• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷 16

சக்திமீனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 27, 2021
Messages
92
IMG_20230321_195015.jpg


அத்தியாயம்: 16


காயத்ரி,... அவ குடும்பத்துலையே ஒரே ஒரு பெண் கொழந்தை. அவ சித்தப்பா, பெரியப்பா, அத்தைன்னு எல்லாருக்கும் ஆண் வாரிசு தான். காயத்ரி மட்டும் அவ அப்பாவுக்கு ஒரே பொண்ணு. அதனால அப்பா, சித்தப்பா, தாத்தா, பாட்டின்னு குடும்பத்துல எல்லாருக்கும் செல்லம். அவ கேட்டதை எல்லாம் தட்டாம வாங்கி குடுத்த அப்பாவை நம்பி, தன் பேச்சுக்கெல்லாம் தலையாட்டுற குடும்பத்தை நம்பி, தனக்கு பிடிச்ச மணிகண்டனை வாழ்க்கை துணையா செலக்ட் பண்ணா காயத்ரி", சுவாதி சொல்லிக் கொண்டிருக்க, இதுவரை முகநூல் காணொளியில் மூழ்கியிருந்த செழியன் தலை நிமிர்ந்து கண்கள் சுருக்கினான்.

அஸ் யூஷ்வல், மணியோட அப்பாவும் அம்மாவும் துணி வெளுக்குற வேலை செஞ்சு உயிர் வாழ்ந்ததால, காயத்ரியோட அப்பாவுக்கு மணிய பிடிக்கல. காயத்ரியோட சித்தப்பா கேசவனுக்கு மணி உயிரோட இருக்கறதே பிடிக்கல. காயத்ரியா ஒரு துணி துவைக்கிறவன் பையன் லவ் பண்றத தடயமே இல்லாம அழிக்கணும்ன்னு துடிச்சாரு. மணியையும் அவன் குடும்பத்தையும் மெரட்டினாரு. காயத்ரியா வீட்ல பூட்டி வச்சு, சொந்தத்துலயே மாப்ள பாத்து, ஊர் கூட்டி கல்யாணம் பண்ண ஏற்பாடு செஞ்சாங்க. காயத்ரியும் மணியும் ஓடி போயி ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டாங்க. M.Sc biology ல டிஸ்டின்க்ஷன்ல பாஸ் பண்ண மணிக்கு பெங்களூர்ல, ஒரு தனியார் மருந்து கம்பெனில, வேலை கிடைச்சது. காயத்ரியும் மணியும் அவங்க வாழ்க்கைய சந்தோஷமா ஸ்டார்ட் பண்றாங்க. இந்த பக்கம் காயத்ரி அப்பாவும் சித்தப்பாவும் காயத்ரியையும் மணியையும் கொலை வெறியோடு தேடுனாங்க. ஆறெழு மாசத்துக்கு பிறகு ஒருநாள் காயத்ரி இருக்கிற இடம் தெரிஞ்சுது. காயத்ரியோட அம்மா சாக கிடக்கிறதாவும், காயத்ரியோட பேர் சொல்லி புலம்பிட்டு இருக்கிறதாவும், காயத்ரியோட ஃப்ரெண்ட் ஒருத்தி மூலமா, காயத்ரிக்கு ஃபோன் பண்ணி சொன்னாங்க. அப்போ கூட காயத்ரி நம்பல. காயத்ரி அம்மா படுத்த படுக்கையா இருக்குற மாதிரி, செட்டப் பண்ணி, வீடியோ கால் வழியா, காயத்ரிக்கு காட்டினாங்க. காயத்ரியும் மணியும் கெளம்பி, தேனி ரயில்வே ஸ்டேஷன்ல வந்து இறங்கினாங்க. ரயில்வே ஸ்டேஷன்ல காயத்ரியோட சித்தப்பா சிரிச்ச மொகத்தோட காத்துட்டு நின்னாரு. காயத்ரியும் மணியும் அவர் கூட போயி காயத்ரியோட அம்மாவ பாத்துட்டு, ரெண்டு நாள் அங்க ஸ்டே பண்ணிருக்காங்க. அடுத்த நாள் ஆட்டோல பஸ் ஸ்டாப் வந்து, பஸ் ஏறி, மணியோட ஊரான கோட்டைமேட்டுக்கு வர்றது தா அவங்க பிளான். அதனால் தா கோட்டைமேட்டுக்கு போற மினி பஸ்ல ஏறிருக்காங்க", சுவாதி சொல்ல, காயத்ரி அம்மா படுத்த படுக்கையா இருக்குற மாதிரி, செட்டப் பண்ணி, வீடியோ கால் வழியா, காயத்ரிக்கு காட்டினாங்க. காயத்ரியும் மணியும் கெளம்பி, தேனி ரயில்வே ஸ்டேஷன்ல வந்து இறங்கினாங்க. ரயில்வே ஸ்டேஷன்ல காயத்ரியோட சித்தப்பா சிரிச்ச மொகத்தோட காத்துட்டு நின்னாரு. காயத்ரியும் மணியும் அவர் கூட போயி காயத்ரியோட அம்மாவ பாத்துட்டு, ரெண்டு நாள் அங்க ஸ்டே பண்ணிருக்காங்க. அடுத்த நாள் ஆட்டோல பஸ் ஸ்டாப் வந்து, பஸ் ஏறி, மணியோட ஊரான கோட்டைமேட்டுக்கு வர்றது தா அவங்க பிளான். அதனால் தா கோட்டைமேட்டுக்கு போற மினி பஸ்ல ஏறிருக்காங்க", சுவாதி சொல்ல, காயத்ரி அம்மா படுத்த படுக்கையா இருக்குற மாதிரி, செட்டப் பண்ணி, வீடியோ கால் வழியா, காயத்ரிக்கு காட்டினாங்க. காயத்ரியும் மணியும் கெளம்பி, தேனி ரயில்வே ஸ்டேஷன்ல வந்து இறங்கினாங்க. ரயில்வே ஸ்டேஷன்ல காயத்ரியோட சித்தப்பா சிரிச்ச மொகத்தோட காத்துட்டு நின்னாரு. காயத்ரியும் மணியும் அவர் கூட போயி காயத்ரியோட அம்மாவ பாத்துட்டு, ரெண்டு நாள் அங்க ஸ்டே பண்ணிருக்காங்க. அடுத்த நாள் ஆட்டோல பஸ் ஸ்டாப் வந்து, பஸ் ஏறி, மணியோட ஊரான கோட்டைமேட்டுக்கு வர்றது தா அவங்க பிளான். அதனால் தா கோட்டைமேட்டுக்கு போற மினி பஸ்ல ஏறிருக்காங்க", சுவாதி சொல்ல, அடுத்த நாள் ஆட்டோல பஸ் ஸ்டாப் வந்து, பஸ் ஏறி, மணியோட ஊரான கோட்டைமேட்டுக்கு வர்றது தா அவங்க பிளான். அதனால் தா கோட்டைமேட்டுக்கு போற மினி பஸ்ல ஏறிருக்காங்க", சுவாதி சொல்ல, அடுத்த நாள் ஆட்டோல பஸ் ஸ்டாப் வந்து, பஸ் ஏறி, மணியோட ஊரான கோட்டைமேட்டுக்கு வர்றது தா அவங்க பிளான். அதனால் தா கோட்டைமேட்டுக்கு போற மினி பஸ்ல ஏறிருக்காங்க", சுவாதி சொல்ல,

போற வழியில பஸ்ஸ வழி மறிச்சு வெட்டிருக்கானுங்க. பஸ் டிரைவர், கண்டக்டர், பேசஞ்சர்னு யாருமே பாக்கலியா? சாட்சி சொல்ல ஒருத்தனுக்கு கூட தைரியம் வர்லியா?", சுவாதிக்கும் செழியானுக்கும் நடுவில் அமர்ந்திருந்த சாரதி கேட்டான்.

இப்போ நம்ம ஊர்ல தைரியத்துக்கு தா சாரதி பஞ்சம்", சுவாதிக்கு எதிரில் அர்ந்திருந்த செம்பன் சொன்னார்.

அதான் கேஸ் முடிஞ்சி போச்சே!! பொறவெதுக்கு இந்த ஆராய்ச்சிலாம்?", செழியன் கேட்டான்.

அப்பன் மாட்டிக்க போறான்னு மொவனுக்கு பதறுது பாரு", தன் தொண்டைக்குழிக்குள் புலம்பிய

சாரதியை முறைத்தான் செழியன்.

இங்க என்னல லுக்கு? அங்க பாரு", சாரதி சொன்னான்.

இப்போ இந்த மர்டர் கேஸ்ல ஒரு எவிடன்ஸ் கெடைச்சுருக்கு செழியா", சுவாதி சொன்னாள்.

என்ன எவிடன்ஸ்?",

சுவாதி, கேசவன் கலந்து கொண்ட ஆன்மீக சொற்பொழிவு கூட்டத்தின் காணொளியை காட்டினாள். செம்பன் கூட்டம் நடைபெற்ற தேதியை விளக்கினார்.

சம்பவ இடத்துலயே மணிகண்டன் இறந்துட்டான். காயத்ரி சில வெட்டுக் காயங்களோட ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செய்யப்பட்டாங்க", சுவாதி சொல்லிக் கொண்டிருக்கும் போது,
எல்லாஞ்சரி கொலை நடந்த இடத்துல, ஒரு டீக்கடை கூடவா இல்லாம போச்சு", சாரதி கேட்டான்.
கொலை நடந்த இடத்தில இருந்து கூப்பிடுற தூரத்துல, சில கடைகள் இருக்கு. பட், அவங்க எல்லாருமே, கொலைகாரனை சரியா கவனிக்க முடியலன்னு, போலீஸ் இன்வெஸ்டிகேஷன்ல சொல்லிருக்காங்க", சுவாதி சொன்னாள்.
மனசாட்சி செத்த பையலுக", சொன்னான் சாரதி.
அடிஷனல் இன்ஃபர்மேஷன், மணிகண்டன் இறந்தப்போ காயத்ரி கர்ப்பமா இருந்தாங்க",

செழியன் விழிகள் விரித்தான். நெஞ்சம் சிறு குருவி தாங்கிய பாறையாக கனத்தது.

ஆண்ட் அவ்வளவு பெரிய கொலை முயற்சியிலயும், கொழந்தைக்கு எதுவும் ஆகல", சுவாதி சொல்ல, அதிர்ந்து பார்த்தான் செழியன்.
தகப்பனார் மீதான வெறுப்பு அதிகமானது.
இப்போ காயத்ரி எங்க இருக்காங்க?", செழியன் கேட்டான்.

தெரிஞ்சிட்டு என்ன பண்ண போற?", கோபமாக கேட்டான் சாரதி.

செழியன் வலியோடு பார்த்தான்.

சுவாதி வியப்பாக பார்த்தாள்.

ம்ம், தெரீல. காயத்ரி இருக்கிற இடம் பத்தி அவங்க அப்பா அம்மாக்கே தெரீல",
அப்போ, காயத்ரி அவங்க அப்பா அம்மா கஸ்டடில இல்லையா?", செம்பன் கேட்டார்.

இல்ல சார், அவங்க அம்மா குடுத்த ஸ்டேண்ட்மெண்ட் படி, காயத்ரி கர்ப்பமா இருக்கறது தெரிஞ்சதும் கருவை கலைக்க முயற்சி பண்ணிருக்காங்க. கொழந்தைய காப்பாத்த காயத்ரி, யாருக்கும் தெரியாம வீட்டை விட்டு ஓடிட்டாங்க. ஆஃப்டர் தட், காயத்ரியோட அப்பா, மணியும் காயத்ரியும் தங்கியிருந்த பெங்களூர் வீட்ல போயி தேடியிருக்காங்க. பட் காயத்ரி அங்க போகல",

அப்படின்னா, காயத்ரிக்கு மனநிலை சரியில்ல. ட்ரீட்மெண்ட்ல இருக்காங்க. அதனால் காயத்ரி கோர்ட்டுக்கு வர முடியலன்னு, அவங்க தரப்பு வக்கீல் சொல்றது", செழியன் கேள்வியாக பார்த்தான்.

சுத்தமான பொய்", என்றாள் சுவாதி.

எல்லாம் ஓகே, கொலைய செய்யாமலே காயத்ரியோட சித்தப்பா கேசவன், ஏன் பழிய ஏத்துகிட்டாரு?", சாரதி கேட்டான்.

அதுக்கான காரணத்தை ரெண்டு விதமா கெஸ் பண்ணலாம். முதல் கெஸ், கேசவனுக்கு கொலை செய்ய தைரியம் இல்லாம, ஒரு ஆளை ஏற்பாடு பண்ணி கேசவன் கொலை செய்துருக்கணும். ரெண்டாவது கெஸ்,... ரெண்டு சாதி ரத்தம் கலக்குறது புடிக்காத, சாதி வெறி புடிச்ச ஒருத்தன்,..... ம்ம்,..... அவனை மிஸ்டர் C. V ன்னு வச்சுக்கலாம். அந்த சி.வி., மணிகண்டனை கொலை செய்யவும், கொலைப்பழியை ஏத்துக்கவும் கேசவனை பயன்படுத்தி இருக்கணும். எது எப்படியா இருந்தாலும் கொலை நடந்த எடத்துல கேசவன் இல்ல", சுவாதி சொல்ல செழியனின் இதயம் கனத்தது.

அதென்ன c.v? சாரதி கேட்டான்.

காஸ்ட் வெறியன்", சொல்லி சிரித்தாள் சுவாதி.
செழியனால் சிரிக்க முடியவில்லை.

எங்க?! இந்த ரெண்டுல, கொலைக்கான மோட்டிவ் எதுவா இருக்கும்னு கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்", சுவாதி சொன்னாள்.

ரெண்டாவது விதமாத்தா கொலை நடந்துருக்கும்", உணர்வின்றி சொன்னான் செழியன்.

வாவ், குட் கெஸ்ஸிங்க் செழியா!! எப்படி கண்டு பிடிச்ச?", சுவாதி உற்சாகமாக கேட்டாள்.

கேசவன் ஆள் வச்சு மர்டர் பண்ணியிருந்தா அவன் கொலைப்பழி ஏத்துட்ருக்க மாட்டான். ஏதோ ஒரு ஆதாயம் இல்லாம ஜெயிலுக்கு போக கேசவன் என்ன பைத்தியமா?! இங்க, கொலை செய்யவும், கொலைப்பழி ஏத்துக்கவும் ஏதோ பேரம் நடந்த மாதிரி தெரியுது", செழியன் சோர்வான குரலில் பதில் சொன்னான்.

கரெக்ட். கொலை நடந்த நாள்ல இருந்து, மூணு நாள் முன்னாடி, கேசவனுக்கு பல லட்சம் இன்கம் வந்துருக்கு. பட், இன்கம் வந்ததுக்கான சோர்ஸ்னு எதும் இல்ல. திடீர்னு இருவது லட்ச ரூபாய்க்கு இடம் வாங்கிருக்கான். கேசவனோட பசங்க ரெண்டு பேரையும், படிக்க அமெரிக்கா அனுப்பிருக்கான். சோ, யாரோ ஒரு CV,..... அதான் காஸ்ட் வெறியன், சமூகத்துல சாதியப் படிநிலை மாறாம அப்படியே இருக்கணும்னு நினைக்கிற காட்டுமிராண்டி, பண்ண அரசியல் கொலை இது. ",

கௌரவக்கொலை", என்றான் சாரதி.

ஆம் என்று மூவரும் தலையாட்டினார்கள்.

இந்த கொலையை செய்ய விலைக்கு வாங்கப்பட்ட ஆள் தா கேசவன்", சுவாதி சொன்னாள்.

கெடைச்ச ஆதாரத்தை போலீஸ்கிட்ட குடுத்துரலாமே!! நாம ஏன் சார் ரிஸ்க் எடுக்கணும்?", செழியன் செம்பனிடம் கேட்டான்.

செழியனை புழுவை பார்ப்பதை போல் பார்த்தான் சாரதி.

இல்ல செழியன், இந்த கேஸ்ல போலீஸ் சரியா டியூட்டி பார்த்திருந்தா எப்போவோ கிரிமினல்ஸ்ஸை அரெஸ்ட் பண்ணிருக்கலாம். பட், அப்படி நடக்கல", செம்பன் சொன்னார்.

இப்போ ரீசண்டா நவீன்கிட்ட இந்த கேஸ் பத்தி கேட்டப்போ, அவனும் பொறுப்பான தகவல் எதுவும் தரல. சோ, இப்போ போலீஸ்கிட்ட ஹெல்ப் கேக்க வேணாம்னு நானும் செம்பன் சாரும் முடிவு பண்ணிருக்கோம்", சுவாதி சொன்னாள்.
பதிலின்றி உறைந்தான் செழியன்.

அது மட்டுமில்லாம இந்த கேஸ் இன்வெஸ்டிகேஷனை நா எனக்கான சவாலா பாக்குறேன். அந்த காஸ்ட் வெறியனை போலீஸ் அரெஸ்ட் பண்ணி வேன்ல ஏத்துறத நா நேர்ல பாக்கணும். இது மாதிரி எத்தனை பேர் லைஃப் நாசம் பண்ணிருப்பான். காட்டுமிராண்டி", சுவாதி சொன்னாள்.




பன்னிரெண்டு சோழிகள் மேஜை மீது வரையப்பட்டிருந்த கோலத்தின் மீது சுழன்றது. சில சோழிகள் நிமிர்ந்தும் பல சோழிகள் கவிழ்ந்தும் விழுந்தன.

தன் கைவிரல்களை எண்ணிக் கொண்டிருந்தார், சந்தன நிற வேஷ்டியும் சட்டையும் அணிந்த வயதானவர். நெற்றியில் சந்தனத்தை மூன்று கோடுகளாக இழுத்து, நடுவில் குங்குமம் வைத்திருந்தார். அவர் ஏதோ ஆழமாக சிந்தித்து இருக்க,

எதிர் இருக்கையில் மதிவாணன் பதட்டத்தோடு, ஆனால் அதை மறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். கௌசல்யா ஆர்வத்தோடு நின்றிருந்தாள்.

ஒண்ணும் பிரச்சினை இல்லீங்களே சாமி..., கெரகம் என்ன சொல்லுது?”, என்று பவ்யமாக கேட்டார் மதிவாணன்.

பெருமூச்சை இழுத்து விட்ட சோதிடர், மேசை மீதிருந்த சுவாதியின் ஜாதகத்தை புரட்டினார்.

ஓ மகளுக்கு கல்யாணத்துக்கு நேரம் வந்துருச்சு”, ஜோசியர் சொல்ல, மதிவாணன் சிரித்தார், கௌசல்யா பயந்தாள்.

ஆனா,.....

ஆனா என்னங்க சாமி”,

ஓ பொண்ணுக்கு களத்திர தோஷம் இருக்கு. அவ கல்யாணம்,.... ஓ உயிருக்கு கண்டம்

அய்யோ”, கௌசல்யா பதறினாள்.

மதிவாணன் எச்சில் விழுங்கினான்.

ஒரு ரெண்டு மூணு வருசம், கல்யாண பேச்சை எடுக்காம இருக்கலாமுங்க. கெட்ட நேரம் முடியட்டும். பொறவால பாத்துக்கலாமல்ல”, கௌசல்யா சொன்னாள்.

வாய மூடிட்டு இருடி. எல்லாம் ஒன்னால வந்தது. நீ அவள வளத்த லட்சணந்தே என்னைய ஆட்டிப் படைக்குது. அவ இங்க இருந்தா தா எனக்கு ஆபத்து”, கௌசல்யாவிடம் எரிச்சலோடு சொன்ன மதிவாணன்,

ஏதாவது பரிகாரம் இருக்குங்களா சாமி?”, என்று கேட்டார்.

ஏன் இப்புடி அவசரப்படுற மதிவாணா, பொண்ணுக்கு என்ன அவ்வளவு வயசா ஆகி போச்சு?”,

அப்புடி இல்லீங்க சாமி, செய்ய வேண்டியத காலகாலத்துல செய்யணுமில்லீங்ளா?”, என்ற மதிவாணன்,

ஏ,.... இந்தா, குடிக்க தண்ணி கொண்டாடி”, என்றார் மனைவியிடம்.

கௌசல்யா சமையலறைக்கு சென்றாள். மனைவி விலகி சென்றவுடன்,

சாமி..., தப்பா நெனைச்சிக்காதீக. எம்பொண்ணு ஒரு சேனல்ல, மாச சம்பளத்துக்கு வேலை பாக்குறா. அதுவே எனக்கு கொஞ்சங்கூட
புடிக்கல. ஒரே பொண்ணு, அவ மனச நோகடிக்க தைரியமில்லீங்க. அதேன், ஒண்ணுஞ்சொல்லாம இருக்கேன். ஆனா, இப்போ அவ, அந்த மணிகண்டன் கொலை கேஸ்ஸ விசாரிக்குறதா எனக்கு சேதி வந்துருக்குது. எம்பொண்ணு மனசுல நா எப்போ ஒசத்தியா இருக்கணும். அவளுக்கு இந்த அரசியல் பத்தியெல்லாந்தெரியாது. தெரியவுங்கூடாது,.... ம்ம், எம்பொண்ணே எனக்கு எதிரியா வர்றத என்னால,..... “,
புரியுது என்றார் சோதிடர்.
எம்பொண்ணு எம்பேச்ச கேக்கணும். அவ மனச மாத்துறதுக்கு ஏதாச்சும் பரிகாரம் இருக்குதுங்களா?”, தயக்கத்தோடு கேட்டார் மதிவாணன்.
ம்ம்ம்ம், பாக்குறேன்”, என்றவர் மீண்டும் சோழியை உருட்டி,
ஜாதகத்தை புரட்டினார்.

கௌசல்யா செம்பு நிரம்ப தண்ணீரோடு வந்தாள். மதிவாணன் முன் நீட்டினாள்.

சாமிக்கு குடு”, என்றான்.

சாமி”, என்றபடி தண்ணீரை நீட்டினாள். வாங்கி குடித்தார். சிரித்தார்.

ஒங்க குல தெய்வம் அங்காளம்மனுக்கு பட்டு சாத்தி, ஹோமம் நடத்தி கெரக சாந்தி பண்ணி, எட்டு பிராமணாளுக்கு வேட்டி சட்டையும், பொன்னும் தானமா குடு மதிவாணா. உன் மகளோட களத்திர தோஷம் நீங்கும். ஓ தலைக்கு வந்த ஆபத்து, வந்த தடம் தெரியாம அழிஞ்சிரும். ஓ பொண்ணு நாய்க்குட்டி மாதிரி ஓ பேச்ச கேட்டு நடப்பா”, என்றார் சோதிடர்.
ரொம்ப சந்தோசமுங்க சாமி, அதானுங்க எனக்கும் வேணும்”, என்றார் மதிவாணன். புரியாமல் நின்றாள் கௌசல்யா.




ஏல சாரதி, நில்லுல போயிராத”, என்றபடி ஓடி வந்தான் செழியன். திரும்பி பார்த்த சாரதி செழியன் வருவதை பார்த்ததும், வேகமாக தன் பைக்கை நோக்கி நடந்தான்.

லேய், நில்லுல மாடு”, என்றபடி ஓடி வந்து சாரதியின் சட்டைக்காளரின் பின் பகுதியை பிடித்து இழுத்தான் செழியன்.

வுடுல, என்றபடி விலகிக் கொண்டான் சாரதி.

நானும் பாத்துட்டே இருக்றேன். ரொம்பத்தே முறுக்கிட்டு திரிற. இந்தா, நா தப்பெதும் பண்ணல. இது கூட புரிஞ்சிக்க தெரியாத நட்பு என்னல நட்பு?', செழியன் சொன்னான்.

இம்புட்டு வருசமா ஓ நடிப்ப நம்பி ஏமாந்தது போதும். இன்னும் கூத்து கட்டாத. தள்ளி நில்லு”, என்ற சாரதி, தன் பைக்கில் ஏற பைக் சாவியை உருவினான் செழியன்.

என்னல நடிச்சேன்? இப்புடியே பேசிட்டுருந்தேன்னு வையி”, விரல் நீட்டி எச்சரித்தான் செழியன்.

இருந்தா, ஒங்கப்பன் மணிகண்டனை வெட்டி சரிச்ச மாதிரி நீ என்னைய வெட்டிருவியோ?”, சாரதி கேட்டவுடன், சட்டென அவனின் சட்டைக்காளரை பற்றிப் பிடித்தான் செழியன்.

டேய், என்ட்றா பண்ணிட்டுருக்கீங்க? வுடுங்கடா”, என்ற படி ஓடிவந்து இருவரையும் பிரித்தாள் சுவாதி.

இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டார்.

என்னதாண்டா ஆச்சு ஒங்க ரெண்டு பேருக்கும்? நானும் கொஞ்ச நாளாவே பாத்துட்டுருக்றேன். ஒருத்தருக்கொருத்தர் மொறைச்சிட்டே இருக்குறீங்க. என்னடா பிரச்சினை ஒங்களுக்குள்ள?”,

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நின்றார்கள்.

மரியாதையா சொல்லுங்க. என்னடா பிரச்சினை?”,

பெருசா ஒண்ணுமில்ல,...... அன்னைக்கு ஒரு நாள் என் சரக்கையும் சேத்தி அவங்குடிச்சிட்டான். அதான்,....”, சாரதி சொன்னான்.

செழியன் சிரித்தான்.

அடி செருப்பால, பொறுக்கி நாயிங்களா? குடிக்கிறதே தப்பு, இந்த லட்சணத்துல, எச்சத்தனமா, சண்ட வேற போட்டுக்குறீங்களா?. ரெண்டு பேரும் கை குடுங்கடா”,

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நின்றார்கள்.

கை குடுங்கடா, இல்ல இனி நா ஒங்க ரெண்டு பேர்கிட்டேயும் பேசவே மாட்டேன்”, சுவாதி சொன்னதும், முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு கையை மட்டும் நீட்டினான் சாரதி. உடனே பிடித்து குலுக்கினான் செழியன். சிரித்தாள் சுவாதி. செழியனும் சிரித்தான்.




காயங்களே காணாமல் போகும்
நட்புக்குள்!!
புரியாமையும் அறியாமையும் மட்டும்
உயிர் வாழ்ந்து விடுமா?



தொடரும்.........


சக்தி மீனா......
 

vinodha mohan

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 29, 2023
Messages
29
சுயமா சிந்திக்கிற மக...
நீ பூஜை பண்ணுனதும்
உன் காலை சுத்தி வந்துருவாளா????
😂😂
சிரிப்பா வருதே...


செழியன் ரியாக்ஷன் பார்த்தா...
தந்தை பாசமும் நீதி நேர்மைக்கும் நடுவில போராடுறான் னு நல்லாவே தெரியுது...
காலம் என்ன வச்சுருக்கோ!!!!

அரசியல் , சாதி வெறி சூழ்ச்சிகளுக்கு மத்தியில்...
கனவுகள் , ஆசைகளோடு
சிறகடித்த பட்டாம்பூச்சிகளும்...
சிறகடிக்க காத்திருக்கும் பட்டாம் பூச்சிகளும்‌.....
கனவுகள் மெய்ப்படுமோ!!!
இல்லை...
சூழ்ச்சிகளால் நசுக்கப்படுமோ!!!!!

சூப்பர் மீனா....👍👍👍❤️❤️❤️❤️❤️❤️
Waiting for next one ....
 
Top