செண்பகம் வந்தவுடன் தாமோதரனும், ரத்தினமும் அவரவர் இல்லம் சென்றுவிட, விக்ரம் பனியின் முழுநேர சேவகன் ஆகிப்போனான். வீட்டை மலருக்குப் பிடித்த மாதிரி மாற்ற நினைத்து செம்பியனை வரவழைத்தான்.
"சாரி... அன்னைக்கு உங்களைப் புரிஞ்சுக்காம மரியாதை இல்லாம பேசிட்டேன்..." என்று செம்பியன் தயங்கியபடி விக்ரமிடம் கூறிட,
விக்ரம் சிரித்தானா இல்லேயா என்று நினைக்கும் வண்ணம் இதழோரம் மென்மையாக புன்னகைத்துவிட்டு, "சாரிக்கு பதிலா 'லவ் யூ' சொல்லியிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்." என்று செம்பியனை வம்பு வளர்க்க நினைத்து சிரியாமல் கூறினான்.
"என்னது!!! ஆம்பளைக்கு ஆம்பள :லவ் யூ' சொல்லிக்கிறதா!!! உவ்வ்வே..." என்று அறுவறுப்பாக முகத்தை வைத்துக்கொண்டு கூறிட, விக்ரமிற்கு அவன் முகத்தைக் காண சுவாரஸ்யமாக இருந்தது போல,
"இதிலென்ன தப்பு... உன் அக்காவே உனக்கு என்னை பிடிச்சிருந்தா கட்டி வெச்சிருப்பா தெரியுமா?" என்று செம்பியனை ஒரு மாதிரயாகப் பார்த்து நெருங்க,
செம்பியன் சட்டென நான்கடி பின்னால் நகர்ந்தான். "ஐயே ச்சீ... என் அக்கா அப்படிலாம் சொல்லியிருக்காது... நீங்க வம்பு பண்ணாம ஒ... ஒ..ஒழுங்கா பேசுங்க..." என்று பதற்றத்தோடு கோபமாகக் கூறினான்.
"செம்பியா... உன் அக்காவுக்கு சீதனமா இங்கேயே இருந்துடேன்... எனக்கு உன்னையும் ரெம்ம்பஅஅ பிடிச்சிருக்கு" என்று அழுத்தமாகக் கூறியபடி செம்பியனின் குறுக்கைப் பிடித்து இழுத்து பாதி அணைத்தார் போல் நிற்க,
"ஐயோ மச்சா... விடுங்க எனக்கு என்னமோ மாதிரி இருக்கு... உவ்வே..." என்று மீண்டும் உமட்டுவது போல் செய்திட, விக்ரம் சிரித்துக் கொண்டே அவனைவிட்டு நகர்ந்தான்.
"சாரி கேட்க வந்துட்டான்... பெரிய மனுஷன் மாதிரி!!!... உன் சாரி யாருக்கு டா வேணும்.... இப்போ சொன்னியே மச்சானு... அது போதும். வந்த வேலையைப் பார் வா.." என்று கூறி மேற்கெண்டு எந்த வம்பும் செய்யாமல் போனால் போகிறது என்று மன்னித்து விட்டான் விக்ரம்.
அன்று விக்ரம் இயல்பாகக் கூறிக் கடந்துவிட்டான் தான். ஆனால் அதுவே செம்பியனின் மனதில் பதிந்துவிட இன்று வரை மச்சான் என்ற அழைப்பை மாற்றாமல் அழைக்கிறான்.
நேரம் தாமதிக்காமல் மலரைப் பற்றி கேட்டு அறிந்து கொண்ட விக்ரம் செம்பியனின் உதவியோடு மலரின் பெய்ண்டிங் அனைத்தையும் கொண்டு வந்து அவளது அறையில் ஆங்காங்கே மாட்டி வைத்தான்.
மலர் செய்திருந்த மண்பானை நீருற்றை பெரிய பானைகள் கொண்டு பெரிதாக செய்யச் சொல்லி அவளது அறையின் பால்கனியில் வைத்தவன் அதன் தண்ணீர் சத்தம் எப்போது இனிமையாக அறைக்குள் கேட்குபடி செய்தான்.
பின்கட்டில் மலருக்குப் பிடித்தபடி மரங்கள் மற்றும் பூச்செடிகள் நட்டு வைத்து அதனை பராமரிக்க ஆள் நியமித்தான். மலர் மெய்மறந்து ரசிக்கும் சிட்டுக்குருவிகளின் சத்தத்திற்காக அவற்றின் வருகைக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தையும் தன் அறையின் பால்கனியில் அமைத்தான். அதிகாலை மற்றும் அந்திமாலையில் அவற்றின் ஓசை என்றேனும் மலரின் செவிகளை நிரப்பி அவளை எழுப்பிவிடாத என்ற எண்ணத்தில் தான்...
மலருக்குப் பிடித்த மலர்களின் வாசம் நாளுக்கு ஒன்றாக அவள் அறையை நிறைக்கும். அவளுக்குப் பிடித்த வண்ணங்களில் திரைச்சீலை தினமும் மாற்றப்படும்... காலையும் மாலையும் அவளை சக்கர நாற்காலியில் அமர்த்தி கார்டனில் நடப்பது அவனது தினசரி வேலையாகியது.
இப்படி எல்லாம் நல்ல முறையில் தான் சென்று கொண்டிருந்தது. அந்திசாயும் நேரத்தில் அடுக்கு மல்லி வாசம் காற்றில் வீச அதனருகே அவளை அழைத்துச் சென்று, அதில் ஒரு மலரைப் பரித்து, "பனி... எனக்கு ஒரு ஆசை... உன்னை மலர் ஆர்னமெண்ட்ஸால அலங்கரிச்சி அழகு பாக்கனும்..." என்று கையில் இருந்த மலரை அவள் முன் நீட்டி "லவ் யூ டி என் செல்லக்குட்டி" என்று கூறி அவள் கையோடு தன் கோர்த்து அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான். பிடித்திருந்த அவளது கையில் முத்தம் வைத்துவிட்டு, அதன்பின் பல கதைகள் பேசிவிட்டு வீட்டிற்குள் அழைத்துச் சென்ற நேரம் மலருக்கு பிட்ஸ் வந்துவிட, அவசர அவரமாக மருத்துவமனை அழைத்துச் சென்றான். செல்லும் வழியிலேயே தன் தந்தைக்கும் வினோவிற்கும் தெரியப்படுத்த, உதியும் ரத்தினத்துடன் இணைந்து மருத்துவமனை சென்றான்.
மலரை பரிசோதித்த மருத்துவர் மீண்டும் விக்ரமின் நெருக்கத்தையே காரணமாகக் கூறிட, விக்ரம் மொத்தமாக நொருங்கிப் போனான்.
'ஏன்? அப்படி என்ன செய்தேன் அவளை? என்னை பற்றி கூறிய போது இயல்பாகத் தானே ஏற்றாள்? ஒருவேளை விருப்பம் இல்லாமல் அனைத்திற்கும் தலையாட்டினாளா?' என்று விக்ரம் அவனது சிந்தனையில் உளன்றிருக்க,
வினோ "விபா... ஒன்னும் கவலைப் படாதே... கொஞ்ச நாள் மலரை அவங்க அப்பா பாத்துக்கட்டும்... மலருக்கு சரியானதும் நடந்ததை எடுத்து சொன்னா அவ உன்னை ஏத்துப்பா... உன்னை பார்த்து பயப்படமாட்டா... புரியுதா?" என்றிட அதில் ஒரு வார்த்தை கூட விக்ரமின் காதில் விழவில்லை.
உதி அவனை உலுக்கி, "டேய் சொன்னது புரிஞ்சதா?" என்றிட அப்போது என்னவென்று தெரியாமல் வெறுமனே தலையை உருட்டினான்.
"சரி நீ அவங்க அப்பாவுக்கு கால் பண்ணி பேசு... மத்த அரேன்ஞ்மெண்ட்ஸ் எல்லாம் நான் பாத்துக்கிறேன். ." என்று நகர, அவன் தோளை பிடித்து நிறுத்தி,
"யாருக்கிட்ட பேசனும்? என்ன பேசனும்?" என்று பிரம்மை பிடித்தவனைப் போல் வினவினான் விக்ரம்.
"விபா... உன் கவனம் எங்கே இருக்கு!! கமான் விபா... மலர் அவங்க அப்பாவுக்கு இன்ஃபார்ம் பண்ணனும் தானே... அப்போ தானே நாம மலரை கூட்டிட்டு அங்கே போறதுக்கு முன்னாடியே மலர் தங்குறதுக்குத் தேவையான எல்லா வசதியும் அவங்க செய்ய முடியும்..." என்றிட,
மறுநிமிடம் அவன் சட்டையைப் பிடித்திருந்தான் விக்ரம்.
"டேய் என்னடா? நீ தானே சரினு சொன்னே!!! இப்போ என்ன?"
"என் பனி என்கூட இருக்கக் கூடாதுனு சொல்றதுக்கு நீ யாருடா?" என்று கோபத்திலும் குழப்பத்திலும் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உரைத்தான்.
அப்போதும் அதனை இருவரும் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை தான். "விபா டாக்டர்ஸ் சொல்ல வர்றதே புரிஞ்சிக்கோ... மலருக்கு சரியாகனும்னா அவ உன்னைவிட்டு தள்ளியிருக்கிறது தான் நல்லது..." என்றான் வினோ.
"எனக்கு எதுவும் புரிய வேண்டாம்..."
"சரியான சைக்கோ... எல்லாம் தெரிஞ்சாலும், புரிஞ்சாலும் நீ நெனைக்கிறது மட்டும் தான் நடக்கனும்னு நெனைக்கிற டாமினேடடு கேரெக்டர். உன் குணத்துனால அந்த பொண்ணை காப்பத்தின நீயே அவளை சாவடிக்கப் போறே..." என்று கூறி முடிப்பதற்குள் விக்ரம் வினோவை அடித்திருந்தான்.
"திஸ் இஸ் த லிமிட் வினோத்... இனி ஒரு வார்த்தை என் பனியை பத்தி பேசினே அவ்ளோ தான் சொல்லிட்டேன்...... ஃப்ரெண்டுனா என்னனாலும் பேசிடுவேயா? என் விஷயத்துல தலையிட உனக்கு எந்த உரியைமும் இல்லே..." என்று ரௌத்திரத்தில் தூக்கியெறிந்து பேசினான் விக்ரம்.
வினோ அப்போது எந்த பதிலும் கூறாமல் அமைதியாக அவ்விடம் விட்டு அகன்றிருந்தான். கன்னத்தில் நண்பன் ஏற்றிய வடுவின் வலியைவிட மனதில் ஏற்றிய வடுவின் வலியே அதிகமாக உணர்ந்தவன் அதன்பின் விக்ரமிடம் பேசுவதே விட்டுவிட்டான்.
உதியோ விக்ரமின் குணம் அறிந்து வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மெதுவாத பலமுறை கூறிப் பார்த்தான். அதன் பலன் தான் வேறுவிதமாக இருந்தது. விக்ரம் மலருடன் செலவிடும் நேரத்தைக் குறைத்தானே ஒழிய மலரை அவள் வீட்டிற்கு அனுப்பி வைக்க இறுதிவரை சம்மதிக்கவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் உதியும் தான் கூறுவது பயனற்றது என்று உணர்ந்து விக்ரமிடம் பேசுவதை குறைத்துக் கொண்டான். அதிலும் தனக்கு முதலாளியாக வந்து நின்ற போது முற்றிலுமாக விக்ரமைத் தவிர்த்தான் உதி.
யார் ஒதுக்கி வைத்த போதும் விக்ரமின் மனம் மலரை மட்டுமே நாடியது. ஆனாலும் மனதினுள் அடிக்கடி ஒரு கேள்வி எழுந்து கொண்டே இருந்தது, 'மலர் ஏன் அவனைக் கண்டு பயம் கொள்கிறாள்?' என்று. அன்று இரவு இருவரும் பேசிக் கொண்டதை மீண்டும் மீண்டும் அசை போட்டுப் பார்த்தான். விடை கிடைத்த பாடில்லை.
ஒருமுறை விக்ரம் தன் விளம்பர படப்பிடிப்பிற்காக வெளியூர் செல்ல நேர்ந்திட, மலரை தனியாக விட்டுச்செல்ல மனம் இல்லாமல் அந்த விளம்பரத்திலிருந்து பின் வாங்குவதாகக் கூறி நஷ்ட ஈடு செலுத்தினான். அதன்பின் தன் பலநாள் கனவான மாடலிங் தொழிலை தன்னவளுக்காக புறக்கணித்தான். தன் கனவிற்காக தந்தையின் சிலபல விதிமுறைகளுக்கு கண்ணை மூடிக்கொண்டு தலையசைத்தவன், இன்று தன்னவளுக்காக அனைத்தையும் விட்டுவிட்டு வந்துவிட்டான்.
தந்தையுடன் இணைந்து சேனலை கவனிக்கத் தொடங்கினான். முதன்முறையாக ஸ்டூடியோ சென்று வர, அங்கே உதியும் தன் ஒதுக்கத்தைக் காண்பித்தான். எப்போதும் போல் மாலை இல்லம் திரும்பியவன், அசைவின்றி படுக்கையில் கிடக்கும் மலரிடம் புலம்பத் தொடங்கினான்.
தன் கோபத்தை கட்டுக்குள் வைக்கவென்று யோகா கற்றுக் கொண்டான். மலருடன் செலவிடும் நேரங்களைக் குறைப்பதற்காகவே இரவு தாமதமாக வருவதையும், காலை விரைவாகச் செல்வதையும் வழக்கமாக்கிக் கொண்டான். இருந்தும் மலரைக் காணாமல் அவன் பொழுதுகள் விடிந்ததும் இல்லை, இரவு சாய்ந்ததும் இல்லை. ஒருவருடம் கழித்து செம்பியன் சென்னை கல்லூரியில் படிக்கப் போவதாகக் கூறிட, அதன்பின் அவ்வபோது விக்ரமின் மனக் காயங்களுக்கு செம்பியன் அவனையே அறியாமல் மருந்தாகியிருந்தான்.
இப்போதும் மலர் கண்விழித்ததும் அவள் தன்னைக் கண்டு பயம் கொண்டதன் காரணத்தை அறிந்து கொள்ளலாம் என்று நினைத்திருக்க, அவள் அனைத்தையும் மறந்துவிட்டதால் அதற்கும் வழியில்லாமல் போனது.
தான் மலரை முதன்முதலாகப் பார்த்தபோது என்ன நினைத்து காதல் கொண்டானோ இன்று அந்த தைரியம் அவளிடம் சுத்தமாக இல்லை. முக்கியமாக அவனைக் கண்டே பயம் கொள்கிறாள். அதனை எப்படி சரி செய்வது என்று புரியாமல், கண்களை மூடி தன் அலுவலக அறை சுழல் நாற்காலியில் இப்படியும் அப்படியுமாக சுழன்றபடி அமர்ந்திருந்தான்.
இப்போது அதைவிட முக்கிய ப்ரச்சனை வீட்டில் இருக்கும் பெருசுகளை சமாளிக்க வேண்டும். மலரின் கழுத்தில் தாலிகட்டியது அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியாகவெல்லாம் இருக்காது என்று அவனுக்கும் தெரியும். இருந்தும் இப்போது இதற்கென்ன அவசரம் என அனைவரும் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இப்போது விக்ரமிற்கு இருக்கிறது.
வீட்டிற்குச் செல்லவும் மனம் இல்லாமல் வெகுநேரம் ஸ்டூடியோவிலேயே அமர்ந்திருந்தவன், மற்றவர்களிடமும் இன்றே பேசி முடித்திட வேண்டும் என்ற எண்ணத்தில் மாலை வீட்டிற்குப் புறப்பட்டான்.
இல்லம் நுழைய தாமோதரனும், ரத்தினமும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அபிராமி ஆச்சி அடுக்கலையில் செம்பியனுடன் இணைந்து ஏதோ மாலை சிற்றுண்டி சமைத்துக் கொண்டிருந்தார். கண்களால் தன்னவளைத் துழாவிட அவள் அங்கே இருப்பது போலவேத் தெரியவில்லை.
இப்போது அவளுக்கு என்னென்ன உண்மைகள் தெரிந்ததோ! இனியும் என்னைக் கண்டு அஞ்சுவாளா! என்ற சிந்தனைகளுடன் அவளது அறைக்குச் சென்று பார்க்க நினைத்து இரண்டு இரண்டு படிகளாக ஏறிச் செல்ல, அதற்குள் ரத்தினம் அவனை அழைத்தார்.
"பார்த்தி..." என்று 'உனக்கு அப்பன் டா நான்' என்பது போல் கணீர் என்று வந்தது அவரது குரல்.
இந்த முறை தவறு அவன் மீதல்லவா இருக்கிறது, அதனால் அமைதியாக தலை குனிந்தபடி வந்து அமர்ந்தான். "இங்கே ரெண்டு பேர் உக்காந்திருக்கோமே... அது என்ன பாத்தும் பாக்காத மாதிரி போறது?" என்று கண்டிப்புக் குரலில் வினவினார்.
"சாரி ப்பா... சாரி... மாமா" என்றான் விக்ரம். தாமோதரனை இதற்கு முன்பு வரை அங்கிள் என்று அழைத்தவன், இன்று தான் முதன்முறையாக 'மாமா' என்று அழைத்திருக்கிறான்.
அவனின் மாமா என்ற அழைப்பில் தாமோதரனோ தன்னையும் மறந்து "பரவாயில்லே மாப்ளே" என்றுவிட, அவரின் மறைமுக சம்மதம் கிடைத்துவிட்டது போல் தோன்றிட, விக்ரம் மெல்லிய சிரிப்போடு சற்று தலை நிமிர்த்தி அமர்ந்தான்.
அதற்குள் ரத்தினம் 'கவுந்துட்டியே டா' என்பது போல் தன் நண்பனை முறைக்க, தாமோதரனோ முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு திரும்பிக் கொண்டார்.
"என்ன காரியம் டா பண்ணி வெச்சிருக்கே?... மலருக்கு சரியாகிடுச்சினு சொன்னா நல்லநாள் பாத்து நாங்களே கல்யாணம் செய்து வைப்போம் தானே!!! யார்கிட்டேயும் சொல்லாம நீயா அவ கழுத்துல தாலி கட்டினது எந்த விதத்துல நியாயம்?" என்று ரத்தினம் தன் மகனை சத்தம் போட, மீண்டும் தலை கவிழ்ந்து அமர்ந்து கொண்டான்.
"பார்த்தி... இத்தனை நாள் நீ நடந்துக்கிட்ட விதத்துல நெறைய மாறிட்டேனு சந்தோஷப்பட்டேன் டா... ஆனா உதி சொன்ன மாதிரி நீ உன் வீம்பு கொஞ்சம் கூட மாறலே..." என்று வருத்தமாக மொழிந்திட, அப்போதும் அப்படியே அமர்ந்திருந்தான்.
"ஒரு நல்லநாள் பாத்து உனக்கும் மலருக்கும் கோவில்ல வெச்சு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம்..." என்று கூறிட, சட்டென தலை நிமிர்ந்தான்.
"ப்பா... இப்போ என்ன அவசரம்? மலருக்கு ஃபுல்லா சரியாகட்டுமே?"
"அது நீ தாலி கட்டும் போது தெரியலேயோ!!" என்று அவனை மடக்கினார்.
"அப்பா...ப்ளீஸ்... நான் மலர்கிட்ட ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சினு சொல்லிருக்கேன்..., இப்போ திரும்பவும் கல்யாணம்னா அவ அதை எப்படி எடுத்துப்பானு யோசிங்கப்பா!"
"அதையெல்லாம் நாங்க பாத்துக்கிறோம்... நீ உன் வேலையை மட்டும் பார்.." என்றிட,
தன் தந்தையிடம் பேசி பயனில்லை என்பதை உணர்ந்த விக்ரம் தாமதரனைப் பார்த்து "மாமா... என்னதான் பனி உங்ககிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்னு சொல்லிருந்தாலும் செம்பியன் எல்லா விஷயமும் சொல்லிருப்பான்னு தெரியும்.... நீங்களாவது அப்பாவுக்கு எடுத்து சொல்லுங்க... அவளுக்கு ஃபுல்லா சரியாகட்டும்... எல்லாம் நியாபகம் வரட்டும்... அப்பறமா வேணுனா கிராண்டா பண்ணலாம்..." என்றிட,
"ரத்தினம் எனக்கென்னவோ மாப்ளே சொல்ற மாதிரியே செய்யலாம்னு தோனுது..." என்று விக்ரமிற்கு சப்போர்ட் செய்ய,
"நீ பேசாதே டா... ஒரு பொண்ணை பெத்தவனா அவன் சட்டைய பிடிச்சி சண்டை போட்டிருந்தா பரவாயில்லே... மாப்ளேனு மரியாதை மண்ணாங்கட்டி வேறே அவனுக்கு..." என்று ரத்தினம் தாமோதரன் மீது பாய்ந்தார்.
"எப்படி டா சண்டை போடுவேன். என் பொண்ணு இன்னைக்கு உயிரோட இருக்குறதே உன் பையனாலத் தான்..." என்று கண்கள் கலங்க உரைத்திட,
"அதுக்காக அவன் என்ன செய்தாலும் சரியாத் தான் இருக்கும்னு கம்முனு இருப்பேயா?"
"சரியா இருக்குமானு தெரியாது... ஆனால் என் பொண்ணுக்கு எந்த கெடுதலும் நடக்காது... எனக்கு அது போதும்" என்றிட, விக்ரம் கண்களாலேயே தாமோதரனுக்கு நன்றி தெரிவித்தான்.
"பனி எங்கே மாமா?" என்று வினவிட,
"பின்பக்கம் இருக்கா மாப்ளே..." என்றிட, சட்டென எழுந்து பின்வாசல் பக்கம் இரண்டடி வைத்தவன், மீண்டும் ரத்தினத்தின் குரலில் அப்படியே நின்றான். "விசாலியும் மலர் கூட தான் இருக்கா..."
என்ன நினைத்தானோ மீண்டும் மாடி ஏறி சென்றான். பாதிவரை சென்றவன் மீண்டும் கீழே இறங்கிச் சென்று பின்கட்டுக்கு வந்தான். அங்கே மலரும், விசாலியும் முல்லைக் கொடியில் பூக்களை பறித்துக் கொண்டிருந்தனர்.
"அத்தை... எல்லாரும் ஒரே வீட்ல இருக்காம ஏன் தனித்தனியா இருக்கோம்?" என்று தன் குழப்பங்களில் ஒன்றை தெரிவு செய்துகொள்ள வேண்டி வினவினாள்.
விசாலி என்ன நினைத்து கூறினாரோ!!! யாரை நினைத்தக் கூறினாரோ!!! "சில உறவுகள் விலகியிருக்கிறது தான் நல்லதுமா..." என்றிட, மலருக்கும் 'யாரைச் சொல்கிறார்?' என்று அடுத்த கேள்வி தோன்றியது.
குழப்பம் தெளியாத அவள் முகத்தைக் கண்டு, "இப்போ அதனால என்ன? உனக்கு என்னையோ உன் மாமாவையோ பாக்கனும்னு தோனுச்சினா ஒரே ஒரு கால் பண்ணு அடுத்த நிமிஷம் இங்கே வந்து நிப்போம்... அதுக்கு கூட பொறுமையில்லேனா, ட்ரைவர் சக்திகிட்ட சொன்னா அவனே உன்னை அங்கே அழச்சிட்டு வந்திடுவான்..." என்று விலகியிருந்தாலும், உன் நெருக்கத்தை விரும்பியிருக்கிறோம் என்று மறைமுகமாகக் கூற முயற்சித்தார்.
தன் அன்னையின் கூற்றைக் கேட்டவுடன் விக்ரமின் மனம் கல்லாய் மாற அவர்கள் அருகில் சென்று தன் தொண்டையை கணைத்திட, இருவரும் திரும்பினர்.
விக்ரமின் பார்வை விசாலியின் மேல் ஒரு நொடி நிலைத்து நிற்க, விசாலியும் தன் மகனை நேருக்கு நேர் கண்டதில் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, அங்கே நின்று அழுதிட பிடிக்காமல் வீட்டிற்குள் நுழைந்தார்.
மலரோ அது எதனையும் கவனிக்கவில்லை. விக்ரம் தன் அன்னையை உறுத்து விழிப்பதை மட்டும் கண்டவள், விசாலி விலகிச் செல்லவும், 'அவர் அம்மாவையே பார்வையால் உருட்டி மெரட்டி வெச்சிருக்காரே! எல்லார்கிட்டேயும் இதே டெரர் லுக் தான் போல...' என்று எண்ணியபடி தலை கவிழ்ந்து செல்லும் தன் மாமியாரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"ஏய்..." என்று மலரை அதட்டி அழைத்தான் விக்ரம்.
அவனது சத்ததில் சற்று பயந்தவள் அவனைத் திரும்பி பார்க்க, "ஈவ்னிங் புருஷே வீட்டுக்கு வர்ற நேரமாச்சே... நான் வர்றதுக்கு முன்னாடியே ரெடியா இருக்க வேண்டாமா?... வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் உன்னைக் காணமேனு ஒவ்வொரு இடமா உன்னை நான் தேடி வரனுமா என்ன? அட்லீஸ்ட் என் சத்தம் கேட்ட பின்னாடியாச்சும் கண்ணு முன்னாடி வந்து நிக்கிறதுக்கு என்ன?" என்று தன் அன்னையுடன் வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருந்தது பிடிக்காமல் அவள் மேல் எறிந்து விழுந்தான்.
மலர் அமைதியாக நிற்க மேலும் அவனே தொடர்ந்தான் "வந்தவனுக்கு குடிக்க என்ன வேணும்னு கேட்டு கவனிக்கனுமா வேணாமா?... அது கூட நான் தான் சொல்லித் தரணுமா என்ன?" என்றிட, அப்போதும் அவள் அசையாமல் அவனையே பார்த்திருக்க,
'இவரை பாத்தாலே அல்லுவுடுது... இதுல நானா இவர் முன்னாடி வந்து நின்னு என்ன வேணும்னு கேட்டு கவனிக்கனுமாம்ல...' என்ற அவளது மனக்குரல் அவனுக்கு கேட்காமலேயே போனது.
அவள் முகத்திற்கு நேரே சுடக்கிட்டு, இவ்வுலகிற்கு அழைத்து வந்தவன், "நாளைல இருந்து உன்னை நான் கவனிச்சிப்பேன், என்னை நீ கவனிச்சிக்கனும் புரியுதா?" என்று அப்போதும் முகத்தை உர்ர்ரென வைத்துக் கொண்டு கூறினான். அவன் என்ன கூறினான் என்று கூட யோசிக்காமல் சரி என்று மண்டையை உருட்டியபடி அங்கிருந்து நகர்ந்தாள்.
அவளது முழங்கையைப் பிடித்து மீண்டும் தன் முன்னால் நிறுத்தியவன், "இன்னமும் கேட்கலே?" என்றிட,
அப்போதும் வாய் திறவாமல் 'என்ன கேட்கனும்!' என்பது போல் திருதிருவென முழிக்க, அவனுக்கே 'ஐயோ' என்றிருந்தது. இவளை ஒரு வார்த்தை பேச வைக்கிறதுக்கே நான் பக்கம், பக்கமா வசனம் பேச வேண்டியிருக்கே! என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, "ஒன்னு இல்லே போ" என்று கடுப்போடு கூறிவிட்டு அவள் கையை உதறினான்.
பனியும் ஒன்றும் புரியாமல் அங்கிருந்து சென்றுவிட்டாள். "ஆச்சி பூ பரிச்சிட்டேன்... கட்டித் தாங்க" என்று கூறியபடி சமையலறை நுழைந்தாள்.
"மலரு விக்ரம் தம்பிக்கு காஃபி வேணுமா, டீ வேணுமா கேட்டுட்டு வா?" என்று மீண்டும் அந்த சிடுமூஞ்சியிடம் விரட்டினார் தாய்கிழவி.
'ஓஓஓ இதைத் தான் அவரும் சொன்னாரா? இப்படி சொல்றதுக்கு பதிலா டீ போடுப்பா... காஃபி கொடும்மா...னு அன்பா சொன்னா எவ்ளோ நல்லாயிருக்கும்... எப்போ பார் நெத்திய சுருக்கிக்கிட்டு, ஏய் ஓய்னு மெரட்டிக்கிட்டு..... டீ வேணும்னு கேக்குறதுக்கு எதுக்கு பக்கம் பக்கமா வேற பேசனும்!!!' என்று புலம்பியபடியே அவனது அறைக்குள் நுழைந்தாள்.
அங்கே விக்ரமோ எப்படி தன்னவளை மனதளவில் நெருங்குவது என்ற யோசனையோடு, காலை தூவியிருந்த தானியங்களின் மிச்சம் சொச்சத்திற்காக சண்டையிட்டுக் கொண்டிருந்த குருவிகளை பார்த்தபடி பால்கனியில் நின்றிருந்தான்.
அவனருகே வந்தவள், உணவுக்காக செல்லச் சண்டையிடும் சிட்டுக்குருவிகளைக் கண்டு வருந்தியவளாய், ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த தானியத்தை கை நிறைய அள்ளிவந்து தூவினாள்.
"ஏய்... என்ன பண்றே?" என்று விக்ரம் சத்தமிட்டபடி அவள் கையை அழுத்தமாகப் பிடித்தான். பெண்ணவளோ அவன் கத்தலிலும் தன் கையை அழுத்தியலும் அஞ்சி, "ஒ... ஒன்னு.... பண்ணலே" என்று வாய் நடுங்கியபடி பதிலுரைத்தாள்.
அதற்குள் அவன் "என்ன ஒன்னும் பண்ணலே... எனக்கு இதை செய்யத் தெரியாம தான் நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கேனா!!! இப்போ எதுக்கு இங்கே வந்தே?" என்று குரலை உயர்த்தியபடியே கேட்க,
"ஆச்சி உங்களுக்கு காஃபியா, டீயானு கேட்க சொன்னாங்க?" என்று சுரத்தையே இல்லாமல் வந்தது அவளது குரல்.
'நான் சொல்லும் போது காது ரெண்டையும் மூடிப்பா போல!' என்று இங்கிருந்து ஆரம்பித்த கோபத்தை குருவிக்கு உணவிட்டதில் காண்பித்து மீண்டும் இங்கேயே கொண்டு வந்து நிறுத்தினான்.
"உன் ஆச்சி சொல்லாமலேயே எனக்கு என்ன வேணும்னு பார்த்து கேட்டு செய்ய வேண்டியது உன் கடமை பனிமலர்..." என்று கட்டளையிட, மலருக்கோ இப்போதே அழுகை வந்துவிடும் போல் இருந்தது.
"சாரி... இப்போ உங்களுக்கு என்ன எடுத்துட்டு வரட்டும்?" என்று மீண்டும் தொண்டை கம்மியபடி வினவினாள்.
அதில் அவனும் எதற்கு இப்போது இவள் மேல் இவ்வளவு கோபம் கொண்டோம் என்று தன்னைத்தானே வஞ்சித்துக் கொண்டு, "நான் எப்போதும் பால் மட்டும் தான் குடிப்பேன்... இப்போ போயி ஜூஸ் எடுத்துட்டு வா... பொமிகிராணட்..." என்று தன் குரலைத் தனித்துக் கூறினான்.
சரி என்றுரைத்து அறையைவிட்டு வெளியேறியவளின் கண்களில் கண்ணீர் காரணமே இல்லாமல் பெருக்கெடுத்தது....

-தொடரும்