அத்தியாயம்…6
காலை வெயில் சுருக்கென்று முகத்தில் பட்டு ஒருவித எரிச்சலைக் கொடுக்க அவ்விடத்தை விட்டு நகராமல் தனக்குத் தானே குமறிக் கொண்டு தன்னுடைய இயலாமையால் குமறிக் கொண்டிருப்பனை சிறிது நேரம் எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள் குந்தவை.
அவனின் கனவு எவ்வளவு பெரிது. அதற்காக வீட்டிலிருந்தே எந்தளவுக்கு உழைக்கிறானென அறியாதவள் இல்லையே. தன்னையும் பார்த்துக் குழந்தையும் கவனித்துக் கொண்டு வீட்டு வேலையின் வரவுச் செலவு என எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறவன் நடுநசியில் தனக்கான வேலைக்கான எழுத்து வேலைகளையும் மற்றபடி சந்திக்க வேண்டியவர்களைப் போய்ச் சந்திப்பதும் அதில் தோல்வியாகி போனால் வருந்துபவனை தேற்றுவதும் மீண்டும் வேறு ஒருவரை சந்திக்க என ஆராய்ந்து எப்படி போனால் ஜெயிக்கலாமென முழு மனசோட போராடிக் கொண்டுத் தான் இருக்கிறான் பாரி.
இதையெல்லாம் அறிந்தவள் தான்…. அவனின் குறிக்கோளை நோக்கி அலைகிறவனை குற்றம் சொல்ல முடியாது. அது இவர்களுக்குள் மட்டும் தெரிந்த ரகசியம். அம்மாவிடமோ தங்கையிடமோ கூடப் பகிர்ந்து கொள்ளாமல் தாலி கட்டி மனைவியாக வந்தவளிடம் தன்னுடைய லட்சியத்ததைப் பகிர்ந்து கொண்டவன்.
அவன் விரைவில் சினிமாத் துறையில் ஜொலித்து ஜெயிப்பானென எண்ணத்தை அவனுள் விதையாகத் தூவி விருட்சமாக வளர விட்டுக் கொண்டிருக்கிறாள் கிட்டதட்ட மூன்று ஆண்டுகளாகக் குந்தவை.
அவனுக்கு இது கடினமான காலம் எனத் தெரிந்தும் வெளிப் பார்வைக்கு மனைவியின் காசில் உட்கார்ந்து சாப்பிடறானெனச் சொல்பவர்களைச் சிரிப்புடன் கடந்து செல்வது அவனிடமிருந்த தீவரமான சினிமாவின் மோகம்.
அதில் ஜெயித்துத் தனக்கான அடையாளத்தை உருவாக்கி விடுவேன் என ஆழ் மனதில் உருவேற்றிக் கொண்டுப் போராடிக் கொண்டிருக்கிறான் பாரி.
சிறிது நேரம் கணவனைப் பார்த்தபடி இருந்தவளுக்கு அதன்பின் எதுவும் பேசிச் சங்கடத்திற்கு ஆளாக்காமல் ‘’வாப்பாரி வீட்டுக்குப் போகலாம்…. இல்லனா உன் பொண்ணு ஊரையே கூட்டிருவா… அப்பி, அப்பி’’… எனச் சொல்லியதும் சட்னு எழுந்து நின்றவனைக் கண்டவள் ‘’’ஆனாலும் உனக்கு என்னைவிட உன் பொண்ணு மேலே தான் அன்பு பாசம் பற்றுதல் எல்லாம்… நானெல்லாம் உனக்கு ஒரு ஆளாகத் தெரியல’’… என முணுமுணுத்தவளைக் கண்டு ‘’ஏய் அவ சின்னக் குழந்தையடி அவளோட போட்டி போடற …. அவளும் நீயும் ஒண்ணா’’ எனச் சொன்னவன் மனம் பல குழப்பங்களைச் சுமையாகக் கனத்தாலும் மகள் எனச் சொன்னவுடன் எழுந்து நின்று விட்டான் பாரி வேந்தன்.
‘’ம்க்கூம் உனக்கு எப்பவும் மக தான் வேணும்… என்னையும் தேடி வருவீல்லே அப்ப இருக்கு உனக்கு’’ எனக் கண்ணைச் சிமிட்டியவளை உற்று நோக்கியவனோ அவள் தன்னை இயல்புக்குத் திருப்பச் செய்யும் பேச்சுகள் அவனை இலகுவாக்க லேசான சிரிப்புடன் ‘’அம்மணி உன்னைத் தேடும்போது நீ மட்டுமே கண்ணுக்கு விருந்தாவே’’ எனக் கேலியாகச் சொல்லிச் சிரிக்க சட்னு முகம் சிவந்தவளோ ‘’வெளியே வச்சு என்ன பேசற’’ என்றவள்…. ‘’ஆனால் வீட்டுக்குக் கிளம்பலாம் வா. அங்கே நம் அறையில் நமக்கான பஞ்சாயத்து காத்திருக்கு’’ என இறுக்கமான குரலில் சொல்லியதும் ‘’ஏய் சாரிடா … அடிச்சிட்டேன்ல…. பொது இடம் பார்க்காமல் மிருகத் தனமாக நடந்து கொண்டேன். என்னை நினைச்சே எனக்கு அறுவெறுப்பாக இருக்கு’’ என முகம் மாறியவனின் குரலோ அழுத்துடன் தழுதழுத்து அவளின் கன்னத்தை வருட…
அதைத் தட்டி விட்டவளோ ‘’சாரி…
பூரி கிழங்கு… இப்ப நமக்கிடையே இந்த வார்த்தை அதிகமாக வருது… இது நல்லதுக்கல்ல’’ என்றவள் ‘’வா அங்கே வீட்டில் அத்தையும் வைசாலியும் தவித்துப் போய்ருவாங்க. நீ வந்து பேசு. அவளுக்கு இன்னும் இரண்டு வரும் கழித்து ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணலாம் ஊரே கூட்டினு சொல்லு… அதுவரை அவளை வேணுமானால் இங்கே இருந்தே படிக்க ஏற்பாடு செய்யலாம். அவளும் படித்து ஒரு வேலைக்குக் காலூன்றி நின்றால் தான் சரியா இருக்கும். ஆனால் இதை நான் சொன்னால் அத்தை விதாண்டாவாதம் பேசுவாங்க. நீயே பேசிப் புரிய வை. மதியத்திற்கு மேலே நாம் எல்லாரும் வெளியே போகலாம்…. வீட்டிலே இருந்தால் எதாவது பேசிப் பேசிப் பிரச்சினைகளை அதிகப்படுத்துவதைவிட வெளியே போனால் வைசாலிக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். அவள் பயந்து போய்யிருக்கிறாள் அத்தையின் பேச்சில். நம் முன் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் அவளின் கண்களில் அந்தக் கலக்கம் தெரிகிறது. அவளின் பயத்தையும் தெளிய வைக்கணும்’’ என வரிசையாக ஒவ்வொருவரின் மனத்தை வருத்தத்தைப் பகிர்ந்தவளை ஆழ்ந்து பார்க்க ‘’ஏன்டா என் மூஞ்சிலே என்ன தெரிகிறது’’…
‘’அ…. அது…. பெரிதாக ஒரு ஒளிவட்டம் தெரிகிறது… ராத்திரி பாரியானந்தா நடத்திய பூஜையில் அம்மணிக்கு அறிவுக்களை அளவுக்கு மீறி அருவியாகக் கொட்டுகிறது’’ எனச் சொல்லிச் சிரிப்பை அடக்கிக் கொண்டுக் கிண்டலாகப் பேசியவனை கொலைவெறியாக முறைத்துத் துரத்த அவனும் முன்னால் ஓட மைதானத்தை ஒரு ரவுண்டு ஓட்டம் ஓடி முடித்து மூச்சு வாங்க ஒருவரை ஒருவர் பார்த்து இருவரும் கலகலவென்று சிரிக்க பாரியோ அவளைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டியவன் மனம் இலவம் பஞ்சாய் இலசாக அவளை இழுத்து தோளோடு அணைத்துக் கொண்டு ‘’என் வாழ்வில் கிடைத்த பொக்கிஷம் நீயடி’’ எனச் சொல்ல ‘’ம்க்கூம்’’ என அனத்தியவளோ ‘’வா வீட்டுக்குப் போகலாம் நேரமாச்சு’’ எனச் சொல்லி அவனின் கைகளைப் பிடித்தபடி நடந்தாள் குந்தவை.
வீட்டுக்குள் நெருங்கும் போதே ‘’அப்பி…. அப்பி’’… மகளின் சிணுங்கலில் மனைவியின் கைகளை உதறியவன் வேகமாக உள்ளே நுழைய இவனையை பல்லைக் கடித்த குந்தவையோ அவன் பின்னாலே ஓடினாள்.
தாயைக் கண்டதும் அலகை விரித்துக் கத்தும் பறவைக் குஞ்சாகத் தந்தையைக் கண்டும் அப்பிக் கத்தியபடி அவனின் திண்மையான கரங்களுக்குள் அடைக்கலமானாள் முகிழினி.
மகளைத் தூக்கிக் கொஞ்சியவன் தன் தங்கையைப் பார்த்து வாத்தலையை அசைக்க வைசாலியும் அவனின் இன்னொரு தோளில் சாய்ந்து கொண்டவளைத் தட்டிக் கொடுத்தவன் ‘’ம்மா… சின்னக் குட்டி வாழ்க்கையைப் பற்றிக் கவலை படாதீங்க… அவளுக்கு ஊரே மெச்சர அளவுக்கு அண்ணன்காரன் நான் கல்யாணம் பண்ணி வைப்பேன்.
சம்பாரிக்க வக்கில்லாதவன் மனைவியின் தயவில் வாழ்கிறவன் நான் சொல்லி அவளுக்கு இரண்டாம் தாரம் சொல்லி எவனையாவது கூட்டி வந்தீங்க அவ்வளவு தான். வைசாலிக்கு அண்ணனும் நான் தான் அப்பாவும் நான் தான்… இனி அவள் வாழ்க்கையின் முடிவை நான் எடுத்துக் கொள்கிறேன்’’ என அழுத்தமாக ஆளுமையான குரலில் சொல்லியவன் குந்தவையிடம் திரும்பி ‘’எல்லாருக்கும் டிபன் செய்…. சாப்பிட்டு எல்லாரும் வெளியே போகலாம்’’ எனச் சொல்லியவனோ தங்கையின் தலையை வருடியபடி இமை மூடித் திறந்து தைரியத்தைக் கொடுத்தான் பார்வையாலே.
மகன் பேசுவதற்கு எதிர்வாதம் பண்ணாமல் அவன் முகத்தையைப் பார்த்துக் கொண்டிருந்த தனலட்சுமி ‘’குந்தவை டிபன் நான் ரெடி பண்ணிட்டேன்… நீயும் அவனும் குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்’’ எனச் சொல்லியவர் ‘’வைசாலி பாப்பாவை வாங்கிக் கொண்டு வெளியே வேடிக்கை காமி’’ எனச் சொல்லிவிட்டு சமையலறைக்குள் நுழைந்து விட்டார் தனலட்சுமி.
‘’சரிங்க அத்தை’’ என்றவளோ பாரிவேந்தனை உள்ளே இழுத்து சென்றவள் ‘’சும்மா முறைச்சுகிட்டே இருக்காமல் இயல்பா இரு பாரி. அவங்க வந்து இருப்பதை இரண்டு நாளைக்கு. அவங்க பேசியனது தப்பு தான். அதற்காக மூஞ்சியை தூக்கிவச்சுகிட்டு சுத்தாதே… போய்க் குளித்துவிட்டு வா’’ எனக் குளிலறைக்கு தள்ளியவளை இழுத்துவன் ‘’தத்துவமழை பொழியும் தத்துவ ராணி நீயும் வாச்சேர்ந்தே நீராடலாம்’’ எனக் கண்ணைச் சிமிட்டியவனை முறைக்க முயன்று முடியாமல் போக அவளை இழுத்துக் கொண்டு சென்றவன் மீண்டும் உணவை உண்ண வர ஒருமணி நேரமாக வெளியே அவர்களுக்காகக் காத்திருந்த மூவரும் சேர்ந்தே முறைக்க…
அசடு வழிந்தபடியே அவர்களுடன் இணைந்து உணவை உண்டனர்.
சாப்பிட்டு முடித்ததும் எல்லாவற்றையும் வைசாலியும் குந்தவையும் எடுத்து வைக்க மகனின் அருகே வந்த தனலட்சுமி அவனின் தலையை வருடியவர் எதுவும் பேசாமல் மௌன கண்ணீர் வடிக்க ‘’அம்மா… மனசைப் போட்டு உலட்டிக்கிட்டு இருக்காதீங்க… உங்களையும் விடமாட்டேன். சின்னக் குட்டியும் விடமாட்டேன். என் மேலே நம்பிக்கை வைங்கம்மா’’ என்றவன் ‘’கிளம்புங்க வெளியே போகலாம்… உங்களுக்குப் பிடித்த கபாலீஸ்வரர் கோயில் போயிட்டு அப்பறம் வெளியே எங்காயவது போயிட்டு வரலாம்’’ என மெல்லிய சிரிப்புடன் சொல்லியவனிடம் ‘’ம்ம்’’ என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
அவரின் முதுகை வெறித்துப் பார்த்தவனோ இன்னும் தன்னுயை நோக்கத்திற்கு எத்தனை தடை வந்தாலும் கண்டு கொள்ளாமல் தன் ஆசையும் குறிக்கோளுடன் ஜெயிக்க நினைத்த வேலையில் ஜெயிப்பேன் என மனதில் உறுதி எடுத்துக் கொண்டான் பாரிவேந்தன்.
எல்லாரும் கிளம்பி வரக் காரில் ஏற்றிக் கொண்டவனோ அம்மாவின் ஆசை தங்கைக்குத் தேவையான எல்லாம் நிறைவேற்றியவன் குழந்தையின் குதுக்கலமான சிரிப்புடன் இணைந்தபடி இரவு வீடு வந்து சேர்ந்தார்கள் குடும்பமாக.
வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம் பேசுமாறு தலையசைத்து சென்ற குந்தவைக்கு ‘’ம்ம்’’ என்றவன் ‘’அம்மா உங்களிடம் பேச வேண்டும் உட்காருங்கள்’’ என இருக்கையைக் காட்டியவன் ‘’வைசாலி நீ உள்ளே போய் ரெஸ்ட் எடுடா’’ எனத் தங்கையும் அனுப்பிவிட்டு அம்மாவை நோக்கித் தி
ரும்பினான் பாரிவேந்தன்.
தொடரும்