• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அக நக முகநகையே,,.... 8

சசிகலா எத்திராஜ்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
17
3
3
Karur
அத்தியாயம்…8

கே.கே அலுவலகம். இரண்டுமாடி கட்டிடம். இரண்டாவது மாடிக்கு யாரும் நுழைய முடியாத அளவிற்குப் பாதுகாப்பு நிறைந்தது.

கிருஷ்ணகாந்த் புரோடீசர். அவனின் அறை இரண்டாவது மாடியில் உள்ளது. அங்கே அவனின் செக்ரீட்ரி தவிர அவனைச் சந்திக்க அப்பாயிமென்ட் வாங்கியவர்கள் பலரையும் சந்திப்பதில்லை. அவனின் மனதிற்குள் சரியெனப் பட்டவர்கள் மட்டுமே அவனை நெருங்க முடியும்.

அவனின் அறைக்குக் கீழே இருக்கும் தளத்தில் பலர் கதைகளைச் சொல்லி வாய்ப்புகள் கேட்டு அலுவலுகத்திற்கு அமர்ந்திருந்தனர்.

கிருஷ்ணகாந்த் சினிமா வட்டாரத்தாரத்திலே மிக முக்கியமான ஆள். ஒரு படம் ஓடுவதும் அது ஓடாமல் இருக்கவும் என இருபக்கமும் நின்று அடிப்பவன். அவனின் ஒரே குறிக்கோள் பணம். எங்கே எந்தப் படத்திற்கு எவ்வளவு போட்டால் எவ்வளவு வசூல் ஆகும். யாரை டைரக்ராக ஆக்கணும். ஹீரோ ஹீரோயின் முதற்கொண்டு முடிவு பண்ணுவதும் அதிலிருக்கு நெளிவு சுளிவுகளில் கொஞ்சம் பிசகினாலும் சட்னு ஆளை மாற்றிவிடும் அதிரடியான ஆள் தான் கிருஷ்ணகாந்த்.

ஆறடி உயரத்தில் கருப்பு வண்ணத்தில் ஜீன்ஸ் பேண்ட் கருப்பு டெமின் சர்ட் அணிந்து கழுத்தில் ருத்திராட்யம் சிகப்பு கயிற்றில் அணிந்திருந்தவன் தன் பி.எம்.டப்ள்யூ வாகனத்திலிருந்து இறங்க டிரைவர் கார் கதவைத் திறந்து விட விறுவிறுவென்று நடந்தவனின் கூர்மையான கூர் விழிகளோ அங்கிருந்தவரை அளந்தபடி லிப்டில் நுழைந்து தன் அறைக்குள் வந்தவன் அங்கிருந்த தன் அப்பாவின் படத்தின் முன் நின்று இரண்டு நிமிடம் கண் மூடிக் கும்பிட்டவிட்டுத் தன் ரோலிங் இருக்கையில் வந்து அமர்ந்தான் கிருஷ்ணகாந்த்.

அவன் எதிரில் அவனின் வலது கையாக இருக்கிற பரத் ‘’ வணக்கம் சார்’’ என்பவனைப் புருவம் சுருக்கிப் பார்த்தவனிடம் ‘’இன்னிக்குப் புதுசா ஒருவர் உங்களைத் தேடி வந்திருக்கிறார். கிட்டதட்ட ஆறு மாதமாகப் பார்க்கணும் சொல்லியவர்’’ என்பவனை ‘’ஆறுமாதம் அப்பாயிமென்ட் இல்லாத அளவிற்கு நாம் அவ்வளவு பெரிய அப்படக்கரா’’ எனத் தன்னையும் சேர்த்துக் கலாய்த்தவனின் குரலில் சிறு சிரிப்பும் அழுத்தமும் அதிகமாகவே இருந்தது.

சிரிக்கலமா, வேண்டாமா என எண்ணி லேசாக உதட்டை இழுத்துச் சிரித்தப் பரத் ‘’அ…
அது… அவர்க்குச் சினிமா புது உலகம். எந்தவித பின்புலமோ இல்லை’’ எனச் சொல்லிய பரத்திடம் கையை உயர்த்தி நிறுத்தியவனோ ‘’இந்தப் பீல்டுல சினிமாவில் இருக்கும் வாரிசுகளும் பணமுதலைகளும் மட்டுமே சம்பாதிக்கணும் எந்தக் கட்டாயமும் இல்லை பரத்’’ என்றவன் ‘’அவரை வரச் சொல்லு’’ எனப் பேசிவிட்டு தன் அலைபேசியின் அழைப்பில் கவனம் செலுத்தினான் கிருஷ்ணகாந்த்.

பரத்தோ கிருஷ்ணகாந்தை பார்த்து இவன் இன்னிக்கு இவ்வளவு இலகுவாகப் பேசுகிறானே… அந்தளவுக்கு நல்லவனா மாற இரவு எந்தப் பேய் ஓட்டுச்சு தெரியலயேயென யோசனையுடன் வெளியே வந்தவனின் பார்வை அங்கே அமர்ந்திருந்த பாரிவேந்தனிடம் நிலைத்தது.

தன் கரங்களில் இருக்கும் பைல்களில் அவனின் உழைப்பை அத்தனையும் கொட்டி கதையை வடிவமைத்தவன் முகமோ இறுக்கமும் உள்ளுக்குள் சிறு நடுக்கமும் உண்டானாலும் அதை வெளியே காட்டாமல் அமர்ந்திருந்தவனின் மனமோ எப்படியாவது தன் கதைக்கு ஒகே வாங்கிவிட்டால் போதும் என்கிற எண்ணம் தான் அதிகமாக இருந்தது பாரிவேந்தனுக்கு.

இங்கே பலரிடம் கதை சொல்லி அது சரியில்லை இது சரியில்லை நழுவிப் போன வாய்ப்புகள் பல இருக்க, இவரிடம் அப்பாயிமென்ட் வாங்க இத்தனை மாசமாக முயற்சித்து இப்பதான் கிடைத்து இருக்கிறது. இவன் மட்டும் ஒகே சொன்னால் நாமும் நம் கதையின் உருவில் உருவாகும் கதாபாத்திரங்கள் உலா வரும் அழகை காணலாமென எண்ணமோ அவனை அலை மோதச் செய்ய… கிருஷ்ண காந்த் அறையிலிருந்து வெளியே வந்தவனோ பாரியிடம் ‘’நீங்கப் போங்க சார்’’ என்றவன், ‘’இன்னிக்கு உங்க நேரம் ரொம்ப நல்லா இருக்குனு நினைக்கிறேன். சார் நல்ல மூடில் இருக்கிறார். அவர்க்குப் பிடித்த மாதிரி சொல்லுங்கள்’’ எனச் சொல்லி ‘’ஆல் தப்பெஸ்ட்’’ எனக் கட்டை விரலை உயர்த்திக் காமித்து உள்ளே அனுப்பினான் பாரிவேந்தனை.

கிருஷ்ணகாந்த் இருக்கையில் தோரணையாக அமர்ந்து அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க உள்ளே வந்தவனை புருவத்தைச் சுருக்கிப் பார்த்தவனோ சைகையால் எதிரே இருக்கையைக் காமித்து அமரச் சொன்னவன் தன் பேச்சில் கவனம் செலுத்தினான்.

அவன் பேச்சில் தெரிந்த அழுத்தமும் வேலை நடக்கவில்லை என்றால் என்ன ஆகும்? என்பதை வார்த்தைகளாலே சொன்னவனைக் கண்டு ஆச்சரியமே உண்டாக்கியது பாரிவேந்தனுக்கு.

அலைபேசியில் அந்தப்பக்கம் பேசியவர்களிடம் ‘’இனி பேசுவதற்கு எதுவுமில்லை. நீங்கச் சொன்ன தேதியில் எல்லாம் முடித்துக் கொடுத்திருக்கணும். நீங்க நாட்களை இழுத்துக் கொண்டே போனால் பணமோ மீ்ட்டர் வட்டியாக மெரினா பீச்சை அளந்தால் கூடப் பத்தாது. அடுத்த வாரத்திலே எல்லாம் முடித்துத் தருவதாக இருந்தால் உங்க அக்ரிமென்ட் கண்டீனியூ ஆகும். இல்லை டிஸ்கண்டீனுயூ பண்ணிட்டு மிச்சத்தை வேற ஒருவரை வைத்து முடித்துக் கொள்வேன் காட் இட்’’ என வார்த்தைகளில் அழுத்தத்தைக் கூட்டிச் சொன்னவன் அலைபேசியை வைத்துவிட்டு ‘’தென் பாரிவேந்தன்’’ எனக் கேட்க…

‘’எஸ் சார்… வணக்கம்’’ என்றவன்… ‘’உங்களைச் சந்திக்க பலமுறை முயற்சி செய்து இப்பதான் பார்க்க முடிந்தது’’ எனச் சொல்லிய பாரிவேந்தனுக்குக் கிருஷ்ணகாந்த் ஆளுமையான பேச்சும் செயலும் எதிரே இருப்பவரின் ஆழ் மனக்கடலில் நுழைந்து அலசி ஆராயும் கழுகு விழிகளோடு நோக்கியவனிடம், சிறுத்தையின் சீற்றத்தையும் கண்டவனுக்கு ஆச்சரியங்கலந்த பார்வையோடு தன்னையும் ஒரு முறை குனிந்து பார்த்தவன் அவனுக்கும் தனக்குமான வித்தியாசங்களை யோசித்தப்படியே வார்த்தைகளைக் கோர்த்துப் பேசினான் பாரிவேந்தன்.

‘’இட்ஸ் ஒகே….. பாரி… அப்படி கூப்பிடலாமலே… உங்களைப் பற்றி என் அசிட்டென்ட் சொன்னாங்க. அவர்களை எல்லாம் தாண்டி என்னைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்திருக்கு என்றால் உங்களைப் பற்றிய முழுவிவரம் தெரிந்தும் அறிந்தும் இல்லாமல் என் எதிரே உட்கார்ந்து இருக்க முடியாது’’ எனச் சொல்லியவனின் தோரணையில் உள்ளம் சிலிர்ட்டது பாரிக்கு.

சினிமா உலகின் சாம்ராஜ்ஜியத்தில் தன்னை அடையாளப்படுத்த எத்தனையோ பேர் முண்டியடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் இவனைப் போல உள்ளவர்கள் தங்களுடைய இடத்தை எவருக்கும் விட்டுத் தரமாட்டார்கள். மற்றவர்களை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்.

அதுவும் இவனைப் போலக் கோலிவுட் பாலிவுட் எனப் பல இடங்களில் இவனின் கண்யசைப்புக்கு ஏற்பக் காய்கள் நடத்தப்படும் என்பதை அறிந்தும் இருக்கிறான் பாரிவேந்தன்.

இவ்வளவு பெரிய ஆட்களைச் சந்திப்பு என்பது எல்லாராலும் சாத்தியாப்படாது எனத் தெரிந்தவனுக்குத் தனக்கு இது ஒரு வரப்பிரசாதம். இவன் மூலமாக உள்ளே நுழைந்து விட்டால் வாழ்க்கையில் முதல் அடியை எடுத்து வைத்து விடலாம் என்ற நம்பிக்கையும் அதிர்ஷ்ட தேவதை நம்முடன் பயணம் செய்யத் துணையாக நிற்பது போல மனத்தில் பெரிதும் உவகை அடைந்தது தான் உண்மை.

‘’வெல் பாரி சொல்லுங்க, உங்களைப் பற்றிய அறிமுகம் மற்றவர்கள் மூலமாகத் தெரிந்தாலும் உங்கள் வாய் மூலமாகத் தெரிந்துக் கொள்வேன்’’ என மெல்லிய புன்னகையுடன் சொன்னவனிடம் தன் ஊர் குடும்பம் என மேலோட்டமாகச் சொல்லியவன் தான் கொண்டு வந்த கதையின் ஸ்கிரிப்ட் அவனிடம் கொடுக்க அதை வாங்காமல் ‘’பாரி இப்போது ஒன்றை சொல்கிறேன். மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கதை உங்களுடைய மூச்சில் கலந்து உங்களுக்குள் ஆழ்ந்து உணர்ந்த உணர்வை நீங்களே சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் கதையின் அழுத்தமான ஒன் லைன் இந்தச் சினிமா பீல்டில் எப்படி ஜெயிக்க வைக்கணும் என்பதை நான் சொல்கிறேன்’’ என ஆளுமையான குரலில் அழுத்தமாகச் சொல்லியவனை வியந்து பார்க்கத் தான் தோன்றியது பாரிக்கு.

அவனின் பேச்சிலே தான் ஜெயித்துவிட்டோம் என்கிற மனபான்மையை கொடுப்பவன் மீது பார்த்த முதல் நாளிலே தோன்றி விட்டது பாரிவேந்தனுக்கு.

தன் கதையைப் பற்றிச் சொல்லியவனைக் கூர்ந்து பார்த்தபடியே அதை உள் வாங்கிய கிருஷ்ணகாந்தின் உள்ளமோ இவன் உழைக்கத் தெரிந்தவன் என அறிந்துக் கொண்டான்.

உழைக்கத் தெரிந்தவனுக்குப் பிழைக்கத் தெரியாது இவ்வுலகில் என்பதை பாரிவேந்தனைக் கண்டதுமே உணர்ந்தவனுக்கு அவனின் கதையைப் படமாக்கவும் அதைச் செயல்படுத்த வேண்டிய காலகெடுகளைப் பற்றிப் பேசி முடிவு பண்ணிவிடலாமென மனதினுள் தோன்றிவிட்டது கிருஷ்ணகாந்த்ற்கு.

பாரி சொல்லி முடித்தக் கதையைக் கேட்டவனோ சிறிது நேரம் சிந்தித்துவிட்டு அவனை நோக்கிச் சிறு புன்னகையை சிந்தியவனோ ‘’வாழ்த்துகள் பாரி. அழகாகக் கதையை ஒரு வரியில் எப்படி சொன்னால் சரியாக இருக்கும் எனப் புரிந்து சொல்லிருக்கீங்க. நீங்கள் சொன்ன விதம் நூறு சதவீதம் இப்படம் வெற்றிப் பெறும் என்கிற நம்பிக்கையை எனக்குக் கொடுத்து இருக்கீங்க. இன்னும் இக்கதையை விரிவாகப் பேசி நடிப்பவர்களை தேர்வு செய்து சூட் பண்ணக்கூடிய இடங்களைப் பற்றி மற்றும் படத்திற்கான பட்ஜெட் எவ்வளவு எத்தனை நாட்களுக்குள் பர்ஸட் காப்பி கிடைக்கணும் எல்லாம் நாளை நாம் பேசி முடிக்கலாம். என் அசிட்டென்ட் உங்களுக்கு அதற்கான நேரத்தைத் குறிப்பார்கள், அப்போது சரியான நேரத்திற்கு வந்து விடணும்’’ என்றவன்,’’எனக்குச் சொன்ன காலகட்டத்தில் இப்படத்தை முடித்துக் கொடுக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது. அதற்கான அக்ரீமென்ட் போடப்படும். அதில் இருக்கும் கண்டீசனுக்கெல்லாம் ஒகே என்றால் கையெழுத்துப் போடுங்கள்’’ என்றவன், ‘’கதை உங்களதாக இருக்கலாம். பணம் எனது. ஒவ்வொரு காசுக்கும் கணக்கு வேண்டும். தேவை எது தேவை இல்லாது எது என்பதை நீங்கள் தான் யோசித்துச் செய்ய வேண்டும். இல்லையென்றால் பணமோ மீட்டருக்கு மேலே ஓடிக் கொண்டிருந்தால் பாதியிலே நிற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். முதல் படம் உங்களை நிலை நிறுத்த வேண்டுமென்றால் உங்கள் உழைப்பு நூறு சதவீதம் உண்மையானதாக இருக்க வேண்டும்’’ என அழுத்தமான குரலில் சொல்லியவனை பிரமிப்பூட்டும் பார்வையோடு பார்த்தவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.


அந்த நேரத்தில் தோன்றும் அதிர்ச்சி ஆச்சரியம் எனக் கலந்த கலவையாக அவனை ஆட்டி வைக்க எதுவும் பேசமுடியாமல் திணறியவனுக்குள் தன் உழைப்புக்குப் புது அங்கீகாரம் கிடைக்க முத்தான நாளாக இன்று தொடங்கியதை எண்ணியவனோ இதை முதலில் தன் மனைவி அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்ற ஆசையுடன் விடைப்பெற்றுச் சென்றான் பாரிவேந்தன்.

தொடரும்.....

.