• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அய்யங்கார் ஸ்பெஷல் புளியோதரை

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
அய்யங்கார் ஸ்பெஷல் புளியோதரை

என்னென்ன தேவை?

புளி - சிறிய கமலா ஆரஞ்சு சைஸில்

உப்பு - தேவையான அளவு

மிளகாய் வற்றல் - 10, 12

வெந்தயம் - 1 ஸ்பூன்

விரலி மஞ்சள் - 2

பெருங்காயக் கட்டி - சுண்டைக்காய் அளவு (சிறு துண்டு)

உளுத்தம் பருப்பு - 3 ஸ்பூன்

கடலைப் பருப்பு - 3 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

கறிவேப்பிலை - கொஞ்சம்

எண்ணெய் - கால் கப்

எப்படிச் செய்வது?

சுடுதண்ணீரில் புளியையும் உப்பையும் ஊற வைத்துக் கொள்ளவும் (தண்ணீர் 300 மி.லி.). கெட்டியான கரைசலாகக் கரைத்து வடிகட்டி எடுக்கவும்.

கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய்விட்டு வெந்தயம், மஞ்சள், கொஞ்சம் பெருங்காயத்தை வறுத்து எடுத்துப் பொடி செய்துகொள்ளவும்.

கடையில் கொஞ்சம் எண்ணெய்விட்டு மிளகாயைக் கிள்ளிப் போட்டு வறுக்கவும். புளிக் கரைசலை விடவும். கொதித்து வரும்போது பொடியைப் போட்டுக் கிளறவும், தீ குறைவாக இருக்கட்டும்.

நன்கு கொதித்துப் பாதியாகச் சுண்டி வரும்போது கடாயில் எண்ணெய்விட்டுக் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றைப் பொன்னிறமாக வறுக்கவும். உடன் கறிவேப்பிலை போட்டுப் புளிக் கலவையில் சேர்த்துக் கலக்கவும்.

நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்துவரும் நேரம் இறக்கி ஆறவிடவும். பின் வேறு பாத்திரத்துக்கு மாற்றவும். இப்போது புளிக் காய்ச்சல் தயார்.

இது நாள்பட இருக்கும். தேவையானபோது புளிக் காய்ச்சல் போட்டு 2 ஸ்பூன் எண்ணெய்விட்டு கலக்கவும். 5 நிமிடங்கள் ஊறிய பிறகு பரிமாறலாம்.