முன்னே பின்னே தெரியாத பெண்ணை மணந்து தன் மாடலிங் பணிக்கு தானே சூனியம் வைத்துக் கொள்ள விக்ரம் தயாராக இல்லை. அன்னையின் துணையோடு தந்தையின் திட்டத்தை முறியடித்துவிடலாம் என்று நினைத்திருந்தான்.
விக்ரம் தன் தந்தையைப் பற்றி நன்றாகவே அறிந்திருந்தவன் என்பதால், அவர் தனக்காக பார்த்து வைத்திருக்கும் பெண் நிச்சயமாக தன் ஊரைவிட்டு வெளியேறிடாத பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட செல்லப்பிள்ளையாகத் தான் இருப்பாள் என்று ஊகித்தான்.
அப்படி ஒருத்தியை தன் இணையாக ஏற்றுக்கொண்டால் பின் வரும் நாட்களில் தன் வேலை காரணமாக செல்லக் கூடிய பார்ட்டீஸ், அவார்ட் ஃபங்ஷன்ஸ் போன்றவற்றில் உடை நாகரிகம் இன்றி, நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் திறனற்றவளாய் அனைவர் முன்னிலையிலும் அவள் நின்றாள் என்றால் தனக்கு தான் அசிங்கமாகிவிடும் என்று மட்டும் தான் சிந்தித்தான்.
விக்ரமைப் பொருத்தவரை அவனது மனைவி இடத்திற்கு ஏற்றார் போல் உடையணியும் நவ நாகரிக மங்கையாக இருக்க வேண்டும்..... அவன் அன்னை விசாலி அப்படிப்பட்டவர் தான். ஆனால் சேலை, சுடிதாரைத் தவிர வேறு உடை அணிவதற்கு ரத்தினகண்ணன் அனுமதித்தில்லை... அதில் விசாலிக்கு கொஞ்சம் வருத்தமும் உண்டு...
அதனால் அதனை காரணம் காட்டியே தன் அன்னையைக் கொண்டு தந்தை தேர்ந்தெடுத்த பெண்ணை நிராகரிக்க நினைத்திட, ரத்தினகண்ணனோ அந்த பெண்ணை தேர்ந்தெடுத்ததே தன் அன்னை தான் என்றிட விசாலியின் மேல் தன் கோபத்தைத் திருப்பினான் விக்ரம்.
'ஒருவேளை அம்மா அவரின் ரசனைக்கு ஏற்றார் போல் தேர்ந்தெடுத்திருந்தால்!!!!' என்று ஒருநொடி யோசித்திட, 'அப்படி இருந்திருந்தால் அப்பா நிச்சயம் இதற்கு ஒத்துக் கொண்டிருந்திருக்கமாட்டார்...' என்றது அவன் மனம்.
இப்படி மாற்றி மாற்றி யோசித்து தன்னைத் தானே குழப்பிக் கொண்டிருந்தவன் மனம் தப்பிக்க வழி தெரியாமல் 'பேசாம வினோ சொன்னது மாதிரி அக்ஸராவே பரவாயில்லே போலயே!!! அவளையே கல்யாணம் செய்து கொள்ளலாமா!!!' என யோசிக்கத் தொடங்கியது.
எதற்கும் ஒருமுறை அன்னையிடம் அந்த பெண்ணைப் பற்றி கேட்டு தெரிந்து கொள்வோம் என்று நினைத்து தன்னை அமைதிபடுத்திக் கொண்டான்.
மதியம் போல் இல்லம் நுழைந்த அன்னையின் முன் வந்து நின்று,
"மாம்... இன்னும் டென் டேஸ்ல எனக்கு என்கேஜ்மெண்ட்-ஆ?" என்று கோபத்தை அடக்கியபடி வினவினான்.
அவனின் உரத்த குரலில் பணியாட்கள் ஒருசிலர் இருவரையும் திரும்பிப் பார்க்க, விசாலியும் தன் மகனின் கோபத்தை உணர்ந்து கொண்டு "ரூம்குள்ள போய் பேசலாமா?" என்று கேட்டுவிட்டு அவன் பதிலுக்காக காத்திராமல், விறுவிறுவென்று தன் அறைக்குள் புகுந்தார்.
அவனும் அறைக்குள் நுழைந்தவுடன், "ஆமா பார்த்தி... டாடி சொன்னாங்களா?" என்று சாவதானமாக யாருக்கோ நிச்சயதார்த்தம் என்பது போல் வினவினார்.
அதில் மேலும் கோபமுற்றவன், "என்னை என்ன உங்க புள்ளைனு நெனச்சிங்களா! இல்லே அடிமைனு நெனச்சிங்களா! உங்க விருப்பத்துக்கு பொண்ணு பார்த்துட்டு கல்யாணம் வரைக்கும் டேட் ஃபிக்ஸ் பண்ணியிருக்குறிங்க!!! என்னால இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியாது... உங்க இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கிறதுக்கு நான் ஒன்னும் பொம்மை இல்லே!!!" என்று கத்திட,
"பார்த்தி இந்த அம்மாவே நீ புரிஞ்சிகிட்டது இவ்ளோ தானா!!! நீ பொம்மை இல்லே தான்... ஆனா அந்த பொண்ணு முழுக்க முழுக்க பொம்மை... நீ என்ன சொன்னாலும் கீ கொடுத்த பொம்மை மாதிரி செய்வா..." என்று வெற்றிக் களிப்போடு கூறினார்.
அதில் மேலும் குழப்பமுற்றவன் "என்ன....? என்ன சொல்ல வரிங்க?" குரலைத் தளர்த்தி மெதுவாக வினவினான்.
"அவளுக்கு இந்த சென்னை புதுசு... உன்னுடைய ஃபீல்டு பத்தி சுத்தமா தெரியாது... நீ என்ன சொல்லித் தரேயோ அது தான் இனி அவள் உலகம்... இப்போ நீ எப்படி உன் வாழ்க்கைய என்ஜாய் பண்ணிட்டு இருக்கேயோ அதே மாதிரி ஆஃப்டர் மேரேஜ் உன் லைஃப் ஜாலியா தான் இருக்கும்னு சொல்றேன்..." என்றிட சுத்தமாக தன் யோசிக்கும் திறனை இழந்தான் விக்ரம்....
அன்னை கூறிய வார்த்தைகள் மூளையைக் குடைய பதிலேதும் கூறாமல் அவரையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன், தன் அன்னையின் "இப்போ சம்மதமா?" என்று கேள்வியில் முகத்தைத் திருப்பிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.
என்ன மாதிரி உணர்வுகளை உணர்ந்தான் என்று அவனுக்கே புரியவில்லை. அன்னை கூறிவது தனக்கு சாதகமாகத் தோன்றினாலும் இது எத்தனை நாளைக்கு சரிவரும்! என்று அவனது மூளை யோசிக்கத் தூண்டியது.
முதல் நாள் தன் நண்பர்களுடன் நேரம் செலவிடும் போது கூட தன் எல்லை அறிந்து மது அருந்தியவன், இன்று தன் சுய கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டுத் திரியும் மனதினை அமைதிப்படுத்த முடியாமல், முழு மது கோப்பைகளை காலி கோப்பைகள் ஆக்குவதில் முனைந்தான்.
ஒருகட்டத்திற்கு மேல் அதுவும் உள்ளிறங்க மறுக்க, ஒட்டு மொத்த கோபத்தையும் தன் சட்டை பட்டன்களில் காண்பித்து அவற்றை தெரிக்கவிட்டபடி சட்டையை வீசி எறிந்துவிட்டு நீச்சல் குளத்தில் குதித்தான்.
இரவு முழுதும் இல்லம் திரும்பிடாத தன் மகனை நினைத்து விசாலிக்கு பெரிதாக கவலை ஒன்றும் இல்லை என்றபோதும் கணவர் கேட்டால் எங்கிருக்கிறான் என்று பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக அவனது எண்ணிற்கு பல முறை அழைத்துப் பார்த்தார். பலன் பூஜ்ஜியமாகத் தான் இருந்தது.
அதிகாலைப் பொழுதில் விக்ரமின் நண்பர்களுக்கு அழைத்து கேட்டிட இருவரும் அவனை தேடத் தொடங்கினர். உதயன் பீச் ஹவுஸ் காவலாளிக்கு அழைத்து விசாரிக்க அங்கே தான் இருக்கிறான் என்றார் அவர். கூடுதல் தகவலாக அக்ஸராவும் உடன் இருப்பதாகக் கூறிட அதனை நம்ப மறுத்தது நட்பு.
வினோவும், உதியும் பீச் ஹவுஸ் வந்து சேரும் போது மணி காலை ஐந்தை நெருங்கியிருந்தது. காவலாளியிடம் இருவரும் எப்போது வந்தார்கள் என்று கேட்டிட, அவரோ விக்ரம் நேற்று மதியமே வந்துவிட்டதாகவும், மேடம் இரவு ஏழு மணி அளவில் வந்ததாகவும் கூறினார். இதற்கு மேல் என்ன நடந்தது என்று அவரிடம் கேட்பது முறையல்ல என்று அறிந்து தயங்கியபடி உள்ளே நுழைந்தனர்.
இங்கே வந்தால் விக்ரம் தங்கும் அறை நோக்கி நேரே சென்றுவிட்டனர். ஆனால் இருவருக்கும் கதவைத் தட்ட தயக்கம்... சற்று நேரம் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி நிற்க, நீச்சல்குள பால்கனி கதவின் அருகே தண்ணீர் சத்தம் கேட்டதும் விரைந்து நீச்சல் குளம் வந்து பார்த்தனர். விக்ரம் மட்டும் தனியாக அங்கே நீந்திக் கொண்டிருந்தான்.
அதனைக் கண்டவுடன் தான் உதிக்கு சுவாசம் சீரானது.
"அவ எங்கே டா?" என்ற உதிக்கு, கண்களால் அவன் அறைக்கு பக்கத்து அறையைக் காண்பித்தான்.
"அவளை எதுக்கு இங்கே வர சொன்னே?" என்றான் வினோ.
"நான் யாரையும் வர சொல்லலே..." என்று விட்டேந்தியாக அவர்களையும் சேர்த்தே பதில் கூறினான்.
அதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு "பின்னே எப்படி இங்கே வந்தா?"
"அவுட்டிங் கூப்பிட்டா... என்னால வரமுடியாது பீச் ஹவுஸ் வந்திருக்கேனு தான் சொன்னே... அவளே இங்கே வந்துட்டா..... " என்று எங்கோ பார்த்து பதில் கூறினான்.
அவனிடம் பேசிய போதும் அருகில் விக்ரம் அடுக்கி வைத்திருந்த காலி கோப்பைகளை இருவரும் கண்டனர்.
"இப்போ என்ன ப்ரச்சனை உனக்கு? வீட்டுக்குக் கூட போகாம நைட் ஃபுல்லா இப்படி மெதந்துட்டு இருக்கே?" என்றான் உதி.
"அது எதுக்கு உனக்கு!!! என் ப்ரச்சனைய சொன்னாலும் உங்களாள புரிஞ்சிக்க முடியாது...." என்று கூறிவிட்டு மீண்டும் நீந்தத் தொடங்கினான்.
"என்னடா பேசுறே!!! நாங்க ரெண்டு பேரும் உன்னை புரிஞ்சுக்கமாட்டோம்னு நெனைக்கிறேயா?"
"ஆமாடா.... ஏன் நேத்து கூட வினோ எனக்கு தானே அட்வைஸ் கொடுத்தான்? ஏதோ நான் ஊரெல்லாம் வ.............." என்று அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் பல்லை கடித்துக் கொண்டு வினோத்தை பார்த்திட, அவனோ சற்று சங்கடமாக,
"டேய் மச்சா.... ஐ ஆம் நாட் மீன் தட் டா.... அல்ரெடி மாடலிங் கேர்ள்ஸ் உன் பின்னாடி சுத்துறதுனால எல்லாரும் உன்னை தான் தப்பா பேசுறாங்க. எந்த பொண்ணா இருந்தாலும் பரவாயில்லே, நீ சீக்கிரம் கல்யாணம் செய்துகிட்டா இந்த பேச்செல்லாம் வராதேனு தான் அந்த டாப்பிக்கை ஆரம்பிச்சேன்.... ஆனால் அது உன்னை இவ்ளோ கஷ்ட படுத்தும்னு நெனைக்கலே டா..."
"கல்யாணம் தானே!!! இதோ செய்துக்கிறேன். என் அப்பா எனக்காக பட்டிக்காட்டு கட்டுப்பெட்டியா ஒரு பொண்ணை பார்த்து வெச்சிருக்கார்.... இன்னு ஃபார்ட்டி ஃபைவ் டேஸ்ல கல்யாணம். இனி யாரும் என்னை பத்தி பேசமாட்டாங்க... என் வைஃப் பத்தி தான் பேசுவாங்க.... போதுமா!!!" என்று சிடுசிடுத்தபடி பாத்ரோப் எடுத்து அணிந்து கொண்டு குளத்தை விட்டு வெளியே வந்தான்.
நீச்சல் குளத்தின் அருகிலேயே அமைக்கப்பட்டிருந்த வட்ட வடிவிலான நீள்சாய்விருக்கையில் வந்து அமர்ந்து கொள்ள, நண்பர்களும் அவன் எதிரே வந்து அமர்ந்தபடி,
"உனக்கு கல்யாணமா!!!" என்று கேட்ட நொடி நண்பர்கள் இருவர் முகத்திலும் அப்படி ஒரு சந்தோஷம்...
"அதை நிறுத்துறதுக்கு வழி சொல்றதா இருந்தா இங்கு இருங்க... சும்மா எனக்கு அட்வைஸ் பண்றதா இருந்தா கிளம்புங்க..." என்றிட இருவரின் முகவும் இவ்வளவு நேரம் இருந்த மகிழ்ச்சி மங்கி கருத்தது.
"ஏன் நிறுத்தனும்!??? வேலிட் ரீஸன் சொல்லு.... ஹெல்ப் பண்றோம்" என்று உதி அவனை மடக்க,
சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்த விக்ரம் திடீரென, "அதானே ஏன் நிறுத்தனும்?" என்றிட நண்பர்கள் இருவரும் குழப்பம் அடைந்தனர்.
அப்போது சரியாக மூவருக்கும் காஃபி எடுத்து வந்த அக்ஸரா "எதை நிறுத்தனும்?" என்று கேட்டபடி அருகில் வந்தாள்.
கருநீல நிற முழங்கால் அளவு நீண்ட முழுக்கை சட்டையில் மேல் பட்டன் பூட்டப்படாமல், கை சட்டையை மடக்கிவிட்டபடி, தலைவிரி கோலமாக நடந்து வந்தவளை உதி இரண்டாம் முறை நிமிர்ந்து பார்க்க விரும்பவில்லை என்றால், வினோ நெற்றி சுருக்கி அறுவறுப்பு உணர்வு காட்டியபடி திரும்பிக் கொண்டான்.
இருவரின் முக பாவனையைக் கண்ட விக்ரம் தொண்டையை செருமியபடி அவர்களை முறைக்க, நண்பனுக்காக பொய்யாக ஒரு புன்னகையை உதிர்த்து அவள் தந்த காஃபியை எடுத்துக் கொண்டனர்.
இறுதியாக விக்ரமின் அருகே வந்து அவனுக்கு ஒரு கப்பை கொடுத்துவிட்டு தனக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு விக்ரமின் அருகே அமர்ந்து கொண்டாள். அவளின் வருகையால் நண்பர்களின் பேச்சு தடைபட, அதனை வெளிகாண்பிக்க விரும்பாத விக்ரம்
"என்ன சீக்கிரமே எழுந்துட்ட?" என்று அவளிடம் வினவினான்.
"நீ சத்தம் போட்டு பேசினதுல முழிப்பு வந்திடுச்சு... வெளியே எட்டி பார்த்தேன்... இவங்க ரெண்டு பேரும் இருந்தாங்க... சரி ஏதோ பஞ்சாயத்து போலனு தான் எல்லாருக்கும் காஃபி எடுத்துட்டு வந்தேன்... தெம்பா ஆர்கியூ பண்ணுங்க..." என்று அவள் மீண்டும் தொடங்கி வைத்தாள்.
"எனக்கு கல்யாணம், அப்பா ஃப்ரெண்டோட பொண்ணு...." என்று விக்ரம் கூறியது தான் தாமதம், அவன் அணிந்திருந்த பாத்ரோப்பை கொத்தாகப் பிடித்து,
"அப்போ எனக்கு என்ன பதில் சொல்லப் போறே?" என்று ஆக்ரோஷமாக வினவினாள்.
அவள் கையிலிருந்து தன் உடையை மீட்டுக் கொண்டவன், "நீ எப்போனாலும் என் வீட்டுக்கு வரலாம்... நேத்து வந்தது மாதிரி... யாரும் உன்னை தடுக்கமாட்டாங்க..." என்ற விக்ரமின் பதிலில் நண்பர்கள் தான் சிலையாகினர்.

-தொடரும்