அத்தியாயம் - 2
திடீரென்று மினுக்கியும் மேனாமினுக்கியும் காணாமல் போனதில் சிக்கம்மா மட்டும் தான் பயந்து போனாள். ஆனால் பரட்டையும் குருவிக்கூடும் சுற்றியும் தங்கள் துணைகளைத் தேடி "ஏலேய் என்ன விளையாட்டு இது.? அதைய நீயே வெச்சுத் தொலை.. என்னனு கேட்க தான் சிக்கம்மாகிட்ட பேசிட்டு இருந்தேன்" என்று குரல் குடுத்தான் குருவிக்கூடு.
"இதுக மாயம், மந்திரம்னு எதையோ கத்து வெச்சுருக்குதுக போலண்ணா.. எங்கையோ போய் தொலைஞ்சுட்டு ஒரு ரெண்டு நாளுக்கு பொறவு வந்து சேரட்டும்.. அது வரைக்கும் நா நிம்மதியா இருந்துக்கறேன்" என்றான் பரட்டை.
"அண்ணோவ் என்னமோ நடக்க கூடாததுனு நடந்துருச்சுனு தோணுது.. அவுக ரெண்டு பேரும் எப்படிண்ணா திடீர்னு மாயமா மறைய முடியும்.? நீங்க காட்டுனதுல தான் என்னமோ இருந்துருக்குது" என்றவளுக்கு பயமே.
இதனால் தன் வாழ்வில் பிரச்சனை வந்து விடுமோ.? என்று. அவர்கள் அடிக்கடி இவளிடம் சண்டையிடுவார்கள் தான். அதற்காக கோவம் என்று இல்லை. அது அவர்களின் பிறவிக்குணம் என்று நினைத்துக் கொள்வாள்.
திடீரென்று அவர்கள் மறைந்து போனது எப்படி.? என்று புரியாமல் இவள் தான் அச்சமடையத் தொடங்கினாள். ஆனால் இவளுக்கு இருக்கும் பயம் கூட அவர்களின் கணவர்மார்களுக்கு இல்லையே.
"நீ போய் புள்ளையை பாரு.. அதுக வர்றப்ப வரட்டும்" என்று சிக்கம்மாவை அனுப்பி வைத்த பரட்டை "அண்ணோவ் இனி நம்ம நிம்மதியா பொழைப்பை பாக்கலாம்" என்று சந்தோசப்பட்டான்.
இவர்களுக்கு பெயர் எல்லாம் வைக்க மாட்டார்கள். அவர்களே ஏதாவது ஒரு பெயரை கூறி அழைத்துக் கொள்வார்கள். பரட்டைக்கும் அப்படித்தான் இந்த பெயர் வந்தது. அவனின் தலை எப்போதும் பரட்டையாக இருக்கும். அதனால் அவனும் பரட்டையாகி போனான்.
குருவிக்கூட்டுத் தலையன் என்பதும் அவனுக்கு தானாக அமைந்த பெயர் தான். எப்போதும் அவனின் தலை குருவிக்கூடு போல் தான் இருக்கும். அதனால் அந்த பெயரே இவனுக்கும் வந்து விட்டது.
பரட்டை, குருவிக்கூடு, டவுசர் என்று தான் அங்கு பெயர்கள் உண்டு. டவுசர் என்பவன் தான் சிக்கம்மாவின் கணவன். அவனை காணாமல் தான் அவள் இவர்களிடம் கேட்டது. பிச்சைக்காரர்கள் படிக்க கூடாதா என்ன.?
பரட்டையும் குருவிக்கூடும் சந்தோசமாக இருப்பதைப் போல் காட்டிக் கொண்டாலும் நேரம் செல்ல செல்ல மனைவிகளைக் காணாமல் பயந்து "பரட்டை எனக்கு என்னமோ பயமா இருக்குடா.. அதுக இவ்ளோ நேரமாகியும் இன்னும் வரல.. அப்படி எங்கையும் போக மாட்டாங்களே.?" என்று பயந்தான் குருவிக்கூடு.
பரட்டைக்கும் இந்த பயம் இருந்தாலும் அதை வெளிக் காட்டி கொள்ளாமல் "அண்ணோவ் அதுக வந்துரும்.. நமக்கு ஏழெழு ஜென்மத்துலயும் அதுகனு தான் வாய்ச்சுருக்கு.. பொறவு எங்ஙனம் அதுக நம்மைய விட்டு போவும்.? பாத்துக்கலம் வுடுங்க" என்று சமாதானப்படுத்தினான்.
இவங்க இப்படி இருந்தா நம்ம கதாநாயகிகள் எங்க போய்ருக்காங்கனு தெரியணும்ல.? அதைய பார்த்தரலாமா.?
எதையோ அழுத்தி விட்டதில் திடீரென்று வேறு பக்கம் வந்து நின்றதை இருவராலும் நம்ப முடியவில்லை. சுற்றி சுற்றிப் பார்த்து அது என்ன இடம்.? என்று கணிக்க முடிந்தாலும் இலகுவாக கண்டுபிடிக்க முடியாமலும் போனது.
"என்னடி நம்ம பாட்டுக்கு எங்கனயோ வந்து நின்னுருக்கோம்.? நம்ம வூட்டுக்காரனை வேற காணோம்.? நம்மைய மட்டும் என்னமோ பண்ணி வுட்டுட்டாங்க போல.?" என்று தன் பயத்தை அப்பாட்டமாக வெளிக் காட்டினாள் மேனாமினுக்கி.
ஆனால் மினுக்கியோ சிறுதும் பயமில்லாமல் "அக்கோவ் அது வேணும்னே தான் நம்மைய என்னமோ பண்ணி வுட்டுருக்குதுக.? இப்ப நம்ம எப்படி வூட்டுக்கு போறது.? நம்ம இல்லனா அதுக நம்ம வாங்கி வெச்சுருக்கற சேலைத்துணியை அந்த சிக்கம்மா புள்ளைக்கு குடுத்துருமே.? அதைய நினைச்சா தான் எம்மால தாங்க முடியல" என்று புலம்பினாள்.
உடனே மேனாமினுக்கிக்கும் இந்த கவலைத் தொற்றிக் கொள்ள, "இருக்கும்டி இருக்கும்.. அதுக்கு தான் அந்த புள்ள என்னமோ பண்ணிருச்சு.? அது கைல இருக்கற வரைக்கும் ஒன்னும் பண்ணாம இருந்த இது நம்ம வாங்குனதும் நம்மைய மாயமா மறைய வெச்சுருச்சு.. அப்ப அது தான் என்னமோ பண்ணிருக்குது.. வுட கூடாது அதைய.. மொதல்ல நம்ம எப்படி திரும்ப போறதுனு பாக்கலாம்" என்று காரணமின்றி சிக்கம்மாவின் மேல் கோவம் கொண்டாள்.
பத்ரமாக கையில் இருக்கும் அந்த கடிகார பேழையை இடுப்பில் சொருகியும் கொண்டாள். பாழடைந்த இடம் போல் இருந்த அந்த இடத்தைச் சுற்றி சுற்றி வந்ததில் இருவரும் சோர்ந்தும் போயினர்.
அந்த இடத்தை விட்டு எப்படி வெளியில் செல்வது என்று ஒன்றும் புரியவில்லை. "அக்கோவ் எம்மால முடியாதுக்கா" என்று மினுக்கி அமர்ந்து விட, மேனாமினுக்கியும் அமர்ந்து காலை நீட்டினாள்.
அப்போது சடாரென்று ஒரு சத்தம் கேட்க, இருவரும் பயந்து பல்லி போல் சுவரோடு ஒன்றிக் கொண்டு "அய்யோ ஆரோ வர்றாக.. நம்மைய பாத்தா ஏதாவது திருட வந்துருக்கோம்னு அடிச்சுப்புட்டா.? வாக்கா ஒளிஞ்சுப்போம்.. அவுக போனதும் பொறவு நம்ம போய்ரலாம்" என்று மினுக்கி முணுமுணுத்தாள்.
அதுவும் சரியென்றதால் மேனாமினுக்கியும் தலையசைக்க, இருவரும் மறைவாக ஒரு இடத்தை தேர்வு செய்து குத்துக் காலிட்டு அமர்ந்தனர்.
நெடுமரம் போல் ஆறெழு ஆண்கள் உர்ரென்ற முகத்துடன் உள்ளே வர, அவர்களின் பின்னே யாரோ ஒருவனை அடித்து உதைத்து ரத்தக்காயங்களுடன் இருவர் இழுத்து வந்தனர். அதைக் கண்டதும் இவர்களுக்கு பயத்தில் உடலெல்லாம் நடுங்கியது.
"போச்சு போச்சு நம்மையும் இப்படி அடிச்சுத் தொங்க வுட போறாங்க.? வேணும்னே தான் அந்த சிக்கம்மா புள்ள நம்மைய கோர்த்து வுட்டுருக்குது" என்று மினுக்கி புலம்பிட, இவளின் சத்தம் அவர்களுக்கு கேட்டு விடுமோ.? என்ற அச்சத்தில் வேகமாக அவளின் வாயை மூடினாள் மேனாமினுக்கி.
அதற்குள் "என்னடா இன்னும் நம்ம ரங்கம்மாவைக் காணோம்.?" என்று கேட்ட ஒருவனின் சத்தத்தில் மீண்டும் அவர்களின் பார்வை விரிந்து 'அந்த ரங்கம்மா வேற வந்து நம்மைய பயப்படுத்தணுமா.?' என்று நினைத்தனர்.
இவர்கள் கடனே என்று அமர்ந்திருக்க, திடீரென்று ஆண்கள் அனைவரும் எழுந்து நின்ற சத்தத்தில் இவர்களின் பார்வையும் அங்கு சென்றது. சென்ற நொடியே அதிர்ச்சியில் சிலையாக தான் மாறினர்.
பின்பு தங்களைப் போல் இருவரை கண்டால் அதிர்ச்சி இருக்காதா என்ன.? அதுவும் மேனாமினுக்கியை போல் இருப்பவளின் முகம் அத்தனை உக்கிரமாக இருந்தது. வாய் முழுவதும் வெத்தலையை குதுப்பி சேலையைத் தூக்கி பிடித்து நடந்து வந்த அவளின் தோரணையில் தூரச் சென்ற பயம் மீண்டும் அவர்களிடமே வந்து ஒட்டிக் கொண்டது.
அதுவும் அவளின் பின்னே மினுக்கியைப் போலவே ஒருத்தி அவளின் நடைக்கு ஈடு குடுத்து ஓடி வரும் பாவனையைக் கண்டால் சிரிப்பு தான் வருகிறது.
அவர்கள் பேசியதை வைத்து பார்க்கும் போது அவள் தான் 'ரவுடி ரங்கம்மா' என்று நிரூபனமானது. "தங்களைப் போல் இருவரா.?" என்று வாய்விட்டே புலம்பி நடப்பதைப் பார்க்க பார்க்க ஏதோ கனவுலகில் இருப்பதைப் போலவே தோன்றியது.
"ஏய் எம்புட்டு தகரியமிருந்தா என் வூட்டுக்காரனைப் பாத்து நீ கேலி பேசிருப்ப.? அம்புட்டு எகத்தளமா போய்ருச்சா.?" என்று கேட்டு ரங்கம்மா மிதித்த மிதியில் இவர்களுக்கு புரையேற தொடங்கியது.
மினுக்கி தான் "அக்கோவ் அம்புட்டு காதலா உன் வூட்டுக்காரன் மேல.? உமக்கு அதெல்லாம் கிடையாதே.? அப்ப உம்மைய மாதிரி இருக்கறது யாரு.? கண்டிப்பா உன் வூட்டுக்காரன் யாருனு பாத்துட்டு போவணும்.. இம்புட்டு பாசம் வெக்கற அளவுக்கு அந்த மனுசன் யாருனு பாக்காம போனா நல்லாருக்காது" என்று வேண்டுமென்றே சீண்டினாள்.
"பேச முடியாதுனு நினைச்சு பேசிப்புட்டு இருக்கீயா.? வாய்லயே போடுவேன்.. மொதல்ல என்ன நடக்குதுனே புரியல.. இதுல நீ வேற ஏன்டி ஏழரையை கூட்டற.? மொதல்ல நம்ம எங்கன இருக்கோம்னு கண்டுபிடிக்கணும்.. அப்பத்தான் நம்ம இங்கிருந்து போவ முடியும்.. இதுல நம்மைய மாதிரியே ரெண்டு பேரு வேற.? இங்கன என்ன தான் நடக்குது.? இது எதையும் யோசிக்காம என் வூட்டுக்காரன் யாருனு கேட்டுப்புட்டு இருக்க.?" என்று சீறினாள்.
வெளியில் கோவப்படுவதைப் போல் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் 'அந்த மகராசன் யாருடா.? அவனுக்காக இம்புட்டு கோவம் வருதா என்ன.?' என்ற நினைப்பு எழாமல் இல்லை.
இன்னும் ரங்கம்மா அந்த ஆளை தூக்கிப் போட்டு மிதித்துக் கொண்டு தான் இருந்தாள்.. அதை பார்க்கவே இவர்களுக்கு ஒரு மாதிரியாக இருக்க, பார்க்க கூடாது என்று நினைத்தாலும் பார்வை என்னமோ அவர்களைத் தான் வட்டமடித்தது.
தன்னைப் போல் இருந்த ஒருத்தியை நன்றாக ஊன்றிக் கவனித்த மினுக்கி "அக்கோவ் விதவிதமா நா எம்புட்டு சேலைத்துணி எடுத்து வெச்சுருக்கேன்.. இவ என்ன இப்படி ஒரு துணியை சுத்திருக்கா.? ச்சைக் ச்சைக் கன்றாவியா இருக்கு.. நான் வேணா எங்கிட்ட இருக்கற துணில ஒரு நாலஞ்சு துணியை இந்த புள்ளைக்கு குடுக்கட்டுமா.? எம்மைய போலவே இருக்கா.. போனா போகுதுனு குடுத்தறேன்க்கா" என்று அவளின் கவலையை கூறிக் கொண்டிருந்த நேரத்தில் உள்ளே வந்தவனைப் பார்த்ததும் பெண்ணவளின் பேச்சும் தடைப்பட்டு போனது.
மேனாமினுக்கியோ 'குருவிக்கூடு இங்கன என்ன பண்ணுது.? ஒருவேளை இவனுக்கு கள்ளத்தொடர்பு இருக்குதோ.? அதுக்காக தான் எம்மைய ஏதோ பண்ண நினைச்சாங்களோ.? இருக்கும் இருக்கும்.. விட கூடாது இவனை.. என்ன தகரியம் இருக்கணும்.? கொன்னே போட்டா தான் என் மனசு அடங்கும்.. நா வுட மாட்டேன்' என்று மனதிலேறிய கோவத்தில் எழ முயன்றவள் மீண்டும் அப்படியே அமர்ந்து விட்டாள் காரணம் பரட்டை வருவதைப் பார்த்து.
இப்போது மினுக்கியும் அதிர்ந்து 'அய்யோ பரட்டை எங்க இங்குட்டு.? அப்ப இவனுக்கும் தொடர்பு இருக்குது போல.? அண்ணங்காரனே இப்படி இருக்கும் போது தம்பிக்காரன் மட்டும் யோக்கியமாவா இருக்க போறான்.? வுட கூடாது' என்று கருவினாள்.
"அக்கோவ் என்னது இது.? இங்கன என்ன நடக்குது.? ரெண்டு பேரும் திட்டம் போட்டு தான் எல்லாமும் நடக்குதா.? இதுக மூஞ்சிக்கு நம்மளே பெரிசு.. இதுல கள்ளத்தொடர்பு வேற வெச்சுருக்குதுகளா.? வுட கூடாது.. இப்பவே போய் அதுக ரெண்டு பேரு வாயையும் கிழிக்கணும்.. அப்பத்தான் என் கோவம் அடங்கும்.. என்ன தகரியம் இருந்தா இப்படியொரு காரியம் பண்ண மனசு வரும்.?
நம்மைய என்னனு நினைச்சானாமா.? ஒரேடியா போட்டுத் தள்ளுனா கூட சரிதான்க்கா.. இதுகளை ஒரு கை பாத்துப்புட்டு அந்த சிக்கம்மா புள்ளையையும் ஒரு கை பாக்கணும்.. அது தான் இதுக்களுக்கு இப்படியொரு காரியம் பண்ண உதவி பண்ணிருக்கும்.?" என்று ஏகத்துக்கும் கடுப்பாகி பேசினாள் மினுக்கி.
இவர்கள்
அவர்களின் முன்னால் சென்று நின்றால்.? நடக்கப் போவது என்ன.?
தொடரும்..

Last edited: