ஸ்கூட்டி சாவியை கையில் வைத்து கொண்டு சிரித்த படி நின்றிருந்தான் செழியன்.
ஏய், சாவியை குடுல, ஒனக்கென்ன முத்தி போயிருச்சா?! என்னத்துக்கு எம்பின்னாலயே சுத்திட்டுருக்ற?!",
வால போலன்னு மரியாதை இல்லாம பேசாதடி. நான் உன்னய கட்டிக்க போறவனாக்கும். பாசமா மாமான்னு கூப்பிடுறி செல்லம்!!", என்ற செழியன் அவளை நெருங்கி சென்றான் .
நீ என்ன எனக்கு அத்தை பையனால? மாமான்னு கூப்பிட. சாவியை குடுல மடப்பயலே", அவள் கோபமாக சொன்னாள்.
முதல்ல கீழே இறங்குடி", அவன் சொல்ல,
முடியாது, சாவியை குடு. நான் போகணும்",
எனக்கு பதில் சொல்லிட்டு போடி, இறங்கு", என்றான்.
உனக்கு நா என்னல பதில் சொல்லணும்?", என்றவள் அவன் கையில் இருந்த சாவியை பறிக்க முயல, சாவியை பின்னால் இழுத்து கொண்டான் அவன்.
எப்போ கண்ணாளத்த வச்சுக்கலாமுன்னு சொல்லிட்டு போ?", செழியன் கேட்க,
எப்போ வேண்ணாலும் வச்சிக்க. உன் கல்யாணத்தை நீ எப்போ வச்சிகிட்டா எனக்கென்ன?! குடுல சாவிய?", என்றவள் மீண்டும் சாவியை கைப்பற்ற முயல மீண்டும் சாவியை பின்னால் இழுத்து கொண்டான் செழியன்.
கண்ணாளப்பொண்ணுகிட்ட தானடி கேட்க முடியும்!!?", சொல்லி புருவம் உயர்த்தி சிரித்தான்.
அது உன் கனவுலகூட நடக்காது", அவளது வார்த்தைகளில் தீக்கனல் தெறித்தது.
தினம் நடக்குது சந்தியா. என் கனவுல தினமும் நம்ம கல்யாணமும் நடக்குது. கூடவே இலவச இணைப்பா ஃபர்ஸ்ட் நைட்டும்", சொல்லி செழியன் கண்ணடிக்க,
ச்சீ, பொறுக்கி", என்றாள் சந்தியா.
தலையில் அடித்து வேறு பக்கம் திரும்பி கொண்டான் சாரதி.
பொறுக்கியா?!!. யாருடி பொறுக்கி?!!", குரல் உயர்த்தினான்.
நீதான்ல பொறுக்கி",
அப்படி நா என்னடி பொறுக்கித்தனம் பண்ணிட்டேன்?!”, இயல்பான தொனியில் அவன் கேட்க,
தனியா போற பொண்ணை வழி மறிச்சி, அசிங்கமா பேசுற!! இது பொறுக்கித்தனம் இல்லாம வேற என்னல?", சொல்லி அவள் முறைத்தாள்.
நா என்ன உன் கைய பிடிச்சா இழுத்தேன்?!!. இல்ல, உன்னை கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணேனா?!! உன்னை கல்யாணம் பண்ணிட்டு உன்கூட வாழ ஆசைப்படுறேன்னு சொல்றேன். இதுக்கு பேர் உன் அகராதில பொறுக்கித்தனமா?!!", அவன் ஆவேசம் கொண்டவனாக கேட்க,",
அவனை அசிங்கமாக பார்த்தவள்,
உன்கிட்ட பேசுறது எனக்குத்தான் டைம் வேஸ்ட்", என்றாள். ஸ்கூட்டி டிராயரை திறந்து இன்னொரு சாவியை எடுத்து ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள். அந்த சாவியையும் வலுக்கட்டாயமாக பறித்து கொண்டான் செழியன்.
இன்னைக்கு எனக்கு பதில் சொல்லாம நீ இங்க இருந்து போக முடியாது", என்றான்.
ப்ச்", இரு கைமுட்டுகளையும் ஹேண்டில் பாரில் வைத்து, தலைக்கு இரு கைகளையும் முட்டு கொடுத்து பெருமூச்சு விட்டாள் சந்தியா.
நான் உனக்கு நாலு வருஷத்துக்கு முன்னாடியே பதில் சொல்லிட்டேன் செழியா. என்னை ஏன் இப்படி டார்ச்சர் பண்ற?", என்று சலிப்பாக கேட்டாள் சந்தியா.
சரி, என்னை பிடிக்கல விடு. உன் வீட்ல உங்க அப்பா கொண்டு வர்ற மாப்பிள்ளை எல்லாம் ஏன் வேணாம்னு சொல்ற?",
எனக்கு பிடிக்கல வேண்டாங்குறேன். அதை பத்தி உனக்கு என்னல?!!", மீண்டும் குரல் உயர்த்தினாள்.
பொய் சொல்ற சந்தியா. உன் மனசுல நா இருக்கேன். அதான் ஒங்கப்பன் கொண்டு வர்ற மாப்ளையெல்லாம் வேணான்னு சொல்ற?",
ஏன் செழியா, இல்லாததையெல்லாம் கற்பனை பண்ணிட்டு என்னை இப்டி டார்ச்சர் பண்ற?! நா வேலைக்கு போணும், லேட்டாச்சு சாவிய குடு", கெஞ்சும் குரலில் கேட்டாள்.
அப்போ ஒத்துக்க!",
என்னத்தல ஒத்துக்குறது?",
உன் மனசுல நா இருக்கேங்குற உண்மைய",
சத்தியமா இல்ல!!
அப்போ ஏன், உங்க வீட்ல கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேங்குற?!!", அவன் குரல் உயர்த்தி கேட்க,
அது என் பர்சனல், அதை உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. இப்போ சாவியை குடுக்குறியா?!! போலிஸ்க்கு ஃபோன் பண்ணவா?", கேட்டு கையில் அலைபேசியை எடுத்தாள் சந்தியா.
அய்யோ போலீசா? அதெல்லாம் வேணாம் சந்தியா", என்று சந்தியாவிடம் சொன்ன சாரதி,
ஏலேய் செழியா, கோர்ட்டுக்கு போக லேட்டாச்சு. வெரசா சாவிய கொடுத்து போட்டு வாலே", என்று செழியனிடம் சொன்னான்.
இருல வர்றேன்", என்றவன்,
இந்தேரு சந்தியா, நா ஒன்னய ரொம்ப லவ் பண்றேன். ஒண்ணு என் லவ்வுக்கு ஓகே சொல்லு. இல்ல, எனக்கு இவனை பிடிச்சிருக்கு. இவனை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு, உனக்கு பிடிச்சவனை எனக்கு காட்டு. நா வெலகிடுறேன். அதை விட்டுட்டு இப்படியே வீம்பு பண்ணிட்டு இருந்தன்னு வை", செழியன் மிரட்டும் தொனியில் சொல்ல,
இருந்தா, என்னல பண்ணுவ?", குரல் உயர்த்தினாள் சந்தியா.
உன்னை தூக்கிட்டு போய், கைய காலை கட்டி போட்டு, தாலிய கட்டிருவேன்டி, எம்பொண்டாட்டி", சொல்லி சிரித்தான் செழியன். கோபமாக முறைத்தாள் சந்தியா.
ப்ச், செழியா", கத்தினான் சாரதி.
இருல", என்ற செழியன்,
மறுபடியும் சொல்றேன் சந்தியா, ஐ லவ் யூ. சீக்கிரமா எனக்கு ஐ லவ் யூ சொல்ற வழிய பாரு. அதுதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது", என்றான். அவள் முறைத்துக் கொண்டே இருந்தாள்.
செழியன் சாவிகளை அவளிடம் நீட்டி சொன்னான்,
மறுபடியும் பாப்போம்",
அவன் கையில் இருந்து சாவியை பறித்து கொண்டவள், ஸ்கூட்டியை கிளப்பி சென்றாள். அவள் செல்லும் பாதையை வெறித்து நின்று, பெருமூச்சு விட்டான் செழியன்.
நீ பண்றது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல செழியா. அவ சின்னதுலருந்தே நம்ம கூட படிச்ச புள்ளைல. உன் மேல விருப்பம் இல்லாத பொண்ணை இப்படி டார்ச்சர் பண்றது பச்சை பொறுக்கித்தனமாட்டம் தெரியுது!!. உன்னால அவ என்னையும் தப்பா நினைப்பா", என்று சாரதி சொல்ல,
நண்பனுக்காக இது கூட செய்யலன்னா எப்படில?", என்றான் செழியன்.
உனக்கு என்னல குறை?!!. நீ ஓகே சொன்னா, உங்க அப்பா படிச்ச, பணக்கார பொண்ணுங்க ஆயிரம் பேரை கியூல நிறுத்துவாக. சுவாதி வேற உன் பின்னாலயே சுத்துறா", என்று சாரதி முடிக்கும் முன்,
சுவாதி என் ஃப்ரெண்ட்டுல முட்டா பையல", என்று சற்றே குரல் உயர்த்தி சொன்னான் செழியன்.
சரி, அவ ஃப்ரெண்ட். வேற பொண்ணை பாரு. ஏன் இப்படி உன் மேல இஷ்டம் இல்லாத சந்தியாவை கட்டாயப்படுத்திட்டுருக்கிற?!! இது தப்பு செழியா. இட்ஸ் ய வையலன்ஸ்", எரிச்சலோடு சாரதி சொல்ல,
வையலன்ஸா?. விட்டா நீயே போலிஸ்ல கம்பிளைண்ட் பண்ணிருவ போலிருக்கு", என்றவன் பைக்கில் ஏறினான்.
சாரதி பின்னால் ஏறிக் கொண்டான்.
இது வையலன்ஸ் இல்ல சாரதி. சில சிக்கலான பிரச்சினையை சரி பண்றதுக்கு பண்ற தப்பு, தப்பில்ல. ஆரோக்கியமான சாப்பாட்டை அம்மா கொடுக்கும் போது, சாப்பிட அடம்பிடிக்கிற குழந்தையை அந்த அம்மா அடிச்சி சாப்பிட வைக்கிறது வையலன்ஸ்ஸா!??. இல்ல...., அது அம்மாவுக்கு குழந்தை மேல இருக்கிற அக்கறை. அந்த மாதிரிதான் இதுவும்", என்று சொன்ன செழியன் அமைதியாக பைக்கை ஸ்டார்ட் செய்ய,
செழியா...... ஸ்கூல் படிக்கும் போது இருந்தே நீயும் நானும் ஃப்ரெண்ட்ஸ். நீ செய்ற ஒவ்வொரு காரியத்துக்கும் எனக்கு அர்த்தம் புரியும். சந்தியா விஷயத்துல மட்டும் உன்னை என்னால புரிஞ்சிக்கவே முடியலல", சொன்னான் சாரதி.
புரிய வேணால. இந்த விஷயத்துல நீ சில விஷயங்களை புரிஞ்சிக்காம இருக்கிறதுதா நல்லது", என்றான் செழியன். புரியாமல் பார்த்தான் சாரதி.
பைக் நீதிமன்றம் இருக்கும் சாலை நோக்கி பாய்ந்தது.....
டேய் நில்றா, என் பந்தை என்கிட்ட கொடுறா", என்று சத்தமிட்ட படி, துரையின் படுக்கை அறைக்குள் நுழைந்த ஏழு வயது சிறுவனை துரத்தி கொண்டு ஓடி வந்தாள் அந்த ஆறு வயது சிறுமி.
ஏய் என்னை பிடிறி பார்க்கலாம்", என்றபடி ஓடினான் அந்த சிறுவன்.
கடிகாரம் ஒன்பதை தொட்ட பிறகும் அசந்து தூங்கி கொண்டிருந்த கொடி, குழந்தைகளின் சத்தம் கேட்டு கண் விழித்தாள். கடிகாரத்தை பார்த்தவள் அதிர்ச்சியோடு எழுந்தாள்.
குளியலறைக்குள் இருந்து தலையை துவட்டியபடி வெளியே வந்த துரை,
டேய் டேய், நில்றா", என்றபடி, அந்த சிறுவனை பிடிக்க,
மாமா, அது என் பந்து. அத என்கிட்ட கொடுக்க சொல்லுங்க", என்றாள் சிறுமி.
மாமா உனக்கு வேற பால் வாங்கி தர்றேன். சண்டை போடாம வெளியே போய் விளையாடுங்க", துரை கூற,
நெசமா?", என்று கை நீட்டியது பெண் குழந்தை.
குழந்தையின் உள்ளங்கையில் உள்ளங்கை வைத்து,
நெசமா" என்றான் துரை.
அப்போ ஒகே", என்றது குழந்தை.
குழந்தைகள் வெளியே சென்ற பிறகும், இன்னும் அதிர்ச்சி மாறாமல் பார்த்து நின்றாள் கொடி.
ஏய், என்னாச்சு?! ஏன் இப்படி டென்ஷனா இருக்க?", அவன் கொடியிடம் கேட்க,
சாரி, ரெண்டு நாளா தூக்கமே இல்ல. அதான் அசந்து தூங்கிட்டேன்", என்றாள் கொடி.
அதுக்கு எதுக்கு சாரி?!", அவன் கேட்க, புரியாமல் விழித்தாள்.
இந்தேரு கொடி, இது உன் வீடு. இங்க நீ உன் இஷ்டம் போல இருக்கலாம். இன்னும் ரெஸ்ட் வேணும்னா, நல்லா தூங்கி முழி. பயப்பட தேவையில்ல, புரியுதா?!", அவன் கேட்க, சரி என்று தலையசைத்தாள் கொடி.
சரி, குளிச்சிட்டு வா", என்றவன் சோஃபாவில் அமர்ந்து, தன் மடிக்கணினியை திறக்க கண் அகட்டாமல் பார்த்தாள் கொடி.
என்ன?! ஏன் அப்படி பார்க்குற?! கேட்டான் அவன்.
அது,.... அது......",
எனக்கு பயப்படுற கோழைகளை பிடிக்காது", என்றான் துரை. புரியாமல் அவள் பார்க்க,
எதுவா இருந்தாலும் நேருக்கு நேர் பேசு. தைரியமா சத்தமா பேசு. மனசுல தப்பு இருந்தா மட்டும்தான் குரல்ல தயக்கம் இருக்கும்னு நம்புறவன் நான். உன் மனசுல ஏதாவது தப்பு இருக்கா என்ன?", அவன் கேட்க இல்லை என்பதாக உடனே தலையாட்டினாள் அவள்.
அப்போ சொல்லு, என்ன சொல்ல வந்த?!
சொல்ல வரல, கேட்க வந்தேன்", கொடி சொல்ல,
என்ன கேக்கணும்?",
நீங்க பிளஸ் டூ தான் படிச்சிருக்கீங்கன்னு சொன்னாங்க. இங்க இந்த ரூம் முழுக்க, நிறைய புக்ஸ் இருக்கு. லேப்டாப் யூஸ் பண்றீங்க?!. அதான்!....", அவள் இன்னும் தயக்கமாக நிறுத்த, அவன் லேசாக சிரித்தான்.
ம்ம், நா பிளஸ் டூ படிச்சிட்ருக்கும் போது, அம்மா, அரிசி மில், தென்னந்தோப்பு, மாந்தோப்பு, ரெண்டு அக்கா எல்லாத்தையும் விட்டுட்டு அப்பா ஹார்ட் அட்டாக்ல போயிட்டாக.. நாந்தான் எல்லாத்தையும் பார்த்துக்கணும்ங்குற சூழ்நிலை. சோ படிப்ப கண்டினியூ பண்ண முடியல. பட், படிக்க ரொம்ப பிடிக்கும். புதுசு புதுசா கத்துக்க பிடிக்கும். ஃப்ரீ டைம்ல படிக்கிறதுண்டு. கம்பியூட்டர்,..... கிடைச்ச ஃப்ரீ டைம்ல கத்துக்கிட்டேன்", என்ற துரை லேசாக சிரிக்க அமைதியாக நின்றாள் கொடி.
என்ன பத்தி வேற ஏதாவது தெரிஞ்சிக்கணுமா?!", துரை கேட்க இல்லை என்பதாக தலையாட்டினாள் கொடி.
சரி போய் குளிச்சி, ஃப்ரெஷ் ஆயிட்டு வா", துரை சொல்ல, தயங்கி நின்றாள் கொடி.
இன்னும் அஞ்சு நிமிஷத்துல நான் ஹாலுக்கு போயிருவேன். நீ குளிச்சிட்டு வரும் போது இங்க இருக்க மாட்டேன்", அவன் கணிணியை பார்த்தபடியே சொல்ல, தலை குனிந்த படியே தலை துவட்டும் துவாலையை எடுத்து கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் கொடி. சிரித்துக் கொண்டான் துரை.
செழியனின் பைக் கோர்ட் வாசலில் நின்றது. நீதி மன்ற வளாகத்துக்குள் ஓடி வந்தனர் செழியன் மற்றும் சாரதி.
எங்கல போய் தொலைஞ்சீங்க எருமைகளா!!, இன்னும் கொஞ்ச நேரத்துல போலீஸ் கேசவனை கூப்ட்டு வந்துருவாங்க. சீக்கிரமா வந்து தொலைங்க", என்ற சுவாதி செழியன் கையில் கேமராவை திணித்தாள். உடனே கேமராவை இயக்க ஆயத்தமானான் செழியன்.
எல்லாம் இவனால தா சுவாதி. நல்ல நேரத்துல வெளக்கு போட போயி டைமெல்லாம் போச்சு", என்றான் சாரதி.
செழியனை முறைத்த சுவாதி, கேமரா முன் மைக்குடன் நின்றாள் சுவாதி. கேமரா இயங்க ஆரம்பித்ததும் சட்டென தன் முகத்தில் சிரிப்பை வரவழைத்து கொண்ட சுவாதி,
ஹாய் எவெரி ஒன், உங்க பியூச்சர் நியூஸ் சேனலில் இருந்து, நா உங்க சுவாதி", என்று பேச தொடங்கினாள்.
நீதி மன்றத்தின் வாசலுக்குள் நுழைந்தான் தினேஷ்.
சாதி அரசியல் இருளுக்குள்!!
சந்தை அரசியல் பொருளுக்குள்!!
சாதுர்யமாக வாழும் சவால்கள்.....
தொடரும்..........
சக்தி மீனா......

Last edited: