• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அக நக முகநகையே..5

சசிகலா எத்திராஜ்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
17
3
3
Karur
அத்தியாயம்…5


பாரிவேந்தன் மகளை மனைவிடம் கொடுத்து விட்டு விருட்டென்று வீட்டை விட்டு வெளியேறினான்.


நம்பிக்கை என்கிற நூலிழை அறுந்து போனால் அங்கே பொய்யான அன்பிற்கும் பாசத்திற்கும் வேலை இல்லை என வாழ்க்கை ஒவ்வொரு முறையும் வலிக்க வலிக்கக் கற்றுத் தருவதை உணர்ந்தவனுக்கு அந்நொடிகளை கடக்க இ்யலவில்லை. தாய்க்கே இந்த மனநிலை என்றால் தாரத்திற்கு எவ்விதம் மாறுமோ…. இன்றைய சூழல் அவளுக்கு உழைக்குமளவுக்கு உற்சாகமும் வேலை மேலே இருக்கும் அதீத பற்றுதலும் ஓட வைக்கும். நாளாக நாளாக எவ்விதம் மாறும் என எவ்வரும் அறியமுடியாது.


தாய் சொல்வதைப் போல பெண் பிள்ளை நாளை வளர்ந்து இதே கேள்வியை கேட்கும் போது இப்போது போல அன்றும் கூனிக் குறுகி நிற்கும் சூழ்நிலை வந்தால் என்ன நடக்கும். இப்பயே தாங்கிட முடியாத இதயம் அப்போது சுக்கு நூறாக உடைந்து விடாதா எனப் பல குழப்பங்களுக்குள் சிக்கிக் கொண்டவனின் மனநிலை ஒரு நிலையில் இல்லை பாரிவேந்தனுக்கு.


‘’அத்த நீங்க பேசுவது சரியா… ஏன் இப்படி வார்த்தையில் நெருப்பை அள்ளிக் கொட்டினீர்கள்?’’ என முகச் சிவந்து கத்தியவளோ அதில் முகிழினி முழித்து ‘’வீல் வீல்’’ அழுகை கூட்ட ‘’ஒண்ணுமில்லடா கண்ணு…. அழக் கூடாது பப்பிமா எதுக்கு அழுறீங்க’’ எனச் சமாதானப் படுத்தியபடியே அவளைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் விரைந்தாள் குந்தவை.


தனலட்சுமியோ மகன் ஒருபக்கம் எழுந்து போனதும் மருமகளும் கோபத்துடன் சென்றதையும் மகளோ முறைத்தபடி தன்னைப் பார்ப்பதைக் கண்டவர்க்கு அவரசப்பட்டுவிட்டோமோ என அந்நேரத்தில் தோன்றினாலும் நடப்பதை தான் சொன்னோம். புதியதாக எதுவும் சொல்லவில்லையே என நினைத்தவர் மகளிடம் ‘’என்னடி என் முஞ்சியில என்ன எழுதி ஒட்டிருக்கு… பார்த்துகிட்டே உட்கார்ந்து இருக்கே … போய் குளி’’ எனச் சிடுசிடுத்தவர் எழுந்து வாசலுக்கு வந்தார் தனலட்சுமி.

அருமைபெருமையாக வளர்த்த தன் மகன் இன்று வேலைக்குப் போகாமல் பொண்டாட்டிக்கிச் சேவகம் செய்துகிட்டு இருக்கான். ஊரே இதைக் கண்டு காறி துப்பது. நக்கலும் கேலியும் நய்யாண்டியுமாக எத்தனை மறைமுக பேச்சுகளைக் கேட்டுக் கேட்டு உள்ளம் கொதித்தவர்க்கு ஆற்றமாட்டாமல் சொல்லிவிட அது அணுகுண்டாக வெடித்து விட்டது.


இதுவும் ஒரு வகையில் நல்லது தான். நாரதர் கலகம் நன்மையில் முடிவது போல இதுவும் நன்மையில் முடியும் என நினைத்தவர் குளம்பிய குட்டையில் தானே மீன் பிடிக்க முடியும் என நினைத்து மகன் பார்த்தப் பார்வையில் வெறுமை நிறைந்த கண்களோடு வெறித்துப் பார்த்துச் சென்றது அவருக்குள் வலியையும் கொடுத்தது.


வலி கொடுக்கும் எனத் தெரிந்து புண்ணைக் கீறாமல் விட்டால் நாளை அது பெரியளவில் சீயும் ரத்தமாகச் சதையை பியத்து எடுக்க வேண்டிய நிலை வரலாம் தானென எண்ணித் தான் பேசியது வலித்தாலும் அமைதியாக நின்றார் மகன் வரும் திசையைப் பார்த்துத் தனலட்சுமி.


அறைக்குள்ளே குந்தவை முடிந்தவரை மகளைச் சமாளித்து அழுகையை நிறுத்திப் பாலை அருந்த வைத்தவளோ தன் அலைபேசியிலிருந்து வேலைக்கு இன்று விடுமுறைக்கு மெயில் அனுப்பியவள் மகளோடு அங்கே ஓய்ந்து அமர்ந்து விட்டவளின் மனம் கலங்கியது.


ஒருவனை எந்தளவுக்கு வதைப்பது…. ஊரார் தான் வாய்க்குக் கிடைத்த அவலாக எதையோ நினைத்துப் பேசினால் அது உண்மையாகுமா...தனக்காகத் தன்குழந்தைக்காகத் தன்னுடையய அடையாளங்களை அத்தனையும் விட்டுட்டு இருப்பவன் தன் மேல் எந்தளவுக்குக் காதலைக் கொண்டிருக்கணும். அப்படி இருப்பவனை வேலை வெட்டி இல்லாத வெட்டிப் பையனாகவும் பொண்டாட்டிக்குச் செம்பு தூக்கிறான் ஊரார் பேசுவதை இங்கே அப்படியே வந்து ஒப்பிக்க வேண்டுமா எனத் தனலட்சுமியின் மேலே அதீத கோபமே வந்தது.


வபிள்ளையைப் பக்கத்திலேதிலே வைத்துக் கொண்டு பேசக் கூடாத வார்த்தைகளைச் சிதற விட்ட தனலட்சுமி மீது கோபம் அதிகரித்தாலும் அவரும் அங்கே தன்னந்தனியாக வைசாலியை வைத்துக் கொண்டு சிரமம் தான் படுகிறாரென அறிந்தவள் தான். ஆனால்….. என நினைத்தவள் அதற்கு மேலே யோசிக்காமல் இன்னும் வெளியே போன கணவன் வரவில்லையேயென எண்ணி அவனின் அலைபேசிக்கு அழைக்க அதுவோ அறைக்குள்ளே ஒலி எழுப்ப அதைப் பார்த்தவளுக்கு சட்னு விழிகள் கலங்கின.


மனம் ஒடிந்து போனவன் இன்னும் வரலயே என்கிற பயம் அவளுள் அலையாகப் பெருக மகளைத் தூக்கிக் கொண்டு அறையிலிருந்து வெளியே வந்தவள் ‘’வைசாலி வைசாலி’’ எனக் கூப்பிட அறையிலிருந்து வேகமாக வந்தவளிடம் ‘’இந்தப் பாப்பாவை பார்த்துக்கோ…. நான் உன் அண்ணனை இன்னும் காணாம்… என்னனு பார்க்கிறேன்’’ எனச் சொல்லவும் ‘’சரி அண்ணி’’ எனக் குழந்தையை வாங்கியவளின் விழிகளும் கண்ணீரைச் செறிந்தது.


அதைக் கண்டவளோ ‘’ஏய் லூசு… ஏன் இப்படி கண் கலங்கிற?… உன் அண்ணனே இங்கே தான் எங்காயாவது போயிருப்பாரு… வந்திருவாரு’’… எனத் தேறுதாலாகச் சொல்லியவளைப் பார்த்த வைசாலியோ ‘’என்னால் தானே இத்தனை பிரச்சினை’’ என அழவும் அதைக் கண்டவளுக்கு மனம் வலித்தது.


காலேஜ் கூட முடிக்காதவளுக்குச் சிறுபறவையாகச் சிறகடித்துப் பறக்க வேண்டியவளை கூண்டிலடிக்கும் நிநிலையைக் கண்டவளின்உள்ளம் கொதித்தாலும் அதைச் சொல்லி மேலும் வருத்தப்படவிடக் கூடாது என நினைத்தவள் ‘’ஏய் சின்னக் குட்டி… இதெல்லாம் ஒரு பிரச்சினையா…. அப்படியே போகிற போக்கில் ஊதித் தள்ளிட்டுப் போகணும். பெண்ணா பிறந்தால் இப்படி தான் எதாவது சொல்லி முடக்கப் பார்க்கத் தான் செய்வார்கள். அதற்காக நாம் முடங்கிப் போய்ருலாமா … தைரியமாகத் தில்லாக நிற்க வேண்டாமா… உன்னை அப்படியெல்லாம் உன் அண்ணனும் விட்டுற மாட்டாரு. நானும் விடமாட்டேன்’’ எனச் சொல்லி அவளின் தோளைத் தட்டிக் கொடுத்த குந்தவை ‘’நான் போய் உன் அண்ணனுக்கு மந்திருச்சு கூட்டிட்டு வரேன்…. தோசை மாவு பிரிட்ஜ்ல உள்ளே இருக்கு … எதாவது தொட்டுக்கச் செஞ்சு சாப்பிடுங்க. பாப்பாவுக்கும் ஊட்டி விடு…. இன்னும் கொஞ்ச நேரம் ஆனால் அப்பி அப்பி இராமாயணம் பாட ஆரம்பிச்சால் நிறுத்தமாட்டாள்’’ எனச் சொல்லித் தன் நாத்தனாரைச் சிரிக்க வைத்துவிட்டு அவசரத்திற்கு மாட்டிருந்த சுரிதார் மேலே ஷாலை எடுத்துப் போட்டபடியே வெளியே வர அங்கே தனலட்சுமி தெருவைப் பார்த்தபடியே சோர்ந்து நிற்பதைக் கண்டவளோ மனதிற்குள் கோப அலை தாண்டவமாடியது.


ஆனால் அதை இப்போது பிரதிபலிக்கக்கூடிய நேரமில்ல என நினைத்தவள் ‘’அத்த உள்ளே போங்க. நான் போய் அவரைப் பார்க்கிறேன்’’ என வெறுமையான குரலில் சொல்லிவிட்டு செருப்பலை அணிந்தவளோ விறுவிறுவென்று வெளியேறினாள் குந்தவை.

மருமகள் போவதைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடியே உள்ளே போக அங்கே முறைத்தபடி மகள் நிற்பதைக் கண்டும் காணாமல் முகிழினியை தூக்க குழந்தையோ ‘’அப்பி… அப்பி’’… எனச் சிணுங்கினாள்.


‘’அப்பா வந்திருவாரு ராசாத்தி’’ எனச் சொல்லிய தனலட்சுமி சமையறைக்குச் சென்று குழந்தைக்குக் கொடுக்க என்ன இருக்கு எனப் பார்க்கத் தொடங்கினார் தனலட்சுமி.


கணவன் எப்போதும் செல்லும் நடைப்பயிற்சி மைதானத்தை நோக்கி நடந்தவளுக்குக் கணவன்மீது கோபம் வந்தது குந்தவைக்கு. எதையும் சீரிஸாக நினைக்காமல் ஜாலியாக எல்லா விசயத்தையும் கேண்டில் பண்ணுகிறவன் இப்படி பண்ணியது நினைச்சு வருத்தம் தான்.


என் பொண்டாட்டி வேலைக்குப் போறா. நான் வீட்டைப் பார்த்துக் கொள்வதால் என்ன குறைந்து போயிட்டேன். அந்தக் காலம்போல இல்லாமல் பெண் வேலைக்குப் போவதும் அதில் வரும் வருமானத்தை ஆண்கள் பயன்படுத்துவது அவ்வளவு பெரிய தவறா எனப் பலரிடம் ஆர்க்யூமென்ட் பண்ணுகிறவன் இன்று மனமுடைந்து போனது குந்தவையை ஆழமாகப் பாதித்தது.


இத்தனை நாட்கள் பலருக்குக் கேலி பொருளாக மாறிப் பேசினாலும் அந்தந்த நேரத்திற்குத் தகுந்த மாதிரி சாட்டையடியாகப் பதில் சொல்லியவள் தான் கணவனுக்காக அவள். இன்று அத்தை என்பதால் அதிகமாகப் பேச முடியாமல் போனது மனதிற்குக் கஷ்டத்தைக் கொடுத்தாலும் அவனை விட்டுக் கொடுக்காத மனம் தேடிச் செல்ல அங்கே சிமெண்ட் பெஞ்சில் தலையைக் கையில் தாங்கியபடி அமர்ந்திருந்தவனின் உருவம் அவளுள் ஒருவித நடுக்கத்தை உருவாக்கியது குந்தவைக்கு.


வேகமாக அவனை நெருங்கியவளோ ‘’பாரி, பாரி’’ என அவனை உலுக்கியபடி அவன் அருகே அமர்ந்தவளோ ‘’ஏன்டா இப்படி பொண்டாட்டியை பறிக் கொடுத்தவன் மாதிரி உட்கார்ந்து இருக்க’’ எனக் கேட்டக் குந்தவையைத் திரும்பிப் பார்த்தவனின் முகமோ ரௌத்திரத்தைக் கொள்ள ஓங்கி கன்னத்தில் அறைந்தான் பாரிவேந்தன்.


இடம் பொருள் எதுவும் கண்டுக் கொள்ளாமல் மனைவி சொல்லிய வார்த்தைகளின் வலி மேலும் அவனின் இயலாமையை அதிகப்படுத்தக் கண்மண் தெரியாத கோபம் கட்டுக்கடாங்மல் பெருகியது அவனுக்கு.


‘’என்னடி பேசற …அச்சாணி மாதிரி வார்த்தைகளைக் கொட்டற… என் அம்மா தான் பேசத் தெரியாமல் பேசறாங்க என்றால் நீயுமா’’ எனக் கேட்டவனை முகம் சிவக்க அடித்தக் கன்னத்தில் கையை வைத்தபடி அதிர்ந்து பார்த்தவளின் விழிகளில் கண்ணீர் பெருகியது.


‘’அவங்களுக்குத் தான் நான் எதுவும் லாயக்கிலாதவன் நினைச்சு படிச்சு முடிக்காத பிள்ளையை நான் நல்லா இருக்கிறப்பவே ஒருத்தன் கையிலே பிடிச்சு கொடுக்கிறேனு இரண்டாம் தாரமாகப் பேசப் போறனு வைசாலிக்குச் சொல்லிச் சாவயடிக்கிறாங்க. உன்கிட்ட என்ன இருக்கு. நீ சம்பாரிச்சா உரிமையா செய்யுடா சொல்லாம். நீயே உன் பொண்டாட்டி சம்பாத்தியத்திலே வாழறவன் எனச் சொல்லாமல் நீ கையாலாகதவன் பேசற மாதிரி நீயும் இப்படி பேசற’’… எனக் கோபத்தில் கொந்தளித்தவனைப் பார்த்தபடியே கண்ணீர் வழியே மௌனமாக அமர்ந்திருந்தாள் குந்தவை.


‘’நான் மட்டும் வீட்டில் இருக்கணும் ஆசையா. எனக்கும் வேலைக்குப் போய்ப் பொண்டாட்டி பிள்ளைகளை அம்மா தங்கையைத் தங்கத்தட்டில் தாங்கனும் ஆசை தான். ஆனால் எனக்குத் தெரிந்தெல்லாம்’’ எனப் பேச முடியாமல் திணறியவனின் விழிகளிலும் நீர் நிறைந்தது.


‘’நான் ஆசைப்பட்டதை சாதிக்கணும் என்கிற வெறியிலே அதற்காக மறைமுகமாக உழைச்சாலும் என் நேரம் எதிலும் ஜெயிக்க முடியாமல் உன்னைக் கஷ்டப்படுத்தி உனக்குப் பேச்சு வாங்கிக் கொடுத்து இருக்கேன். எனக்காக நீ இன்னும் எத்தனை கஷ்டப்படுவ… எத்தனை பேரிடம் பேச்சு வாங்கிறனு எனக்குத் தெரியாதா. ஆனால் ஒருயிடத்தில் கூட என்னை விட்டுத் தராமல் இருக்கிறவளை மேலும் அவமானத்தை வாங்கிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன். எனக்கேன் இந்தச் சினிமா மோகம் வந்தது. அதில் கதை எழுதி இயக்கணும் பெரியாளாக வரணும் ஏன் தோன்றியது?. அதற்காகப் பொண்டாட்டியையும் கஷ்டப்படுத்தி பெத்தவளையும் கஷ்டப்ப
டுத்திக் கிட்டே இருக்கேன்’’ எனத் தன் மனக் குமறலைக் கொட்டினான் பாரிவேந்தன்.


தொடரும்...


கதைப் படிப்பவர்கள் உங்கள் கருத்துகளைக் கூறுங்கள் மக்கழே.. உங்கள் கருத்துகளுக்காக ஆவலாக காத்திருக்கிறேன்...