20.
அவன் சொன்ன நேரம் வர, போனே தவமென இருந்தவளை ஏமாற்றவில்லை தேவா.
"சொல்லு தாரா... போனுக்கு பக்கத்திலயே இருக்கிறாய் போல. என்ன கேக்கோணும்." அவனுக்குமே இவள் எதைக் கேட்கப்போகிறாள் என்ற சிந்தையில் வேலை ஓடவில்லை. அதனால் வேறெந்த விசாரிப்பும் இல்லாது, நேர விசயத்திற்கு வந்தான்.
"அது என்னன்டா... முகில்... முகில் ஏன் வீட்ட விட்டுட்டு தனியா வந்தார்?" என்றாள் எடுத்ததும் என்ன சொல்வதென்ற தெரியாத தடுமாற்றமாக.
"இதோட மெடம் தடுமாறுறாங்கள்..." நக்கலடித்தவன், "என்ன திடீர் என்டு இந்த விசாரணை? உனக்குத்தான் தெரியுமே! அவன்ர காதலை ஆரும் ஏற்கேல, அதால வெளியால வந்திட்டான்."
"இல்லை தேவா அண்ணா. அம்மாவில அவ்வளவு உயிரா இருந்தவர், இந்த சின்ன காரணத்துக்கு எல்லாம் வெளியால வர வாய்ப்பே இல்லை. எனக்கு தெரிஞ்சு, முகிலுக்கு இது சின்ன பிரச்சினை. அவயல எப்பிடியாவது தன்ர காதலுக்கு சம்மதிக்க வைச்சு, தன்ர காதலை அடைஞ்சிருப்பாரே தவிர, வீட்ட விட்டு வர வாய்ப்பே இல்லை." என்றாள் உறுதியாக.
"ம்ம்... என்ன சொல்ல வாராய் நீ? அப்ப இதுக்கு வேற காரணம் இருக்குது என்டுறீயா?" என அவன் குழம்பிப் போய் கேட்க,
"ஏன் உங்களுக்கு தெரியாதோ? உண்மையை சொல்லுங்கோ அண்ணா. முகில் என்ன காரணத்துக்காக வீட்டை விட்டு வந்தார்" என்றாள் உண்மை அவனுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்து. அவள் நினைப்பும் சரி தானே, அவளுக்குத் தெரிந்து அவனிடம் சொல்லாது முகில் ஒன்றும் செய்ததில்லை தானே.
"இல்லை தாரா எனக்கு முகில் சொன்ன காரணம் இது தான். அண்டைக்கு அவேன்ர வீட்டில பெரிய சண்டை போனது உண்மை தான். முகில் வீட்டை விட்டு வெளிக்கிட்டு, அடுத்த நாள் முகில காணேல என்டு, அம்மா என்னை கூப்பிட்டு, இந்த மாதிரி நடந்தது. இவனும் இப்பிடி எல்லாம் சொல்லி வீட்டை விட்டு போனவன், வீட்ட இன்னும் வரேல. உனக்கு அவன் இருக்கிற இடம் தெரிஞ்சா சொல் என்டு கேட்டா. இவன் தான் சொல்லவே வேண்டாம் என்டுட்டானே! அதான் நான் சொல்லேல. எனக்குத் தெரிஞ்சு இது தான் காரணம் தாரா." என்றான் அவனும் உறுதியாக.
"ஓ..." என யோசனையாக இழுத்தவள், "அப்பிடி என்டா இப்ப அந்த காதல் எங்கயண்ணா?" என்றாள் மனதில் எதையோ வைத்துக்காெண்டு.
"விளங்கேல... காதல் எங்க என்டா? நீ காதலை கேக்கிறியா? காதலியை கேக்கிறியா?"
"ரெண்டையும் தான் கேக்கிறன். நீங்கள் அந்த பொண்ண பார்த்திருக்கிறீங்களா?"
"ம்ம் பார்த்திருக்கிறனே! அவன் காதலுக்கு முடிச்சுப் போட்டதே நான் தான் தெரியுமா? என்னட்ட போய் இந்த கேள்வி கேக்கிறாய்" பெருமை பாடினான்.
'ஓ அந்த நல்ல காரியத்தை செய்தது நீ தானா?' உள்ளே கருகினாலும் அதை வெளியே கூறாதவள்,
"அப்ப பார்த்திருக்கிறீங்கள். சரி முகில் வீட்டை விட்டு வந்தாப்பிறகு பார்த்தீங்களா?" என்றாள்.
"வந்தாப்பிறகு.... இரு இரு இப்ப இதெல்லா நீ ஏன் கேக்கிறாய்?" என்றான் இவளது குறுக்கு விசாரணை அப்போது தான் உறுத்துவது போல் இருக்க.
"எல்லாத்துக்கும் காரணம் இருக்கு தேவாங்கு. முதல்ல கேட்டத சொல்லு." கழுதை தேய்ந்து கட்டெறுப்பு ஆன கதையாய், மரியாதை தேய்ந்து போனது அவனுக்கு. பின்னே ஆர்வமாக ஓர் விடையத்தை கேட்டுக்கு கொண்டிருக்கையில், இடையில் இவன் குறுக்கு விசாரணை செய்தால் கோபம் வரும் தானே.
"ஓ... காரணம் இருக்கோ... சரி சொல்லுறன். நான் அறிஞ்சு இல்லை. காதலர்கள் என்டா எப்பவும் சந்திப்பாங்கள். இவங்கள் சந்திக்கிறாங்கள் என்டு எப்பவும் நான் அவன் பின்னால சுத்திக் கொண்டிருக்கேலாது தானே, அதால எனக்கு தெரிஞ்சிருக்காது"
"நீங்கள் சொல்லுறதும் சரி தான். ஆனா நான் வந்து இத்தனை நாள்ல, அப்பிடி ஒரு பொண்ணு வரவே இல்லையே. இவரும் போய் பார்க்கேல. போனும் அப்பிடி ஆரோடையும் கதைச்சா மாதிரியும் இல்லை...."
"அதுக்கு... இப்ப என்ன சொல்ல வாராய்? அப்பிடி ஒருத்தி இல்லை என்டுறியா?" என்றவன் குரலில் சற்று அழுத்தம் தெரிந்தது. அவனுக்கு தன்னையும் பொய் காரன் என்கிறாள் என்ற கோபம் போல.
"ச்சீச் ச்சீ... இல்லை என்டு சொல்லேல.. ஆனா இப்ப இல்லாம இருக்கும் என்டு சந்தேகம் வருது."
"அப்பிடி என்டுறாய்? ஏன் இந்த மாதிரி எல்லாம் உனக்கு சந்தேகம் வருது."
"நேற்று ராத்திரி முகில் ரத்த ரத்தமா சத்தி எடுத்தார் அண்ணா."
"என்ன சொல்லுறாய் தாரா?" முடிப்பதற்குள் பதறினான்.
"ஓம் அதான் எனக்கு சந்தேகமா இருக்கு. இதை பற்றி உங்களுக்கு ஏதன் தெரியுமே? தெரிஞ்சா சொல்லுங்கோ" என்றவள் குரலில் சற்றே கெஞ்சல் வெளிப்பட்டது.
"சத்தியமா தெரியாதும்மா... இப்ப அவன் எப்பிடி இருக்கிறான்?" இன்னும் பதட்டம் நின்ற பாடில்லை.
"இப்ப பரவாயில்லயண்ணா. மத்தியாணம் சாப்பிட வந்தார். சாப்பிட்டு திரும்ப உள்ளுக்க போனவர் தான் வெளியால வரேல."
"என்ன ஏதன்டு ஏதாவது சொன்னானா?"
"ம்ம் சொன்னார்.. எனென்டா அவர்ர மனிசி தானே நான், கடுப்பை கிழப்பாதைங்கோ" நேற்று அவன்ுட தன்னிடம் நடந்து கொண்டதில், இன்னமும் ஆத்திரமாகத் தான் இருந்தது.
"இதென்னடா புதுக்கதை? நேற்று உதே வாய் தானே, பக்கம் பக்கமா அவன் உன்ர மனுசன் என்டு கதை அளந்திது. இப்ப அப்பிடியே பிளேட்ட மாத்துறாய்."
"அது.. விளையாட்டுக்கு... பாவம் தங்கச்சி என்டில்லாம வெருட்டினா.. அதான் ஆட வைச்சன், இப்ப அந்த கதையே முக்கியம், விசயத்துக்கு வாக்கோ" என்றாள் கதை திசைமாறி செல்ல.
"சரி இப்ப அவன் ரத்தமா சத்தி எடுத்ததுக்கும், காதலுக்கும் என்ன சம்மந்தம் என்டு ரெண்டையும் திரிக்கிறாய்?"
"இருக்கண்ணா... எதால வீட்டை விட்டு பிரிஞ்சு வந்தாரோ, காதலிய பிரியவும் அதுவே காரணமா இருக்கலாம் தானே!"
"எதால வீட்ட விட்டு வந்தான்? அது என்ன காரணம்.?" சுத்தமாக அவனுக்கு விளங்கவில்லை.
"அது.. எப்பிடி... முகிலுக்கு ஏதோ பெரிய வருத்தம் இருக்கு போலயண்ணா..." என்றாள் சட்டென்று.
"வருத்தம்... நீ சொல்லுறதே சரி என்டு வைச்சாலும், அதுக்கு வீட்டயே இருந்திருக்கலாமே! எதுக்கு இவ்வளவு தூரம் வந்து தனியா கஷ்டப்படோணும்.?"
"ஒரு வேளை பயங்கர தொத்து வருத்தமா கூட இருக்கலாம். எங்க வீட்டுக்காறரோட இருந்தா, அவயலுக்கு தான் வருத்தத்த குடுக்கக்கூடாது என்டு நினைச்சிருப்பார் தானே."
"பயங்கர தொத்து வருத்தமோ! அப்ப நான் அவனோட ஒட்டி உறவாடிட்டனே. எனக்கும் அந்த வருத்தம் தொத்தி இருக்குமோ!" நண்பன் நோயை நினைத்துக் கவலை இல்லை. எங்கு தனக்கு தொற்றியிருக்குமோ என்ற பயம் வந்து விட்டது அவனுக்கும்.
"கட்டாயம் அண்ணா... ஓடிப்போய் பிளட் ரெஸ்ட் செய்யுங்கோ, HIV யாக் கூட இருக்க போகுது." என்றாள் அவனை இன்னும் பயப்பிடுத்துவதற்கு.
பின்னே.. அவன் என்ன காரணத்துக்கு வந்தான் என்றே தெரியவில்லை. ஏதோ ஒரு ஊகத்தில் அவள் சொல்கிறாள். அதை உண்மையா என்று கண்டு பிடிப்பதை விட்டு, அவளிடமே காரணம் கேட்டால் அவளுக்கு என்ன தெரியும். அது தான் இப்படி ஒரு குண்டை இறக்கினாள்.
"அய்யோ அம்மா.. போயும் போயும் எனக்கு அந்த வருத்தமே வரோணும்? ஊரில என்னை எல்லாரும் பிழையானவன் என்டெல்லோ நினைக்க போயினம். சாகக்கிடந்தாக் கூட ஆருமே பார்க்க வராயினமே! இப்பவே என்ர கடைசி நாள் கண்ணுக்கு தெரியிதே!" என்றான் புலம்பலாய்.
"அண்ணா பிளீஸ்.. சாகிறது தான் சாகிறீங்கள். அதுக்கு முன்னுக்கு இந்த நல்ல விசயத்த செய்தீங்கள் என்டா சொர்க்கமாவது கிடைக்கும், முகில எப்பிடியாவது குடும்பத்தோட சேர்த்து வைக்கோணும். அதுக்கு நீங்கள் எனக்கு துணையா நிக்கோணும். செய்வீங்களா?" என்க.
"அதுக்கு நான் உயிரோட இருக்கோணுமே!" புலம்பவே ஆரம்பித்து விட்டான்.
"இருப்பீங்கள் அண்ணா.. எண்ணம் தான் வாழ்க்கை. முகில குடும்பத்தோட சேர்த்து வைக்கோணும் என்டு உறுதியா நினைச்சிட்டீங்கள் என்டா, அது வரைக்கும் உங்கட உயிர் போகாது. பயப்பிடாதைங்கோ." எப்படி எல்லாம் தைரியம் சொல்கிறாள் பாருங்கோ மக்களே.
"அதுக்கு பிறகு செத்திடுவனா?" அவனுக்குத் தெரியும் விளையாடுகிறாள் என்று, இருந்தும் அவளது சந்தோஷத்தை கெடுக்க விரும்பாது அவனும் சேர்ந்தே பேசினான்.
"வாய்ப்பு கூடத்தான். ஆனா நான் ஏன் இருக்கிறன். என்ர அண்ணான்ர உயிர் எனக்கு முக்கியம் தானே! காப்பாத்தி தாரேன். ஆனா எனக்கு நீங்கள் உதவோணும்." ஒப்பந்தம் பேசினாள்.
"சரி நீ முகில கவனமா கவனி. நான் எவ்வளவு ஏலுமோ அவ்வளவுக்கு என்ன பிரச்சினை என்டு கண்டு பிடிக்க முயற்சி செய்யிறன்." என்றவன் மீண்டும் மீண்டும் முகிலை பத்திரமாக பார்க்கச் சொல்லி போனை வைத்தான்.