• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி💕55

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
90
146
33
Madurai
கதிரவனின் கிரண கதிர்களும் நிவுமகளின் இரவு நேர வான ஊர்வளத்திலும் எந்த மாற்றுமும் இல்லாத சீராக அந்த அந்த நேரத்தில் தொய்வின்றி சுழன்று வந்திருந்தாலும் காலத்தின் நகரவு நொடி நேரத்தில் வெட்டி செல்லும் மின்னலை போல் மிக வேகமாக தெரிந்தது ரிதன்யாவிற்கு நடக்காதா என்று ஏங்கி விஷயம் மிக சூழவாக முடிந்ததில் தானோ அவளுக்கு காத்தின் நகர்வு வெகு வேகமாக பயனித்ததோ...

காலில் இருந்து உச்சந்தலை வரை புகையாக படர்ந்த கோபமும் ஊரின் தூற்றலுக்கு ஆளாகி விடுவோமோ என்ற பயமும் இரும்பு பந்தாக அவரை அழுத்தியதில் பாவம் பாசத்தையும் மகளின் மேல் இருந்த நியாயத்தையும் நடந்தேறி சம்பவத்தில் இருந்து பிரித்தெடுக்க தெரியாமல் தடுமாறி போனார் ரிதன்யாவின் அப்பா கவியரசன்...

மகள் சொல்லிக் கொள்ளாமல் மகளதிகாரத்திற்கு இடைவெளிவிட்டு இத்தனை நாள் கரங்களினுள் சுருண்டு இருந்த மகள் வெளி ஊருக்கு சென்ற போதே அழுத்திய இரும்பு குண்டு பாதியாக உடைந்து அவரை இளக்கிய போதும் சிறியவளிடம் விஷயத்தை பேசி தெளிவுப்பெறும் அளவுக்கு இளகி வராவதருக்கு அவர் உச்சந்தலையை வரை புகையாக படலமிட்டிற்கு திரையை விளக்க வலுவான காரணம் தேவைப்பட்டது என்னவோ உண்மை...


வலுவான காரணங்களை ஏதிர்பார்த்து மகளை மன்னிக்க தயராகவே இருந்தவருக்கு மகளின் தற்கொலை முடிவு பெரிடியாக உடலை குலுங்க செய்த பிறகு அதற்கு மேல் வீராப்பு பிடிக்காமல் புகை மொத்தமும் காற்றோடு கரைந்து போயிருக்க இதோ எண்ணி நான்கு ஐந்து மணி நேரத்திற்குள் அறக்க பறக்க மகள் முன் ஆஜராகி இருந்தார்..

நடந்தேறிய விஷயத்தில் அவர் பங்கு பிழை சற்று ரிதன்யாவின் பிழையை விட கூடுதல் விகிதத்தில் இருந்தாலும் அத்தனையும் ஏற்கும் படியான நியாய காரணங்கள் தானே...

மிடுக்காக ஊரை வளம் வரும் மனிதரின் வீட்டிலேயே இப்படி ஒரு விஷயம் நடந்தது வெளியே கசிந்தாள் கண்டிப்பாக யாரும் பெண்ணின் மனம் பற்றியோ அந்த பெற்றோரின் மனம் பற்றியோ உணர போவது இல்லையே அதுனால் உன்டான பயமே அவரை வீராப்பை இழுத்து பிடித்து பாகாத்து வைக்க காரணமாய் போனது...

பழையது எல்லாம் அப்பிய செற்றின் மேல் பட்டது போல் விலகிய பின் உன் மன்னித்து விட்டேன் என கூறி பெருந்தன்மையை காட்டி மனிப்பு கூறி முடியத கட்டத்தால் இறுக்கி ஆழப்பட்டவர் வெறுமென மகளின் கையை அழுத்தி மன்னிச்சுருடா தங்கம் என மன்னிப்பை மட்டும் யாசித்தார் இந்த இடத்தில் பெருந்தன்மை காட்ட வேண்டியதும் ரிதன்யா தானே...அவளும் தந்தையின் மன்னிப்பை அழகாக தூளி விடாது ஏற்று கொண்டு உடனே அப்பா கோந்தாக அப்பி கொண்டாள்...



மனதின் அழுத்தம் தாளாமல் தற்கொலைக்கு முன்ற தோழியை பற்றிய சந்தனையே மூளையினுள் வண்டாக குடைந்ததில் சற்று விரிசல் விட்ட உடைந்த மனதோடு கோவமாக இருந்தவளிடம் வான்டடாக வந்து சிக்கி மாறனின் சட்டையை பிடித்து முடிந்த அளவுக்கு அவனை வறுத்தெடுத்து தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தாள் அவள்..

அப்படி என்னடா கோவம் உங்களுக்கு அவ மேல தப்பு இல்லைனு உங்களுக்கு தெரியும் தானடா அப்பறம் எதுக்குடா அவளை ஏங்க விட்டு இந்த நிலைக்கு தள்ளியிருக்கீங்க என்றவளின் பேச்சில் தொனித்த நியாயத்தில் அவளின் கூற்றுகளை மறுக்காது கேட்டு கொண்டு அமைதியாக நின்று கொண்டான் அவன்...

அப்போ நளைக்கு எனக்கும் ஒரு இப்பிடி பிரச்சனைனா கூட இப்போ ரிதன்யாவோடு நிலை தானா எனக்கும் என்றவள் பின் மெல்ல தேய்ந்த குரலில் உன்னை லவ் பண்ணதே தப்பு போலடா போடா என்றதும் அவள் திமிரலையும் மீறி இழுத்து அனைத்து கொண்டவன் அப்பிடி எல்லாம் இல்லடி ஏன்டி தப்பு தப்பா பேசுற என்றவனை பார்த்து...

நா உன் லவ் பண்ணதுக்கு முக்கிய காரணமே உன் தங்கச்சி தான் ஏன்னா நீங்க என்னதான் சண்டை போட்டாலும் உள்ளுக்குள் உங்க ரெண்டு பெயருக்கு பாசம் அதிகம்னு எனக்கு தெரியும் ஆனா நீ அவளையே இப்படியோரு நிலைல விட்டுருக்குறதை பார்த்தா இதுக்கு மேல நம்மோட ரிலேஷன்ஷிப்பை எடுத்து போகவே பயமா இருக்கு என்றவளை இறுக்கி அனைத்து விடுவித்தவன்...ஒத்துக்குறேன் நா ரிதன்யாவை இது வரை விட்டது தப்பு தான் ஆனா என் பக்கம் இருக்க காரணத்தை எல்லாம் நல்லா தெரிஞ்சு இருந்தும் நீ இப்படி பேசுறது ரொம்ப வலிக்குது விஜி என்றவன் அதற்கு மேல் அங்கு நல்லாமல் தங்கையை அனுமதித்த அறையினுள் சென்று நின்று கொண்டான்...


நதியில் சிக்கி இலையை போல் அனைவருமே காலத்தின் விளையாட்டு பிடியில் சிக்கியவர்கள் தான்..இதில் தனித்து உன்னால் தான் எல்லாம் என்று ஒருவனை மட்டும் குறிப்பிட்டு எல்லா குற்றத்தையும் அவன் முதுகில் ஏற்றுவதும் அத்தனை உஸிதம் இல்லையே என்பதை உணர்ந்த பின்பு தான் தான் அதிக படியாக வார்த்தையை வார்த்து அவனை காயப்படுத்தியதையும் உணர்ந்தாள் விஜி...

ஊரில் இருந்து நேராக மருத்துவமனை வந்து சேர்ந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக அவளை சென்று பார்க்கும் பொறுமையின்றி மொத்தமாக உள் நுழைந்து கொண்டவர்கள் மத்தியில் மாறன் மட்டும் விஜி முன் வான்டடாக சென்று பேசி காயம் பட்டு வந்து அறையின் ஒரத்தில் இடம் பிடித்து கொண்டான்...

முதலில் உள் நுழைந்தவர்களின் கண்களில் அங்கே வீர் கதிரையில் அமர்ந்த வாக்கில் மெத்தையில் தலையை சாய்த்து கொண்டு தன்னவள் கரம் கோர்த்து படுத்திருந்தவன் யாரோ வரும் அரவம் கேட்டு நிமிர்ந்ததை அடுத்து உள் நுழைந்த இருவரையும் கண்டு வேகம் இல்லாது பொறுமையாக எழுந்து நின்வனுக்கு அவர்கள் ரிதன்யாவின் பெற்றோர் தான் என கண்டறிருந்து கொள்ள வெகு நேரம் பிடித்திருக்கவில்லை...

அவரின் முகவடிவின் சாயலை அப்படாக கொண்டிருக்கு ரிதன்யாவின் சாயல் போதுமானதாக இருந்தது கவியரசனை அடையாலப்படுத்தி காட்ட அப்போ அவரோடு வரும் நடுத்தர வயது பெண்மணி என்றால் அவர் தன்னவளின் அம்மாவாக தான் இருக்கும் என உணர்ந்து கொண்டவன் ரிதன்யாவுடன் கோர்த்த கரங்களை விலக்காது சற்று தள்ளி இடைவெளி விட்டு நின்று கொண்டான்...

கண்களில் பட்ட விஷயங்களை அப்போதைக்கு ஆறாய விரும்பாதவர்கள் வாடிய கொடி மலராக கட்டிலை அலங்கரித்திருந்த தங்கள் மகளை நெருங்கி இருந்தனர்...

மகளின் இந்த நிலையே இருவரின் தவறுக்கும் கிடைத்த பெரிய தண்டனையாக தெரிய கண்களங்கி போனார்கள்...

ஒர் அளவிற்கு தன்னை துவள விடாது சாமாளித்து கொண்ட ரிதன்யாவின் தாய் தன் கனவனின் தோள்களை அழுத்தி அழுகாதிங்க ஏற்கனவே அவ ரொம்ப கஷ்டப்பட்டுட்டா மேலும் நம்ம அழுது அவளை வருத்த வேண்டாம் என்றவரின் கூற்றில் விழிகளை அழுத்தி மூடி திறந்ததில் கண்களில் தழும்பி நின்ற நீர் விடுதலை பெற்றதாய் வேகவேகமாக அவர் கன்னத்தை கடந்து கட்டிலில் சாய்ந்திருந்த ரிதன்யாவின் கையை நனைத்திருந்தது..

தன் கையில் பட்டு தெறித்த திவளை நீரை உணர்ந்து பட்டென கண் விழித்தவளுக்கு சற்று இன்ப அதிர்ச்சியாகவும் சற்று கலக்கமாகமாக கவியரசன் தன் மனைவியோடு அவள் அருகில் நின்றிருந்தார்...

அவரை கண்ட வேகத்தில் வேகமாக காயம் பட்ட கரங்களை ஊனி எழப்பார்த்ததில் ஸ்ஸ்ஆஆ என முனங்கியதில் அவளின் தந்தைக்கு முன் அவளை பிடித்த வீர் கைளை அடிப்பட்டது நியாபகம் இல்லையா இப்படி பட்டுனு போய் ஊனி எந்திருக்கிற ஷீட்ச்சஸ் பிரிஞ்சா என்ன பண்ணுவ மட்டி என தலையை தட்டி வேகவேகமாக கடிந்து கொண்டவனை பார்த்து தந்தை முன் சிறிதாக பயத்திலும் கூச்சலித்திலும் நெளிய அவனுக்கோ இம்மாதிரியான கஷ்டங்கள் எதுவும் இல்லாதது போல் சாதரனமாகவே இருந்தான்...

அனைத்தையும் கண்ணுற்ற போதும் எதையும் பெரிதுப்படுத்தாமல்...

அவள் தலை வருடி படுடா ஏன் அவசரம் நாங்க இங்க தான இருக்கோம் என்றவர் அடுத்து பெரிதாக எந்த ஒரு விளக்கத்தையும் கூறி மனிப்பு கேட்கவில்லை அதை அவள் ஏதிர்பார்க்கவும் இல்லை...

வெறுமென மகளின் கையை அழுத்தி மன்னிச்சுருடா தங்கம் என்றதும் இதற்கு மேல் அங்கு பினக்குகள் நிலைக்கொள்ள வாய்பில்லாது தகர்ந்து போனதோடு கனிவாக தாயவளும் தலை கோதி தந்தை மின்னிப்பு கேட்ட ஸ்ருதியோடு ஒன்றினைந்து என்னையும் மன்னிஞ்சுரு அம்மாவும் சாரி என்ற பின் ஒரே மகிழ்ச்சி அலை தான் அங்கே...

வீரிடம் ஒரு கரத்தை விட்டு விட்டு ஒரு கரத்தால் தந்தை தாயை சேர்த்து அனைத்ததோடு அவர்களை நிமிர்ந்து பார்த்தவள் என்ன மொத்தமா வெறுத்துடிங்களோனு ரொம்ப பயந்துட்டேன் பா என்று கண்ணீர் சிந்த கூறியவளை அரவனைத்து கொண்டனர் இருவரும் .....

உன்னை வெறுத்துட்டு எங்கடா போக போறோம் உன் அண்ணனையும் உன்னையும் தாண்டி எங்களுக்கு மட்டும் என்ன இருக்கு சொல்லு ஏதோ மிதமிஞ்சய கோவம் அதுக்கு மேல் நம்ம குடும்பத்து மேல படக்கூடாத கண்ணேரு அதான் இப்படி எல்லாம் ஆகி போச்சு அதான் இப்போ எல்லாம் சரி ஆயிடுச்சுல இனி எங்கள் வீட்டில் எல்லா நாளும் காரத்திகை தான் என நிகழும் சூழ்நிலைக்கு சிறு இலக்கமாக சிரிப்போடு அவர் பேச்சை முடித்ததில் எல்லொருக்கும் நிறைவே...

சரி பழசுலா போதும் இனி அதை நினைக்க தேவையும் இல்லை நீ படுத்துக்கோ கொஞ்சம் தூங்க கொஞ்ச நேரத்துல எங்களை ரொம்ப பதற வச்சுட்ட என்றவர் மகளை நன்றாக படுக்க வைத்து விட்ட பின்பும் வீர் அவளை இன்னும் நன்றாக வசதிப்படுத்தி படுக்க வைத்தான்...

என்னதான் சாதரனமாக வீர் நின்றிருந்தாலும் அழகாக பாசத்தால் பினைந்திருக்கும் இந்த கிளி கூடு போலான சிறு குடும்பத்தை பார்த்து எனக்கு இப்படியோரு குடும்ப இல்லையே என்ற சின்ன சுணக்கம் மனதோடு அரும்ப தான் செய்தது...

அவனின் எண்ண ஒட்டத்தை கண்டு கொண்டவளாக பற்றி இருந்த அவன் கரங்களை அழுத்தியதில் கடைத்த ஆறுதலில் மலர்ந்து சிரித்தவனை ஓரகண்களால் ரசித்து உள்வாங்கி நெஞ்சத்தில் சேமித்து கொண்டாள்..


இவர்கள் பார்வை பரிமாற்றத்தையும் கண்ணில் வழியும் காதலையும் கண்டு கொண்டு அவளின் தாய் தந்தை இருவரும் அதை கண்டும் காணமலும் அப்போதைக்கு அதை எல்லாம் சிந்திக்காமல் ஒத்திப்போட்டவர்களுக்கு அப்போதைக்கு மகள் தான் பிரதானமாகப்பட்டாள்...அதன் பின் மெல்ல நகரந்தும் கொண்டனர்...

அவர்களுக்கும் அடுத்து கொஞ்சம் தள்ளி நின்ற மாறன் அவளை நெருங்கி என்கிட்ட நீ எல்லாமே சொல்லிருவனு இத்தனை நாள் ரொம்ப தலை கனத்துல சுத்திட்டேன் போல என அவள் காயம் பட்ட கையை வருடியபடி கூறியவனின் கூற்றை மறுதலிப்பதாய்...

மாறா அப்படி இல்ல என அவள் முழுதாக விளக்கி முடிக்கும் முன்பே அவளை இடைவெட்டி தடுத்தவன் தெரியும் உன் ரொம்ப காயப்படுத்திட்டு இது எல்லாம் ஏதிர்பார்க்க முடியாதுனு என்றவனின் கையை இறுக்கி பிடித்தவள்...

நீ அன்னைக்கு எனக்காக பேசாதது எனக்கு கோவம் தான் ஆனால் நா தனியா ஊர விட்டு போகும் போது எனக்காக யோசிச்சு விஜியை எனக்கு துனையா நீ அனுப்பி வச்சது தெரியும்..அப்போவே உன் மேல கோவம் போச்சு...

அப்பறமும் நா ஏன் உன்கிட்ட அதுக்கு அப்பறம் பேசலைனா காரணம் அப்பா தான்...

எனக்கு தெரியும் கன்டிப்பா நீ என்கிட்ட பேசுறது தெரிஞ்சா அப்பா கண்டும் காணமையும் விட்ருவாருனு இருந்தாலும் அவரு கஷ்டப்படுவாருனா அதான் என விளக்கி கூறி முடித்தவளின்..

தலை கோதி என் பக்கதுலையே தான் இருந்த எப்படி திடிர்னு இவ்வளவு அறிவாளியா மறுனனு தெரியலை வர வர எல்லாரும் அறிவாளி ஆகிட்டே வரத பாத்தா எனக்கு போட்டியா வருவிங்களோனு பயமா இருக்கு அதுனால கொஞ்சம் கொறைச்சுக்கோ என கின்டலாக கூறி அப்படியே தோசையை திருப்பி போடுவதை போல் சூழ்நிலையை மாற்றியதில் அவளுமே சோகத்தில் இருந்து விடுப்பட்டு நக்கலாக அவனை பார்த்து...

அப்போ நீ இன்னும் உன்ன அறிவாளினு நம்பிக்கிட்டு இருக்கியா அட பாவமே என்று கோன்டர் கொடுத்தவளை பார்த்து..

சலிப்பாக முகத்தை வைத்து கொண்ட போதும் உள்ளே பொங்கிய சந்தோஷத்தோடு ஆரம்பிச்சிட்டியா உனக்கு பொறுக்காதே நா அறிவாளினு சொன்னா...

உன்மைய சொன்னா நா ஏன் பொறாமை பட போறேன்...

திமிரு டி கொஞ்ச நாள் சென்னைல என் தொல்ல இல்லாம இருந்தேலே அந்த ஆனவம் உன் பேச வைக்குது என்றவனை பார்த்து ஹோஹோ என ஆச்சரயம் போல் புருவம் உயர்த்தியவள்...

உண்மையை சொல்லு அங்க நா இருக்கும் போது நீ என்கிட்ட மொக்கை வாங்குனதே இல்லைனு என்றதும்...

அ..அஅ.அது என்றவனை பார்த்து அவளும் எ.எஎ..எது என்றதும் கம்பெனி சீக்கிரேட்டை வெளியே சொல்லாதடி என்றவன் இனி தன் மானதிற்கு இங்க பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்தவன் வராத போனை காதில் வைத்து ஹலோ என இழுத்தபடி சென்றவனின் பின் இருந்து நடிக்காதடா அசிங்கமா இருக்கு என்றவளின் வார்த்தை சிரிப்பொலியோடு காற்றில் கரைந்து போனது...

இதழ் நீளமாக விரிய சிரித்தவளின் தாடையை பற்றி இன்னும் அவளோ கைகள் கோர்த்தபடியே நின்றிருந்த வீர் தன்னை நோக்கி திருப்பி சிரிச்சுகிட்டே இரு டி அழகா இருக்கு என்றவன் அவள் கன்னதில் தன் உதட்டை ஒற்றி எடுத்தான்..


அன்று முழுவதும் தாய் தந்தை அண்ணன் தோழி என அனைவரின் பாச மழையிலும் நனைந்து மூச்சு முட்ட தின்டாடி போனாள் ரிதன்யா...

அங்கே இருந்த வீரிடம் கவியரசன் மற்றும் மாறன் சிறு நேரத்தில் ஒன்றிக்கொண்டதோடு அங்கே பொதுப்படையே விஷயங்களும் விவாதிக்க பட்டது...

இதற்கிடையில் இரு காதலர்களின் கள்ள பார்வையும் தொய்வின்றி தொடர்ந்தது...

டிராவல் பேக்கில் தன் உடமையை அடுக்கி கொண்டிருந்தவனை பாவமாக பார்த்து கொண்டிருந்த அஞ்சலி ஆது கண்டிப்பா போகனுமா என்றவளை சின்ன நமட்டு சிரிப்போடு நிமிர்ந்து பார்த்து விட்டு பின் மீண்டும் தன் வேலையை தொடர்ந்து கொண்டே பேசினான்...

ஆமா டா முக்கியமான வேலை சீக்கிரம் வந்துருவேன் அது வரை நீ பத்திரமா இருக்கனும் கரேக்ட்டா சாந்தி அக்கா கொடுக்குற சாப்பாட்டை கரேக்ட்டான நேரத்துல சாப்பிடனும்...மறக்காம மாத்திரை போட்டுக்கனும் சரியா என்றவனை பார்த்து சலித்து கொண்டவள்...

இது எல்லாம் நீங்க தான எப்பையும் பண்ணுவிங்க இப்போ திடிருனு நீயே எல்லாதையும் செஞ்சுக்கோனு விட்டுட்டு போனா சரியா...

முக்கியமான வேலை டி அதான் போறேன் இல்லைனா நா ஏன் போக போறேன்...

போங்க சும்மா எதாவது சொல்லுறிங்க என வீஞ்சி கொண்டவளை மீண்டும் நிமிர்ந்து பார்த்து விட்டு வேலையை தொடர்ந்தவனை கண்டு கடுப்பானவள்...

வேகவேகமாக அவன் அடுக்கி கொண்டிருந்த பெட்டியில் இது வரை அடுக்கி அனைத்தையும் வெளியே போட்டபடி இல்லை நீங்க போக வேண்டாம் இல்லைனா என்னைமும் கூட்டிட்டு போங்க என்றவளின் செயலை தடுத்து அம்மு இப்பிடி பண்ணாத என சற்று கன்டித்தான்..

அவனின் பேச்சை மதியாது மீண்டும் அவன் அடுக்கியதை வெளி எடுக்க கையை கொண்டு வந்தவளை பார்த்து உனக்கு சொன்னா புரியாதா நீ என்ன குழந்தையா அடம்பிடிக்க என கொஞ்சமாக குரல் உயர்த்தி அதட்டியவன் செல்லம் கொடுத்து சொல்லம் கொடுத்து உன்ன ரொம்ப கெடுத்துட்டேன் என்றவனை பார்த்து

நிஜமாகவே குழந்தை போல் திடுகிட்டு இதழை பிதுக்கி கண்களில் இரண்டு சொட்டு கண்ணீரை வழிய விட்டவள் வேகவேகமா நகரந்து கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டாள்...

அவள் சென்றதும் வேலையை அப்படியே நிறுத்தி விட்டு இவ நிஜமாவே குழந்தை தான் என சிரிப்போடு முனுமுனுத்தப்படி தனக்கு முதுகு காட்டி அமர்ந்திருக்கும் அவளை நெருங்கி இடையோடு கைவிட்டு வயிற்றில் அழுந்த கை பதித்து பிடித்து கொண்டவன்...


மெதுவாக காதில் தன் மீசையால் குறுகுறுப்புட்டி அம்மு என மென்மையாக அழைக்கவும் என்ன ஒன்னும் கொஞ்ச வேண்டாம் போ என கண்ணீர் சிந்தயவளை முன் திருப்பி..

நெஜமா நா தான்டி உன் கெடுக்குறேன் என்றவன் மேலும் அவளை செல்லம் கொடுத்து கெடுக்க தான் செய்தான்...

அவள் கண்ணீரை துடைத்து இழுத்து அனைத்து கொண்டவன் ஒன் விக் தான் அதுக்கு மேல கண்டிப்பா லேட் பண்ண மாட்டேன் வேலை முடிஞ்ச அடுத்த நிமிஷம் என் அம்முவை பார்க்க ஒடி வந்துருவேன் சரியா இதுக்கு போய் அழுகலாமா என்றவளை நிமிர்ந்து பார்த்து கோவத்திலும் அழுகையிலும் மிளகாய் பழம் போல் சிவந்து இருந்த மூக்கை கிள்ளி எடுத்து..

முத்தமும்யிட்டவன் இதுக்கு அப்பறம் உன் எங்க போனாளும் கூட்டிட்டு போறேன் இந்த ஒரு தடவை மட்டும் மாமாக்கு எக்ஸ்கியூஸ் சரியா என அவள் கன்னம் தாங்கி குழந்தைக்கு எடுத்து கூறுவது போல் கூறியதும் ஒருவழியாக சமாதானமாகி சரி என தலை அசைத்தாள்...


அதர்ஷனுக்கு எப்படி காலை தொடர்ந்து இரவை தொட அனுதினமும் அவன் அம்முவின் அருகாமை வேண்டுமோ அதே போல் தான் அஞ்சலிக்கும்..

ஆனால் அவள் இன்னும் மோசம் அதர்ஷனின் நெருக்கத்திலேயே ஒட்டி கொள்ள முடியவில்லௌ என்றாலும் குறைந்த பட்சம் அவள் நிழலையாவது பார்த்தாள் நிம்மதியே...


அவனை காதலிக்க தொடங்கிய போது கூட அவன் கரங்களில் இவள் இப்படி பச்சை குழந்தையாக தவழ்ந்தது கிடையாதே ஆனால் மருத்துவமனையில் இருந்த வந்த பின் நிலை மோசமாகி முற்றிலும் பச்சை பிள்ளையாகவே மாறி போய் தாயை அதர்ஷன் அருகாமையை வெகுவாக தேடினாள்..

இரவு அவனின் வெற்று மார்பில் சாய்ந்தால் தான் நித்திரா தேவிக்கே அவள் மேல் இறக்கம் வருவதாய் தூக்கமே வரும் அவளுக்கு...

சரி என்று விட்ட பின்பும் அவனை பிரிய மனம் இன்றி என்னையும் கூட்டிட்டு போ உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன் என அவனை அனைத்து அறற்றியவளை கண்டு ஓர் மர்ம சிரிப்பை உதிர்த்தவன்..


சொன்னேல அம்மு சீக்கிரம் வந்துருவேன் சரியா அப்பறம் நீயே போனு சொன்னாலும் ஐயா தேவியே சரனாகதினு இங்க தான் இருப்பேன் ஓகே...அப்பறம் வரும் போது உனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு கொண்டு வருவேன் என்றதும் சோகம் மறந்து..

கண்கள் விரித்து என்ன ஆது எது என்றவளிடம் உன்கிட்ட வர வரைக்கும் அது சர்பிரைஸ்ஸா இருக்கட்டும் என்றான்...

அவன் கூறி முடித்ததும் மீண்டும் அவனை பிரியும் நிலை நினைவுக்கு வந்ததில் தலையை கவிழ்த்தி சரி என மண்டையை ஆட்டியவளிடம் சிரிச்சுகிட்டே அனுப்புடி நீ இப்படி இருந்தா எனக்கு எப்படி வேலை ஒடும் அப்பறம் எப்படி சொன்ன டைமிற்கு வர முடியும் என்றவன் பின் மெதுவாக கண்டிப்பா நீ என்ன மிஸ் பண்ணுறதுக்குள்ள வந்துருவேன்...


என்றவனிடம் அதற்கு மேல் அடம் பிடிக்காமல் சரி என்றவளை மெதுவாக இறுக்கி அனைத்தவன் ஒரு வாரத்துக்கு தாங்குற மாதிரி மாமாக்கு எதுவும் இல்லையாடா குட்டிமா என்றதும் அவன் இதழை நெருங்க வந்தவளின் தாடையை பற்றி தடுத்து நானே எடுத்துக்கிறேன் என்றவன் அதற்கு மேல் நேரத்தை வீனாக்காது அவள் இதழை கவ்விக்கொண்டு ஒரு வாரத்திற்கு தேவையான மொத்த தேனையும் உறிந்து கொண்டு விட்டான்..

நேரம் ஆவதை உணர்ந்து கிளம்ப தொடங்கினான்...

அவனை பிரிந்து இருப்பதை நினைத்து கசந்தாலும்...அவனுக்கு முட்டு கட்டையாக நிற்க்க விருபாமல் சரி என்று கூறி விட்டிருந்தாள் பாவையவள்..

கிளம்பி வந்தவன் ஆயிரம் பத்திரம் கூறி..

மறக்காமல் பெண்ணவளை சிறு சிறு தீண்டல்களால் சிவக்க வைத்து...நெற்றி முத்தமிட்டு விலகி கொண்டவன்..

மீண்டுமாக இப்போதான் எல்லாம் சரி ஆகியிருக்கு பத்திரமா இரு பாப்பா கூட விளையாடினாளும் பத்திரமா இரு சரியா நா கால் பண்ணுறேன் என வெளியே செல்லும் தாய் பிள்ளையிடம் கூறி செல்வது போல் அறிவுறைகளை அடுக்கி வைத்து விடை பெற்றான் அதர்ஷன் வர்மா...

தொடரும்....
 
Last edited:
  • Like
Reactions: Maheswari