கண்ணீர் - 34
தன்னால் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற விரக்தியுடன் ஸ்டீயரிங்கில் தலைவைத்து சாய்ந்திருந்தான் ஆரவ், அவன் கார் நின்றது ஒரு சந்தை பகுதியில், வெகுநேரமாய் அங்கு நின்றிருந்தவனுக்கு, திடீரென்று அவன் காதில் ஏதோ சலசலப்பு சத்தம் கேட்கவும், நிமிர்ந்து வெளியே பார்த்தவனுக்கு கூட்டம் கூடி இருப்பது தெரிந்தது, எதுவோ பிரட்சனை என்பதை யூகித்து காரை விட்டு இறங்கியவன்,.. "என்னாச்சு அங்கே" என்று அந்த கூட்டத்திலிருந்து வந்த ஒருவரிடம் வினவ,... "ஒரு அம்மாவை பைக்ல வந்த ஒருத்தன் இடிச்சிட்டு போயிட்டான்ப்பா, நல்லவேலை ஒன்னும் ஆகலை" என்று அவர் சொல்லி செல்ல,... அந்த கூட்டத்திலிருந்து அந்த பெண்மணியும் அப்போது வெளியே வந்தார், கிட்டத்தட்ட அவன் தாயின் வயது தான் இருக்கும் அவருக்கு, அடியெதுவும் படவில்லை என்றாலும் பயந்து போயிருக்கிறார் என்பது அவரது முகத்திலேயே தெரிந்தது,...
"ஆட்டோ பிடிச்சு கொடுகட்டாமா" அங்கிருந்த ஒரு பெண் கேட்க,.. அந்த நேரம் தான் அவரருகில் வந்திருந்தான் ஆரவ்,.. "வாங்கம்மா உங்க வீட்ல நான் டிராப் பண்ணுறேன்" என்று எளிமையாகச் சொன்னான்...
"இல்ல பரவாயில்ல தம்பி" அவர் தயங்க,.. "போங்கம்மா, பயந்து வேற இருக்கீங்க" ஒரு பெண் வழியுறுத்தவும், அவரும் சம்மதித்து மெதுவாக அவன் காரில் ஏறிக்கொண்டார்,..
கார் மெதுவாக நகர்ந்தது, அந்த பெண்மணி அவன் அருகே அமர்ந்திருந்தார், அவருடன் ஆரவ் சுமூகமாக சில பேச்சுக்கள் தொடுக்க, அவரின் மனமும் நிதானமடைந்தது...
"இங்க வலதுபக்கம் திருப்புங்க தம்பி… அதற்குப் பிறகு நேரே போங்க," என்று அவர் முகவரி சொல்லியபடி வழிகாட்டினார்...
ஆரவ் அவர் சொன்ன வழியில் வண்டியைச் செலுத்தினான்,
வழியிலெல்லாம் அவனது உள்ளம் நித்திலாவின் நினைவோடு போராடிக் கொண்டு தான் இருந்தது...
சில நிமிடங்கள் கழித்து, ஒரு அமைதியான தெருவில் வண்டி நகர.. "இங்க தான் தம்பி…" அவர் கூறவும், அவனும் வண்டியை நிறுத்தினான்,.. "ரொம்ப நன்றிப்பா" என்று கனிவோடு கூறியவரிடம், அவன் மென்புன்னகை சிந்த, அவரும் காரிலிருந்து இறங்கினார்...
வீட்டின் கதவினை நோக்கி நடந்துச் சென்ற அவரை, ஆரவ் காருக்குள் இருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தான் ஒரு பாதுகாப்பிற்காக மட்டுமே...
அவர் வீட்டின் கதவைத் தட்ட, சற்று நொடிகளில் எல்லாம் கதவு திறக்கப்பட்டது, அந்தக் கணம்
அவன் இதயமே நின்றுவிடும் உணர்வு தான், காரணம் உள்ளிருந்து கதவைத் திறந்தவள் நித்திலா....
வீட்டின் வாசலில் அவளின் முகம் தெரிந்த அந்த நொடி, அவனது விழிகள் அதிர்ச்சியிலும் சந்தோஷத்திலும் கலங்கின....
"என்னமா இன்னைக்கு லேட்டாகிடுச்சு போல" என்று மென்புன்னகையுடன் அவள் கேட்க... "ஆமா நித்திலா வர வழில ஒரு பைக்காரன் இடிக்கிற மாதிரி வந்துட்டான்" கோமலம் சொல்ல... "ஐயோ என்னமா சொல்றீங்க" அவள் பதற... "பதறாதம்மா, அடியெல்லாம் படல, ஒரு தம்பி தான் என்னை வந்து விட்டாறு" என்று சொன்னவரின் பார்வை, அங்கிருந்த காரை நோக்கித் திரும்பியது...
அதே தருணத்தில், அந்த திசையை நோக்கி சென்ற நித்திலாவின் கண்களும் காருக்குள் அமர்ந்திருந்த ஆரவ்வை கண்டு உறைந்து போனது, அவனைக் கண்ட இதயம் திடீரென்று வேகமாக ஓடுவது போலத் தோன்றியது, விழிகள் அதிர்ச்சியிலும் பரவசத்திலும் கலந்து விரிந்தன....
ஆரவ்விற்க்கோ நெஞ்சைச் சிதறடித்த அலைகள் அடங்கிப் போனதுபோல்
முகத்தில் ஒரு கனமான நிம்மதி, 'அவளை கண்டுபிடிச்சுட்டேன்' என்ற நிம்மதியில் அவள் பார்வையோடு அவனது பார்வையும் பிணைந்தது....
பின்னர், நிதானமாக கார் கதவைத் தள்ளி திறந்து அடர்ந்த சுவாசத்தோடு வெளிவந்தவன், கதவை மூடிவிட்டு,
கண்களில் அலை மோதும் உணர்வுகளை அடக்கிக்கொண்டு,
"அம்மா… தண்ணி குடிக்க கிடைக்குமா?" என்று கேட்டான் அந்த பெண்மனியான கோமலத்திடம்...
அவன் முகத்தைக் கவனித்த கோமலம், அவரது குரலில் ஏதோ தாகத்தையும் சோர்வையும் உணர்ந்து, "வாங்க தம்பி… உள்ளே வாங்க, குடிச்சிட்டு போங்க,"
என்று பாசத்தோடு அழைத்தார்...
அவன் எதையும் யோசிக்காமல்,
அவரின் சொல்லுக்கு இணங்கி,
அந்த வீட்டின் படியில் ஏற, உள்ளே நின்றிருந்த நித்திலாவின் விழிகளோ இப்போது அவனை வெறித்தன,.. அவனோ அவள் கண்களைத் தவிர்க்காமல் நேராக அவளை பார்த்தான், விழிகளில் சொல்ல முடியாத ஏக்கம் அவள் முகத்தைப் பார்த்த ஒவ்வொரு நொடியிலும் தெறித்தது,..
நித்திலா, அவன் பார்வையை சந்திக்க முடியாமல் பார்வையை திருப்பிக் கொண்டாள், அந்தக் கணத்தில் எந்த வார்த்தையும் அவளால் பேச முயலவில்லை, ஆனால் 'இப்போது எதற்காக வந்திருக்கிறாய்' எனும் பார்வையுடன் தான் அவனை பார்த்தாள், ஆரவ்வோ, அந்த பார்வையைச் சகித்துக் கொண்டபடியே அந்த வீட்டின் உள்ளே நுழைந்திருந்தான்,...
"உட்காருங்க தம்பி நான் தண்ணீ எடுத்துட்டு வரேன்" அவனிடம் சொல்லிவிட்டு கோமலம் உள்ளே சென்று தண்ணீர் எடுக்க சென்று விட, நித்திலா அவன் பார்வையைத் தவிர்த்து உள்ளே போக முனைந்தாள்...
அந்த கணம்,"நித்திலா… நான் கொஞ்சம் பேசணும்" மெதுவாகவும் துடிப்போடும் சொன்னான் ஆரவ்,..
அவன் குரல் அவள் நடையை நிறுத்தினாலும், திரும்பிப் பார்க்கவில்லை,... "பேசுறதுக்கு ஒன்னும் இல்ல" என்றாள் சற்றே கடினக் குரலில்,..
"ப்ளீஸ் நித்திலா… ரொம்ப நொந்து போயிருக்கேன், இதுக்கு மேல என்னால முடியாது, என் கூட வந்திடு" என்றான் இறைஞ்சலுடன்,..
அவள் உடனே திரும்பினாள்
கண்கள் கோபத்தில் சிவந்திருந்தன, "வீட்டை விட்டு போக சொல்லிட்டு
இப்போ வந்துடுனு சொல்றீங்க, என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது, நான் ஒன்னும் நீங்க ஆட்டி வைக்கிற பொம்மை கிடையாது, நான் உங்க வீட்டை விட்டு போகணும்னு தானே அவ்வளவு டார்ச்சர் கொடுத்தீங்க, உங்களால நான் நிறைய கஷ்டப்பட்டுட்டேன், தயவு செய்து என்னை விட்டுடுங்க"
அவள் வார்த்தைகள் அவனது இதயத்தை குத்தின, அவள் விழிகளில் தெரிந்த காயம் அவன் உள்ளத்தையே சிதறடிக்க, ஒரு நொடி அவன் மூச்சே நிற்கும் அளவுக்கு குற்றவுணர்வு மேலோங்கியது....
அவளை நோக்கி ஓரடி நெருங்கியவன்,.. "ப்லீஸ் நித்திலா… என்னை மன்னிச்சிடு, எனக்குத் தெரியும், நான் உன்னை எவ்வளவு காயப்படுத்திருக்கேன்னு, அந்த நேரத்துல என் கோபம், என் அகம்பாவம் என் மூளையை மலுங்கடிச்சிடுச்சு, ஆனா உன்னை விட்டு பிரிந்து இருந்த இத்தனை மாதங்களும் நான் நிம்மதியா தூங்கல, உன் முகம், உன் குரல், உன் சிரிப்பு என்னை விடாம துரத்திட்டு இருக்கு, என்னால உன்ன விட்டு இருக்க முடியாது நித்திலா, என்னோட வாழ்க்கைய நீ இல்லாம சத்தியமா வாழ முடியாது" அவனது குரல் நொறுங்கி வந்தது, கண்ணீரால் மிதந்த அவன் விழிகள், அவளை தடுமாற வைக்க, அவனோ திடீரென அவளது காலிலேயே விழுந்து விட்டான்,...
அதிர்ச்சியில் அவள் கண்கள் விரிந்தன... "என்ன பண்ணுறீங்க? தயவு செய்து எழுந்துடுங்க" என்று பதறி பின்னால் நகர்ந்தாள்... அவனோ அவளது கால்களை இறுகப் பிடித்துக்கொண்டு "இல்ல நித்திலா…நீ என்னை மன்னிச்சா தான் நான் எழுந்திருப்பேன், நான் உன்னை இழக்க மாட்டேன், உன்னோட உயிரோட சேர்ந்து தான் என் உயிரும் உயிரா இருக்கு" அவனது குரல் சிதறிப்போனது, விழிகளில் கண்ணீரின் பிம்பம் வழிந்தது, அந்த காட்சி அவளது மனதைத் தள்ளாடவைத்தது....
அவளோ, அவன் இந்தளவிற்கு துன்புற்று தவித்திருப்பான் என்று நினைக்கவே இல்லை, மனமெல்லாம் பாரமாகியது, சித்ரா திரும்ப திரும்ப இதை தானே சொன்னார் என்பதும் நினைவில் வர, மனமெல்லாம் என்னவோ செய்தது,... 'நிஜமாவே இவருக்கு என் மேல அன்பு காதலெல்லாம் இருக்குமோ' என்று யோசித்தாள்,...
அந்த நேரம் பார்த்து தண்ணீர் எடுக்க போன கோமலம், தண்ணீர் எடுத்துக் கொண்டு அவ்விடம் வந்தவர், அவன் நித்திலாவின் காலில் விழுந்திருப்பதை கண்டு அதிர்ச்சியில் கையிலுள்ள செம்பையும் தவறவிட்டிருந்தார்.. தரையில் சிதறிய செம்பின் சத்தம் அந்த அறையின் நிசப்தத்தை கிழித்தது...
நித்திலாவிற்கோ அவரை கண்டு சங்கடம், அவரின் முன்பு ஆரவ் இன்னும் எழாமல் தன் காலில் விழுந்திருப்பதை கண்டு, சற்று கோபமும் எழ,.. "தயவு செய்து எழுந்துடுங்க" என்றாள் சற்று காட்டமாக, அவன் மீது கோபம் வருத்தமெல்லாம் இருந்தாலும் தன் கணவன் இன்னொரு பெண்மணியின் முன்பு தன் காலில் விழுந்திருப்பதை ஏற்றுக்கொள்ளவும் இயலவில்லை,..
அவனோ அசையாமல் சொன்னதையே மீண்டும் சொல்ல,.. அவளோ.."ஏன் இப்படி பண்ணுறீங்க, முதல்ல எழுந்துடுங்க" விட்டால் அவளே அவனின் காலில் விழும் நிலைக்கு தான் கெஞ்சினாள்,..
அவனோ அப்போதும் அசையாமல் அவள் காலில் விழுந்தபடியே கெஞ்சிக் கொண்டிருந்தான், நித்திலாவின் மனம் ஒருபுறம் உருகினாலும், அவன் கொடுத்த காயங்கள் இன்னும் பசுமையாய் இருந்ததால், அவள் கண்ணீரை அடக்கிக் கொண்டு கடுமையாய்...
"இப்படி கால்ல விழுந்து கெஞ்சுறதால என்னால உங்களை உடனே மன்னிக்க முடியாது, நான் அனுபவிச்ச வலி உங்களுக்கு தெரியாது, அதை மறக்க நேரம் வேணும், எனக்கு டைம் கொடுங்க, ஆனா, இப்போ என் முன்னாடி இருந்து கிளம்புங்க" என்றாள் பற்களை கடித்துக் கொண்டு....
அவளது வார்த்தைகள், அவனது இதயத்தை மீண்டும் துண்டாக்கின, இருப்பினும் குறைந்தபட்சம் அவள் 'டைம் கொடுங்க' என்றாவது கேட்டாளே என்று அவனுக்குள் சிறு நம்பிக்கையையும் விதைத்தது அவள் மன்னித்து விடுவாள் என்று,...
மெல்ல அவள் கால்களை விட்டு எழுந்தவன்,.. "எவ்வளவு நாள் டைம் வேணும்?" அவளது கண்களை நேராக பார்த்தபடி குரல் துடிக்க கேட்க, நித்திலாவோ "அதையெல்லாம்… நான் இப்போ சொல்ல முடியாது," என்று மெதுவாக சொன்னாள்,..
அவளின் அந்த பதில் அவன் மனதில் புயலை எழச் செய்ய திடீரென அவனது முகம் கடுமைக்கு தாவி,.. "அதையெல்லாம் சொல்ல முடியாதா? ஏன் சொல்ல முடியாது, உன் கால்ல விழுந்தும் மன்னிப்பு கேட்டாச்சு! இன்னும் என்னடி உனக்கு வேணும்? ஊர் உலகத்துக்கு முன்னாடி கால்ல விழவும் நான் தயார், ஆனா, உன்னை என்னைக்கும் விட்டு கொடுக்க மாட்டேன், இந்த கெஞ்சுறதும், காலை பிடிக்கிறதெல்லாம் எனக்கு செட்டே ஆகாது, ஆனாலும், நான் பண்ணது பெரிய தப்புனு நினைச்சதால தான் மனம் வருந்தி விழுந்தேன், மன்னிப்பு கேட்டா மன்னிக்க வேண்டியது தானேடி, அதை விட்டு ஓவரா பண்ணுறே!" அவனது வார்த்தைகள் இடியாய் விழ, நித்திலாவின் விழிகள் அரண்டு விழித்தது, அவளது கண்ணீர் கூட வெளியில் வராமல் உள்ளேயே சிக்கிக் கொண்டது...
சில நொடிகள் அவளை அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தவன், பின் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு தன்னை அடக்கிக் கொண்டபடி, "நாளைக்கு திரும்பவும் வருவேன், என் கூட வரதுக்கு ரெடியா இரு, திரும்ப ஓடி ஒளியலாம்னு நினைக்காத," என்று எச்சரித்தவன், புயலென வெளியேறி விட, அவளோ சுவரில் சாய்ந்து நின்றவண்ணம் மூச்சை அடக்கிக் கொண்டாள், இதயம் நொந்து வலித்தாலும், அந்த 'நாளைக்கு திரும்பவும் வருவேன்' என்ற அந்த வாக்கியம் அவளுக்குள் பதட்டத்தையும், தெரியாத ஒரு விசித்திர நிம்மதியையும் சேர்த்து எழச் செய்தது...