• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 14

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 14

ஆனந்த்தை தேடி ராஜ் அவன் அறைக்கு வந்திருந்தான். ஆனந்த் தீவிர யோசனையில் இருக்க அபி பவானிக்கு உதவியாய் கிட்சனில் இருந்தார்.

“என்னடா ஏதோ யோசிச்சுட்டு இருக்குற போல”

“வா ராஜ்! ஒன்னும் இல்ல.. ஸ்ரீகிட்ட பேசினேன்.. அதான் யோசிச்சுட்டு இருந்தேன்”

“என்னவாம்?”

“அவங்க அம்மா தான்.. வேற என்ன.. எங்க அம்மாவை சாதாரணமா நினைக்க வேண்டாம் அப்படி இப்படின்னு சொல்றா.. அபியும் அவங்க அத்தைக்கு ரொம்ப பயப்படறா.. நாம போற ரூட் சரி தானானு டவுட் வருது டா..”

“என்ன டா நீயே இப்படி சொல்ற.. உன்னை நம்பி தானே நான் இருக்கேன்?”

“ச்ச! ச்ச! நான் கொஞ்சம் ஸ்லிப் ஆயிட்டேன் அவ்வளவு தான்.. மத்தபடி நாம நினைச்சது நடந்தால் தான் எல்லாத்துக்கும் நல்லது”

“அடுத்த பிளான் என்ன டா.. இன்னும் ரெண்டு நாள்ல நிச்சயதார்த்தம்.. அடுத்த நாள் கல்யாணம்.. நாள் நெருங்க நெருங்க மனசு ரொம்ப அடிச்சுக்குது”

முகத்தில் வருத்தம் அப்பட்டமாய் தெரிய கல்யாண மாப்பிள்ளைக்கான எந்த பிரதிபலிப்பும் இன்றி சோர்ந்து போய் ஆனந்த் முன் நின்றான் ராஜ்.

“இப்ப அடிச்சுக்குற மனசு.. முதல் நாள் அம்மாகிட்ட சம்மதம் சொல்லும்போது அடிச்சுக்கலையா?” ஆனந்த் விளையாட்டாய் சொல்ல

“டேய் பழி வாங்காத டா.. எனக்கும் மதுக்கும் நல்லபடியா கல்யாணம் நடந்தா உனக்கு நான் ஹனிமூன் என்னோட செலவுல சுவிஸ்க்கு போட்டு தரேன். தயவு செஞ்சு ஏதாவது பண்ணு டா..” என்றான் கெஞ்சலாய் ராஜ்.

“என்ன டா லஞ்சம் கொடுக்குற அளவுக்கு வந்துட்ட..” ஆனந்த் கேட்க,

“உனக்கென்ன.. ஆபீஸ், வீடு, அபி, ரொமான்ஸ்னு சுத்துற.. நான் ரூமை விட்டு வெளில வந்தாலே இந்த ஸ்ரீயோட அம்மா முகத்துல தான் முழிக்க வேண்டியதா இருக்கு.. டெய்லி எதாவது காரணம் சொல்லி வீட்டுக்கு வந்துடுறாங்க டா.. அதுவே கடுப்பா இருக்கு”

“சரி டா.. கல்யாணம் வரை எல்லாம் இழுக்க வேண்டாம்.. நிச்சயத்துக்கு நிறைய பேரை எல்லாம் இன்வைட் பண்ணல.. சோ நாம நிச்சயத்துல தான் பேசணும்.. மே பீ அன்னைக்கு என்ன வேணா நடக்கலாம். எல்லாத்துக்கும் நாம தயாரா இருக்கணும்” யோசித்து தெளிவாய் திட்டமிட்டு இது இது இப்படித் தான் என்று இல்லாமல் அடுத்த சீன் இது தான் என்பதாய் இருந்தது ஆனந்த் கூறியது.

“ம்ம் டா”

“அப்புறம் இன்னொரு விஷயம்!” ஆனந்த் சொல்ல,

“என்ன டா” என்றான் ராஜ்.

“நான் அன்னைக்கு சொன்ன மாதிரி ஸ்ரீ அம்மாவை தவிர யாரையும் ஏமாத்துறதா இல்ல.. சோ!”

“சோ?”

“சோ! நான் அம்மாகிட்ட நிச்சயத்துக்கு முன்னாடி பேச போறேன்” என்கின்ற குண்டை போட்டான்.

“எது..பேச போறியா? என்னனு?” பதறினான் ராஜ்.

“ஐ டோன்ட் க்நொவ்! பட் அம்மா என்ன டா தப்பு பண்ணினாங்க? அவங்களை ஏன் நாம ஏமாத்தணும்?”

“டேய் கடைசி நேரத்துல ட்விஸ்ட்னு சொல்லி என் வாழ்க்கையோட விளையாடிடாத டா”

“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்.. நீ மதுகிட்ட பேசினியா? அவங்க வீட்டு நிலவரம் என்ன?”

“வேற என்ன? கலவரம் தான்.. மனுஷன் இன்னும் அதே தான் சொல்லறாரு.. நீ எனக்கு பொண்ணாவே எத்தனை வருஷம் வேணா இரு.. ஆனா அவங்க வீட்ல இருந்து பொண்ணு கேட்டு வந்தா தான் கல்யாணம்ன்றாரு”

“இதுவும் நல்லது தானே டா?”

“ன்னா நல்லது உனக்கு? உனக்கு புடிச்ச பொண்ணோட கல்யாணம் ஆனதும் உனக்கு எல்லாமே ஈஸியா தெரியுது இல்லை..?”

“ம்ம் கரெக்ட் டா! புடிச்ச பொண்ணோட கல்யாணம் ஆனதால தான் ஈஸியா யோசிக்க முடியுது.. எப்படி?”

“எப்பா சாமி! உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? சொல்லி தொலை..ஆனா எனக்கு மதுவோட இப்பவே கல்யாணம் நடக்கணும்”

“அலையாதே டா.. நைஸ் பிளான் ஒன்னு இருக்கு.. அதுக்கு ஒரு ஆளை நாம கரெக்ட் பண்ணனும். பால்லொவ் மீ” என்ற ஆனந்த் முன்னே செல்ல பின்னே புலம்பலோடு சென்றான் ராஜ்.

“தாத்தா! எங்க கூட கொஞ்சம் வாங்களேன்” என்ற ஆனந்த் நடராஜனையும் அழைத்துக் கொண்டு வந்து பவானியின் முன் நின்றார்.

“என்ன டா? ஏதோ பிளான் பண்ணி மாமாவையும் கோர்த்து விட்டு குரங்கு மாதிரி மூணு பேரும் என் முன்னாடி வந்து நிக்குறீங்க.. நீங்க நிக்கிறதுலயே ஏதோ வில்லங்கம்னு தெரியுது.. அதுனால தயவு செஞ்சு ஓடி போய்டுங்க.. எந்த உதவியும் உங்களுக்கு நான் பண்றதா இல்ல” என்றார் பவானி கறாராய்.

“ம்மா! கேப்புல தாத்தாவையும் குரங்குன்னு சொல்லிட்டிங்க தானே?” ராஜ் கிண்டல் பேச,

“ஏன் டா இப்படி பேசுறதை கேட்கவா கூட்டிட்டு வந்திங்க?” என்றார் தாத்தா. இவர்கள் பேசிக் கொண்டிருக்க, மாடியில் இருந்து அபியும், ஆஃபிஸில் இருந்து குமரனும் வந்தனர்.

“அத்தை! உங்க மகன் வாழ்க்கை இப்ப போல எப்பவும் நல்லா இருக்கணும்னு உங்களுக்கு ஆசை இருக்குல்ல?” ஆனந்த் கேட்க,

“இதென்ன டா கேள்வி? பவானி பத்தி உனக்கு தெரியாதா?” என்றார் குமரன்.

“அதில்லை மாமா! நாங்க பண்றது என்னனு உங்களுக்கு எல்லாம் தெரியும் தானே? நீங்களும் கொஞ்சம் சப்போர்ட் பண்ணினா தானே எங்களுக்கும் எல்லாம் நல்லபடியா நாங்க நினச்சா மாதிரி நடக்கும்?” ஆனந்த் சொல்ல,

உங்களுக்கு சப்போர்ட் பண்ண போய் தான் அண்ணிகிட்ட இன்னும் உங்களை காட்டி கொடுக்காமல் விட்ருக்கேன்.. இதுக்கு மேல உங்களுக்கு என்ன நல்லது பண்ணனும் நான்? இதுக்கு மேல நேரடியா எல்லாம் என்னால எந்த ஹெல்ப்பும் பண்ண முடியாது” என்றார் மீண்டும் முடிவாய்.

“அத்தை இப்படி பேசினா எப்படி? ராஜ் பாவம்ல?”

“இப்ப என்ன டா பிரச்சனை அதை சொல்லு” குமரன் கேட்க, மது வீட்டிற்கு அன்று சென்றது முதல் அங்கு நடந்த அனைத்தையும் ஆனந்த் சொல்ல, ஒரு முறைப்போடு கேட்டுக் கொண்டார் விமலா.

“இங்கே வா டி! நீ தான் அந்த பெரிய மனுஷியா? ஊமை கொட்டான் மாதிரி இருந்துட்டு இவ்வளவு பேசினியா நீ?” என்றார் அபி காதை திருகி.

“ஆஆ பவானிம்மா வலிக்குது.. ஆனா பிளான் எல்லாம் இவங்களோடது தான்” அபி ஆனந்த்தை சொல்ல,

“யாரு என்ன சொன்னாலும் கனகா அண்ணிக்கு தெரியாமல் நான் எந்த உதவியும் பண்றதா இல்ல”

“ம்மா! இந்த பால் வடியுற முகத்தை பார்த்து சொல்லுங்க” ராஜ் அருகே வந்து முகத்தை காட்டி சொல்ல,

“இந்த மூஞ்சை வச்சு தானே என்னையும் அந்த பொன்னையும் ஏமாத்தின? முடியாது போ டா!” என்றார் முகத்துக்கு நேராய்.

“மாதாஜி! நீயா பேசியது?” என ராஜ் பாவனையோடு சொல்ல,

“பவா! அதான் பசங்க கேட்குறாங்க இல்ல.. நமக்கு தெரியாமலா பன்றாங்க.. இவ்வளவு தூரம் வந்த பிறகும் நாம ஹெல்ப் பண்ணலைனா அந்த பொண்ணு வீட்ல சந்தேகம் வர தானே செய்யும்” பாயிண்ட்டாய் பேசினார் குமரன்.

“நீங்களும் அவங்களோட சேர்ந்துட்டீங்களா? ஏன் மாமா நீங்க மட்டும் அமைதியா இருக்கீங்க? நீங்களும் எதாவது சொல்லுங்க” பவானி நடராஜனிடம் சொல்ல,

“என் பேச்சை எல்லாம் எவனும் கேட்க போறதில்ல.. ஏதோ உப்புக்கு சப்பா பெரிய மனுஷன்னு கூட வச்சிருக்கானுக..” தாத்தா சொல்ல,

“எப்படி தாத்தா கரெக்ட்டா கண்டுபுடிச்சீங்க?” என்றான் அதிசயம் போல் காட்டி ராஜ்.

“டேய் உதை வாங்குவ.. இப்ப என்ன செய்யனும்?” பவானி கேட்க,

“சூப்பர் அத்தை!” என கண்ணம் பிடித்து செல்லம் கொஞ்சியவன் அவரிடம் விவரமாய் சொல்லி மது வீட்டிற்கு அழைத்து சென்றான்.

இப்போது அபி, ஆனந்த், ராஜ் உடன் தாத்தாவும் பவானியும் செல்ல, கனகாவிற்கு சந்தேகம் வர கூடாது என்பதற்காய் குமரனை வீட்டில்விட்டு வந்தனர்.

இப்போது மது அன்னை முகத்தில் அன்போடு மரியாதையும் கலந்திருந்தது. சொன்னது போலவே பெரியவர்களையும் அழைத்து வந்து விட்டனரே!

“வாங்க மா.. எல்லாரும் வாங்க” அனைவரையும் வரவேற்று மது அன்னை உள்ளே செல்லவும் ராஜ் தெரிந்தது போல திரும்பி பார்க்க, அன்று போலவே மின்னல் வேகத்தில் ஓடி வந்தாள் மது.

“ஹாய் ஆண்ட்டி.. நல்லாருக்கீங்களா? நைஸ் டு மீட் யூ.. ஹாய் அபிமா.. ஹாய் சீனியர்” என்றவள் ராஜை பார்த்து கண்ணடிக்க, ஷ் என்று வாயில் விரல் வைத்து தலையை இடம்வலமாக ஆட்ட, ஆனந்த், அபி கண்டும் காணாததாக சிரிப்புடன் அமர்ந்து கொண்டனர்.

பவானி மட்டும் ராஜை பார்த்து முறைக்க, “ஹிஹி! நாட்டி கேர்ள் மாதாஜி!” என இளிப்புடன் சமாளிதான்.

“ஓகே ஆண்ட்டி! அப்பாகிட்ட பேசுங்க.. நான் அப்புறமா வர்றேன்” என்றவள் வந்ததை போல மறைந்தாள்.

“சொன்ன மாதிரி நடந்துகிட்டிங்களே!” என்றபடி வந்தார் மதுவின் தந்தை.

“அப்ப நானும் சொன்னதை செய்யணும்.. சொல்லுங்க மா எப்ப கல்யாணத்தை வச்சுக்கலாம்?” நேராய் விஷயத்துக்கு வர,

“அடப்பாவி! நாள் குறிக்கவாடா என்னை கூட்டிட்டு வந்த?” ராஜிடம் கேட்க,

“ம்மா! ப்ளீஸ் மா! – ராஜ்.

“ஆமா உங்க அத்தை ஒத்துக்கலனு சொன்னிங்களே! அவங்க வரலையா?” தினகரன் கேட்க,

“அங்கிள்! அம்மா இன்னும்...” ஆனந்த் சொல்லவர,

“நான் சொல்றேங்க.. வீட்ல எந்த பிரச்சனையும் இல்லை.. விமலாம்மான்னு ஒருத்தங்க தான் இவனும் மதுவும் விரும்புறது தெரிஞ்சும் எங்க அண்ணி மூலமா அவங்க பொண்ணை இவனுக்கு கட்டி வைக்க பாக்குறாங்க.. நீங்க மனசு வச்சா மதுக்கும் ராஜ்க்கும் அதே குறிச்ச நேரத்துல கல்யாணத்தை பண்ணிடலாம்..”

“அப்ப அந்த பொண்ணோட வாழ்க்கை பாதிக்கப்படாதா?” தினகரன் கேட்க,

“பெத்த பொண்ணை பத்தியும் அந்த அம்மா கவலைப்படலங்க.. அந்த பொண்ணும் ஒரு பையனை விரும்புறா.. அவங்க ரெண்டு பேருக்கும் நிச்சயம் குறிச்ச நேரத்துல கல்யாணம் பண்ணிட்டா, அடுத்த நாள் முஹூர்த்த நேரத்துல இவங்க கல்யாணத்தை நடத்திடலாம்” தெளிவாய் கூறினார் பவானி.

“என்னடா நம்ம பிளான ஒட்டு கேட்ட மாதிரி அப்படியே சொல்றாங்க அம்மா.. இவங்களுக்கு எப்படி இவ்வளவு மேட்டர் தெரியும்?” ஆனந்த் ராஜ் காதை கடிக்க,

“அதான் டா நானும் பாக்குறேன்.. என் மாதாஜி பவானிம்மா தானா இது?” ராஜ்ஜூம் அதே ஆச்சர்யத்தில் தான் கேட்டான்.

“என்னவோ சொல்றிங்க.. பையனோட அம்மா நீங்க சொல்றிங்க.. அதுனால நான் சம்மதிக்குறேன்.. உங்களுக்கு சரி தானே?” ராஜிடம் கேட்க,

“ஹான்! சரி தான் அங்கிள்!” சம்மதித்ததை நம்ப முடியாமல் ராஜ் தலையாட்ட,

“அப்புறம் என்ன மாப்பிள்ளை மாமானே கூப்பிடுங்க.. ம்மா! மதுவை காபி கொண்டு வர சொல்லு!” என்றார் தினகரன்.

“உன் மாமா கஞ்சம் தான் போல.. சம்மதம் சொன்ன அப்புறம் தான் காபியே கிடைக்குது” ஆனந்த்தே தான்.

“சம்மதம் கிடைச்சதே போதும் டா சாமி”

“சரிங்க.. அப்ப கல்யாணத்துல சந்திப்போம்” என்றபடி விடைபெற்றனர் பவானி அண்ட் கோ.

“அத்தை கலக்கிட்டீங்க” – ஆனந்த்.

“பவானிம்மா வேற லெவல் நீங்க!” – அபி.

“ம்மா! எனக்கு பொறக்குற குழந்தைக்கு பவானின்னு உங்க பேரை தான் வைப்பேன்” இது ராஜ் தான்.

“ஆமா அப்ப தானே கோபம் வந்தா என் பேரை சொல்லி அடிக்கலாம். கேடி டா நீ” இப்படி பேசி சிரித்து சந்தோசமாய் வீடு வந்து சேர்ந்த போது பவானி கேட்டார்.

“அடுத்து வேற எந்த பிளானும் இல்லையே? இனி நிச்சயம் தானே?” அவர் கேட்க,

“அம்மாகிட்ட பேசலாம்னு இருக்கேன் அத்தை!” என்றான் ஆனந்த்.

“ஆனா அண்ணி இவ்வளவு தூரம் பத்திரிக்கை எல்லாம் கொடுத்த அப்புறம் மாறுவாங்கனு நினைக்குறியா?”

“கரெக்ட் தான்.. ஆனா அம்மாவை ஏமாத்த கஷ்டமா இருக்கு.. ஏற்கனவே பண்ணினது தப்பு தான் ஆனா அம்மா மன்னிச்சு இப்ப தான் ஓரளவு பேசுறாங்க.. மறுபடியும் இப்படி நடந்தா.. தாங்க மாட்டாங்க” ஆனந்த் சொல்ல,

“நீ பேசு டா.. உனக்கு தெரியும் நீ செய்யுறது சரியா தப்பானு.. சோ னோ ஒர்ரி.. உனக்கு தோணுறதை நீ பண்ணு” என்றான் ராஜ்.

“தேங்க்ஸ் டா”

“ம்ம்! ஆல் தி பெஸ்ட்.. பேசிட்டு முடிவு பண்ணலாம்”

“ஓகே டா” என்றவன் எப்படி பேச என்கின்ற யோசனையோடே நகர்ந்தான்.

அறைக்கு வந்து யோசனையில் ஆனந்த் அமர்ந்திருக்க போன் பேசியப்படியே உள்ளே வந்தாள் அபி.

“சரி வச்சுடுறேன்” என்ற குரலில் யோசனை கலைந்து அபியை திரும்பிப் பார்த்தான் ஆனந்த்.

“என்னாச்சு அபி?”

“ஸ்ரீ தான்.. விமலா அத்தை ஸ்ரீயும் ராமும் போன்ல பேசும் போது பார்த்துட்டாங்களாம்”

“வாட்?”

“ஆமா! ஆனா நல்லவேளை வேற எதுவும் அவங்க இங்கே நடக்குறதை பேசல.. ஆனாலும் எப்பவோ அவ வீட்டை விட்டு போய்டுவேன்னு மிரட்டினதை ஞாபகம் வச்சு கல்யாணத்துக்கு முன்னாடி ஓடி போக பாக்குறியான்னு அடிச்சு போனை பறிச்சுட்டாங்களாம்.. இப்ப அவங்க இல்லாத நேரம் பக்கத்து வீட்டு போன்லேர்ந்து பேசினா”

“ஓஹ் காட்! அவங்களுக்கு இங்கே நடக்குறது தெரிஞ்சா உஷார் ஆயிடுவாங்க.. மேரேஜ்க்கு இன்னும் டூ டேஸ் தான் இருக்கு சோ ஸ்ரீகிட்ட காண்டாக்ட் பண்றதை அவாய்ட் பண்ணு.. அப்ப தான் நம்ம மேல சந்தேகம் வராது.. அவ லவ் பண்றது தெரிஞ்ச வரை ஓகே! அது நமக்கும் தெரியும்னு தெரிஞ்சா கண்டிப்பா உஷார் ஆகிடுவாங்க.. சோ கொஞ்சம் அலெர்ட்டா இருக்கனும்”

“ம்ம் சரிங்க”

“சரி டா!”

“நீங்க என்ன யோசிச்சுட்டு இருக்கீங்க?”

“வேற என்ன? அம்மாகிட்ட எப்படி என்னனு பேசுறதுன்னு தான் யோசிச்சேன்!”

“எப்ப பேச போறீங்க?”

“நாள் நெருங்கிடுச்சே! நாளைக்கே பேச வேண்டியது தான்”

“ஹ்ம்ம்!”

“நீயும் வர்றியா?”

“வேணாம்! நம்ம கல்யாணம் நடந்ததே அவங்களுக்கு இன்னும் ஏத்துக்க முடியாது.. இதுல என் முன்னாடியே பேசினா... சரி வராது “

“ம்ம் அதுவும் சரி தான்”

“நீங்க பேசுங்க.. அத்தை யோசிச்சா கூட போதும்”

“ம்ம் டா. நீ இப்ப ஸ்ரீ வீட்டுக்கு போக வேண்டாம் நிச்சயத்துல பார்த்துக்கலாம் சரியா?”

“ஹ்ம்ம்”

தொடரும்..
 
  • Like
Reactions: Vinolia Fernando