உணர்வாய் உயிராய் நீயே எந்நாளும்
அத்தியாயம் -2
மனதின் உள்ளே ஒரு தயக்கம் இருந்தாலும் அதை எல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மகிழுந்தை சரியான இடத்தில் நிறுத்தி விட்டு கையில் இருந்த சாவியை கைப்பையில் வைக்கப் போனவளுக்கு அமிர்தாவின் செய்கை நினைவுக்கு வர கையில் வைத்து ஆட்டிக் கொண்டே வந்தாள்.
குதிகால் செருப்பு அணிந்து அசவுகரியமாக இருந்தாலும் கொஞ்சம் வேகமாக நடந்தவள் நினைவாக காதினுள் ஒலிவாங்கியை அணிந்தபடியே நடந்தாள்.
இம்முறை பொய்முடி சரியாக அணிந்திருந்ததால் கச்சிதமாக பொருந்தி இருந்தது.எதிரே இருந்த கண்ணாடியில் தன்னை பார்த்தவளுக்கு அவளை அவளுக்கே அடையாளம் தெரியவில்லை.ஆனால் இந்த முழங்கால் வரை இருந்த உடை தான் அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
அமிர்தா சொன்ன காபி கடைக்கு சென்றவள் சுற்றிப் பார்க்க அங்கே ஜன்னலோரமாக கலைந்து போன கேசத்தை கையால் கோதியபடி நீலநிறத்தில் சட்டையும் வெள்ளை நிற பேண்ட் அணிந்தபடி ரொம்ப எளிமையாக அவன் அமர்ந்திருந்தான்.கையில் இருந்த கைப்பேசியை பார்த்துக் கொண்டிருந்தான்.
அதைக் கண்டுக் கொண்டவள் உடனே அமிர்தாவை கைப்பேசியில் அழைத்தவள் மெதுவாக “நான் அவனை பார்த்துட்டேன் நீ லைன்ல இரு” என்றாள்.
அமிர்தா மெதுவாக “நான் அனுப்பின டீடெய்ல்ஸ் பார்த்துட்டல்ல அப்புறம் இங்கே மீட்டிங் ஆரம்பிச்சிடுச்சு அதனால என்னாலயும் உடனே பதில் சொல்ல முடியுமான்னு தெரியலை பார்த்துக்கலாம்” என்றாள்.
அமிர்தா சொன்ன பிறகு தான் அவனது விவரங்கள் பார்க்காமல் இருந்தது நினைவுக்கு வர தற்சமயம் அவனின் பெயரை முதலில் பார்த்தாள்.விதுன் என்று இருந்தது.அதைப் பார்த்து விட்டு நிமிர்ந்து பார்க்க அவனும் அவளைப் பார்த்தான்.
வேறுவழியில்லாமல் அவனைப் பார்த்தப்படி கொஞ்சம் லேசான புன்னகையை தவழ விட்டப்படி நின்றிருந்த இடத்திலிருந்து சத்தமாக “ஹாய்” என்று அழைத்தப்படி வர… அவனோ எல்லோரும் அவனைப் பார்ப்பதை அறிந்து அமைதியாக இருந்தான்.
அவனுக்கு நேராக நின்றவள் “விதுன்” என்றதும் அவனும் தலையசைக்க அவனுக்கு அருகில் இருந்த இருக்கையை போட்டு அமர்ந்தவள் “நான் தான் அமிர்தா ஒரு செல்பி”என்று அவனோடு உட்கார்ந்து இருப்பதைப் போல் ஒரு சுயபடம் எடுத்துக் கொண்டாள்.
அமிர்தாவின் தாயாருக்கு அதை அனுப்பி விடுவதற்கான முன் ஏற்பாடு.உடனே எழுந்து அவனுக்கு எதிரில் இருந்து இருக்கையில் அமர்ந்தவள் முழங்கால் தெரிவதால் தான் அணிந்திருந்த மேலாடையைக் கழற்றி கால்களின் மேல் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள்.
அவளின் ஒவ்வொரு செய்கையையும் கவனித்தவன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆரதி “வந்து ரொம்ப நேரமாயிடுச்சா?”
“இல்லை” என்று தலையசைத்தான்.
இருவரும் அமைதியாக இருந்தனர்.விதுன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.அந்த அமைதியை நிறுத்துவதற்காக “என்ன எதுவும் பேசாமல் இருக்கீங்க? அப்போ நான் போகட்டுமா?” என்றாள் திமிராக…
அவனோ அவளை மேலும் கீழுமாக பார்த்தபடி “உங்க பேரு என்னன்னு சொல்லலையே?”
அவளோ புரியாமல் பார்த்தபடி “நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியலை இப்போத் தானே சொன்னேன் என் பெயர் அமிர்தா”
அவனோ தீர்க்கமாக “உங்களோட உண்மையான பெயரைக் கேட்டேன்”
அவளோ அதிர்ச்சியாகி வந்த நடுக்கத்தை மறைத்து “என்ன கேட்கிறீங்கன்னு தெரியுதா? இல்லை தெரியாதா மாதிரி கேட்கிறீங்களா?”
அங்கே அமிர்தாவிடம் இருந்து எதாவது பதில் வரும் என்றால் மறுமுனையில் அவள் தொடர்பிலேயே இல்லை என்றானது.
இவளோ அடுத்து பேச வருவதற்குள் அவனே தொடர்ந்தான்.
“எனக்கு அமிர்தாவை சின்ன வயசில இருந்து தெரியும் அவ எப்படி இருப்பான்னு தெரியாதா? நீங்க யாரு அமிர்தா பேருல வந்து இருக்கிற ப்ராடு பொண்ணா? அமிர்தாவை என்ன பண்ண? அவ வேஷத்துல நீ வந்து இருக்கே அவகிட்ட இருந்து எதை திருடினே?” என்றதும் தான் தாமதம் ‘இதுக்கு மேல இங்கே இருந்தால் சரிபட்டு வராது’ என்று வேகமாக எழுந்துக் கொள்ள எத்தனிக்கும் போது ஆரதியின் கைகளைப் பிடித்தான் விதுன்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஆரதி “என் கையை விடுங்க” என்றாள்.
அவனோ “முதல்ல கூலிங் கிளாஸை கழற்று யாரு நீ?” என்று அழுத்தமாக பிடித்தான்.
அவனது பிடியில் அவளது கைகள் சிவந்து வலித்தது.அதைப் பெரிதாக எண்ணாதவள் தற்சமயம் இங்கிருந்து தப்பித்தால் போதும் என்று கையை இழுக்க அவனோ விடாப்பிடியாக பிடித்து இருந்தான்.
அவளை உற்றுப் பார்த்தவன் இன்னொரு கையால் அவள் அணிந்திருந்த குளிரூட்டும் கண்ணாடியை இழுக்க அது முழுதாக வராமல் பாதியில் தொங்கிக் கொண்டு நின்றது.உதட்டின் ஓரமாக இருந்த மச்சத்தையும் விதுன் கவனித்துக் கொண்டான்.
அவனின் அடுத்தடுத்த செயலில் ஆடிப் போனவள் வேகமாக அழுத்தமாய் கையை உதறிவிட்டு ஓட ஆரம்பித்தாள்.இவர்கள் இருவரும் செய்த கலாட்டாவில் அங்கே கூட்டம் கூட ஆரதி இது தான் வாய்ப்பு என்று ஓட்டமும் நடையுமாக வந்தாள்.
அணிந்திருந்த குதிகால் செருப்பு வேற அவளை தொல்லைச் செய்ய அதையும் அடுத்தடுத்து கழற்றியவள் நேராக வாகனத்தில் அமர்ந்து அதை வேகமாக ஓட்டினாள்.அவனைச் சுற்றியிருந்தவர்களிடம் பதில் சொல்லி விட்டு அவன் வருவதற்குள் இவள் மகிழுந்தில் ஏறி செல்வதைப் பார்த்தான்.
ஆரதிக்கு பதற்றத்திலும் நடுக்கத்திலும் மூச்சு வேகமாக வாங்கியது.வண்டி ஓட்ட முடியாமல் திணறியவள் அதை கொஞ்சம் தூரம் சென்றதும் நிறுத்தியவள் தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்ததும் தான் ஓரளவுக்கு அமைதியானாள்.இதற்கிடையில் விதுன் அமிர்தா கொடுத்த கைப்பேசி எண்ணிற்கு அழைத்தான்.இவளோ என்னசெய்வதென்று தெரியாமல் அமைதியாக அதை வைத்தாள்.
மனதினுள் ‘'சரியான ரவுடிப்பயலா இருப்பான் போல என் கையே வலிக்குது’ என்று புலம்பியபடியே இருந்தாள்.
அடுத்து நடக்கப் போகும் நிகழ்வுகளை நினைத்தால் ஆரதிக்கு தலையே சுற்றியது.நேராக வீட்டிற்குச் சென்றாள்.நடந்ததை நினைத்துப் பார்த்தால் ஒன்றுமே விளங்கவில்லை.
அமிர்தாவிடம் பேசலாம் என்றால் அதற்கும் வழியில்லை.
எல்லாவற்றையும் கலைத்து விட்டு தன் உடைக்கு மாறியவள் அவன் பிடித்திருந்த கையைப் பார்த்தாள்.அது நன்றாக சிவந்து இருந்தது.வலிக்கவும் செய்தது.அப்படியே மெத்தையில் சாய்ந்தவள் தூங்கிப் போனாள்.
மாலை மங்கும் நேரம் ஆரம்பித்து இருந்தது.
திடிரென்று விழித்தவள்
வலித்த இடத்தின் மேல் தைலத்தை எடுத்து வைத்து தேய்த்துக் கொண்டிருந்தாள்.அப்பொழுதுஅவளுடைய கைப்பேசி அழைக்க இவள் வேலை செய்யும் மருத்துவமனையிலிருந்து தான் அழைப்பு வந்திருந்தது.
“ஹலோ”
“உங்களை ஹெட் டாக்டர் உடனே வரச் சொன்னாங்க முக்கியமான ஆபரேஷன் இருக்கு நீங்க தான் வரனும்னு பேஷன்ட்டும் விரும்புறாங்க”
“யாரு? ரூம் நம்பர் 108?”
“ஆமாம்”
“அவங்களுக்கு நாளைக்குத் தானே ஆபரேஷன்னு சொல்லி இருந்தாங்க”
“ஆமாம் சர்ஜன் வந்துட்டாங்க ஹெட் டாக்டர் வரச் சொன்னாங்க” என்றாள்.
“சரி உடனே வரேன்” என்று கைப்பேசியை அணைத்து விட்டு வேகமாக கிளம்பினாள்.வேறு எந்த யோசனைக்கும் இடம் கொடுக்காதவள் தன் வேலைப் பார்க்கச் சென்றாள்.ஆரதி பிரபலமான தனியார் மருத்துவமனையில் தலைமை செவிலியராக பணியாற்றுகிறாள்.
மருத்துவமனைக்கு உள்ளே சென்றதும் இவளை பார்த்து மற்ற செவிலியர்கள் மரியாதை செலுத்தினர்.எல்லோருக்கும் தலையசைத்தவாறே சென்றவள் நேராக தலைமை மருத்துவர் அறைக்குச் சென்றவள் வாயிலில் நின்று அனுமதி கேட்டு உள்ளே சென்றவள் “குட் இவினிங் டாக்டர்”
“குட் ஈவினிங் ஆரதி சீக்கிரம் ஆபரேஷன் தியேட்டரை ரெடி பண்ணுங்க பேச நேரம் இல்லை”
“ஓகே டாக்டர் ” என்று அதற்கு மேல் அங்கே நிற்காமல் உடையை மாற்றி விட்டு எல்லாவற்றையும் தயார் செய்ய ஆரம்பித்தாள்.தன்னுடன் ஒரு செவிலியர் பெண்ணொருத்தியை உதவிக்கு வைத்திருந்தாள்.
அறுவை சிகிச்சைக்கான உடையணிந்தவள் முகத்தில் முகக்கவசம் அணிந்தபடி இருந்தவள் அங்கே வந்த நோயாளியிடம் அவரின் தலையின் வருடியபடி “எதுவும் பயப்படாதீங்க எல்லாம் நல்ல படியா முடியும் ரிலாக்ஸா இருக்கனும் பதற்றப்படக் கூடாது ஒரு சின்ன ஊசிதான் அப்புறம் எந்த வலியும் தெரியாது அதோட மயக்கமருந்து கொடுக்கலாமா?” என்று இவள் பேசிக் கொண்டிருந்தபடியே தடுப்பூசி போட்டாள்.
இதை எல்லாம் கேட்டப்படியே உள்ளே நுழைந்த தலைமை மருத்துவரும் புதியதாக இன்னொருவரும் உடன் வந்திருந்தார்.எல்லோரும் முகத்தில் முகக்கவசம் அணிந்து இருந்தனர்.
தலைமை மருத்துவர் “பெங்களூரிலிருந்து வந்திருக்கிற புது சர்ஜன் டாக்டர் இன்னைக்கான இந்த ஆப்ரேசனை இவங்க தான் செய்யப் போறாங்க” என்று ஒரு சிறு அறிமுகத்தை தந்தார்.
இரு மருத்துவர்களும் கையுறை அணிந்ததும் அவர்களுக்கான அறுவை சிகிச்சைக்கான மேலாடை அணிய உதவினாள் ஆரதி.
அடுத்து அறுவை சிகிச்சை நடைபெற ஆரம்பித்தது.
மருத்துவர்களுக்கான தேவையான உதவிகளை அடுத்தடுத்து வேகமாக உதவினாள் ஆரதி.இரத்தம் தேவைப்படும் நேரத்தில் மருத்துவர்கள் சொல்வதற்கு முன்பே அங்கிருக்கும் சூழ்நிலை புரிந்து அதற்கான ஏற்பாடுகளை செய்தாள்.நேரம் வேகமாக செல்ல அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
மருத்துவர்கள் அறுவை சிகிச்சை அரங்கிலிருந்து வெளியே வந்தனர்.ஆரதி நோயாளிக்கு தேவையான சிகிச்சைகளை சரிபார்த்து அவரை அறையில் மாத்தி விட்டு அறுவை சிகிச்சைக்கான உபகரணங்களை எடுத்து அப்புறப்படுத்தி விட்டு வெளியே வரும் பொழுது நேரம் நள்ளிரவை தாண்டி இருந்தது.
அங்கே வந்த செவிலியர் “சிஸ்டர் உங்களை டாக்டர் வரச் சொன்னாங்க” என்றதும் தனது உடைகளையும் மாற்றாமல் நேராக அறைக்கு சென்றாள்.
அங்கே அனுமதி கேட்டு உள்ளே செல்ல மருத்துவர்களும் அந்த நீல நிற உடையை அணிந்தபடி இருந்தனர்.தலைமை மருத்துவர் முகக்கவசத்தை இறக்கி விட்டு “வா ஆரதி புதுசா வந்திருக்கிற சர்ஜன் உன்னை பார்க்கனும்னு சொன்னாங்க” என்றார்.
ஆரதி திரும்பி நின்றுக் கொண்டு கையில் கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தவரைப் பார்த்து “டாக்டர்” என்று அழைக்கவும் அவன் இவள் புறமாக திரும்பி “ஆரதி” என்று அழைக்கவும் அவனைப் பார்த்து இவள் அதிர்ச்சியில் நின்றாள்
காலையில் பார்த்து இவளிடம் சண்டைப் போட்ட விதுன் அங்கே கழுத்தில் இதயதுடிப்பு மானி அணிந்த படி நீலநிற உடையில் அங்கே நிற்பதைப் பார்த்து இவளுக்கு தலைசுற்றாத குறை தான்.
ஆரதி அமைதியாய் நிற்க தலைமை மருத்துவர் “ஆரதிக்கு நீங்க யாருன்னு தெரியலைன்னு நினைக்கிறேன்” என்றவர் “ஆரதி இவர் தான் நம்ம ஹாஸ்பிட்டலுக்கு புதுசா வந்து இருக்கிற சர்ஜன் விதுன் இன்னைக்கு இவரோடு தான் வொர்க் பண்ணது வர்றதுக்கு லேட்டாயிடுச்சு அதனாலத் தான் ஆபிரேஷன் தியேட்டர்ல வைச்சு சொன்னதோடு இப்போ முறையா உன்கிட்ட அறிமுகப்படுத்துகிறேன்” என்றார்.
ஆரதிக்கு கைகள் நடுங்க ஆரம்பித்தது.எதுவும் வெளியே தெரியாதது போல் நின்றாள்.இவள் இன்னும் முகக்கவசம் அணிந்திருப்பதால் தப்பித்துக் கொண்டிருந்தாள்.
விதுன் “ஆரதி உங்களை பாராட்ட வார்த்தையே இல்லை எவ்வளவு கவனமா துல்லியமா உங்க டெடிகேஷன் இருக்கு தெரியுமா? டாக்டர்ஸ்க்கு இந்த மாதிரி ஒரு ஹெட் நர்ஸ் இருந்தாங்கன்னா டென்ஷனே இருக்காது பேஷன்ட்டுக்கு அடுத்து என்ன தேவைன்னு நான் நினைக்கிற முன்னாடி நீங்க அதை சரியா கொண்டு வர்றதும் செய்யத் தயாராக இருப்பதும் உங்க வொர்க்ல நீங்க சரியா இருக்கீங்க” என்றான்.
அவளுக்கு அவன் பேசியது ஒன்றும் முழுதாக விழவில்லை.கடைசியில் சொன்ன வார்த்தை மட்டும் விழவும் “தாங்க்யூ டாக்டர்” என்றாள் ஒரே வார்த்தையில்.
அவளின் பதிலில் ஈர்க்கப்பட்டவன் புன்னகை ஒன்றை பதிலாகத் தந்தவன் “உங்க குரல் ஏற்கனவே கேட்ட மாதிரி இருக்கு” என்றதும் இவளுக்கு பக்கென்று இருந்தது.
தலைமை மருத்துவர் விதுனிடம் சிரித்துக் கொண்டே “ஆரதி எப்பவும் இப்படித் தான் அமைதியாகத் தான் இருப்பா ரொம்ப நல்லப் பொண்ணு சின்ன வயசில இந்த பெரிய பொறுப்புல இருக்கான்னா அவ வொர்க் அப்படி” என்று பெருமையாகச் சொன்னார்.
அதைக் கேட்ட ஆரதி மனதினுள் ‘நான் மட்டும் இப்போ என் முகத்தை காட்டுனேன் என்னைய இந்த டாக்டர் கழுவி ஊத்துறது இருக்கே உங்களுக்கு மட்டும் இல்ல எனக்கே காது கொடுத்து கேட்க முடியாது இதுல என்னைப் பத்தி எதுக்குங்க ஐயா இவ்வளவு பெரிய பில்டப்பு கொடுக்கிறீங்க அதுக்கு நான் வொர்த் இல்லைங்கோ’ என்று சொல்லி விடும் நிலையில் புலம்பிக் கொண்டிருந்தாள்.
அவனோ அவளைப் பார்த்து “உட்காருங்க” என்றதும் இவளோ “இல்லை சார் நான் இப்போ கிளீன் பண்ண போகனும் இப்போத் தான் ஆப்ரேசன் தியேட்டர்ல இருந்து வெளியே வந்தேன்” என்றாள்.
உடனே அவன் நிலைமையைப் புரிந்து “சரி உங்க விருப்பம்” என்றான்.
உடனே தலைமை மருத்துவர் “ஆரதி மற்ற விஷயங்களை நாம நாளைக்கு பேசலாம்” என்றார்.ஆரதிக்கோ ‘விட்டால் போதும்” என்றாகிப் போனது.
“சரிங்க டாக்டர் நான் கிளம்புறேன்” என்று அங்கிருந்து வேகமாகச் சென்று விட்டாள்.தன் ஓய்வு அறையில் வந்து முகக்கவசத்தை விலக்கியவள் சீராக மூச்சு விட்டாள்.வேகமாக அமிர்தா அனுப்பிய விதுன் பற்றிய விவரங்களைப் படித்தாள்.
அப்பொழுது தான் அதில் விதுன் பெயருக்கு முன்னால் மருத்துவர் என்று போட்டு இருந்தது.அதை கொஞ்சம் கவனித்து இருந்ததால் எப்படியாவது தப்பித்து இருக்கலாம்.அவசரத்தில் பார்க்காமல் விட்டது பெரிய தவறாகிப் போனது.
‘ அமிர்தா சொன்ன சின்ன பொய்யால் நான் எவ்வளவு பெரிய பிரச்சினைல மாட்டி இருக்கேன்னு நினைச்சாலே என்னால யோசிக்க முடியலை.இன்னைக்கு மட்டும் அந்த விதுன் என்னைப் பார்த்திருந்தால் என்னுடைய கேரியரே போய் இருக்கும் இப்போ தப்பிச்சாச்சு ஆனால் நாளைக்கு என்ன நடக்கும்னு? ஒன்னுமே புரியலை இதுக்கு நான் ஒரு வழியை கண்டுபிடிச்சே ஆகனும்’ என்று யோசனையில் இருக்கும் பொழுது அமிர்தா ஆரதியின் கைப்பேசி எண்ணிற்கு அழைத்தாள்.