• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் -10

MK1

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 22, 2023
85
67
18
Thanavur


உணர்வாய் உயிராய் நீயே எந்நாளும் அத்தியாயம்-10


ஆரதி மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாகவே மருத்துவமனையில் உள்ள மருத்துவர் ஒருவர் ஒரு கோப்புகளை எடுத்து அவளிடம் கொடுத்தவர் “ஆரதி நீ போற வழியில இதை ஹெட் டாக்டர்கிட்ட கொடுத்துடுங்க முக்கியமான பைல்” என்றார்.


அவளும் “ஓகே சார் நான் கொண்டு போய் கொடுத்து விடுகிறேன்” என்று வாங்கிக் கொண்டவள் அதையும் தன்னோடு எடுத்துச் சென்றாள்.


விதுனிடம் “இந்த பைலைல நான் ஹெட் டாக்டர்கிட்ட கொடுக்கனும் போற வழியில் நான் சொல்ற இடத்துல நிறுத்துங்க” என்றாள்.


அவனும் சரியென்று தலையசைத்து விட்டு மகிழுந்தை ஓட்டினான்.ஆரதியோ அவனிடம் பேசுவதை தவிர்க்க கைப்பேசியை எடுத்து அதில் மூழ்கிக் கொண்டிருந்தாள்.


இதைப் பார்த்து கடுப்பான விதுன் ரேடியோவை போட்டு விட்டான்.அதில் வந்த பாடலை முணுமுணுத்தப்படி இந்த வார்த்தை வரவும் சத்தமாக பாடினான்.


“நேற்று போல் இன்று இல்லை

இன்று போல் நாளை இல்லை

அன்பிலே வாழும் நெஞ்சில்

ஹஆஆஆ….” என்று

இழுத்தான்.


அவன் அப்படி
பாடியதும் அவனைப் பார்த்து முறைத்தாள்.அவனோ அதை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் அடுத்த வரியைப் பாடினான்.


அன்பிலே வாழும் நெஞ்சில்

ஆயிரம் பாடலே

ஒன்றுதான் எண்ணம் என்றால்

உறவு தான் ராகமே.

எண்ணம் யாவும்

சொல்ல வா? என்று அவளைப் பார்க்க அவளும் பார்த்தாள்.அப்பொழுது தன் புருவத்தை உயர்த்தி சரியா? என்பது போல் கேட்டான்.


அதை கவனிக்காதது போல் விதுனிடம் “விதுன் இங்கே நிறுத்துங்க நான் போய் இந்த பைலை கொடுத்துட்டு வந்துடுறேன்” என்று கையில் இருந்த கைப்பேசியை அங்கே வைத்து விட்டு கோப்புகளை மட்டும் எடுத்துக் கொண்டவள் கதவை திறந்து வெளியேறினாள்.


இது தான் சரியான நேரம் என்று காத்திருந்தவன் ஆரதியின் கைப்பேசி அணைவதற்குள் வேகமாக எடுத்தவன் அமிர்தாவின் எண்ணிற்கு “அமிர்தா நான் இங்கே வெளியே வந்திருக்கிறேன் நீ உடனே கிளம்பி அங்கே இருக்கிற காபி ஷாப்க்கு வந்திடு நான் அங்கேயே வந்திடுறேன் கொஞ்சம் ரிலாக்ஸா பேசலாம் திரும்ப போன் பண்ணாதே! என்னால பேச முடியாது” என்று அவள் இருக்கும் இடத்திற்கான விலாசத்தை அனுப்பி விட்டவன் அமிர்தாவிற்கு சென்றதும் அதை நீக்கி இருந்தான்.


அவளின் கைப்பேசி எண்ணை தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக மாற்றி வைத்தான்.இதை எல்லாம் முடிக்கவும் ஆரதி வரவும் சரியாக இருந்தது.


மனதினுள் ‘அவனிடம் கொடுத்த கோப்புகளைத் தான் அந்த மருத்துவரிடம் தனக்கு முக்கியமான வேலை இருக்கிறதென்றும் அதனால் ஆரதியிடம் கொடுத்து விடுமாறு அந்த மருத்துவரிடம் சொல்லி விட்டதை எண்ணி சிரித்தான்.


அமிர்தாவோ ஆரதி சொன்ன இடத்திற்கு செல்வதற்காக தயாராகி சென்றுக் கொண்டிருந்தாள்.இங்கே கோப்புகளை கொடுத்தவள் திரும்ப மகிழுந்தில் ஏறி அவனுடன் பயணத்தை தொடர்ந்தாள்.


இருபது நிமிட பயணத்தில் ஆரதி வீட்டிற்கு வந்தனர்.வீட்டிற்கு வந்தவர்கள் அமிர்தாவை தேடினார்கள்.அங்கே அவள் இல்லை.விதுனை இருக்கையில் உட்கார வைத்தாள்.


உடனே தன் கைப்பேசி எடுத்து அமிர்தாவின் எண்ணிற்கு அழைத்தாள்.இவள் எண்ணிலோ சரியான இணைப்பை காட்டாததால் அவள் வரும் வரை காத்திருக்கலாம் என்று முடிவெடுத்தவள் விதுனிடம்


“அமிர்தா வெளியே போய் இருக்கான்னு நினைக்கிறேன் போன் போட்டா லைன் போகலை கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுறீங்களா.?


அவனோ தலையசைக்க இவள் அங்கிருந்து செல்ல எத்தனிக்கும் போது அவளது கரங்களைப் பிடித்தான்.இவளோ நின்று அவனைப் பார்க்க விதுன் எழுந்து நின்று இரு கரங்களையும் அழுந்த பிடித்தவன் நேருக்கு நேராக அவளை பார்த்தவன் “ஆரதி இப்பொழுதாவது நாம பேசலாமா?”


அவளோ “நாம ரெண்டுபேரும் பேசுவதற்கு இனிமேல் என்ன இருக்கு?”


பிடித்திருந்த இருகரங்களையும் பிடித்து தன் பக்கமாக இழுத்தவன் “என்ன கொஞ்சம் விட்டால் ரொம்ப ஓவரா பண்றே?” என்றதும் அவனது செயலில் அதிர்ந்தவள் “ப்ச் விடுங்க விதுன் இது சரியில்லை”


அவனோ இன்னும் நெருக்கமாக பிடித்தவன் “என்ன சரியில்லை உனக்காக இத்தனை வருஷம் கழிச்சு தேடி வந்து இருக்கேன் என்னை கண்டுக்கவே மாட்டேங்கிற”


அடுத்து அவள் பேச வருவதற்குள் தன் ஆட்காட்டி விரலை நீட்டி உதட்டின் மேல் வைத்தவன் “நீ எதுவும் பேசக் கூடாது நான் பேசுறதைக் கேளு ஆரதி.போதும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் இத்தனை வருடங்கள் நான் காத்திருந்தது போதும் வெளிநாட்டில இருந்து வந்த உடனே உன்னை பார்க்க வரனும்னு நினைச்சேன் ஆனால் எனக்கான அடையாளத்தை உருவாக்கிட்டு பார்க்க வந்தேன் அதோடு நீ எப்படி இருக்கேன்னு அமிர்தா மூலமாக தெரியலாம் தான் வந்தேன் ஆரதி.எல்லாம் உனக்காகத் தான் யோசிச்சேன் காரணமே இல்லாமல் பிடித்தது உன்னை மட்டும் தான் ஆரதி.


ஆயிரம் முறை சோதித்து விட்டேன் தூங்கி விழிக்கிற முதல் கணம் யாரைத் தேடி மனம் தேம்புகிறதோ கண் திறக்காமல் யாரை அணைக்க கைகள் காற்றில் அலைகின்றனவோ அவள் தான் எனக்கு வேண்டும் விழித்தெழுவதற்கு வேறு காரணங்களே வேண்டாம் ஆரதி.அப்படி என் வாழ்நாள் முழுக்க உன்னை மட்டும் முழுதாய் காதலிக்க என் அன்பை ஏற்றுக் கொள்வாயா?


நீ ஒன்றுமே செய்ய வேண்டாம் சம்மதம் சொல் உனக்காக நானே காதலித்துக் கொள்கிறேன்” என்று கேட்டான்.


விழிகள் முழுவதும் காதலை தேக்கி வைத்தப்படியே அவன் கேட்க… இமைகள் முழுவதும் கண்ணீரை தேக்கி வைத்தப்படி அது வடிந்துக் கொண்டிருக்க உதடுகளோ புன்னகையைச் சிந்திக் கொண்டிருந்தது.


அவளைப் பார்த்தபடியே “ஹேய் நான் எவ்வளவு நேசமாக பேசிட்டு இருக்கேன் நீ என்னன்னா அழுதுட்டே சிரிச்சுட்டு இருக்கே இப்பவும் இந்த விஷயத்தை நீ விளையாட்டாக நினைச்சுட்டு இருக்கியா?” அவன் ஆவலாகக் கேட்டான்.


“இல்லை” என்று மெதுவாக தலையசைத்தவள் “ஏன் காத்திருந்த காதல் ஆண்களுக்கு மட்டும் தானா விதுன்?”

அவனோ புரியாமல் பார்த்தான்.அவளோ “உங்களை எத்தனை தடவை பார்க்கனும்னு நான் ஆசைப்பட்டு இருந்து அது நடக்காமல் போயிருக்கு? எப்படியாவது சந்திக்கனும் அதுக்கான முயற்சி என்னால முடிந்தவரை செய்தேன் தெரியுமா? அமிர்தாவோடு அவங்க வீட்டுக்கு வந்து உங்களைப் பற்றி விசாரிச்சு அதுக்கு எனக்கு பதிலே கிடைக்கலை இதுவரைக்கும்” என்ற பொழுது விழிகள் தன் கண்ணீரை இரைந்துக் கொண்டு தான் இருந்தது.



அவள் பேசப் பேச சொல்லாத வார்த்தைகளுக்கும் அர்த்தம் தெரிந்துக் கொள்ள ஆரம்பித்து இருந்தான் அவன்.

நீ என் இதயத்தில் இருப்பது

அறியாது என் கண்கள் உன்

வரவை எதிர்நோக்கி

காத்துக்கொண்டிருந்த

அன்பை நான் மட்டுமே

அறிவேன் விதுன்.

அந்த வயதில் அது நேசத்திற்கானது என்று எனக்கு தெரியாது தான் ஆனால் அந்த வயதில் காட்டிய அன்பும், அக்கறையும் எப்பவும் நீங்க தருவீங்களா? அதை உங்களை சந்தித்து பேசினால் தான் மாறா நெஞ்சத்துடன் நீங்க இருக்கிறீங்களான்னு என்னால யோசிக்க முடியும்.
நீங்க எவ்வளவு தொலைவில் இருந்தீங்கன்னு எனக்கு தெரியாது ஆனால் உன் நினைவுகள் என்னை தினம் தினம் தொல்லைச் செய்து கொண்டிருந்தது.தேடல்கள் காதலுக்கானது விதுன் உங்களை தேடித் தொலைந்து போனது நானும் தான் இத்தனை வருட ஒரு சின்ன எதிர்பார்த்த காத்திருப்பு”
என்றாள் அதே காதலுடன்…


அவள் பேசிய வார்த்தைகளில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னையும் இழந்தவனின் நிலைமையோ முகம் முழுக்க புன்னகையும் விழிகள் முழுவதும் காதலையும் நெஞ்சம் முழுவதும் நிறைந்த நிம்மதியாய் நிற்பவனின் உதடுகளோ தன்னவளை கொஞ்சம் அணைத்துக் கொள்ள துடித்தது.


பதிலே சொல்லாமல் தன் இருகரங்களால் ஆரதியின் முகனையை ஏந்தியவன் முதலில் கண்ணீரைச் சிந்திக் கொண்டிருந்த இரு விழிகளுக்கு தன் அன்பு முத்திரையைப் பதித்தான்.


இந்த எதிர்பாரா ஸ்பரிசத்தில் விழிகளை மூடினாள் ஆரதி.இதற்கு மேலும் காத்திருப்பதை விரும்பாத விதுன் அவளின் துடித்திடும் அதரங்களை தன் உதடுகளால் நிரப்பினான்.


சின்னச் சீண்டல்களில் தங்களின் பெருங்காதலை தேடிக் கொண்டிருந்தனர் இருவரும்.


அந்த நேரம் கதவை திறந்து உள்ளே வந்தாள் அமிர்தா.அங்கே இருவரும் நிற்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவள் “ஆஆ…. இங்கே என்ன நடக்குது?பார்த்துட்டேன் ஐயோ நான் பார்த்துட்டேன்” என்று சத்தமாக சொல்லி தன் கண்களை தன் கையால் மூடி திரும்பிக் கொண்டாள்.



திடீரென்று வந்த சத்தத்தில் பதறியபடி இருவரும் விலகி திருதிருவென விழித்தப்படி நின்றனர்.விதுன் “நீ ஏன் இப்போ வந்தே? நான் தான் உன்னை காபி ஷாப்க்கு போக சொல்லி இருந்தேனே” என்று அவசரத்தில் வார்த்தையை விட்டான்.


அவன் அப்படி சொன்னதும் இருவரும் ஒரே நேரத்தில் விதுனைப் பார்த்தனர்.அவனோ தான் சொன்னது நினைவுக்கு வர “அ..து” என்று திணற…


அமிர்தா ஆரதியைப் பார்த்து சிரித்துக் கொண்டே “என்னோட லவ்வை பிக்அப் பண்ண வழி கேட்கலாம்னு பார்த்தால் இங்கே உன்னோட லவ் வேற லெவல்ல போயிட்டு இருக்கு போல” என்றதும் இப்பொழுது ஆரதி அமிர்தாவைப் பார்த்து முறைத்தவள் “இது எப்போ எனக்கு தெரியாமா?” என்றதும்


‘'உன்னுடைய காதல் எப்படியோ அந்த மாதிரி தான் ஆனால் நான் இன்னும் ஸ்டார்ட் பண்ணவே இல்லை பட் மேடம் பில் ஸ்டாப் வைக்கிற நிலைமையில் இருக்கிறீங்க போல” என்று சொல்லி சிரித்தாள்.


ஆரதிக்கு முகத்தை எங்கேயாவது போய் ஒளித்து வைத்துக் கொள்ளலாமா? என்ற நிலைமையில் இருக்க அமிர்தா விடாமல் விதுனிடம் “சார் என்னவோ சொன்னீங்களே காபி ஷாப்க்கு போக சொன்னீங்கன்னா? அப்போ என் ப்ரெண்ட்டை ப்ளான் போட்டு கவுத்து இருக்கீங்க அதானே?நல்ல வேளை போனை மறந்து வைச்சுட்டேன்னு திரும்ப வந்தேன் இல்லைன்னா நினைக்கவே பயங்கரமா இருக்கே”


“ஹேய் அமிர்தா அப்படி எல்லாம் இல்லை அவளும் தான் என்னை லவ் பண்றேன்னு சொன்னா?” என்றதும்


“யாரு இந்த பச்சமண்ணு அப்படி சொல்லிச்சா? இருக்காதே! அவளே ஒன்னுமே தெரியாதப் பிள்ளை நீங்க தான் அவளைக் கெடுக்கிறீங்க” என்று அமிர்தா ஆரதியின் பக்கம் நின்றாள்.


ஆரதியோ மெதுவாக “ஹேய் வாயை மூடுடி ஏன் இப்படி என்னை அசிங்கப்படுத்துறே?” என்று சொன்னாள்.


அமிர்தாவோ “இவங்க உன்கிட்ட சொல்லாமல் போன மாதிரி திரும்பவும் அதே போல் திடீர்னு காணாமல் போயிட்டா? நீ தான் கஷ்டப்படுவே ஆரதி.நான் வேற ஒரு நல்ல பாய்ப்ரெண்ட் தேடித் தரேன் சரியா?” என்று அமிர்தா இந்த பொம்மை வேண்டாம் வேற பொம்மை வாங்கித் தரேன் என்பது போல் சமரசம் பேசிக் கொண்டிருந்தாள்.


விதுனோ ‘அடேய் லவ் ஓகேயான ஒரே நாள்ல இந்த அமிர்தா நமக்கு பாடை கட்டிடுவா போல’ என்று நினைத்தவன் ஆரதியின் கரங்களை பிடித்து இழுத்தான்.


இதை சற்றும் எதிர்பார்க்காத அமிர்தா இன்னொரு பக்கம் பிடித்து இழுத்தாள்.இரண்டு பேருக்கும் நடுவில் ஆரதி மாட்டிக் கொண்டு நின்றாள்.


விதுன் “விடு அமிர்தா”


அமிர்தா “நீங்க விடுங்க” என்று சண்டைப் போட்டுக் கொண்டிருந்தனர்.பொறுக்க முடியாத ஆரதி “அட ரெண்டுபேரும் என்னை விடுங்க நான் போறேன்” என்று கையை உதறி விட்டாள்.


கோபமாக கதவின் பக்கம் செல்ல இருவரும் அவள் பக்கம் வந்தனர்.அமிர்தா “ஹேய் சாரிடி நான் வேணும்னு பண்ணலை எல்லாம் இந்த விதுனால வந்துச்சு”


விதுன் “ஆரதி எல்லாம் இந்த அமிர்தாவால வந்துச்சு அவ என் மேல சந்தேகப்படுற” என்று அவனும் இவளும் மாறி மாறி குற்றம் சுமத்தினார்கள்.


ஆரதியோ “போதும் ரெண்டுபேரும் நிறுத்துங்க இல்லைன்னா நான் யார்க்கிட்டயும் சொல்லாமல் எங்கேயாவது போய்டுவேன்” என்றாள்.


இருவரும் அமைதியாக நின்றனர்.அமிர்தா பக்கம் திரும்பியவள் “அமிர்தா நான் ஏமாந்து போற அளவிற்கு எல்லாம் போக மாட்டேன் என் நம்பிக்கை எப்பவும் வீண் போகாதுன்னு தெரியும்ல” என்றதற்கு “ஆமாம்” என்று தலையசைத்தாள்.


விதுனைப் பார்த்தவள் “சார் என்ன திருட்டு வேலை பார்த்தீங்கன்னு சொல்லுறீங்களா?”


அவனோ அவளின் கரங்களை பிடித்தபடி கொஞ்சியபடி நடந்த விவரங்களைச் சொன்னவன் “ஆரதி இது எல்லாம் உனக்காகத் தான் செய்தேன், அந்த வாசன் உன் மேல அதிகமாக அக்கறை எடுத்துக்கிறான் எனக்கு பயமா இருந்துச்சு அதான் இன்னைக்கு என் லவ்வை சொல்லியே ஆகனும்னு இப்படி செய்தேன் சாரி ஐ லவ் யூ” என்று அப்பொழுதும் தன் காதலை நிருப்பித்துக் கொண்டிருந்தான்.


இதைக் கேட்ட அமிர்தா அதிர்ச்சியாகி “என்ன? வாசன் ஆரதியை லவ் பண்ணுறானா? அப்போ என் லவ் அவ்வளவு தானா?” என்று கவலைப்பட்டாள்.


இதைக் கேட்ட ஆரதியும் விதுனும் ஒன்றாக அதிர்ச்சியில் இது எப்போ? என்பது போல் பார்த்தனர்.


அமிர்தா தலைக்குனிந்து நின்றாள்.ஆரதியோ மனதினுள் ‘ஷ்ப்பா…எப்படியோ இவங்க ரெண்டு பேரையும் ஒத்து வர வைச்சாச்சு இப்போ புதுசா ஒன்னா சமாளிப்போம் எல்லாத்தையும் பார்க்கலாம் போவோம் எ..ன்னப் பண்ணுவாங்க’ என்று தனக்குள்ளே நினைத்தவள்


அமிர்தா “அதெல்லாம் ஒன்னுமில்லை நாம வாசன்கிட்ட பேசுவோம் எப்படி விதுனைச் சமாளித்தேன் அதே போல”என்றதும் இருவரும் ஒரே நேரத்தில் கேவலமாக பார்த்தபடி அமிர்தா “யாரு நீ சமாளிச்சே? எப்படி கால்ல போட்ட செருப்பை கழற்றிட்டு ஓடினியே அந்த மாதிரியா?” என்றதும் விதுன் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தான்.


ஆரதி “இங்கே பாரு இப்படி எல்லாம் என்னை அசிங்கப்படுத்தக் கூடாது நம்பிக்கை தான் எல்லாம் புரியுதா? என்ன விதுன் நான் சொல்றது சரிதானே” என்றதும்

விதுன் வேகமாக “ஆமாம் என் செல்லக்குட்டி சொன்னால் சரியா இருக்கும்” என்று முழுதாகவே அவளுக்கு ஆமாம் சாமி போடும் நிலைமையில் இருந்தான்.


இருவரையும் மாறி மாறிப் பார்த்தவள் ‘இவங்க கிட்டே மாட்டிக்கிட்டு என் காதல் என்ன சின்னாபின்னாகப் போகுதோ தெரியலையே?’ என்று நினைத்தபடியே பார்த்தாள்.


இருவரும் பெருவிரலைக் காட்டி வெற்றி என்பது போல் குறியீட்டுக் காட்டினார்கள். அமிர்தாவிற்கும் வேறு வழியில்லை என்பது போல் தலையசைத்தாள்.


ஒரு பத்து நாட்கள் கடந்த நிலையில் ஆரதி அமிர்தாவிடம் “அமிர்தா உன்கிட்ட முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லனும்”


அமிர்தாவோ சலிப்பாக “என்ன? விதுனோட வெளியே போறியா? அம்மாக்கு தெரியாம பார்த்துக்கனும் அதானே” என்றாள்.


“இல்லை அதை விட முக்கியமான விஷயம்”


அவளோ அதற்கும் “என்ன அவன் வீட்டுக்கு போறியா? அவன் சமைச்சு தருவான் நல்லவே இல்லாத அந்த சாப்பாட்டை நீ சாப்பிட்டதும் இல்லாமல் என்னையும் சாப்பிடச் சொல்லி கெஞ்சுவே அதானே” என்று கைப்பேசியைப் பார்த்தப்படிச் சொன்னாள்.


ஆரதியோ கடுப்பாக “அதெல்லாம் கிடையாது இது உன்னைப் பற்றிய விஷயம் நீயும் வாசனும் ஒன்னா சந்திக்கப் போறீங்க அதான் முக்கியமான விஷயம்” என்றாள்.


அதைக்கேட்டு அதிர்ச்சியான அமிர்தா “என்னச் சொல்ற? எப்படி?” என்று அடுத்தடுத்த கேள்விகளை வேகமாகக் கேட்டாள்.


ஆரதியோ சிரித்துக் கொண்டே “அதெல்லாம் எப்படின்னு கேட்கக் கூடாது நீயும் வாசனும் அப்புறம் நானும் விதுனும் ஒன்றாக வெளியே போறோம் அப்போத் தான் வாசனுக்கு டவுட் வராது புரியுதா? இப்படியே யோசிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது அமிர்தா ரெண்டுபேரும் அடிக்கடி சந்தித்து கொண்டால் தான் புரிஞ்சுக்க முடியும் அப்புறம் காதலிக்க முடியும் புரியுதா வர்ற சண்டே ரெடியா இரு” என்று தன் தோழிக்கு மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னாள் ஆரதி.


இரண்டு நாட்கள் கழித்து வருகின்ற விடுமுறை தினத்திற்கு வாசன் சந்திக்கப் போகும் நிகழ்வினை மிகுந்த ஆவலோடு அமிர்தா காத்துக் கொண்டிருந்தாள்.


ஞாயிற்றுக்கிழமை அன்று நால்வருமாக ஒரே மகிழுந்தில் கிழக்கு கடற்கரை சாலைக்கு சென்றனர்.அங்கே ஏற்கனவே அமிர்தாவும் வாசனும் அறிமுகம் இருந்ததால் நன்றாக பேசிக் கொண்டனர்.அதோடு வாசனுக்கு அமிர்தாவோடு ஒரு வணிகத்தைப் பற்றியும் பேச வேண்டி இருந்தது.



எல்லோரும் ஒன்றாக இருந்தால் சரிவராது என்று புரிந்த ஆரதி விதுனை தன்னோடு அழைத்து தனியாக கடற்கரையிலேயே உட்கார்ந்துக் கொண்டாள்.



இங்கே வாசனும் அமிர்தாவும் ஒன்றாக பேசியபடியே நடந்தனர்.அதைப் பார்த்த விதுன் ஆரதியிடம் “எனக்கு ஒன்னுமே புரியலை எப்படி வாசனை இங்கே வர ஒத்துக்க வைச்சே?”


அவளோ சிரித்துக் கொண்டு “உண்மையைச் சொன்னேன்” என்றாள்.


விதுனோ புரியாமல் “என்ன உண்மை?”


“அதுவா வாசன் டாக்டர் என்கிட்ட வந்து உனக்கும் விதுனுக்கும் என்ன உறவுன்னு கேட்டாங்க நான் உண்மையைச் சொன்னேன்”


“சரி அதுக்கு அவன் என்ன சொன்னான்?”


“எனக்கும் உங்களை பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க ஆனால் எனக்கு உங்களைத் தான் பிடிச்சு இருக்குன்னு சொன்னேன்”
என்று அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.


அவனோ “ம்ம்…” என்றதும்


“அதனால நீங்க என்னைப் பற்றி நினைக்காமல் என் ப்ரெண்ட்டைப் பத்தி யோசிங்கன்னு சொன்னேன்” என்றதும் விதுன் அதிர்ச்சியாக

“என்ன சொன்னே?”


“நம்ம லவ்வை கன்பார்ம் பண்ண மறுநாளே பேசிட்டேன் விதுன் நீங்க விரும்புறவங்களை விட உங்களை விரும்புற பொண்ணை லவ் பண்ணுங்க என் ப்ரெண்ட் உங்களை விரும்புறா அவகிட்ட பேசுங்க உங்க எண்ணம் மாறலாம்னு சொன்னேன் அதைக் கேட்டு வாசன் ஷாக் ஆனாங்க.ஆனால் நான் விடலையே ஒருநாள் விட்டு ஒருநாள் மெஸேஜ் போட்டு கேட்டுட்டே இருந்தேன்” என்றாள்.


விதுனோ சிரித்துக் கொண்டே வாயில் கைவைத்தவன் “அடிப்பாவி இந்தளவுக்கு இறங்கிட்டியா? இந்த விஷயம் அமிர்தாவுக்கு தெரியுமா?”


ஆரதியோ அதிர்ச்சியாகி “ஹய்யோ அவளுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் மானம் போச்சு மரியாதை போச்சுன்னு எனக்கு சாப்பாடுல பேதி மருந்து கலக்கிடுவா அதனாலத் தான் வாசன்கிட்டே கண்டிஷனா சொல்லிட்டேன் இது அமிர்தாக்கு தெரியக்கூடாதுன்னு அதோட வாசனும் ஒத்துக் கொள்ள நம்ம எல்லோரும் வந்தோம் அதுவும் அவருக்கு ஏதோ ஹாஸ்பிடல் கட்டுற டீலிங் பேசனும்னு சொன்னாங்க எல்லாத்தையும் இப்படி மாத்திட்டேன் இப்போ அமிர்தா முகத்தை பாருங்க எவ்வளவு சந்தோஷமா இருக்கா?” என்று அவளைப் பார்த்த பொழுது தூரத்தில் இருவரும் பேசி சிரித்தபடியே நடந்தனர்.


விதுன் “இப்போ இல்லைன்னாலும் அப்புறமா அமிர்தாக்கு உண்மை தெரிஞ்சாலோ இல்லை வாசன்” என்று சொல்லும் போது அவன் பேசுவதை தடுப்பதற்காக உதடுகளின் மேல் கைவைத்தவள் “அப்படி நடக்காது மட்டும் சொல்லாதீங்க விதுன் என் ப்ரெண்ட்டுக்காக நான் வாசன் டாக்டர் கால்ல கூட விழுவேன் இருந்தாலும் என்னையே அவருக்கு பிடிக்கிற போது என்னை மாதிரியே இருக்கிற என் அமிர்தாவை கட்டாயம் பிடிக்கும்.அதோடு அவளுக்கு உண்மை தெரியும் போது பார்த்துக்கலாம் என்ன பாத்ரூமே கதின்னு இருக்கனும் எவ்வளவோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா? எப்படியோ அவ சந்தோஷமா இருந்தா சரிதான்” என்றாள் ஆரதி.



அவள் சொன்னதை எல்லாம் கேட்டவன் புன்னகைத்துக் கொண்டே பெண்ணவளின் முகத்தை கையில் ஏந்தியவன் “ஆரதி நீ இன்னும் மாறவே இல்லை தெரியுமா? உன்னால மட்டும் எப்படி இருக்க முடியுது”


அவளோ புன்னகைத்தபடியே “உங்களால் தான் விதுன் நீங்க இல்லைன்னா என்னோட சுயத்தை இழந்திடுவேனோன்னு பயந்துட்டே இருந்தேன்” என்றாள்.


புன்னகையை மட்டும் பதிலாக தந்தவன் காதலும் நேசமும் கூட அவள் நெற்றியில் அன்பாக முத்தமிட்டான்.


அவளின் ஆசைகளுக்கு மதிப்பு கொடுத்து அவள் அவளாகவே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன் தான் அவளுக்கானவன்.


தூரத்தில் போய் திரும்பிப் பார்த்த அமிர்தாவும் வாசனும் விதுன் ஆரதியின் தலையில் முத்தமிட்டதைப் பார்த்து அவர்களுக்குள்ளான காதலைக் கண்டு நிம்மதியாய் புன்னகைத்துக் கொண்டனர்.


முற்றும்.
 

MK1

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 22, 2023
85
67
18
Thanavur
உங்க கமெண்ட்டுக்காக வெயிட்டிங் மனமார்ந்த நன்றிகள் 😍😍😍💛💛💛💛💛💛
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
🤣🤣🤣🤣 ஒரு லவ்வ சேர்த்து வைக்க ஆரதி எவ்வளவு இறங்கி வேலை பார்த்திருக்கா 🤣🤣🤣 நட்புடா ஆரதி ❤️ அமிர்தா

விதுனை போல ஆரதியும் அவனுக்காகவே காத்திருந்திருக்கா 😍😍

அமிர்தாவோட காதலும் அவ ஆசைப்படி நிறைவேறிடுச்சு 😍😍😍
 
  • Love
Reactions: MK1

MK1

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 22, 2023
85
67
18
Thanavur
ஆமாம் மனமார்ந்த நன்றிகள் 😍😍😍😍😍💛💛💛💛💙💙💛