அத்தியாயம் 26 எபிலாக்
"பூத்தட்டை கார்ல வச்சுட்டியா மலரு?"கோமளம் கேட்க,
"வேன்ல இருக்கு அத்தை. பூத்தட்டோட ஏழு தட்டும் அங்க தான் இருக்கு. அப்பத்தா தான் அங்க வைக்க சொல்லுச்சு. ராதிகா வேன்ல எல்லாரோடவும் ஜாலியா வர போறாளாம். அவ இருக்காளே! பாத்துக்குவா த்தை" என்ற தேன்மலர் பூவை தலையில் வைக்க, கோமளம் பின்னைக் குத்திவிட்டார்.
"சரி அப்போ வேனை புறப்பட சொல்லிருவோம். நாம கார்ல தான போறோம். சீக்கிரமே போயிரலாம். நீ போய் உன் மக அந்த சீமாட்டி சீவி சிங்காரிச்சு முடிச்சுட்டாளா பாரு" என்ற கோமளம் சிரிக்க,
"அப்படியே அப்பத்தாவை உள்ள வர சொல்லிருங்க த்தை. கார்ல இடம் பத்துமோ பத்தாதோனு உடம்பு நோவ வேன்ல போயிற போறாங்க!" என்று சொல்லி மகளை கிளப்பிவிட மேலே தன் அறைக்கு சென்றாள் தேன்மலர்.
இன்னும் நான்கு மணி நேரத்தில் திருநிறைசெல்வன் வெற்றியின் திருமணம் வள்ளியூரில் மணப்பெண் வீட்டில் வைத்து நடைபெற இருக்கிறது. அதற்காக தான் நான்கு வேன்கள் மாப்பிள்ளை வீட்டிலிருந்து தயார் செய்யப்பட்டிருக்க, அதுபோகவும் இரண்டு ஆட்டோக்களில் இளைஞர்கள் குழு. வெற்றி நண்பர்கள் காரில் தனித் தனியாய் என கிளம்ப தயாராய் இருக்கிறன்றனர்.
"இந்தா ஏத்த!" என்ற கோமளம் அழைப்பில் புஷ்பம் மருமகளிடம் திரும்ப,
"பார்த்து எடுத்து வையி. அங்க போய் தேட வேண்டிய வந்துது. வெளுத்து புடுவேன்!" என ராதிகாவிடம் சொல்லிவிட்டு கோமளத்திடம் வந்தார் புஷ்பம்.
"அங்க வெற்றி கூட இருக்காம இங்க என்னத்த பண்ணுதீங்க? மலரு உங்கள தேடுது. உள்ள போங்க. நான் வேனை அனுப்பி விடுதேன்!" என்றார் கோமளம்.
"அவே ருக்குகிட்ட பேச போன எடுத்தா கீழ வைப்பேனாங்கான். சட்டைய மாத்த சொல்லிட்டு தான் வந்தேன். நான் போய் பாக்கேன்!" என நகர்ந்தார் புஷ்பமும்.
"ஏலேய்! நீ இன்னுமா போன் பேசிட்டு கிடக்க?" என்று புஷ்பம் குரல் கேட்டு வெற்றியுடன் அந்த பக்கம் இணைப்பில் இருந்த ருக்மணி சிரித்துவிட,
"இப்ப சந்தோசமா? அப்பவே வச்சிருப்பேன். இம்சை டி நீ!" என்றான் இதோ இன்னும் சில மணி நேரங்களில் தன் மனைவியாக போகும் ருக்மணியிடம் வெற்றி.
"இந்தா கிழவி! பேசு!" என அலைபேசியை அப்பத்தாவிடம் கொடுத்துவிட்டு சட்டையை எடுக்க உள்ளே சென்றான்.
"தயாராகிட்டியாத்தா நீ?" புஷ்பம் கேட்க,
"அப்பவே தயாராகிட்டேன் அப்பத்தா! அலந்தரம் பண்ண ஆரம்பிக்கனும்ல? மலரக்காகிட்ட கூட வீடியோ கால்ல என் மேக்கப் எப்படி இருக்குன்னு காட்டுனேனே! சூப்பர்னாங்க!" என ருக்மணி சொல்ல,
"மலரு சொல்லட்டும். இந்த வெற்றிக்கு வீடியோ எதுவும் போட்டுறாத! பறந்துக்குட்டு நிக்குறான்!" என புஷ்பம் சொல்லி சிரிக்க,
"அப்பத்தா!" என பல்லைக் கடித்து போனை பிடுங்கியவன்,
"இரு உன்னை வந்து கவனிச்சுக்குறேன். பை!" என்று சொல்லி போனை வைத்துவிட்டு,
"சும்மாவே என்னைய கலாய்ச்சு தள்ளுவா. நீ வேற ஏன் கிழவி?" என்றவன்,
"வந்து குங்குமம் எடுத்து வை எனக்கு!" என்று பூஜை அறைக்கு அவரை அழைத்து சென்றான்.
ருக்மணி படிப்பை முடித்து இரண்டு வருடங்களாய் கணினி மையத்தில் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தாள்.
வெற்றி சொல்லியது போலவே மூன்று வருடங்கள் முடிந்திருந்தது அவனுக்கு பெண் கிடைக்க. ஒன்றரை வருடமாய் அவனுக்கு பெண் பார்த்து சலித்துவிட்டார் புஷ்பம்.
"பேசாம யாரையாவது லவ் பண்ணி கூட்டிட்டு வாயேன் வெற்றி. பொண்ணு கிடைக்க மாட்டுக்கு உனக்கு!" என புஷ்பம் சொல்ல,
"நேக்கா கல்யாணத்த செலவில்லாம சமாளிக்க பார்க்க இல்ல அப்பத்தா? அதுவும் காலம் போன கடைசில லவ்வு ஒரு கேடு எனக்கு!" என பேசி இருந்தான் வெற்றி.
இறுதியாய் ஜெகதீஸன் தான் தூரத்து சொந்தம் என்ற முறையில் வள்ளியூரில் இருந்து பெண்ணின் புகைப்படத்தை கொண்டு வந்து புஷ்பத்திடம் காட்ட,
"சிரிதேவி மாதிரி தான் இருக்கா. ஆனா இதே மாதிரி தான பொண்ணு வீட்டுல மாப்பிள்ளை போட்டோ கேட்பாங்களே?" என புஷ்பம் கிண்டல் செய்ய,
"அப்பத்தா! பொண்ணு சிரிதேவினா நான் கமல் தான். ஓவரா பேசாத!" என புகைப்படம் பார்க்காமலே அவர்கள் விருப்பதிற்கு சம்மதம் சொல்லி இருந்தான் வெற்றி.
"வெற்றி ண்ணே! இந்த ஒரு படத்துல ட்ரெயின் முன்னாடி ஸ்ரீதேவியைப் பார்த்துகிட்டே சட்டியை தலையில வச்சுக்கிட்டு கமல் ஆடுவாரே! அந்த கமலா?" என ராதிகா சிரிக்க,
"விஷம் விஷம்! கூடவே இருந்து குழி பறிக்க நீ?" என அவள் தலையில் கொட்டி இருந்தான் வெற்றி.
ராதிகாவிற்கு தான் முதலில் மாப்பிள்ளை பார்ப்பதாய் இருந்தது. வெற்றியுமே அது தான் சரி என்றும் சொல்லி இருந்தான்.
"அப்பத்தா! அண்ணேங்க அண்ணிங்கனு கல்யாணத்துக்கு பொறவு நான் எத்தன நாள் வந்து தங்கிற முடியும்? முடிஞ்ச வரயும் அவங்களோட இருந்துக்கிடுதேன் அப்பத்தா. ப்ளீஸ்! வெற்றிண்ணே கல்யாணத்துக்கு பிறவு நான் பண்ணிக்கிடுதேன். அதுவரை எதையாவது படிக்கேன்!" என்று ராதிகா சொல்ல,
"என்ன ராதி நிறைய யோசிச்சிருக்க போல? கல்யாணமாகி போய்ட்டா அப்படியே விட்ருவோமா என்ன? என்ன ண்ணே?" என்றான் வெற்றி தன் தங்கையின் பேச்சில் கொஞ்சம் வருந்தி.
சக்திவேலும் வெற்றி சொல்லிற்கு ஆமோதிக்க, "வாஸ்தவம் தான் ண்ணே! ஆனா யாரு என்ன சொன்னாலும் பொண்ணா பொறந்தா பொறந்த வீட்டுக்கு எப்பவும் விருந்தாளியா தான வர முடியும்? மலரண்ணி மாதிரி இருக்க எல்லாருக்கும் குடுத்து வைக்கணுமே!" என்று சொல்லி சட்டென அனைவரையும் கலங்க வைத்துவிட்டாள் ராதிகா.
நிஜம் தானே! பெண் பிறவிகள் எல்லாம் பிறந்த வீட்டிற்கு ஒரு நாள் விருந்தாளிகள் தானே!
அப்படி தான் ராதிகா சொல்லிய பின் அவள் விருப்பத்திற்கு அவளை மேலே படிக்க வைத்துவிட்டு வெற்றி திருமணம் முடிவானதும்.
ஜாதகம் முதல் அனைத்தும் ருக்மணியுடன் வெற்றிக்கு பொருந்தி போக, பெண் பார்க்க சென்ற அன்றே உறுதியும் செய்து கொண்டனர் ருக்மணியை வெற்றிக்கு.
திருமணத்திற்கு மூன்று மாதம் முன்பே ஒப்புதல் தாம்பூளம் மாற்றி இருக்க, மூன்று மாதங்களுக்கும் வெற்றியின் அலைபேசி 'ஸப்ஸ்க்ரைபர் நாட் ரீச்சாப்பிள் அட் த மொமெண்ட்!' என்ற அளவிற்கு கடலை வறுத்துவிட்டான் ருக்மணியிடம்.
அந்த மூன்று மாதங்களில் வெற்றி குடும்பம் மொத்தமும் ருக்மணியிடம் பழக எடுத்துக் கொண்ட நாட்கள் என அழகான நாட்கள் தான் ருக்மணிக்கும்.
"கல்யாணத்துக்கு அப்புறம் முதல் விருந்து வெற்றிக்கும் ருக்குக்கும் என் கையால நம்ம வீட்டுல தான். அவங்களுக்கு மட்டும் இல்ல. நம்ம வீட்டுல எல்லாருக்கும் அன்னைக்கு தான் என் விருந்து. அன்னைக்கு தான் என்னோட சமையல் திறமையை எல்லாரும் பார்க்க போறீங்க" வெற்றி முதற்கொண்டு அனைவரும் வீட்டிலிருக்கும் சமையம் ருக்மணியை அலைபேசி தொடர்பில் வைத்துக் கொண்டே தேன்மலர் இப்படி சொல்லி இருக்க,
"திருமண வீட்டில் திடுக்கிடும் தகவல்னு பேப்பர்ல நியூஸ் வந்துரும் அண்ணி! எதுக்கு இந்த விபரீத ஆசை. எதுவும் பிளான் பண்ணி என்னை தனிக்குடிதனம் அனுப்பலாம்னு பாக்குறீங்களா என்ன?" என வெற்றி சொல்ல விழுந்து விழுந்து சிரித்திருந்தான் சக்திவேல் தன் மனைவி முறைப்பதையும் கண்டு கொள்ளாமல்.
இப்படி நாட்கள் முழுதும் அத்தனை மகிழ்ச்சியையும் ஆசிர்வாதத்தையும் கொடுத்து சக்திவேல் குடும்பத்தை கொண்டாட்டமும் குதூகலமுமாய் தான் வைத்திருந்தது.
"என்ன நடக்குது இங்க?" என தன் அறைக்கு வந்து நின்ற தேன்மலர் கண்களை உருட்டி மூன்று வயது குழந்தை ரோஜாவை முறைக்க,
"அப்பா தான் ம்மா!" என்றாள் அவள் அன்னையின் கோபப்பார்வை கண்டு.
"நானா? நானா ஒரு டப்பா பவுடர் எடுத்து இப்படி கொட்டி வச்சேன்?" என தரையையும் அவள் முகத்தையும் பார்த்து சக்திவேல் கேட்க, ஆமாம் என்பதாய் தலையாட்டி மாட்டிவிட்டதாய் ஒரு சிரிப்பு வேறு ரோஜாவிடம்.
"உங்களை.." என வேகமாய் இருவர் அருகேவும் தேன்மலர் வர,
"நான் வெற்றிப்பாகிட்ட ட்ரெஸ் போட்டுக்குதேன் ப்பா!" என்று சொல்லி ஓட இருந்தவளைப் பிடித்து சட்டையை மாட்டிவிட, அதற்கு மேல் மொத்த பவுடரும் கொட்டியிருந்த முகத்தை கூட துடைக்க விடாமல் ரோஜா கீழே ஓட ஆரம்பித்துவிட்டாள்.
"நில்லு டி!" என தேன்மலர் அவளைப் பிடிக்க போக,
"விடு தேனு! அதான் அப்பத்தா இருக்கே! பார்த்துக்கும்!" என்றான் அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டு.
"மாமா! என்ன பண்றீங்க! சாரீ கசங்கிச்சு..." என்றவள் அவன் கைகளைப் பிரிக்க,
"ரெண்டு நாளா நைட்டு ரூமுக்கு வரல நீ!" என்றான் அவள் காதோடு இதழ்களை உரசி.
அத்தனை ஆட்டம் தென்மலருக்கு. ராதிகா, வெற்றி, இன்னும் அவள் உறவுகள் என கீழே இருந்து மருதாணி வைப்பதும், வரவேற்பு தாம்பூளப் பை தயார் செய்வதும், வெற்றியிடம் ட்ரீட் கேட்டு பிரியாணி சாப்பிடுவதும் என இரவு நேரங்கள் எல்லாம் மொத்தமாய் அனைவரும் ஹாலில் தான் தூங்கினர் கதை பேசியபடி.
மேலே ஒருமுறை வந்து ரோஜாவை தூங்க வைத்து கணவனுக்கு குட்நைட் சொல்லி ஓடிவிடுவாள். அவ்வளவு பிஸி தேன்மலர்.
"இன்னும் ரெண்டு நாள் அப்படி தான் மாமா!" என கிண்டலாய் தேன்மலர் சொல்ல,
"அவனவன் கல்யாணம் முடிஞ்சதும் அவனவன் வீட்டப் பார்த்து போயிருவான். இன்னைக்கு மட்டும் மாடிக்கு நீ வராம இரு!" என சக்திவேல் சொல்லி கன்னத்து முத்தம் போதாமல் இதழ்கள் ஊர்வலம் நடத்த துவங்க,
"மாமா! வேன் கிளம்புற சத்தம் கேட்குது! வாங்க வாங்க!" என்று சொல்லி சட்டென ஒரு முத்தத்தையும் அவனுக்கு கொடுத்து தேன்மலர் அவசரமாய் விலக,
"இரு தேனம்மா!" என்றவன் அவள் புடவையை சரி செய்து மடிப்பினை ஒழுங்குபடுத்தி,
"போ!" என்றான் கன்னம் தட்டி. இன்னுமே அவனோடு கொஞ்ச நேரம் கொஞ்சிக் கொள்ளலாம் போல தான் இருந்தது தென்மலருக்கு. ஆனாலும் முடியாதே! அவன் கன்னம் கிள்ளி தன் உதட்டில் வைத்துக் கொண்டு நிற்காமல் அவள் ஓட, சிறு புன்னகையுடன் இறங்கி வந்தான் சக்திவேல்.
"வெற்றிப்பா!" என ரோஜா ஓடிவர,
"ரோஸ்குட்டி ரெடியாகிட்டீங்களா?" என கைகளில் அவளை அள்ளிக் கொண்டான் வெற்றி.
"இவ்வளவு மேக்கப் யாரு உன் சித்தி வீடியோ கால்ல போட சொன்னாங்களா?" என ருக்மணியிடம் வீடியோ காலில் பேசியதை கிண்டலாய் கேட்க,
"நானே தான் போட்டேன். அப்பா தான் பவுடர் குடுத்தாங்க!" என்றாள் ரோஜா.
"சித்தப்பா கொஞ்சமா டச்சப் பண்ணி விடவா?" என கேட்டு குழந்தை முகத்தை திருத்தி விட்டான் வெற்றி.
வெற்றி மாப்பிள்ளையாய் வர, அருகே சக்திவேல், தேன்மலர், ராதிகா என உடன் வர, அப்பத்தாவின் கைகளைப் பிடித்திருந்த வெற்றி கையில் ரோஜா மொட்டு குதூகலமாய் தன் சித்தப்பாவிடம்.
"இவேன் வேற! விட்டா ஓடிறவா போறேன்? ருக்கு கையில இவனை பிடிச்சு குடுக்க வரைக்கும் என் கையை விட மாட்டான் போல!" என புஷ்பம் அலுத்துக் கொண்டாலும் வெற்றி அருகிலேயே தான் நின்றார் அந்த நாள் முழுதுமே.
"அப்பத்தா! என் கல்யாணத்துக்கு அம்மாவும் அப்பாவுமே வந்துட்டாங்க பார்த்தியா?" என ரோஜாவை வெற்றி காட்ட, அனைவரும் நெகிழ்ந்த தருணம் அது.
புஷ்பம், ரோஜா, தன் அண்ணன் அண்ணி என இவர்கள் முன்னிலையில் தான் வெற்றி ருக்மணியின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்திருந்தான்.
இதோ அடுத்ததாய் ஒரு தேன் சிட்டென ருக்மணி அனைவரின் உற்சாகக் கூச்சலோடு வெற்றி கரம்பிடித்து சக்திவேல் குடும்பம் எனும் கூட்டுக்குள் கை சேர்ந்திருக்க, இனி அவர்கள் வீட்டில் என்றும் புன்னகை கீதமே வாழும் நாள் முழுதும்.
சுபம்.