுக் குரல் மாடியிலிருந்து ஒலித்தது. “தூங்காம கொள்ளாம இந்நேரத்துல என்ன பண்ணிட்டுருக்கா?” வாய்க்குள் முணுமுணுத்தபடி அவன் படியேறினான். “கல்யாணத்தைப் பத்தி வீட்டுல பேசணும்ல. ஒரு வார்த்தை கூட கேக்காம நீயா முடிவெடுப்பியா? …