உணர்வாய் உயிராய் நீயே எந்நாளும் அத்தியாயம்-1
அந்த விலையுயர்ந்த வாகனத்தின் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளிவரும் குளிர்காற்று அந்த இருக்கையை முழுவதும் நிரப்பி இருந்தாலும் அங்கே அமர்ந்திருந்தவளின் மூச்சுக் காற்று வெகு சூடாக வெளியேறியது.
நெற்றி முழுவதும் வியர்வைத் துளிகள் படர்ந்திருக்க விரல்களோ கைப்பேசியின் தொடுதிரையை வேகமாக அழுத்தி சோர்வுற்று இருந்தது.
இருந்தாலும் விடாப்பிடியாக தோழி என்று பெயர் வைத்திருந்த எண்ணை எண்பத்தி ஒன்று முறையாக திரும்ப அழுத்தியவள் சற்றே எரிச்சலோடு “எப்போத் தான் போனை எடுப்பாளோ தெரியலை? ஊர்ல நாலைந்து ப்ரெண்ட்ஸ் வைச்சு இருக்கிறவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான் இந்த ஒருத்தியை நான் வைச்சுட்டு படுற அவஸ்தை இருக்கே முடியலை” என்று தலையில் கையில் வைத்து புலம்பியபடியே கைப்பேசியைப் பார்க்க அழைப்பு முடியும் தருவாயில் மறுமுனையில் அழைப்பு எடுக்கப்பட்டது.
மறுமுனையில் “ஹலோ” என்றதும்…
இவளோ வேகமாக “ஹேய் உனக்கு அறிவிருக்கா இல்லையா? எத்தனை தடவை போன் போடுறது? பதில் சொல்ல மாட்டே நான் இங்கே என்ன டென்ஷன்ல இருக்கேன்னு உனக்கு தெரியுமா? நேரம் ஆயிடுச்சு ஏன் தான் இப்படி பண்ணுறியோ எனக்குத் தெரியலை” என்று பொறிந்து தள்ளினாள் அவள்.
மறுமுனையில் அழுதபடி “அம்மே… அமிர்தா உன்னால நான் தான் இப்போ பிரச்சினைல மாட்டிட்டு இருக்கேன் தெரியுமா?”
இவளோ சற்று கோபத்தோடு “உன்கிட்ட ஒரு உதவி கேட்டதுக்கு என்னை பிரச்சினைல மாட்டி விடாமல் போக மாட்டே அதானே”
உடனே அவளோ “உனக்கு உதவி செய்ய வந்து தான் நான் இப்போ பிரச்சினைல மாட்டிட்டு இருக்கேன் முதல்ல அதுல இருந்து தப்பிக்கிற வழியைச் சொல்லு” என்றாள் மூச்சுத் திக்கியபடி….
“முதல்ல என்ன விஷயம்னு சொல்லு சீக்கிரம் அவன் வேற வந்துவிடப் போகிறான்” என்றாள் அவசரமாக…
“நீ கொடுத்த டிரஸ் தோளில் இருந்து இறங்க மாட்டேங்குது அப்படியே நிக்குது தலை வழியாகவும் கழற்ற முடியலை ஒருவேளை நான் குண்டாகிட்டேனோ? அதான் எனக்கு உன் டிரஸ் பத்தமாட்டேங்குதுனு நினைக்கிறேன்” என்று தோளில் நிற்கும் அந்த துணியைப் பிடித்தவாறே கேட்டாள்.
“அதெல்லாம் ஒன்னுமில்லை டிரஸ்ஸோட சைடுல சிப்பு இருக்கும் பாரு அதை சரி பண்ணாலே உள்ளே போயிடும் உடம்புக்கு ஏற்றமாதிரி பிட்டாக இருக்க அந்த சிப் இருக்கு” என்றாள்.
அமிர்தா சொன்னது போலவே செய்ய அந்த மேற்கத்திய உடை அவளுக்கு கச்சிதமாய் பொருந்தியது.கொஞ்சம் முக அலங்காரம் செய்து விட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடை மாற்றும் அறையிலிருந்து வெளியே வந்தாள் ஆரதி.
பாதங்களில் எப்போதும் அணிந்திருக்கும் சாதாரண செருப்பு நினைவுக்கு வர கையில் இருந்த பையில் இருந்த அந்த விலையுயர்ந்த குதிகால் செருப்பை அணிந்துக் கொண்டு நடக்க முடியாமல் தட்டுத் தடுமாறி நடந்து வந்தாள் ஆரதி.
அந்த வணிக வளாகத்தின் கடையிலிருந்து வெளியே வந்தவளையே சில பேர் பார்க்க அதை எல்லாம் கவனிக்காதவள் அந்த பையில் இருந்த குளிரூட்டும் கண்ணாடியை அணிந்துக் கொண்டு கொஞ்சம் நிமிர்ந்து நடக்க முயற்சிக்க கால்களோ தன்னாலேயே தள்ளாட்டாம் போட ஏதோ பொதுவாக நடந்து அமிர்தா இருக்கும் வாகனத்தின் அருகில் வந்து உள்ளே ஏறினாள் ஆரதி.
ஆரதியைப் பார்த்ததும் தான் அமிர்தாவிற்கு நிம்மதியாக இருந்தது.அதுவரை கோபத்தை தாங்கி இருந்தவளின் முகமோ இப்பொழுது புன்னகை ததும்ப அவளைப் பார்த்து கொஞ்சம் அதிர்ச்சியானவள் “ஆரதி தலையில் விக் வைக்கலையா?” என்றதும் தான் ஆரதிக்கு நினைவு வர அவள் வைத்திருந்த அந்த பையில் பொய்முடியையும் எடுத்து தலையில் வைத்து அதை சரிசெய்தபடி கண்ணாடியின் வழியே பார்த்தவள் “இப்போ ஓகே வான்னு சொல்லு” என்றதும்
அமிர்தா ஆரதியை மேலும் கீழுமாக பார்த்தவள் “ம்ம்… பர்பெக்ட் இப்போத் தான் பார்க்க என்னை மாதிரியே இருக்கே நான் சொன்னதை எல்லாம் ஞாபகம் வைச்சுக்கோ எதாவதுன்னா காதுல இயர் போன் மாட்டி இருக்கல்ல அதுல நான் பேசுறேன்” என்றாள்.
ஆரதியோ கொஞ்சம் கலக்கத்தோடு “அமிர்தா இதெல்லாம் சரியா வருமா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு வீட்டுல தெரிஞ்சுடுச்சுன்னா அவ்வளவு தான் நானும் காலி நீயும் அதோட காலி” என்றாள்.
அமிர்தா முறைத்துப் பார்த்தாள்.ஆரதி “இவ்வளவு எபேக்ட் போடுறதுக்கு நீயே போய் பார்க்கலாம் அமிர்தா” என்றதும்
“ஏய் அறிவிருக்கா உனக்கு இன்னைக்கு என்னோட கனவு நினைவாகும் நாள்.நான் பண்ண பிராஜெக்ட் இன்னைக்கு டிஸ்பிளேல வைச்சு அதை பத்தி பேச வேண்டியது இருக்கு அதை விட்டுட்டு எங்க வீட்டில பார்த்த மாப்பிள்ளையைப் போய் பார்க்க சொல்லுறியா? என்னோட இத்தனை வருஷ உழைப்பு எல்லாமே வீணாக போய்டும் அதை எங்க அம்மாகிட்ட சொன்னால் அவங்க லாஜிக் பேசுறாங்க நீ சம்பாதிச்சு தான் நிறைய வேண்டி இருக்குன்னு இல்லை உன் வாழ்க்கையைப் பாருன்னு மிரட்டுறாங்க அவங்களுக்கு தான் நான் சொல்றது புரியலை எப்பவும் என்கூட இருக்கிற உனக்குமா தெரியாது?” என்றாள் வருத்தத்தோடு….
நீண்ட பெருமூச்சு விட்டவள் “ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு இத்தனை நாளாக உனக்கு பார்த்த மாப்பிள்ளைங்களை வேண்டாம் சொல்லுறதுக்கு என்னை போன்ல பேசச் சொல்லி நிறுத்தியாச்சு ஆனால் இப்போ நேர்ல போன அவங்ககிட்ட உன்னோட போட்டோ இருக்காதா? அதைப் பார்த்து கண்டுபிடிச்சிட்டா என்னச் செய்றதுன்னா எனக்கு யோசனையா இருக்கு அமிர்தா அதுக்கு ஒரு வழியைச் சொல்லு” என்றாள் பாவமாக….
கையில் இருந்த கைப்பேசியில் உள்ள புகைப்படத்தைக் காட்டினாள் அமிர்தா.அதில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியானாள் ஆரதி.அந்த புகைப்படத்தில் இப்பொழுது ஆரதியை எப்படி உருமாற்றி வைத்திருக்கிறாளோ! அதே வடிவில் அமிர்தா சிரித்துக் கொண்டிருந்தாள்.
அதைக் காட்டியவள் “பாரு எதாவது வித்தியாசம் தெரியுதா? இல்லைல்ல அதனால ஒழுங்கா போய் எப்படியாவது அவன்கிட்ட பேசி இந்த கல்யாணத்தை நிறுத்துற வழியைப் பாரு புரியுதா?ஆரதி இது என் குடும்பத்திற்கு தெரியாமல் நான் பண்ணுற ப்ராஜெக்ட் அதனால நான் போக வேண்டும்” என்றாள்.
ஆரதியும் வேறு வழியில்லாமல் தலையை ஆட்டினாள்.அப்பொழுது அவளுடைய தலையில் இருந்த பொய்முடியும் சேர்ந்து ஆடியது.அதைப் பார்த்த அமிர்தா தோளில் ஒரு அடி போட்டவள் “ஒழுங்கா வை உன்னை மாதிரி அதுவும் பயத்தில் ஆடுது உன் நீளமான முடி வெளியே தெரிந்து விடும்” என்று ஏற்கனவே பயத்தில் இருப்பவளை இன்னும் அவள் கிண்டலடித்தாள்.
உடனே ஆரதி “உனக்கு நான் செய்ற உதவிக்கு என்னை கிண்டல் வேற பண்ணுறியா? எல்லாம் என் நேரம் அன்னைக்கு மட்டும் அந்த சத்தியத்தை நான் செய்யாமல் இருந்திருந்தால் இப்போ எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது” என்று நொந்துக் கொண்டாள்.
அதைக் கேட்ட அமிர்தா “அதை எல்லாம் அன்னைக்கே யோசிச்சு இருக்கனும் இப்போ அதை பத்தி நினைச்சு என்ன பயன்? சரி விடு இதோ இவன் தான் மாப்பிள்ளை சார்” என்று கைப்பேசியில் இருந்த புகைப்படத்தைக் காட்டினாள்.
அதைப் பார்த்த ஆரதி “ஹேய் ஆளு பார்க்க சூப்பரா இருக்கான்ல ஏன் தான் வேணாம்னு சொல்லுறியோ? தெரியலை இன்னைக்கு இவனோட கதையை கதம் பண்ணுறேன்” என்று கழுத்துக்கு நேராக பெருவிரலைக் காட்டி வெட்டுவது போல் பாவனைச் செய்தாள்.
அதைப் பார்த்த அமிர்தா சிரித்துக் கொண்டே “சரி பார்த்து பக்குவமா வேலையை முடிச்சிடு முக்கியமான விஷயம் கூலரை கழற்றிடாதே! முகம் கிளியரா தெரிஞ்சிடும் ஏன்னா அது தான் உன் முகபாவனையை மறைக்குது” என்றாள்.
“காபி ஷாப்ல போய் கூலரை கழற்றலைன்னா ரொம்ப ஓவரா இருக்காது”
“அவன் என்ன நினைச்ச நமக்கென்ன? என்னை வேண்டாம்னு சொல்லுறதுக்குத் தான் இவ்வளவு மெனக்கெடல் நீ என்னன்னா பழைய படி சொன்னதையே சொல்லுற?”
“ம்ம்… புரிஞ்சுது அமிர்தா இருந்தாலும் எனக்கு பயமாவே இருக்கு அப்புறம் ” என்று ஆரதி இழுக்க…
“செய்த சத்தியத்தை மறக்காதே!அப்புறம் வயிற்று வலி வந்திடும் சரியா? அந்த மாப்பிள்ளைகாரனோட போட்டோவும் டீடெய்ல்ஸ் இதுல இருக்கு இந்தா இந்த நம்பருக்கு தான் கால் பண்ணுவான்” என்று தன் கையில் இருந்த இன்னொரு கைப்பேசியை எடுத்து அவளிடம் கொடுத்தவள் “இதோ ஹாண்பேக் எடுத்துக்கோ காரையும் நீயே எடுத்துட்டு போ அம்மா நான் கார்ல வருவேன்னு சொல்லி இருக்காங்க அதனால எந்த சந்தேகமும் வர வைக்க வேண்டாம் நான் கேப்ல போய்கிறேன்” என்று படபடவென்று பேசி முடித்தவள் ஆரதியிடம் இன்னொரு முறை எச்சரிக்கையாக இருக்கும் படி சொல்லி விட்டுச் சென்றாள் அமிர்தா.
ஆரதி அமிர்தா சொன்ன அந்த பெரிய வணிக வளாகத்திற்கு செல்வதற்கு மகிழுந்தை வேகமாக இயக்கினாள்.
அமிர்தாவும் ஆரதியும் சிறுவயது தோழிகள்.அமிர்தாவின் பெற்றோர்கள் முதலில் ஆரம்ப நிலையில் இருந்தவர்கள் சில வருடங்களுக்குப் பிறகு தொழிலில் ஏற்பட்ட இலாபகரத்தினால் பணக்காரர்களாக மாறினார்கள்.இதனால் அவர்கள் பெங்களூருக்கு இடம் பெயர்ந்தார்கள்.
ஆனால் அமிர்தா விடுதியில் தங்கி அவள் ஆரம்பத்தில் படித்த பள்ளியிலேயே படிப்பைத் தொடர ஆரதியின் நட்பும் தொடர்ந்தது.இருவரும் வெவ்வேறு கல்லூரிகளில் பயின்றாலும் அவர்கள் நண்பர்களாகவே இருந்தனர்.அமிர்தா ஆரதியின் வீட்டில் இன்னொரு பிள்ளையாகவே இருந்தாள்.
அவளின் இயல்பான குணத்தால் நன்றாகவே குடும்பத்தில் ஒருத்தியாக இருந்தாள்.
ஆரதியின் பெற்றோருக்கும் தங்கைக்கும் இவளே தேவையான எல்லாவற்றையும் செய்து விடுவாள்.இதனால் ஆரதியை விட அமிர்தாவிற்கே அதிக ஆதரவு இருந்தது.
தலைநகரத்திலிருந்து வெளியே புதியதாக வீட்டை வாங்கி கட்டிய ஆரதியின் பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் சென்று விட வேலைக்காரணமாக அமிர்தாவுடன் ஆரதியும் ஒன்றாக அமிர்தாவிற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக இருக்கின்றனர்.
வாகனத்தின் மீது கவனம் இருந்தாலும் ஆரதிக்கு அன்று அமிர்தாவிற்கு முட்டாள் தனமாக செய்துக் கொடுத்த சத்தியத்தைப் பற்றியே நினைவுக்கு வந்தது.
இருவரும் ஒரே இடத்தில் தங்குவதால் அடிக்கடி பேசிக் கொள்ளும் வாய்ப்புகளும் அதிகம்.ஆரதிக்கு சம்பளம் வந்தவுடன் அவளுடைய செலவுக்கு சிறு தொகையை மட்டும் எடுத்து விட்டு மீதி பணத்தை அவளின் அம்மாவின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விட வேண்டும் என்று எழுதப்படாத சட்டம்.
இதில் வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்களை ஆரதியின் அம்மாவே ஆன்லைனில் வாங்கி போடுவார்.அமிர்தாவின் வீட்டில் இருப்பதால் அவள் எந்த வாடகையும் வாங்க மாட்டாள் என்பதால் இருவரும் ஒன்றாக சமைக்க வேண்டும்.
இல்லையென்றால் அமிர்தாவிற்கு அதிகமான வேலை இருந்தால் ஆரதி சமைக்க வேண்டும்.ஏனென்றால் அமிர்தா அவர்களின் குடும்ப தொழிலான கட்டுமானத் தொழிலில் வெளியில் தெரியாத முக்கிய பங்குதாரர்களாக இருந்து வேலைச் செய்வதால் அவளுக்கு வேலை அதிகமாக இருந்தது.இதனால் தான் இந்த கொள்கையை வேறு ஆரதியின் பெற்றோர் அவளுக்கு சொல்லி இருந்தனர்.
இதற்காகவே ஆரதியின் தாய் பாக்யா தினமும் கைப்பேசியில் அழைத்து பேசுவார்.இருவரும் வெளியில் சாப்பிட்டு உடல்நிலையை கெடுத்துக் கொள்ளக் கூடாது என்ற அக்கறையில் தான் இந்த நிபந்தனை.
சில நேரங்களில் தோழிகள் இருவரும் ஒன்றாக வெளியில் சாப்பிட்டு வந்து பொய் பேசியும் இருக்கிறார்கள்.ஆனால் மளிகைப் பொருட்களின் கணக்கு இருப்பதால் அவர்களால் அடிக்கடி இதுபோல் பொய் சொன்னால் மாட்டிக் கொள்வார்கள்.
அன்று வேலையை முடித்து சீக்கிரமே வந்த ஆரதி அப்படியே அசதியில் தூங்கிப் போனாள்.விழித்தவள் நேரம் நள்ளிரவை எட்டியிருக்க பசியிலும் தூக்க கலக்கத்திலும் நாலைந்து உணவுவகைகளை ஒன்றாக பதிவு செய்தாள்.
கொஞ்சம் தூக்கம் கலைந்ததும் அவளின் கைப்பேசியை எடுத்துப் பார்க்க அது இரண்டாயிரம் ரூபாயை தாண்டி இருந்தது.
அதைப் பார்த்து அதிர்ந்தவளுக்கு மாதத்தின் கடைசி நாட்கள் என்பதால் உடனே அமிர்தாவை கைப்பேசியில் அழைத்தவள் “ஹலோ அமிர்தா செல்லம் என்ன பண்ணுறீங்க? ஏன் இன்னும் வீட்டுக்கு வரலை”
அவளோ சோர்வுற்று “ம்ம்… வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன் என்ன விஷயம் கொஞ்சல்ஸ் எல்லாம் இன்னைக்கு அதிகமா தெரியுது என்ன வேணும் எங்க ஆரதி பாப்பாக்கு ?”
“அ…து எனக்கு ஒரு பெரிய உதவி ஒன்னு இல்லை ரெண்டு வேணும்”
இவளோ யோசித்தப்படி “சரி செய்றேன் அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு பிராமிஸ் செய்யனும் சரியா?”
“ஹேய் நான் ஒரு உதவின்னு கேட்டா நீ வேற ஏதோ கேட்கிற அதெல்லாம் ஒத்துக்க முடியாது” என்றாள் ஆரதி.
அமிர்தா இது தான் சரியான நேரம் என்று உணர்ந்தவள் “இப்போ என்ன விஷயம்னு சொல்லு நான் அப்புறமா முடிவெடுக்கிறேன்” என்றாள்.
ஆரதி நடந்ததைச் சொல்லியவள் “எனக்கு இப்போ இரண்டாயிரம் ரூபாய் பணம் கடனாகக் கொடு அதை விட முக்கியமான விஷயம் இந்த விஷயத்தை அம்மாகிட்ட சொல்லக் கூடாது இன்னும் இரண்டு நாளைக்கு இது தான் சாப்பாடு” என்றாள்.
நடந்ததைக் கேட்டு சிரித்தவள் “பணம் ஒன்னும் கடனாக எல்லாம் வேண்டாம் நானே கொடுக்கிறேன் நம்ம ரெண்டுபேர் சாப்பிடுறதுக்கு தானே ஆர்டர் செய்தே அதனால ஒன்னும் இல்லை அம்மாகிட்டயும் சொல்லலை” என்றாள்.
இதைக் கேட்டு நிம்மதி அடைந்த ஆரதி “ஏதோ ப்ராமிஸ் பண்ணச் சொன்னியே அது என்னாச்சு?”
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் அதுக்கு பதிலா நீ வாங்கி இருக்கிற டிஷ்ல எனக்கு எது வேணுமோ அதை நான் தான் முதல்ல முழுதாக எடுப்பேன்” என்றாள்.
ஆரதியும் அதற்கு சரியென்று சொல்ல அமிர்தா வந்து சேரவும் எல்லா உணவு வகைகளும் ஏற்கனவே வந்து இருந்தன.
இருவரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்து ஒவ்வொன்றையாக பிரித்து பார்த்தவர்கள் கடைசியில் அமிர்தா ஆரதிக்கு பிடித்த வேகவைத்த கோழியை எடுத்துக் கொண்டாள்.
அதைப் பார்த்த ஆரதி முகம் வாடினாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் சாப்பிட ஆரம்பித்தனர்.ஆனால் அமிர்தாவோ வேண்டுமென்றே இரசித்து ருசித்து சாப்பிட்டாள்.அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆரதியிடம் “வேணுமா?” என்றதற்கு அவளோ பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு “ஆமாம்” என்று தலையசைத்தாள்.
உடனே அமிர்தா “சரி உனக்கும் தரேன் ஆனால் ஒரு விஷயம் இப்போ நான் எப்படி ஹெல்ப் செய்தேன் அதே மாதிரி நான் உதவின்னு கேட்கிறப்போ மறுக்காமல் செய்யனும்” என்றாள்.இவளும் சரியென்று ஒத்துக் கொண்டு வாங்கி சாப்பிட்டாள்.
இவளும் பின்னால் வரப் போகும் ஆபத்து தெரியாமல் ஒரு சிக்கன் துண்டிற்காக மாட்டிக் கொண்ட தன் நிலைமையை நினைத்து வருந்தியபடியே தான் செல்ல வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தாள் ஆரதி.