அத்தியாயம் 23
அன்று நிலா வீட்டில் பேசி விட்டு வந்து ஒரு வாரம் ஆகி விட்டது. எம்பிஏ செர்டிபிகேட் இப்போது கையில் இருப்பதால், அவன் கல்லுரி நண்பன் ஒருவன் சொன்ன கம்பெனியில் வீடியோவில் இன்டர்வியூவ் முடித்து அந்த வேலைக்குத் தேர்வாகியும் விட்டான். ஆனால் அதில் கொடுமை என்னவென்றால் அது வடமாநிலத்தில் உள்ள கம்பெனி. முதல் முறை கிடைத்த வேலையை விட மனமில்லை அவனுக்கு. அதனால் சம்மதமும் சொல்லி விட்டான். இந்த விஷயத்தை நிலாவிடம் சொல்ல முடியாத பெருங்குறை தான் இப்போது அவனுக்கு மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
என்றும் இல்லாமல் அவள் அக்கா பைரவியின் வருகை புதிதாக இருந்தது அன்று. அதுவும் இரண்டு நாள் தங்கிப் போகும் அளவுக்குலாம் அவள் புகுந்த வீட்டில் விடவே மாட்டார்கள். இப்போது இரண்டு நாட்கள் தங்கி அவனுக்கு பிடித்ததை சமைத்துப் போட்டுக் கொண்டு இருக்கிறாள். ஒருவேளை வெளியூருக்குச் செல்கிறான். வருவதற்கு வருஷக் கணக்காகும் என்பதினால் அவள் வீட்டில் அனுப்பி வைத்தார்களோ என்னமோ. அக்காவின் அக்கறையில் அம்மாவின் சாயலைக் காண்கிறான். அவனுக்கு மகிழ்ச்சி தான். ஆனால் அதற்குப் பின் உள்ள விவகாரம் என்னவென்று தான் புரியவில்லை.
"எப்போடா கெளம்பனும் புனேக்கு?"
"இன்னும் ரெண்டு வாரம் இருக்கு கா"
"ம்" என்றவள், சிறிது நேர மௌனத்திற்குப் பின் மெதுவாய் ஆரம்பித்தாள்.
"போய்ட்டு எப்போடா வருவ?. அவளோ தூரம் போனா அடிக்கடி வர முடியாதுல. அம்மா அப்பா இருந்தாலாது அப்பப்போ வந்து பாத்துட்டுப் போவ. என் வீட்டு ராட்ஷசக் குடும்பத்துல வந்து ரெண்டு நாள் தங்கவும் மாட்ட. இங்க யாரு இருக்கானு வரக்கூட மாட்ட. ஆடிக்கொருதரம் அம்மாவாசைக்கு ஒருதரம்னு பாத்தாலும் தம்பினு ஒருத்தன் இருக்கானு நம்பிக்கையாது இருக்கும் எனக்கு. இனிமே அதுவும் இருக்காது" என்று சீலைத் தலைப்பை எடுத்து கண்ணீரைத் துடைத்தாள்.
உண்மையாகத் தான் வருத்தப்பட்டாள். அவளுக்கும் பிறந்த வீட்டு ஆதரவு வேண்டுமே. தம்பி என்று ஒருத்தன் இருக்கும்போதே அவள் புகுந்த வீட்டில் அவளை அனாதை போல தான் நடத்துவார்கள். இப்போது அவனும் இல்லை என்றால் சொல்லவே வேண்டாம் தெருவில் போகும் நாயை விட கேவலமாக நடத்துவார்கள்.
"க்கா. எதுக்கு இப்படி அழுவுத?. நானென்ன ஒரேயடியாவா அங்க போய் செட்டிலாகப் போறேன். ட்ரெயினிங் முடிஞ்சு ஒரு நாலு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் ஆயிடுச்சின்னா அதுக்கப்புறம் வேற கம்பெனியோ இல்ல டிரான்ஸ்பர் வாங்கிட்டோ இந்தப் பக்கம் வந்துடப் போறேன். இதுக்கு போய் கண்ண கசக்கிட்டு இருக்க?. நீ தெம்பா இருந்தா தானே நான் தைரியமா அங்க போய் வேலை பார்க்க முடியும். நீ தான் அக்கா எனக்கு நம்பிக்கை கொடுக்கனும். நீயே இப்டி பேசினா எப்படி?" என்று ஆதங்கமாக கேட்க.
"இல்லடா.. இல்லடா.. நான் போவக்கூடாதுனு சொல்லல. உன் வாழ்க்கைல நீ உசரத்துக்கு போனா எனக்கு சந்தோஷம் தான். இருந்தாலும் நான் என்ன சொல்ல வர்றேனா.. இங்க உனக்கு ஒரு குடும்பம் இருந்துச்சுனா மூனு மாசத்துக்கு ஒருக்க ஆறு மாசத்துக்கு ஒருக்கா வந்துட்டு போவேல?. உனக்குனு இங்க குடும்பம் யாரும் இல்லனா எதுக்கு போகனும்னு சலிப்பு வந்துரும்ல.." என்று இழுத்தாள்.
அவள் சொல்ல வருவது பாதி புரிந்தும் புரியாமலும் விழித்தான். "என்னக்கா சொல்ல வர்ற? சொல்ல வேண்டியத சுத்தி வளைக்காம சொல்லு. என்கிட்ட சொல்ல என்ன தயக்கம் உனக்கு" என்று தைரியமூட்ட.
"இல்லடா.. அங்க போனா குறைஞ்சது நாலு வருஷம் ஆகிடும் நீ வர்றதுக்கு. இப்பவே உனக்கு வயசு இருபத்தி ஆறு. நாலு வருஷம் போச்சுன்னா முப்பது ஆகிடும். அதான் போறதுக்குள்ள உனக்கு ஒரு கல்யாணத்தை முடிச்சுட்டோம்னா.." என்று மெதுவாய் விஷயத்தை நகர்த்த..
"க்கா. என்ன சொல்லுத?. இப்பதான் ட்ரெய்னியா போறேன். இப்பவே கல்யாணத்தை முடிச்சிட்டு குடும்பம் குட்டியை கூட்டிட்டு போக முடியாது" என்று சிடுசிடுத்தான்.
"அது எனக்கும் புரியுதுடா. கல்யாணம் முடிச்சுட்டு அவளையும் கூட போட்டு போக வேண்டாம். இங்க இருக்கட்டும். இங்க உனக்கொரு குடும்பம் இருக்குனு நினைப்பு இருந்தா அடிக்கடி வருவேல்ல. அதுக்காக சொன்னேன்"
"கல்யாணத்தை முடிச்சுட்டு இங்க விட்டு போறதுக்கு எதுக்குக்கா கல்யாணம் பண்ணனும்?. அப்படியேனாலும் எந்தப் பொண்ணு அதுக்கு ஒத்துக்கும்" என்றவனுக்கு நிலானியின், 'உனக்காக நான் வெயிட் பண்ணுவேன் மாறா. சீக்கிரம் வந்திரு' என்று கண்ணீரில் கரைந்த முகம் கண்முன் நிழலாடியது.
"இப்போ நான் கல்யாணம் பண்ற ஐடியால இல்ல கா. புரிஞ்சுக்கோ ப்ளீஸ்" என்று முடிக்க.
"பொண்ணு ஏன்டா கிடைக்காது?. உனக்கென்ன குறைச்சல். நம்ம அருணா இல்ல. அவளை கேட்டு பார்ப்போம். அத்தை மாமாவுக்கும் விருப்பம் தான்" என்றாள்.
அருணாவின் பெற்றவர்கள் அவள் மண்டையைக் கழுவியதின் விளைவு இது என்று அவனுக்கு நன்றாக புரிந்தது.
அப்படி என்ன நடந்தது என்று பார்த்து விட்டு வரலாம்.
போனிலே பேசிக்கொண்டு இருந்த அருணாவின் பெற்றவர்கள் நேராக பைரவி வீட்டுக்கேச் சென்று விட்டனர். அங்கு சென்று, "உனக்கு அம்மா அப்பாவும் இல்ல. மாறன் ஒருத்தன் தான் வன்மை வளமை செய்றதுக்கு துணைக்கு இருந்தான். அவனும் போய்ட்டா நீ என்ன செய்வ?. மாறன் நல்லவன் தான் இல்லன்னு சொல்லல. ஆனா போற இடம் அப்படி என்ன செய்ய?. ஐடி கம்பெனிக்கு வேலைக்குப் போறான். போற இடத்துல லவ்வு கிவ்வுனு ஏதாவது வட நாட்டுக்காரிய கூட்டிட்டு வந்துட்டான்னா.. அவளுக்கு நம்ம உறவு சீரு செனத்தி பத்திலாம் தெரியுமா?. இல்ல அங்கயே அவன் லவ்வர் கூட செட்டிலாகிட்டா உன் நிலைமை?. நாளைக்கு உன் பொண்ணு வயசுக்கு வந்தா தலைக்கு ஊத்தக்கூட வர மாட்டான் பாத்துக்க. அதுக்குத்தான் சொல்லுதேன் அருணாவை கட்டி வச்சுடுவோம். அவன் இங்க இல்லனாலும் நாங்க உன்னை பாத்துக்க மாட்டோமா?" என்று இதுநாள் வரை தாயில்லாத பிள்ளை என்று பார்த்து பார்த்து செய்தது போல் அவள் அத்தை அவள் மூளையை சலவை செய்ய. பைரவிக்கும் அவர் சொல்வது யோசிக்க வைத்தது.
நந்தனிடமும், "இங்க பாருங்க நந்தா.. கல்யாண வரதட்சனை குடுக்கவே இன்னும் பத்து பவுன் பாக்கி இருக்கு. இதுல அவன் அங்க எவளாயாது கட்டிட்டு வந்துட்டா வரதட்சணையும் வராது. ஒத்தப் பொண்ணு பெத்து வச்சுருக்கேங்க. தாய்மாமன் சீரு கூட கிடைக்காது. உங்க பொண்டாட்டிட்ட சொல்லி பார்த்து முடிவெடுங்க. நாங்க வர்றோம்" என்று இருவரின் மனதையும் யோசிக்க வைத்த திருப்தியில் அங்கிருந்து கிளம்பினர்.
அவன் நினைத்ததைப் போலவே அருணாவே வந்து நின்றாள். அருணாவைப் பார்வையால் எரித்தான்.
"வா அருணா இப்போ தான் உன்னைப் பத்தி பேசிட்டு இருந்தேன்"
"என்ன சொல்றாரு உங்க தம்பி?" என்றாள் அவனை பார்த்துக் கொண்டே.
"அவன் யோசிச்சு சொல்வான்" என்று பைரவி முடிக்கும் முன்.
"இதுல யோசிக்க ஒன்னுமே இல்லக்கா. எனக்கு விருப்பம் இல்லை"
"ஏன் விருப்பமில்லையாம் மதினி? எனக்கென்ன குறைச்சல்?" என்று மூக்கு விடைக்க முறைத்தாள் அவள்.
"இதே மூனு வருஷம் முன்னாடி இருந்தா அப்போ என்னைக் கட்டிக்க சம்மதம் சொல்லிருப்பியா?. இப்பத்தான் உங்கம்மாவுக்கும் உனக்கும் கண்ணுக்குத் தெரியிறேனா நான்?" என்று கோவத்தில் கண்கள் சிவக்க..
"பெத்தவங்க சொல்றபடி தான கேட்க முடியும். என்னைய என்ன செய்ய சொல்லுதீக?"
"அதை தான் நானும் சொல்றேன். எனக்கு இப்போ விருப்பம் இல்ல. நாலு வருஷம் கழிச்சு நான் இங்க வரவும் தான் கல்யாணம். அதுவரைக்கும் உன்னால காத்திருக்க முடியுமா?" என்கவும் அருணா முழித்தாள்.
"டேய் என்ன பேசுற?. அவளுக்கு இப்பவே கல்யாண வயசு வந்துருச்சு. எப்டி நாலு வருஷம் வெயிட் பண்ணுவாங்க அவங்க வீட்ல?. ஊர்ல தப்பா பேச மாட்டாங்க?" என்று பைரவி முந்திக்கொண்டு பதில் சொல்ல.
"அப்டியே நாலு வருஷம் அவ காத்திருந்தாலும் என்னோட ஸ்டேட்டஸ் மாறிருக்குமே?. அதே கான்ட்ராக்ட் எடுத்து டிரைவர் வேலை பாத்துட்டு இருக்குற மாறனாவா இருப்பேன்?. அப்ப இவ தகுதி உசந்துருமா?. பட்டிக்காட்டுல சுத்திட்டு இருக்குற அருணாவா தான இருப்பா?" என்றான். அவனுக்குத் தெரியும் தகுதியை காரணம் காட்டி பேசுவது எவ்வளவு அசிங்கம் என்று. இருந்தும் பேசுகிறான். எவ்வளவோ பொறுத்துப் போய்விட்டான். இன்று அவன் வாழ்க்கையில் ஆசைப்பட்ட ஒற்றை விஷயத்திற்காக அவன் பொறுமை எல்லை கடப்பதில் தவறில்லை என்று தோன்றியது.
'நான் நாலு வருஷம் கழிச்சு வந்தா அதே மாறானாவா இருப்பேன்?' என்று அருணாவுக்கு கேட்ட அதே கேள்வியை தனக்கும் பொருத்திப் பார்த்துக் கொண்டாள் பைரவி. 'அப்போ என்னையும் அப்படித்தான் நினைப்பானா?. எனக்கிருந்த ஒரு உறவும் போயிருமா?. அப்போ அத்தை சொன்னது மாதிரி நடந்துருமோ? இல்ல என் விருப்பப்படி தான் கல்யாணம் நடக்கனும். அப்போ தான் தம்பி நம்ம கைக்குள்ள இருப்பான்' என்று சுயநலமாக யோசித்தாள்.
ஒரே வார்த்தையில் அருணாவின் கேள்விக்கு மட்டுமல்லாமல் அவளின் பெற்றவர்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டு புனே புறப்படத் தயாராகினான்.
இருக்கும் காரை விற்று விட்டு செலவிற்காக பாதிப் பணத்தை வைத்துக் கொண்டு மீதிப் பணத்தை காருக்கு வாங்கிய லோனை அடைத்து விட்டான். தாய் தந்தை விட்டுச் சென்ற வீட்டில் அவன் மட்டும் வாழ்ந்தான். இப்போது அவன் வாசமும் இல்லாமல் அந்த வீட்டைப் பூட்டி விட்டு புனே சென்று விட்டான்.
தொடரும்.