• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அசுரதாரா -11

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,341
557
113
Tirupur
கண்கள் ரெண்டும் ரத்தமென சிவந்திருக்க, தலையினை கைகளில் தாங்கியவாறு வந்தவன் கன்னங்களும் வீங்கிப் போய் இருந்தது. வரும் போதே பிரியாவை கண்டு விட்டன்.

உள்ளே இருக்கும் போதே குரலை வைத்து கணித்து விட்டான். பிரியா தான் என்று. அதை உறுதி செய்தத்தான் வெளியே வந்ததும். எதுவும் சொல்லாது வேகமாக வந்து கதிரையில் அமர்ந்தவன், தொடையினில் முழங்கையினை ஊன்றி, நெற்றியை தாங்கிப் பிடித்தவாறு தேவாவை பார்த்தான்.

கோபமே அற்ற சாதாரண பார்வை தான். ஆனால் தேவா எதிர் பார்த்தது இது அல்லவே. பிரியாவை கண்டதும் தன்னுடன் தாம் தூம் என்று குதிப்பான், இல்லை என்றால் அதனுடன் சேர்த்து முதுகில் நாலு மொத்து மொத்துவான் என்றல்லவா.

அவன் செயற்பாடுகள் நினைப்பிற்கு நேர் மறையாக இருக்க, சந்தேகமாய் நண்பனை ஆராய்ந்தான். கண்கள் சிவந்து மப்பில் நண்பனைப் பார்ப்பது போல், கண்களை சிமிட்டிச் சிமிட்டி பார்த்தவன் தலையோ ஓர் இடத்தில் நிற்கவில்லை.

"இவளை ஏன் இங்க கூட்டியந்தனி?" கோபமாக தான் கேட்டான். ஆனால் அந்தக் கோபத்தில் நிதானம் இல்லை. இத்தனைக்கும் குடிப்பழக்கம் இல்லாதவன் முகில். தேவாவுக்குமே நண்பனின் புதிய பரிமானம் ஆச்சரியமாக இருந்தது.

"குடிச்சிருக்கிறியா முகில்?" என்றான். அவன் கேள்வியில் கண்ணிரண்டையும் கசக்கி விட்டு அவனைப் நிமிர்ந்து பார்த்தவன்,

"நான் கேட்டதுக்கு முதல்ல பதில சொல்லு தேவா" நொடிப்பொழுதில் எப்படித்தான் போதை தெளிந்ததோ, சிவந்திருந்த கண்களை தவிர, எப்போதும் போல், கோபம் வந்தால், எப்படி கனீீர் குரலில் கேட்பானோ, அப்படி கேட்டவனது கேள்வியில் அதிர்ந்தான் தேவா.

"டேய் என்னடா... நிமிசத்துக்கு ஒரு மாதிரியா கதைக்கிறாய்..? உண்மைய சொல்லு குடிச்சனியா நீ?" என்றான் இ்ன்னமும் சந்தேகம் விலகாது.

"இ்ந்த கேள்வி இப்ப முக்கியமில்ல தேவா. நான் இருக்கிற இடம் தெரியக்கூடாது என்டு தானே, இத்தனை கிலோ மீற்றர் தள்ளி வந்து இருக்கிறன்." என்றவன் வார்த்தைகளில் அத்தனை அனல். என்ன சொல்வான் அவன். இவன் இருக்கும் இடத்தை காட்டுவதற்கு அவனுக்கு மட்டும் ஆசையா என்ன?

"நான் என்டா செய்வன்? இத்தனை நாள் நீ இருக்கிற இடம் எதென்டு கேட்டினம்.. எனக்கு தெரியாது என்டு தான் சமாளிச்சிட்டு இருந்தான். ஆனா இந்த பிரியா மோந்து பிடிக்கிற நாய் மாதிரி, என்னையே நோட்டமிடுவா என்டு எனக்கு எப்பிடி தெரியும்? உனக்கே தெரியும் முகில். நீ ஒரு விசயம் செய்தா, அது எனக்கு தெரியாம செய்ய மாட்டாய் என்டு எல்லாருக்கும் தெரியும் என்டு, அப்பிடி இருக்கேக்க, நீ இருக்கிற இடம் எனக்கு தெரியாம போகும் என்டு எப்பிடி இவையல் நம்புவினம். அதான் இவள் ஈஸியா கண்டு பிடிச்சிட்டாள்.

நான் இல்லை என்டு தான் சொன்னன். பொய் சொல்லுறன் என்டு, வயசுக்கு கூட மரியாதை இல்லாம அறைஞ்சிட்டாளாடா" என்றான் அப்பாவியாய்.

புரிந்து போயிற்று அவனுக்கு, பிற்பாடு என்ன நடந்திருக்கும் என்று. அவனுக்கு தான் தெரியுமே, சற்று உறுக்கினாலும் உண்மையனை போட்டுடைக்கும் பயந்தான் கோழி, அடித்தால் சொல்ல மாட்டானா? இம்முறை அவனது கோபம் பிரியாவின் புறம் திரும்பியது.

"நான் இருக்கிற இடம் உனக்கு என்னத்துக்க? அங்க ஆருக்கும் தான் என்னை பற்றி கவலையே இல்லையே... உங்கட தொல்லை தான் வேண்டாம் என்டு ஒதுங்கி இருக்கிற என்னை, ஏன் துரத்தி துரத்தி வந்து தொல்லை தாறிங்கள்?" இரைந்த இரைச்சல் காதை கிழிப்பது போல் இருந்தது. மற்றவர்களுக்குத் தான் அது காதை கழித்தது. ஆனால் பிரியாவிற்கு மனதை கிழித்தது போல, கண்கள் குளம் கண்டிருக்க,

"ஏன் அண்ணா உப்பிடி கதைக்கறீங்கள்? ஆருக்கு உங்கள்ல அக்கறை இல்லை என்டீங்கள்? உங்களுக்கே தெரியும். உங்கள்ல அம்மா உயிரையே வைச்சிருக்கறா என்டு. இருந்தும் இப்படி கதைக்கிறீங்களேனண்ணா... இது அம்மாக்கு தெரிஞ்சா உயிரையே விட்டிடுவாண்ணா... நீங்...."

"காணும் நிப்பாட்டு." மேலே ஏதாே அவள் கூற வாயெடுக்க, அதை அடக்குவது போல் கத்தியவன்,

"ஆருக்கு விடுறாய் கதை... அக்கறை இருக்கிறவ தான், அன்டைக்கு அப்பா அப்பிடி கதைக்கேக்க, எதுவும் சொல்லாம இருந்தவாவோ? சும்மா சீன் போடாமா இங்க இருந்து வெளியால போ.." என்றான் இன்னமும் அடித்தொன்டையால் சீறி.

"அண்ணா... உனக்கே தெரியும் அப்பாக்கு எதிரா அம்மா எதுவும் கதைக்க மாட்டா என்டு."

"வெளியால போ என்டன்" இருந்ததை விட இன்னும் பல மடங்கு குரலை உயர்த்தியவனது குரலி அதிர்ந்து போனாள் பிரியா. இப்படி ஒரு ரூபத்தை அவள் இதுவரை பார்த்ததே இல்லை. எப்படி பார்த்திருப்பாள். அவள் பார்த்தது எல்லாமே அவனது அன்பான குணத்தை தானே!

உண்மை தான் முகில் என்றாலே அன்பே உருவானவன். அதிலும் தங்கை என்றால் போதும், அவளுக்காக எதை வேண்டுமானாலும் செய்வான். அவ்வளவு ஏன், மகளை விட மகன் மேல் தான் அன்னைக்கு விருப்பம் அதிகம், அதனால் பிரியாவிற்கு அவர் குறை வைத்தாலும், அவனுக்காக பார்த்து பார்த்து செய்யும் அனைத்தையுமே, அவளுக்காக விட்டுக் கொடுத்து விடுவான். அப்படிப்பட்டவன் இன்று இப்படி கோபப்பட்டால் பயப்பிட மாட்டாளா?

பயத்தில் அழ ஆரம்பித்தவை காண பாவமாகிப பாேனது தாராவுக்கு. அதுவரை ஓரமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தவள்,

"சின்னப்பிள்ளையிட்ட இப்பிடித்தான் எரிஞ்சு விழுறதே! பாவம் பயந்துட்டாள்" என்றவாறு தன் கை வளைவிற்குள் அவளை கொண்டு வந்தவள்,

"நீ பயப்பிடாத? அவர் கோபத்தில கத்தீட்டார். சரி நீ வா..." என உள்ளே அழைத்து செல்ல முற்பட,

"நான் அவளை வெளியால போக சொன்னன்." என்றான் அவளிடமும் எரிந்து விழுந்து.

என்ன ஏதென்ற விடையம் தெரியாமல் விட்டாலும், சின்னப் பெண்ணிடம் இவன் பேய் போல் நடந்ததில் அவளுக்கு கோபம் தான் வந்தது. இருந்தும் இது அவர்கள் பிரச்சிரனை, விருந்தாளியாக வந்தோம், இன்னும் கொஞ்ச நாளில் விருந்தாளியாகப் போகப் போகிறோம், ஏற்கனவே தங்குவதற்கு இடமில்லை. ஏதாவது கதைக்கப் போனால், இருக்கும் ஆதாரத்திற்கும் சேதாரம் ஆகிவிடும் என்று தான்அமைதியாக இருந்தால், இறுதியில் அவளது கண்ணீரை கண்டதும் பாவமாகிப்போனது.

அதற்கு மேல் சுயநலமாக சிந்தக்க அவளால் முடியவில்லை. போனால் வீடு தானே பாேகப்போகிறது. காசை வீசினால் இதைப்பாேல் ஆயிரம் வீடு வாடகைக்கு எடுக்கலாம். என்ன அதற்கு காசு தான் பிரச்சினை, அதற்காக அவளிடம் காசு இல்லாமல் இல்லை. காசுக்குப் பதிலாக ATM காட் இருக்கிறது. எத்தனை ஆயிரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதை எடுத்ததன் பிற்பாடு தானே பிரச்சினை. அதற்காக சின்னப்பிள்ளையை அழ விட்டு வேடிக்கை பார்க்க முடியாமல் தான் உதவ முன்வந்தாள். அதற்கு அவன் அவளிடமும் எரிந்து விழ, இருந்த ஆதங்கம் கேபமாக மாறியது.

"என்ன வெளியால போ.. வெளியால போ... இது உங்கட தங்கச்சி தானே! ஏதோ பரதேசிய துரத்துற மாதிரி துரத்துறீங்கள். நானும் இவள் வந்ததில இருந்து பாத்துக்கொண்டு தான் இருக்கிறன், கச்சு மூச்சு எண்டு கத்தினா பெரிய சண்டியர் என்ட நினைப்போ. கூடப்பிறந்த தங்கச்சிய தங்கச்சி மாதிரி பாருங்கோ. இவ்வளாத்துக்கு அந்த புள்ள கெஞ்சுது. அது என்ன தனக்காகவ கெஞ்சுது. உங்குக்கு உங்கட அம்மாவில பாசம் இல்லாம இருக்கலாம். அதுக்காக அவா அழுறத இவளும் பாப்பாள் என்டு நினைச்சீங்களே!" நடந்தது தெரியவில்லை தான், ஆனால் இவனால் இவன் அன்னை வேதனையுறுகிறார் என்பது மட்டும் பிரியாவின் பேச்சிலிருந்து விளங்கிற்று அவளுக்கு.

சும்மாவே ஆடுவான் அவன், சதங்கை கட்டிவிட்டால் சும்மா இருப்பானா?

"எங்கட வீட்டு பிரச்சரனைய பார்க்க எங்களுக்கு தெரியும், உன்ர வேல எதுவோ அதை போய் பார்" என்டான் தேவையற்று இவள் மூக்கை நுழைக்க.

"என்ன பெரிய பிரச்சனை உங்கட... காதலிச்சா எந்த பெத்தவயாய் இருந்தாலும் எதிர்ப்பினம் தான், அதுக்காக பெரிய இவர் மாதிரி வீட்டை விட்டுட்டு வாரதோ. அவயலின்ர சம்மதம் கிடைக்கிற வரைக்கும் வீட்டில இருந்தே போராடோணும். பெத்தவேன்ர மனசு நோகுற மாதிரி நடந்ததும் இல்லாம, அதை சரி செய்ய போராடுற சின்ன புள்ளை மனசை உடைக்கிறங்கள். நீங்கள் எல்லாம் மனுசன் தானா?" அவளுக்குத் தெரியும், தான் பேசுவது அதிகப்படி என்று. இருந்தும் அவளால் வாயினை கட்டுப்படுத்த முடியவில்லை.

"இவர விட்டா கதைச்சுக்கொண்டே இருப்பார். நீ உள்ள வா பிரியா" மீண்டும் அழைத்து செல்ல தயங்கவில்லை அவள்.

"ஏய் நான் சொல்லிக்கொண்டிருக்கிறன், நீ பாட்டுககு கூட்டிக்காெண்டு போறாய்... அவள் மட்டுமில்ல நீயும் வீட்டை விட்டு வெளியால போடி.." என்றான் தன் சொல்லை மதியாது நடந்துவிட்டாள் என்ற ஆத்திரத்தில் அடித் தொண்டையால் சீறி.

எங்கிருந்து பொசு பொசு என்று கோபம் வந்ததோ. சாதாரணமாக ஒருமையில் போ என்றிருந்தால் கூட போயிருப்பாள் தாரா, அந்தப் போடி என்ற வார்த்தை அவளது தன்மானத்தை அசைத்துப் பார்க்க,

"நான் ஏன் போகோணும்? மாட்டன் இந்த வீட்டில எனக்கும் உரிமை இருக்கு" என்றாள் அவள்.

"உரிமையாே! அப்பிடி மெடத்துக்கு என்ன உரிமையங்கோ? எள்ளல் தவண்டது அவன் வார்த்தையில்.


அவள் சொல்ல வந்த உரிமை என்னமோ தான் ஏமாந்ததைத்தான், ஆனால் அவனது நக்கல் நிறைந்த நளினச் செயலில், சற்று முன் தன்னை பிரியா அண்ணி என்று தவறாக நினைத்தது நினைவு வர,

"பிரியா நான் ஆரம்மா உனக்கு?" என்றாள் அவள் புறம் திரும்பி. இப்போது இது தேவை தானா என நினைத்தாலும், தயங்கியபடி,

"அண்ணி...." என்றாள். அவளது பதிலில் புருவம் இரண்டும் நெரிபட,

"அண்ணியோ... ஆர்? நீ இவளுக்கு அணணி?" மீண்டம் அதே நளினம். விடுவாளா அவள், அவன் செயலுக்கு சவால் விடுவது போல், கை இரண்டையும் பின்னே கட்டியவள் வலது காலானது தரையில் தாளம் போட, மார்பினை நிமிர்த்தி,

"ஓம்.. இவளுக்கு நான் அண்ணி" என்றாள் நிமிர்வாக சலமே அற்று. அவளிடமே வம்பா?

அவளது பதிலில் இம்முறை நளினம் ஓடிப்போக,
"எந்த முறையில நீ அண்ணி என்டு தெரியப்படுத்துறியா?"

"அண்ணி என்டா ஒரே முறை தானே வரும். அண்ணன் பொண்டாட்டி அண்ணி." அவள் தான் கெத்தை விடவே இல்லை. எப்படி விடுவாள். இவனை ஒரு வழி செய்யாமல் விட்டால், அது தாரா இல்லையே. ஏனோ அந்த பதில் சிறிது நேரம் ஓய்வு கொடுத்திருந்த கோபத்திற்கு மீண்டும் தீணிபாேட்டதாய் அமைய,

"ஏய்.. என்ன கதைக்கிறாய்...? நீ என்ர பொண்டாட்டியா?" என்றான் எரிச்சலாய்.

"ஆ... இதென்ன கேள்வி? ஓ சொரி சொரி... லவ்வர் பிளஸ் பொண்டாட்டி." பயம் என்பதே இல்லாது ஏட்டிக்குப் போட்டியாக பதிலளித்தாள்.