• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 18

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 18

தன் அறையில் அமைதியாய் கட்டிலில் மலர் அமர்ந்திருக்க, அவளை முறைத்து பார்த்து அது பலனில்லை என்றதும் அதிலும் தோல்வி கண்டு நின்றான் செழியன்.

சில நிமிடங்கள் அப்படியே கழிய, தன் மொபைலை எடுத்த மலர் தன் அண்ணனின் எண்ணிற்கு அழைத்தாள்.

"ஹாய் ண்ணா! எப்படி இருக்கீங்க? ரச்சு என்ன பன்றா? அம்மா அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க?" என பொழுதுபோகாதவளாய் பேச ஆரம்பிக்க, செழியன் பல்ஸ் எகிறியதுடன் சில நொடிகளில் அவள் சேட்டையில் கொஞ்சம் இலகுவாய் அவளை ரசிக்கும் ரசிகனும் வெளிவந்திருந்தான் செழியன்.

"ஏன் டி! போன் எடுத்தா யார் என்னனு கேட்குற பழக்கமே இல்லையா? உன் அண்ணனை விட தத்தியா இருக்க? ஆமா எல்லாரையும் கேட்டியே! இந்த அண்ணிய கேட்டியா? நான் ஆரோ தான உனக்கு?" என ஆரம்பித்திருந்தாள் அஜிதா.

"அண்ணி! நீங்களா? சாரி சாரி அண்ணி! கவனிக்கல"

"அதான் கவனிக்கலனு தான் டி நானும் சொல்றேன்.. பேச்சு ஓவரா இருக்கு.. துள்ளலும் ஓவரா இருக்கு.. செழியன் அண்ணா கூட ராசி ஆகிட்டியா இல்ல அவரை வெறுப்பேத்துற மாதிரி எதையும் பண்ணி வச்சுட்டு இருக்கியா?" சரியாய் நாடிப் பிடித்திருந்தாள் அஜிதா.


"உனக்கு வேற வேலையே இல்ல.. உன்னை கட்டினதுக்கு.." என்ற பேச்சுக்களும் தொடர்ந்து மொபைல் கைமாறி மகேந்திரனும் மலரின் இணைப்பில் வந்திருந்தான்.

அதற்கு மேல் பொறுமை இல்லை செழியனிற்கு. மொபைலை பறித்து கட் செய்ய, அவள் மறுப்பதற்குள் அவள் அருகில் மெத்தையிலேயே வீசி இருந்தான்.

"இப்ப எதுக்கு கட் பண்ணீங்க?" மலர் கேட்க,

"நான் உன்கிட்ட கேள்வி கேட்டு அரை மணி நேரம் ஆச்சு மலர்விழி!" செழியன் கூற,

"அதுக்கு பதில் வேணும்னா நான் சொன்னதை நீங்க செய்யணும்னு சொல்லியும் அதே அரை மணி நேரம் ஆச்சு" என விதண்டாவாதம் பேசினாள் மலர்.

"உனக்கு புரியலையா? நான் தான் சொல்றேன்ல?"

"என்ன சொல்றிங்க சுரைக்காய்க்கு உப்பில்லைனு? மலர்னு கூப்பிட சொன்னா ரொம்ப ஓவரா பண்றீங்க.. மூணு நாள் எத்தனை மலர் வந்துச்சு? மலர் மேடையாம்.. மலர் அலங்காரமாம்.. மலராலேயே ரூம்க்கு கூட.." என்றவளுக்கு முழுதாய் கூற முடியாமல் வெட்கத்தில் முகம் சிவந்த போதும் அதை முடிக்காமல் விட்டு அவனை விடுவதாய் இல்லை என்பதை போல அடுத்த கேள்விக்கு தாவி இருந்தாள்.

"இவ்வளவு செய்ய முடிஞ்சதுல! தெரியாம ஒரு தப்பு பண்ணினா.. அந்த மலரை என்ன காக்கா தூக்கிட்டு போய்டுமா? மூணே நாள்ல என்னை வெறுக்க முடியும்னா காலம் முழுக்க எப்படி நாம சேர்ந்து வாழ முடியும்?" வேண்டும் என்றே அவள் பேச,

"என்ன உலர்ற நீ? வெறுக்குறேன்னு நான் எப்பவாச்சும் சொன்னேனா? உன்னை நீயே நியாப்படுத்திக்க என்னென்னவோ சொல்ற!"

"நான் ஒன்னும் நியாயப்படுத்தல.. நான் செஞ்சது தப்புன்னு சொல்லி மன்னிப்பும் கேட்டுட்டேன்.. கம்பெனி வரமாட்டேன்னு சொல்லியும் ஒரு வாரம் ஆச்சு.. நீங்க மறக்கணும் மாறனும்னா இதுக்கு நான் என்ன தான் செய்ய முடியும்.. தப்பு பண்ணினா தண்டனை வேணும் தான? அதான் சாப்பிடாம இருக்கேன்.. நீங்க கிளம்புங்க.. கம்பெனிய தூக்கி நிறுத்தணும்.. ரெஸ்டாரன்ட்ல காபி போடணும்.. போங்க.." கோபமாய் சொல்லியவள் மீண்டும் மொபைலை எடுக்க, அவள் பேசியதில் கோபமே இல்லாமல் நின்றான்.

நான்கு நாட்கள் தொடர்ந்து அவனோடு கம்பெனி சென்று கொண்டிருந்தாள். அங்கிருந்து அவன் சில மணி நேரங்களில் ராஸ்டாரண்ட் சென்றுவிடவும் இவளும் வீட்டிற்கு கிளம்பிவிடுவாள்.

தெரிந்தாலும் கேட்காமல் அவன் விட்டுவிட்டான். வருத்தம் வருத்தமாய் தொடரக் கூடாது என்று அவள் மெனக்கெட, அது எப்படி நீ அப்படி செய்யலாம் என்ற செழியன் கூற்று அவ்வபோது மேல் எழுந்து தான் நின்றது.

ஆம் அவ்வபோது தான். முழுதாய் அதையே நினைத்தது எல்லாம் ஒன்றிரண்டு நாட்கள் தான்.. அதன்பின் அதை நினைக்கவே விடாமல் எதையாவது செய்து வைத்துக் கொண்டிருந்தாள் மலர்.

ரெஸ்டாரண்டிற்கு செழியன் செல்லவும் வேண்டுமென்றே கவினிற்க்கு அழைத்து பேசுவாள். செழியன் காதல் கதையை கேட்பாள்.

"மலரம்மா! வேலை நேரம் மலரம்மா.. நீ செழியன் வீடு வந்ததும் அவன்கிட்டயே கேளேன்" என்று கவின் செழியன் அருகே நின்று கொண்டே கூற,

"உங்க பிரண்ட் தான் என்கூட டூ விட்ருக்காரே!" என்று கூறி கவின் செழியனை நாலு வார்த்தை கேட்டு என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம்.

அடுத்தநாள் பிரேம் எண்ணிற்கு அழைத்து, "ஹாய் ண்ணா! ஸ்ரீ எப்படி இருக்காங்க?" என்று கேட்டுவிட்டு, நேத்ரா மேம் பற்றியும் விசாரிப்பாள். செழியனும் இருக்கும் பொழுது தான்.

"உங்க சிஸ்டர் நேத்ரா மேம்கிட்ட நான் ஒரு சாரி சொல்லணும் ண்ணா! அவங்க நம்பர் குடுங்களேன்!" என்றதும்,

"சசிக்கா நம்பரா? இப்பவே அனுப்புறேன் சிஸ்டர்" என்று பிரேம் கூற, செழியன் கேட்டுக் கொண்டிருந்தாலும் தடுக்கவில்லை.

"இப்ப என்ன மலர்னு கூப்பிடனும் அதானே? கூப்பிடுறேன்.. போ! போய் சாப்பிடு!"

"கூப்பிடுறேன்னா! எப்போ?" நம்பாமல் அவள் கேட்க, பல்லைக் கடித்தவன்,

"அதான் சொல்றேன்ல! நான் சொன்னா சொன்னதை செய்வேன்!" என்றதும், அவளும் எழுந்து கொண்டாள்.

"அண்ணி! இன்னைக்கு நாம அவுட்டிங் போலாமா?" சாப்பிட செழியன் அருகே அமர்ந்த மலரிடம் புகழ் கேட்க,

"உங்க அண்ணா தான் கூட்டிட்டு போகல.. நீயாவது கூப்பிட்டியே!" என்றபடி வெளியில் செல்வது குறித்து பேசியபடி சாப்பிட்டு முடித்தனர்.

"எங்களை ட்ரோப் பண்ணிடு ண்ணா!" புகழினி செழியனிடம் கேட்க,

"புகழ்! உங்க அண்ணாக்கு ரெஸ்டாரண்ட்ல தோசை சுடுற வேலை இருக்கும்.. வா நாம ஆட்டோல போய்க்கலாம்" என்று கூற, இன்று அதிகமாய் பேசுபவளை மனதில் குறித்துக் கொண்டான் செழியன்.

அவன் அவளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், தாங்கள் எப்படி இருக்க வேண்டும் என அவள் நினைவுகள் எல்லாம் அவளை மாற்றி இருக்க, பத்து நாட்களாய் சரியாய் பேசாதவனிடம் சண்டை என்ற பெயரில் பேசிக் கொண்டே இருந்தாள் மலர்.

"வெயிட் பண்ணுங்க புகழ்! நான் போய்ட்டு கார் அனுப்புறேன்.." செழியன் கூற,

"ஓஹ்! உன் பேரை எல்லாம் ஷார்ட்டா தான் கூப்பிடுவாங்களா? என்னை எல்லாம் யாரும் அப்படி கூப்பிட மாட்டாங்க.. எவ்வளவு லென்த்னாலும் மலர்.. விழி.. னு இழுக்க தான் செய்வாங்க" மலர் கூற, புரியாமல் விழித்தாள் புகழினி.

"அதிகமா பேசுற! வந்து பேசிக்குறேன்!" என்றுவிட்டு சென்றான் செழியன்.

"என்னவோ சரி இல்லைங்க! மலர் கோபமா இருக்கா அதுவும் ஏன்னு புரியல.. இவனும் அவளை சமாதானப்படுத்தின மாதிரி தெரியல.. என்னவா இருக்கும்.. கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட ஆகல.. எனக்கு என்னவோ பயமா இருக்கு"

சிறிது நாட்களில் இருவரின் நடப்புக்களை வைத்து லட்சுமி பயந்து கணவனிடம் கூற,

"நீ நினைக்குற மாதிரி எல்லாம் ஒன்னும் இருக்காது லட்சுமி!" என ஆறுதல் கூறினார் பாலக் கிருஷ்ணன்.

"இல்ல! என்னவோ இருக்கு..இன்னைக்கே கேட்குறேன்.. அவன் வரட்டும்.. நைட்டு இருக்கு அவனுக்கு.. மலர் காரணமா தான் கோபமா இருப்பா" லட்சுமி அவரே நினைத்துக் கொள்ள,

தயக்கமாய் இருந்த போதும் பாலகிருஷ்ணன் இவ்வளவு நாட்கள் கடத்தியதே பெரிது என்பதைப் போல செழியனின் காதல் கதையை தனக்கு தெரிந்ததை கொஞ்சமாய் மனைவியிடம் பகிர்ந்தார். அதுவும் மனைவியை ஆற்றுப்படுத்த மட்டுமே!

"என்னங்க இப்ப சொல்றிங்க?" அதிர்ந்த லட்சுமி கேட்க,

"யாருக்கு எப்படியோ லட்சுமி! செழியனுக்கு இது லவ் மேரேஜ்! அதனால சண்டை வர வாய்ப்பில்ல.. அப்படியே வந்தாலும் அவங்க பார்த்துப்பாங்க"

"புரியாம பேசாதீங்க! எவ்வளவு ஈஸியா சொல்றிங்க நீங்க? இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல? நான் சொன்னேன்ல மலர் மேல தப்பிருக்காதுன்னு.. பார்த்திங்களா.. இது தான் பிரச்சனை! இவன் லவ் பண்ணினா.. உடனே கல்யாணம் பண்ணி வச்சுருவீங்களா? அப்போ மலர் பாவம் இல்லையா? மலருக்காக பேசின லட்சுமி பெண்ணின் மனதைப் புரிந்தவராய் பேசினார்.

"அதுக்கு தான் கம்பெனிக்கு கூட்டிட்டு போனானா? வேலை பாக்குறது கூட அவன் விருப்பம் தானா?" என இல்லாத கதையெல்லாம் அவர் கற்பனை செய்து கொள்ள, பாலகிருஷ்ணனுக்கும் கூட அப்படி இருக்குமோ என தோன்றிவிட்டது.

புகழினியுடன் வெளியில் சென்ற மலர் தனக்கு தேவை என நினைத்த சிலதை வாங்கிக் கொண்டு கணவனுக்கு பரிசளிக்க என தேடி தேடி ஒரு சட்டையையும் எடுத்து வீடு வந்து சேர்ந்தாள்.

வந்தவளை லட்சுமி பாவமாய் பார்க்க, அர்த்தம் புரியாமல் மலரும் பார்த்து நின்றாள்.

"உனக்கும் செழியாக்கும் என்ன டா பிரச்சனை?" நேரடியாய் கேட்கவும், மலர் தயங்க,

"அவன் மேல கோபமா இருக்கியா மலர்?" என்றதில்,

"அய்யயோ! அப்படி எல்லாம் இல்ல த்தை.. எனக்கு என்ன கோபம்?" என மலர் சமாளிக்க,

"அவன் பண்ணின வேலைக்கு நீ கோபமா இல்லைனா தான் அதிசயம்" என்று லட்சுமி கூற இன்னும் புரியாமலும் குழப்பத்திலும் நின்றாள் மலர்.

"உங்க மாமா என்கிட்ட எல்லாம் சொல்லிட்டாங்க.. காதல்னு சொல்லி எங்க கொண்டு உன்னை விட்ருக்கான்.. அதுக்கு தானே நீ கோபமா இருக்க? எனக்கு தெரியும்.. ஆனா அவன் கெட்டவன் எல்லாம் இல்ல டா.. ரொம்ப ரொம்ப நல்ல பையன்.. தப்பா எதுவும் முடிவுக்கு வந்துடாத"

எங்கே செழியன் தவறால் மலர் வருந்தி வீட்டைவிட்டு சென்றுவிடுவாளோ என்ன நினைத்து லட்சுமி சாதுவாய் முகம் கொண்டு மருமகளிடம் கெஞ்சி கொஞ்ச, முத்தலில் புரியாமல் விழித்த மலர் புரிந்த பின் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

"அப்படி எல்லாம் எதுவும் இல்ல த்தை.. நீங்க எதுவும் நினைச்சுக்காதீங்க.." என பொதுவாய் கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

சிறிது நேரத்தில் உள்ளே வந்த மகனை லட்சுமி பிடி பிடியென பிடித்துக் கொண்டார்.

"என்னம்மா ஆச்சு? ஏன் திட்டுறீங்க?" நடையில் உற்சாகம் தெரிய உள்ளே வந்தவனை அன்னை நிறுத்தி அதட்டவும் என்ன என புரியாமல் அவன் கேட்க, கணவன் கூறியதை அவனிடம் கூறியவர்,

"ஏதோ உன் நேரத்துக்கு நல்ல பொண்ணா பார்த்து கட்டியிருக்க.. உன் மேல கோபம் இருந்தாலும் அதை என்கிட்ட காட்டம நீங்க எதுவும் நினைச்சுக்க வேண்டாம்னு சொல்லிட்டு போறா" என்று கூற,

"ஓஹ்! என் மேல கோபமா மேடம்க்கு?" மனைவியை நினைத்து பல்லைக் கடித்தான் அந்த நாளின் இரண்டாம் முறையாய்.

தொடரும்..
 
  • Like
Reactions: Durka Janani

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
190
63
Coimbatore
மனது குறித்து கொண்டதாம்
மலர் என்று சொன்னால் போதும் மனம் இறங்கி வந்துவிடுவாள்....
மல்லுக்கட்டும் மைனரே
மனம் இறங்கி வாரீரோ..... 🤩🤩🤩
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
மனது குறித்து கொண்டதாம்
மலர் என்று சொன்னால் போதும் மனம் இறங்கி வந்துவிடுவாள்....
மல்லுக்கட்டும் மைனரே
மனம் இறங்கி வாரீரோ..... 🤩🤩🤩
வருவரே