'நீ எப்போதும் போல் என் இல்லம் வந்து செல்லலாம். எவரும் தடுக்கமாட்டார்கள்' என்ற விக்ரமின் வார்த்தைகள் அக்ஸராவிற்குள் சிறிது நம்பிக்கையை விதைத்தது.
'விக்ரமிற்கு தன் மேல் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது.... அந்த ஈர்ப்பை தக்க வைத்துக்கொண்டால் பின்னாளில் அவனுக்கும் அவன் மனைவிக்கும் நடுவே சண்டை மூட்டிவிட்டு, அவனை முழுமையாக தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளலாம்' என்று கணக்கிடத் தொடங்கியது அவள் மனது...
இந்த எண்ணம் தோன்றிய நொடி தன் அழகை நினைத்து பெறுமைப்பட்டுக் கொண்டபடி மெல்லிய சிரிப்போடு பட்டும் படாமலும் அவன் தோள் உரசியபடி அமர்ந்துகொண்டு "தாங்க்ஸ் விக்கி" என்று கூறினாள் அக்ஸரா.
அதில் உதிக்கும், வினோவிற்கும் அறுவறுப்பு தோன்றிட அவளை ஏளமாக பார்த்து இருக்கையைவிட்டு எழுந்து கொண்டனர். விக்ரமும் அவளில் உரசலில் என்ன உணர்ந்தானோ சட்டென எழுந்து "சரி அக்ஷூ ரெடியாகு... போகலாம்..." என்று அவளை அவளது அறைக்கு விரட்டிவிட்டு,
தன் நண்பர்களைப் பார்த்து "எனக்கு கல்யாணம் நடக்கனும்னு ஆசைபட்ட நீங்க ரெண்டு பேரும் தான் என் சார்பா கல்யாண வேலை எல்லாத்தையும் பார்க்கனும் டா.... அதே மாதிரி சென்னைலேயும் பெரியளவுல ரிஸப்ஷன் வைக்கனும்... அதுக்கும் நீங்க தான் எல்லாம் பாத்து பண்ணனும்... என் கொலிக்ஸ் ஒருத்தர் விடாம எல்லாரையும் இன்வைட் பண்ணனும்... புரியுதா?" என்று அதிகாரமாக கூறிட, விக்ரமின் இந்த மாற்றம் நண்பர்கள் இருவரையும் திகைக்க வைத்திருந்தது.
"விபா நீ என்ன நெனச்சு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்றேனு எனக்குப் புரியலே... ஆனால் நீ நேத்து சொன்ன 'என் மனைவி என்னைவிட்டு விலகிச் செல்ல அனுமதிக்கமாட்டேன்'ற வார்த்தைய 100% நம்புறேன்.... அந்த நம்பிக்கைய காப்பாத்துவே தானே!!!?" என்று தன் பயத்தை கேள்வியாக வினவினான் வினோ.
நண்பனின் பயத்தை விரட்டும் விதமாகவோ நம்பிக்கையூட்டும் விதமாகவோ எந்த பதிலும் சொல்லவில்லை விக்ரம். பதிலாக கண்களை மட்டும் மூடித் திறந்து ஆம் என்பது போல் ஜாடை செய்தான்.
அதற்குள் உதிக்கும் சந்தேகம் எழ "நீயும் கடைசி வரை அந்த பொண்ணைவிட்டு விலகமாட்டேல!!! எனக்கு சத்தியம் பண்ணி சொல்லு" என்றிட அவனின் சிறுபிள்ளைத் தனத்தில் வாய்விட்டு சிரித்தான் விக்ரம்.
"சிரிச்சி மழுப்பாதே டா!!! வர வர உன்னை பார்த்தாலே பயமா இருக்கு... எப்போ என்ன யோசிக்கிற.... எப்படி நடந்துக்கிறே... எதுவும் புரியலே..." என்று பல்லைத் கடித்துக் கொண்டு கூறினான் உதி....
"நானும் அந்த பொண்ணை...." என்று இழுத்தவன், நெற்றியில் ஒற்றை விரல் வைத்து தேய்த்துவிட்டு "சாரி டா மச்சா அவ பேர் என்னனு கூட கேட்கலே... பேர் கூட தெரியாத என் வருங்கால பொண்டாட்டிய நானும் பிரியமாட்டேன்... அவளும் என்னை பிரிஞ்சு போக அனுமதிக்கமாட்டேன்... போதுமா!!? எத்தனை எத்தனை வர்ஷம் வாழ்ந்தாலும் அந்த பட்டிக்காடு தான் என் பொண்டாட்டி... ப்ராமிஸ்..." என்று சற்று மெல்லிய புன்னகையோடு கூறி முடித்தான்.
மேலும் அவனே தொடர்ந்தான், "இப்படி ஒரு கல்யாணத்தை இதுக்கு முன்னாடியும் சரி இனிமேலும் சரி எந்த ப்ரெண்ட்ஸும் நடத்தியிருக்க... நடத்திட... முடியாது டா...!!!" என்று அதிசயித்துக் கூறினான் விக்ரம்.
"ஏன் டா?" என்று இருவரும் சற்று பயந்தபடி ஒருசேர வினவிட, "ஒரு கல்யாணம் எந்த மதத்து முறைப்படி நடந்தாலும், பொண்ணையும் மாப்பிள்ளையும் ஒன்னாவோ எதிரெதிராவோ நிக்க வெச்சு ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கானு கேட்டு, ஒருத்தரை ஒருத்தர் பிரியக் கூடாதுனு அக்னி சாட்சியாவோ, பைபில் அல்லது குறான் மேலேயோ சத்தியம் பண்ணி தான் கல்யாணம் செய்வாங்க... ஆனா இங்கே ஐயர் இல்லே.... அக்னி சாட்சி இல்லே... மேளதாளம் இல்லே.... முக்கியமா கல்யாண பொண்ணே இல்லே... ஆனால் நான் சத்தியம் பண்ணிருக்கேன், முகம் பார்க்காத, பேர் தெரியாத அவ தான் என் மனைவினு..." என்று சிரித்துக் கொண்டே கூறினான் விக்ரம்.
நண்பனின் பேச்சில் சற்று தெளிந்தனர் வினோவும், உதியும்... அந்த தெளிவு சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. தன் அறையிலிருந்து தயாராகி வெளியே வந்த அக்ஸராவைக் கண்டதும் மீண்டும் சந்தேகம் எழுந்தது, 'இவளுக்காக எப்போதும் என் வீட்டுக் கதவுகள் திறந்திருக்கும் என்கிறானே!!! அதற்கு என்ன அர்த்தம்? ஒருவேளை இந்த திருமணத்தை நிறுத்துவது தான் அந்த பெயர் தெரியா பெண்ணிற்கு நல்லதோ!!!'என்று யோசித்தபடி வினோத்தும், உதயனும் ஒருவரை ஒருவர் மீண்டும் பார்த்துக்கொண்டனர்.
அதற்குள் விக்ரமும் தனதறைக்குள் புகுந்து ஐந்து நிமிடங்களில் உடைமாற்றி வந்திருந்தான். நால்வருமாக புறப்பட, காரில் அக்ஸராவை வைத்துக் கொண்டு பேச விரும்பாத உதி உறங்குவது போல் பாசாங்கு செய்ய, வினோ சாலையில் மட்டுமே கவனம் வைத்து மகிழுந்தைச் செலுத்தினான்.
விக்ரமை தன் வயப்படுத்த நினைத்த அக்ஸரா தூக்கக் கலக்கத்தில் அவன் மேல் சாய்வது போல் மெதுமெதுவாக இருக்கையில் தலைசாய்த்து கண்மூடிக் கிடந்தவனின் தோளில் சாய்ந்து வாகாகப் படுத்துக்கொண்டாள். பாவம் பெண்ணவள் அறிந்திடவில்லை, முதல்நாள் இரவு முழுவதும் நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கிக்கிடந்தவன் உடல் அழுப்பில் அவளுக்கு முன்னமாகவே உறங்கிவிட்டான் என்பதை.....
ஏதோ ஒரு உள்ளுணர்வின் தூண்டலில் கண் விழித்துப் பார்த்த விக்ரம் சட்டென மகிழுந்தைச் செலுத்திக் கொண்டிருந்த வினோத்தின் தலையில் கொட்டு வைக்க, நண்பனின் இந்த செயலை எதிர்பார்த்திடாத வினோத், தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மகிழுந்தை ஒருநொடி தவற விட, கார் வலைந்து நெளிந்து குழுங்கி நின்றது.
அக்ஸராவும், உதியும் விழித்துக் கொள்ள விக்ரமோ ஒன்றும் தெரியாதாது போல், "என்னாச்சு மச்சா? எதுவும் ப்ராப்ளமா? நான் கீழே இறங்கி பாக்கட்டுமா?" என்று கூறியபடி மகிழுந்தை விட்டு இறங்கி அதன் நான்கு சக்கரத்தையும் சுற்றி வந்தவன்,
"எல்லாம் சரியா தான் டா இருக்கு!!!" என்றான். வினோத்தின் அருகில் அமர்ந்திருந்த உதிக்கு நண்பன் ஏதோ தில்லுமுல்லு பண்றான் என்று புரிந்திட வினோத்தை பாவமாகப் பார்த்தான். வினோத்தோ குட்டு வைத்தவன் மீது கோபம் கொள்வதா இல்லை வழி எடுக்கும் தன் தலையை தேய்த்துக் கொண்டு அமைதி காப்பதா என்று தெரியாமல் அப்பாவியாய் முழித்தான்.
"அனேகமா உனக்கும் தூக்கம் வருதுனு நெனைக்கிறேன்... நீ பின்னாடி உக்காந்துக்கோ நான் ட்ரைவ் பண்றேன்..." என்று வினோத்தை பின்பக்கம் விரட்ட காரைவிட்டு இறங்கிய வினோத்,
"அவளை கேப் புக் பண்ணி அனுப்பியிருக்க வேண்டி தானே!!! என்னை ஏன்டா அவகிட்ட கோர்த்துவிடுறே!!" என்று பல்லைக் கடித்துக் கொண்டு சத்தமில்லாமல் வினவினான்.
"பயப்படாதே... உன் பக்கம் கூட அவ திரும்பமாட்டா.... நீ பின்பக்கம் உக்காந்தேனா அவ தானா டோரை ஒட்டி உக்ககாந்துக்குவா... போ" என்று உர்ரென முகத்தை வைத்துக்கொண்டு பதிலளித்தான். அந்த கார் பயணம் முழுமைக்கும் அதே தான் நடந்தது. வினோ பின் இருக்கைக்கு மாறியவுடன் அக்ஸரா ஒருபக்க கதவின் அருகிலும், வினோத் மற்றொரு பக்க கதவின் அருகிலும் அமர்ந்து கொண்டனர். அனைவரின் கண்களையும் விட்டு தூக்கம் பறந்திருந்தது.
அக்ஸராவிற்குள் பல யோசனைகள் இனி எப்படியெல்லாம் விக்ரமை நெருங்க முடியும் என திட்டமிடத் தொடங்கினாள்.
வினோத் நண்பனின் முன்னுக்குப் பின் முரண்பாடாக நடந்து கொள்ளும் முறையை பற்றி சிந்திக்கத் தொடங்கினான். அக்ஸரா அவனை நெருங்க அனுமதிக்கிறான், அதே நேரம் அவள் நெருங்கி வரும்போது இவனாகவே அவளை விட்டு விலகிச் செல்கிறான், ஏன் இந்த விளையாட்டு!!! வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள நினைப்பவன் இவளை ஏன் இன்னும் ஒதுக்கி வைக்க தயங்குகிறான்!!! என்று பல கேள்விகள் அவன் மூளையைக் குடைந்தது.
உதியோ இந்த கல்யாணம் நடந்தால் தன் நண்பன் இந்த இரண்டும் கெட்டான் நிலையில் இருந்து மாறி முழுமனதாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவான் என்று நம்பினான். ஆனால் அதற்கு ஒரு பெண்ணை வருத்த வேண்டுமா!!! என்ற யோசனையோடு பயணித்தான்.
ஆனால் வினோ மற்றும் உதியின் சிந்தனைக்குக் காரணமான நம் கதையின் நாயகனோ எந்த கவலையும் இன்றி நேற்று இருந்த குழப்பமான நிலை எதுவும் இன்று இல்லாமல் நிம்மதியாக விசிலடித்தபடி மகிழுந்தைச் செலுத்திக் கொண்டிருந்தான் விக்ரம் பார்த்தீபன்.
கிழக்கு கடற்கரை சாலையில் அதிகாலை சூரிய உதயத்தின் அழகினைக் கூட ரசித்திட முடியாத மனநிலையில் ஆளுக்கு ஒரு யோசனையோடு பயணித்தனர்.
அதே அதிகாலைப் பொழுதில் வாசலில் கோலமிட்டுக் கொண்டிருக்கும் அந்த அழகியை காண இரவெல்லாம் பிரிந்திருந்த வேதனையை தீர்த்துக் கொள்ளும் ஆவலில் மேகத்தடைகளைத் தாண்டி விரைந்து வெளியே வந்தான் வெய்யோன்.
"அடடே என் மகளா இது!!! விடியிறதுக்கு முன்னமே எழுந்து கோலம் போடுறது!!!!" என்று ஆச்சரியமாக வினவியபடி வாசல் வந்தார் தாமோதரன்.
"கடுப்ப கெளப்பாதிங்க ப்பா.... இந்த தாய் கெழவி இருக்கே!!!.... கல்யாணம் பண்ணிக்கப் போறவே இன்னும் என்னடி தூக்கம் வேண்டிக்கெடக்குனு என்னை எழுப்பிவிட்டுடுச்சு..." என்று சலுகையாகக் கொஞ்சி தந்தையின் நெஞ்சில் தஞ்சம் அடைந்தாள்.
மகளின் கொஞ்சலில் சிரித்தவர், "நீ அழகா கோலம் போடுறே டா பாப்பா.... உன் அம்மா மாதிரியே!!!"
"அதானே!!! நீ உண்மைய சொல்லிட்டா தான் ஆச்சரியம்.... என் மக எவ்ளோ அழகா கோலம் போடுவா!?? எவ்ளோ ருசியா சமப்பா!?? அதையெல்லாம் பாராட்டாத நீ..... உன் மக சமைக்கவும் ஆஹா ஓஹோங்றே.... அலங்கோலத்தைப் பார்த்து அழகான கோலம்ங்குறே....!!!" என்று சலித்துக் கொண்டார் அபிராமி ஆச்சி.
"அப்படி கேளுங்க ஆச்சி.... கல்யாணம் பேசினதும் தான் பேசினாங்க இவங்க பாசத்துக்கு அளவில்லாம போகுது..... விடியலே இப்படினா இன்னைக்கு பொழுது எப்படி இருக்குமோ!!! ஆனாலும் க்கா உன்னை கட்டிக்கப் போற மச்சான் ரெம்ப பாவம் க்கா..." என்று தமக்கை போட்டு வைத்திருந்த டீ-யை கிண்டலடித்தபடி அங்கே வந்தான் செம்பியன்.
"ஏன் டா என் மகளுக்கு என்ன கொறை.... இவளை கட்டிக்கப் போற மாப்பிள்ளையும் குறை காணாத குணம் படைத்த மாப்பிள்ளை தான்.... இப்போ நான் தாங்குற மாதிரி இனி மாப்பிள்ளை இவளை பார்த்துப்பார்." என்று மகளின் தலையில் முத்தமிட்டார்.
தந்தையின் அன்பு தனக்கு மட்டும் கிடைத்ததில் மகிழ்ந்தவள், தன் தம்பியைக் கண்டு "வெவ்வெவ்வே..." என்று வக்கனை செய்திட, "என்னையா பழிப்பு காட்டுறே... இரு... தண்ணி எடுத்துட்டு வந்து உன் கோலத்துல ஊத்திவிடுறேன்... குறுக்கு ஒடிய இன்னொருக்க கோலம் போடு..." என்று கூறி விறுவிறுவென்று வீட்டிற்குள் சென்றான் செம்பியன்.
அவனைத் துறத்திக் கொண்டு "டேய் கோலத்துல கை வெச்சே கொன்னுடுவேன் உன்னை..." என்று மிரட்டியபடி மலரும் உள்ளே நுழைந்தாள்.
பிள்ளைகள் இருவரும் உள்ளே சென்றவுடன், அபிராமி ஆச்சி தாமோதரனிடம்
"தாய் இல்லாத பொண்ணு தம்பி.... போற எடத்துல நல்லா இருந்தா சரி..." என்று கண்கலங்கிடபடி கூறிட,
"அதனால தான் க்கா நம்ம ரத்தினம் பொண்ணு கேட்கவும் யோசிக்காம சரினு சொன்னேன்... இல்லேனா எதுக்கு அவ்வளவு தூரத்துல கட்டி கொடுக்கப் போறேன்!!! ரத்தினத்தை போல அவன் பையனும் நல்ல குணமான பையனா தான் இருப்பான்..." என்று தன் தமக்கையிடம் தனக்கும் சேர்த்து தைரியம் சொல்லிக் கொண்டார்.
"சரிக்கா.... அடுத்த வாரம் ரத்தினம் வீட்ல இருந்து எல்லாரும் வருவாங்க.... அவங்க தங்குறதுககு நம்ம பண்ணை வீட்டை ரெடி பண்ணனும்... மாப்ளைக்கும் நண்பர்களுக்கும் ஏ.சி ரூம் வேணும்னு சம்மந்திம்மா சொன்னாங்க.... நான் அந்த வேலைகளை கவனிக்கிறேன்...." என்று தமக்கையிடம் விடைபெற்றுச் சென்றார் தாமோதரன்.
அபிராமிக்கு சேதுராணி, ரங்கராஜன் என இரு பிள்ளைகள். கணவனை இழந்த பின் அபிராமியையும் இரு பிள்ளைகளையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அவரது தம்பி தாமோதரனுடையதாகியது. சிறு வயதில் இருந்தே தன் இல்லத்திலேயே வளர்ந்த சேதுராணி மீது தாமோதரனுக்கு ஒருதலைக் காதல் தோன்றிட, எங்கே அதை வெளியே சொன்னால் அக்கா கோபித்துக் கொண்டு இரண்டு பிள்ளைகளோடு வீட்டைவிட்டு சென்றுவிடுவாரோ என்று அஞ்சி மூடி மறைத்தார்.
அப்போது அதே ஊரில் லோக்கல் கேபிள் சேனல் நடத்திக் கொண்டிருத்த ரத்தினகண்ணன் தான் தாமோதரனின் காதல் விஷயத்தை அபிராமியின் காதுகளில் போட்டு வைத்து அவர்கள் கல்யாணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தார்.
அவர்களின் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே ரத்தினகண்ணன் சென்னையில் புது சேனல் ஆரம்பிக்கப் போவதாகக் கூறி சென்னை சென்றுவிட்டார். அதன்பின் விசாலியையும் மணந்து விக்ரமும் பிறந்து விட அதுவரை நண்பர்கள் இருவரும் தொலைபேசியின் மூலம் தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டு தான் இருந்தனர்.
அதன்பின் தான் ரத்தினகண்ணன் தன் சேனலை முன்னேற்றும் வழி நோக்கி பயணிக்க, தாமோதரன் தங்களுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லையே என்று ஏங்கி..... புலம்பி...... மனமுடைந்து போன சேதுராணிக்கு முழுநேர அறிவுரையாளறாக மாறிப் போனார்.
எட்டு வருடங்கள் கழித்தே மலர் பிறந்திட, அடுத்த இரண்டு வருடத்தில் செம்பியன் பிறந்தான். மலரின் ஐந்தாவது வயதில் சேதுராணி காமாலை நோயால் இறந்துவிட, அபிராமி ஆச்சி தாமோதரனை மறுமணம் செய்துகொள்ள வற்புறுத்தினார். ஆனால் தாமோதரன் மறுத்துவிடவே, பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வேண்டி மகன் இல்லத்திலிருந்து தம்பியின் இல்லம் வந்து தங்கிக் கொண்டார்.
அன்னையின் முகத்தை புகைப்படத்தில் மட்டுமே பார்த்து மனதில் பதியவைத்துக் கொண்ட பிள்ளைகள் இருவரோடு, தன் தம்பிக்கும் சேர்த்து அன்னையாக மாறியிருந்தார் அபிராமி ஆச்சி. அதனாலேயே மலர் அபிராமியை 'தாய் கெழவி' என்று கிண்டல் செய்வதுண்டு...
இதோ ஒருவாரம் மின்னல் வேகத்தில் நகர்ந்திட தாமோதரன் வீட்டு இளவரசி இந்த ஒரு வாரத்தில் முடிந்தமட்டும் தன்னை வேலை வாங்கிய அபிராமி ஆச்சியை திட்டித்தீர்த்தே நகர்த்தினாள்.
ரத்தினகண்ணன் உறவுகள் அதே ஊரில் இருந்த போதும் அவரின் குடும்பம் தாமோதரனின் பண்ணை வீட்டில் தான் தங்கினர். ரத்தினகண்ணனும், விசாலியும் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தாமோதரன் இல்லம் வந்திட, விக்ரம் தன் நண்பர்களுடன் நிச்சயத்திற்கு முதல் நாள் மாலை பயணித்தைத் தொடங்கி நல்லிரவில் வந்து சேர்ந்தான்.
நண்பர்கள் அழுப்பில் உறங்கிவிட விக்ரமிற்கு மலரின் நினைவுகளில் தூக்கம் வரவில்லை. திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டானே ஒழிய இன்னமும் தான் நினைத்தது நடக்குமா!! என்று பல குழப்பங்கள் இருக்கத்தான் செய்தது. ஆனாது ஆகிவிட்டது இனி யோசித்து பயனில்லை என்று நினைத்துக் கொண்டு பின்மாடத்தில் சிறிது நேரம் நடப்பதும், சிறது நேரம் உடற்பயிற்சி செய்வதுமாக இருந்தான்.
அதிகாலை விடியலுக்கு முன் இரண்டு உருவம் மதில் ஏறிக் குதிப்பதைக் கண்ட விக்ரம், அந்த இரண்டு உருவங்களையும் உண்ணிப்பாக கவனிக்கத் தொடங்கினான். முக்காடு போட்டபடி வந்த அந்த இருவரும் பின்கட்டில் கூடையிட்டு மூடப்பட்டிருந்த கோழிக் கூடை அருகே சென்று ஏதோ ஒன்றை எடுத்து ஒழித்து வைக்க, 'ஒருவேளை முட்டை திருடனா இருக்குமோ!' என்று யோசித்தபடி உற்றுப்பார்த்தான்.
"ஏய் இன்னு என்ன தேடுறே?" என்று படபடத்தபடி வினவிய ஆண் குரலுக்கு "இருடா இன்னும் ஒன்னே ஒன்னு இருக்கு" என்றது பெண்குரல்.
"மலரு போதும் வா... யாராவது பாத்தா அவ்ளோ தான்!!!..." என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி கூறினான் செம்பியன்.
'ஓஓஓ!!! இது என் பட்டிகாடும் என் மச்சினனுமா!!! இந்நேரம் இங்கே என்ன பண்ணுதுங்க?' என்று யோசித்தபடி அவர்களிடம் செல்ல எத்தனித்தான்...
"ஹாங்.... கெடச்சிடுச்சி வா போகலாம்" என்று கூறியபடி மலர் செம்பியனை அழைத்துக் கொண்டு வந்தவழியே சென்றுவிட்டாள். கீழே இறங்கி வந்தவன் அங்கே யாரும் இல்லாததைக் கண்டு இருவரும் ஏறி குதித்த மதிலின் அருகே சென்று எட்டிப்பார்த்தான்.... நண்டு செண்டுகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தாள் அவள்.
விக்ரமின் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத ஏமாற்றம்..... இத்தனை நாள் தோன்றிடாத ஒரு உணர்வு. அவன் தந்தை புகைப்படம் காண்பித்த போது கூட பார்க்க விரும்பாமல் அலட்சியம் செய்தவன், அவளது பெயரைக் கூட அவனாக கேட்டு அறிந்துகொள்ள நினைக்காதவன், இன்று இவ்வளவு அருகில் இருந்தும் அவளது முகத்தை பார்க்க முடியாமல் போனதில் தோன்றிய ஏமாற்றம் அவனது முகத்தில்.....

-தொடரும்