• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷10

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
d04861ed357e0727c0ef4c89e17e72d6.jpg


அத்தியாயம் 10

நீயும் தனசேகரும் பூட்டி வச்ச ரூமுக்குள்ள என்னென்ன கூத்தடிச்சிட்ருக்கீங்கன்னு எனக்கு தெரியாதுன்னு நெனைச்சியா?”, கோபாலின் அருவருப்பான கேள்வியில் சந்தியாவின் கண்கள் நீரை வெளியேற்றி விட்டது.

ஏண்டி, அவனை விட நா எந்த விதத்துலடி கொறைவு?”, அவனின் கேள்வியை காதுகள் வாங்கி கொண்டாலும் உள்ளம் எதையும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. உணர்வுகள் செத்து விட்டது போல் ஒரு உணர்வு. தன்னை எவனோ ஒரு ஆடவனுடன் சேர்த்து அசிங்கமாக பேசுவதை கேட்கவும் ஏற்றுக் கொள்ளவும் சகிக்க முடியாமல் நின்றாள் சந்தியா.

எவ்ளோ பணம் வேணாலுங்கேளு. நாந்தர்றேன்”, என்றவன் மேலும் பேசிய பேச்சுக்களை கேட்க முடியாமல் காதுகளை மூடி, கண்களையும் மூடிக் கொண்டாள் சந்தியா.

சற்றே நிலைகுலைந்த தருணம் பார்த்து, அவளது இடையில் கை வைத்தது அந்த சதை உண்ணும் ஜந்து. அருவருப்பை தாங்கிக் கொள்ள முடியாதவளாக துடித்தவள், அவனின் நெஞ்சில் கை வைத்து வேகமாக தள்ளினாள். கோபால் தடுமாறி கீழே விழவும் சுஹாசினி அவ்விடம் வரவும் சரியாக இருந்தது.

சந்தியாவின் கண்களில் நிரம்பி வழியும் நீரையும், கோபாலின் நிலையையும் கண்ட சுஹாசினிக்கு, அவ்விடம் நடந்ததை யூகிக்க சிரமம் ஏதுமில்லை.

விழுந்து கிடந்தவனை பார்த்து, அவனை வெறுப்பேற்றவே சிரித்தாள் சுஹாசினி. அவளின் சிரிப்பை கண்டவன் எரிச்சலுற்றான்.

என்ன கோபால் சார், ரெஸ்ட் ரூம் முன்னால அங்கபிரதட்சணம் பண்ணணும்னு எதாவது வேண்டுதலா?”, நக்கலாக கேட்டாள் சுஹாசினி.

தட்டு தடுமாறி எழுந்தவன், சந்தியாவையும் சுஹாசினியையும் முறைத்து விட்டு சென்றான். வேகமாக சென்று சந்தியாவை திருப்பி,

என்னடி ஆச்சு? அந்த கேடு கெட்ட நாயி என்ன கொறைச்சுச்சு?”, என்று கேட்டாள் சுஹாசினி.

நடந்ததை விவரித்த சந்தியா அழுகையை கொட்ட, சுஹாசினி தவித்து போனாள்.

விடுறி, அந்த பொறம்போக்கு பையல பத்தி தெரிஞ்சதுதான., நம்ம எம்.டி நல்லவரு. அவருக்கு தெரியிற வரைக்குந்தா இவனோட ஆட்டமெல்லா. பேசாம எம்.டிகிட்ட சொல்லிரலாமா?”, சுஹாசினி கேட்டாள்.

அய்யய்யோ, வேணா சுஹாசினி. விசயம் வெளிய தெரிஞ்சா, எல்லாரும் என்னயத்தான் தப்பா பேசுவாக. இந்த சமுதாயம் மானத்த பொம்பளை ஒடம்புல தான தேடும். ஆம்பள நடத்தைய பத்தி இந்த மானங்கெட்ட சமுதாயத்துக்கு அக்கறை இல்ல", சந்தியா சொல்ல, சங்கடத்தோடு நின்றாள் சுஹாசினி.

இப்படி ஒரு கேவலமான சிஸ்டம் தா இந்த மாதிரி பொட்ட பையலுகளுக்கு சாதகமாருக்கு", சுஹாசினி சொன்னாள்.

எங்க வூட்டுக்கு தெரிஞ்சா, அம்மா வேலைக்கு போவேணாம்னு சொல்லீருவா. வேலைக்கு வராம நிச்சயமா கடன் பிரச்சினைய என்னால சமளிக்கவே முடியாது. அப்பாக்கு அல்ரெடி ஒடம்புக்கு சரியில்ல. விசயந்தெரிஞ்சா ஒடிஞ்சி போயிருவாக. பாத்துக்கலாம்”, என்றவள் முகத்தை துடைத்துக் கொண்டு தன்னிருக்கையில் சென்று அமர்ந்தாள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்பத்தில் ஒரு இணையதள சேனலாக தொடங்கி இப்போது, அதிகாரமிக்க செய்தி சேனலாக மாறியுள்ள ஃபியூச்சர் சேனலின் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது. தேனியில் இருக்கும், அதன் கிளை அலுவலகத்தில் புகைப்பட கலைஞனாக செழியன் பணிபுரிவதற்கு பெரிதாக காரணம் எதுவுமில்லை.

செழியனுக்கு நேர்த்தியாக புகைப்படம் எடுப்பதில் அனுபவமும் திறமையும் உண்டு. எனவே இந்த வேலைக்கான வாய்ப்பை பற்றி சுவாதி சொன்ன போது சம்பளத்தின் அளவை ஏற்றுக் கொண்டான். அவ்வளவே.

செழியன் கேமரா பிடிக்க தொடங்கிய நாளில் இருந்தே அவனுக்கு உதவியாக இருப்பவன் சாரதி.

ஆனால் சுவாதி செய்தி சேகரிப்பாளினியாகவும் தொகுப்பாளினியாகவும் பணி புரிவது அவளுடைய லட்சியம். சிறு வயது முதலே அவள் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி நிறைவேற்றிக் கொண்ட அவளின் கனவு.

தானாக சேர்ந்த இம்மூவரின் குழு, எடுத்துக் கொண்ட வேலைகள் அனைத்தும் பெரும் வெற்றியை ஈட்டிக் கொண்டிருப்பதால், காட்சி ஊடகத்துறையில் இந்த குழு நல்லதொரு பெயரை பெற்றிருக்கிறது.

சுவாதிக்கும் செழியனுக்கும் நல்ல வேதியியல் பொருத்தம் இருப்பதாக சில ஊடக நண்பர்கள் புரளி பேசிக் கொண்டிருந்தாலும், சுவாதியும் செழியனும் நண்பர்கள் என்ற செழியனின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்ட தோழர்கள் பலர்.

ஊடகக்கிளை அலுவலகத்தின் படப்பிடிப்பு அறையில், செழியனின் கேமராவில் பதிவான தன்னுடைய பேச்சை சரி பார்த்து கொண்டிருந்தாள் சுவாதி. கேமரா மற்றும் மின் விளக்கின், நீளமான மின் இணைப்பானை(ஒயர்) சுற்றி கொண்டிருந்தான் சாரதி. அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து அலைபேசியை தேய்த்து கொண்டிருந்தான் செழியன். மற்ற ஊழிய தோழமைகளும் தத்தம் பணியில் கவனம் கொண்டிருந்தனர்.

சுவாதி, கைய குடு", சொல்லிக் கொண்டே வந்தார் அந்த அலுவலக கிளையின் ஆசிரியர்.

சார்", சிரித்துக் கொண்டே கை குலுக்கினாள் சுவாதி.

லாஸ்ட் வீக் நீ பண்ண ஆதிவாசிகள் பத்தின டாக்கியூமென்ட்க்கு டி. ஆர். பி எகிறிட்டுருக்கு. ஹெட் பிராஞ்ச் எடிட்டர் ஃபோன் பண்ணி பாராட்டுறாரு", அவர் சொல்ல செழியன் மற்றும் சாரதி இருவருடன் சுவாதியும் சிரித்தாள்.

இன்னையிலிருந்து நீ நம்ம பிராஞ்சோட நியூஸ் எடிட்டர். கங்கிராஜுலேஷன்ஸ்", ஆசிரியர் சொல்ல முகம் இறுகினாள் சுவாதி.

சாரதியும் செழியனும் சிரித்தனர்.

எங்கப்பா ஒங்ககிட்ட பேசினாகளா சார்?", சுவாதி ஆசிரியரிடம் கேட்டாள்.

ச்சே ச்சே, அதெல்லாம் இல்ல சுவாதி,.......", அவர் முடிக்கும் முன்,

பொய் பேசாதீக சார்", சட்டென்று சொன்னாள் சுவாதி.

எனக்கு தெரியும்!! எங்கப்பாவுக்கு நா நியூஸ் கலெக்ட் பண்ற வேலை செய்றது பிடிக்கல. அதான் ஒங்ககிட்ட பேசிருக்காக", சுவாதி சொல்ல,

என்கிட்ட இல்ல சுவாதி, ஹெட் ஆஃபீஸ்க்கே பேசிருக்காரு. அவரு ஊருக்கே பெரியாளு. நீ இப்படி வெயில்லயும் மழையிலயும் அலைஞ்சி திரிஞ்சி கஷ்டப்படுறது அவருக்கு கஷ்டமா இருக்காதா?! நியூஸ் எடிட்டராயிட்டா ஆஃபீஸ்ல ஏ.சி ரூம்ல உட்கார்ந்து வொர்க் பண்லாம்", சொல்லி சிரித்தார் அவர்.

நோ சார், எனக்கு இந்த நியூஸ் கலெக்ட் பண்ணி, ஆதாரம் சேகரிக்கிற வேலை தான் புடிச்சிருக்கு. இதுலயே நா இன்னும் எக்ஸ்பர்ட் ஆகல. அது எனக்கே தெரியும். நா படிப்படியாக யாரோட ஹெல்ப்பும் இல்லாம முன்னேறணும்ன்னு ஆசைப்படுறேன் சார். அப்பாகிட்ட நா பேசிக்கிறேன். இப்போ எனக்கு இந்த புரொமோஷன் வேணாம்",

ஏ லூசு, வர்ற புரோமோஷன வேணான்னு யாராவது சொல்லுவாங்களா?! ஒனக்கு எடிட்டராக எல்லா தகுதியும் இருக்கு. மொதல்ல சார் கையில இருக்கிற புரொமோஷன் ஆர்டர வாங்கிக்க", என்றான் செழியன்.

ஆமா சுவாதி, பேசாம புரொமோஷன் ஆர்டர வாங்கிட்டு எடிட்டர் சீட்ல உட்கார்ந்து வேலைய பாரு. அதான் ஒனக்கு சேஃப்டி. ஏன்னா இப்பொலாம் யார் நல்லவன் யார் பொறுக்கின்னு கண்டுபிடிக்கவே முடில", சொல்லி செழியனை கோபமாக பார்த்தான் சாரதி. செழியன் சிரித்தான்.

நீயும் செழியனும் இருக்கும் போது என் சேஃப்டிக்கு என்னடா பிரச்சினை வரப்போகுது?", சுவாதி கேட்க,

பிரச்சினைன்னு வந்தா இவனால தான் வரும்", முகத்தை திருப்பி தனக்குள் சொல்லிக் கொண்டான் சாரதி. புரிந்து சிரித்தான் செழியன்.

ஹே, ரொம்ப டயர்டா இருக்கு. டீ சாப்டலாமா?", சுவாதி கேட்டாள்.

சியர்ஸ்", என்றான் செழியன். ஆசிரியருடன் சுவாதியும் மற்ற நண்பர்களும் உற்சாகம் கொண்டனர்.

நிலவின் அழகொளி இரவின் இருளை விழுங்கி கொண்டிருந்தது..

கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து தன் அலைபேசியை கட்டை விரலால் நீவிக் கொண்டிருந்தான் துரை. அலைபேசியில் அழைப்பு வந்தது. ஏற்றான்.

நெல்லு மூட்டையெல்லா நம்ம மில்லு கொடோன்ல எறக்கிட்டோம்ண்ணே”, எதிர் முனை பேசியது.

எத்தன பேர்ல?”,

நாலு லாறி டிரைவர், கிளீனருங்க, லோடு எறக்குனது இருவது பேருங்க”,

ஆராரெல்லாம்?”,

ஒங்க வாட்ஸப்புல அல்லார் பேரும், சம்பள கணக்கும் அனுப்பி போட்டேனுங்க”,

ஆரு, நீயி அனுப்பினியாக்கு?”,

இல்லீங்கண்ணே, நம்ம வீரன் எழுதி தந்தானுங்க. நா அனுப்புனேனுங்க”, சொல்லி தலையை சொரிந்து கொண்டான், அரிசி மில்லுக்கு வெளியே, மேல் சட்டையின்றி முழங்காலுக்கு மேல் வேட்டியை இறுக்க கட்டியிருந்த சொக்கன். அலைபேசியில் ஒலிப்பெருக்கி இயங்கி கொண்டிருந்தது. இனிய தமிழில் புரியும் படி சொல்ல வேண்டுமானால் ஸ்பீக்கர் ஆனில் இருந்தது என்றும் சொல்லலாம்.

இந்த முனையில் துரையரசன் சிரிக்க, அந்த முனையில் சொக்கனின் அருகில் நின்ற வீரய்யனும் சிரித்தான்.

சரி, அல்லாரு அக்கவுண்ட் நம்பரு, டீட்டைல்ஸ் எல்லாம் அனுப்பிருக்கியல்ல?”,

ம்ம், ஆமா அனுப்பிருக்கேனுங்க”,

ம்ம் குட், நா ஏற்கனவே”, துரை பேசி முடிக்கும் முன்,

அண்ணே, ஒரு ஆப்ளிகேசனுங்க”,

என்ன கேசனுங்க?”, கேட்டு சிரித்தான் துரை.

அதானுங்க ஆப்ளிகேசன்”, சொக்கன் பேசுவதை கேட்டு, அவனை சுற்றி நின்ற வேலையாட்களும் சிரித்தனர்.

சரிங்க, சொல்லுங்க”, என்றான் துரை.

அது ஒண்ணுமில்லீங்கண்ணே, இந்த் நெட்டு பேங்கிங்க்ல போடாதீங்கண்ணே, போடதுக்கும் வந்து சேர்றதுக்கும், ரொம்ப நேரமாகுது. ஜி பேல போட்டுட்டீகன்னா, நேரங்காலத்தோட வூட்டுக்கு போயி சேரலாம்னு நம்ம கமலேசுதானுங்க சொன்னான்”, சொக்கன் சொல்ல, அருகில் நின்று கொண்டிருந்த கமலேஷ்,

ஆரு நானா? இந்த லந்துதான வேணாங்குறது”, என்று சொல்ல,

லேய், சும்மால,… பேசாம இரு. அப்போதா அண்ணே ஜிபேயில போடுவாக”, கண்ணை அகட்டி காட்டிய சொக்கன் மெல்லிய குரலில் பேசுவதை கேட்டு சிரித்தான் துரை.

அதுக்கு என்னய மாட்டி வுடுவியா நீயி? மாப்ள சொக்கண்ணே பேச்ச நம்பாதீக. வூட்ல மதனிய பாக்க போற ஆசையில என்னய கோத்து வுடுறாக. எம்புட்டு நேரமானாலும் நா காத்து கெடப்பேன்”, என்று சொக்கன் கையிலிருந்த அலைபேசி அருகில் குனிந்து சத்தமாக சொன்னான் கமலேஷ்.

துரை சிரித்தான்.

சும்மா இருல”, சொல்லி அலைபேசியை விலக்கி கொண்டான் சொக்கன்.

ஆரும் காத்து கெடக்க வேணாம். அல்லாருக்கும் நா ஏற்கனவே பணம் போட்டுபோட்டேன். சரியா இருக்கான்னு பாத்துக்கிருங்க சொக்கன் சார்”,

அய்யோ, நீங்க அனுப்புனா சரியாத்தானுங்கண்ணா இருக்கும்”,

போல, போயி புள்ள குட்டியள படிக்க வையி”, துரை சொன்னான். எல்லோரும் சிரிக்க, அலைபேசிய அசடு வழிய அணைத்தான் சொக்கன்.

கடிகாரத்தை பார்த்தான் துரை. மணி பதினொன்று கடந்திருந்தது.

இன்னும் கொடி அடுப்பங்கரையில என்ன பண்றா?", தனக்கு தானே கேள்வி கேட்டுக் கொண்டவன் எழுந்து வீட்டு வரவேற்பறைக்கு சென்றான்.

விசாலமான வரவேற்பறையை கடந்து சமையலறை சென்று பார்த்தான். சுத்தமாக கழுவி கவிழ்த்தப்பட்ட பாத்திரங்கள் கூட தூங்கி போயிருந்தன.

சுற்றிலும் மனித நடமாட்டமே இல்லை.

கொடி", தனக்குள் சொல்லிக் கொண்டே ஹாலுக்கு வந்தவன் புழக்கடை கதவு திறந்து இருப்பதை கவனித்தான்.

சென்று வெளியே சுற்றி பார்த்தான். சற்றே சற்று தூரத்தில், துரைக்கு மிகவும் விருப்பமான வேப்ப மரத்தின் கீழ் எங்கோ பார்த்த படி, எதிர்ப்புறம் திரும்பி நின்றிருந்தாள் கொடி.

என்னடா இது?! இவ பண்றதெல்லாம் மர்மமாவே இருக்கே!! இவள புரிஞ்சிக்கிறதுக்கு எந்த புஸ்தகத்தை பொரட்டுறதுன்னு தெரியலியே", தனக்குள் புலம்பிக் கொண்டவன் தன் மனைவியை நோக்கி நடந்தான்.

துரை அவளை நெருங்கி வந்ததும் அவனின் நிழலை உணர்ந்து திரும்பினாள் கொடி. அவளது கண்களில் ஈரத்தை கண்டவன் தன்னுயிர் வலி கொண்டது போல் கலங்கினான். தன்னிணை மீது காதல் உணர்ந்தான்.




கண்ணீரில் கரைந்த காதலும்
கண்ணீரில் துளிர்த்த காதலும்
காலத்தின் பாதையில்
விடுகதையாக?!!


தொடரும்......


சக்தி மீனா......
 
Last edited:
  • Like
Reactions: Maheswari

vinodha mohan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 29, 2023
29
20
3
Plano , tx
சாதியும் மதமும் வென்றுவிட்டால்...
மனிதம் என்பதன் அர்த்தம் மாய்த்து போகும்...


துரையரசனின்‌‌ சிந்தனைகள் ஈர்க்கிறது...
👌👌👌👌👌👌