• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 01

அதிஅதிரன்

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 12, 2024
Messages
3
சொல்லாமல்...!

மௌனம் 01


பாழடைந்த அந்த கட்டிடத்தின் பின்னே பரந்த ஓர் கானகம்.
கானகத்தின் நடுவே குருதி தோய்ந்த தன் கைகளை ஒரு கணம் உயர்த்திப் பார்த்தவனின் இதழ்களில் ஒரு வித வன்மமான புன்னகை.

"ப்ச்ச்..இங்க பாரு உன்ன அடிச்சு என் கைல ப்ளட்.." என்றவனின் குரலில் அப்பட்டமான சலிப்பு.

அவன் முன்னே முகம் முழுக்க குருதியுடன் அமர்ந்து இருந்தவனுக்கு விழி பிதுங்கிற்று.

மரத்தின் அடியில் சாய்ந்து அமர்ந்திருந்தவனுக்கு அது மரணத்தின் பிடி என்பது புரிந்திட வெகு நேரம் பிடிக்கவில்லை.

தன் அழுத்தமான காலடியோசையுடன் அவன் அருகே வந்திட இறைஞ்சுவதை தவிர வேறு வழி தெரியவில்லை,
அவனுக்கு.

"ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்..என்..என்ன விட்டு...டு.."

"ஹாஆன்..கம்..கம் அகெய்ன்.."

"எ..என்..என்ன விட்டுடு.."

"ஹான்..கம்..கம் அகெய்ன்.." முகத்தில் கேலிப் புன்னகையை படரவிட்டு இடுப்பில் கை குற்றிய படி சொல்ல அவன் சிரிப்பில் பயம் வந்திற்று மற்றவனுக்கு.

"நா உன்ன விட்றதுக்காகவா இவ்ளோ கஷ்டப்பட்டு காத்திருந்து வல விரிச்சேன்..சரி அட்லீஸ்ட் சாகறதுக்கு முன்னாடி யேன்னாவது தெரிஞ்சுக்க.." இளக்காரச் சிரிப்புடன் அவன் காரணத்தைச் சொல்லிட அத்தனை அதிர்வு அவன் விழிகளில்.

"நீ..நீ..நீஈஈஈஈஈஈஈ...?"
அவன் இழுக்கும் முன்னரே அவனின் கேள்வியை புரிந்து கொண்டவனோ தலையாட்டி சிரித்து பின்னந்தலையை அழுந்தக் கோதி "யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..நானே தான்.." என்றிட சப்த நாடியும் அடங்கிற்று அவனுக்கு.

அதில் இன்னும் அவனுக்கு வன்மம் கிளர்ந்தெழ தன் வெறி தீரும் வரை அவனுக்கு அடித்தோய்ந்து விட்டு தன் துப்பாக்கியை இயக்க பாய்ந்து வந்த தோட்டா அவனின் நெற்றியைத் துளைக்க அவனின் உயிரும் பிரிந்து போயிற்று.

●●●●●●

இமைகளை அழுந்த மூட சற்றே தேங்கியிருந்த விழிநீரை இமை சிமிட்டி உள்ளிழுத்துக் கொண்டாள்,
அவள்.

விழிகள் செக்கச் சிவந்து இருந்தாலும் கண்ணீர்த் துளியொன்று தவறியேனும் எட்டிப் பார்த்திடவில்லை,
விழிகளில் இருந்து.

நாம் நேசித்தவர்கள் நம்மை புறக்கணிக்கும் போது உண்டாகிடும் வலி பெரிதல்லவா..?
அழுகையை அடக்கி அழுத்தமாய் இருக்க முயன்றவளோ தோல்வியை தழுவவில்லை.

அவளுக்கு அவன் மீது அவளவில்லா காதல்.
அவனுக்கு...?
அது அவளுள் பெரும் கேள்விக்குறி தான்.

இத்தனை நாள் ஒரே வீட்டில் இருந்தும் தன் மீது கொஞ்சம் கூட காதல் வந்திடவில்லையா..?
அவனுக்கு.

நினைக்கும் போதே மனம் ரணமாய் வலித்து கணங்களை கனமாக்கியது.

அவன் கட்டிய தாலி இன்னும் அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டு தான் இருக்கிறது.
அவனுக்கு வேண்டுமானால் அது வெறும் மஞ்சற்கயிறாக இருக்கலாம்.
அவளுக்கு..?
நிச்சயமாக அப்படி இல்லை.

"எப்பவும் சொல்றது தான்..ஐ ஹேட் யூ.." கண்களில் கோபம் தீப்பிளம்பாய் ஜொலிக்க இன்று அவன் சொல்லி விட்டுச் செல்ல முயன்றிட பொழுது பேசாமல் தன் காதலைச் சொல்லி கெஞ்சிட மனம் துடித்தது தான்.

ஆனால்,
அவள் தன்மானமுள்ள பெண் ஆயிற்றே.

விலகிச் செல்பவர்களை வழியச் சென்று தன் அருகே இழுத்துக் கொள்ளும் பழக்கம் அவளுக்கு துளியும் இல்லை.
அப்படிப்பட்டவளின் மனதில் அந்த எண்ணம் நொடியில் தோன்றி மறைந்ததன் காரணம் அவனின் மீது வைத்த ஆழமான காதல் தானே.

காதலின்றி வேறெது இருந்திடப் போகிறது,
காரணமாய்.

விரல்களை கொண்டு வதனத்தை அழுந்தத் துடைத்து விட்டு நிமிர்ந்தவளுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் விவாகரத்து கிடைத்திடும் என்கின்ற எண்ணமே நெஞ்சை அடைக்கச் செய்தது.

அறையின் விளக்கை ஒளிரவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியே சென்றிட கூடத்தில் சோபாவின் மேல் கால் மேல் கால் போட்டு அமர்ந்து அலைபேசியில் மூழ்கி இருந்தான்,
அவன்.

அவளின் முகத்தை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவனின் இதழ்களில் நொடி நேரத்தில் கேலிப் புன்னகையொன்று இழையோடிய இன்னும் அடிபட்டுத் தான் போனாள்,
அவள்.

எதையும் காட்டாமல் தப்பித்துக் கொள்ள முயன்று சமயலறைக்குள் நுழைந்தாலும் அவளின் முகத்தில் தோன்றி மறைந்து சோகம் அவன் விழிகளில் இருந்து தப்பிடவில்லை.
அவன் நினைக்கிறான் என்பது அவனுக்கும் அந்த இறைவனுக்கும் தான் வெளிச்சம்.

அழத் தோன்றிய மனதை கடினப்பட்டு அடக்கியவளாய் அவள் வேலைகளை கவனிக்க மீண்டும் மீண்டும் அவனின் சொற்களே காதுகளில் எதிரொலித்தது.

"ஷட் அப் ஐ ஸே..ஹா ஹா நைஸ் ஜோக்..சொஸைட்டிக்காக சேந்து வாழனுமா..நைஸ் ஜோக்.." இதழ் நிறைத்த ஏளனச் சிரிப்புடன் பரிகாசமாய் அவன் கூறியதும்...
எள்ளலுடன் பார்த்ததும்.

சட்டென உள்ளுக்குள் ஏதோ சிறு வலி ஊடுருவி உடைத்துப் போட்டது,
மனதை.

அவனுக்கும் என்ன தான் தோன்றியதோ....?
அழுத்தமான காலடியோசையுடன் அவளருகே வந்து நின்று அவள் முகம் பார்த்திட விழி நிமிர்த்தவில்லை,
அவள்.

"க்கும்.." அவன் தொண்டையைச் செரும தன்னை முயன்று சமப்படுத்தியவளின் முகம் நிமிர்ந்தது.

"டூ யூ லவ் திஸ் ஏ.டி..?" மார்புக்கு குறுக்கே கையை கட்டி தன் கூரிய பார்வைனை அவள் விழிகளுக்குள் பாய்ச்சியவனாய் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி தன் கம்பீரமான குரலில் அவன் கேட்டிட இப்படி ஒரு கேள்வியை அவனிடமிருந்து துளியும் எதிர்பாராதவளாய் அவள் திகைக்க மெல்ல வளைந்தன,
அவனிதழ்கள்.

"மிஸ்.தேவதர்ஷினீஈஈஈ.." அவன் குரலில் அவள் விலுக்கென்று நிமிர அவள் முகத்தில் அடிபட்ட பாவம்.

தனை மீறி தன் உணர்வுகள் அவனிடம் வெளிப்படுவது புரிந்திட அவளுக்குள் பெரும் ஆற்றாமை.

"ஓஹ்..சாரி இன்னும் ரெண்டு மாசத்துல டைவோர்ஸ் வரப் போகுது இல்ல...அதான் இப்போவே சொன்னேன்.." வெகு சாதாரணமான் அவன் சொல்ல ஆழமான சுவாசமொன்றை உள்ளிழுத்துக் கொண்டாள்,
வலித்த மனதுடன்.

முகத்தில் தானாய் வந்து ஒட்டிக் கொண்டது,
பெரும் அழுத்தமொன்று.

"தேவதர்ஷினி.." என்று அவன் வெறுமனே அழைத்திருந்தாலும் இப்படி உணர்ந்திருக்க மாட்டாளே..?
அவன் வேண்டுமென்று அவ்வாறு அழுத்தி அழைத்தான்,
என்பதை புரிந்து கொள்ள முடியாமல் போகாதே,
அவளால்.

மறுப்பாய் தலையசைத்து விட்டு அவள் தனக்கான காபியை கலக்கிட ஒரு தோள் குலுக்கலுடன் நகர்ந்திருந்தான்,
அவன் வெளியேறி.

அதற்குள் அவனுக்கு அழைப்பு வர பேசும் சத்தம் தெளிவாய்க் கேட்டது,
இவளுக்கு.

"யெஸ் அர்ஜுன்..அர்ஜுன் தான்..அப்பா பேரு தீரஜ்.." அவன் சொல்லிக் கொண்டு நகர்ந்திட ஏனோ அவனின் பெயரை உச்சரித்து சிலிர்க்க மறக்கவில்லை, அவள்.

தனக்கான காபியை கலக்கிக் கொண்டு வந்து தன் பைகளை சரிபார்த்து விட்டு நிமிர ஏதிரே நின்றிருந்தான் அவன், முன்பிருந்த அதே தோரணையுடன்.

"உன் திங்க்ஸ் எல்லாம் எடுத்து வச்சுட்ட தானே..?"

"ம்ம்.."

"முக்கியமான டாகுமண்ட்ஸ்.."

"ம்ம்.."

"அப்றம் நா எங்கப்பாம்மா கிட்ட இன்னும் விஷயத்த சொல்லல...நீயும் சொல்லிராத..இன்னும் டூ மன்த்ல நமக்கு டைவோர்ஸ் கெடச்சிடும் தான..
அது நெருங்கும் போது சொல்லிக்கலாம்..
தென்...ஹான் இந்த விஷயத்த நா சொல்ற யார் கிட்டவும் சொல்ல வேணா மிஸ்.தேவதர்ஷினி...
அது மட்டுல்ல..நீங்க நா கொடுத்த நகயெல்லாம் திருப்பி தந்துட்டீங்க..எனிவே அது எங்கம்மா போட்டது..ஸோ அத நா அவங்க கிட்ட ஹேன்ட் ஓவர் பண்ணிட்றேன்..
எனிவே இனிமே கோர்ட்ல தான் மீட் பண்ணனும்..ட்ரைவர் கொண்டு போய் விடுவாரு..ஹேவ் அ சேப் ஜர்னி.."
பேசி முடித்தவனின் முகம் வெகு சாதாரணமாய் இருக்க அவளின் இதழின் ஓரம் விரக்திச் சிரிப்பு.

மறைக்க முயன்று தோற்றவளாய் தலையசைத்து விட்டு தன் பைகளை இழுத்துக் கொண்டு அவள் கூடத்துக்கு வர உதவிக்கு வந்தவனை கரம் கொண்டே எட்ட நிறுத்திவளின் மனதில் பெரும் போராட்டமே நடந்து கொண்டிருந்தது,
என்றால் மிகையல்ல.

அவனோ ஒரு தோள் குலுக்கலுடன் அமர்ந்து கொண்டிட அவளுக்கு உள்ளுக்குள் சுருக்கென்றது.

ஒரு புறம் காதலை சொல்லி விடு அவன் மனம் துளியாவது மாறக் கூடும் என்று மனம் வாதிட மூளையோ சுயமரியாதையினையே முன்னிறுத்தி தடுத்தது.

மெதுவாக எடுத்து வந்து காரில் தன் பொருட்களை ஏற்றி விட்டு ஏறி அமர்ந்து கொண்டவளை பார்த்து கையைசைத்து புன்னகையுடன் வழியனுப்பி வைத்தான்,
அவன்.

வெற்றுப் பார்வை பார்த்தவளுக்கு அவனுக்கு பதிலுக்கு கையசைப்பை தந்திடக் கூட மனம் வந்திடவில்லை,
துளியேனும்.

மெல்ல வண்டி நகர்ந்திட கண் மூடி சாய்ந்து கொண்டாள்,
இருக்கையில்.

இடை புகுந்து தடுமாறி மென்காற்றும் அவளின் வலியை கொஞ்சமேனும் குறைக்கவில்லை.

"அவன் ரொம்ப நல்லவன் மா..கொஞ்சம் பிடிவாதம் பிடிப்பான்..நீதான் மா கொஞ்சம் அனுசரிச்சி நடந்துக்கனும்.."மாமியார் வாஞ்சையாய் தலையை தடவி சொன்னது நினைவில் வந்திட மீண்டும் விரக்தியின் விளிம்பில் விரிந்து கொடுத்தன,
இதழ்கள்.

அப்போது அவன் யாரோயோ காதலித்திருக்கிறான் என்பது பெரிய விடயமாய் தெரிய இப்போது அதை நினைக்கும் போது மனதை ஏதோ அழுத்தியது உண்மை தான்.

வீட்டிலும் எதுவும் கேட்க மாட்டார்கள்.
அவன் தான் அவளின் வேலை நிமித்தம் அவள் வீட்டில் கொண்டு விடுவதாக சொல்லியிருக்கிறானே, தன் குடும்பத்தினரிடம்.

எல்லோரையும் அப்படியே தன்னை பேச்சில் துளியளவும் சந்தேகம் வராதவாறு காய் நகர்த்தியிருக்க மொத்த்தையும் உள்ளுக்குள் வைத்து புழுங்கும் நிலை தான் அவளுக்கு.

●●●●●●

மாடியில் வீசிய மென்காற்று தழுவிச் சென்றாலும் அதை ரசிக்க முடியாத மனநிலையில் நின்றிருந்தான்,
தேவேந்திரன்.

எப்படி அவன் அப்படி செய்யலாம்..?
ஏன் இப்படி நடந்து கொள்கிறான்..?
அவனின் நடத்தைகளுக்கு காரணம் தெரியாமல் போக மனதில் சினம் கொந்தளித்து கிளம்பியிருந்தது.

"ஏ.டீஈஈஈஈஈஈஈஈ.." பல்லைக் கடித்தாலும் அது அவனுக்கு கேட்டிடும் வாய்ப்பில்லையே.

மற்றவர்களுக்கு எப்படியோ அவனுக்கு தர்ஷினி அவனுடம் மகிழ்வாக வாழவில்லை என்பதும் தெரியும்.
அவளை அவன் எட்ட நிறுத்தி வைத்திருப்பதும் தெரியும்.
அவனின் நடத்தைகளில் அவள் மீது துளியும் பிடித்தமின்மை வெளிப்படுவதும் தெரியும்.

என்ன தான் தர்ஷினி அவளின் உயிர்த் தோழியிடம் தங்கள் வாழ்க்கையை பற்றி சொல்லிக் கொள்ளாவிடினும் விலகலுடன் நகரும் அவர்களில் வாழ்க்கை அவளின் உயிர்த்தோழி கார்த்திகாவுக்கு புலப்படாமல் போகுமா..?

தேவேந்திரன் தர்ஷினியை காதலித்தது முழுவதும் அவள் அறிந்தது தானே.
தேவேந்திரன் தான் தோழிக்கு மிகப் பொருத்தமானவனாய் இருப்பான் என்கின்ற நம்பிக்கையில் தோழியின் விருப்பு வெறுப்புக்களை அவள் அறியாமலேயே இவனிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறாளே.

ஏனோ விதவசத்தில் இருவரும் கைகோர்த்துக் கொள்ள முடியாமல் போனது.

தோழியின் கணவனுக்கும் அவளுக்கும் இடையே விவாகரத்து நடக்க இருப்பதும் அவளுக்கு தெரிய வந்திருக்கவே தோழியின் வாழ்க்களை பற்றி மொத்தமாய் கொட்டி விட்டிருந்தாள்,
தேவேந்திரனிடம்.

ஏனென்றால் அவளின் கணவன் நினைப்பதை சாதிப்பவன் என்று அவளுக்கு தெரியாதா..?

என்ன தான் நூலிழை நம்பிக்கையப் பற்றிக் கொண்டு தோழி காத்திருந்தாலும் அவன் நினைத்த படி இருவருக்கும் இடையே விவாகரத்து நடந்திடத் தான் போகிறது என்கின்ற உண்மையை ஆணித்தரமாய் நம்பிற்று அவள் மனம்.

ஆக,
அவளின் வாழ்க்கைக்கு மாற்று வழி தேட வேண்டும் என்கின்ற யதார்த்தத்தை உணர்ந்தே தேவேந்திரனிடம் அனைத்தையும் ஒப்புவித்திருந்தாள்,
தோழி மீதிருந்த அக்கறையால்.

கடந்த காலத்தை நினைத்து பார்த்த தேவேந்திரனிடமிருந்து ஆழமான பெருமூச்சொன்று.

அவளின் கணவனை பற்றி அவனுக்குத் தெரியும்.
நிச்சயம் அவளை புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டிடும் பக்குவம் அவனுக்கு இருக்காது என்று பார்த்தவுடனே தோன்றிற்று அவனுக்கு.

அதுவும் கல்லூரியில் இருந்த பொழுது அவன் செய்த அடாவடிகளும் அட்டூழியங்களும்.
அத்தனை எளிதில் மறந்திட இயலாதே.

பெருமூச்சொன்று விட்டுக் கொண்டவனின் விழிகளில் எதிர் இருக்கும் வீட்டின் மாடியைத் தன்னை மீறி துழாவியது.

முன்பென்றால் மாலை நேரங்களில் தர்ஷினியின் அடாவடிகளையும் சேட்டகளையும் இந்த இடத்தில் இருந்து ரசித்து புன்னகைப்பது வாடிக்கையாய் இருந்தது.

சில நேரங்களில் ஓரிரண்டு நேரங்களில் கூட புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு படிப்பது போல் நடித்துக் கொண்டு அவளின் செய்கைகளை யாருமறியாமல் ரசிப்பதுமுண்டு.

ஏனோ அந்த நொடிகளை தவற விட்டால் அந்த நாட்களில் ஏதோ ஒரு சோர்வு அவனுள் ஒட்டிக் கொண்டு சுற்றுவது உண்மையே.

விரக்தியாய் இருந்தது, அதை நினைக்கும் பொழுது.

யோசனையில் ஆழ்ந்து இருந்தவனை கலைத்தது,
அந்த வண்டிச் சத்தம்.
தர்ஷினியின் வீட்டின் முன்னே வந்து நின்ற வண்டியை அவன் புருவ முடிச்சுக்களுடன் பார்த்திட தன் பைகளை சுமந்தவளாய் இறங்கியவளைக் கண்டதும் ஒரு நிமிடம் அதிர்வில் எழுந்த புருவங்கள் மீண்டும் இயல்பாகியது.

அவள் நிச்சயம் இங்கு அனுப்பப்படுவாள் என்று எதிர்ப்பார்த்திருந்தான் தான்.
ஆனால், இத்தனை எளிதில்..?

ஏதோ ஒன்றை இழந்த முகத்துடன் உள்ளே செல்பவளைக் கண்டதும் அவனுக்குள்ளும் சிறு வலி.
என்ன தான் என்றாலும் நேசித்த பெண் ஆயிற்றே.

அவளோ அவன் இருப்பதை கவனிக்கவில்லை.
ஆனால், அவனின் விழிகள் அவளின் உருவத்தை விட்டும் துளியும் அசைந்திடவில்லை.

உள் நுழைந்த மகளைக் கண்டதும் அத்தனை பூரிப்பு தாயின் மனதில்.

"தேவா..வா..வா..எங்க மாப்ள வர்லியா..?" மகளின் கையில் இருந்த பைகளை வாங்கிக் கொண்டவரின் விழிகள் வாசலைத் ஆராய்ந்திட என்னவோ போல் ஆனது,
தர்ஷினிக்கு.

உடைய முயன்ற குரலை கட்டுப்படுத்திக் கொண்டு "இல்லம்மா..அவருக்கு ஆபிஸ்ல பெரிய வேல ஒன்னு இருக்காம்..அதனால வர்லன்னு சொன்னாரு.." எதையுமே வெளிப்படுத்தாத தொனியில் அவளின் குரல் வர தாயின் முகம் தெளிந்தபாடில்லை.

"எங்களுக்குள்ள எந்த ப்ரச்சனயும் இல்லமா...அப்டி இருந்தா நா வந்துருப்பேனா...இன்னும் ரெண்டு மாசத்துக்கு அப்றம் வீடு மாறப் போறோம்னு சொல்லி இருந்தாரே..அதுக்கான வேலயும் இருக்குன்னு சொன்னாரு மா..அதான் வர்ல உன் மாப்ள.."முகத்தில் ஒட்ட வைத்த புன்னகையுடன் தோளை அழுத்திக் கூறிடவே ஏற்றுக் கொண்டு மலர்ந்தது,
தாயாரின் முகம்.

"சரி நீ போய் குளிச்சிட்டு வா..சாப்டலாம்.." அவர் சமயலறைக்குள் நுழைந்திட பைகளை எடுத்து தன் அறைக்குள் வைத்து விட்டு ஒரு குளியலைப் போட்டு விட்டு வந்தவளுக்கு அவன் நினைவுகள் எழாமல் இல்லை.

மறக்க முடியாதவன் அல்ல அவன்.
அவளால் நினைக்க முடியாமல் இருப்பவன் ஆயிற்றே.

எப்படி அவனின் மீது காதல் துளிர்த்தது என்பதெல்லாம் சத்தியமாய் அவளுக்கு தெரியாது.
அழுத்தமான தன் மனதை தகர்த்து துளிர்த்து எழுந்து விரவிப் பரவி அடர்ந்து படர்ந்து ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தி ஆண்டு கொண்டிருப்பது அவன் மீதான காதல் தான் என்பது மட்டும் அவளுக்கு தெரியும்.

கண்ணாடியின் முன் நின்று தலையை துவட்டியவளுக்கு அன்று ஒருநாள் மழையில் அவன் நனைந்து விட்டு வந்து கூடத்தில் வைத்து தலையை துவட்டியது நினைவில் இதழ்களில் தன்னை மீறிய புன்னகையொன்று.

விரிந்த இதழ்கள் அதே வேகத்தில் இறுகிக் கொண்டிட முகம் அழுத்தமாய் மாறிற்று.

தன் அறையை ஒழுங்குபடுத்தியவளை தாய் அழைத்திடும் சத்தம் கேட்க வெளியே வந்தவளுக்கு அமைதியாக இருந்த வீடே சொன்னது,
தம்பியும் தங்கையும் இன்னும் காலஜ் முடிந்து வந்திருக்கவில்லை,
என்பதை.

தாய் உணவு பரிமாற சிரத்தையாய் காட்டிக் கொண்டு உண்டவளுக்கு எத்தனை நாளைக்கு தான் இப்படி உண்மையை மறைத்து வைப்பது என்பதை நினைக்கும் போதே தலை சுற்றியது.

அதிலும் அவன் வீட்டில் விடயம் கேள்விப் பட்டிடும் போது..?
நினைக்கையிலே முச்சு முட்டியது.

நிச்சயம் விவாகரத்து நடந்தேறிடத் தான் போகிறது.
ஆனால், அவன் மீது இருக்கும் காதல் மனதில் இருக்குமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...!

தொடரும்.

🖋️அதி...!
2023.07.28
 
Top