• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. P

    முதலும் முடிவுமாய்-28 (இறுதி அத்தியாயம்)

    அத்தியாயம் 28 வெளியே ரோஹித் நின்று கொண்டிருந்தான். அவனை அந்த நேரத்தில் அங்கு எதிர்பாராத மாறன் முதலில் அதிர்ந்தவன் பின், "வாங்க ரோஹித்" என்று உள்ளே அழைத்தான். வீட்டை சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே சோஃபாவில் சென்று அமர்ந்தான். அவன் உள்ளே வரவும், "யாரு இது இளா?" அதில் சிரித்தவன், "உன் ப்ரண்ட்...
  2. P

    முதலும் முடிவுமாய்-27

    அத்தியாயம் 27 "நிலா.. நிலா.. நான் தான்டி காரணம். உனக்கு இப்படி ஆனதுக்கு நான் தான்டி காரணம். நான் தான்.. என்னால தான் நீ இப்படி ஆகிட்ட". பைத்தியம் பிடித்தவன் போல் அழுகையில் அரற்றிக் கொண்டிருந்தவனைக் காண்கையில் மனோகரே பயந்து விட்டார். "மாறன் ஏன் அழுறேங்க?. என்னாச்சுனு சொல்லுங்க. எனக்கு நீங்க...
  3. P

    முதலும் முடிவுமாய்-26

    அத்தியாயம் 26 பைரவியும் அவள் கணவனும் குடும்பத்தோடு மாறனைக் காண வந்திருந்தனர். முன்னாடியெல்லாம் அவளது கணவன், 'உங்க வீட்டுக்கு வந்தா மருமகனுக்கு விருந்து வைக்க மாமியார் இருக்காங்களா மாமனார் இருக்காரா?. நீ போய் உன் தம்பியை பாத்துட்டு வரனும்னா வா' என்று அவளை மட்டும் அனுப்பி வைப்பவன், இன்று மாறன்...
  4. P

    முதலும் முடிவுமாய்-25

    அத்தியாயம் 25 "இப்போ நிலாவை எனக்கு கல்யாணம் பண்ணிக் குடுப்பேங்களா சார்?" என்று எதிர்பார்ப்புடனும் ஆசையுடனும் கேட்டான் மாறன். அவர் மாட்டேன் என்கவும் அவனுக்கு உயிர் போய் விட்டது. "ஏன் சார்?. நீங்க சொன்ன மாதிரி நாலு வருஷத்துல என்னோட தகுதியை உயர்த்திட்டு தான வந்துருக்கேன். நான் இப்போ நல்ல நிலைமைல...
  5. P

    முதலும் முடிவுமாய்-24

    அத்தியாயம் 24 மாறனும் நிலாவும் இரண்டு தண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருந்தனர். ஒன்று பிரிவு இன்னொன்று நினைவு. இரண்டும் ஒருசேரத் தாக்க இருவரும் உயிரற்ற உடலாய் அலைந்தனர். கல்லூரியில் இருந்தாலும் நினைவைத் தூதனுப்பி அவன் உலகுக்குள் அழைத்துச் சென்று விடுகிறான். தொலைதுரங்களில் இருந்தாலும் மனங்கள்...
  6. P

    முதலும் முடிவுமாய்-23

    அத்தியாயம் 23 அன்று நிலா வீட்டில் பேசி விட்டு வந்து ஒரு வாரம் ஆகி விட்டது. எம்பிஏ செர்டிபிகேட் இப்போது கையில் இருப்பதால், அவன் கல்லுரி நண்பன் ஒருவன் சொன்ன கம்பெனியில் வீடியோவில் இன்டர்வியூவ் முடித்து அந்த வேலைக்குத் தேர்வாகியும் விட்டான். ஆனால் அதில் கொடுமை என்னவென்றால் அது வடமாநிலத்தில் உள்ள...
  7. P

    முதலும் முடிவுமாய்-22

    அத்தியாயம் 22 வெளியே கயிற்றுக் கட்டிலில் படுத்து வானத்தில் தெரிந்த நிலவை வெறித்துக் கொண்டிருந்தான் மாறன். அவன் வாழ்வில் இரவு இவ்வளவு நரகமாக இருக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை. அன்று நிலா அவள் தந்தையுடன் சென்ற போது பார்த்தது. இரண்டு வாரங்கள் ஓடிவிட்டது. அதன் பின் அவளுடன் பேசவுமில்லை...
  8. P

    முதலும் முடிவுமாய்-21

    அத்தியாயம் 21 கதவைத் திறந்ததும் வெளியை முறைத்துக் கொண்டு நின்றிருந்தவளைக் கண்டு, "நிலா.. நீ எப்டி இங்க?. இந்த நேரத்துல இங்க என்ன பண்ற?. காலேஜ் போகலயா இன்னைக்கு?" என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனவன் திடீரென பேச்சை நிறுத்தி தன்னைக் குனிந்து கண்டவன், அவள் முன் சட்டை இல்லாமல் நிற்பதறிந்து ஓடிச்...
  9. P

    முதலும் முடிவுமாய்-20

    அத்தியாயம் 20 ஹாலில் மனோகரும் புவனாவும் யோசனையுடன் அமர்ந்திருந்தனர். மாறனை நினைத்து பாதி மயக்கத்திலும் பாதி சோகத்திலும் இருந்தவள் உள்ளே நுழைந்ததும் பெற்றவர்கள் இருவரும் அமர்ந்திருந்த கோலம் கண்டு திடுக்கிட்டாள். சாதாரண நாளென்னறால் இருவரும் அரட்டை அடித்து சிரிக்கும் சத்தம் வெளியில் வரை கேட்கும்...
  10. P

    முதலும் முடிவுமாய்-19

    அத்தியாயம் 19 "இப்போ எதுக்கு இவ்ளோ பதட்டம்?. நான் மாறனை லவ் பண்றேன். உன்னை அப்படி பாக்கலனு நீ என் ப்ர்ண்ட்னு சொல்லிட்டேன்" "அடிப்பாவி.. சொல்றதை முழுசா சொல்ல மாட்டியா?. கொஞ்ச நேரத்துல நெஞ்சே வெடிச்சுருக்கும்" என்று நெஞ்சைத் தடவி விட்டுக் கொண்டான். "நீங்க என்ன நெனச்சு பதட்டமானேங்க?"...
  11. P

    முதலும் முடிவுமாய்-18

    அத்தியாயம் 18 "ஐ திங்க் ஐ ஆம் இன் லவ் வித் யூ நிலா" என்று அவள் புறம் திரும்ப அவள் திகைத்து உறைந்திருந்தாள். "இத்தனை நாள் உன்னை நல்ல ப்ரெண்ட்னு தான் நினைச்சேன். டெய்லி பாத்துக்கிட்டு தான் இருப்போம்னு இருக்குற வரைக்கும் ஒன்னும் தெரியல. ஆனால் இன்னும் கொஞ்ச நாள்ல ஃபைனல் இயர் முடிச்சு ஆளுக்கொரு...
  12. P

    முதலும் முடிவுமாய்-17

    அத்தியாயம் 17 'இவளுக்கு எப்டி நான் வார வாரம் சென்னை போறது தெரியும்' என்று அதிர்ந்து முழித்தான். "என்னடா முழிக்குற?. அதுவும் சென்னை போயிட்டு ஒரே நாள்ல ரிட்டரன் வர்றியாம்" "அப்படிலாம் இல்லக்கா. உனக்கு யாரு சொன்னா?. குமரேசன் சொன்னானா? அவனை எங்க பார்த்த?" என்று சந்தேகமாய் வினவ. அவன் வருவதற்கு...
  13. P

    முதலும் முடிவுமாய்-16

    அத்தியாயம் 16 இன்னமும் நிலா வாய் திறந்து காதலை சொல்லவில்லை. வாய்மொழி வார்த்தையை விட அவள் மனமொழி சொல்லும் வார்த்தைகள் மேல் நம்பிக்கை வைத்தான் மாறன். தொலைபேசி வழியே கதைப்பதும் சிரிப்பதும் பகிர்வதுமாக நாட்களை கடத்திக் கொண்டும் வாரத்தில் ஒருநாள் அவளைக் காண்பதுமாக காதலை வளர்க்கிறான். எல்லா நேரமும்...
  14. P

    முதலும் முடிவுமாய்-15

    அத்தியாயம் 15 இரண்டு பேருக்கும் இரண்டு வாரங்கள் இரண்டு யுகங்களாகத் தோன்றியது. ஏதோ பிறக்கும் போதே ஒட்டிப் பிறந்தவர்கள் போல் ஒரு வாரம் பார்க்காததற்கே பசலை நோய் தாக்கியது இருவரையும். மாலை கல்லூரி விட்டு வெளியே வரும் போதே, 'ஒருவேள என்கிட்ட சொல்லாமலே என்னை சர்பிரைஸ் பண்ண பார்க்க வந்திருப்பானோ?'...
  15. P

    முதலும் முடிவுமாய்-14

    அத்தியாயம் 14 "உண்மையை சொல்லு மாறா?" என்று அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டு நின்றவளுக்கு துளியும் கோவம் இல்லை. அதற்கான காரணம் மட்டுமே தேவை. அதுவும் அவளுக்காக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவள் கண்களில் தேங்கி நின்றது. அவன் சட்டையை அவள் கையிலிருந்து விடுவிக்காமலே, "எதுக்காக இருக்கும்னு...
  16. P

    முதலும் முடிவுமாய்-13

    அத்தியாயம் 13 சென்னை ஸ்ரீவிக்கு பக்கத்து ஊர் போல் ஆகி விட்டது மாறனுக்கு. கடந்த மூன்று வாரங்களாக வாரம் ஒரு முறை பயணம். உடல் அலுப்பை மீறி மனதிலுள்ள வெறுமை போகிறது. அதுதான் அவனுக்கு வேண்டும். அன்று அவள் கல்லூரியை அடைவதற்கு முன்பாகவே கேட்டில் காத்திருந்தாள் நிலானி. கூடவே ரோகித் நின்றிருந்தான்...
  17. P

    முதலும் முடிவுமாய்-12

    அத்தியாயம் 12 முதல் இரண்டு சந்திப்புக்கள் கொடுக்காத தாக்கத்தை இந்த மூன்றாம் சந்திப்புக் கொடுத்தது நிலானிக்கு. எந்த அதிர்வும் ஏற்படாத வரை நிறைகுடத்தில் உள்ள தண்ணீர் அதுபாட்டுக்குத் தான் இருக்கும். ஒரு சிறு கல் பானையின் வெளிப்புறத்தைத் தொட்டுச் சென்றாலே நீரில் அதிர்வுகள் உண்டாகும். அது மாதிரி...
  18. P

    முதலும் முடிவுமாய்-11

    அத்தியாயம் 11 ஊருக்கு வந்து சேர்ந்து விட்டான். பகல் முழுவதும் ஓய்வு கொடுப்பவள் இரவானால் அந்தக் கதிரவனையே முழுங்கி இழுத்துக் கொள்ளும் நிலவு போல அவனை முழுதாய் ஆட்கொண்டு விடுகிறாள். புல்லாங்குழலின் அத்தனை துவாரங்களுக்குள்ளும் நுழைந்து நுழைந்து புறப்படும் பொண்வண்டு போல் இதயத்தில் மூலை...
  19. P

    முதலும் முடிவுமாய்-10

    அத்தியாயம் 10 இரவே பேருந்து ஏறி விடியலில் சென்னை வந்து சேர்ந்து விட்டான் மாறன். சென்னை வரை துணிந்து வந்து விட்டான். ஆனால் அவளை எப்படி பார்ப்பது என்று தான் தெரியவில்லை அவனுக்கு‌. 'வீடு இருக்கும் இடம் தெரியும். ஆனால் என்ன சொல்லிப் போய் அவளை பார்ப்பது?' என்று யோசித்தவனுக்கு அவளின் ஐடி கார்டில்...
  20. P

    முதலும் முடிவுமாய்-9

    அத்தியாயம் 9 அன்றைய நாள் முழுவதும் கொஞ்சம் சிடுசிடுப்பு நிறைய வேலை என்று எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு மனதில் எந்த நினைப்பும் ஏறாத அளவுக்கு உழைத்துக் கொண்டிருந்தான் மாறன். என்னமோ தெரியவில்லை. வேண்டாம் என்று ஒதுக்க ஒதுக்கத் தான் நிலானியின் நினைவுகள் விரட்டி அடித்தது. ஒருபக்கம் நிலானியை...