அத்தியாயம் 25
"இவளை..." என்ற புஷ்பத்திற்கு தேன்மலரை திட்டவும் மனசில்லை. ஆனால் அவள் செய்து வைக்கும் வேலையும் பிடிக்கவில்லை.
ஒன்பதாவது மாதம் தான் வளையல் போட வேண்டும் என ஒரே பிடிவாதமாய் இருந்து தேன்மலர் சொல்ல, சக்திவேல் அவள் சொல்வதை தான் அவனுமே கேட்டான்.
"அவளே பயந்து போய் இருக்கா அப்பத்தா. எனக்கு அடி பட்டதுல இருந்து நைட்டு நான் அவளை பாத்துக்குறேனோ இல்லையோ அடிக்கடி எந்திச்சு என் கையைப் பிடிச்சு பாக்குறா. அவளை என்னை சொல்ல நான்?" என்று சக்திவேல் சொல்ல, அவன் பேசுவதும் சரி என்று தான் பட்டது.
திருமணத்தை போலவே அத்தனை விமர்சயாய் வளைகாப்பும் செய்ய சக்திவேல் நினைத்திருக்க, சந்திரா தான் முதலில் அதை மறுத்தது.
"பெரிய கண்டத்துல இருந்து தப்பிச்சு வந்திருக்கு சக்தி தம்பி. இப்போத்துக்கு எதுவும் கண்ணு படுற மாதிரி செய்ய வேண்டாம் பாக்கேன். வேற ஒன்னும் இல்ல. உங்க விருப்பத்தையும் பார்த்துக்கங்க!" என சந்திரா சொல்ல,
"நானே சொல்ல நினைச்சத தான் சக்தி சந்திரா சொல்லுது. இப்போ என்ன பிள்ளை பிறந்த ஒவ்வொரு நாளையும் திருவிழா ஆக்கிருவோம்!" என்றார் புஷ்பமும்.
சக்திவேல் மனைவியை தான் பார்த்தான். அவளுக்கும் ஆசை இருக்குமே என்ற எண்ணத்தில்.
"என்னை ஏன் பாக்கிங்க? எனக்கு அப்படி பண்ணனும் இப்படி பண்ணனும்னு எல்லாம் ஆசை இல்ல. ஆனா நான் சொன்னது தான்!" என்றதும் சக்திவேல் புருவம் சுருக்க,
"அதான் மாமா! என் கூட வந்துருவிங்க இல்ல?" என அவன் காதுக்குள் அவள் கேட்க, அதில் புன்னகை கொடுத்தவன் பின் மற்றவர்கள் விருப்பத்திற்கு விட்டுவிட்டான்.
மிக எளிமையாய் நெருங்கிய சொந்தங்களோடு சக்திவேல் தேன்மலர் வளைகாப்பு நடந்து முடிந்து அன்னை வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டாள்.
சரியாய் ஒரே வாரம் தான் அன்னை வீட்டில் இருந்ததும். இவ்வளவுக்கும் அந்த ஒரு வாரமும் சக்திவேலுமே இரவு அங்கே தான் அவளுடன் தங்கி இருந்தான்.
"உன் அம்மைக்கும் ஆசை இருக்குமுல்ல மலரு? தலை பிள்ளை அம்மா வீட்டுல தான பிறக்கணும்?" என்றதற்கும் பாவமாய் ஒரு பார்வை அவள் பார்க்க,
"எங்க இருந்தா என்ன? அவ சந்தோசமா இருந்தா போதாதா? சக்தி கூட தான இருக்கா? நாங்க தினைக்கும் வந்து பார்த்துட்டு போறோம். ரெண்டு நாள் தங்கிட்டு போறோம். வேண்டாம்னா சொல்லுவீங்க?" என மகளுக்காக ஜெகதீஸன் இறங்கி வர, அத்தனை பேருக்கும் டாட்டா காட்டி சக்திவேலோடு வீட்டிற்கு வந்துவிட்டாள்.
"நீ இருக்கியே!" என்ற சக்திவேல் அள்ளி அணைத்து முத்தம் கொடுப்பதை தவிர என்னை செய்வான் இத்தனைக்கு தன் மேல் பித்தாய் இருப்பவளை!.
இப்பொழுது இன்னும் அதிக கவனமாய் தான் பார்த்து கொண்டான். இன்னும் பத்து நாட்களில் எப்போது வேண்டுமானாலும் வலி வரும் என்பதால்.
"சக்தி வந்தா திட்டுவான் மலரு. சொல்லுதேன்ல நவுரு..." புஷ்பம் சொல்ல,
"அய்யோ அப்பத்தா! ஒரு உப்புமாக்கு இவ்வளவு அக்கப்போரா? பேசாம போய் உக்காருங்க. நான் செஞ்சு கொண்டு வாரேன்!" என்றாள் அவரை அடுப்பின் அருகிலேயே விடாமல்.
"சொன்னா கேளேன் டி. பிள்ளைய பெத்து சுவமானதும் எதையாவது செஞ்சு தா. இப்போ நவுரு.." என அவரும் விடவில்லை.
காலையில் அத்தனை அசதியில் புஷ்பம் உறக்கத்தில் இருக்க, ஆறு மணிக்கெல்லாம் பாத்திரங்கள் உருளும் சத்தத்தில் தான் எழுந்து வந்தார் புஷ்பம்.
"யாத்தே! அடுப்புல என்ன மலரு பண்ணுத? அதுவும் தனியா? என்னைய எழுப்ப வேண்டியது தான?" என வர,
"அய்யோ சத்தம் போட்டு எழுப்பிட்டேனா? நல்லா தூங்கிட்டு இருந்திங்க அப்பத்தா. எனக்கு பசிக்குது. அதான் எதாவது இருக்கான்னு தேடுனேன். இது தான் கிடைச்சது. நானே செஞ்சு நானே சாப்பிட போறேன்!" என்றவள் சொல்லில்,
"பசிக்குதா! இவ ஒருத்தி! சக்தியை எழுப்பினா எதாவது வாங்கியாருவான். என்னைய எழுப்பிருக்கலாம். அத விட்டுட்டு..." என்றவர் அவளை தூரம் இழுக்க,
"அப்பத்தா!" என்றவள் அதட்டலில் படக்கென நின்றுவிட்டார்.
"சத்தம் போடாத டி பிள்ளைக்கு ஆகாது!" என அதையும் மெதுவாய் புஷ்பம் சொல்ல, அவர் சொல்வதையெல்லாம் காதில் வாங்காமல் உப்புமாவிற்கு தாளிப்பு தயாராக, அந்த வாசனையில் குமட்டல் வர ஆரம்பித்துவிட்டது தேன்மலருக்கு.
"அய்யோ! சொன்னே கேட்டாளா! அவே வந்து என் கழுத்தைல்ல பிடிப்பான்.." என புஷ்பம் அவளை வெளியே காத்தோட்டமாய் அழைத்து வந்தார்.
"மாமா எப்ப அப்பத்தா உங்களை திட்டுச்சு?" அந்த நிலையிலும் அவள் வாய் பேச,
"உன் மாமேன சமாளிச்சுறலாம். உன்னால தான் கிழவின்னு உன் கொழுந்தேன் என்னைய கூறு போட்டுருவான்" என வெற்றியை சொல்ல, பேச்சு சத்தத்தில் சக்திவேல் எழுந்து வந்திருந்தான்.
"என்னாச்சு அப்பத்தா?" என வாசல் தூணில் தலை சாய்த்து நின்ற தேன்மலரைக் கண்டு அவன் பனியனோடு படிகளில் வேகமாய் இறங்க, புஷ்பம் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்திருந்தார்.
"சும்மா இருக்க மாட்டாம அடுப்புகிட்ட போயிருக்கா சக்தி. நான் எந்திக்கும் முன்ன இவ்வளவும்.." புஷ்பம் சொல்ல, சக்திவேல் அவளை முறைக்க,
"உப்மா செய்ய தான் போனேன் மாமா. பசிச்சது!" என்றதும் தான் புஷ்பம் அடுப்பை நோக்கி நகர,
"என்ன தேனு! என்னை எழுப்பாம நீ பண்ற சேட்டை.." என்றவன் அவளை அங்கேயே அமர சொல்லி உடன் அமர்ந்தான்.
"எப்ப வேணா வலி வரும்னு சொன்னது மறந்து போச்சா?" சக்திவேல் சொல்ல, தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
"என்ன ண்ணே? அண்ணிக்கு என்ன பண்ணுது?" என வெற்றி வர,
"ஒரு மைக் செட் இருந்தா வாங்குங்க.. ஆளாளுக்கு என்ன என்னனு..." என தேன்மலர் சொல்ல,
"இந்தா இதை சாப்பிடு!" என உப்புமாவைக் கொண்டு வந்து கொடுத்தார் புஷ்பம்.
மூன்று வாய் சாப்பிட்டு, "எனக்கு வேண்டாம்!" தேன்மலர் சொல்ல,
"காலங்காத்தால பிரியாணி கடை வேற இருக்காதே அண்ணி!" என்றான் வெற்றி கிண்டலாய்.
"வெற்றி!" என முறைத்த தேன்மலர் கெஞ்சலாய் கணவனைப் பார்க்க,
"அவ்வளவு தான் அண்ணே ஆஃப் ஆயிடும்!" என்றான் மீண்டும் வெற்றி.
"ப்ச்! சும்மா இரு டா!" என வெற்றியை கூறிய சக்திவேல்,
"என்ன வேணும் சொல்லு!" என்றான் மனைவியிடம்.
"மாமா!" என அங்கும் இங்கும் கண்ணை உருட்டியவள்,
"பசிக்குது! ஆனா சாப்பிட முடியல!" என்றாள்.
"பசிக்குதா வேற எதுவும் பண்ணுதா டி?" என புஷ்பம் அருகில் வர, குழப்பமே வந்துவிட்டது தேன்மலருக்கு.
"சரியா போச்சு போ!" என்ற புஷ்பம் நாட்டு மருந்தில் இறங்கி விட்டார்.
"வலி இல்லைனா எதுவா இருந்தாலும் சரியா போயிரும்!" என புஷ்பம் கொடுத்ததை தேன்மலர் முழுங்கிக் கொண்டாள்.
"எதுக்கும் ஆஸ்பத்திரிக்கு போயிருவோமா ண்ணே?" வெற்றி கேட்க,
"அதான் நானும் நினச்சேன் வெற்றி!" என்றான் சக்திவேல்.
"ஒரு அரை மணி நேரம் பொறு!" என்றார் புஷ்பம்.
"வேற எதாவது சாப்பிட வேணுமா? சோடா வேணுமா?" என ஒவ்வொன்றாய் சக்தி வெற்றி என கேட்டுக் கொண்டிருக்க, கோமளமும் வந்துவிட்டார்.
வெற்றி கொஞ்சம் விளையாட்டாய் பேசி நேரமும் நகர, முதல் ஒரு மணி நேரம் எதுவும் பெரிதாய் தெரியவில்லை.
அடுத்து தான் கொஞ்சமாய் வலியை உணர ஆரம்பித்தாள்.
"மாமா வலிக்குற மாதிரி இருக்கு..." என்ற தேன்மலர்,
"ம்மா..." என அடுத்த நொடியே அதிகமாய் சத்தமிட,
"தேனு!" என அவளை தூக்கிக் கொள்ள இருந்தவன்,
"சித்தி! ஒரு நிமிஷம்!" என சொல்லிவிட்டு அவன் மேலே அறைக்கு செல்ல,
"மாமா!" என அவனை தான் அழைத்தாள்.
"இப்ப வருவான் மலரு. ஆஸ்பத்திரி போயிரலாம்!" கோமளம் சொல்லிக் கொண்டு இருக்க, வெற்றி காரை தயார் செய்துவிட்டான்.
சட்டையை மாட்டிக் கொண்டு தேன்மலர் ரிப்போர்ட் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு சக்திவேல் வர, புஷ்பம் ஏற்கனவே பிரசவத்திற்கு என தயாராய் வைத்திருந்த பையோடு வந்துவிட்டார்.
இன்னும் அதிக வலி எல்லாம் வரவில்லை. பயத்திலேயே அழ ஆரம்பித்துவிட்டாள்.
"சுருக்கு சுருக்குன்னு வலிக்குது அப்பத்தா! இங்க தான் வலிக்குது. இப்ப வலி இல்ல ஆனா வலி வர்ற மாதிரி இருக்கு!" என போகும் வழி முழுக்க பேசிக் கொண்டே வர,
"சரி தேனு! ஒண்ணுமில்ல!" இந்த இரண்டு வார்த்தைகள் தான் சக்திவேலிடம்.
இடையில் கோமளம் சந்திராவிற்கு அழைத்து விஷயத்தை சொல்லி மருத்துவமனை வர சொல்லிவிட்டார்.
பிரசவத்திற்கான வலி தான் என்று மருத்துவர் கூறி ஊசியையும் செலுத்தி படுக்கையில் அவள் அமர்ந்திருக்க, எப்பொழுது அழுவளோ என அவளையே பயந்து பார்த்திருந்தான் சக்திவேல்.
இதோ பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டாள் தேன்மலர். சத்தியமாய் அப்படி ஒரு அலறலை எதிர்பார்க்கவே இல்லை சக்திவேல். அவன் அதிர்ந்து நிற்கும் பொழுதே அவளை உள்ளே அழைத்து செல்ல, அடம் செய்து அவ்ளோடேவே சென்றுவிட்டான் சக்திவேல்.
முதலில் மறுத்தாலும் அவனும் பதில் சொல்லி என தேன்மலர் உடனே அவள் கைகளைப் பிடித்துக் கொண்டே அவன் நிற்க,
"மாமா!" என்றவள் அழுகையும் அதிகரிக்க, சுகப் பிரசவத்தில் சக்திவேலின் மகள் பூமியை வந்தடைந்திருந்தாள்.
அவ்வளவு நேரம் தான் அவனை உள்ளே அனுமதித்து இருந்ததும். குழந்தையை அவனிடம் காட்டிவிட்டு சுத்தம் செய்து கொண்டு வர, அதற்குள் சக்திவேல் செய்தியை சொல்லவிட்டான் வெளியில் அனைவர்க்கும்.
குழந்தையை புது துணியில் கொண்டு வந்து சக்திவேல் கைகளில் தர,
"அப்பத்தா! வாங்கு!" என சட்டென அவரை முன்னிறுத்திவிட்டான் சக்திவேல்.
"சக்தி!" என அதிரும் போதே அவர் கையில் தேவதை வந்திருக்க, பார்த்து பார்த்து அத்தனை சந்தோசம் புஷ்பத்திற்கு.
"எப்படி இருக்கா அப்பத்தா?" சக்திவேல் கேட்க,
"அப்படியே உன் அம்மா தான் சக்தி!" என்றார் கண்கள் முழுதும் குழந்தையிடம் வைத்து.
"இத்துனுண்டு இருக்க பிள்ளைகிட்ட அவ்வளவு தெரியுதா அப்பத்தா உனக்கு?" என வெற்றி கிண்டல் பேச, அடுத்து சக்திவேலிடம் வந்தாள் அவன் மகள்.
சிலிர்த்து போனவன் மனம் முழுதும் நிறைந்தது மகள் வாசத்தில்.
அடுத்த சில நிமிடங்களில் தேன்மலரை அறைக்கு அனுப்பி வைக்க, தேன்மலரைக் கண்டதும் அவள் நெற்றியில் முத்தமிட்டு அவள் மனதையும் திருடிக் கொண்டான் அவளவன்.
மாலை கல்லூரி முடிந்து ராதிகாவும் வந்துவிட, தங்கதுரை, சந்திரா, ஜெகதீஸன், புஷ்பம், வெற்றி என மொத்த குடும்பமுமே அந்த மருத்துவமனையில் தான்.
குடும்பத்தின் சந்தோசமுமே அன்று தான் சக்திவேல் மகளால் தான் மீண்டதாய் இருந்தது குடும்பத்தினருக்கு.
தொடரும்..