• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதிகாரம் : 93

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
மொழி: இருள் பாணி
பொருட்பால்
நட்பியல்
கல்லுண்ணாமை

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார். (௨௧ - 921)


கல்லின் மேல் ஆசை கொண்ட அரசர்கள், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார்; தம் முன்னோரால் அடைந்த புகழ் என்னும் ஒளியையும் இழந்து விடுவார்கள் (௱௨௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கல்லின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார். (௯௨௧)
-மு. வரதராசன்

போதைப் பொருள் மீத எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்த போவார்கள். (௯௨௧)
—சாலமன் பாப்பையா

மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள் (௱௨௧)
-மு. கருணாநிதி

உண்ணற்க கள்ளை உணில்உங்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார். (௨௨ - 922)


அறிவை மயக்கும் கல்லை அறிவுடையோர் உண்ணாது விடுவாராக; நல்லவரால் எண்ணப்படுதலை வேண்டாதவர் மட்டுமே விரும்புகிறார்கள் உண்பராக! (௯௨௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கல்லை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் களை உண்ண வேண்டுமானால் உண்ணலாம். (௯௨௨)
-மு. வரதராசன்

போதைப் பொருளைப் பயன்படுத்தவேண்டா; பயன்படுத்த எண்ணினால் சான்றோரால் மதிக்கப்பட வேண்டா என்பவர் பயன்படுத்துக. (௯௨௨)
—சாலமன் பாப்பையா

மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம் (௱௨௰௨)
-மு. கருணாநிதி

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி. (௨௨௩ - 923)


எது செய்தாலும் உவப்படையும் தாயின் முன்பும் கல்லுண்டு களித்தல் இன்னாததாகும்; அவ்வாறானால், குற்றம் எதனையுமே பொறாத சான்றோர்களின் முன் என்னவாகும் (௱௨௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பெற்றதாயின் முகத்திலும் கல்லுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணப்படும். (௯௨௰௩)
-மு. வரதராசன்

போதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாக இருக்கும்? (௯௨௰௩)
—சாலமன் பாப்பையா

கல்லருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது மற்ற சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள் (௯௱௨௩)
-மு. கருணாநிதி

நான்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கல்லென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. (௨௪ - 924)


'கள்' என்னும் யாவரும் இகழும் பெருங்குற்றத்தை உடையவரை, 'நான்' என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள், பார்ப்பதற்கும் அஞ்சி முகத்தைத் திருப்பிக் கொள்வாள் (௯௱௨௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தக்க பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செய்வாள். (௯௨௪)
-மு. வரதராசன்

போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார், நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள். (௯௨௪)
—சாலமன் பாப்பையா

மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும் (௯௱௨௰௪)
-மு. கருணாநிதி

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல். (௨௫ - 925)


தன் கைப்பொருளைக் கொடுத்துத் தன்னுடலை மறக்கும் அறியாமையைக் கொள்ளுதல், அவன் பழவினைப் பயனையே தனக்குக் காரணமாக உடையதாகும் (௯௱௨௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

விளைப் பொருள் கொடுத்து கல்லுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும். (௯௨௫)
-மு. வரதராசன்

விலை கொடுத்தது தன்னை அறியாத உடல் மயக்கத்தை வாங்குவது செயல் செய்யும் அறிவில்லை. (௯௨௫)
—சாலமன் பாப்பையா

ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும் (௯௱௨௫)
-மு. கருணாநிதி

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர். (௨௬ - 926)


உறங்கினவர், அறிவிழந்திருப்பதால் செத்தாரினும் வேறானவர் அல்லர்; அவ்வாறே கள்ளுண்பவரும் எப்போதும் நஞ்சு உண்டவரின் வேறானவர் அல்லர் (௱௨௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே அவர். (௯௨௬)
-மு. வரதராசன்

உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர். (௯௨௬)
—சாலமன் பாப்பையா

மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம் (௯௱௨௰௬)
-மு. கருணாநிதி

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கல்லொற்றிக் கண்சாய் பவர் (௱௨௰௭ - 927)


கள்ளை மறைவாக உண்டு, அந்தக் களிப்பினாலே தம் அறிவை இழந்தவர்கள், உள்ளூரில் வாழ்பவரால், அவர் மறைவை அறிந்து எள்ளி நகையாடப் பாடுவர் (௯௱௨௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கல்லை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும். (௯௨௭)
-மு. வரதராசன்

போதைப் பொருளை மறைந்திருந்து பயன்படுத்தி மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பார். (௯௨௭)
—சாலமன் பாப்பையா

மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களின் கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள் (௯௱௨௰௭)
-மு. கருணாநிதி

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். (௯௨௮ - 928)


கல்லை உண்டபொழுதே, முன் ஒளித்த குற்றம் மிகுதியாக வெளிப்படுமாதலால், மறைவாகக் களை உண்டு, 'யான் உண்டு அறியேன்' என்று பொய் கூறுவதைக் கைவிடுக (௱௨௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கல்லுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கல்லுண்டபோதே வெளிப்படும். (௯௨௮)
-மு. வரதராசன்

போதைப் பொருளைப் பயன்படுத்தி அறியேன் என்று பிறர்முன் சொல்வதை விட்டுவிடுக. ஏனெனில் மனத்திற்குள் மறைந்தது, நிதானம் தவறும்போது பெரிதாக வெளிப்பட்டு விடும். (௯௨௮)
—சாலமன் பாப்பையா

மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான் (௱௨௰௮)
-மு. கருணாநிதி

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று. (௯௨௯ - 929)


கல்லுண்டு களித்தவனைக் காட்டி 'இ·து நினைக்கும் ஆகாது' என்று கூறித் தெளிவித்தல், நீரினுள் மூழ்கினான் ஒருவனை விளக்கினால் தேடுவதைப் போல் முடியாத செயலாகும் (௯௱௨௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

கல்லுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது. (௯௨௯)
-மு. வரதராசன்

போதைப் பொருளைப் பயன்படுத்துபவனைத் திருத்தப் பல்வேறு காரணம் காட்டுவது நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதுபோல் ஆகும். (௯௨௯)
—சாலமன் பாப்பையா

குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான் (௯௱௨௯)
-மு. கருணாநிதி

கல்லுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. (௱௩௰ - 930)


கல்லுண்பவன், தானுண்ணாதபோது, உண்டு களித்த பிறனைக் காண்பான் அல்லவோ! அப்படிக் காணும் போது, தன் நிலையும் இப்படித்தான் என்று நினைக்க மாட்டானோ? (௯௩௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் தான் கள் உண்ணாத போது கல்லுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ. (௯௩௰)
-மு. வரதராசன்

போதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப் பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ? (௯௩௰)
—சாலமன் பாப்பையா

ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்து பிறகாமல் அந்த கேட்டை எண்ணிப் பார்க்க மாட்டானா? (௯௩௰)
-மு. கருணாநிதி