• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி💕41

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
83
89
18
Madurai
அஞ்சலி தன்னாள் தான் இந்த நிலையில் சிக்கி கொண்டாளோ என மனம் மருகி தவிக்க...கண் மூடி படுத்து கிடந்த தேவாவின் மூடிய விழிக்குள் குற்ற உணர்ச்சி உருவம் எடுத்து உருத்தி தள்ளியதில் மருந்தின் விரியம் கூட அவனை உறக்கத்திற்கு இட்டு செல்லவில்லை பாவம்...

புருவம் முடிச்சிட்டு போய் நெஞ்சில் குறுகுறுத்த குற்ற உணர்ச்சியில் அலைப்புறுதலுடன் மூடிய இமைகளுக்குள் உருண்டு கொண்டிருந்த கண்களை தெளிவாக கண்டு கொண்ட அஞ்சனா அவன் கரங்களை அழுத்தி தன் கரங்களுக்குள் போத்தி வைத்து தட்டி கொடுத்தவள் எல்லாம் சரியா போயிரும் அமைதியா இருங்க என்ற வார்த்தை காதிற்குள் இறங்கி நெஞ்சை தொட விடாது குற்ற உணர்ச்சி படலமிட்டு கொண்டதில் இன்னும் மனம் அமைதியாகாது தவித்த தேவாவின் மனம் படும் பாடு புரிந்தாலும் தனக்கே ஆறுதல் தேவைப்படும் நிலையில் அவனுக்கு என்ன ஆறுதல் கூறுவது என தெரியாமல் மொழியில் பற்றாக்குறை ஏற்ப்பட்டதாய் எல்லாம் சரியாகும் என அந்த வார்த்தையையே உச்சரித்திருந்தாள் பாவையவள்...


தேவாவிற்கு ஒரு பங்கு மேலே தவித்து போன அதர்ஷனுக்கு தப்புகள் அனைத்தும் தன்னிடம் இருந்து தொடங்கியதாய் ஒரு பர்மை உருவெடுத்து அவனை அழுத்தியது...

செல்ல பிள்ளையாக தாங்கவேண்டியவளின் தற்போதைய நிலை அவனை உருகுலைத்து செல்லரிக்க செய்ததில் உணர்ச்சிகள் துறந்தவனாய் எங்கோ வெறித்த பார்வையுடன் வேதையின் சாயலாய் கண்கள் சிவந்து இமைகள் தடித்து போய் தலையெல்லாம் களைந்து அமர்ந்திருந்தவனின் தோற்றத்தில் கம்பிரம் மொத்தமும் அடிசரிந்து போயிருக்க பத்து பிடித்தவன் போல் அமர்ந்திருந்தவனின் நெஞ்சை அழுத்தும் பாரத்தை இளக்கும் அளவிற்கு ஆதரவு வார்த்தை தெரியாத வீர் வேறுமென அவன் கரங்களை பற்றி இருந்தான்...


வீருக்கு அதர்ஷனின் காதல் ஆழத்தை அறிந்திருந்த போது உணர தெரியாதவன் அவன் நிலையை கண்டு திகிலடைந்து காதல் ஒரு மனிதனை இத்தனை உருக்குலைக்குமா என வியந்தவனுக்கு காதலை உணர்ந்திராத பட்சத்தில் அதர்ஷனின் செய்கை எல்லாம் வியப்பாகவும் கொஞ்சம் பயமாகவும் பட்டது...

உயிரை துறந்தது போல் சிலையாக சமைந்திருந்த அதர்ஷனை கண்டு திகிலடைந்து போன வீருக்கு காதலினுள் உடபட்டும் அவனின் வலிகள் எல்லாம் புரிந்திருக்கவில்லை...

வாழ்கையே செல்லரித்து போன போது வேறுமென உடலில் மஞ்சியிருக்கும் உயிருக்கு மட்டும் பெரிதாக என்ன மதிப்பு இருந்து விடப்போகிறது...

வாழ்க்கையின் இலக்கை அடைய உயிர் பிரதானம் தான் ஆனால் வாழ்கையே முடிந்த பிறகு உயிரின் தேவை பூஜ்ஜியமாகி போவது போல் தொழிலில் அதிபதியாக நிமிர்ந்து நின்றவன் அவனின் வாழ்க்கையின் இல்லாமையை கிறகிக்க முடியாமல் பூஜ்ஜியமாக அமர்ந்திருந்தான்...

அவர் அவர்களுக்கு ஒரு சிந்தனை என வீரும் தேவாவும் வெவ்வேறு சிந்தனையில் உழன்று கொண்டு நிலை மாறாது அமர்ந்திருந்தவர்களை நெருங்கி அஞ்சலி அறையில் இருந்து வெளி வந்த நர்ஸ் அதர்ஷனை சார் என அழைத்து நிறுத்தியதில் நிதர்சத்திற்கு வந்த வீர் தனக்கு பக்கத்தில் நர்ஸ் அழைத்ததிற்கு எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றாது நிலை மாறாது அமர்ந்திருந்தவனின் தோள்களை சற்று பிதியுடன் அழுத்தமாக அண்ணா என்ற கூவலுடன் உலுக்கியிருந்தான்...

அதில் சுயம் மீண்டவன் ஆ..ஆஹான்‌ என்று அவன் நிமிர்ந்து பார்த்த பின் தான் சற்று நிம்மதி பெருமூச்சை விட்டெறிந்த வீர் பின் நர்சின் புறம் கைக்காட்டி உங்களை கூப்பிட்டாங்க அண்ணா என்றதும் தான் தன் முன் நின்ற நர்சையே கவணித்திருந்தான் அதர்ஷன்...

டாக்டர் உங்களை கூப்பிட்டாங்க வாங்க என அவனை அழைத்து சென்று டாக்டர் முன் நிறுத்தி விட்டு நகர்ந்தவளை தொடர்ந்து பேச்சை ஆரப்பித்திருந்தார் டாக்டர்.விவேக்.

அதர்ஷன் வர்மா ரைட் என அவன் தான் என உருதிப்படுத்தி கொள்ளும் முனைப்போடு கேட்டவர் அவன் தலை அசைத்ததில் பேச்சை தொடர்ந்தார் அவர்... அஞ்சலி உங்க வைப் ரைட் என்றவர் பின் புருவத்தை தேய்த்து கொண்டு ஏதோ ஒன்று சொல்ல தயங்கியராய் அமர்ந்திருந்தவரை உன்றி பார்த்த அதர்ஷன் நுனி இருக்கையில் அமர்ந்தப்படி என் அம்முக்கு என்ன ஆச்சு டாக்டர் ஒன்னும் இல்லை தான ஒருவேலை என் பாக்கணும்னு கேட்டாளா என்று கேட்டபடி அஞ்சலியை அனுமதித்த அறை பக்கம் நகர முயன்றவனை தோள் தட்டி அமைதி படுத்தி அமர்த்தியவர்..

மிஸ்டர்.அதர்ஷன் கொஞ்சம் பதறாம நா சொல்லுறத பொறுமையா கேளுங்க..உங்க வைப் நிலமை ரொம்ப கிரிட்டிக்களா இருக்க அவுங்க பிழைக்கிறதுக்கு ரொம்ப கம்மியான பர்சன்டேச் தான் வாய்ப்பு இருந்தாலும் நாங்க முடிஞ்ச அளவுக்கு சாத்திய படுத்ததான் பாக்குரோம் என்வர் முழுதாக சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடிக்கும் முன் அவர் கழுத்தை நெரிக்க அவர் சட்டையை பிடித்திருந்தவன்...


ஏய் நீ என்ன கடவுளா அவ பிழைக்க மாட்டானு சொல்லுற என சண்டைக்கு நின்றவனை தடுக்க வந்த வீரை கண் ஜாடை காட்டி தடுத்த டாக்டர் விவேக் அவனை மேல்ல தன்னில் இருந்து விலக்கியவர் அதர்ஷன் ஜஸ்ட் காம் டவுன் நான் இப்படி தான் ஆகும்னு நானும் சொல்லை ஜஸ்ட் அவுங்க நிலமையா உங்களுக்கு எடுத்து சொல்லுறேன் அவ்வளவு தான் முதல்ல நிலமைய கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க மிஸ்டர் என்றவர்...

அவுங்க பாடி மெடிசன்ஸ்கு ரியாக்ட் பண்ண மாட்டிக்கிது அவுங்களே முதல்ல அவுங்க பிழைக்கனும்னு நினைக்கிறாங்கலானு தெரியலை அதுனாலா அவுங்க கிட்ட நல்லா பேசுங்க வாழனும்ங்கற ஆசைய தூண்டிவிட்டு இனி வாழ போற வாழ்க்கைல எப்பையும் நானும் உன் கூட துணைக்கு இருப்பேன்னு நம்பிகை கொடுங்க கண்டிப்பா உங்க வைப் நல்லா வருவாங்க..ஆனா மிஸ்டர் கொஞ்சம் பாஸ்டா அவுங்களை ரியாக்ட் பண்ண வைங்க நேரம் ரொம்ப குறைவா இருக்கு மேக்ஸிமம் எயிட் ஹவர்ஸ் நீங்க நம்பிக்கையோட இருந்து அவுங்களுக்கும் நம்பிகை கொடுத்து மீட்டு கொண்டு வாங்க என மருத்துவரில் இருந்து சற்று விலகி வெல் விஷ்ஷராக அவனில் சிறிதளவு நம்பிகையை விதைத்து விட்டு சென்றார்..

அவர் வார்த்தைகளில் சிறு நம்பிகை விதை மனதில் விழுந்தாலும் ஒருவேலை என்று நினைக்கும் போது தான் நெஞ்சு கலங்கி தவித்தது...

இதயத்தை அமிலத்தில் அமுக்கி வைத்தது போல் கொஞ்சம்‌ கொஞ்சமாக உருகுலைவது போல் உணர்ந்தவனுக்கு சில நேரங்களுக்கு எதுவும் புலப்படாத நிலை...விதி தூரம் நின்ற கைக்கொட்டி சிரிப்பது போலான பிரம்மை அவனை இன்னும் அச்சுறுத்தி பயமுறுத்தியது...

அம்மு என்கிட்ட வந்துரு டா என மானாசீகமாக அவளிடம் வேண்டுதல் வைத்தபடி தலை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தவனின் நெஞ்சுக்குள் அவளை இழந்து விடுவோமோ என்ற பயம் அலைமோதினாலும் மிஞ்சி இருந்த சிறு நம்பிக்கையோடு எழுந்து நின்றவன் தலையை கையால் கோதி சரி செய்து கொண்டு கண்களின் கீழே உருண்டு காய்ந்திருந்த கண்ணீரை அழுந்த துடைத்து தன்னை முடிந்த அளவுக்கு சமன் செய்து கொண்டவன் நேரகா அஞ்சலியின்‌அறையை நோக்கி விரைந்திருந்தான்....

நிகழும் விஷயங்களை ஜிரனத்து கொள்ள முடியாது நின்ற வீருக்கு கடைசி பிடியாக கடவுளை நம்புவதை தவிர வேறு வழி மஞ்சிராததில் தன் குட்டி தங்கை பிழைத்து கொள்ள வேண்டும் என மானசீகமாக வேண்டி கொண்டான் அவன்...

கதவு வரை துணிந்து விட்டவனின் கால்கள் அதற்கு மேல் நகற மறுத்து நடுங்கி நின்றதில் சிரமப்பட்டு கால்களை மெதுவாக‌ நகர்த்தி எட்டுவைத்து உள் நுழைந்தவனுக்கு அவள் தோற்றம் மேலும் அடியாக அவன் நெஞ்சை தாக்கியது...

கட்டிலில் வாடிய கொடியாய் படர்ந்து இருந்தவளின் கன்னம் இரத்தம் கட்டி சிவந்திருப்பதை வேதனையோடு நோக்கியவனுக்கு அந்நேரத்திலும் செத்து மடிந்தவனின் மேல் கோபம் சுறுசுறுவென ஏறியது...

மெல்ல‌ அவள் படுத்து‌ கிடந்த கட்டிலை நெருங்கியவன் அவள் மேலேயே பார்வையை நிலைக்கவிட்டபடி பக்கம்‌ கிடந்த கதிரையை இழுத்து போட்டு அமர்ந்தவன் சில கணங்கள் வரை வாயை திறக்காது மௌனமாக அவளின் நிலையை உள்வாங்கி கொண்டவனுக்கு மனம் ரணம் பட்ட போதும் அவளை விட்டு பார்வையை நகர்த்தும்‌ உத்தேசம் இன்றி வெறித்திருந்தான்...


டிரிப்ஸ் போடாத கையை பற்றி தன் கன்னதில் வைத்து கொண்டவன் ஒருவழியாக பேச தொடங்கிருந்தான்..

அவள் முகத்தில் புரண்ட கற்றை மூடியை மென்மையாக ஒதுக்கி‌ அவள் காதிற்கு பின் தள்ளியவட்டவன் அம்மு என தென்றலாக அவள் சேவியை ஊடுவியவனின் அழைப்பு அவள் நெஞ்சை தீண்டவில்லை என்பதற்கு சாட்ச்சியாக அசைவற்று நிலை மாறாது கிடந்தாள்...

நீ இல்லாம எனக்கு வாழ தெரியாதுனு தெரிஞ்சும் அசால்ட்டா போக ரெடி ஆகிட்டேல நீ வலிக்குது டி முடியலை நா அழுதா உனக்கு பிடிக்கும் எனக்கு இப்போ தாண் தெரியுது என் மேல அவ்வளவு கோபமா..ரொம்ப வதைச்சுட்டேனா என்றவனின் கேள்விக்கெல்லாம் பதில் கூற வேணடியவளோ தூக்கதிலேயே முனைப்பாய் இருந்ததில் பதில் கிடைத்திருக்கவில்லை அவனுக்கு...

என்ன கோபம் இருந்தாலும் எழுந்து வந்து உன் கையால கொடு சந்தோஷமா ஏத்துக்குறேன் ஆனா இப்படி பண்ணாதடா என்னவிட்டா உனக்கு ஆள் இருக்குடி இவ்வளவு ஏன் நீ மேல போனா கூட உன்ன அரவனைச்சுக்க உங்க அப்பா அம்மா இருக்காங்க ஆனா எனக்கு உன்ன தவிர யாருமே இல்லையேடி திரும்பி பழையப்படி துரத்துற இருட்டுல விட்டுறாத கண்ணா..என அவனின் பல கதறல்களை கேட்ட பின்னும் உறைந்த சிற்பமாக கிடப்பவளை கண்டு துளிர்விட்டு சிறு நம்பிகையில் கால் வாசி காணாம் போனது

ஆண்மகன் அழுக கூடாது என்ற விதியை தகர்த்தெரிழுந்து அவள் கையை பிடித்து கொண்டு அதில் தலை சாய்த்து குலுங்கி அழுதவனின் அழுகை அவள் மேலான அவனின் காதலை அப்பட்டமாக காட்டியது...

பின் கண்களை துடைத்து கொஞ்சம் தன்னை சமன் செய்து கொண்டவன்..கெஞ்சலுக்கு மசியாதவளை கண்டு அடுத்து மிரட்டலில் இறங்கியவனாய் கண்டிப்பா நீ போனா நானும் செத்துருவேன் பாத்துக்கோ உன் ஆது இன்னும் இன்னும் உயரத்துக்கு போகனும்னு தான உன் ஆசை அது நடக்காது என மிரட்டியும் அப்படியே கிடப்பவளை கண்டு கண்ணீர் பொங்கினாலும் கடினப்பட்டு தொண்டை வலிக்க அழுகையை விழுங்கியவன் அடுத்து ஆசை காட்டினான்...

நீ திரும்பி வா என்கிட்ட உனக்கும் ஓரு பெரிய சர்பரைஸ் வச்சு இருக்கேன்டா உனக்கு....

என் அம்மு ரொம்ப ஆசைப்பட்டு கேட்டதை கொடுக்க போறேன் என கண்ணீரோடு அந்த நிலையிலும் அவன் கொடுக்க போக பொருளில் அவள் புரித்து போக முக பாவத்தை யுகித்தவனும் சற்று புரித்தே கூறியிருந்தான் ஆனால் மறு வினாடி அவள் உணர்ச்சி வடிந்த முகத்தை கண்டு முகம் சுருங்கி போனான் அவன்

இவன் பேசியதை எல்லாம் கேட்டாலே அன்றி அசைவை கூட எதிர்வினையாக காட்டி பதில் அளிக்காதவளின் செயல்கள் எல்லாம் அவன் நம்பிகையை கொஞ்சம் கொஞ்சமாக சறுக்க செய்தது..

இரவு முழுவதும் கண்களில் பொட்டு தூக்கம் இல்லாது எல்லொரும் அவள் விழிப்பை வரமாக கேட்டு தவம் கிடந்தனர்...

அவளுடனே இருந்த அதர்ஷன் இரவு முழுவதும் ஏதேதோ உளறினான் தங்கள் பொக்கிஷ நினைவுகளை அவளுக்கு நியாபக படுத்தும் சாக்கில் நினைத்து பூரித்து போவன் முகம் பல முறை ஏமாற்றத்தை சந்தித்து சுருங்கி கருத்து போனது...

நேரம் நெருங்கி கொண்டே இருந்தது..கதறி பார்த்து விட்டான் மிரட்டியும் பார்த்தான் கெஞ்சியும் பார்த்தான் கொஞ்சியும் பார்த்தான் பல முறை ஆசை காட்டியும் பார்த்தாயிற்று எதற்கும் சேவி சாய்காதவளை மீட்டு வர முடியும் என்ற நம்பிகை குன்றி போனது அவனுக்கு...

தேவா மனதளவில் நொருங்கி போயிருந்தவனுக்கு அதர்ஷன் சொல்லும் போதே விட்டு இருக்கலாமோ என காலம் கடந்த யோசனையாய் அவன் மூளையில் உதித்து அவனை மேலும் குற்ற உணர்ச்சியில் தள்ளியது...

பாவம் அவனும் என்னதான் செய்வான் நன்மை என நினைத்தே அனைத்தையும் செய்தான் அனுக்கு அப்பால் விதி வேறோன்றை கனித்ததை முன்மே அறிந்திருந்தாளாவது பாதகம் என உணர்ந்து விலகியிருப்பான் ஆனால் நடந்து முடிந்ததை நினைத்து மட்டும் என்ன செய்துவிட முடியும்...

முதல் முதலில் அண்ணா என்று அழைத்து புதிய உறவையும் உரிமையும் வழங்கியவள் இப்படியோரு நிலையில் கிடப்பது அவனை வாட்டியது...

அஞ்சனாக்கும் அதே மனநிலை தான் அக்கா அக்கா என சிறு பிள்ளை போல் தன்னை சுற்றி வந்தவளாயிற்றே... அவள் இப்படி கிடப்பது மனதை தைத்தது...

எல்லாரும் அவளுக்காக ஏங்கி காத்திருக்க அவளோ எந்த சலனமும் இன்றி குழந்தை போல் படுத்து உறங்கி கிடந்தாள்

இன்னும் அறை மணி நேரம் தான் எஞ்சி இருந்தது..கெடு கொடுத்த அனைத்து மணி துளியும் காற்றாய் கறைந்து விட்டிருந்தது...

அதர்ஷனின் காதலை கண்ட செவியர்களும் மருத்துவரும் கூட அவள் விழிப்பிற்காக காத்திருந்து மனித்துளிகள் கறைந்ததே அன்றி பெண்ணவளின் நிலையில் மாற்றம் இருந்திருக்கவில்லை...

மனித்துளி கறைய கறைய அனைவருக்கும் நெருப்பின் மேல் நிற்பது போலான நிலை..

எஞ்சி இருந்த அறை மணி நேரத்திலும் இப்போது எஞ்சி இருப்பது வெறும் கால் மணி நேரம் தான்...

அதர்ஷன் அவள் கைப்பிடித்து லேசாக உலுக்கியவன் எழுந்திரிடா கண்ணா என் பாரு...உன் தனியா விட்டுட்டு போனது தான தப்பு இனிமேல் உன் விட்டு எங்கயும் போக மாட்டேன் உனக்கு பிடிக்காதது எதுவும் பண்ண மாட்டேன் பிராமிஸ் எழுந்திரிடி பாப்பா இங்க பாருடி என்ன என கதற..

அவனின் கடைசி கதறலில் நெஞ்சில் ஈரம் அற்றவருக்கும் ஈரம் சுரந்து மனம் இறங்கும் ஆனால் அவன் அம்முவிற்கோ அவன் மேல் சற்றும் இரக்கம் சுரக்காது போனது யார் பிழையோ...

கெடு முடிந்து விட்டது எல்லொரின் நம்பிக்கையும் வீனாகியதாய் அவள் கூறியது போல் அவள் காதல் மொத்தமும் அந்த மூன்று வார்த்தையில் அடங்கி அவளவன் ஆதுவின் உயிரில் அடங்கியதாய்...

தொடரும்....
 
Last edited: