• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 03

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
அத்தியாயம் 03


கார் சென்னையிலுள்ள அவர்களின் அப்பாட்மெண்டின் முன் வந்து நின்றதும் ரிஷியும் அவளை பார்க்காமல் உள்ளே சென்று விட்டான். அவளோ அசதியில் நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள். அரைமணி நேரம் கடந்திருக்கும் அதன் பின்னரே மித்ரனின் கார் வந்தது. கார் நடுவில் நிற்க பெருமூச்சுடன் அவன் இறங்கி வந்து பார்க்க அங்கே மதி மட்டும் உறக்கத்தில் இருந்தாள்.

பவித்ரா கர்ப்பிணியாக இருப்பதால் மெதுவாகவே இறங்கி வந்து கொண்டிருந்தாள். வந்தவள் கணவனின் பார்வையில் என்னவென கேட்க அவனோ காரை கண் காட்டினான். அவள் வந்து பார்க்க அங்கே மதிநிலா..

புரியாமல் கணவனை பவித்ரா பார்க்க அவனும் இயலாமையுடன் அவளை பார்த்து வைத்தான். அதில் நண்பனின் வாழ்க்கையைப் பற்றி பயம் தெரிந்தது. பின் அவளே மதியை எழுப்ப, சட்டென விழித்துக் கொண்டவள் அருகில் நின்றவர்களை புரியாமல் பார்த்து நின்றாள்.

அதனை புரிந்து கொண்டவளாக பவித்ராவும் "மதி வீடு வந்துருச்சு..." என்றாள்.

"ஓஓஓ.." என்றவள் தன்னுடைமையுடன் இறங்கிச் செல்ல பவித்ராவும் கூடவே சென்றாள். மித்ரன் காரை பார்க் பண்ணி விட்டு பின்னே வந்தான்.

போகும் போதே பவித்ரா வீட்டைப் பற்றி சொல்லிக் கொண்டு நடந்தாள். ரிஷி தங்கியிருக்கும் கீழ் தளத்தை திறந்தால் தான் மித்ரன் வசிக்கும் மேல் தளத்திற்கு செல்ல முடியும். அனைத்தையும் செவி தாழ்த்தி கேட்டுக் கொண்டு வந்தவளுக்கு பவித்ராவின் பேச்சு பிடித்துப் போனது.

உடனே "நான் உங்கள அண்ணினு கூப்பிடட்டுமா...?" என்றாள்.

பவித்ரா சிரிப்புடனே தலையாட்ட இதனை பின்னாலிருந்து கேட்டுக் கொண்டு வந்த மித்ரனுக்கு ஏனோ சிரிப்பு வந்தது. பவித்ராவின் அருகில் வந்தவன் அவளது தோளை சுற்றி கை போட்டவனாக மதியிடம் "நான் உனக்கு அண்ணன்னா இவ அண்ணி தானே மதிம்மா..." என்றான் கண்சிமிட்டி.

அவனுக்கும் மதியைப் பார்த்தவுடன் பிடித்திருந்தது. அவளின் தோற்றத்தை மீறி அவள் குணத்தில் அழகானவள் என்பதை கணவன் மனைவி இருவரும் கண்டு கொண்டனர்.ஆனால் ஏன் அது தன் நண்பனுக்கு புரியவில்லை என்பது தான் அவர்களின் வினா..

அவனின் கனிவான பேச்சில் மதிக்கு சற்று மனம் ஆறுதலடைந்தது. கணவன் தீ என்றால் அவனின் நண்பர்கள் நீர் என அறிந்து கொண்டாள் பேதை. அவளும் பதிலுக்கு இதழை விரிக்க இப்படியே மூவருக்கும் அன்றே நல்ல நட்புறவானது.

..

ரிஷியைப் பற்றி தெரியுமாதலால் மித்ரனும் பவித்ராவும் மதியை உள்ளே விட்டு விட்டு செல்ல மனமேயில்லாமல் தங்களது அறைக்குள் சென்று விட்டனர்.

உள்ளே வந்த மதிக்கு தனித்து விடப்பட்ட நிலை. தாலி கட்டியவனையும் காணவில்லை. எங்கே செல்வதென புரியாமல் நின்றிருந்தவளின் கண்களில் பட்டது இரண்டு அறைகள்.

"இதில் எதற்குள் அவர் இருப்பார்..?" என்பது அவளது சிந்தனை.

ஏதோ குத்துமதிப்பாக ஓர் அறைக்குள் நுழைய நல்லவேளையாக அங்கே ரிஷியைக் காணவில்லை. "அப்பாடா.." என்று நெஞ்சில் கை வைத்தவள் திரும்ப அங்கே வாசல் நிலையில் கைகளை கட்டிக் கொண்டு சாய்ந்து நின்றிருந்தான் ரிஷி. ஓர் கணம் நெஞ்சே அதிர்ந்து விட்டது பேதைக்கு. உடல் வாரித்தூக்கிப் போட மாராப்பு சேலையை இறுக பற்றிக் கொண்டாள் பயத்தில். திடீரென ஒருவர் நிற்கவுமே அவள் பயந்தது.

ஆனால் அவனுக்குத் தான் அனைத்தும் தப்பாக கண்ணில்பட்டது. அவளைப் பார்த்து ஏளனமாக உதட்டை வளைத்தவன் அவளைச் சுட்டிக் காட்டி "நான் தொடுர அளவுக்கெல்லாம் நீயெல்லாம் வேத்தே இல்லை..." என்றவனின் பார்வை அவளது கையில் சிக்கியிருந்த மாராப்பு சேலையில் பதிந்து மீண்டது.

அவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அவனின் பார்வை சென்ற திக்கில் பார்த்த பின்னர் தான் அதன் அர்த்தம் புரிய உடல் கூசியது. அதனையும் விட "வேர்த்தில்லை.." என்ற வசனம் அவளை சரியாக பதம் பார்த்தது. வெளியே வரத் துடித்த கண்ணீரை சட்டென அடக்கிக் கொண்டவளுக்கு தன்மானம் சீண்டப்பட அவனைப் போலவே மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு அவனது கண்களைப் பார்த்து "பின்ன என்னத்துக்கு இங்க நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க...?" என்றாள் வீர மங்கையாய்.

அவள் நின்றிருந்த தோற்றத்தில் ஓர்கணம் அவன் தடுமாறித்தான் போனான். பின்னர் தன்னை சமாளித்துக் கொண்டவனாக நிமிர்ந்து பேண்ட் பார்க்கெட்டினுள் கையிட்டு நின்று கொண்டவன் "யூ சீப்.. இதோ இந்த பட்டிக்காடு மாதிரி பேசுற பார்த்தேல்ல இதுக்காக தான்டி உன்னை எனக்கு பிடிக்கல்ல.." என்றான் அவனும் சாட்டையடியாய்.

அதெல்லாம் அவளுக்கு பெரிதாக தெரியவில்லை.
"சீப்னு தெரியுதில்ல.. அப்போ ஏன் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டிங்க...? அப்பவே வேண்டாம்னு சொல்லி இருக்கலாம்ல.." என்றவளின் பார்வையில் இப்போது ஓர் தேடல்.

கர்வம் சிந்தையை மறைத்திருக்க அவளின் தேடல் அவனுக்கு விளங்கவில்லை.

"வேற வழியில்லை.. உன்ன மாதிரி லோக்லாஸ கல்யாணம் பண்ணிக்கனும்றது என் ஃபேட்.." என்றவனே அவளின் வெற்றுப் பார்வையை வேறு விதமாக புரிந்து கொண்டு நக்கல் தொணியில் "ஃபேட்னா தலையெழுத்துனு அர்த்தம்..." என்றான்.

அவன் நினைத்ததற்கு மாறாக அவளோ அதே நக்கலுடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அது அவனை இன்னும் வெறியாக்க மூக்கு விடைக்க "த்தோ பார் உன் கிட்ட நின்னு நிதானமா பேசுற அளவுக்கு நான் ஒன்னும் உன்ன மாதிரி வெட்டிப் பீசு இல்லை..." என்றதும் உடனே அவள் வாசல் பக்கம் கண் காட்ட ஏகத்துக்கும் கடுப்பானவன் அவளை அறைய கையை ஓங்கி விட்டான்.

அவளோ நொடியில் அவனது கையைப் பற்றி தடுத்திருக்க பற்களை நறநறுத்தான் ஆடவன்.

தன் வீட்டிற்கு வந்து தனக்கே எதிர்த்துப் பேசுபவளை கொல்லும் ஆத்திரம் அவனுள். பாவம் அவளைப் பற்றி அவன் அறிந்திருக்கவில்லை. பாசத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவள் பாவத்துக்கு பதம் பார்ப்பவள் என அவன் அறிந்திருக்கவில்லை.

கையை உதறித்தள்ளியவன் "இன்னும் த்ரீ மன்த் உனக்கு டைம் தரேன். அதுக்குள்ள நீயா எனக்கு டிவோர்ஸ் தரனும்.. இல்லை தர வைப்பேன்..." என்றவனின் கண்களில் அனல் தெரித்தது. அவனைப் பொறுத்தவரை அவளுடன் நின்று பேசுவதே வேஸ்ட் என்ற நிலைக்கு வந்து விட்டான். அவளை உறுத்து விழித்தவன் திரும்பிப் போக எத்தனிக்க அவளோ "இல்லைனா..?" என்று குரல் கொடுத்தாள்.

கோபம் மீண்டும் உச்சிக்கு ஏற கடுப்புடன் திரும்பியவன் "வட் டிட் யூ சே...?" என்றவனே "அப்படின்னா..." என்று வாய் திறப்பதற்குள் முந்திக் கொண்ட மதி "அப்படி டிவோர்ஸ் தரலைன்னா என்ன பண்ணுவீங்கனு கேட்டேன்..." என்றாள் கெத்தாய்.

முகம் சிவக்க நின்றிருந்த ரிஷி "அது சரி உனக்கும் எனக்கும் என்ன தகுதி இருக்குனு என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்ட...?" என்றான் இடுப்பில் கைகுற்றி.

அவளிடம் பதிலில்லை. ஆனால் அவள் தலைகுனியவுமில்லை. ஓர் வித அழுத்தத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கு அவளின் அமைதியில் உச்சி குளிர்ந்தது.

தன் அக்மார்க் கோணல் சிரிப்புடன் அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் அவளது கைக்கருகில் தன் கையை கொண்டு சென்று நிறத்தை சுட்டிக் காட்டி "இதுல கூட நமக்கு மேச் ஆகலையே மதிநிலா... ச்சுசுச்சூ..." என உச்சுக் கொட்டி அவளை மட்டம் தட்டியிருந்தான் கணவனானவன்.

நேரடியாக தன்னை ஒருவர் இப்படி மட்டம் தட்டுவதில் மெய்யாகவே அந்த பிஞ்சு இதயம் நொருங்கி விட்டது. முழுவதும் உடைந்தழுவதற்கு முன்னர் "வ..வந்த வேலை முடிஞ்சுதுன்னா நீங்க வெளியே போகலாம் சார். எனக்கு தூக்கம் வருது.." என்றவாறு கை மறைவில் கொட்டாவியை மறைத்தாள்.

அதில் அவனுக்கு தன்மானம் தூண்டப்பட ஏற்கனவே அவளுக்கு வார்த்தையால் அடித்தது போதென கருதினானோ மீண்டும் "நீ என்னடி என்னை வெளியே போன்னு சொல்லுறது. திஸ் இஸ் மை ஹவுஸ். நீ இங்க வெறும் ஒரு கெஸ்ட் தான். டோன்ட் வொரி இங்க தங்கிக்கிறதுக்கு நீ எனக்கு வாடகையெல்லாம் தரத் தேவையில்லை. பாவம் நீயே வெட்டியா இருக்கிறவ.. உனக்கு ஏது பணம்..? போனா போகுதேனு நான் உனக்கு டெய்லி பணம் தரேன். நீ என்ன செய்றேன்னா, இந்த கூட்டுறது, பெறுக்குறது, இந்த வேலையை மட்டும் பாரு. தப்பித் தவறிக் கூட சமைச்சிராத.. பிகாஸ் நான் கண்டவங்க கையால சமைச்சத சாப்பிறது இல்லை..." என வேண்டுமென்றே முகத்தை அஷ்டகோணலாக்கினான்.

எவ்வளவு தான் தடுத்தும் அவளை மீறி கண்கள் கலங்கி விட்டன அவனது வார்த்தைகள் தந்த வீரியம் தாங்க முடியாமல்.

அதில் சட்டென ஆஃபானவன் வேறெதுவும் பேசாமல் சென்று விட்டான்.

இங்கே மன வலியில் தொப்பென கட்டிலில் அமர்ந்தாள் காரிகை. நெஞ்சு காந்தியது மதிநிலாவிற்கு. வாய் இருக்கின்றது என்பதற்காக எப்படியெல்லாம் பேசுகிறான்...

"தன் தாய் தந்தையின் கால் கையில் விழுந்து சரி இந்த திருமணம் வேண்டாமென்று மறுத்திருக்க வேண்டுமோ?" என காலம் கடந்து சிந்தித்து கலங்கினாள்.

அப்படியே சாய்ந்து விட்டத்தை வெறித்தாள் மதிநிலா...


தொடரும்...


தீரா.