• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 16

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
விக்ரமின் வார்த்தைகளற்ற கோபம் கூட மலருக்கு பிடித்திருந்தது. 'நல்லவேளை! திட்ட மறந்துட்டார் போல! இன்றைய நாள் உனக்கு இனிய நாள் தான் மலர்..." என்று தனக்குத் தானே வாழ்த்திக் கொண்டு, செயற்கை நீரூற்றை ரசிக்கச் சென்றாள்.

வீட்ல எல்லா பொருளும் பார்த்து பார்த்து வடிவமைச்சிருக்காரே!!! இந்த டெரர் பீஸ்ஸுக்குள்ள இப்படி ஒரு ரசனையா!!! என்று அதிசயித்து தன் கற்பனையின் உருவாகிய நீரூற்றின் அடிவாரத்தில் மிதந்து கொண்டிருந்த மீன்களுக்கு தீணி போட்டாள்.

'ஹலோ' என்ற பெண்ணில் குரலைத் தொடர்ந்து கேட்ட இன்னிசையோடு விக்ரமின் திறன்பேசி ஒலிக்க, 'ஃபோனை இங்கேயே வெச்சுட்டு போயிட்டார் போலவே... சரி அவர்கிட்டே போய் கொடுத்திடலாம்...' என்று நினைத்து அதனை எடுத்துக்கொண்டு பால்கனியில் இருந்து தன் அறைக்குள் நுழைந்தாள்.

அழைப்பு நின்று மீண்டும் ஒரு முறை இசைக்கத் தொடங்கியது அவனது தொல்லைபேசி... அதில் ஒலித்த 'ஹலோ' தனது குரல் தான் என்று கூட தெரியாமல், அதன் பின் வந்த இசையை ரசித்தபடி அழைப்பது யார் என்று பார்த்தாள். அழைத்தது அக்ஸரா தான். அதற்குள் மூன்றாம் முறையும் இசைக்கத் தொடங்கியது. 'ஏதேனும் முக்கியமான விஷயமா இருக்குமோ! திரும்பத் திரும்ப கால் வருதே!' என்று நினைத்து 'சரி அட்டென் செய்து என்னவென்று கேட்போம்' என்று நடந்தபடியே திரையின் பச்சை வட்டத்தைத் தடவி "ஹலோ" என்றாள். அதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

திறன்பேசியை மீண்டும் கையில் வைத்து பார்த்துக் கொண்டிருக்க, பாதி திறந்திருந்த அறைக்கதவை முழுமையாகத் திறந்துகொண்டு விக்ரம் உள்ளே நுழைந்தான்.

நெற்றியை சுருக்கியபடி அவள் கையில் இருந்த தன் திறன்பேசியைப் பார்த்திட, அவன் பார்வையைக் கண்டவள், 'போச்சு... போச்சு... என் ஃபோனை நீ ஏன் எடுத்தேனு திட்டப்போறார்...' என்று உள்ளுக்குள் பயப்பந்து உருள சிலையென நின்றிருந்தாள்.

புருவங்களை உயர்த்தி என்னவென கேட்டான். "ஃபோன்... நான்.... எடுத்தேன்..." என்று வார்த்தைகள் கோர்வையாக வராமல் வாய் திக்கியது அவளுக்கு.

அவள் தினறுவதைக் கண்டதும் அவனது முகம் இருகியது. "இப்போ அதுனால என்ன?" என்று பொறுமையற்று வினவினான்.

"சாரி... உங்க ஃபோன் ரெம்ப நேரம் ரிங் ஆனது... அதனால தான் எடுத்தேன்... ஆனா ஹலோ சொல்றதுக்குள்ள கட் ஆகிடுச்சு..." என்று திறன்பேசியை பார்த்தபடி கூறி முடித்து அவனிடம் நீட்டினாள்.

அதனை வாங்கிக் கொள்ளமல் அவளையே பார்த்திருந்தான் விக்ரம்... அவளும் ஏன் இன்னும் ஃபோனை பெற்றுக்கொள்ளவில்லை! என்ற சந்தேகத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

நெற்றியை சுருக்கிக் கொண்டு, "இது என்னோட பர்ஸனல் ஃபோன்" என்று ஆரம்பிக்க, 'சரி தான்... இன்னைக்கு திட்டுவாங்கலயே... இன்றைய நாள் இனிய நாள் நெனச்சது இவருக்கும் தெரிஞ்சு மூக்கு வேர்த்திடுச்சி போல... எப்பவும் போல திட்டுறதை கேட்டுட்டு அமைதியா நிப்போம்...' என்று மலரின் மனசாட்சி தனியாக புலம்பிக் கொண்டிருந்தது.

அவளின் மைண்டு வாய்ஸை மைண்ட் செய்யாமல் விக்ரம் பேசத் தொடங்கினான். "ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸை தவிர வேற யாருக்கும் இந்த நம்பர் தெரியாது... சோ அடுத்த முறை தயங்காம யார் கால் பண்ணினாலும் அட்டென் பண்ணு... இப்படி ஃபோர் ஆர் ஃபைவ் டைம் ரிங் ஆனா மட்டும் தான் எடுக்கனும்னு இல்லே... ஃபர்ஸ்ட் ரிங்லேயே எடுத்து பேசலாம்..." என்றிட,

பெண்ணவளோ கண்களை விரித்து, 'என்னது!!! இத்தன தடவ ரிங் ஆனாது இவருக்கும் தெரியுமா!!!... இவர் மெகா கேடியா இருப்பார் போலவே! ஃபோன் ரிங் ஆனது தெரிந்தும் நான் என்ன செய்யிறேன் மறஞ்சி நின்று பார்த்திருக்காரே!!!' என்று மீண்டும் அதே மனசாட்சியே குரல் கொடுக்க, அதனை மனதிற்குள்ளேயே சென்று படித்ததைப் போல்,

அவள் கையில் இருந்த ஃபோனை விரல்களை வருடியபடி வாங்கிக் கொண்டு, "சந்தேகமே வேண்டாம்... கதவுக்கு அந்த பக்கம் நின்னு நீ என்ன செய்யிறேனு பார்த்துட்டு தான் உள்ளே வந்தேன்..." என்று மெல்லிய புன்னகையோடு கூறினான்.

அவனது புன்னிகையைக் கண்டவுடன், 'இவ்ளோ அழகாலாம் இவருக்கு சிரிக்கத் தெரியுமா!!!' என்று பிரமித்து 'இன்னைக்கு உண்மையாவே லக்கி டே தான் போல இத்தனை நாள் நடக்காத பல விஷயம் நடக்குதே!!', என்று நினைத்தபடி அவனையே பார்த்திருந்தாள்.

அவளது பார்வையில் மாற்றம் தெரிந்திட அவள் தன்னை பற்றி என்ன நினைக்கிறாள் என்று தெரிந்துகொள்ளும் ஆவலில், "இந்த மண்டைக்குள்ள அப்படி என்ன தான் ஓடுது!??? திடீர் திடீரினு ஸ்டன் ஆகிடுறே!??" என்று அவளது தலையைப் பிடித்து முன்னும் பின்னுமாக ஆட்டியபடி, வெகு இயல்பாக வினவினான். இல்லை இல்லை தன் கேள்வி இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்தான்.

தன் எண்ணங்களை வெளிப்படையாக சொல்லத் தயங்கி "ஒன்னு இல்லே" என்று கூறி மீண்டும் பால்கனி செல்லத் திரும்பியவளின் கையைப் பிடித்து நிறுத்தினான்.

ஏதோ ஒருவிதமான பயம் தோன்றிட, அமைதியாக தலை கவிழ்ந்து நின்றிருந்தாள். விக்ரமோ 'என்கிட்ட ஏன்டி உனக்கு இவ்வளவு தயக்கம்!!!' என்று மனதிற்குள் வினவியபடி அவளையே பார்த்திருந்தான். அவளது அமைதி தொடர சொல்லாமல் விடப்போவதில்லை என்பது போல் அவள் கையை அழுத்தினான்.

அதனை உணர்ந்தவளாய், "நான்... நான்..." சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்தபடி வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தாள்.. அதற்குள் அவனது திறன்பேசி அவனை அழைக்க, அதனை ஸ்வைப் செய்து காதில் வைத்தவன், "சொல்லு அக்ஷூ" என்று கூறியபடி மலரின் கையை விடுவித்து அறையைவிட்டு வெளியேறினான்.

மலருக்கோ மனதில் ஒரு பெரும் நிம்மதி பரவிட, பெருமூச்சு ஒன்றை வெளியிட்டுவிட்டு தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள குளியலறை நோக்கிச் சென்றாள்.

காலை உணவை முடித்துக்கொண்டு, விக்ரம் அக்ஸராவைப் பார்க்கச் சென்றான். அக்ஸரா விக்ரமைக் கண்டவுடன், எப்போதும் இல்லாத வழக்கமாய், வேக எட்டுகள் வைத்து தாவிச்சென்று அவனை அணைத்தாள். இதனை சற்றும் எதிர்பார்த்திடாத விக்ரமின் கைகள் தானாகச் சென்று அவளைத் தழுவிக்கொண்டது.

பொதுப்படையான நலவிசாரிப்புகளுக்குப் பின், "இரண்டு வருட வெளிநாட்டு வாசம் ஈச் அன்ட் எவ்ரி மூவ்லேயும் தெரியுதே அக்ஷூ?" என்று அவள் தன்னை அணைத்து வரவேற்றதை மறைமுகமாகக் கூறினான்.

"பழகிடுச்சி விக்கி... முதல்முறையா என்னை பொண்ணா பாக்குறேனு நெனைக்கிறேன்..."என்று அவளும் அவன் அணைத்ததை மதில் வைத்து கூறினாள். மேலும் "எப்படி இருக்கேன்? பிடிச்சிருக்கா விக்கி?" என்று மயக்கும் குரலில் வினவினாள்.

இதழலோர புன்னகையோடு அவளை முழுமையாக ஒரு பார்வை பார்த்து, "ம்ம்ம்... நாட் பேட்..."

விக்ரமிடமும் அக்ஸரா சில மாற்றங்களை உணர்ந்தாள். முன்பு இப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தால், நிச்சயம் இந்த எக்ஸ்ரே பார்வை இருந்திருக்காது... பதிலாக வெகு இயல்பாக 'என் கண்ணுக்கு நீ அழகா தான் தெரிவே... ஆனா அது முக்கியம் இல்லே... உனக்கு நீ அழகா தெரிந்தால் மட்டும் தான் உனக்குள்ள ஒரு கான்ஃபிடன்ட் வரும்... அது உடல் அழகோ மன அழகோ... உன்னை நீ மொதோ விரும்பு...' என்று பதில் கூறியிருப்பான்...

அவனது பதிலில் அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தவள், அவன் அமர்ந்திருந்த மூவர் அமரும் இருக்கையின் மறுபக்கம் வந்து அமர்ந்தபடி, "நீயும் எப்படியும் ஏதாவது ஒரு ஆட் ஷூட்க்கு ஃபாரின் வருவேனு நெனச்சேன்... பட் இன்டியா வந்த பின்னாடி தான் தெரிஞ்சது நீ உன் கெரியரை விட்டுட்டேனு...." என்று வருத்தமும் கோபமுமாகக் கூறினாள்

"அதைவிடு.... உன் லைஃப் எப்படி போகுது? நீ அங்கேயே செட்டில் ஆகிடுவேனு எதிர்பார்த்தேன்...."

"நீ இங்கே இருக்கும்போது நான் எப்படி அங்கே செட்டில் ஆவேன் விக்கி..."

"ஹேய்... நீ இன்னு இப்படி பேசுறதை நிறுத்தலேயா!!! டூ இயர்ஸ் ஃபோன்ல கூட பேசிக்கலே... இருந்தும் நீ இன்னு உன் மைண்டை மாத்திக்காம அப்படியே தான் இருக்கேயா?" என்று ஆச்சரியமாக வினவினான்.

"நியூ மேரிட்... டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நெனச்சேன்... மேரேஜ் லைஃப் போர் அடிச்சி நீயா எனக்கு கால் பண்ணுவேனு நெனச்சேன்... இங்கே வந்த பின்னாடியும்... நான் தான் உனக்கு கால் பண்ணிருக்கேன்..... என்னை மறந்துட்டு அவ்ளோ ஜாலியா இருக்கேயா விக்கி?" என்று ஏக்கமாக வினவினாள்.

"ஸ்டுப்பிட் மாதிரி பேசாதே அக்ஷூ... எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி.... நான் ஏன் உன்னை நெனைக்கனும்!!!"

அவனது பதிலில் ஏமாற்றமாக உணர்ந்தது அக்ஸரா தான். அதனை மறைக்க நினைத்து உடனே பேச்சை மாற்றினாள்.

"அப்பறம் விக்கி டீவி சேனல் எப்படி போகுது?"

"யா... இட்ஸ் கோயிங் குட்... உதி தான் டே அன்ட் நைட் பார்த்துப்பான். அவன் இல்லேனா பலநாள் என் பனியை கண்ணால கூட பார்த்திருக்க முடியாது..." என்று அவன் எதையோ நினைத்துக் கூறி, கேட்டவளின் காதுகள் தான் புகைந்தது... மீண்டும் பேச்சை மாற்ற நினைத்து,

"உன் ஃபரெண்ட்ஸ் கூட இன்னமும் பீச் ஹவுஸ்ல என்ஜாய் பண்ணிட்டு தான் இருக்கேயா? இந்த வீக் நானும் ஜாயின் பண்ணிக்கலாமா?"

"இல்லே அக்ஷூ... இப்போ நாங்க பீச் ஹவுஸ் போறதில்லே... நீ டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னா என் வீட்டுக்கு வாயேன்... என் வைஃப்-ஐ நீ இன்னும் பாக்கவே இல்லேயே!!! இன்ட்ரோ கொடுக்குறேன்." என்று 'நீ இன்னும் என் மனைவி பற்றி எதுவும் கேட்கவில்லையே' என்பதனை நினைவுப்படுத்தினான்.

"ஓ.. வரேனே... இப்போ என்ன குடிக்க எடுத்துட்டு வரட்டும்... ஒரு ஷாட் போடலாமா?" என்று குளிர்பதனப்பெட்டியைத் திறந்து, வெளிநாட்டு புட்டியை எடுத்தாள்.

"நோ அக்ஷூ... அவளுக்கு பிடிக்காது... சோ...." என்று மெல்லிய புன்னகையோடு இழுத்திட,

அக்ஸராவின் முகம் கடுப்பில் சிவந்தது. "உன் வைஃப் ரெம்ப க்ளவர் தான்... யாருக்கும் அடங்காத காளைய அவ விருப்படி அவளோட கட்டளைக்கு மட்டும் அசைய வைக்கிறாளே!!! உன்னை இயக்க வைக்கிற ரிமோட் உன் வைஃப் கையில இருக்கு போல!!!" என்று 'பெண்ணின் பேச்சைக் கேட்டு அடங்கி நிற்கும் கோழையாகிவிட்டாயே' என்பது போல் நக்கலாக உரைத்திட,

"என்ன சொல்ல வர்றே?" என்று கூர்பார்வையோடு வினவினான்.

அவனது குரலில் மறைந்திருந்த கோபத்தை கண்டுகொண்டவள், சட்டென தன் முகத்தை மாற்றிக்கொண்டு, "ரெம்ப லவ்லியான பொண்ணு போல... உன் பேரண்ட்ஸ், ஃப்ரெண்ட்ஸ் சொன்னபோதெல்லாம் கேட்காத நீ உன் வைஃப் வரவும் நிறையா மாறிட்டே... குட் சேஞ்சஸ்னு சொல்றேன்... அந்த சின்ன பொண்ணை பாக்கனும் போல இருக்கு..." என்று தன் பேச்சை மாற்றியிருந்தாள்.

"நீச்சயம் பாக்கலாம்... அவளுக்கு இப்போ கொஞ்சம் உடம்பு சரியில்லே... கூடிய சீக்கிரம் உன்னை வீட்டுக்கு இன்வைட் பண்றேன்..." என்றவன் தன் திறன்பேசியை எடுத்து மணியை பார்த்துவிட்டு, "ஓகே... அக்ஷூ இன்னொரு நாள் மீட் பண்ணலாம்... டைம் ஆகிடுச்சி... ஸ்டூடியோ போகனும் பைய்..." என்று அவளிடம் விடைபெற்றுச் சென்றான்.

அக்ஸராவிற்கோ மலரின் மேல் வன்மன் கூடியது... 'அவன் நண்பர்களிடம் கூட என்னை விட்டிக்கொடுக்காமல் பேசக் கூடியவன், இன்று ஒவ்வொரு மூச்சுக்கும் அவன் மனைவியின் பேச்சை இழுத்துவிடுகிறான்... நான் என்ன சொன்னாலும் கடிந்து பேசிடாதவன், இன்று அடிக்குரலில் மிரட்டி 'என் மனைவியை என்னிடமே குறை கூறிவிடுவாயா!' என்ற தோரணையில் பேசிவிட்டானே!! எல்லாம் அவளால் தான் என்ற கோபம்... அப்படி என்ன அவளிடம் கண்டான். அதனையும் பார்த்துவிட வேண்டும்' என்று நினைத்தபடி மலரை காணும் நாளை எதிர்நோக்கி காத்திருந்தாள் என்பதைவிட மலர் தன் கையில் சிக்கினால் எப்படி எல்லாம் அவளை வதைக்கலாம் என்று தான் சிந்தித்துக் கொண்டிருந்தாள். 'முதல் சந்திப்பை எப்போதும் மறக்க முடியாத சந்திப்பாக அமைக்க வேண்டும்' என்று வஞ்சகமாக நினைத்தாள்.

மாற்றங்கள் மனதால் நிகழ வேண்டிய ஒன்று... எவள் ஒருவள் அவனது மாற்றங்களை சந்தேகித்து அவனை வெறுத்தாளோஅவளுக்காக, அவளது கடைக்கண் பார்வை கூட அவன் மீது விழாத நிலையிலும் அவளது விருப்பத்திற்காக மட்டுமே தன்னை முழுதாக மாற்றி கொண்ட விக்ரமின் காதல், அக்ஷரா போன்ற வெளிதோற்றக்காதல் கொண்டோருக்கு எப்படி புரியும்...


இங்கே செம்பியனோ மலரின் திறன்பேசி வந்துவிட, விக்ரம் சொன்னது போல் அவனது ஃபோனில் அனைத்தையும் செட் செய்து கொடுத்துவிட்டு, மாலை ஆயிரம் பத்திரம் சொல்லிப் புறப்பட்டான்.

செம்பியன் கிளம்பிவிட்டான் என்று தெரிந்ததும் விக்ரம் தன்னவள் தனியாக இருப்பாளே என்ற நினைத்து, மற்ற நாளைவிட விரைவாகவே இல்லம் திரும்பினான். உள்ளே நுழைந்ததும் எப்போதும் போல் கண்களால் அவளைத் தேடினான். அன்று திட்டயப்பின் அவள் விக்ரமின் எதிரே வந்து நின்று வரவேற்கவில்லை என்றாலும் பெரும்பாலும் கண்ணில் பட்டுவிடுவாள்.

இப்போது அதுவும் இல்லை என்றவுடன், முதலில் அவள் அறைக்குச் சென்று பார்த்தான், அங்கே இல்லை என்றவுடன், ஒரு வேலை தன் அறையில் குருவிகளுடன் இருக்கிறாளோ! என்று தோன்றிட, அங்கே சென்று பார்த்தான்... அங்கேயும் இல்லை...

உடனடியாக "பனி" என்று சத்தமாக அழைத்தபடி வீடு முழுதும் தேடினான். எங்கேயும் அவள் இருப்பது போலவேத் தெரியவில்லை... ஏனோ ஒரு இனம் புரியாத பயம் அவன் மனதில்...

எங்கே சென்றிருப்பாள்!!! என்கிட்ட சொல்லாம போகிற அளவுக்கு அப்படி என்ன முக்கியமான வேலை... அவனது மனம் முழுதும் பதைபதைத்துக் கொண்டிருந்தது. புதிதாக நடை பழகிய குழந்தையை தனியாக வெளிய அனுப்பி வைத்திருக்கும் அன்னையின் படபடப்பு அவன் மனதில்.

உடனடியாக செம்பியனுக்கு அழைத்தான். மலர் வீட்டில் இல்லை என்றால் அவனும் பயந்துவிடுவான் என்று "செம்பியா ரூம்க்கு போயிட்டேயா?" என்று எப்போதும் போல் பேச்சை ஆரம்பித்தான்.

"ஹாங்... மச்சான்... இப்போ தான் வந்தேன்... நீங்க எங்கே இருக்கிங்க?"

"நான் இப்போ தான் வீட்டுக்கு கிளம்புறேன்..." என்று பொய்யுரைத்தான்.

"இன்னைக்காவது சீக்கிரம் கிளம்பிருக்கலாம்ல... சரி சீக்கிரம் போங்க அக்கா வீட்ல தனியா இருக்கும்..." என்று வருந்திட,

"அவ...... அவளுக்கென்ன... அவ இருந்துப்பா..."

"அக்கா தைராயத்துக்கெல்லாம் குறைச்சல் இல்லே... ஆனா லோன்லியா ஃபீல் பண்ணும்ல... அதான் சொன்னே மச்சான்... சரி நீங்க வீட்டுக்கு போயிட்டு கால் பண்ணுங்க... லேட் பண்ணாதிங்க" என்று அழைப்பை துண்டிக்க நினைத்தவன் மீண்டும் விக்ரமின் குரல் கேட்டு காதில் வைத்தான்...

"செம்பியா... உன் அக்கா ஃபோன்ல சிம் கார்டு போட்டு ஆக்டிவேட் பண்ணிட்டியா?"

"பண்ணியாச்சு மச்சான்... நம்பர் உங்களுக்கு அனுப்பியிருக்கேன்... பாருங்க" என்று தன் மச்சானின் அடுத்த கேள்விக்கும் சேர்த்து விடையளித்தான்.

எதற்கு ஃபோன் செய்தானோ அந்த தகவல் கிடைத்துவிடவே சற்றும் தாமதிக்காமல் "சரி ஓகே அப்பறம் பேசுறேன்..." என்று அவசரமாக அழைப்பை துண்டித்து, மலரின் எண்ணை அழுத்தினான். அதற்குள் அவனது மூளை வேலை செய்யத் தொடங்கியது... 'இந்த எண்ணிலிருந்து நான் ப்ரோங்கிராம் ரீப்ளே பார்க்கும் போது அழைப்பு வந்ததே! ஏதோ புது எண்... பிறகு பேசிக்கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்துவிட்டேனே!!! புது எண் என்றால் இவளது எண்ணாக இருக்கும் என்று ஏன் அப்போது தோன்றாமல் போனது!!!... என்ன சொல்ல அழைத்திருப்பாள்?' என்று யோசித்தபடி அவளது எண்ணிற்கு அழைப்பு விடுக்க, முழுவதுமாக அழைப்பு சென்று யாருமே எடுக்காமல் கட் ஆனது.

மீண்டும் ஒருமுறை அழைத்தான்... இப்போது அழைப்பு ஏற்கப்பட்டது, "ஹலோ... எங்கே இருக்கே? எத்தனவாட்டி சொல்றது... சாய்ந்தரம் நான் வரும்போது வீட்ல இருனு... உனக்கே உடம்பு சரியாகி ஒரு வாரம் தான் ஆகுது, அதுக்குள்ள தனியா எங்கே போன? என்கிட்ட சொன்னா நான் கூட்டிட்டு போவேன்ல..." என்று ஃபோனிலேயே காட்டுகத்தல் கத்தத் தொடங்கினான்.

-தொடரும்​