• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் எபிலாக்

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
789
597
93
Chennai
எபிலாக்

"மாமா!" என்று அழைத்து அவனை சற்றி சுற்றி வந்து அவன் முகம் பார்த்து பார்த்து சத்தமாய் சிரித்தாள் மகிமா.

"ஹே! மெதுவா டி!" என்றவன் சுற்றிலும் பார்த்துவிட்டு கலங்கி நின்ற கண்களை துடைக்க,

"சிவா மாமா அழுறாங்க! இங்க வாங்க எல்லாரும்!" சத்தமே இல்லாமல் சத்தமாய் சொல்வதாய் அவள் செய்த பாவனையில்,

"அம்மு!" என்று கண்டித்தவன்,

"உள்ள போ நீ! நான் வர்றேன்!" என்றான்.

சிவாவின் குலதெய்வக் கோவிலில் தான் கோவிலுக்கு உள்ளேயே கொஞ்சம் தனியாய் நின்றிருந்தனர் இருவரும்.

சிவா தனியாய் செல்வதைப் பார்த்து ஏன் என அறிந்ததைப் போன்று பின்னோடே வந்தவள் அவனைக் கண்டுகொண்டு உற்று உற்றுப் பார்த்து சிரிக்க,

"மகி!" என்றவன் எத்தனை சொல்லியும் அவள் புன்னகை வாடவே இல்லை மனதின் நிறைவைப் போலவே!

"குட்டிம்மா தேடி அழப் போறா அம்மு! போய் நீ அவளைப் பாரு!" சிவா சொல்ல,

"அவ அழுறான்னு தானே இங்க நீங்க தனியா அழுதுட்டு இருக்கீங்க!" என்றவள் தன் புடவை தலைப்பால் அவன் முகத்தை துடைத்துவிட,

"ஒண்ணுமில்ல அம்மு!" என்று அவள் கைகளைப் பிடித்தவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

"வலிச்சிருக்கும்ல! அதான் ஒரு மாதிரி ஆயிடுச்சு!" என்றவன் தன் தலை கோதி தானே தன்னை சமன் செய்ய,

"ஒன்பது இல்ல பதினோரு மாசத்துல காது குத்துறது தான் நம்ம வழக்கம். உங்களுக்காக தான் பதினைஞ்சு மாசம் வெயிட் பண்ணி இப்ப காது குத்திருக்கோம் ஆரணிக்கு. இதுக்கும் இப்படி அதுவும் நீங்களே அழுறீங்கன்னு சொன்னா உள்ள வாழு மாமா கண்ணீரை யார் துடைக்குறதாம்!" என்றாள்.

நிஜமாகவே வாழவந்தான் ஆரண்யா என்ற தன் பேத்திக்கு காது குத்தும் பொழுது கத்தியே விட்டிருந்தார். அனைவருமே அதில் சிரிக்க, வெட்கமாகிப் போனாலும் பதட்டமாய் அவளைப் பார்த்துக் கொண்டே தான் இருந்தார்.

"ப்ச் நான் ஒன்னும் அழல டி!"

"கண்ணு வேர்த்துருச்சா மாமா?" என்று கிண்டல் செய்ய,

"அம்மு!" என்று முறைத்தவன்,

"ஒரு வருஷம் நான் இல்லைனதும் சேட்டை ரொம்ப கூடிப் போச்சுல்ல உனக்கு?" என்று முறைத்து,

"லைட்டா டென்ஷன் ஆகிட்டேன். கண்ணு கலங்கி வந்துடுச்சு. உள்ள யார்கிட்டயாவது சொல்லு! அப்புறம் இருக்கு உனக்கு!" என்று சொல்லி அவள் கைகளைப் பிடித்தே அழைத்துவந்தான் உள்ளே.

"வினோதா! பாப்பா காதுல இன்னும் வலி இருக்குற மாதிரி இருக்கு. என்னனு பார்க்க சொல்லு!" வாழவந்தான் மெதுவாய் வினோதனிடம் சொல்ல,

"நானும் அதை தான் சொல்றேன். எங்க கேட்குறா மச்சான்!" என்ற வினோதன்,

"மாலா! பாரு அவருக்கும் தெரியுது! புள்ள கண்ணுல தண்ணி தேங்கி நிக்கிது பாரு!" என்று சொல்ல,

"அதெல்லாம் ஒண்ணுமில்ல ண்ணே! லேசா ஆட்டிட்டா! எண்ணெய் போட்டாச்சு. ரெண்டு நாள் கொஞ்சம் அப்படி சுருக்குனு இருக்கும். அப்புறம் சரியாகிடுவா!" என்றார் கனகவள்ளி.

"ப்ப்ப்ப்பப்ப்பபா!" தந்தையைக் கண்டதும் ஒரு வயதை தாண்டிய குழந்தை கண்களில் கண்ணீருடன் சிரித்தபடி திவாகரிடம் இருந்து சிவாவிடம் தாவ,

"என்னவோ இங்க இருக்குறவங்க எல்லாம் சிங்கம் புலி மாதிரி பார்த்துட்டு அவங்க அப்பான்னதும் சிரிப்பைப் பாரேன்!" என்ற வனிதாவிற்கு தற்போது ஏழு மாதம்.

காதில் மிக சிறிய தோடு ஆட தன் மகளைப் பார்க்க பார்க்க பார்த்து தீரவில்லை தான் என்றாலும் அவள் கண்களில் கண்ணீர் தடத்தில் தான் அவன் கவனம் அதிகமாய் சிவாவிற்கு.

"சரி பார்த்தது போதும் மாமா. ஓவர் செல்லம் தான் இவளுக்கு!" என்று சத்தமாய் கூறிய மகிமா,

"என்னை விட!" என்கையில் சிறு பொறாமையும் தெரிய,

"ரெண்டும் என் செல்லம் தான்!" என்றான் உடனேயே!.

"எங்க ஈஸு பாட்டி! பாப்பா அவங்க ஊட்டினா தான சாப்பிடுவா?" என்று மகிமா தேட,

"காக்காக்கு சாப்பாடு வைக்க போனாங்க அம்மு!" என்றார் கனகவள்ளி.

ஆரண்யா பிறந்து நாற்பது நாட்களில் பெயர் வைக்கும் வைபோகத்தில் நேராய் தன் மகளைக் கொண்டு ஈஸ்வரியின் கைகளில் கொடுத்து, "முதல்ல நீங்க தான் அவ பேரை சொல்லணும்!" என்றாள் மகிமா.

"நானா? நான் மாட்டேன்!" என்று ஈஸ்வரி மறுக்க,

"நீங்க தானே பாட்டி வாரிசுக்கு வரிஞ்சு கட்டி சண்டைக்கு வந்தது? அப்போ நீங்க தான் பேர் சொல்லணும்!" என்ற சிவாவின் சொல்லில் மனம் உறுத்தி நின்றார் ஈஸ்வரி.

இறுதியில் இருவரின் பிடிவாதத்தில் ஈஸ்வரி தான் முதலில் குழந்தையின் காதில் பெயரை கூறியது. கூற வைத்தனர் என்று தான் சொல்ல வேண்டும்.

அப்போதுமே 'அடுத்ததா ஆம்பளை பையனா கொடுத்துடு ஆண்டவா!' என வேண்டிக் கொண்டு செல்ல, இவரை மாற்றுவதெல்லாம் முடியவே முடியாத ஒன்று என்று விட்டுவிட்டனர்.

காகத்திற்கு சாப்பாடு வைத்து வரவும் ஈஸ்வரியிடம் சாப்பிட வைக்க சொல்லி குழந்தையை கொடுத்துவிட்டு சிவாவுடன் மகிமா சாப்பிட அமர, மற்ற அனைவரும் உடன் அமர்ந்தனர்.

"என்ன டி ஸ்டேட்டஸ் வச்சிருக்க?" என்று அவள் காதை கடித்தான் நியாபகம் வந்தவனாய்.

"பாத்துட்டீங்களா? கேட்கலையேனு நினச்சேன்!" என்றவள்,

"வர வர என்னோட இடமெல்லாம் அவளுக்கு போய்ட்டு இருக்கு மாமா!" என்றவள்,

"மிஸ் யூ!" என்றாள் பாவமாய் பார்த்து.

"வெளுத்துடுவேன் அம்மு!" என்றான் மெதுவாய் மட்டும்.

"பின்ன! நைட்டெல்லாம் தாலாட்டு பாடி தோள்ல போட்டுக்குறீங்க! அவ தூங்கிட்டாலும் உங்க பக்கத்துல பெட்ல போட்டுக்குறீங்க! அப்ப நானு?" மகிமா கேட்க,

"பாப்பா பொறந்த அப்புறமும் எட்டு மாசத்துக்கு மாலா த்தை உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வர விடல. வந்ததும் நீ மாடி ஏற கூடாதுன்னு அம்மா ரூம்ல நாலு மாசம் அம்மா உன்னை தங்க சொன்னது ஏன்னு தெரியாத பாப்பாவா நான்?"

"சரினு எல்லாம் கடந்து வந்தா மூணு மாசம் நான் சென்னை போயிட்டேன். என் நேரம்!" என்றான் சாப்பிடபடி.

"இதெல்லாம் உன்கிட்ட பேச கூட நேரம் இல்ல டி! சென்னைல இருந்து வந்ததும் காது குத்தணும்னு கூட்டிட்டு வந்துட்டீங்க! இப்ப என்னை குறை சொல்ற நீ!"

"நீங்க வந்து நாலு நாள் ஆச்சு!" மகிமா நியாபகப்படுத்த,

"அதான் உன் ஈஸு பாட்டி உன்னை பச்சை உடம்புன்னு சொல்லி உன் பின்னாடியே சுத்தி வந்து பூனைகிட்ட இருந்து காப்பாத்திட்டு இருக்காங்களே!"என்று சொல்ல, அதன் அர்த்தத்தில் சத்தமாய் சிரிக்க இருந்தவளை,

"மூச்!" என அடக்கினான்.

"நான் தூங்குன பின்னாடி தான் உன்னை அவங்க விடுறதே! சென்னைக்கு டிரான்ஸ்பெர் வாங்கி உன்னை கடத்திட்டு போறேனா இல்லையா பாரு!" என்றவன் சொல்லில்,

"சென்னையா?" என்றவள் அதிர,

"என்ன அம்மு?" என்றார் கனகவள்ளி. சிவா முறைக்க,

"ம்ம்ஹ்ம்ம் ஒண்ணுமில்ல அத்தை!" என்றவள்,

"நான் மாட்டேன்! நான் மாட்டேன்!" என்றாள் வேகமாய்.

ஆரண்யா பிறந்து ஒன்பது மாதங்கள் கடந்த பின் வேலைக்கு செல்வதைப் பற்றி வீட்டில் உள்ளவர்கள் அவளிடம் பேச வாயே திறக்கவில்லை அவள்.

அனைவரையும் விட சிவா என்ன சொல்வானோ எனும் எண்ணம் தான் அவளை வாய் திறக்கவிடவில்லை.

மாலா சிவாவிடம் எப்போது வேலைக்கு மகிமாவை அனுப்ப இருக்கிறாய் என கேட்க, பேசி முடிவு பண்ணிட்டு சொல்றேன் த்தை!" என்றுவிட்டவன் மகிமாவிடமும் கேட்க, அவனையே தான் பார்த்தாள்.

"உன்னோட இஷ்டம் தான் அம்மு! எனக்கு முன்ன விட அதிகமா இருக்கு ஒர்க் எல்லாம். உங்க ரெண்டு பேரோடவும் கிடைக்குற டைம் நான் என்ஜோய் பண்ணிப்பேன் தான். ஆனா பாப்பாக்கு யாராவது ஒருத்தர் கூட இருந்தா நல்லாருக்கும்ல?" என்றதும் மகிமா இதழ்கள் புன்னகையில் வளைந்தது.

"உனக்கும் பிரஷர் அதிகமாக கூடாது. ஒரு வருஷம் போகட்டுமா? இங்க இல்லைனாலும் வேற ஆபீஸ் கூட பார்த்துப்போம்?" என்றவன்,

"எனக்கு தோணுச்சு! அதான் கேட்டேன். ஜஸ்ட் சஜ்ஜெஷன் மாதிரி தான். உனக்கு போனும்னோ போனா நல்லாருக்கும்னோ இருந்தா நிச்சயமா நான் நோ சொல்ல மாட்டேன். அதான் வீட்டுல இவ்வளவு பேர் இருக்காங்களே! அவங்க பார்த்துப்பாங்க பாப்பாவை!" என்று முடித்தான்.

"மாமா!" என்று கட்டிக் கொண்டு முத்தமிட்டவள் சந்தோஷத்தில்,

"தொடாத டி! அப்புறம் ஈஸு பாட்டி மோப்பம் புடிச்சு வந்துடும்!" என்று சிரித்தவன்,

"சொல்லு! என்னவோ முடிவு பண்ணிருக்கீங்க மேடம்?" என்று கேட்க,

"எக்ஸக்டா நான் என்ன நினைச்சேனோ அதான் நீங்களும் சொல்லி இருக்கீங்க மாமா! எனக்கு பாப்பாவை இப்ப விட்டுட்டு ஆபீஸ்ல போய் என்னனு நான் இருப்பேன். நினைச்சாலே அழுகையா வருது. நான் போகல!" என்று அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு சொல்ல, அவள் கன்னம் தட்டி சிரித்தவன்,

"இவ்ளோ இடம் எனக்கு குடுக்காத அம்மு!" என்று சொல்லி இதழில் கதை எழுதி தான் அவளை விட்டதே!

இப்படி அவன் முடிவைக் கொண்டே தன் முடிவுகளும் என்று அனைத்திலுமே பழகிக் கொண்டாள் மகிமா. பலவற்றில் இருவருக்கும் அதில் ஒற்றுமை இருக்கும் அப்படி இல்லை என்றால் கூட 'மாமா சொன்னா சரியா தான் இருக்கும்!' என்று அவனுடன் இணைந்து கொள்வாள்.

இடையில் மகிமா குழந்தை பிறந்து ஆறு மாதமான நிலையில் ஒரு முறை அன்னையுடன் மாலா வீட்டிற்கு சென்றவன் மகிமாவையும் அழைத்துக் கொண்டு அவளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்தான்.

"முதல்ல இந்த ஸ்டேட்டஸ் வைக்குற பழக்கத்தை விடு டி! பாட்டிக்கு ஒரு ஸ்டேட்டஸ் அம்மாக்கு ஒரு ஸ்டேட்டஸ், அத்தைக்கு ஒண்ணு, அப்பாக்கு ஒண்ணுன்னு!" என்றவன் சொல்லில்,

"விடுங்க மாமா! அவங்கள எல்லாம் ஹைட் பண்ணி தான் வைக்குறேன்!"

"அதுக்கேன் வைக்கணும்?"

"அதான் நீங்க பாக்குறீங்க இல்ல? உங்களுக்கு புரியுது இல்ல?"

"அம்மு! ஆனாலும் உன் அறிவுக்கு..." என்றவனுக்கு சிரிப்பு தான் வந்தது. எதற்கும் யாரிடமும் கோபத்தை காட்டியது என்ன! கோபம் கொள்வேதே கிடையாது. ஆனாலும் அவள் மனதில் அந்த சிறு அழுத்தம் இருப்பதை அந்த ஸ்டேட்டஸ் இல்லை என்றாலும் கூட உணர முடியும் சிவாவிற்கு.

கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்து சிவா தன் தோளில் உறங்கிக் கொண்டிருந்த மகளை ஹாலில் இருந்த தொட்டிலில் கிடத்திவிட்டு தன் அறைக்கு சென்றுவிட, மகிமாவும் உடை மாற்றவென்று மேலே சென்றாள்.

அணிந்திருந்த சட்டையை கழற்றிவிட்டு ஃபேனை ஓடவிட்டவன் வந்து கட்டிலில் ஆசுவசமாய் சாய, உள்ளே வந்தவள் அவனைப் பார்த்து நின்றாள்.

"வா!" என்று தலையசைத்து அவன் கை நீட்ட, அதற்காகவே காத்திருந்தவள் அவன் நெஞ்சத்தில் சாய்ந்து கொண்டாள் சலுகையாய்.

"பாப்பாவும் நீயும் ஒண்ணு தான் என்னிக்குமே எனக்கு! புரியுதா அம்மு?"

ஏற்கனவே குழந்தை பேற்றினால் ஒரு சிறு இடைவெளி. கூடவே உடல்நிலை மனநிலையின் மாற்றங்கள். அத்தோடு சிவாவின் அலுவலகம் தொடர்பான நான்கு மாத சென்னை பயணம் என மனம் அவனை அதிகமாய் தேடிக் கொண்டிருந்ததில் தவித்துப் போயிருந்தாள்.

"தெரியும்! ஆனாலும் மிஸ் பண்ணினேன்!" என்றாள் உண்மையாய்.

"உங்களோடவே தான் டா இருப்பேன்!" என்றவனின் உச்சந்தலையில் அழுத்தமான முத்தம் அந்நேரம் அவளுக்கு தேவையாய் இருந்தது.

புரிதலும் பிரியமும் பிரியமானவர்களைத் தேடும் உணர்வுகளுக்கு உயிரளித்துக் கொண்டு தான் இருக்கும்.

சுபம்.
 

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,136
643
113
Tirupur
வொண்டர்ஃபுல்...
பெர்ஃபக்ட் கம்ப்லீட்
 
  • Love
Reactions: Rithi

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,612
668
113
44
Ariyalur
இது இது தாங்க மாஸ், கணவனாகட்டும் மனைவியாகட்டும் ஏதோ ஒரு வகையில் தேடல் இருந்துகிட்டு இருக்கும் முடிவிலா புரிதலின் தேடல் இது, சூப்பர் சூப்பர் சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
789
597
93
Chennai
Thank u sis❤️
இது இது தாங்க மாஸ், கணவனாகட்டும் மனைவியாகட்டும் ஏதோ ஒரு வகையில் தேடல் இருந்துகிட்டு இருக்கும் முடிவிலா புரிதலின் தேடல் இது, சூப்பர் சூப்பர் சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️