• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷13

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
IMG_20230302_224312.jpg


அத்தியாயம் 13


இந்த ஃபைல சந்தியாகிட்ட குடுத்துருங்க. இதுல இருக்கிற டிசைன்ல கொஞ்சம் கரெக்ஷன் இருக்கு. நா நோட் பண்ணிருக்கேன். அதை கரெக்ட் பண்ண சொல்லிடுங்க", என்று சொல்லி அந்த காகித கோப்பை மேஜை மீது வைத்தான் தனசேகர்.

சந்தியா இன்னைக்கு லீவு சார்", கோபால் சொன்னான்.

வாட், எனக்கு ஏன் இன்ஃபாம் பண்ல?", தனசேகர் கேட்க,

யாருக்குமே இன்ஃபார்ம் பண்ல சார். அவ வர்ல. அவ்ளோதா தெரியும்", என்றான் கோபால்.

வெளையாடுறீங்களா? எவ்ளோ வொர்க் பெண்டிங்லருக்கு?! இப்போ போயி சொல்லாம கொள்ளாம லீவ் போட்டா என்ன அர்த்தம்?! சந்தியாவுக்கு கால் பண்ணுங்க", என்றான் தனசேகர்.

உள்ளுக்குள் குள்ள நரி மகிழ்வோடு சந்தியாவின் எண்ணை டயல் செய்தான் கோபால். அவன் எதிர்பார்த்தது போலவே சந்தியா அழைப்பை ஏற்கவில்லை.

ஃபோன் எடுக்கல சார்", மிகவும் பவ்யமாக சொன்னான் கோபால்.

ஸ்டுப்பிட், இன்ஃபார்ம் பண்ணாம இஷ்டத்துக்கு லீவ் போட்டதும் இல்லாம ஃபோன் அட்டென்ட் பண்லன்னா என்ன நினைச்சிட்டுருக்கா அவ?! நம்மள எல்லாம் கேணைன்னு நெனைச்சிட்டுருக்குறாளா?", கோபமான குரலில் பொறிந்தான் தனசேகர்.

நானே உங்ககிட்ட இதை பத்தி சொல்லணும்னு நெனைச்சுட்டுருந்தேன் சார்", கோபால் சொல்ல கண்கள் சுருக்கி பார்த்தான் தனசேகர்.

எத பத்தி?",

இந்த சந்தியா சரியில்ல சார். யாரையும் மதிக்கிறதில்ல. நீங்க அவளுக்கு குடுக்குற எடத்த மிஸ் யூஸ் பண்றா",

யூ பிளடி இடியட், நா அவளுக்கு என்னய்யா எடம குடுக்குறேன்?", சொல்லி ஃபைல் ஒன்றை தூக்கி வீசினான் தனசேகர்.

ஸ்...ஸ்ஸ்..சா....சாரி சார்",

கெட் அவுட்", கத்தினான் தனசேகர்.

கீழே சிதறி கிடந்த காகித கோப்பை வேக வேகமாக பொறுக்கி கொண்டு ஓடினான் கோபால்.

தலையில் கை வைத்து மிகுந்த கோபத்துடன் அமர்ந்திருந்த தனசேகர், தன்னுடைய அலைபேசியை திறந்து, அதில் கேலரியை திறந்தான்.

என்றோ எப்போதோ அலுவலகத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக சுற்றுலா சென்ற போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் சிரித்து கொண்டிருந்த சந்தியாவை பெரிதாக்கி பார்த்தான் தனசேகர்.

என்ன சந்தியா இது?! என்கிட்ட சொல்லாம ஏன் லீவ் போட்ட?! நா ஒன்ன மிஸ் பண்ணுவேன்னு தெரியாதா?!", என்று புகைப்படத்துடன் பேசியவன்,

ஒருவேளை ஒனக்கு ஒடம்பு சரியில்லையா?", என்று தனக்குள் சந்தேகம் உதித்த கணம், சட்டென்று அலைபேசியில் இருந்த கேலரியை மூடி விட்டு, சந்தியாவை அழைத்தான்.



ஃபியூச்சர் சேனல் அலுவலக களத்துக்குள் தன் ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு இறங்கிய சந்தியாவின் அலைபேசி ஒலித்தது.

சலிப்பாக அலைபேசியை எடுத்து பார்த்தவள், தனசேகரின் எண்ணை பார்த்ததும், உடனே அழைப்பை ஏற்றாள்.

சார்",

வாட் இஸ் திஸ் சந்தியா?! லீவ் போடுறதா இருந்தா கம்பெனியில இன்ஃபார்ம் பண்ணணும்ன்னு தெரியாதா?", பொய் கோபத்துடன் கேட்டான் தனா.

சாரி சார், கொஞ்சம்.. ம்..., வந்து,.... கொஞ்சம் ஓடம்பு சரியில்ல சார், ஹாஸ்பிடல் வந்தேன். அதான்", அவள் பொய் பதில் சொன்னாள்.

உள்ளம் வலித்து போனான்.

அப்படியா? என்னாச்சு ஒடம்புக்கு?", லேசான தயக்கத்துடன் கேட்டான்.

லேசா ஃபீவர் சார், சரியானதும் வந்துடுறேன். ஒரு டூ டேஸ் லீவ் எடுத்துக்குறேன் சார்",

ம்ம், ஒடம்ப பார்த்துக்க சந்தியா. சரியானதும் வா. நா அப்புறம் கால் பண்றேன்", நிர்வாக மேலாளராக பேசினான். அக்கறையை உள்ளுக்குள் மறைத்தான்.

தேங்க் யூ சார்", என்று அலைபேசியை வைத்த சந்தியா, ஃபியூச்சர் சேனல் அலுவலகத்துக்குள் வந்தாள்.

இங்க மிஸ்டர் சாரதின்னு ஒருத்தர் வேலை செய்றாரு. அவர பாக்கணும்", வரவேற்பாளினியிடம் சொன்னாள் சந்தியா.

சாரதி ஒரு இன்டர்வியூ ஷூட்டிங்ல இருக்காரு. இங்க வெயிட் பண்ணுங்க. நா இன்ஃபார்ம் பண்றேன். டென் மினிட்ஸ்ல வந்துருவாரு", வரவேற்பாளினி சொல்ல, சந்தியா காத்திருக்க தொடங்கினாள்.

அலுவலகத்தில் இருக்கும் மற்றொரு பகுதியான பேட்டி காணும் ஒளிப்பதிவு தளத்துக்கு, தொலைபேசியில் அழைத்தாள் வரவேற்பாளினி.

ஒலித்துக் கொண்டிருந்த தொலைபேசியை எடுத்தாள் ஒரு பெண்.

ஓ, ஓகே லதா, மெசேஜை பாஸ் பண்ணிடுறேன்", என்று சொல்லி அலைபேசியை வைத்தவள்,

செழியன், சாரதிய தேடி ஒரு பொண்ணு வந்துருக்காம்", என்று சத்தமாக சொல்ல, பேட்டி எடுப்பதற்காக ஒப்பனை செய்து கொண்டிருந்த பெண்ணும், பேட்டி கொடுக்க வந்திருந்த மனநல மருத்துவரும் திரும்பி பார்த்தனர்.

பொண்ணா?",

கேமரா தண்டவாளத்தில் நின்ற செழியன், அருகில் நின்ற சாரதியை பார்த்தபடி வியப்பாக கேட்டான்.

அவனை முறைத்தான் சாரதி.

பொண்ணுன்னா அவளுக்கு பேர் இல்லையா? யார்னு தெளிவா கேட்டு தொலை. இங்க இருக்கிற பொறுக்கி பசங்களுக்கு, பொண்ணுன்னு சொன்னாலே பொறுக்கித்தனமா தா தெரியும். என்னை மட்டுமில்லாம வந்திருக்கிற பொண்ணையும் தப்பா நெனைப்பானுங்க", சேதி சொன்ன பெண்ணை பார்த்து கடுப்போடு சொன்ன சாரதி, செழியனை எரிச்சலோடு பார்த்தான். செழியன் சிரித்தான்.

பேரு, ஏதோ பேரு சொன்னாளே,... ம்ம், ஹான், அந்த பொண்ணு பேரு சந்தியா", அந்த பெண் சொல்ல,

சந்தியாவா", சொன்ன செழியன் கேமரா தண்டவாளத்தில் இருந்து இறங்கி ஓடினான்.

சந்தியாவா? இங்க எதுக்கு வந்தா?", செழியன் பின்னால் ஓடினான் சாரதி.

டேய், பேட்டிய முடிச்சிட்டு போங்கடா எருமைகளா?", கேள்விகளை தயார் செய்து கொண்டிருந்த சுவாதி கத்தினாள்.

என்ன சுவாதி நடக்குது அங்க?", அவர்களை மேற்பார்வை செய்த படி, ஒலியமைக்கும் பகுதியில் இருந்த நியூஸ் எடிட்டர் கேட்டார்.

சாரதிய தேடி ஒரு பொண்ணு வந்துருக்கு சார்", என்றாள் அலைபேசி அழைப்பை ஏற்ற பெண்.



வேகமாக ஓடி வந்த செழியன், முகமலர்ச்சியுடன் தன் முன்னால் நின்றதும், அனிச்சையாக எழுந்த சந்தியா, ஸ்தம்பித்து நின்றாள்.

எம்மேல இருக்குற லவ்வ சொல்ல, என்னை தேடி இவ்ளோ தூரம் வர்ணுமா? ஒரு கால் பண்ணிருந்தா நானே வந்திருப்பேனே?", செழியன் துடுக்காக சொல்ல, சந்தியா முறைத்தாள்.

கேட்டுக் கொண்டிருந்த வரவேற்பாளினி சிரிக்க, இன்னும் முறைத்தாள் சந்தியா.

சந்தியா", வேகமாக செழியன் பின்னால் ஓடி வந்த சாரதியின் சத்தம் கேட்டு திரும்பினாள் சந்தியா.

சந்தியாவையும் செழியனையும் ஒருமுறை பார்த்த சாரதி,

வா சந்தியா, இங்க பேச வேணாம்", என்றபடி சந்தியாவின் கையை பிடித்தான் சாரதி.

ஏன்? ஏன்? ஏன்? ஏன் இங்க பேச வேணாம்?", செழியன் கேட்டான்.

ம்ம், பொறுக்கி பையலுக முன்னாடி பேச வேணாம் சந்தியா, வா", சொல்லி சாரதி சந்தியாவின் கை பிடித்த படி முன்னால் செல்ல, சந்தியா பின்னால் சென்றாள்.

அவன்தா கூப்பிடறான்னா இவளும் பின்னாலயே போறா பாரு", தனக்குள் சொல்லிக் கொண்டே பின்னால் செல்ல இருந்த செழியனிடம்,

செழியா, இது தா உன் சந்தியாவா?", கேட்டாள் வரவேற்பாளினி.

யா", உற்சாகமாக சொன்னவன் வேகமாக அலுவலகத்துக்கு வெளியே சென்றான்.

தூரத்தில் சேனல் அலுவலகத்தின் களத்துக்குள் நின்று கொண்டிருக்கும், அரச மரத்தின் நிழலில் சாரதியிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் சந்தியா.

இவங்கிட்ட என்ன பேச வேண்டியிருக்கு?", தனக்குள் புலம்பிக் கொண்டே செழியன் மெதுவாக அவர்களை நோக்கி நடந்தான்.

ஏ சந்தியா?, இப்போ வேலை செய்ற கம்பனில ஏதாவது பிரச்சினையா?", சாரதியின் கேள்விக்கு,

பிரச்சினைன்னு எதும் இல்ல சாரதி. வீட்லருந்து ஆஃபீஸ் ரொம்ப தூரமா இருக்கு. நம்மூர்ல இருந்து திருமங்கலம் போக, தினமும் மார்னிங் அண்ட் ஈவினிங் ஒன்ட்ரை மணி நேரம் டிராவல் பண்ண வேண்டியிருக்கு. அப்பாக்கு வேற ஒடம்பு சரியில்ல. திடீர்னு அவசரமா வீட்டுக்கு வரணும்ன்னா, நினைச்ச நேரத்துல வர முடியல. அதான், இங்க தேனியிலயே ஏதாவது வேலை கிடைச்சா ஈசியா இருக்கும்னு பாக்குறேன். ஒனக்கு தெரிஞ்ச உன் ஃப்ரெண்ட்ஸ் யார்கிட்டயாவது சொல்லி எதாது ஜாப் இருந்தா சொல்றியா?",

ம்ம், புரியுது சந்தியா, நா என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லி வைக்கிறேன். கண்டிப்பா எதாது அரேஞ்ச் பண்றேன்", சாரதி சொல்ல,

என்னல அறேஞ்ச் பண்ண போற?", கேட்டபடி வந்தான் செழியன்.

அது ஒனக்கு தேவையில்லாத விஷயம், மரியாதையா இங்கருந்து போயிரு", கோபமாக செழியனிடம் சொன்ன சாரதி,

நீ கெளம்பு சந்தியா, நா ஈவினிங் வீட்ல வந்து பாக்குறேன்", என்று சந்தியாவிடம் சொன்னான்.

கிளம்ப எத்தனித்த சந்தியாவிடம்,

நில்லு சந்தியா, நா ஒன்கிட்ட கொஞ்சம் பேசணும்", என்றான் செழியன். நின்று திரும்பினாள்.

ஒரு மயிறும் தேவையில்ல. நீ போ சந்தியா", சாரதி சொன்னான்.

சாரதியை பார்த்தான் செழியன்.

சந்தியா, நா ஒன்கிட்ட பேசணும்", அழுத்தமாக சொன்னான் செழியன். இருவரையும் பார்த்து தடுமாறி நின்றாள் சந்தியா,

நாந்தான் சொல்றேன்ல, நீ கெளம்பு சந்தியா", சாரதி சொல்ல, புறப்பட எத்தனித்தாள் சந்தியா.

சந்தியாவின் கையை பிடித்து நிறுத்தினான் செழியன்.

அவளது கையை பிடித்த, செழியனின் கையை வேகமாக தட்டி விட்டு, அவனை அறைந்தான் சாரதி.

அலுவலகத்தின் வாசலுக்கு வந்த சுவாதி அறை விழுந்த காட்சியை கண்டு உறைந்து நிற்க,

விழுந்த அறையின் வீரியத்தில் செழியன் தடுமாற,

எதிர்பாராத அறையில் திடுக்கிட்ட சந்தியாவின் முகத்தில் கோபம் நொடியில் தோன்றி மறைந்து, இயலாமை ஒரு துளி கண்ணீராக திரண்டது.

கன்னத்தில் கை வைத்து தேய்த்த படி, புன்னகையுடன் நின்றிருந்த செழியனை வெறியோடு முறைத்துக் கொண்டு நின்றான் சாரதி.

இன்னொரு தடவை அவகிட்ட இந்த மாதிரி அத்துமீறி நடந்துகிட்ட, வவுந்துருவேன்", விரல் நீட்டி எச்சரித்த சாரதியை பார்த்து சிரித்துக் கொண்டே நின்றிருந்தான் செழியன்.

செழியனின் சிரிப்பை கண்ட சந்தியா, தொண்டைக்குழி முட்டிய அழுகையை முழுங்க முயற்சித்து கொண்டிருந்தாள்.

தூரத்தில் நின்று நடக்கும் சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த சுவாதிக்கு, அவர்களின் உரையாடல் கேட்கவில்லை. வேகமாக அவர்கள் நிற்கும் இடம் நோக்கி நடந்தாள்.

சந்தியா, மொதல்ல நீ இங்கருந்து கெளம்பு. இனி இங்க வராத. எதுவா இருந்தாலும் கால் பண்ணு. நானே வீட்டுக்கு வர்றேன்", சாரதி சொல்ல, செழியனை கடந்து தன் ஸ்கூட்டியை நோக்கி நடந்தாள் சந்தியா.

முகம் நிறைந்த சிரிப்பு மாறாமல் நின்றிருந்த செழியனை முறைத்து விட்டு சென்றான் சாரதி.

ஸ்கூட்டியில் சாவியை சொருகியவளையும் மீறி சாவியை நனைத்த கண்ணீரை எப்படி தண்டிப்பாள் பேதை?!

அடக்கி வைத்த உணர்வின் வெப்பம் உருகி நீராய் பெருக்கெடுத்தால், சுற்றியிருக்கும் உலகம் உள்ளத்தை உணர்ந்து விடுமோ" என்று கண்கள் சுரந்த நீரையும் உட்கிரகிக்க துடித்து அதிலும் தோற்றுக் கொண்டிருக்கிறாளோ!!

யாரும் அறியாததாக நினைத்து அவள் துடைத்து விரட்ட நினைத்த கண்ணீரின் எச்சத்தை அல்ல, உச்சத்தையும் கண்டு விட்ட செழியன், கண்டும் காணாதவன் போல் நின்றான்.

தன் கண்ணீர் துளி துடைத்து நிமிர்ந்தவளின் கண்களுக்குள் நிறைந்தது அவனின் புன்னகை முகம்.

"வேண்டாம்" என்பதாக தலையசைத்தான்.

"சிரி", என்பதாக தன் வாயருகே பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் விரித்து, விரலால் சிரித்து காட்டினான்.

எல்லாம் புரிந்தும் புரியாதவளாக அவனை கடந்து சென்ற ஸ்கூட்டியில் கனத்தது சந்தியாவின் இதயம்.

நடக்கும் சம்பாஷனைகளை பார்த்துக் கொண்டே நடந்து வந்த சுவாதிக்கு குழப்பம் அதிகமானது.

கோபமாகவும் வேகமாகவும் தன்னை கடந்து சென்ற சாரதியிடம் எதையும் விசாரிக்காத சுவாதி, அலுவலகத்தை நோக்கி வந்த செழியனை கை நீட்டி தடுத்தாள். நின்றான்.

என்ன நடக்குது ஒங்களுக்குள்ள?! நானும் கொஞ்ச நாளா பாத்துட்டு தா இருக்கேன், நீயும் சாரதியும் சரியா பேசிக்கிறது கூட இல்ல. என்ன பிரச்சினை?! சந்தியா எதுக்கு இங்க வந்துட்டு போறா?", சில நிமிடங்களில் உருவான பல கேள்விகளில் இரண்டு கேள்விகளை மட்டும் கேட்டாள் சுவாதி.

ஏ, பெருசா ஒண்ணுமில்லடி. எல்லா சரியா போயிரும்", செழியன் சொல்லும் போது,

சுவாதி, எடிட்டர் சார் கூப்பிடுறாரு", என்று ஒருவர் வந்து சொன்னார்.

இருவரும் திரும்பினர்.

தோ, வர்றேன்னு சொல்லுங்க", சுவாதி சொல்ல, அவர் செல்ல,

சொல்லு", என்றாள் சுவாதி.

பெருசா ஒண்ணுமே இல்ல சுவாதி. நீ போயி மொதல்ல எடிட்டர பாரு", அவள் பதை பதைப்போடு நிற்க, அவனோ மிக சாதாரணமாக சொல்லி, இயல்பாக அவளை கடந்து சென்றான்.

அவனை புரிந்து கொள்ள முயன்று தோற்று போனவள், தன் துப்பறிவு பணியின் அடுத்த பரிணாமத்தை நோக்கி நடந்தாள்.



சரி, சொல்லு, ஒனக்கு ஸ்கூல்ல யார் யார்லாம் ஃப்ரெண்ட்ஸ். அதுல ஒனக்கு ரொம்ப பிடிச்ச ஃப்ரெண்ட் யாரு? ஓ காலேஜ் லைஃப் எப்படி இருந்துச்சு?", இரவின் இதமான கதகதப்பில், தன்னருகில் தன்னை தீண்டாமல் படுத்திருந்த, தன் மனைவி கொடியிடம் துப்பறிவதற்காக கேட்கவில்லை துரையரசன்.

அவளின் மனதை தொட்ட பிறகு அவள் உடலை தொடுவதே சுகம் என்ற இயற்கையின் தத்துவத்தை உணர்ந்தவனாதலால், அவள் மனதை ஆளும் ஆசையோடு கேட்டான்.

எனக்கு ரொம்ப பிடிச்சது", அவள் வாய் பேச ஆரம்பிக்க,

தினேஷ்", அவள் இதயம் பேசி முடித்ததும்.



மனை ஆள வந்த
மனையாளின் மனமறியும்
மனதோடு!!
மஞ்சத்தில் அவனிருக்க!!
மனம் சொன்ன பெயரை
சொல்வதெப்படி?


தொடரும்.......

சக்தி மீனா.......


















 
  • Like
Reactions: Maheswari