எழும்பி இருக்கவே முடியாது, கிடந்த கள்ள தீனிகளை தின்று பசியை தீர்த்துக் காெண்டவளது அந்த கொடுமையான மூன்று நாட்களையும் ஓடியிருந்தது.
தலைக்கு கொஞ்சமாக மஞ்சள் வைத்து தோய்ந்தவள், இன்றாவது சமைப்போம் என்று சமையல் கட்டின் போய் நின்றவளுக்கு, தனக்கு ஒருவளுக்கு சமையல் எனும் போது வெறுப்புத் தான் வந்தது. ஆனால் சமைக்காமலும் விட முடியாதே! எத்தனை நாட்களுக்குத் தான் வயிற்றுக்கு வஞ்சகம் செய்வது. ஒரு கறியோடாவது சோறு சாப்பிட வேண்டும் என்ற நாவுக்கு மறுப்பு கூறாது கடகடவென சமைத்து, ஒரு பிடி பிடித்ததும் தான் மூச்சே வந்தது.
சமைத்தாயிற்று சாப்பிட்டும் ஆயிற்று. இனி என்ன வழமையான தூக்கம் தான். ஏனோ இந்த வெறுமையான வாழ்க்கையை வாழத்தான் பிறந்தோமா என்றிருந்தது.
'என்ன செய்யலாம்..?' என்று சிந்தித்தவளுக்கு. இப்படியே நாலு சுவற்றை பார்த்துக் கொண்டிருந்தால், விசர் தான் பிடிக்கும். சும்மா ஊரை ஒரு வட்டம் அடிச்சிட்டு வருவமோ! பாதை மாறிட்டா...! எங்க மாறப்போகுது. அப்பிடி மாறினாலும் என்ன அவசரம். நாலு தரம் சுத்தி சுத்தி வந்தா, வீடு வந்திட போகுது. எத்தின நாளுக்கு தான் எதுவும் தெரியாம இருக்கிறது?' தனக்குள் நினைத்தவளாய், வெளியே செல்லும் உடையினை எடுத்து போட்டவள், கதவினை பூட்டிக் காெண்டு வெளியே வந்தாள்.
தனிமையில் எல்லாம் விசித்திரமாகத் தான் இருந்தது. அவளை மட்டுமே எல்லோரும் விசித்திரமாக பார்த்துச் செல்வதைப் போல் ஓர் பிரம்மை. இங்கு நிற்கவே யாருக்கும் நேரமில்லை. இவளை யார் பார்ப்பது? வீதியில் இறங்கியதும் காலானது கிடுகிடு என்று நடையை ஆரம்பித்து, சிறு வீதி ஒன்றில் நுழைந்து கொஞ்சத் தூரம் சென்றவளை வர வேற்றது, எங்கும் பச்சைப் பசேல் என்றிருந்த அந்த பூங்கா.
இந்த இடத்தை அவளுக்கு முன்னர் தெரியவே தெரியாது. தெரிவதற்கு அவள் என்ன அந்த ஊரிலா பிறந்து வளர்ந்தாள். வந்து இரண்டு கிழமை என்றால், அதில் இரண்டு நாட்கள் மாத்திரமே வெளியே சென்றிருக்கிறாள். அதில் குறிப்பிட்ட இடத்தை தவிர, அவளுக்கு வேறு இடம் தெரியாது.
இதில் எப்படி அந்த இடம் அவளுக்குத் தெரியும்.? தானே அந்த இடத்தை கண்டு பிடித்ததொரு உணர்வு.
நிழல் தரும் மரங்கள் நடுவே குழந்தைகள் விளையாடுவதற்கு ஓர் புறமும், பெரியவர்கள் உடல் பயிற்சி செய்வதற்கு ஓர் இடமும், இளைப்பாறுவதற்கு என்று ஓர் இடமும், அந்த இடத்தினை சுற்றி அழகழகான வீடுகள் என்று கண்களை அவ்விடம் குளிர்விக்க, அங்கு இரும்பால் பொருத்தப்பட்டிருந்த நீள கதிரையில் சென்று அமர்ந்தவளுக்கு, அந்த இடம் பார்க்கப் பார்க்க திகட்டவில்லை.
வந்து நீண்ட நேரம் ஆகியும் வீடு செல்லும் எண்ணமே வரவில்லை அவளுக்கு. வந்தால் மட்டும் அவளை தேட அங்கு யார் இருக்கிறார்கள். பொழுது சாயும் வரை இருந்து விட்டுப் போகலாம் என நினைத்து இருந்தவள் கவனத்தை ஈர்த்தது அங்கு விளையாடிக் காெண்டிருந்த குழந்தை.
அதற்கு மூன்று வயதிருக்கும். அவளர்களுக்கு என்று குட்டி குட்டி படிகளாக அமைக்கப்பட்டிருந்த ஏணி ஒன்றில் ஏறி, சறிங்கீச் விளையாடிக் காெண்டிருந்த குழந்தையின் முழங்கால் தேய்த்து விட்டது போல,
"மமோ.." அது அழ ஆரம்பிக்க, அதுவரை போனில் கவனமாய் இருந்த அவளது தாய், குழந்தையின் அழு குரலில் தான் போனை ஓரமாக வைத்து விட்டு குழந்தையை நோக்கி ஓடினாள். அக்கறையற்ற அவள் செயலில்,
"பச்சை குழந்தை அது. அதுக்கு பக்கத்தில நிக்காம, காலுக்கு மேல கால் போட்டுக் கொண்டிருந்து போனை நோண்டுறத பார். இதுக்கு எல்லாம் எதுக்கு குழந்தை?" என்றவள் கையோ தன்னையும் அறியாது தன் வயிற்றை வருடியது. ஆம் அந்த குழந்தையினை பார்த்ததும் அவளுக்கும் குழந்தை ஆசை வந்து விட்டது.
என்ன செய்ய அதற்கும் காலம் நேரம் வர வேண்டுமே!
ஏக்கமாக வயிற்றை தடவியவள், பின் தன் பாெழுது மொத்தத்தையும் கழித்துக் கொண்டு வீடு சென்று கதவை திறக்கவில்லை. போன் அடிக்கும் சத்தம்.
கணவன் தானோ என ஓடிச்சென்று போனை எடுத்தவளை ஏமாற்றுவது போல் எதிரே அமைதி.
"அட போடா...! உன்ர தொல்லை தாங்கேலாம இருக்கு." என்றாறு போனை வைத்தவள். "இந்த போன் ஏன் அடிக்குது ஏன் வைக்குது எண்டு கூட தெரியேல." புலம்பியவாறு செற்ரியில் சாய்ந்தாள்.
கிட்டத்தட்ட ஒர் அரை மணி நேரம் கடந்திருக்கும். மீண்டும் அதே இலக்கத்திலிருந்து அழைப்பு. அதை கண்டவள்,
'இந்த மடையனுக்கு வேற வேலயில்ல... எப்ப பார் எடுப்பான் கதைக்க மாட்டான்.' என புலம்பியவளாய், மீண்டும் வந்து செட்டியில் விழுந்தாள். எங்கே அது ஓய்ந்தது. வழக்கமாக அவள் எடுக்கவில்லை என்றால், ஒரு முறையோடு ஓய்ந்து போகும் மணியொலி, இன்று மூன்று முறை தொடர்ந்து ஒலித்தது.
"இவனை இண்டைக்கு கிழிக்கிற கிழியில இனி கோல் பண்ண மாட்டான்." மண்டிய எரிச்லோடு போனை எடுத்தவள்,
"உனக்கு என்னடா வேணு...." சொல்லி முடிக்கவில்லை.
"என்னை பேந்து திட்டலாம்.. இப்ப வெளியால போய் பாரும்." என்றது எதிரே ஒலித்த ஆண் குரல்.
தமிழ் தான் சந்தேகமே இல்லை. ஆனால் இவ்வளவு காலமும் ஏன் கதைக்கேல. முதல்ல இவன் யார்? எழுந்த கேள்வியை கேட்கவில்லை அவள்.
"நீ சொன்னா நான் செய்யோணுமோ. நான் போமாட்டன்." என்றாள் கடுமையாக.
"எனக்கு தெரியும் என்னில உனக்கு கோபம் எண்டு. ஆனா இது கோபப்படுற நேரமில்ல. உண்மைய தெரிஞ்சு கொள்ளுற நேரம். வேளைக்கு இறங்கும். நான் வைக்கிறன்." மறு நொடி அழைப்பு துண்டிக்கப்பட்டது.
'யார் இவன். எதுக்கு குரல்ல பதட்டமும் அவசரமும். வெளிய போய் பார்க்கிற அளவுக்கு என்ன அங்க இருக்கு? உண்மை ஏதோ தெரியோணும் எண்டானே! என்ன உண்மை ஆர் உண்மை" அவசரமாக சிந்தித்தவள் மூளையோ, மினக்கடாம போ என ஊந்த, வேக எட்டுக்களுடன் படியினை இறங்கி கீழே வந்தாள். வெளியே இருந்து இரண்டாவது கதவு தாண்ட என்று பட்டனை அழுத்தப் போன நேரம்,
சற்றுத் தொலைவே சர்க் என்ற உராய்வோடு கார் ஒன்று வந்து முன் கேட்டின் அருகே நின்றது.
அவளுக்குத் தான் சிறிது என்றதும் பயம் தொற்றிக் கொள்ளுமே! யாரோ? எவரோ? என்று அதே இடத்தில் தேங்கி நின்று கார் போகட்டும் என்று பொறுத்திருந்த நேரம் தான் காரிலிருந்து இறங்கினான் அவன்.
அவன் வேறு யாருமல்ல. அவள் கணவன் சியாம் தான். கணவனை கண்டதும் முகம் மலர்ந்தவள்,
"அப்பா..." என்று சந்தோசமாக முனகியவாறு அவனை நோக்கி முதல் அடியை எடுத்து வைக்க, காரில் இருந்து இறங்கியவன், ரைவர் சீட்டின் கதவருகே செல்ல, அந்தப் பக்கத்து கண்ணாடியும் தானாப் பதிந்தது. அதற்குள் ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி அவனை பார்த்து வாய் நிறையப் பல்லாக இளித்தவள்,
"நான் உன்னை மிஸ் பண்ணுவன். நாளைக்கு வந்திடுவ தானே!" மூக்கால் சிணுங்கினாள்.
"என்னால மட்டும் உன்னை விட்டுட்டு இருக்க முடியுமா செரி... நாளைக்கு கட்டாயம் வந்திடுவேன்." என்றதும்.
"ஓவ்..." என காரில் இருந்தவாறு கை விரித்தவளை ஓடிச்சென்று கண்ணாடி துவாரத்துனுடே நுழைந்து தழுவிக் கொண்டான். அவனது கழுவலின் போது, அவன் பிடரி முடிக்குள் விரல்களை விட்டு கலைத்து விளையாடியவள், அவன் எழுந்து கொள்ள நினைக்கையில், சட்டென கழுத்தினை வளைத்துப் பிடித்து, அவனது தடித்த இதழ்களை கவ்விக் கொண்டாள். தாவினாலேயே அவன் பற்களை அளந்திருப்பால் போல, அத்தனை மணிநேரம் அமுதம் உறிஞ்சும் வேலை நடு வீதியிலேயே அரங்கேறியது.
இதை கண்டு சுக்கு நூறாக உடைந்து போனவள் மிருதுளா தான்.
கணவன் மேல் எத்தனை நம்பிக்கை இருந்திருந்தால், இத்தனை நாட்கள் வீட்டிற்கு வராது இருந்தும், சந்தேகமாய் ஓர் வார்த்தை கேட்காது இருந்திருப்பாள். ஆனால் அவன்?
அவர்கள் கூத்தினை இதற்கு மேல் பார்க்கும் தைரியம் அவளுக்கு இல்லை. திரும்பி நடந்தவள் கால்கள் திடீரென வலுவற்றுப் போனது போல் தள்ளாடியவாறு படிகளில் ஏறி நடந்தவள், வீட்டின் உள்ளே புகுந்ததும் தொப்பென செட்டியில் தான் விழுந்தாள்.
எத்தனை தூரம் இவனை நம்பி, அத்தனை சொந்தங்களையும் விட்டு வந்திருக்கிறாள். அவளை தாங்கத் தான் வேண்டாம். ஆனால் உண்மையாக இருந்திருக்கலாம். மனைவி என்று தான் உள்ள போது, வெள்ளைக்காரி தேவை தானா! மனம் உலைக்களமாக கொந்தளித்து.
'வரட்டும்.. வந்தோன்னா ஏன்டா நான் இருக்கேக்கயே உனக்கு வெள்ளைக்கார கேக்குதாே எண்டு ரெண்டில ஒண்டு பாக்குறன்.' என நினைத்தவள்,
'இல்லை இப்போ உண்மை தெரிஞ்சிட்டுது எண்டு இவனிட்ட காட்ட கூடாது.
தெரிந்தால், திருட்டுத் தனமாக செய்யுற வேலைய நேரடியா செய்யிறதும் இல்லாமல், அவளை இங்கேயே கூட்டி வந்து கூத்தடிப்பான். பிறகு இவைக்கு அவிச்சு போடுற வேலைக்காரி தான் என்ர நிலமை.' அவசரமாய் மனம் எச்சரிக்க, எதுவும் தெரியாதது போல் இருக்க நினைத்தவள் கண்ட காட்சி சாதாரணமானது இல்லையே!
கதவு திறக்கும் சத்தம் கேட்க, அவன் வருவதை அறியாதது போல், டீவியில் கவனமாக இருந்தது என்னமோ விழிகள் தான். மற்றைய புலன்கள் அனைத்தும் அவனது செய்யையினை அவதானிக்கத் தொடங்கியது.
அவளையே பார்த்தவாறு காலணியை கழட்டியவன், அவள் இருந்த செட்டியில் அவளை ஒட்டியவாறு அமர்ந்தான். ஏனோ அவனது அந்த நெருக்கம் தீயின் சுவாலை போற்றதொரு உணர்வை தர, சற்று விலகி அமர்ந்து அவனை திரும்பிப் பார்த்தவள்,
"வந்திட்டிங்களா...? ஏன் இண்டைக்கு வேலை இல்லையோ?" என்றவள் பேச்சு தொணியில் இருந்தது அக்கறையா நக்கலா என்பது அவனுக்கு புரியவில்லை.
"எந்த நாளும் வேலை எண்டு அங்கயே இருந்தா, என்ர மனிசி என்னை காணாம ஏங்கிடுவாளே! அதான் வேலையாவது மண்ணாங் கட்டியாவது. எல்லாத்தையும் போட்டுட்டு ஓடி வந்துட்டன்." கூறியவாறு நெருங்கி அமர்ந்தவன் விரல்கள், அவளது தோளை வருடியது.
அதை தட்டி விட்டவள். "வேலை தானப்பா முக்கியம். வெளிநாட்டை பொறுத்தவரை வேலைக்கு போனாத்தான் வாழலாம்." என்றாள் ஏதோ வயது முதிர்ந்தவர்களாட்டம்.
"பாரேன்.. வெளிநாடு வந்து ஒரு மாதம் ஆகேல அதுக்குள்ள இங்கத்த சூழ்நிலை விளங்கீட்டுது என்ர மனிசிக்கு. பரவாயில்லையே!" மனைவியை மெச்சியவனை வெற்றுப்பார்வை பார்த்தவள்,
"எல்லாமே அனுபவம் தான். இந்த மாதிரி அனுபவத்தை பாடமா சொல்லி விளங்கப்படுத்தேலாது தானே!" பேச்சில் அவ்வளவு தெளிவிருந்தாலும், எதுவோ ஒன்று சரியில்லை என்பது அவளது வெறுமையான முகத்தில் தெரிய,
"சாப்டியா மிரும்மா...?" என்றான் பேச்சை திசை திருப்ப.
"ம்ம் சாப்டேன்." பதில் மட்டும் தான், திருப்பி ஒரு வார்த்தை நீ சாப்பிட்டாயா என்று கேட்கவில்லை அவள்.