செம்பியன் காலை எழுந்ததும் முதல் வேலையாக தன் தந்தையைத் தேடிச் செல்ல, அவரோ அதிகாலையே எழுந்து தன் பேப்பர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு புறப்பட்டிருந்தார்.
தாமோதரன் பார்ப்பதற்கு மிகவும் எளிமையான மனிதர். தன் பதின்ம வயதில் தொடங்கினார் இத்தொழிலை. இன்று வரை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இயல்பாகவே தொழிலாளர்களை நேர்த்தியாக கையாளும் திறமை அறிந்தவர். அதனாலேயே தொழிலாளர்கள் அவருது சொந்தங்களையும் தாண்டிய உறவுகளாக மாறிப்போனார்கள்.
முதல் நாள் நடந்த தன் வீட்டு வைபத்தில் பெரும்பங்கு அவரது ஊழியர்களுக்கும் உண்டு என்பதால் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டியே காலைப் பொழுதிலேயே தொழிற்சாலை வந்திருந்தார். அவரது தொழிற்சாலை ஐம்பது பேர் வேலை பார்க்கக் கூடிய சிறிய கம்பெனி தான். ஆனாலும் நல்ல வருமானம்.
விரிவுபடுத்தியிருந்தால் இன்னேரம் ஆயிரம் பேர் வேலை பார்க்கக் கூடிய பெரிய கம்பெனியாக உருவெடுத்திருக்கும். தன் ஒருவனால் இவ்வளவு தான் பார்க்க முடியும், இதுவே என் குடும்பத்திற்கு போதுமானது என்று நிறுத்திக் கொண்டார்.
தாமோதரன் வீட்டில் இல்லை என்றவுடன், தன் அக்காவிற்கு தன் மச்சானை கண்ணில் காட்டிவிட வேண்டும் என்ற முனைப்போடு காலையிலேயே தொலைகாட்சியை உயிர்ப்பித்தான். அதனைக் கண்ட அபிராமி ஆச்சி,
"பல்லைக் கூட தேய்க்காம காலங்கார்த்தலேயே எதுக்கு டா டிவிய போடுறே!!!" என்று கத்தினார்.
"கொஞ்ச நேரம் சும்மா இருங்க ஆச்சி" என்று அலச்சியமாக பதில் கூறிவிட்டு சேனல் மாற்றிக் கொண்டே இருக்க, அவனை முறைத்துவிட்டு அடுக்களை சென்றுவிட்டார் ஆச்சி.
அவனின் நோக்கம் புரிந்து கொண்ட மலர் தேநீரோடு அவன் முன்னே வந்து நின்றாள். மறுக்காமல் அதனை வாங்கிக் கொண்டு, "தள்ளு க்கா" என்றான். மலரோ சற்றும் நகராமல் இருக்க, "அக்கா உன்னை தான் சொல்றேன்... தள்ளி நில்லு"
"நீ மொதோ காலேஜ் கிளம்பு..." என்று கண்டிப்போடு கூறிட,
"இன்னு டைம் இருக்கு க்கா... ஒரு ஆஃப் ஆன் ஆர் மட்டும் பாக்குறேன் ப்ளீஸ்..." என்று கெஞ்சலில் இறங்கினான்.
"டே-டைம் ஃபுல்லா நான் வீட்ல சும்மா தானே இருக்கேன்... நானே பாத்துக்கிறேன்... இப்போ நீ காலேஜ் கிளம்பு..." என்று முன்னைவிட அழுத்தமாகக் கூறிட, பதிலுக்கு அவளை சலிப்பாக முறைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
குளித்து முடித்து தயாராகியவன், ஆச்சி எடுத்து வைத்த சூடான ஆவி பறக்கும் இட்லியில் மூன்றை விழுங்கிவிட்டு, தன் புத்தகப்பையில் பேருக்கென்று நான்கு ரெக்கார்ட் நோட்டுகளை எடுத்துக் கொண்டு ஒரு சிறிய காகிதத் துண்டை டிவியின் அருகே வைத்துவிட்டு உடன்பிறப்பைத் தேடிச்சென்றான்.
சமயலறையில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தவளிடம் வந்தவன், அவள் காதுகளில் ரகசியமாக "க்கா... டிவி பக்கத்துல மச்சான் நடிச்ச ஆட் நேம் எல்லாம் எழுதி வெச்சிருக்கேன்... மறக்காம பாத்திரு... தாய்கிழவி டிவி பாக்க விடலேனா எனக்கு கால் பண்ணு, உனக்கு நெட் பேக் ரீசார்ஜ் பண்றேன், நெட்ல பாத்துக்கோ... ஈவ்னிங் வந்ததும் எனக்கு நேத்து கேட்ட கேள்விக்கு பதில் சொல்லனும்... சரியா?" என்றான்.
"சரிடா பெரிய மனுஷா.... நான் பாத்துட்டு சொல்றேன்... நீங்க கெளம்புங்க..." என்று அவனை அனுப்பி வைத்தாள்.
பொதுவாகவே மலர் பகல் நேரங்களில் படங்களோ, தொடர்களோ பார்ப்பதை விரும்பாதவள். அதற்கு எதிர்மறையானவர் அபிராமி ஆச்சி... அனைத்து சேனலிலும் வரும் தொடர்களை பார்க்கக் கூடியவர். அதனாலேயே பகல் நேரங்களில் தனதறைக்குள் அடைந்து கொள்வாள் மலர்.
அதற்காக வெட்டியாக நேரத்தை கழிப்பாள் என்று சொல்ல முடியாது. கொட்டாங்கச்சியில் காஃபி கப் செய்து அதிலிருந்து பூக்கள் கொட்டவது போலவும், குட்டி குட்டி மண்பானைகளைக் கொண்டு நீரூற்றும் செய்திருக்கிறாள்..... சிறிய அளவிலான செயற்கை அருவி, அதனோடு இணைந்த மீன்தொட்டி என தன் அறையை அலங்கரிப்பதே அவளது முழுநேரவேலையாக இருந்தது.
இளங்கலை தமிழ் இலக்கியம் முடித்தப்பின் கடந்த இரண்டு மாதங்களில் அவளின் முழுநேர பொழுதபோக்கு இது தான். மூளைக்கு வேலை தரவேண்டும் என்று நினைத்தால் எண்ணிலக்க விளையாட்டு (Sudoku) எடுத்துக்கொண்டு அமர்ந்துவிடுவாள். அதில் மூழ்கிவிட்டால் நாள் முழுதும் அதிலேயே தான் ஊறிக்கிடப்பாள்.
இன்று பொழுதைக் கழிக்க அவள் எடுத்திருக்கும் பணி அக்ரிலிக் பெய்ன்டிங். தன்னுயரத்தில் பாதி உயரம் கொண்ட கேன்வாஸ் போர்டை எடுத்து தன் கற்பனைக்கு உயிர் கொடுக்கத் தொடங்கினாள்.
மாலை இல்லம் வந்த செம்பியன் நேரே தமக்கையின் முன் சென்று நிற்க, அப்போது தான் அவளுக்கு நியாபகமே வந்தது. நாக்கைக் கடித்த படி ஒற்றைக் கண் மூடி, "சாரி டா செம்பியா" என்றிட அவனோ அவளை முறைத்தான். தம்பியின் கன்னங்களில் தன் கைகள் கொண்டு கொஞ்சியபடி, "சாரி மா... சாரி சாரி..." என்று பல முறை கெஞ்சினாள்.
"அக்கா... உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலேயா?"
"ச்சீ லூசு மாதிரி பேசாதே... எனக்கு இப்படி இருக்குறதும் பிடிச்சிருக்கு... தம்பின்றதையும் தாண்டி ஒரு ஃப்ரெண்டா நெனச்சு சொல்றேன்... இப்படி சஸ்பென்ஸா இருந்தா இன்னும் கொஞ்சம் த்ரில்லா இருக்கு டா... அதுவா தெரியிறப்போ தெரியட்டும்... நீயும் யாருனு சொல்லிடாதே டா... ப்ளீஸ்" என்று கெஞ்சிய தமக்கையிடம்,
"இந்த ஜென்ரேஷன்ல பொறந்தும் இப்படி இருந்தா ரெம்ப கஷ்டம் க்கா... இதுக்காக யாரும் உன்னை பெறுமையா நெனைக்கமாட்டாங்க.... முட்டாள்னு தான் சொல்லுவாங்க... எனக்கென்னவோ நீ பண்ற எதுவும் பிடிக்கலே... அவரும் உன்கிட்ட பேசனும்னு நெனைக்காம இருக்குறது எனக்கு ரெம்ப சந்தேகத்தை ஏற்படுத்துது..." என்று தன் ஆதங்கத்தை மறைக்காமல் வார்த்தைகளில் வெளிப்படுத்தினான்.
தான் இவ்வளவு தூரம் கூறிய பிறகும் தமக்கையிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை என்றவுடன் செம்பியனும் அமைதியாக அவள் அறையைவிட்டு வெளியேறியிருந்தான்.
தம்பியின் அறிவுரை பற்றி யோசிக்க வேண்டியவளோ வேறு விதமாக யோசித்தாள். 'துரதிர்ஷ்டவசமாக நூற்றில் ஒரு சதமாவது செம்பியன் கூறுவது போல் என் துணைவன் இருந்தாலும் கூட அதனை நிச்சயம் தம்பியிடம் சொல்லக் கூடாது... அவன் சந்தேகித்தது உண்மையாகும் போது என்னைவிட அவன் தான் பல மடங்கு துயரத்தை அனுபவிப்பான். கல்யாணத்தை நிறுத்தியிருக்க வேண்டும் என்று யோசித்து யோசித்தே தன்னைத் தானே வருத்திக் கொள்வான். அதனால் நிச்சயம் அவனிடம் சொல்லக் கூடாது' என்று முடிவெடுத்துக் கொண்டு தன் பணியைத் தொடர்ந்தாள்.
சுட்டெரிக்கும் சூரியனையே தடை செய்து அதன் ஒளியை உட்புகவிடாமல் தடுத்திருந்த அந்த இருட்டறையில் வண்ண விளக்குகளுக்கு மத்தியில் மேற்கத்திய இசைக்கு ஏற்றார் போல் நடனமிட்டுக் கொண்டிருந்த ஜோடிகளுக்கு நடுவிலிருந்து வெளியே வந்த அக்ஸரா அங்கே ஓரமாய் ஓர் இடத்தில் அமர்ந்து சோமபானம் அருந்திக் கொண்டிருந்த விக்ரமின் கரம் பிடித்து இழுத்துக் கொண்டு மீண்டும் அந்த கூட்டத்திற்குள் புகுந்து கொண்டாள்.
இது 2 in 1 கொண்டாட்டம்... விக்ரமின் நிச்சயத்திற்கு உடன் பணி புரிபவர்களை அழைக்காதமையால் இப்போது தனியாக அழைத்து வந்திருந்தான். இன்னொரு காரணம் அக்ஸராவிற்கு பிரபல மேல்நாட்டு முகப்பூச்சு விளம்பரத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. இரண்டு வருடங்கள் அவர்கள் நாட்டில் அவர்களது விளம்பரத்திற்கு மட்டுமே நடிக்க வேண்டும். பெரிய ஒப்பந்தம் என்பதால் அதனை விட மனமில்லாமல் சம்மதித்திருந்தாள்.
"விக்கி... நான் இங்கே இல்லேனா என்னை மறந்திடுவேயா?" என்று அவனை நெருங்கியபடி வினவினாள்.
"உன்னை எப்படி மறப்பேன் அக்ஷூ... என் மேரேஜ்க்கு நீ இருக்கமாட்டே... அதான் என் வருத்தமே..." என்று அவளை நெருங்கியும், விலகியும் இசைக்கு ஏற்றார் போல் ஆடிக்கொண்டிருந்தான்.
"அந்த ஒரு விஷயத்தை நினைச்சு தான் நான் சந்தோஷப்பட்டுகிறேன்."
நெற்றி சுருக்கியபடி "ஏன்?" என்று ஒற்றை வார்த்தையில் கேட்டான்.
"இதென்ன கேள்வி!!! தன்னோட லவ்வர் கல்யாணத்தைப் பார்க்க எந்த பொண்ணு தான் விரும்புவா!!?"
"லவ்வரா?" என்று அதிர்ச்சியாக வினவினான்.
அதில் சற்று தயங்கியவள் சிறிய பயத்துடனே "ஏன் இப்படி கேட்குறே!!! நாம விரும்புறது இங்கே எல்லாருக்கும் தெரியும்... நீ ஏன் தெரியாத மாதிரி கேட்குறே!"
அவனது நடனம் நின்றது..."இல்ல இது வரைக்கும் நீயும் என்னை ப்ரொப்போஸ் பண்ணினது இல்லே. நானும் உன்னை விரும்புறதா சொன்னது இல்லே... பின்னே எதை வெச்சு லவ்வர்னு சொல்றே! நாலு பேர் சொன்னா நீயும் அப்படியே சொல்லிப்பேயா?"
"விளையாடாதே விக்கி!!!"
"இதோ பார் அக்ஷூ... எனக்கு உன்னை பிடிக்கும், இல்லேனு சொல்லலே... சொல்ல போன தான் பழகின மத்த பொண்ணுங்களில் நீ தனத்துவமானவ... என்னைத் தவிர வேற யார் கூடவும் இவ்ளோ க்ளோசா நீ பழகினது இல்லே... அதுனாலேயே என்னால உன்னை அவாய்ட் பண்ண முடியலே... இனியும் உன்னை அவாய்ட் பண்ணமாட்டேன். நாம இப்போ மாதிரி எப்பவும் பழகலாம்... ஆனா இப்போ உனக்கு உன் கெரியர் ரெம்ப முக்கியம்... அதில மட்டும் கவனம் செய்..." என்று அவளுக்குத் தேவையான வார்த்தைகளைக் கூறி அவளைத் தேற்றினான்.
ஏனோ அவனது பேச்சு கொஞ்சம் பட்டும் படாமலும் வந்தது போல் தோன்றிட, புது மாப்பிள்ளையாக இருக்கும் வரை இப்படித் தான் பிடி கொடுக்காமல் பேசுவான்... தான் வெளிநாடு பயணம் முடித்து இரண்டு வருடங்கள் கழித்து திரும்பி வரும்போது, மனைவியும் பழசாகி விடுவாள். அதன் பின் அவனை கவனித்துக் கொள்ளலாம் என்று எண்ணி அவன் கூற்றுக்குத் தலையசைத்து வைத்தாள்.
அடுத்த ஒரு வாரத்தில் அக்ஸராவை விமானநிலையம் வரை சென்று வழியனுப்பி வைத்துவிட்டு, எப்போதும் போல் தன் தினசரி வாழ்வில் மூழ்கினான் விக்ரம்.
உதி ரத்தினகண்ணன் நடத்திவரும் சேனலில் தான் பணிபுரிகிறான். வினோ இரண்டு கல்லூரிகளில் பகுதி நேர பேராசிரியராக பணியாற்றிக் கொண்டே நிரந்தரப் பணி தேடிக் கொண்டிருக்கிறான்... மூவரின் வார இறுதி பீச் ஹவுஸ் கொண்டாட்டமும் எந்த விதக் குறையும் இன்றி சென்று கொண்டிருந்தது. அதில் மலரின் பேச்சு எழுந்தால் விக்ரம் சின்ன சிரிப்போடு நிறுத்திக் கொள்வானே ஒழிய ஒருபோதும் பேச்சை வளர்க்கமாட்டான். பல நேரங்களில் உதி கூட நினைத்திருக்கிறான், 'மலரைத் திட்டும் போது மட்டும் நண்பனுக்கு மூச்சு விடாமல் கூட வார்த்தைகள் வரும் போல... மற்ற நேரங்களில் ம்கூம்... சரியான கள்ளன்... கல்நெஞ்சன்...' என்று.
தாமோதரன் ஒருபுறம் தன் ஒற்றை மகளின் திருமணத்தை குறையில்லாமல் சிறப்பாக விமர்சையாக செய்ய விரும்பி சொந்தங்கள், சுற்றத்தார், ஊரார் என அனைவருக்கும் நேரில் சென்று பத்திரிக்கை வைத்தார். ரத்தினகண்ணனும் விசாலியும் நெருங்கிய சொந்தங்களுக்கு நேரிலும், வெளியூறில் இருப்பவர்களுக்கு தொலைபேசி மற்றும் புலனம் வழியாகவும் வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களுக்கு ஈ-கார்ட் வழியாகவும் அழைப்புவிடுத்தனர்.
உதியும், வினோவும் அவ்வபோது விக்ரம் கூறும் சில பணிகளையும் சேர்த்து கவனித்துக் கொள்ள கல்யாணக்கலை அனைவருக்கும் தொற்றிக் கொண்டது. மலரும் கூட மகிழ்ச்சியாகத் தான் இருந்தாள்.
பெற்றோர்களுக்கே உண்டான ஆர்வத்துடன் தாமோதரனும், ரத்தினகண்ணனும் இருந்தார்கள் என்றால், செம்பியன், வினோ மற்றும் உதி மூவரும் பயத்துடன் எதிர்பார்த்திருந்த திருமணநாளும் நெருங்கியது. இதோ இரண்டு நாளில் திருமணம்... முதல்முறை போலவே ரத்தினகண்ணன் குடும்பம் தாமோதரனின் பண்ணைவீட்டில் தங்கிக் கொண்டனர்.
அன்று போலவே இன்றும் மலர் சுவரேறி குதித்து பின்கட்டிற்குள் நுழைந்தாள். ஆனால் இன்று செம்பியன் உள்ளே வர மறுத்துவிட மலர் மட்டும் வந்தாள். செம்பியன் மதில் சுவரின் மறுபுறம் நின்றிருந்தான். அதே கோழிக்கூடை அருகே பெண்ணவள் சென்று நிற்க தன்னருகே இன்னொரு உருவம் நிற்பதைக் கண்டு பதறியடித்துக் கொண்டு நகர முற்பட.... தன் காலில் விழுந்த கணத்தில் நகர முடியாமல் பின்னால் சரிந்தாள்.

-தொடரும்