ஆரம்பத்தில் இருந்தே தன்னைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் மலரின் மேல் விக்ரமிற்கு கோபம் மூண்டிட, "கல்யாணம் ஆகட்டும், அப்பறம் இருக்கு இவளுக்கு..." என்று தன் மனதிற்கு நினைத்துக் கொண்டு மீண்டும் அவள் நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்கினான்.
ஆனால் மறந்தும் கூட அவள் முன்னே சென்று நிற்கவில்லை. தன் நண்பர்களையும் அவளிடம் சென்று பேச அனுமதிக்கவில்லை.
அன்று இரவே ரத்தினகண்ணன் மற்றும் விசாலி ஒரு மகிழுந்திலும், விக்ரம் மற்றும் நண்பர்கள் ஒரு மகிழுந்திலும் சென்னை புறப்பட்டுவிட தாமோதரன் இல்லத்தில் தங்கியிருந்த சொந்தங்களும் புறப்பட்டிருந்தனர். மலரின் தாய்மாமா ரங்கராஜன் குடும்பம் மட்டும் அங்கே தங்கியிருந்தது.
இரவு அனைவரும் மொட்டைமாடியில் படுத்திட, குழந்தைகளுடன் படுத்திருந்த மலர் நல்லிரவு நெருங்கியும் தன் தம்பி தூங்காமல் உருண்டு கொண்டிருப்பதைக் கண்டவள்,
"செம்பியா தூங்கலேயா?" என்றாள்
"தூக்கம் வரலே"
"ஏன் டா? நீ இன்னைக்கு மண்டபத்துக்கும் வீட்டும் அலஞ்சதுக்கே உனக்கு அடிச்சு போட்ட மாதிரி தூக்கம் வரனுமே!!! என்னாச்சு? என்ன யோசிச்சுட்டு இருக்கே?"
இன்றைய நிகழ்வுகள் அனைத்தையும் அசை போட்டபடி படுத்திருந்தவன், தமக்கையின் கேள்வியில் அவள் புறம் முழுமையாக திரும்பிபடுத்துக் கொண்டு
"அக்கா... உனக்கு மச்சானை பிடிச்சிருக்கா?" என்றான்.
அவனது கேள்வியில் ஒரு நிமிடம் திகைத்தவள், தம்பி தன்னை கண்டுகொள்வதற்குள் சுதாரித்துக் கொண்டு "இப்போ ஏன் திடீர்னு இந்த கேள்வி? அப்பா ஒரு காரியம் செய்தா அது சரியாத் தான் இருக்கும்... நீ தேவையில்லாம கண்டதையும் யோசிக்காதே செம்பா"
"ம்ம்ச்சு.... என்னை செம்பானு சொல்லாதே..." என்று எப்போதும் போல் கோபம் கொண்டு நெற்றியை சுருக்கியபடி கூறினான்.
"சரிடா... அப்படி கூப்பிடலே... நீ இப்போ தூங்கு..." என்று அவன் தலைகோதிவிட்டாள்.
"மச்சானை நீ பாத்தேயா? உனக்கு அவரை பிடிச்சிருக்கா? இல்லேயா?" என்று மீண்டும் வினவிட,
"செம்பியா..." என்று தயங்கியபடி அழைத்தாள் மலர்.
"என்ன க்கா? உனக்கு பிடிக்கலேனாலும் என்கிட்டு தயங்காம சொல்லுக்கா..."
தம்பியின் அன்பில் நெகிழ்ந்தவள், "அது இல்லே டா... எனக்கு யாரு உன் மச்சானு தெரியாது டா"
"என்ன க்கா சொல்றே!!" என்று அதிர்ந்து எழுந்து அமர்ந்திட, மலரும் எழுந்து அமர்ந்து, "கத்தாதே டா ப்ளீஸ்" என்று தம்பியை வேண்டிக் கேட்டுக் கொண்டாள்.
"அப்பா உன்கிட்ட ஃபோட்டோ காண்பிச்சு கேட்டுட்டு தானே ரத்தினம் மாமா கிட்ட சம்மதம் சொன்னாங்க!!! மச்சானை பாக்காமலேயே எப்படி சரினு சொன்னே!"
"அப்பா ஃபோன்ல இருந்த ஃபோட்டோவ காண்பிக்கும் போது அதை பாக்குறதுக்கு தயக்கமா இருந்துச்சு... உங்களுக்கு பிடிச்சா சரிப்பானு சொல்லிட்டேன்... அதுக்கப்பறம் இன்னும் பத்து நாள்ல தான் நேர்ல பாக்கப்போறோமேனு அமைதியா இருந்துட்டேன்... ஆனா இன்னைக்கு உன் மச்சான் ஸ்டேஜ்க்கே வரலே... எனக்கு எங்க உக்காந்திருப்பாங்கனு கூட்டத்துல தேடவோ!!! இந்த மூனு பேர்ல யாரா இருக்கும்னு மூனு பேர் முகத்தையும் மாத்தி மாத்தி பாக்கவோ பிடிக்கலே..." என்றிட,
"என்ன க்கா நீ..." என்று பல்லைக் கடித்தவன், "என்கிட்ட சொல்லிருக்கலாம்ல... நான் அவர்கிட்ட பேசுற மாதிரியாவது உனக்கு காண்பிச்சிருப்பேன்ல" என்றான்.
"விடுடா இன்னு ஒன் மந்த்ல கல்யாணம்... அப்போ கண்டிப்பா என் முன்னாடி வந்து நின்னு தானே ஆகனும்... அதுக்கப்பறமும் ஆயிசுக்கும் பாக்கப்போற மூஞ்சி தானே... மெதுவா பாத்துக்கலாம்..." என்று திமிராகக் கூறுவது போல் பாவனை செய்து, தம்பியை சமாதானம் செய்வதில் முனைந்தாள்.
ஆனாலும் செம்பியனின் முகம் கோபத்திற்கு பதிலாக சோகத்தில் ஆழ்ந்தது. "செம்பியா.... ஏன் டா இப்படி உம்முனே இருக்க? என் மேல கோபமா இருந்தா ரெண்டு அடி கூட அடிச்சிடுடா... இப்படி மூஞ்சிய உம்முனு வெச்சுக்காதே..." என்று இறைஞ்சும் குரலில் கூறிட,
"ஏய் லூசு... உன் மேல எதுக்கு கோபமா இருக்கப் போறேன்... எனக்கு என்னவோ இன்னைக்கு மச்சானும் அவங்க அம்மாவும் நடந்துக்கிட்ட முறை வித்தியாசமா படுது... அதான் உனக்கு மச்சானை பிடிச்சிருக்கானு கேட்டேன். நீ அப்பாவுக்காகத் தான் சம்மதம் சொல்லிருப்பேனு தெரியும்.... இருந்தாலும் உன் மனசுல என்ன நெனைக்கிறேனு தெரிஞ்சுக்கலாம்னு நெனச்சா, நீ இவ்ளோ பெரிய பாறாங்கல்லை என் தலைல போடுறே..." என்று உண்மையாகவே வருத்தத்துடன் கூறினான்.
"டேய்.... நீ நெனைக்கிற அளவுக்கு இது பெரிய விஷயம்லா இல்லே... அத்தைக்கு என்ன? அத்தை நல்லா தானே பழகுறாங்க!!!"
"அது ஸ்டேஜ்ல மட்டும் தான். எனக்கு என்னமோ அவங்க பொய்யா பழகுற மாதிரி இருக்கு... மச்சான் உன் மேல பாசமா இருந்தா சரினு நெனச்சேன்... ஆனா அவர் என்னடானா........" அதற்கு மேல் சொல்ல முடியாமல் அமைதி காத்தான். அவனைப் பொருத்தவரை விக்ரம் மேடையில் தமக்கையுடன் இணைந்து நிற்க விரும்பாததாக நினைத்தான்.
"டேய்... பொதுவாவே மாப்ளை வீடுனு கெத்து காட்ட தான் செய்வாங்க... இதுல மச்சான் வேற ஆட் ஃபில்ம்ல இருந்து சினி ஃபீல்டு போனாலும் போவார் போல... அத்தை சொல்லிக்கிட்டாங்க... அதுனால அப்படி நடந்திருப்பாங்க... உனக்கு தெரியாதா!!! ரத்தினம் மாமாவை பத்தி... அப்பா எவ்ளோ பெறுமையா சொல்லுவாங்க... நீ தேவையில்லாம கன்ஃபியூஸ் ஆகாதே... இப்போ படுத்து தூங்கு..." என்று செம்பியனை படுக்க வைத்து அவன் இடது கை விரல்களோடு தன் விரல்களை கோர்த்துக் கொண்டாள்.
படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு தானாக வருவதாகவும், அதனை விக்ரம் தான் தவிர்ப்பதாகவும் விசாலி தான், தன் அப்பாவி மருமகளிடம் பொய்களை அள்ளித் தெளித்திருந்தார்.
சிறிது நேரம் அமைதியாக படுத்திருந்தவன், "க்கா நீ மச்சானை பாக்குறேயா?" என்றிட,
மலருக்கும் மனதிற்கு ஆசையிருந்த போதும் தம்பியிடம் அதனைக் கூறத் தயங்கிட, செம்பியனோ அவள் அனுமதிக்கு கூட காத்திராமல், தனது திறன்பேசியில் இன்று எடுத்த படங்களில் எங்கேனும் விக்ரம் தெரிகிறானா என்று தேடிப் பார்க்க எதிலும் அவனது முகம் தெளிவாக இல்லை.
ஏமாற்றமாக திறன்பேசியை ஓரமாக வைத்துவிட்டு, "நீ ........... அந்த பெர்ஃபியூம் ஆட் பாத்திருக்கேயா?" என்று பிரபலமான வாசனை திரவிய விளம்பரத்தைக் கூறிட, மலரும் சிறிது நேரம் யோசித்தவள், "ஃபேஸ் நியாபகம் வரலே டா" என்றாள்.
"அப்போ அந்த பைக் ஆட்?" என்று அடுத்ததைக் கூறிட,
"டேய் மாங்கா... ஃபேஸ் காமிச்சிட்டு வந்த விளம்பரமே நியாபகம் இல்லேங்குறேன், ஹெல்மெட் போட்டுட்டு வந்த விளம்பரத்தைக் கேக்குறே..." என்று அவன் தலையில் அடித்தாள்.
தலையைத் தேய்த்துக் கொண்டபடி "இப்போ ரீஸன்ட்டா ஒரு சோப் ஆட் வந்ததே" என்று அந்த குளியல் சோப்பின் பெயரைக் குறிப்பிட, அவளோ முகம் வாடியபடி பார்க்கவில்லையே என்பது போல் இடவலமாகத் தலையசைத்தாள்.
பின்னே தம்பியிடம் எப்படிச் சொல்வாள், 'பெண்களுக்கான குளியல் சோப் விளம்பரத்திற்கு ஒரு ஆடவனும், அவனுடன் ஒரு ரொமாண்டிக் சீன்னும் தேவையா!!' என்று திட்டிக் கொண்டே ச்சேனல் மாற்றிவிட்டதை.... அந்த விளம்பரத்தைப் பார்த்ததே ஒருமுறை தான், அதுவும் அரைகுறை.... அதில் எங்கேயிருந்து முகத்தை நினைவில் வைத்துக் கொள்வது.... என்று தனக்குள்ளேயே கூறிக்கொண்டு, வெளியே
"சரி விடுடா.... நாளை பின்னே ஆட் வரும்போது பாத்துக்கிறேன்...." என்று அப்போதைக்கு சமாளித்தாள்.
தமக்கையின் சமாதானத்திற்கு அப்போதைக்கு தலையசைத்தாலும், காலை எழுந்ததும் முதல் வேலையாக தந்தையின் திறன்பேசியில் இருக்கும் விக்ரமின் நிழற்படத்தை மலருக்கு காண்பிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
தேசியநெடுஞ்சாலையில் அதிவிரைவாக கட்டுப்பாடின்றி சென்று கொண்டிருந்து அந்த மகிழுந்தின் வேகத்திலேயே தெரிந்தது அதனைச் செலுத்திக் கொண்டிருப்பவனின் கோபம்.
"அவளை நெனச்சாலே பத்திக்கிட்டு வருது... அவளுக்கென்ன உலக அழகினு நெனப்போ!!! நானா அவளைத் தேடிப்போய் பேசாவேன்னு நெனச்சாளோ!!!" என்று மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க மலரை திட்டியபடி சாலையில் கவனம் பதிக்காமல் வண்டியைச் செலுத்திக் கொண்டருந்தான் விக்ரம்.
அருகில் அமர்ந்திருந்த உதியோ, 'இவன் போற வேகத்தைப் பார்த்தா இன்னைக்கு சங்கு கன்ஃபார்ம்... இவனாவது ஷூட்டிங் போறேன்ற பேர்ல இமயம் முதல் குமரி வரை சுத்திருக்கான்... அது பத்தாதுனு ஸ்விஸ் ரோம், கனடா, தாய்லாந்து எல்லாம் போயிட்டு வந்துட்டான்.... முக்கியமா எல்லா ட்ரிப்பும் பொண்ணுங்களோட.... நான் எதுவுமே அனுபவிக்காம அல்பாயிசுல போயிடுவேன் போலயே...' என்று மனதிற்குள் புலம்பியபடி மிகவும் கடினப்பட்டு மனக்குரல் வெளியே கேட்காமல் இருக்க வாயை இறுக மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
"டாட், மாம் கிட்ட கூட ஒரு வார்த்தை என்னை பத்தி கேட்கலே!!!" என்று விக்ரமின் குமுறலுக்கு... "ம்ம்ம் ஆமாடா மச்சா... அம்மாகிட்டயாச்சு உன்னை பத்தி கேட்டிருக்கலாம்..." என்று ஏதேனும் சொல்லி வைப்போம் என்பதற்காக கூறினான் உதி.
அதில் கோபமுற்ற விக்ரம், "அவ எப்படி டா கேப்பா!!! அவ ஒன்னும் சிட்டில வளந்த பொண்ணு இல்லே... மனசுல பட்டதை பட்டுனு வெளிய சொல்லியோ கேட்டோ பழக்கபட்டிருக்கமாட்டா..." என்று மலருக்கு சப்போர்ட் செய்து உதியைப் பார்த்து கத்தினான். அதில் ஒரு நொடி மிரண்ட உதயன், 'மறுபடியும் ஆரம்பிச்சுட்டானோ!!!' என்று யோசித்துக் கொண்டிருந்த அடுத்த நிமிடம்,
"அவ எப்படி டா மச்சான் கேப்பா? பாக்க தான் அப்பாவி மாதிரி இருக்கா... ஆனா உடம்பெல்லாம் திமிரு... காலைல எல்லாரும் வீட்டுக்குள்ள தான் இருக்கோம்னு தெரிஞ்சு தானே சுவரேரி குதிச்சா!!! யார் பாத்தா என்ன? யார் என்ன சொன்னா என்னனு? தைரியம்... திமிரு...." என்று மீண்டும் மலரின் மேல் கோபம் கொண்டு அவளைத் திட்டத் தொடங்கினான்.
'அதே தான்.... சும்மாவே ஆட் ஷூட் போயிட்டு வந்தா தான் இவனை புரிஞ்சுக்க முடியாது..... இன்னைக்கு சுத்தம்....' என்று மீண்டும் தனக்குள்ளிருக்கும் மிருகத்தோடு பேசத் தொடங்கினான் உதி.
பின்னால் அமர்ந்திருந்த வினோ உதியின் நிலையைக் கண்டு வாய்மூடி சிரித்தபடி வர, உதியோ பின்னால் திரும்பி அவனுக்கு ஒரு அடி கொடுத்துவிட்டு, விக்ரமிடம்
"டேய் சத்தியமா முடியலே டா.... உனக்கு ப்ரேக் வேணுமோ இல்லேயோ எனக்கு ப்ரேக் வேணும்.... தயவு செய்து வண்டிய ஓரமா நிறுத்து..." என்றான். உதியின் மேல் கோபம் எழுந்த போதும் ஒன்றும் சொல்லாமல் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு மகிழுந்தை நிறுத்தினான் விக்ரம்.
"கிளம்புனதுல இருந்து வாய் ஓயாம திட்டிகிட்டே வரான்.... கேக்குற எனக்கு தான் பைத்தியம் பிடிக்கும் போல..." என்று வாய்விட்டு தனக்குத் தானே புலம்பியபடி வெண்பஞ்சுச் சுருளை எடுத்து தன் இதழ்களில் பிடித்துக்கொண்டு சுடர் மூட்டியைத் தேடினான்.
அதற்குள் விக்ரம் வந்து பற்ற வைக்க, உதிக்கு தேவையில்லாமல் செம்பியனின் சந்தேகம் நினைவில் வந்து தொலைத்தது. "இன்னைக்கு உன் மச்சினன் நான் ஸ்மோக் பண்றதை பாத்துட்டு என்கிட்ட வந்து உனக்கும் இந்த பழக்கம் இருக்கானு கேட்டான்!!!"
"நீ என்ன சொன்ன?"
"வர வர உன்னை நம்பி ஒரு வார்த்தையும் சொல்ல முடியலேயே.... அதனால உன்கிட்டயே கேட்டுக்க சொல்லிட்டேன்..."
"ஏன் டா உனக்கெல்லாம் அறிவு இருக்கா இல்லேயா!!! சின்னப் பையன் முன்னாடி நின்னுட்டு என்ன காரியம் டா பண்ணிருக்கே? நாளை பின்னே உன்னை பார்த்து அவன் கத்துக்கமாட்டான்!!!!! அவன் உன்னை பாக்கத் தான் வர்றான்னு தெரிஞ்சதும் இந்த ச....... தூக்கி எறியிறதுக்கு என்ன!!!" என்று இப்போது உதிக்கு அர்ச்சதை நடத்தினான் விக்ரம். மீதிப்பயணம் முன்னைவிடச் சிறப்பாக முடிந்தது உதிக்கு

...

-தொடரும்