• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 4

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 4

“ஸ்ரீக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தா?” மீண்டும் அபி கேட்க,

“ஐ அண்டர்ஸ்டாண்ட்! பட் ராஜ்க்கு புடிக்கலையே?” என்றான் ஆனந்த்.

“புடிக்கலைனு எப்ப சொன்னாங்க? இன்னும் நாம கேட்கவே இல்லையே?”

“ஹையோ! உனக்கு தெளிவா சொல்றேன் கேட்டுக்கோ! ராஜ் லவ் சம்ஒன்.. சீக்கிரமே உனக்கு இன்ட்ரோட்யூஸ் பண்ணுவான். அண்ட் ப்ளீஸ் இத்தோட இந்த டாபிக்கை விடு..”

“லவ் பன்றாரா? அய்யயோ அப்ப ஸ்ரீக்கும் அவருக்கும் கல்யாணம் நடக்காதே! போச்சு! போச்சு! அத்தை என்னை தொலைச்சிடுவாங்க.. நான் இப்ப என்ன பண்ணுவேன்..” அபி புலம்ப ஆரம்பிக்க,

“ஏய்! உன்னை சுத்தி இந்த வீட்ல இருக்குற பிரச்சனை எல்லாம் உனக்கு தெரியலையா? அத்தை அத்தைனு குதிக்குறியே அவங்க வீட்லயா இனி போய் இருக்க போற?”

“ஏன் நாளைக்கே விருந்துக்கு கூப்பிட வருவாங்க.. அப்ப கேட்பாங்க இல்ல.. இல்லைனாலும் இதுக்காகவே என்னை வீடு தேடி வருவாங்க.. போச்சு! இனி நான் அவ்வளவு தான்”

“ஷ்ஷ்! அபி! ஏன் இப்படி சைல்ட்டிஷ்ஷா பிஹேவ் பண்ற? அவங்களால உன்னை ஒன்னும் பண்ண முடியாது போதுமா? நாளைக்கு வரட்டும் நானே அவங்ககிட்ட பேசுறேன்.. நீ இதையே நினச்சு தயவு செஞ்சு புலம்பாத!”

“என்ன பேசுவீங்க?”

“பார்க்க தானே போற?”

“அப்ப... அப்ப.. என்னை இந்த வீட்டைவிட்டும் அனுப்ப மாட்டிங்க தானே?”பாவமாய் முகம் வைத்து கேட்டாள் அபி.

“ஏய்! நேத்து தான் நமக்கு கல்யாணம் ஆகியிருக்கு.. நடந்த விதம் எதுவா வேணா இருக்கலாம்.. ஆனா இனி உனக்கு நான்.. எனக்கு நீ தான்.. ஸோ இனி எப்பவும் என்னோட தான் நீ இருந்தாகணும்.. பிடிச்சாலும் பிடிக்காட்டியும்..சரியா? தயவு செஞ்சு இதுக்கு மேல கேள்வி கேட்காமல் கொஞ்சம் நிம்மதியா இருக்க விடு.. ப்ளீஸ்!”

“அப்ப நீங்க என்ன நடந்தாலும் பார்த்துக்கவீங்க தானே?”

“நம்பிக்கை இல்லையா? உன் மேல சத்தியமா பார்த்துக்குறேன் போதுமா?”

“ஹ்ம்ம்!”

“இனி போலாமா? டவுட் எல்லாம் கிளியரா?”

“ம்ம்! பாதி!”

“இப்போதைக்கு இது போதும்” என்றவன் மலைமேல் இருந்த கோவிலுக்கு அவளை அழைத்து சென்றான்.

இப்போது இன்னும் கொஞ்சம் நிம்மதியோடு அமைதியும் கிடைத்தது.. அது அத்தையை சமாளிக்க வழி கிடைத்ததாலா இல்லை ஆனந்த் சற்று நிதானமாய் இவளிடம் பேசியதாலா என ஆராயவில்லை இவள்.

“ம்மா! காபி எங்கே?” தூங்கி எழுந்து வந்து காபிக்காக அமர்ந்தாள் ஸ்ரீ. விமலாவின் மகள்.

“வர்றேன் டி.. காலங்காத்தால ஆளாளுக்கு கத்தினா என்கிட்ட என்ன பத்து கையா இருக்கு? இந்த அபி போனாலும் போனா வீட்டு வேலையில இருந்து காய்கறி வாங்க மார்க்கெட் வரை எல்லாத்துக்கும் நான் தான் படாதபாடு பட வேண்டியது இருக்கு. இருக்கட்டும்.. உனக்கு மட்டும் அவ ஒரு நல்லது பண்ணல... அந்த வீட்ல இருந்து அவளை பிரிச்சுட்டு தான் மறு வேலை பார்ப்பேன்”

அந்த காலை வேளையில் கூட அபியை திட்டுவதை தனது வேளையாய் தொடரும் விமலாவை தலையில் அடித்தபடி கடந்தார் வினோதன்.

“ஏன் மா இவ்வளவு டென்ஷன்?” ஸ்ரீ கேட்க,

“முழுசா மூணு நாள் ஆச்சு டி இந்த அபி அந்த வீட்டுக்கு போய்.. நான் டெய்லியும் போன் பண்ண சொல்லியும் பண்ணல.. நானா பண்ணினாலும் எடுக்க மாட்டுறா” – விமலா.

“நீ ஏன் டி அவளுக்கு போன் பண்ற? உன் தொல்லை தாங்காமல் தான் அந்த பையன் மேல பழி போட்டு அந்த வீட்டுக்கு போயிருக்கா..” உண்மை தெரியாமல் பேசினார் வினோதன்.

“நீ ஏன் யா சொல்ல மாட்ட.. நான் பட்டது எனக்கு தானே தெரியும்.. இத்தனை வருஷம் இந்த வீட்டுல சாப்பிட்டதுக்கு அவ காட்டுற நன்றி கடன் இது தான்.. பார்த்துக்கோ யா.. இது தான் அவ லட்சணம்”

மகள் வாழ்க்கையை பற்றி ஆனந்த்திடம் பேசினாளா அபி என கேட்கவே விமலா அபிக்கு அழைத்தது.

ஆனந்த்திடம் பேசிய பின் விமலா அழைத்த எந்த அழைப்பையும் எடுக்கவில்லை அபி. ஆனந்த்தும் எடுக்கவிடவில்லை.

அஸ்வினியும் ஆனந்திடம் விமலா பற்றி சொல்லி இருந்ததால் கொஞ்சம் அவரை சமாளிக்க தயாராய் இருந்தான்.

“ம்மா! இப்ப என்ன? அபி அண்ணி போன் எடுக்கல அவ்வளவு தானே? இன்னைக்கு எப்படியும் அவங்களை விருந்துக்கு கூப்பிட போக தானே போறீங்க? அப்புறம் என்ன?” என்றாள் ஸ்ரீ.

“உனக்கு என்ன டி தெரியும் அவளை பத்தி? திமிரு! பணக்கார வீட்டுக்கு போனதும் அவ பகட்டைக் காட்டாறா.. இருக்கட்டும்.. நேர்ல போய் பார்த்துக்குறேன் அவளை” அவ்வளவு கோபம் விமலாவிற்கு.

எப்படி தன் மேல் உள்ள பயம் விட்டுப் போகலாம் அவளுக்கு என்கின்ற கோபம். அதை காண்பித்து அந்த வீட்டில் உள்ளவர்களிடம் நல்லபடியாய் பேசி ஸ்ரீ கல்யாணத்திற்கும் அடி போட வேண்டும் என்பது தான் அவருடைய இப்போதைய எண்ணம்.

“அம்மா! இன்னைக்கு என்ன சமையலோ” ராகமாய் கேட்டு டைனிங் டேபிளில் அமர்ந்தான் ராஜ்.

“இன்னும் ரெடி ஆகலை டா.. கொஞ்சம் நேரம் ஆகும்..” – பவானி.

“ம்மா! டைம் ஆச்சு.. என்ன பண்றிங்க இன்னும்?” என்றவாறு கிட்சேன் உள்ளே சென்றான்.

வடை, பாயாசத்தின் வாசம் நாசியை துளைத்தது.

“ம்ம் வாவ்! என்ன ஸ்பெஷல் மா இன்னைக்கு? அமாவாசை பௌர்ணமி எதுவும் இல்லையே?”

“அது மட்டும் தான் ஸ்பெஷலா என்ன? இன்னைக்கு ஆனந்த்தை விருந்துக்கு கூப்பிட வர்றாங்க டா.. அதான் வர்றவங்களுக்காக செஞ்சது”

“ஓஹ்! விருந்துக்கு கூப்பிட வர்றவங்களுக்கு விருந்தா? ம்ம் நடக்கட்டும்”

“டேய்!வீணா பேசாத! இன்னைக்கு லீவ் தானே நீ?”

“நான் ஏன் லீவ்? வேலை அதிகமா இருக்கு மா.. நீங்க வேற”

“ப்ச் ஆனந்த் முதல் நாள் விருந்துக்கு போறான்.. நீ கூட போய்ட்டு வா டா.. நம்ம வீட்ல இருந்து யாராச்சும் போணும்ல? நான் போனா அண்ணிக்கு பிடிக்காது.. அதான் சொல்றேன்..”

“ஓஹ்! ஹ்ம்ம் சரி போலாம்.. ஆனா இவன் என்னை கூட்டிட்டு போவான்னு தோணலை.. எதுக்கும் கேட்டுக்குறேன்” என்றவன் ஆனந்த்தை தேடி வந்தான்.

“தேவ்! தேவ்!” ராஜ் அழைக்க,

“சொல்லு டா” என வெளிவந்தான்.

“ஒன்னும் இல்ல.. அந்த பச்சைகிளி மேட்டர் என்னாச்சுன்னு கேட்க தான் வந்தேன்”

“எந்த பச்சைகிளி?” சந்தேகமாய் கண்களை சுருக்கி கேட்டான் ஆனந்த்.

“அதான் டா அன்னைக்கு எனக்கும் அந்த க்ரீன் சாரீக்கும் சம்திங் சம்திங்னு உன் வைஃப் சொன்னதா சொன்னியே?”

“இப்ப ஏன் அதை கேட்குற?”

“அது அப்படியே இருக்குன்னா நான் உன்கூட இன்னைக்கு விருந்துக்கு வர்றேன்.. இல்லைனா ஆஃபிஸ்ல முக்கியமான வேலை இருக்கு அதை போய் பாக்குறேன்.. சொல்லு”

“ஹ்ம்ம் இரு.. மதுகிட்ட ஒரு போன் பேசிட்டு சொல்றேன்”

“இவன் ஒருத்தன் ஆவூன்னா மது மதுன்னு..”

“உன்னை யாரு டா விருந்துக்கு கூப்பிட்டா.. போடா போய் ஆஃபிஸ் வேலையை பாரு”

“ரொம்ப சீன் போடாத டா.. அம்மா தான் ஹெல்ப்க்கு போக சொன்னாங்க.. வேணாம்னா போ”

“ம்ம் அதானே பார்த்தேன்.. இங்கே பாரு இதே மாதிரி லூசு மாதிரியே அபிகிட்டயும் பேசாத.. ஆல்ரெடி அவ உன்னை ஸ்ரீகூட சேர்த்து வைக்க போறேன்னு நிக்குறா.. நீ விளையாட்டுன்னு சொல்லி வினையாக்கிடாத!”

“ஓஹ் டாபிக் அப்ப முடியலையா?”

“டேய் அடி வாங்காத டா”

“இப்ப நான் என்ன பண்ணனும்? வரவா வேணாமா?”

“வந்து தொலை.. ஆனா அங்கே வந்து வாயை மூடிட்டு இருக்கனும்”

“அது கஷ்டமாச்சே!”

“அடங்கு டா.. மது என்ன சொல்றா?”

“எப்பவும் சொல்றது தான்.. வீட்ல மாப்பிள்ளை பாக்குறாங்க.. வந்து பொண்ணு கேளு.. இல்லைனா விஷத்தை உனக்கு ஊத்திடுவேன்..னு பயமுறுத்துறா”

“உனக்கு அவ தான் டா கரெக்ட்டு.. எல்லாம் விஷத்தை குடிச்சிடுவேன் சொல்லுவாங்க.. ஆனா மது.. அவ விஷத்தை குடிச்சிட்டா நீ இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணி சந்தோசமா இருப்பன்னு தெரிஞ்சு உனக்கு ஊத்திடுவேன் சொல்றா.. கிரேட் கேர்ள்”

“என்னை அவ சாவடிச்சிடுவேன்றா.. அது உனக்கு கிரேட்டா.. நல்ல பண்றீங்க டா”

“சரி போய் ரெடியாகு.. அங்கே உன் வால்தனத்தை எல்லாம் வச்சுக்காத!”

“போ டா! போ டா!”

“இவனையெல்லாம் என்னனு தான் பெத்தாங்களோ வளர்த்தாங்களோ” சொல்லிக் கொண்டு அபியை தேடி சென்றான்.

“நானும் வர்றேன்” என அடம்பிடித்த ஸ்ரீ தேவியை திட்டி வீட்டில் விட்டுவிட்டு விமலா கணவன் வினோதனுடன் வந்து சேர்ந்தார்.

“வாங்க வாங்க! எப்படி இருக்கீங்க?” வரவேற்றது பவானியும் நடராஜனும்.

“நாங்க நல்லாருக்கோம் அண்ணி! நீங்க எப்படி இருக்கீங்க?” பதில் பேசியபடி உள்ளே வந்தார் விமலா.

“எங்க உங்க பொண்ணு? கூட்டிட்டு வரலையா?”

“கூப்பிட்டோம் வரலைனு சொல்லிட்டா.. எப்படியும் அபி விருந்துக்கு அங்கே தானே வர போறா.. அதான்.. அபி எங்கே? கிளம்பிட்டாங்களா?”

“தோ! கிளம்பிட்டே இருக்காங்க.. இப்ப வந்துடுவாங்க.. நீங்க காபி சாப்பிடுங்க” என அமர வைக்க,

“எங்க! கனகா அக்காவை காணும்? இன்னும்... கோவமா தான் இருக்காங்களா?” விமலா கேட்டார்.

“அண்ணிக்கு சட்டுனு எதையும் ஏத்துக்க முடியாது.. அவங்க குணம் அப்படி.. நீங்க எதுவும் நினைச்சுக்காதீங்க”

“இருக்க தானே செய்யும்.. ஒரே பையன் கல்யாணம்.. அவங்களுக்கும் ஆசை இருக்கும்ல? ஆனந்த் தம்பியும் அக்காவை நிச்சயம் பண்ணிட்டு தங்கச்சி கூட.... இப்படி பண்ணியிருக்க வேண்டாம்”

விமலாவின் குணமே இது தானே? அவரே அனைத்தையும் திட்டமிட்டு நடத்திவிட்டு இப்போதும் ஆனந்த் குடும்பத்தாரிடமே அவனை பற்றி குறை சொல்கிறார்.

பவானிக்கு தெரியாதா தான் தூக்கி வளர்த்த மகன் பற்றி? அதுவும் நேற்று இரவே அனைத்தையும் தெரிந்து கொண்ட பின்னும் இன்னும் புன்னகை மாறாமல் விமலாவை வரவேற்ற காரணம் அபியை வளர்த்தவர் என்கின்ற முறையில் தானே?.

இப்போது எல்லாம் செய்துவிட்டு தன் முன்னேயே ஆனந்தை குறை கூறினால் அவரால் தாங்க முடியுமா?

“எங்க ஆனந்த் எப்பவும் தப்பு பண்ணினத்தில்ல அண்ணி! அவன் ஒன்னு செஞ்சா கண்டிப்பா அதுல ஒரு காரணம் இருக்கும்.. இந்த வீட்டுக்கு மருமகளா வர அபிக்கு தான் கொடுத்து வச்சிருக்கு.. அதுக்கு என்ன செய்யறது? ஆனந்த் அபி ரெண்டு பேரும் சந்தோசமா இருந்தாலே எங்களுக்கு போதும்” விமலாவின் மூக்கை உடைப்பதாய் பேசினார் பவானி

“உனக்கு இதெல்லாம் தேவையா? பேசாமல் இரு விமலா” வினோதன் மனைவி காதில் கூறவும் அமைதியானார்.

“அபி உங்க வீட்லேரந்த் வந்துட்டாங்க மா.. என்ன பண்றீங்க?” குரல் கொடுத்தார் பவானி.

“இதோ வந்துட்டோம் அத்தை!” ஆனந்த் சொல்லியவன்,

“அபி ரெடியா? உன் அத்தை மாமா வந்துட்டாங்களாம்” என்றான் அவளிடம்.

“ம்ம்... ஆனா எனக்கு பயமா இருக்கு”

“அதான் நான் இருக்கேன்ல? நான் பார்த்துக்குறேன். வா போலாம்”

“அத்தை ரெண்டு நாளா கால் பண்ணியும் நான் எடுக்கல.. திட்டுவாங்க”

“ப்ச்! அபி கூல்! ரிலாக்ஸ்டா இரு.. ஐம் வித் யூ..ஓகே”

“ம்ம்ம்”

“சரி வா போலாம்” ஆனந்த் அழைத்து செல்ல, கொஞ்சம் பயத்துடனே அவன் பின்னே வந்தாள்.

ஆனந்த் பின்னே ஒளிந்து ஒளிந்து வந்தவளை பார்த்து ஆத்திரமாய் வந்தது விமலாவிற்கு. ஆனாலும் அதை முகத்தில் காட்ட முடியாத இடத்தில் இருக்கிறாரே!

“அபி! எப்படி இருக்க டா?” வினோதன் கேட்க,

“நல்லாருக்கேன் மாமா.. நீங்க எப்படி இருக்கீங்க? ஸ்ரீ வரலையா?” – அபி.

“ம்ம் டா” என்றவர் பாசமாய் அவர் தலையை வருடினார்.

“புது இடம் கிடைச்சதும் அபிக்கு நம்ம போனை கூட நேரம் இல்ல போல.. இல்ல அபி” விமலா சிரித்துக் கொண்டே விஷத்தை கக்க,

“நான் தான் அவ போனை வாங்கினேன் சித்தி.. போன் ரெண்டு நாளா என்கிட்ட தான் இருக்கு.. நீங்க கால் பண்ணின அப்ப நான் வேலையா இருந்தேன். அதான் அபிகிட்ட கொடுக்க முடியல..” ஆனந்த் பொய்களை சரளமாய் அடுக்க, கண்களை விரித்து பார்த்தாள் அபி.

“ஓஹ் அப்படியா! அதானே பார்த்தேன்.. அபியாவது என் போனை எடுக்காமல் இருக்குறதாவது.. நினச்சேன்..” சிரித்தவாறே கூறினார் விமலா.

“சரி வாங்க எல்லாரும் சாப்பிடலாம்” நடராஜன் அழைக்க, பவானியும் அழைத்து சென்றார்.

“ராஜ் எங்கே அத்தை! சாப்பிட வர்ல?” ஆனந்த் கேட்க,

“அப்பவே பசிக்குதுன்னு சொன்னான்.. இரு நான் போய் கூட்டிட்டு வரேன்” பவானி சொல்ல,

“நீங்க இங்கே பாருங்க.. நான் போய் கூட்டிட்டு வரேன்” என ராஜின் அறைக்கு சென்றான் ஆனந்த்.

“அப்புறம்! ராஜ்க்கு கூட ஆனந்த் வயசு இருக்குமே! கல்யாணத்துக்கு பார்க்குறிங்களா?” விமலா அடுத்த அடியை வைத்தார்.

“ஆமா அண்ணி! அவனுக்கும் சீக்கிரம் கல்யாணத்தை செஞ்சிடணும்” பவானி சொல்ல, இந்த பேச்சின் திசையில் சாப்பாடு தொண்டையில் சிக்கிக் கொண்டது அபிக்கு.

“அண்ணி ஏன் நாம ராஜ்க்கு...” ஸ்ரீக்கு ராஜ்ஜை திருமணம் செய்வது பற்றிய பேச்சை எடுக்கும் முன் பேசவிடாமல் ராஜ் உடன் வந்துவிட்டான் ஆனந்த்.

“முதல்ல சாப்பிடுங்க சித்தி.. மெதுவா பேசிக்கலாம்” ஆனந்த் சொல்லிவிட, ராஜும் அவரைப் பார்த்து சம்பிரதாயமாய் சிரித்துவிட்டு சாப்பாட்டில் கவனம் பதித்தான்.

“எல்லாரும் வாங்க.. போய்ட்டு வரலாம்” சாப்பிட்டதும் வினோதன் அழைக்க,

“எங்களுக்கும் ஆசை தான்.. ஆனா சூழ்நிலை சரியில்லையே! நாங்க இன்னொரு நாள் வரோம் பா.. இப்ப ராஜ் மட்டும் வருவான்” நடராஜன் சொல்ல, அவ்வளவு சந்தோஷம் விமலாவிற்கு.

“பரவாயில்லை பரவாயில்லை.. எல்லாம் சரியாகட்டும்.. அதான் இப்ப தம்பி வர்றாங்களே!” வாயெல்லாம் பல்லாய் விமலா சொல்ல, அங்கேயே கொஞ்சம் திடுக்கிட்டது ராஜிற்கு.

ஆனந்த் சொன்னதன் அர்த்தமும் புரிந்தது போலிருந்தது.

‘ஆத்தி! இது பொல்லாத பொம்பள தான் போல.. தப்பிச்சு ஓடிடு டா ராஜ்’ தனக்குள் சொல்லிக் கொண்டான்.

ராஜ் பாவமாய் ஆனந்த்தை பார்க்க, தான் பார்த்துக் கொள்வதாய் கண்ணசைத்தான் ஆனந்த்.

“அபி! வா மா.. வந்து என் பக்கத்துல உட்காரு.. உன்னை பார்த்து எவ்வளவு நாளாச்சு?” உருகி தவித்து பேசுவது போல காரில் ஏறியதும் பேசினார் விமலா.

“இல்ல சித்தி! நீங்க இந்த கார்ல போங்க.. நாங்க பின்னாடியே வரோம்..” என்றான் ஆனந்த்.

“இல்ல தம்பி! முறைனு ஒன்னு...”

“அண்ணி! அவங்க சின்ன பசங்க.. தனியா பேசிட்டு வரட்டுமே! நீங்க கிளம்புங்க பின்னாடியே வேற கார்ல வந்துடுவாங்க” பவானி கூறவும் வேறு வழி இல்லாமல் சென்றார் விமலா.

“அண்ணா!” அபி ராஜை அழைக்க,

“அண்ணாவா? யாரு டா அது? இந்த வீட்ல எனக்கு தெரியாமல் ஒரு அண்ணா?” சுற்றி சுற்றி பார்த்தான் ராஜ்.

“டேய்! உன்னை தான் டா அண்ணானு சொன்னா வெண்ண!” என ஆனந்த் சொல்ல,

“என்.. என்னை.. என்னை அண்ணானு.. என்னையா அண்ணானு.. கூப்பிட்டீங்க?” ராஜ் பாவனையாய் கேட்க, ம்ம்ம்ம் என்றாள் அபி.

“ஷ்ஷ்ஷோ! கொசு தொல்லை தாங்க முடியலை டா சாமி.. சும்மாவே அறுப்பான்.. இவ வேற சலங்கை கட்டுறாளே” ஆனந்த் சொல்ல,

“சும்மா இரு டா! கண்ணு போடாத.. அபி! நல்ல நேரத்துல போய் சேரனும்.. அதுனால வண்டில போய்கிட்டே பேசுங்க” விமலா சொல்ல, சரி என சொல்லி விடைபெற்று காரில் ஏறினார் மூவரும்.

அனைத்தையும் மாடியில் இருந்து பார்த்தபடி நின்றார் கனகா.

“இப்ப சொல்லுங்க சிஸ்டர்! அண்ணா என்ன செய்யணும் உங்களுக்கு? மலையை கொண்டு வரணுமா? இல்ல வானத்தையே கொண்டு வரணுமா?” ராஜ் கேட்க,

“டேய்! ரொம்ப பண்ற நீ! அண்ணா இஸ் அ வர்ட்.. நாட் அ எமோஷன்” கிண்டல் செய்தான் ஆனந்த்.

“அவன் கிடக்குறான் பொறாமை பிடிச்சவன்.. நீங்க சொல்லுங்க சிஸ்டர்” ராஜ் சொல்ல,

“அது.. அது வந்து.. நீங்க ஸ்ரீயை...” தயங்கி தயங்கி அபி இழுக்க, உடனே அவள் கேட்க வருவதை புரிந்து கொண்டான் ஆனந்த்.

தொடரும்..