• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 15

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 15

“ம்மா!” கனகாவின் அறைக் கதவை தட்டினான் ஆனந்த்.

“உள் வா” என்ற குரல் கேட்டு சிரித்துக் கொண்டான். கனகா சிரித்து பாசமாய் பேசுபவர் இல்லை என்றாலும் குரலில் வித்யாசம் தெரியும்.

“உள்ளே வா டா” என்பவர் இன்று “உள்ளே வா” என்கிறார்.

“ம்மா!”

“சொல்லு”

“கொஞ்சம் பேசணும்?”

“ஹைஃபன் பத்தி நான் ராஜ்க்கு எல்லாம் சொல்லிட்டேனே?” இன்று ஆஃபிஸில் நடக்கும் மீட்டிங் பற்றி கேட்க வந்திருக்கிறான் என நினைத்துக் கொண்டார்.

“அதில்ல ம்மா! இது ராஜ் கல்யாணம் விஷயமா”

“இதுல பேச என்ன இருக்கு? நாளைக்கு நிச்சயம்” குரலில் கடுமை தான்.

“ஆனா ம்மா! எனக்கு எல்லாம் அவசரமா நடக்குற மாதிரி தோணுது!

“கல்யாணம் பண்ணிக்க போறவன் ராஜ்.. அவனே சம்மதம் சொன்ன அப்புறம் உனக்கென்ன வந்தது?”

“ஆனா அந்த பொண்ணு சம்மதம் சொல்லலையே?”

“அதை நீ பார்த்தியா? பொண்ணோட அம்மா உத்திரவாதம் கொடுத்திருக்காங்க”

“நீங்க சம்மதம் சொன்னதை பார்த்திங்களா ம்மா? இல்லையே? உத்திரவாதம் கொடுத்தாங்க ஓகே! அது உண்மைனு உங்களுக்கு தெரியுமா?”

“ஆனந்த் ப்ளீஸ்! உன்னோட கல்யாணத்துல நான் எவ்வளவு நொறுங்கி போனேன்னு உங்க யாருக்கும் தெரியாது.. அபி கேரக்டர் பத்தி பவானியும் அப்பாவும் சொல்ல சொல்ல தான் ஒரு நல்ல அபிப்ராயமே வந்தது.. அது அபி நடந்துகிட்ட நடந்துக்குற விதமும் கூட ரீசன்.. இப்ப ராஜ் கல்யாணத்துலயும் அப்படியா ஏதாவது நடந்தா...”

“அதனால தான் மா சொல்றேன்.. நீங்க மறுபடியும் ஏமாந்துட கூடாதுன்னு தான் சொல்றேன். ப்ளீஸ் மா.. நீங்க பேசுங்க.. முதல்ல ஸ்ரீகிட்ட் அப்புறம்...” ஆனந்த் இழுக்க, கனகா அவனையே பார்த்து நின்றார்.

“அப்புறம் ராஜ்கிட்ட..”

“எனக்கு விமலா மேல நம்பிக்கை இருக்கு..” இன்னும் தீர்மானமாய் விமலாவை நம்பினார்.

“ம்மா! நான் உங்களை ஏமாத்த வேண்டிய அவசியம் இல்ல மா.. ஒரே ஒரு முறை நான் சொல்றதை கேளுங்க..” என்று சொல்ல, சிறிது தடுமாறி யோசித்து நின்றார் கனகா.

“நீங்க என்னை நம்பனும்னு இல்ல ஆனாலும் ஒரு உண்மையை சொல்றேன்.. அன்னைக்கு அஸ்வினி மண்டபத்துல இருந்து போனது.. அடுத்து அவங்க அத்தை விமலா நான் அபியை ஏமாத்தினதா சொன்னது அதுக்கு அபி தலையாட்டினது எல்லாமே பொய். முழுக்க முழுக்க அது எல்லாம் விமலான்ற தனி மனுஷியோட நாடகம்.. அபி மூலமா அவங்க பொண்ணை இந்த வீட்டுக்குள்ள கொண்டு வர அவங்க போட்ட ட்ராமா.. அது நடக்கல.. அடுத்து அவங்க உங்களை யூஸ் பண்ணிக்கிட்டாங்க.. இது தான் உண்மை.. நீங்க நம்பாட்டியும் இது தான் உண்மை”

“என்ன டா என்னென்னவோ சொல்ற? அபி.. விமலா... நான் இவங்களை...” பேச்சு வரவில்லை கமலாவிற்கு.

“ம்மா! இதெல்லாம் உங்க தப்பு இல்லவே இல்லை.. ஆனா அன்னைக்கு நான் சொன்னது உண்மை மா.. நான் அபியை விரும்பினது உண்மை.. அது அவங்க சொன்ன மாதிரி வருஷக் கணக்கோ இல்ல மாசக் கணக்கோ இல்ல.. நீங்க அஸ்வினியை பார்க்க என்னைக்கு என்னை கூட்டிட்டு போனிங்களோ அன்னைக்கு தான் நான் அபியை முதன்முதலா பார்த்தேன்.. நீங்க அஸ்வினிய பார்த்த நேரம் தான் நான் அபியை பார்த்த நேரம்.. அதுனால தான் அபி கழுத்துல தாலி காட்டினேன்.. சொல்லணும் தோணுச்சு சொல்லிட்டேன்.. “

“ஆனந்த்! என்ன சொல்ற நீ? எல்லாமே நான் பண்ணினது தானா?”

“ம்மா ப்ளீஸ்! நீங்க என்னம்மா பண்ணுவீங்க? அண்ட் முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்.. ஸ்ரீ அம்மா சொன்னதெல்லாம் தான் எல்லாத்துக்கும் காரணம்னு நான் அன்னைக்கே உங்ககிட்ட சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டிங்க.. இப்பவும் ராஜ் லைஃப் நல்லாருக்கணும்னு தான் சொல்றேன்.. எனக்காக ஒரு முறை ஸ்ரீகிட்ட பேசிட்டு ராஜ்கிட்ட பேசுங்க.. அவ்வளவு தான் மா” என்றவன் அவரை யோசிக்கவிட்டு வெளியே வந்தான்.

“அம்மா என்ன டா சொன்னாங்க?” வாசலிலேயே நின்று காத்திருந்து ராஜ் கேட்க,

“பேசியிருக்கேன் டா.. மாற்றம் வரும் நம்புறேன்” என்றான் ஆனந்த்.

கனகாவிற்கு எப்படியோ ஆனந்த் மனம் என்னவோ நிம்மதியாய் இருந்தது. அவன் தன் அன்னையை ஏமாற்றவில்லை. அது அனைவருக்கும் தெரியும் என்றாலும் அன்னை மனதில் அது உறுத்தலாய் இருந்திருக்கும் தானே என்ற உறுத்தல் இவனுள் இருந்து கொண்டே தான் இருந்தது. இவன் காதலையும் மறைத்திருந்தானே? அது தான் காரணம்..

அந்த நிம்மதி தான் இப்போது. உண்மை என தான் அறிந்த அனைத்தையும் சொல்லியாகிவிட்டது. அவர் பேச்சிலேயே நிச்சயம் ஸ்ரீயிடம் பேசுவார் என்கின்ற நம்பிக்கையும் இருக்கிறது. எல்லாம் நன்மை தான் நடக்கும் என்கின்ற சந்தோஷமும் சேர்ந்திருந்தது ஆனந்திற்கு.

கனகாவும் ஆனந்த் நினைத்தது நூறு சதவீதம் சரி என்பதாய் தான் நடந்து கொண்டிருந்தார். மீட்டிங் செல்ல குமரன் அழைத்த போது ஆபீஸ் செல்ல மறுத்துவிட்டார்.

ஆனந்த் திருமணத்தின் போது நடந்ததை நினைத்து பார்த்தால் அதன் முழு காரணம் ஆனந்த் என்று தான் தோன்றும். ஆனால் அதன் பின் இருப்பது விமலா என்பது ஆனந்த் வார்த்தைகளில் தெரிந்தது.

அது உண்மை என்பதை பெற்ற தாயாய் கனகா அறிவார். இப்போதும் விமலா தானே வந்து பேசியது? மகள் சொன்ன பேச்சை கேட்பாள் என்றாரே! கேட்கவில்லை என்றால்? வேறு விபரீதம் நடந்துவிட்டால் ராஜ் நிலமை?

இதற்கு முடிவு வேண்டும் என்றால் முதலில் ஸ்ரீயை தான் சந்தித்து பேச வேண்டும். முடிவெடுத்துவிட்டார். நேராய் ஸ்ரீ முன் போய் நிற்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டார்.

கனகா வெளியில் வரும் வரை பவானி அவர் அறை தெரியும்படி தான் ஹாலில் அமர்ந்திருந்தார்.

குமரன் சொல்லிச் சென்றாரே! அக்கா ஏதோ கவலையில் இருப்பதாய். இதில் ஆனந்த் வேறு அவரிடம் பேசி விட்டு வந்தான்.. எதாவது பிரச்சனை வருமோ என்கின்ற கவலை அவருக்கு.

ஒரு முடிவுக்கு வந்த கனகா உடனே பையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

கனகா அறையை திறக்கவும் வேகமாய் எழுந்து வந்தார் பவானி.

“அண்ணி! சாப்பாடு வைக்கவா?” பவானி கேட்க,

“வேண்டாம் பவானி நான் கொஞ்சம் வெளில போய்ட்டு வர்றேன்” என்றவர் ஒரு அடி எடுத்து வைத்துவிட்டு யோசித்து நின்றார்.

“பவானி! நீயும் என்னோட வரியா?” கனகா கேட்க, எங்கே என்று கூட கேட்காமல் கிளம்பிவிட்டார் பவானி.

“பவானி! நாம இப்ப விமலா வீட்டுக்கு போறோம்.. நான் ஸ்ரீகிட்ட கொஞ்சம் பேசணும்” கனகா சொல்ல,

“சரி அண்ணி!”

“ஆனா நான் தனியா ஸ்ரீகிட்ட பேசணும்.. சோ நீ கொஞ்சம் விமலாவை பார்த்துக்குறியா?” கனகா கேட்கவும்

“அவ்வளவு தானே? நான் பார்த்துக்குறேன் அண்ணி” என்றார் உடனே!

விமலா வீட்டிற்குள் வரும்வரை இருந்த சின்ன சந்தேகம் அவர் குரலில் காணாமல் போயிருந்தது.

“வீட்டை தாண்டி காலடி எடுத்து வச்ச துடப்பகட்டை பிஞ்சிடும்.. உன்னை கட்டிக் கொடுக்குற வரை எனக்கு நிம்மதியே கிடையாது” இப்படி தான் இருந்தது விமலாவின் பேச்சு.

“அண்ணி! இருங்க.. நான் காலிங்பெல் அடிக்குறேன்” விமலா செய்ய, வெளியே வந்த விமலாவிற்கு அதிர்ச்சி.

“வாங்க அக்கா! வாங்க அண்ணி! உள்ளே வாங்க” வரவேற்று உள்ளே அழைத்து வர,

திடீரென வந்திருக்கும் இவர்களை காரணம் புரியாது குழப்பதோடு பார்த்து நின்றார் விமலா.

“சொல்லியிருந்தால் நானே வந்திருப்பேனே! என்ன இவ்வளவு தூரம்?” விமலா கேட்க,

“அண்ணி வந்தவங்களுக்கு குடிக்க எதுவும் குடுக்காமல் பேசிட்டு இருக்கீங்க” என ஞாபகப்படுத்தினார் பவானி.

“அய்யோ! உங்களை திடிர்னு பார்த்த சந்தோஷத்துல எதுவுமே ஓடல.. என்ன சாப்பிடுறீங்க?” விமலா கேட்க,

“எதுவா இருந்தாலும் சரி தான் அண்ணி” என பவானியே பேச, கொஞ்சம் விமலா மூளை கணக்கிட்டுக் கொண்டது.

“சரி இருங்க கொண்டு வர்றேன்” என்று விமலா உள்ளே செல்ல, பின்னோடே பவானியும் கனகாவிற்கு சைகை காட்டி சென்றார்.

கனகா ஸ்ரீயை தேடி வீட்டின் உள்ளே சென்றார்.

“ஸ்ரீ!” என்று கனகா அழைக்கும் வரையும் முட்டி மடக்கி அதில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள் ஸ்ரீ.

“என்னாச்சு மா?” கனகா கேட்க, வேகமாய் கண்களை துடைத்து எழுந்து நின்றாள்.

“நாளைக்கு நிச்சயம்.. நாளைன்னைக்கு கல்யாணம்.. ஆனா நீ இப்படி அழுதுட்டு இருக்கன்னா என்ன நடந்தது? உனக்கு... இந்த கல்யாணத்துல... இஷ்டம் தானே?” கேட்கவே பயமாய் இருந்தது கனகாவிற்கு.

அவர் கேள்வியில் மேலும் குலுங்கி அழுதவள் இல்லை என தலையசைத்து கைக்கூப்பி அழ, திக்கென்று ஆனது.

உள்ளே சென்ற விமலா கூல் ட்ரிங்க்ஸ் எடுத்துக் கொண்டு திரும்ப “இதெல்லாம் எதுக்கு அண்ணி.. சும்மா காபி போடுங்க போதும்” என பாலை கையில் எடுக்க, இல்ல அக்கா தனியா இருப்பாங்களே!” என இழுக்க,

“நம்ம வீடு தானே பரவாயில்ல.. நீங்க சூடு பண்ணுங்க” என சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தார்.

“சொல்லுமா என்ன ஆச்சு? நீ என்னனு சொன்னா தான் நான் அடுத்து என்ன பண்றதுன்னு முடிவு பண்ணலாம்” கனகா கேட்க, ஸ்ரீயும் ஒரு முடிவுடன் அனைத்தையும். கூற முன் வந்து சொல்லிவிட்டாள்.

“இதையெல்லாம் ஏன் மா முன்னாடியே சொல்லல?”

“அம்மாக்கு தெரியும் ஆண்ட்டி.. இன்னைக்கு ராம் பார்க்க போயிருந்தேன்.. அம்மா பார்த்துட்டாங்க.. அதான் என்னை இப்படி...” என்று தேம்பி அழ,

“சரி சரி அழாத டா..” என்று கனகா சொல்லிவிட்டு யோசித்துக் கொண்டிருந்தார் கனகா..

“இனி நான் பார்த்துக்குறேன் மா.. அழாத.. இப்பவாச்சும் சொன்னியே இல்லைனா உன் வாழ்க்கை ராம், ராஜ்னு எத்தனை பேர்க்கு தான் கஷ்டம்?” என்றவர் பேசிவிட்டு அதை பற்றிய நினைப்போது வெளியே வர காபியோடு வந்தார் விமலா.

அவர் மேல் இருக்கும் கோபம் அதிகம்.. அதை இப்போது காட்டி விட்டால் பாதிக்கப்பட போவது ஸ்ரீ மட்டும் தான். அது மட்டும் இல்லாமல் அவள் ஆசைபட்ட வாழ்க்கை கிடைக்கவும் வழி இல்லை. எல்லாம் யோசித்து அமைதியாய் இருக்க,

“காபி எடுத்துக்கோங்க அக்கா” என்றார் விமலா.

“பவானி! ஆஃபிஸ்ல இருந்து போன் வந்துடுச்சு.. போலாமா? நாங்க அப்புறமா வர்றோம்” என்றுவிட்டு அவர் கொடுத்த காபியையும் மறுத்துவிட்டு இருவரும் கிளம்பிவிட்டனர்.

‘இப்ப எதுக்கு இவங்க ரெண்டு பேரும் வந்தாங்க? ஏதாவது பிரச்சனையா இருக்குமா? வந்துட்டு ஒன்னுமே பேசாமல் போறாங்க?” தனக்கு தானே பேசிக் கொண்டு ஸ்ரீ இருந்த அறையை எட்டிப் பார்க்க அவள் கட்டிலில் படுத்திருந்தாள்.

“என்னவா இருக்கும்?” யோசித்தப்படியே தான் இருந்தார் அன்று முழுதும்.

“ஏமாந்துட்டோம் பவானி.. பிராடு.. பெரிய பிராடு.. ச்ச.. என்னையே ஏமாத்திட்டா.. இவளை நம்பி நான் உங்களை எல்லாம்... அய்யோ எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன்” கண்ணீர் விழ காத்திருந்தது கனகாவிற்கு.

“அக்கா என்ன நீங்க பெரிய வார்த்தை எல்லாம் பேசிகிட்டு” என பவானி சொல்ல, நடந்ததை கூறினார் கனகா.

எல்லாம் பவானிக்கு தெரிந்தது தான் என்றாலும் எதையும் காட்டிக் கொள்ளவில்லை அவர். அது மேலும் மன உளைச்சளை தானே தரும் கனகவிற்கு.. அந்த எண்ணம் தான்.

“இப்ப என்ன பண்ணலாம் அண்ணி?” பவானி கேட்க,

“ராஜ்க்கு நான் என்ன பதில் சொல்லுவேன் பவானி.. நான் கேட்டதும் சம்மதிச்ச அவனை நினச்சா எனக்கு கஷ்டமா இருக்கு..”

“அக்கா நீங்க ஏன் கவலைப்படுறீங்க?”

“இல்ல பவானி! முதல்ல ராஜ்ஜை வீட்டுக்கு வர சொல்லு.. நான் அவன்கிட்ட பேசணும்” கனகா சொல்ல, அதற்குமேல் நேரம் கடத்தாமல் உடனே ராஜிற்கு அழைத்து வீட்டிற்கு வர கூறினார்.

கனகா, பவானி இருவரும் வீட்டிற்குஹ் வரும்போது நடராஜனுடன் பேசியபடி அபி ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.

“பவானிம்மா! எங்கே போயிருந்திங்க? தாத்தா நீங்க இல்லாமல் இன்னும் சாப்பிடல” அபி வந்ததும் சொல்ல, அது காதில் விழவில்லை பவானிக்கு.

கனகா கவலையுடன் தன் அறைக்கு செல்ல, பவானி ஹாலிலேயே தொப்பென அமர்ந்தார்.

“ம்மா! என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” அபி கேட்க,

“அண்ணிக்கு ஸ்ரீ பத்தி எல்லாம் தெரிஞ்சுடுச்சு அபி” என்றார் சோர்வாய்.

“என்னம்மா சொல்ற? எப்படி?” தாத்தா கேட்க,

“ஆனந்த் காலையில அண்ணிகிட்ட பேசினான்ல.. அதான் அண்ணி ஸ்ரீயை பார்க்க என்னை கூட்டிட்டு போனாங்க.. அங்கே ஸ்ரீ எல்லாத்தையும் அண்ணிகிட்ட சொல்லிட்டா.. அண்ணி இப்ப ராஜ் நினச்சு கவலைபடுறாங்க.. அவனுக்கு பிராடு தான்னு சொல்ல முடியாத நிலைமை எனக்கு” என்று நொந்து அமர்ந்தார் பவானி.

“நல்லது தானே பவானிம்மா நடந்திருக்கு.. இனி எல்லாம் சரியா நடக்கும்.. இப்ப என்ன பண்றதா இருக்காங்க”

“தெரிலமா.. ராஜை வீட்டுக்கு வர சொல்லி போன் பண்ண சொன்னாங்க” என சொல்லிக் கொண்டு இருக்கும்போதே ஆனந்த்துடன் வந்து சேர்ந்தான் ராஜ்.

“என்னாச்சு மா? ஏன் திடிர்னு வர சொன்னிங்க?” ராஜ் கேட்க,

“அம்மா ஸ்ரீயை பார்த்து பேசினாங்களா?” என சரியாய் கேட்டான் ஆனந்த்.

“ஆமா டா.. ஸ்ரீ எல்லாம் சொல்லிட்டா” பவானி சொல்ல,

“சூப்பர்! எல்லாம் சரியா போய்ட்டு இருக்கு.. ராஜ் உனக்கு இது லாஸ்ட் சான்ஸ்.. அம்மா சாரி கேட்க தான் உன்னை வர சொல்லியிருப்பாங்க.. நீ சாரி சொல்லி உன் லவ்வையும் சொல்லிடு.. இது தான் பைனல்.. இன்னைக்கு சொல்லலைனா எப்பவும் சொல்ல முடியாது மைண்ட் இட்” ஆனந்த் சொல்ல,

“டேய் இதெல்லாம் முன்னாடியே சொல்ல மாட்டிங்களா? என்ன டா திடிர் திடிர்னு முடிவு பண்றீங்க? அய்யோ பதறுதே! கைகால் நடுங்குதே!” என்றான் ராஜ்.

“ரிலாக்ஸ் ராஜ்.. இது செகண்ட் ஆப்பர்சுனிட்டி.. ப்ளீஸ் சொதப்பிடாத.. நான் நினச்ச மாதிரி தான் நடக்குது.. ப்ளீஸ் டா.. உன் லவ் உன் மூலமா தான் தெரியணும்.. யாரோ சொல்லி எல்லாம் தெரியக்கூடாது.. சோ சொல்லிடு” ஆனந்த் சொல்லிக் கொண்டு இருக்க, அறையில் இருந்து இறங்கி வந்தார் கனகா.

“பயமா இருக்கே டா” ராஜ்.

“உதப்பேன்.. ஒழுங்கா பேசு” என தள்ளிவிட்டான் ஆனந்த்.

“அத்தை! கூப்பிட்டீங்களா?” ராஜ் கனகா முன் போய் நிற்க, அமைதியாய் சில நிமிடங்கள் அமர்ந்தார் கனகா.

“ம்மா! என்னாச்சு மா?” அன்னையின் கவலை பிடிக்காமல் அவரருகில் சென்று நின்று கேட்டான் ஆனந்த்.

“நீ சொன்னது சரி தான் டா.. நான் தான் சரியா விசாரிக்காமல் ராஜ்க்கு இவ்வளவு பெரிய கஷ்டத்தைக் கொடுத்துட்டேன்” என்றார் கனகா.

“ம்மா! கூல்.. நாணயத்துக்கு ரெண்டு பக்கமும் இருக்கே.. ராஜ்கிட்டயும் பேசிட்டு தான் முடிவு பண்ணனும்.. ஏன் இப்படி இவ்வளவு கவலை?” ஆனந்த் சொல்ல,

“நான் உனக்கு தப்பு பண்ணிட்டேன் ராஜ்” என்றார் ராஜ் கைகளைப் பிடித்தவாறு

“அத்தை என்ன அத்தை நீங்க? இப்ப ஏன் கண்ணீர் எல்லாம்.. ப்ளீஸ் அத்தை..”

“உனக்கு ஸ்ரீ தான்னு நான் முடிவு பண்ணினது எவ்வளவு பெரிய தப்பு?” என்று கூறியவர் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் விழ குடும்பமே பதறியது.

கனகா தன் கணவனை இழந்த போது அழுதவர்..அதன்பின் அவர் கண்களில் கண்ணீரை யாரும் கண்டது இல்லை.

“அத்தை ப்ளீஸ்! நீங்க அழாதீங்க.. நான் தான் சாரி கேட்கணும்.. நான் தான் தப்பு பண்ணிட்டேன்.. நான் தான் எல்லாத்துக்கும் காரணம்” ராஜ் வேகமாய் சொல்ல,

“நீ என்ன டா பண்ணுவ?” என்றார் கவலையோடு கனகா.

“இல்ல அத்தை.. உங்க முகத்தை பார்த்து பேசக் கூட எனக்கு தகுதி இல்ல... நீங்க என்கிட்ட ஸ்ரீ ஓகேவான்னு கேட்ட போதே உண்மையை சொல்லி இருந்தா இவ்வளவு தூரம் இந்த பிரச்சனை வந்திருக்காது”

“ராஜ் என்ன சொல்ற நீ?” கனகா எழுந்து கேட்க,

“சாரி அத்தை! நான் ஒரு பொண்ணை விரும்புறேன்.. அதை உங்ககிட்ட அன்னைக்கு சொல்ல எனக்கு தைரியம் இல்ல.. ப்ளீஸ் அத்தை.. என்கிட்ட பேசாம எல்லாம் இருக்காதிங்க.. அதுக்கு பயந்து தான் நான் உண்மையை மறச்சேன்.. ப்ளீஸ் அத்தை” மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்க, நிதானத்திற்கு வந்தார் கனகா.

“அத்தை என் மேல கோபப்படாதிங்க ப்ளீஸ்.. ஐம் சாரி.. ப்ளீஸ்.. “ ராஜ் சொல்ல, அவன் தலை கோதியவர் முகத்தில் மெதுவாய் புன்னகை மீண்டது.

“மன்னிச்சுட்டிங்க தானே?” ராஜ்.

“இப்ப தான் நிம்மதியா இருக்கு டா.. உனக்கு என்ன பதில் சொல்றதுன்னு எவ்வளவு பயந்தேன் தெரியுமா?” என்றார் புன்னகை மாறாமல்.

“தேங்க் யூ அத்தை.. தேங்க் யூ சோ மச்”

“சரி பொண்ணு யாருன்னு சொல்லு.. குறிச்ச முஹூர்த்த நேரத்துல உங்க கல்யாணத்தை நடத்திடலாம்” என்று சொல்ல, இப்போது அனைவருமே திருதிருவென முழித்தனர்.

“என்னடா ஆச்சு?” கனகா.

“அது வந்து ம்மா! மதுன்னு என்னோட ஜூனியர்.. தோ இவனுக்கு தான் கிளாஸ்மேட்.. டேய் உனக்கு தானே வேணும் நீயே சொல்லு” ஆனந்த் சொல்ல,

“ஓஹ் அப்ப உனக்கும் தெரியுமா?” என்றார் ஆனந்த்தை முறைத்து.

“அத்தை.. என்னால தான் எல்லாரும் மறைச்சாங்க ப்ளீஸ் அத்தை!” என்றான் ராஜ்.

“எல்லாரும்னா?” கேள்வியாய் புருவம் சுருக்கி கனகா கேட்க, குமரன் உட்பட அனைவருமே தலையை தொங்கப் போட்டு தான் நின்றனர்.

“ஓஹ் மை காட்! அப்ப உங்க எல்லாருக்குமே தெரியுமா? என் ஒருத்திக்காக தான் இவ்வளவு தேவை இல்லாத வேலை எல்லாம் நடந்ததா?” அதிர்ச்சி தான்.

குடும்பமே சேர்ந்து ஒரு விஷயத்தை மறைத்திருக்கிறது என்றால் அதில் எவ்வளவு உறுதியாய் தான் மறுத்திருக்க வேண்டும் என்று தான் தோன்றியது.

“அவ்வளவு தானா இன்னும் இருக்கா?” பொய் கோபமாய் கனகா கேட்க,

“இதோ இவ தான் எனக்கு பொண்ணு கேட்டு மது வீட்டுக்கு வந்தா.. அப்புறம் தோ இவங்க ரெண்டு பேரும் தான் கல்யாணத்துக்கு வர சொல்லி கூப்பிட என்கூட மது வீட்டுக்கு வந்தாங்க.. அப்புறம் இதோ இங்க நிக்குறானே நல்லவன் இவன் தான் இதுக்கெல்லாம் பிளான் போட்டுக் கொடுத்தான்”

தனக்கு முதலில் உதவிய அபி, இரண்டாவதாய் உடன் வந்த பவானி, நடராஜன், மொத்த பிளான் போட்ட ஆனந்த் என அனைவரையும் காட்டிக் கொடுத்தான் ராஜ்.

“அப்ப நீ?” குமரனை கைகாட்டி கனகா கேட்க,

“எல்லாரும் போனா உங்களுக்கு டவுட் வருமே.. அதான் அப்பாவை விட்டுட்டு போனோம்” அவரையும் போட்டுக் கொடுத்து முழுக் குடும்பமும் மாட்டியது கனகாவிடம்.

முன் என்றால் எப்படியோ இப்போது சிரிப்பு தான் வந்தது கனகாவிற்கு.

அவர் வாய்விட்டு சிரிக்க அனைவரும் அவரைப் பார்த்து புன்னகையுடன் நின்றனர்.

தொடரும்..
 
  • Like
Reactions: Vinolia Fernando