'இதை நாம் செய்திருக்கக் கூடாது' என்று ஏதேனும் ஒரு தருணத்தில் வருந்தும் சூழ்நிலை எல்லோருக்கும் ஏதேனும் ஒரு பருவத்தில் தோன்றியிருக்கும். அப்படி ஒரு துயர நாளாகத் தான் அன்று அமைந்தது விக்ரமிற்கு... மலரை வெளியே அழைத்து வந்திருக்கக் கூடாது என்று அதன்பின் அவன் பல நாட்கள் வருந்தும் நிலையும் வந்தது.
விக்ரமின் மிரட்டலைத் தாண்டிய கோபமும், வீம்பும் மலரை அச்சுருத்தியது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு விக்ரம் மலரின் கட்டளைக் குரலுக்காகக் காத்திருந்ததும் உண்மை. அவளின் துடுக்குப் பேச்சில் கிரங்கியவன், இவள் தன்னை புரிந்துகொண்டு காதலால் அதிகாரம் செய்வாள் என்று நினைத்திருக்க, அவளோ அவனது முன்னுக்குப்பின் முரண்பாடான குணத்தால் அவனைவிட்டு மனதளவில் விலகிச் சென்றிருந்தாள்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு
விடியலுக்கு முன்னே விழித்து எழுந்து, நவ நாகரிக மாடத்தில் நடப்பட்டிருந்த புல்வெளித் தரையில் பாதங்கள் பதிய நடைபயின்ற விக்ரம் அதனை முடித்துக்கொண்டு, சிட்டுக்குருவிகளுக்காகவே வாங்கி வைத்திருந்த நவ தானியங்களை, இரண்டு படி கீழிறக்கி தாழ்வாக அமைக்கப்பட்டிருந்த மற்றொரு பால்கனியில் தூவினான். ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குருவி வீடுகள் அனைத்திலும் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து வைத்துவிட்டு உள்ளே சென்றான்.
தன்னறையில் தன்னிடம் தினமும் போட்டியிட்டு தோற்று கூச்சலிடும் அலார்ம்-ஐ தலையில் தட்டி நிறுத்திவிட்டு, மீண்டும் பால்கனி வந்தவன், மஞ்சள் குளித்து வெட்கப்பட்டுக் கொண்டே வெளிவரும் புதுமணப் பெண்ணைப் போல் மெதுமெதுவாக மேகத்திரையிலிருந்து வெளியே வந்த ஆதவனை நோக்கி நின்று தன் தினசரி யோகாசனத்தை சூரியநமஸ்காரத்தில் இருந்து ஆரம்பித்தான்...
இரண்டு வருடத்தில் எத்தனை மாற்றம் அவனிடம்... ட்ரிம் செய்யப்பட்ட தாடியும், முன்னைவிட சற்று மெலிந்த தேகமும், முகத்தில் குடி கொண்டிருக்கும் அமைதியும், முக்கியமாக முன்னைவிட அதிக கம்பீரமுமாக தோற்றமளித்தான். சொல்லப் போனால் இரண்டு வருட அனுபவம் கற்றுக் கொடுத்தப் பாடம் அவனை மெறுகேற்றியிருந்தது.
தன் காலைப் பணியை முடித்துக் கொண்டு, குளித்து தயாராகி வெளியே வந்தவன், தன் அறைக் கதவை தாழிட்டுவிட்டு பக்கத்து அறைக்குச் சென்றான். கட்டிலில் படுத்திருந்த மலரை இயலாமையோடு ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவள் அருகில் சற்று நகர்ந்து அமர்ந்தபடி "பனி.... நான் ஸ்டூடியோ போறேன்... ஈவ்னிங் ஒரு சின்ன ப்ரொக்கிராம் இருக்கு... வரதுக்கு கொஞ்சம் லேட் ஆகும்..." என்று அவள் தன் கூற்றை காதில் வாங்கினாளா இல்லேயா என்று தெரிந்துகொள்ளக் கூட நினைக்காமல் பாடம் செய்தவற்றை ஒப்பிப்பது போல் கூறிவிட்டு அவள் அறையிலிருந்து வெளியேற, அங்கே பணியாள் செண்பகம் நின்றிருந்தார்.
"அவ எந்திரிச்சா எனக்கு ஒரு கால் பண்ணுங்க..." என்று வழக்கம் போல் கூறிட,
அவரும் வழக்கம் போல் "ம்ம்ம்" என்று சொல்லி வைத்தார்.
படப்பிடிப்புத் தளத்தில் ரியாலிட்டி ஷோவின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஆஃப் கேமராவில் வேலைபார்க்கும் பலர் இரவு உறக்கம் இல்லாமல் அங்கேயே தான் சுற்றிக் கொண்டிருந்தனர். அதில் உதியும் ஒருவன்.
நேரே உதியிடம் வந்த விக்ரம் அவனது கண்ணில் தெரிந்த சோர்வைக் கண்டு "நீ ஏன் இங்கே இருக்க? உனக்கு இனி டெலிகாஸ்ட் டைம்ல தானே வேலை!!! ஏன் இப்படி நேரங்காலம் இல்லாம வேலை பார்த்து உன் உடம்பை கெடுத்துக்குற? போ... போய் ரெஸ்ட் எடுத்துட்டு ஈவ்னிங் வா..." என்று அக்கரையும் அதிகாரமுமாக கூறினான்.
"பரவாயில்லை சார்... நான் என் வேலை முடியவுமே போறேன்..." என்று பட்டும்படாமலும் பதிலளித்தான் உதி.
உதியின் சார் என்ற அழைப்பில் உள்ளுக்குள் ஏதோ உடைவது போல் உணர்ந்தவன், வெளியே அதை காண்பிக்கக் கூட முடியாமல் தவித்தான். இன்று நேற்று அல்ல.... இரண்டு வருடங்களாக இது தான் நிலை... உதி கோபம் குறைந்து எப்போதும் போல் பேசிடுவான் அல்லது அவனது ஒதுக்கம் தனக்கு பழகிவிடும் என்று நினைக்க இரண்டுமே நடந்த பாடில்லை.
ஆரம்பத்தில் "டேய் உதி நான் உன் ஃப்ரெண்டு டா... நீ எப்பவும் போல விபா-னு கூப்பிடு..." என்றிட
"இல்ல சார்.... இது தான் என் இடம்... நான் வெட்டியா ஊர் சுத்திட்டு தண்ணியடுச்சுட்டு திறிஞ்சுட்டு இருந்த போது Mr.ரத்தினகண்ணன் சார், தன் பையனைக் கூட நம்பாம என்னை நம்பி என்கிட்ட சில பொறுப்புகளைக் கொடுத்தார். அவருக்காக மட்டும் தான் நான் இன்னு இங்கே வேலை பார்த்துட்டு இருக்கேன்... இன்னொரு முறை என்கிட்ட உங்க உரிமைய காட்ட நெனச்சிங்கன்னா, இந்த வேலையும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்னு தூக்கி போட்டுட்டு போயிகிட்டே இருப்பேன்..." என்று கூறிவிட்டான்.
அன்றிலிருந்து உதியின் அழைப்பு சார் என்று மாறிட, விக்ரமால் அதனை மாற்ற முடியாமல் போனது...
அன்றைய சூட்டிங் முடிந்து நிகழ்ச்சியும் நல்லவிதமாக டெலிகாஸ்ட் செய்யப்பட, அதன் வெற்றியை கொண்டாடிவிட்டு இல்லம் திரும்ப நல்லிரவாகி இருந்தது. இல்லம் நுழைந்த விக்ரம் கை, கால்களைக் கழுவிட்டு நேர மலரின் அறைக்குத் தான் சென்றான். கண்மூடித் தூங்கிக் கொண்டிருந்தவளின் அருகே சென்று அமர்ந்து,
"பனி.... உதி இன்னமும் என் மேல கோபமாத் தான் இருக்கான்.... என்னை யாரோ மாதிரி சார்னு தான் இன்னமும் சொல்றான்.... வலிக்குது டி..... நீ என்னை மன்னிச்சாத் தான் அவனும், வினோவும் மன்னிப்பானுங்கலாம்!!!.... உன்னை சமாதானம் செய்றதுக்கே வழி தெரியாம மார்னிங் சீக்கரம் போறதும், நைட் லேட்டா வரதுமா இருக்கேன்... இதுல அவனுங்களை எங்கேருந்து சமாதானம் செய்யிறது!!! எனக்கு சரினு பட்டதை நான் செய்தேன்... அதுக்கு எல்லாருமா சேர்ந்து எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்திங்கனு தெரியலே!!! நான் செய்த காரியம் உன்னை மட்டும் தான் பாதிச்சது... அதுக்கு நீ இப்போ கொடுத்திருக்க தண்டனையையும், இனிமே கொடுக்கப்போற தண்டனையையும் ஏத்துக்க தயாரா இருக்கேன்... மத்தவங்களை நான் எந்த விதத்துலேயும் கஷ்டப்படுத்தலேயே... ஆனால் எல்லாரும் என்னை ஒதுக்கி வெச்சிருக்காங்க... அதுதான் ஏன்னு எனக்குப் புரியலே!!!." என்று எப்போதும் போல் மெல்லிய குரலில் புலம்பித் தவித்தான்....
இப்போதும் தன் வார்த்தைகள் அவள் காதில் விழுந்ததா! விழுந்திருந்தாலும் மூளைக்குச் சென்றதா! அது அவள் மனதை கரைக்குமா! நாளையாவது தன்னை மன்னிப்பாளா! என்று எதுவுமே தெரியாமல் தான் அமர்ந்திருந்தான்.
மலரிடம் பேசிவிட்டு தனதறைக்குள் நுழைந்தவனை இருள் தழுவிக் கொள்ள, பஞ்சனை அணைத்துக் கொள்ள, தலையணை தாலாட்டிட தூக்கம் மட்டும் தொலை தூரம் சென்றிருந்தது... வழக்கம் போல் அதிகாலையிலேயே மஞ்சம் விட்டு எழுந்தவன், அன்றாடம் செய்யக் கூடிய பணிகளான, சிட்டுக்குருவிக்கு தானியம் தூவிவிட்டு, நீர் மாற்றி வைத்துவிட்டு தன் யோகாசனத்தைத் தொடங்கினான்.
குளித்து முடித்து மலரின் அறைக்கு வந்து எப்போதும் போல் கண்மூடிப் படுத்திருப்பவளிடம் செம்பியனைப் பார்க்கச் செல்வதாக கூறி அறையைவிட்டு வெளியேறினான். அடுக்கலையில் இருந்த செண்பகத்திடம்,
"அவ எந்திருச்சதும் எனக்கு சொல்லுங்க..." என்று கூறிட, "நிச்சயமா தம்பி" என்றவரின் வார்த்தைகள் உயிர்ப்பின்றி தான் வந்தது... அங்கே ஒரு நொடி நின்றால் கூட செண்பகம் வேறு எதுவும் கூறிவிடுவாரோ என்று அஞ்சி விறுவிறுவென்று வெளியேறினான்.
செல்லும் வழியில் செம்பியனுக்கு அழைப்பு விடுக்க, முதல் அழைப்பிலேயே எடுத்தான் அவன்.
"மச்சா...." என்ற செம்பியன் குரலில் எப்போதும் போல் இன்றும் தொண்டைக்குளி அடைத்தது. 'என் கூட இருந்த என் நண்பர்கள் கூட என்னை ஒதுக்கிய போதும், தமக்கையின் மேல் உயிராய் இருந்தவன் இன்றும் அழைப்பு மாறாமல், குரலில் ஒரு சிறு சுணக்கம் கூட காட்டாமல் பேசுகிறானே!!!' என்று செம்பியனை நினைத்து பெருமிதம் கொண்டது.
"காலேஜ் கிளம்பிட்டேயா செம்பியா?"
"இதோ... கிளம்பிட்டேன் மச்சான்..."
"நான் வந்து உன்னை பிக்அப் பண்றேன்... வினோவை பார்த்து ரெம்ப நாள் ஆச்சு... அவனையும் பாக்கனும்... நீ ரூம்ல இருக்கேயா? இல்லே பஸ் ஸ்டாப் வந்துடேயா?"
"ரூம்ல தான் இருக்கேன் மச்சா..."
"சரி ஓகே... ஃபைவ் மினிட்ஸ்ல வரேன்..." என்று அழைப்பைத் துண்டித்தான்.
கூறியது போல் போரூரில் நண்பர்களுடன் தங்கிப் படிக்கும் செம்பியனின் அறைக்குச் சென்றான். வாசலில் விக்ரமிற்காக காத்துக்கொண்டிருந்த செம்பியனை அழைத்துக் கொண்டு பல்கலைக்கழகம் நோக்கி சென்றான்.
மகிழுந்தில் ஏறியவுடன் செம்பியன் கேட்ட முதல் கேள்வி தமக்கையைப் பற்றி தான்.
"மச்சா.... அக்கா இன்னும் அப்படியே தான் இருக்கா?"
"ம்ம்ம்" சற்று நேரம் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
"வீக் என்ட்ல வீட்டுக்கு வா... நீ சொன்னாவாச்சும் அவ கேக்குறாளானு பாப்போம்..."
"ம்ம்ம்"
"படிப்பெல்லாம் எப்படி போகுது?"
"ம்ம்ம் மச்சா.... நல்லா தான் போகுது... வினோ அண்ணா நிறையவே ஹெல்ப் பண்ணுவார்..... இன்னைக்கு பக்கம் பக்கமா அட்வைஸ் பண்ணுவார்" என்று சின்ன முறுவலோடு கூறினான்.
"ஏன்?"
"உங்க கூட காலேஜ் வர்றேன்ல... அவன் கூட உனக்கென்ன பேச்சு!!! அவன் ஏன் உன்னை ட்ராப் பண்ண வர்றான்... இனிமே அவன் உன்னை பாக்க வர்றதா சொன்னா அலோவ் பண்ணாதே... அப்படி இப்படினு ஏதாவது சொல்லுவார்...."
"ஓ... அப்போ இனிமே நான் உன்னை ட்ராப் பண்ண வரலே... பேசுறதும் கூட கொறச்சுக்கலாம்..." என்று கவலை படிந்த முகத்தோடு கூறினான் விக்ரம்.
"அவர் சொல்லுவார்னு தான் சொன்னே... நான் அதை லைக் பண்றேனு சொல்லலே..." என்று பட்டென்று வந்தது செம்பியனின் பதில்...
விக்ரமோ விரக்தியாக புன்னகை செய்தான். அதனைக் கண்ட செம்பியனுக்கோ பழைய விக்ரம் ஒரு நிமிடம் கண்முன் தோன்றிட, கலங்கியபடி இப்போது கண்முன் அமர்ந்திருக்கும் விக்ரமைக் கண்டான்.
"நீங்க ஏன் மச்சா இப்படி மாறிட்டிங்க?"
"எப்படி மாறிட்டேன் செம்பியா?"
"நான் பார்த்த என் மச்சான், இன்னேரம் பார்க்கக் கூடாதுனு சொன்னதுக்காகவே வினோ அண்ணா முன்னாடி என் தோளில் கை போட்டு நடந்திருப்பார். இல்லே வினோ அண்ணாகிட்ட சண்டை போட்டிருப்பார்... இப்படி எதுவுமே செய்யத் துணிவில்லாதவர் மாதிரி ஒதுங்கி போயிருக்கமாட்டார்..."
"விடு செம்பியா... தான் இப்படி இருக்குறது தான் என்னை சுத்தி இருக்கிறவங்களுக்கு நல்லது... சரி காலேஜ் வந்திடுச்சு... நீ போ... நான் வினோ வரவும் பாத்துட்டு கிளம்புறேன்..." என்று செம்பியனை அனுப்பி வைத்துவிட்டு வினோத்திற்காக காத்திருந்தான்.
சென்னையில் பிரபல பல்கலைகழகத்தில் ME முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான் செம்பியன். அதே கல்லூரியில் வினோவிற்கு நிரந்தரப் பணியும் கிடைத்திட, மலரின் தம்பி என்பதற்காகவே செம்பியனை கேர் எடுத்துப் பார்த்துக் கொள்கிறான் வினோத்.
தூரத்தில் தன் இரு சக்கர வாகனத்தில் வரும்போதே வினோத் விக்ரமின் மகிழுந்தை கவனித்துவிட்டான். கல்லூரி வாசலில் எதிரெதிராக இருவரும் இரு பக்கமும் நிற்க, வினோத் "உர்... உர்... உர்..." என்று தன் கோபத்தை ஆக்ஸிலேட்டரைத் திருகி காண்பித்திட, சிறிது நேரத்தில் விக்ரம் தன் மகிழுந்தை உயிர்பித்து அவ்விடம் விட்டு நகர்ந்தான். செம்பியன் சொன்னது போலவே இன்று வண்டி வண்டியாக அவனுக்கு அறிவுரை வந்து குவிந்தது வினோத்திடம் இருந்து.
மேலும் ஒருவாரம் கடந்திருக்க, விக்ரமின் நாட்கள் எந்த வித மாற்றமும் இன்றி நகர்ந்தது. எப்போதும் போல் அன்றும் காலையே மலரை அவள் அறையில் சந்தித்து, தந்தையை காணச் செல்வதாகக் கூறிச் சென்றான். நேரே தந்தையை காணச் செல்ல அங்கே உதியும் இருந்தான்.
"ப்பா..." என்ற அழைப்போடு தந்தையை நெருங்கிட,
"வா பார்த்தி... உன்னை பத்தி தான் பேசிட்டு இருந்தேன்..." என்றதும் கண்களாலேயே "என்னை பத்தி உதிக்கிட்டேயா?" என்றான்.
"நெக்ஸ்ட் மந்த் ஒரு அவார்ட் ஃபங்ஷன் வைக்கலாம்னு ப்ளான் பண்றேன்... நீ ஃபுல்ஃப்லெட்ஜ்டா இறங்க முடியாதுல அதைத் தான் சொல்லி உதிய பொறுப்பேத்துக்க சொல்றேன்..."
"செய்ங்க ப்பா"
"ஆனா அவன் பிடி கொடுக்க மாட்டேங்கறானே!!!" என்றிட விக்ரம் உதியை சங்கடமாகப் பார்க்க, அவனின் பார்வையை உணர்ந்த உதி விக்ரமை நிமிர்ந்து பார்ப்பதை தவிர்த்தான்.
"ப்பா... நான் பனிய எங்கேயாவது அழைச்சிட்டு போகலாம்னு இருக்கேன்... Mr.உதயன் கொஞ்சம் பொறுப்பெடுத்துகிட்டார்னா நான் கொஞ்சம் நிம்மதியா போயிட்டு வருவேன்..." என்றான் விக்ரம்.
"நீங்க உங்க மனைவி கூட போறதுக்கு எதுக்கு சார் எனக்கு வர்க் பார்டன் ஏத்துறிங்க! என்னால என் வேலைய மட்டும் தான் பார்க்க முடியும்..." என்றான் உதி.
உதியின் கோபம் எதற்கு என்று அறிந்திருந்த ரத்தினகண்ணன், "சரி உதயா நான் உனக்கு வேலை பழு ஏத்தல... நீ சொல்லு நம்ம டீம்ல இந்த வேலைய பொறுப்பா செய்யிறவங்க யாருனு சொல்லு... ஒன் டே டைம் எடுத்துக்கோ... நாளைக்கு அவார்ட் ஃபங்ஷனுக்கு ஒரு மேனேஜர் ப்ளஸ் டீம்.... அதே மாதிரி விக்ரமுக்கு பதிலா ஒரு பெர்சனும் எனக்கு மெயில் அனுப்பி வை..." என்றிட,
"ஓகே அங்கிள்" என்று கூறி அவர் அறையிலிருந்து வெளியேறினான் உதி.
உதியை வருத்தம் நிறைந்த பார்வை பார்த்தார் ரத்தினம்... "ப்பா... கவலைப் படாதிங்க... நாளைக்கு அவனுக்கும் ஒரு வர்க்கை அலக்கேட் பண்ணிட்டு தான் உங்க முன்னாடி நிப்பான்... என்னை தனியாவிட்ட மாதிரி உங்களை விடமாட்டான்..." என்று தந்தைக்கு ஆறுதல் கூறினான் விக்ரம்.
"அவனை இன்னும் என் கூட இழுத்து பிடிச்சிட்டு இருக்குறதே அவன் உன்னை தனியா விட்டுட கூடாதுனு தான்..." என்று அவர் கோபமாக பதில் உரைத்த போதும், அதில் தந்தை பாசம் தான் விக்ரம் கண்ணிற்குத் தெரிந்தது.
மறுநாள் காலை மலரிடம் தங்கள் பயணம் பற்றி கேட்க நினைத்து தன் அன்றாடம் பணிகளைக் கூட மறந்து, கண் விழித்ததும் நேரே மலரின் அறைக்குச் சென்றான். கதவைத் திறந்த மறுநிமிடம் அவள் அமர்ந்திருக்கும் நிலைகண்டு முகம் வெளிர வாசலிலேயே உறைந்து நின்றான் விக்ரம்.

-தொடரும்.