அத்தியாயம் 25
"இப்போ நிலாவை எனக்கு கல்யாணம் பண்ணிக் குடுப்பேங்களா சார்?" என்று எதிர்பார்ப்புடனும் ஆசையுடனும் கேட்டான் மாறன்.
அவர் மாட்டேன் என்கவும் அவனுக்கு உயிர் போய் விட்டது. "ஏன் சார்?. நீங்க சொன்ன மாதிரி நாலு வருஷத்துல என்னோட தகுதியை உயர்த்திட்டு தான வந்துருக்கேன். நான் இப்போ நல்ல நிலைமைல தான் இருக்கேன். எனக்கு நிலா வேனும் சார் ப்ளீஸ். உங்க சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணிக்க விரும்பல சார் நாங்க. உங்க ஆசீர்வாதமும் வேனும்னு தான் உங்க கிட்ட கேட்டுட்டு இருக்கேன்" என்று கெஞ்சினான்.
அவர் இன்னும் மௌனத்தைத் தொடர, "இன்னும் என் தகுதியை நினைச்சு யோசிக்கிறேங்களா சார்?. இல்ல உங்க பொண்ணு அந்தக் கிராமத்துல போய் எப்டி வாழ்வானு யோசிக்கிறேங்களா?. அப்படி நினைச்சேங்கனா உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம் சார். நான் எப்டியும் சென்னைல தான் வேலை பார்க்கப் போறேன். நிலாவும் இங்க தான் வொர்க் பண்ணுவா. அதுனால நான் இங்கயே ஒரு ஃப்ளாட் வாங்கிட்டேன் சார். நிலா கிட்ட பேசி நாலு வருஷம் ஆச்சு. அவளுக்கு சர்பிரைஸா சொல்லனும்னு இருந்தேன். உங்ககிட்ட தான் மொத சொல்றேன். என் அக்காவுக்கு கூட தெரியாது".
அவன் நிலாவுக்காக பார்த்துப் பார்த்து செய்த அனைத்தும் அவருக்கே ஆச்சர்யமாக இருந்தது. தன் மகளை எந்த அளவுக்கு விரும்பினால் அவன் இவ்வளவு தூரம் யோசிப்பான் என்பது அவருக்குப் புரியாமல் இல்லை. ஆனால் அவரே நினைத்தாலும் அவனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத நிலையில் அல்லவா அவள் இருக்கிறாள் என்று நினைக்க நினைக்க அவருக்கு வேதனைத் தொண்டையை அடைத்தது.
"சொல்லுங்க சார். இன்னும் உங்களுக்கு என்ன ப்ராப்ளம்?. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக சொல்லிடுங்க"
"நானே நினைச்சாலும் அவளை நீ கல்யாணம் பண்ணிக்க முடியாது. ஏன்னா அவ அவளாவே இல்லை" என்று அவர் அழுக ஆரம்பிக்க.. மாறனின் கற்பனைக் குதிரை எங்கெங்கோ சென்று அவனை பயமுறுத்தியது.
"என்ன சொல்றேங்க?. நிலா.. நிலாவுக்கு என்ன?. அவளுக்கு என்னாச்சுனு சொல்லப் போறிங்களா இல்லையா?" என்று கத்தினான்.
அப்போது, "மாறா.. மாறன் வந்தான். எனக்குத் தெரியும். என் பக்கத்துல தான் எங்கயோ இருந்தான். ஆனா காணாம போயிட்டான்" என்ற அவனின் ஏஞ்சலின் குரலில் ஸ்தம்பித்து திரும்பினான். வெளுத்த தேகம், சுருங்கிய முகம் என்று பார்க்கவே நோயாளியாகத் தெரிந்தாள்.
வெண்ணிலவின் சாயலில் இருக்கும் அவள் முகத்தைப் பார்த்து பார்த்து ரசிப்பவன் இன்று அவள் நிலைமையைக் கண்டு அதிர்ந்தான். அவள் அருகே சென்று, "ஏஞ்சல்" என்றழைக்க.. அதை உணரும் நிலையில் அவள் இல்லை.
திரும்பவும் அதே வாக்கியத்தைச் சொன்னாள். "மாறா.. மாறன் வந்தான். எனக்குத் தெரியும். என் பக்கத்துல தான் எங்கயோ இருந்தான். ஆனா காணாம போயிட்டான். நீ பார்த்தியா?". உதடு பிதுக்கிக் காணாமல் போன பொம்மையைத் தேடும் குழந்தையாக அழுவதற்குத் தயாராக நின்றாள். மறுபடியும் மறுபடியும் அதே வாக்கியத்தை சொல்லிக் கொண்டிருந்தாள். மாறன்.. மாறன் என்று எத்தனை தடவை அவள் வாயிலிருந்து வந்தது என்று கணக்கிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு ஜபம் போல் அவன் பெயரை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்தாள். ஏற்கனவே அவள் குரல் மழலை தான். இப்போது சிறு குழந்தையாய் கொஞ்சும் அவள் பேச்சு அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
எதிரே நின்று அவளையே வெறித்தவனுக்கோ சகலமும் மறந்து போனது. கண்கள் அவளிடம் நிலைக்குத்தி நின்றது. முழு உருவமாய் அவள் எதிரில் நிற்க, அவனையே எங்கே என்று கேட்கும் அவளுக்கு என்ன தான் ஆச்சு என்று மூளையும் மனதும் குழம்பித் தவித்தது.
"நிலா.. நிலாம்மா.. என்னடி ஆச்சு?. நான் மாறன். உன் மாறன். என்னைத் தெரியலையா?. அய்யோ ஏஞ்சல்.." என்று அவளைக் கட்டிக் கொண்டு கதறுபவனுக்கு புவனாவிடமும் மனோகரிடமும் ஆறுதல் இல்லை. அவர்களே ஒற்றை மகளின் நிலையை நினைத்துக் கலங்கித் தவித்துக் கொண்டு தான் இருந்தனர். அவளை துளியும் விலகாது இறுக்கி அணைத்துக் கதறிக் கொண்டிருந்தான். வரும் போது இருந்த ஆர்ப்பரிப்பு எங்கே?. இப்போது உயிரை உருவி வெளியே எடுப்பது போல் அத்தனை வலி.
"என்னாச்சு?. என்னாச்சு சார் நிலாவுக்கு?. எப்டி இப்படி ஆனா?. நான் முன்னாடி நின்னும் என்னையே அடையாளம் தெரியலயா?" என்று அழுதான்.
"ரெண்டு வருஷம் முன்னாடி காலேஜ்ல இருந்து வீட்டுக்கு வரும் போது அவளுக்கு ஒரு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு. அவ உயிரை எப்டியோ காப்பாத்திட்டோம். ஆனா நினைவு வந்ததில் இருந்து இப்டித்தான் சொல்லிட்டு இருக்குறா. மாறன் மாறன்னு எப்பவுமே உன் பெயரை மட்டும் தான் சொல்லிட்டு இருக்கா. நாங்களும் என்னென்னமோ ட்ரீட்மென்ட் பண்ணிப் பார்த்துட்டோம். ஆனா சரியாகலை".
"என்கிட்ட சொல்லிருக்கலாமே சார். ஏன் என்கிட்ட மறைச்சேங்க?"
"நீ இப்போ தான் உன் வாழ்க்கையை தேடிப் போயிருக்க. உன்னை தொந்தரவு பண்ணக் கூடாதுனு தான் சொல்லல"
"என் வாழ்க்கையே நிலா தான் சார். அவளுக்காக தான நான் அவளை விட்டு இந்த நாலு வருஷம் பிரிஞ்சு இருந்ததே. அப்படி இருக்கும் போது எப்டி உங்களால அவளைப் பத்தி என்கிட்ட இருந்து மறைக்க முடிஞ்சது"
"உன் பெயரையே சொல்லிட்டு இருக்கிறதால நீ வந்தா சரியாகுவாளோனு நினைச்சு உனக்கு தகவல் சொல்லலாம்னு தான் நானும் நினைச்சேன். ஆனா நிலாவோட போன் ஆக்ஸிடென்ட்ல நொறுங்கிப் போச்சு. உன்னோட நம்பரும் இல்ல. உன்னோட ஊருக்குக் கூடப் போனேன்பா தேடி. அங்க உங்க சொந்தக்காரங்க அவன் நம்பர்லாம் இல்லனு சொல்லி அனுப்பிட்டாங்க. அக்கம்பக்கத்துல நம்பர் வாங்கி உங்கக்கா கிட்ட கால் பண்ணி கேட்டதுக்கு உன் நம்பர் தர முடியாது. இனிமே அவனை தொந்தரவு பண்ண பண்ணாதீங்க. இப்போ தான் அவன் நல்லா இருக்குறான். அவனுக்கு பொண்ணு பார்த்து நிச்சயம் பண்ணிட்டோம்னு சொல்லிட்டாங்க. எனக்கு என்ன பண்றதுனு தெரியாம திரும்பி வந்துட்டேன் மாறன்" என்று கலங்கினார்.
'அவளுக்கு இப்படியொரு விபத்து நடந்தும் தான் உடன் இல்லையே' என்று வருந்துவதைத் தவிர மாறனால் எதுவும் செய்ய முடியவில்லை. அதுவும் அக்காவும் இப்படியொரு பொய்யைத் தூக்கி அவர் தலையில் போட்டால் அவரும் என்ன தான் செய்வார். மனோகரின் நிலையை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
"நிலா.. நீ கஷ்டப்படும் போது உன்கூட இல்லாம போயிட்டேனே. என்னால முடியலடி. உன்னை இப்படி என்னால பாக்கவே முடியல. உயிரே போற மாதிரி இருக்கு. என்னைப் பார்த்ததும் உன் கண்ணுல தெரியிற சந்தோஷத்தைப் பாக்கனும்னு இருந்தேன். ஆனால் உன் கண்ணுல தேடலும் என் கண்ணுல வலியும் இருக்கும்னு கொஞ்சம் கூட நினைக்கல. நிலா.." என்று தரையில் மடங்கி அழுதான்.
புவனாவிற்கு இருவரின் நிலையை நினைத்து வருந்துவதும் அந்தக் கடவுளைப் பலிப்பதையும் தவிர்த்து எதுவும் தோன்றவில்லை.
வீணாய் இருவரையும் பிரித்து தானே தன் மகளின் கதிக்கு காரணமாகி விட்டோமோ என்று இப்போது நினைத்தார் மனோகர். அவன் உடன் இருந்திருந்தால் தன் மகளுக்கு இப்படியொரு நிலை வந்திருக்காதோ என்று ஒருநாளைக்கு ஆயிரம் முறை நினைத்து விடுவார். அவளின் நிகழ்கால சந்தோஷமே அவனாய் இருந்திருக்க அவளின் எதிர்கால சந்தோஷத்தை கருத்தில் வைத்து இருவரையும் பிரித்து வைத்திருந்ததற்குத் தான் கடவுள் தனக்கு சரியான தண்டனை கொடுத்திருக்கிறார் என்று அவர் வருந்தாத நாளில்லை.
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்தவன், "எனக்கு எப்போ நிலாவைக் கல்யாணம் பண்ணி வைக்கப் போறிங்க சார்" என்றான் தீர்க்கமாக.
"மாறன்.." என்று அதிர்ந்து அவனைப் பார்க்க.
"சொல்லுங்க சார். எப்போ நிலாவை எனக்கு சொந்தமாக்கப் போறேங்க"
"நீ யோசிச்சுத் தான் பேசுறியா?. நிலா இருக்குற நிலைமையைப் பார்த்தேங்கள?. பார்த்துமா அப்படி கேட்குறேங்க?. நாங்க தான் அவ அம்மா அப்பான்னு அவளுக்கு புரிய வைக்கவே எங்களுக்கு ரெண்டு வருஷம் ஆச்சு. அவ இப்போ கல்யாணம் பண்ணி குடும்பத்து வாழ்க்கையை அனுபவிக்குற நிலைமைல இல்லை"
"எனக்கு நிலா வேனும் சார்"
"சொன்னா புரிஞ்சுக்கோங்க மாறன். நிலா நல்ல நிலைமைல இருந்தா கண்டிப்பா உங்களுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கிறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனா அவ இப்போ குழந்தை மாதிரி. அவ கல்யாண வாழ்க்கையைலாம் நாங்க நினைச்சுக் கூட பார்க்க முடியாது. நீங்களும் வாழ்க்கைல பல கஷ்டங்களை சந்திச்சு வந்தவரு. இனிமேலாவது உங்க லைஃப் நல்லா இருக்கனும். என் பொண்ணுக்காக பார்த்து எங்க சுயநலத்துக்காக உங்க வாழ்க்கையை அழிக்க நாங்க விரும்பலை. ப்ளீஸ் போயிடுங்க காலம் பூரா எங்க பொண்ணை நாங்க பாத்துப்போம்" என்று கையெடுத்துக் கும்பிட்டார்.
"காலம்பூரானா?. உங்களுக்கு பிறகு யாரு சார் அவளைப் பார்த்துப்பா. யாருக்கு சார் வாழ்க்கைல கஷ்டம் இல்லை?. முற்பாதி கஷ்டத்துல வாழ்க்கையை நகர்த்துனவன் தான். பிற்பாதி அவ கூட வாழ்க்கையை சந்தோஷமா வாழனும்னு பல கனவு கண்டேன் தான். இப்போ இவளுக்கு இப்படி ஆகிருச்சுனு நான் அவளை விட்டுப் போக முடியுமா சார்?. ஒருவேளை எங்க கல்யாணத்துக்குப் பிறகு நிலாக்கு இப்படி ஆனா என்னை விட்டுப் போக சொல்வேங்களா?. ப்ளீஸ் சார். நிலா எனக்கு வேனும். எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைங்க". தனது உயிரை தனக்குக் கொடுத்து விடும்படி மன்றாட.. அவர்கள் இருவரின் காதலின் ஆழத்தைப் புரிந்தவருக்கு மறுக்கும் எண்ணமுமில்லை. ஆனால் அவன் குடும்பம் இதற்கு சம்மதிப்பார்களா? என்ற பெருங்கவலை அவரை ஆட்கொண்டது.
"இப்போ காதல் மிகுதில உணர்ச்சிப் பெருக்குல இந்த முடிவை எடுக்கலாம் மாறன். ஆனா நாளைக்கே வாழ்க்கை ஒருநாள் வெறுப்புத் தட்டும் போது காதல் மேலேயும் நீங்க உயிரா நினைக்கிற நிலா மேலயும் வெறுப்பு வரலாம்"
"என்னால நிலாவை ஒருநாளும் வெறுக்க முடியாது சார். எங்களை நம்பி நாலு வருஷம் டைம் குடுத்தேங்கள?. இப்பவும் நம்புங்க சார். எங்க காதல் எங்களை எப்பவும் பிரிக்காது"
"எனக்கு இதுக்கு மேல என்ன சொல்றதுனு தெரியல மாறன். மறுக்கவும் மனசு வரல. உங்க வீட்ல பேசிட்டு வந்து சொல்லுங்க. உங்களுக்கு நிச்சயம் முடிஞ்சதா சொன்னாங்க. அதுலாம் உண்மையா பொய்யானு கூட ஆராயிற நிலைமைல அன்னைக்கு நான் இல்லை. ஆனா இப்போ அதைப் பத்தி பேசியாகனும்ல"
"அப்படி எதுவும் இல்லை சார். ஏன் அக்கா உங்ககிட்ட அப்டி சொன்னாங்கனும் தெரியல. நான் நிலாவைக் கல்யாணம் பண்ணப்போறது உறுதி. அதை யாராலயும் மாத்த முடியாது. நிலாவை பத்திரமா பாத்துக்கோங்க" என்று மனமே இல்லாமல் கிளம்பினான் அங்கிருந்து.
நான்கு வருடங்கள் கழித்து ஊருக்கு வந்த தம்பியை ஆசையாய் காண வந்த பைரவியிடம், "நிலாவோட அப்பாக்கிட்ட என்ன சொன்னக்கா?" என்ற மாறனின் கேள்வியில் அதிர்ந்து விழித்தாள் பைரவி.
தொடரும்.