விக்ரமின் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத ஏமாற்றம்..... இத்தனை நாள் தோன்றிடாத ஒரு உணர்வு. தன்னவளின் பெயரைக் கூட தானாக கேட்டறிய விரும்பாதவன், தந்தை அவளது புகைப்படத்தை காண்பித்த போது கூட பார்க்க விரும்பாமல் அலட்சியமாகத் தவிர்த்தவன், இன்று இவ்வளவு அருகில் இருந்தும் அவளது முகத்தை பார்க்க முடியாமல் போனதில் தோன்றிய ஏமாற்றம்.... அவனது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. இப்போது முழுமையாக குழம்பிப் போனான்.
'என்ன எடுத்துச் சென்றிருப்பாள்? இவ்வளவு தூரம் வந்தவளுக்கு நான் இங்கே இருப்பது தெரியுமா!?? தெரியாதா இருக்கும்..... ஆனால் அவள் தம்பி சுற்றும் முற்றும் பார்த்தானே!!! விடிந்தால் நிச்சயதார்த்தம்... எல்லோரும் இங்கே தங்கியிருப்பது தெரிந்து தான் வந்திருக்கிறாள்!!.... எவரேனும் பார்த்தால் என்ன மாதிரியெல்லாம் அவளைப் பேசுவார்கள் என்று தெரிந்து தான் வந்திருக்கிறாள்... நான் நினைத்ததை விட தைரியமானவள் தான்....' என்று நினைத்துக் கொண்டு சிறிய சிரிப்போடு, சந்தோஷமாக விசிலடித்தபடி அறைக்குள் நுழைந்தான்.
தன் திறன்பேசியில் அவனுக்கு விருப்பமான மேற்கத்திய பாடலை இசைக்கவிட்டு நடனமாடிட உறங்கிக் கொண்டிருந்த உதியும், வினோவும் அரண்டடித்துக் கொண்டு எழுந்தனர். அடுத்த நிமிடம் மெத்தையில் ஏறி நின்றபடி நடனமிட்டான் விக்ரம்.
"டேய்.... ஏன் டா மெத்தை மேல ஏறி ஆடுறே? இறங்குடா கீழே..." என்றான் வினோ.
விக்ரமின் முகத்தில் தெரிந்த உற்சாகத்தைக் கண்டுகொண்ட உதி, "இனி நீ என்ன கத்து கத்தினாலும் அவனுக்கு கேக்காது.... முடிஞ்சா கீழே படுத்துக் தூங்கு" என்று வினோவிடம் கூறிவிட்டு விக்ரமுடன் இணைந்து கொண்டான் உதி.
சிறிது நேரம் உருண்டு புரண்டு படுத்து பார்த்த வினோவும் அதற்கு மேல் தூக்கம் வராமல் எழுந்து அமர்ந்து இருவரின் ஆட்டத்தையும் கண்டான். விக்ரமும், உதியும் ஆடி கலைத்து அமர்ந்திட, இவ்வளவு நேரம் விக்ரமின் முகத்தில் இருந்த உற்சாகம் வலுக்கட்டாயமாக துடைக்கப்பட்டு இயல்பு நிலைக்கு மாற்றப்பட்டிருந்தது.
அதனைக் கண்டும் காணாதது போல், "இப்போ எதுக்கு இந்த கொண்டாட்டம்?" என்று பொறுமையாக வினவினான் வினோ.
"மலர் வந்தா"
"உனக்கு பார்த்து வெச்சிருக்குற பொண்ணா?" என்றான் உதி.
"ம்ம்ம்"
"உன்னை பாக்கவா வந்தாங்க?" என்றான் வினோ.
மலருக்கு வினோ கொடுத்த மரியாதையை குறித்துக் கொண்டபடியே "இல்லே..." என்றான்.
"பின்னே" இருவருமே குழப்பமாக வினவிட,
"எவனாவது ஒருத்தன் கேளுங்கடா... எதுக்கு வந்தானு தெரியாது... ஆனா ஏதோ திருடிட்டு போறா"
"நீ கனவு எதுவும் கண்டேயா?" என்றான் வினோ.
பதிலேதும் கூறாமல் அவனை முறைத்திட, "முறைக்காதே டா... அவங்க வீடு தானே... அவங்க ஏன் திருடனும்!!??... அதான் கேட்டேன்... சரி... அதுக்கு நீ ஏன் இவ்ளோ ஹாப்பியா இருக்கே!!!"
"அவ நான் நெனச்ச அளவுக்கு பட்டிக்காடெல்லாம் கிடையாது போல டா... கொஞ்சம் தைரியமான பொண்ணு தான்... அதான்" என்றவனை விசித்திர ஜந்துவைப் பார்ப்பது போல் பார்த்தனர் இருவரும்.
தன் அதிர்ச்சியை குறைத்துக் கொண்டு "ஓஓஓ... பார்த்து பேசியாச்சா!??" என்றான் உதி.
"இல்லே..."
அவ்வளவு நேரம் இயல்பாக பேசிய உதி திடீரென தன் குரலை உயர்த்தி "நல்லா வருவே டா... நீயெல்லாம் நல்லாவே வருவே..." என்று உச்சகட்ட கடுப்பில் ஆரம்பித்து பின் சற்று குரலை தளர்த்தி
"ஓரமா நின்னு வேடிக்கை பார்த்ததுக்கே இந்த ஆட்டமா? என்ன ஏதுனு கூட கேட்காம உன் சந்தோஷத்தை உன் கூட சேர்ந்து கொண்டாடுனேன் பாரேன்... என்னை மாதிரி ஒரு கேனப் பையன் இந்த உலகத்துலேயே இருக்கமாட்டான்....." என்று தலையில் அடித்துக் கொண்டு தன்னைத் தானே நொந்து கொண்டான் உதி.
வினோவோ விக்ரமை இன்னும் வினோதமாகப் பார்த்தபடி, "நம்ப முடியலேயே!!! டென் டேஸ் முன்னாடி வரைக்கும் இந்த கல்யாணத்தை நிறுத்தப் போறேனு சொல்லிட்டு இருந்தவன், இப்போ என்ன திடீர்னு இப்படி ஒரு ச்சேஞ்ச்?" என்றான்.
"நான் அப்போ வேண்டாம்னு சொன்னதுக்கும் ரீஸன் இருக்கு... இப்போ வேணும்னு சொல்லறதுக்கும் ரீஸன் இருக்கு..." என்று அழகான ஒரு கோணல் புன்னகையைச் சிந்தியபடி கூறினான்.
"அப்படி என்ன ஆனியனுக்குனு நாங்களும் தெரிஞ்சுக்கலாமா?..." என்று உதி வினவிட,
"உனக்கு எதுக்கு டா நான் சொல்லனும்... என்னை கேள்வி கேட்குற அதிகாரம் என் மனைவிக்கு மட்டும் தான் இருக்கு... அவ வந்து கேட்கட்டும் நான் பதில் சொல்றேன்..." என்று சிரித்துக் கொண்டே உதியின் கன்னத்தைப் பிடித்து இடவலமாக அசைத்துவிட்டு "குட் நைட்" என்று கூறி இருவருக்கும் நடுவே படுத்துக் கொண்டான்.
"இவனை புரிஞ்சுக்கவே முடியலே..." என்ற உதிக்கு, "விடு... அவனே ஒருநாள் சொல்லுவான்..." என்று வினோ பதில் கூறிட, குப்புற படுத்துக்கிடந்த விக்ரம் தன் சுட்டு விரலை மட்டும் மேலே உயர்த்தி, 'அது மட்டும் நடக்காது' என்பதுபோல் இடவலமாக அசைத்துவிட்டு, மீண்டும் விரலை மடக்கி அசையாமல் படுத்துக் கொண்டான்.
இனி எங்கே நண்பர்கள் உறங்குவது!... இவ்வளவு நேரம் விக்ரம் செய்து கொண்டிருந்த பணியை இப்போது வினோவும், உதியும் தொடர, பொழுது புலர்ந்து வீடு முழுவதும் விழாக்கோலம் கலைகட்டத் தொடங்கியது...
பணியாட்களும், சொந்தங்களும் ஆளுக்கொரு வேலையோடு சுற்றித் திரிய, தாமோதரனும், ரத்தினகண்ணனும் வந்தோரை கவனிப்பதும், சொந்தங்களுக்கு வேண்டியவற்றை விசாரித்து செய்து கொடுப்பதுமாக இருந்தனர்.
முகூர்த்த நேரத்திற்கு தன் மகனுடன் மண்டபம் வந்து இறங்கிய விசாலி ரத்தினத்திடம் சென்று "இதுக்கு தான் சென்னைல ஃபங்ஷன் வெச்சுக்கலாம்னு சொன்னேன். டீலர்ஸ் கிட்ட பொறுப்பை கொடுத்துட்டு அழகா உக்காந்த இடத்துலயே எல்லா வேலையும் நடத்தியிருக்கலாம்..." என்று சலிப்பாக முகத்தை சுழித்துக்கொண்டு கூறிட,
ரத்தினகண்ணன் பதிலேதும் கூறாமல் மனைவியை கனல் பார்வை பார்த்திட, அப்போதும் அடங்காமல் "என்னை ஒரு மனுஷியா மதிச்சா தானே!!! சும்மா என்னை முறைக்கிறது மட்டும் தான் உங்களுக்குத் தெரியும்..." என்று அவருக்கு கேட்கும்படியாக முணுமுணுத்தார்.
"நீ எப்போ தான் இருக்குற இடத்துக்கு ஏத்த மாதிரி பேச்சிலேயும் அனுசரிச்சு நடந்துக்க பழகப்போறியோ தெரியலே!!! ஆனாலும் இத்தனை வயசுக்கு மேல உன்கிட்ட அதை எதிர்பாக்குறது என்னோட மடத்தனம்... நீ யாரையும் இங்கே கவனிக்க வேண்டாம், நாங்க அதை பாத்துக்கிறோம்... நீ உன் சம்மந்தி கெத்தை காட்டினபடி அப்படி போய் கால் மேல கால் போட்டு உக்காந்துக்கோ..." என்று விசாலிக்கு மட்டும் கேட்கும் குரலில், முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு முடிந்த மட்டும் தன் கோபத்தை வார்த்தைகளில் காட்டினார்.
இதற்குமேல் இன்னமும் பேசி ரத்தினத்திடம் மேலும் வசைச்சொல் வாங்கிட விசாலி விரும்பவில்லை... எனவே அமைதியாக சென்று அமர்ந்து கொண்டார். அதற்காக அவர் குணத்தை காண்பிக்காமல் இல்லை. ரத்தினகண்ணனின் சொந்தங்களிடம் தானாகச் சென்று தற்பெறுமையும் தம்பட்டமும் அடிக்க ஆரம்பித்தார்...
விக்ரம் அனைத்தையும் புதிதாக பார்ப்பது போல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது உதி மேடையில் பெண் மற்றும் மாப்பிள்ளை பெயர் எழுதப்பட்டிருப்பதைக் காட்டிட, அதனைக் கண்ட விக்ரம் தன்னையும் மறந்து சிரித்தான்.
என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்த்து தான் விக்ரமின் இதழ்கள் விரிந்தது. மீண்டும் ஒருமுறை 'பனிமலர்' என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டு, வாய் திறந்து "அழகான பெயர்" என்றான்.
"டேய் மச்சா... என்கேஜ்மெண்ட் வரையும் வந்தும் அந்த பொண்ணோட முழுபெயர் கூட தெரியாம இருக்குறே... உண்மையாவே மனசார தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேயா?" என்றான் உதி.
"இதுக்கே ஷாக் ஆனா எப்படி மச்சா... தான் இன்னமும் அவளை பார்க்கலே..." என்றிட,
"காலைல வந்தாங்க... பாத்தேனு சொன்னியே!!!" என்று வினோ கேட்டான்.
"பாத்தேன் தான்... தூரமா நின்னு பாத்தேன்... இருட்டுல முகம் சரியா தெரியலே..." என்று நிறுத்தி நிதானமாகக் கூறிய போதும் விக்ரமின் முகத்தில் எந்தவிதமான உணர்வுகளும் வெளிப்படவில்லை.
"மச்சா... இப்பவும் ஒன்னு லேட் ஆகல... நீ உம் மட்டும் சொல்லு போதும்.... உடனே ஃபங்ஷனை நிறுத்திடுறேன்.... எந்த ஒரு வேலிட் ரீஸனும் வேண்டாம்.... உம்?" என்று விக்ரமின் முக மாறுதலைக் கூட கவனிக்காமல் உதி கூறி முடித்த அடுத்த நிமிடம் அவனது கழுத்து விக்ரமின் கையில் இருந்தது.
"ஃப்ரெண்டுனு கூட பாக்கமாட்டேன்... கொன்னுடுவேன்..." என்றிட, உதிரும் பதிலுக்கு "அப்போ கன்ஃபார்மா கல்யாணம் நின்றும்..." என்று பேச முடியாமல் பேசிட, சட்டென அவன் கழுத்திலிருந்து தன் கையை விளக்கினான்.
"இவனுக்கு பைத்தியம் முத்திடுச்சு... கூடிய சீக்கிரம் நல்ல ஹாஸ்பிட்டல் பாக்க வேண்டியது தான்... டேய் வினோ எதுக்கும் இவன் பக்கத்துல இருக்கும் போது கேர்ஃபுல்லாவே இரு... நான் ஒரு தம் போட்டுட்டு வரேன்..." என்று கூறி வெளியே எழுந்து சென்றுவிட்டான்.
மண்டபத்திற்கு வெளியே சற்று தள்ளி நின்று புகைத்தவனின் அருகே வந்த செம்பியன், "மச்சானுக்கும் இந்த பழக்கம் இருக்கா?" என்று தலைகுனிந்த படி வினவிட,
உதி அவனை ஒரு மார்க்கமாக பார்த்து, "அதை உன் மச்சா கிட்டேயே கேட்க வேண்டிதானே!!!" என்றான்.
செம்பியன் பதில் கூறாமல் அமைதியாக இருக்க, "டேய் ராசா..." என்றபடி அவன் தோளில் கைபேட்டுக் கொண்டு, "உன் மச்சா மொதோ வேண்டானு சொன்னான்... இப்போ வேணுங்குறான்.... பத்து நாளைக்கு முன்னாடி நிறுத்து சொன்னான், இப்போ நிறுத்துனா கொன்னுடுவேங்குறான்... ஆரம்பத்துல பிடிக்கலே... இப்போ பிடிச்சிருக்கு...." என்று புலம்பிட செம்பியனோ 'இவர் ஏன் இப்படி உளறுறாரு?... தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டோமோ!!!' என்று யோசித்தபடி திருதிருவென முழித்தான். இறுதிவரை செம்பியனின் கேள்விக்கு விடை தெரியாமல் போனது தான் மிச்சம்.
"இங்க பாருங்க நான் கேட்டதை விட்டுட்டு வேற ஏதேதோ பேசுறிங்க.... சின்ன பையன் இப்படி குழப்பிவிட்டு சுத்தல்ல விடலாம்னு மட்டும் நெனைக்காதிங்க.... பின்விளைவு உங்களுக்கும் சேர்த்து தான் கிடைக்கும்..." என்று புதிதாக அரும்பிய மீசையை முறுக்கிவிடாத குறையாக மிரட்டினான்.
"சரி தான் டா... நான் உன்ன சுத்தல்ல விடுறேனா!!!???.... உன் மச்சானால சுத்தல்ல விடப்பட்டவங்க கவுன்ட் என்னனு அவனுக்கே தெரியாது... சரி அதை வேற கதை... அதைவிடு..." என்று கையில் இருந்த ஆறாம் விரலை உதறிவிட்டு,
"இப்போ நான் ஆமானு சொல்றேனு வெச்சுகோயேன், உன் மச்சா என் சட்டைய பிடிச்சு.... 'என்னை பார்த்து இந்த பழக்கம் இருக்குனு நீ எப்படி டா சொல்லாம்?'னு கேட்பான்.... இதேது நான் இல்லேனு சொன்னேனு வையேன் அதுக்காகவே இதுவரைக்கும் இந்த பழக்கம் இல்லேனாக்கூட பழகிட்டு வந்து உன்னையும் என்னையும் ஒன்னா நிக்க வெச்சு 'உஃப் உஃப்'னு வட்ட வட்டமா பொகைவிட்டு நீ என் சட்டைய பிடிக்கிற வரைக்கும் உன்னை கடுப்பேத்துவான்... ஆக மொத்தம் சேதாரம் யாருக்கு?"
இப்போது செம்பியன் முகத்தில் ஈ ஆடவில்லை, "ரெம்ப யோசிக்காத எனக்கு தான் சேதாரம்... அதனால இந்த கேள்விய உன் மச்சாகிட்டயே கேட்டுக்கோ" என்று கூறி உள்ளே சென்றுவிட்டான்.
'இப்போ மச்சானுக்கு இந்த பழக்கம் இருக்குனு சொல்றாரா!!! இல்லேனு சொல்றாரா!!!' என்று தலையை சொரிந்தபடி செம்பியனும் மண்டபம் நோக்கி சென்றான்.
மலர் முகூர்த்தப்புடவை மாற்றி அழைத்துவரப்பட, விசாலி மலருக்கு மாலை அணிவித்து, சேலை நிறத்திற்குப் பொருத்தமாக தங்க நிற சரிகை நூலில் கோர்க்கப்பட்ட ரோஜா இதழ் சரத்தை மலரின் சிரத்தில் சூடி, அவளை கட்டியணைக்க மலருக்குள் சொல்லொன்னா உணர்வு தோன்றி மறைந்தது. அப்போது அதன் அர்த்தம் புரிந்திடாத மங்கையவள், தன் மாமியாரின் அன்பில் உருகி வடிந்தாள்.
விசாலியை அடுத்து ரத்தினம், தாமோதரன், அபிராமி, செம்பியன் என அனைவரும் மலருக்கு திருவீறு பூசி ஆசிர்வதிக்க, இறுதியாக விக்ரமை அழைத்திட அவனோ மறுத்துவிட்டான். அவன் சார்பாக வாங்கி வந்திருந்த கணையாளியைக் கூட விசாலி தான் அணிவித்தார். மேடை ஏறியதில் இருந்து மலரின் செயலை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்த விக்ரமிற்கு தன் அன்னை அணிவித்த கணையாளியை இன்முகமாக ஏற்றுக் கொண்டவளின் மிது சிறிய கோபம் கூட தோன்றியது...
'இவள் என்ன இப்படி இருக்குறா!!! மாப்பிள்ளைனு நான் ஒருத்தன் இருக்குறேனா இல்லேயானு கூட தேடமாட்டேங்குறா!!! காலைலேயும் சும்மா ஒரு பார்வைக்காவது வீட்டுக்குள்ள நான் தெரியிறேனானு பாக்களே!! இப்போதும் நான் ஸ்டேஜ்க்கு வரலேயே... இங்கே தான் இருக்கேனானு கூட பார்க்கமாட்டேங்குறா!!! இருக்குடி உனக்கு... கல்யாணம் மட்டும் முடியட்டும்...' என்று வன்மமாக சிரித்தபடி அவளையே பார்த்திருந்தான்.

பனிமலர்
பார்த்தி

-தொடரும்