• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕 22

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
84
89
18
Madurai
எதற்கும் வந்தோம் என்பதை மறந்தோலோ என்னவோ வந்ததில் இருந்து தன் முன் காப்பி நிறைத்து வைத்த கோப்பையை எடுத்து மிடரு விழுங்குவதும் பின் விழிகளை சம்மந்தம் இல்லாமல் நாலாபுறமும் சுழற்றுவதுமாக அமர்ந்து இருந்த ஷிவானியை கண்ட டிடெக்டிவ் சரணுக்கு எரிச்சல் மண்டியது வந்து 20 நிமிடமாக தான் முன் வைத்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சுற்றம் ஆராய்வதை போல் பாவ்லா காட்டியவளிடம்...

ஒரு நிலைக்கு மேல் பொருமை துரந்தவன் ஏன் அமைதியா இருக்கிங்க ஏதாவது சொல்லுங்க என சப்தம் உயர்த்தியவனை விழி மிரள நோக்கியவளுக்கு வாயை திறக்கவே கூடாது என்ற உத்தேசம் போலும்...

எதுவாயினும் பட்டென தைரியமாக பேசி முடிப்பவள் இப்போது மௌனியாக இருப்பதற்கும் காரணம் உண்டே..தான் தவறவிடும் ஒரு வார்த்தை இப்போது தான் சிரித்து பழகும் அந்த அப்பாவி பெண்ணை மீண்டும் கருங்குகைக்குள் தள்ளிவிடுமோ என அஞ்சியவள் திருவாய் மலர்ந்தாள் இல்லை...

முதலில் ஏரிச்சல் அடந்தவன் பின் அமைதியாக தன் பார்வையை கூர் தீட்டி அவள் முகத்தை ஆராய்ந்து இங்க பாருங்க நீங்க சொல்ல போற எந்த விஷயமும் யாரையும் பாதிக்காது...நம்பி சொல்லுங்க நீங்க இப்படி அமைதியா இருந்ததுக்கு பின்னாடி கவலை படாதீங்க என அவள் மௌனம் காக்கும் விஷயத்தில் பின்னால் ஏற்படக்கூடும் பிரச்சினையை நாசுக்காக உணர்த்தி அவள் பதிலுக்கு எதிர்பார்த்து இருந்தான்..

அழுத்தமாக இருந்தவள் அவன் வார்த்தையில் இலக்கம் கொண்டு ஏதோ ஒர் கோணத்தில் அஞ்சலியில் மன அழுத்தம் குறையும் என்று நம்பியவளாக அவள் வாழ்வில் மறக்க முடியாது நிகழ்ந்த கொடிய பக்கங்களை கூற தொடங்கினால் ஷிவானி...

அத்தனை கொடுமைகளின் நடுவே எஞ்சி இருக்கும் சிறு நிம்மதியாக தன் பெண்மைக்கு பாதகம் இன்றி தங்க இடம் கிடைத்ததே பெரிது என கிடைத்ததில் சந்தோஷம் இல்லாவிடினும் இருந்த நிம்மதியை சுக்கலாக உடைக்கும் விதமாக அமைந்தது வெற்றியின் வரவு...

தேவகியின் துரத்து சொந்தம் தான் வெற்றி..அவனின் தாயுடன் மட்டும் இருந்தவன் அவரின் இறப்பிற்கு பின் கொட்டகைக்குள் நுழையும் ஓநாய் போல் தேவகியின் அனுதாபம் பெற்று அந்த வீட்டினுள் நுழைந்தான் அந்த பாதகன்...

இத்தனை வருடம் அவளின் கொடுமையில் வதங்கிய அஞ்சலி மேல் இல்லாத அனுதாபம் தன் துரத்து சொந்த தம்பிக்காக மட்டும் சுயநலமாக சுரந்ததில் அவளும் வெற்றியை தங்கள் வீட்டிலேயே இருக்க சம்மதித்தால்...

நிலவை பார்த்ததும் நிறம் மாறி ஒலமிடம் நரி போல் வீட்டில் வயது பெண்களை பார்த்ததும் அவனுள் சுருண்டு கிடந்த காமூகன் வலை நீட்டியது..

தைரியமாக ஏதிர்க்கும் திக்ஷாவிடம் தன் பாட்ஷா பலிக்காமல் போனதில் கொடுமையை கூட வாய் விட்டு எதிர்த்து கேட்க திராணி அற்ற நிற்கும் அப்பாவி பெண்னை கசக்கி எறிந்தாலும் எதிர்க்க ஆள் இல்லை என்ற தைரியத்தில் அவளை கண் கொத்தி பாம்பாக விழுங்க காத்திருந்தான் அவன்..


ஒருமுறை அவன் அஞ்சலியிடம் எல்லை மீற முனைந்த போது எதர்ச்சியாக அங்கு வந்த தேவகி கண்டுவிட்டதில் ஜெர்க் ஆனாவன் பின் தன்னை சுதாரித்து கொண்டு அப்படியே பிளேட்டை திருப்பி போட்டு தன்னை அப்பாவியாக காட்டியதை கேள்விகள் இன்றி நம்பிய தேவகி அஞ்சலியை வெளுத்து விட்டார்..

சீ என்னடி புத்தி உனக்கு இதுக்கு நெதம் தெரு முக்குல போய் நிக்க வேண்டியது தான அது சரி பெத்தவ ஒழுக்கமா இருக்கனும் அவ ஓடி போன இதோ அத புத்தி விட்டு போகுமா என வார்த்தையால் அவளை உருகுலைத்தவரிடம் ஆறுதல் அடைய துடித்தால் அந்த பெண்...

.சித்தி நா..நா..ஒ..ஒன்னும்..பன்னல சித்தி என அழுகையில் வார்த்தை திக்கி தினறி அவள் நியாயத்தை முன் வைக்க முனைந்தவளை தடுத்து கொடிய சொற்களால் அவளை வதைத்து விட்டு அவள் நகர்ந்ததும் வெற்றி அவள் அருகில் வந்து நக்கலாக நகைத்து இதுக்கு நீ ஒழுங்கா எனக்கு கன்பெனி கொடுத்துர்களாம் என கூறி சென்றவனை பார்க்க உடம்பு மொத்தம் அருவருப்பில் தகித்து அப்போதே பூமி பிளந்து தான் போக மாட்டோமா என ஏங்கி அன்று முழுவதும் வேதனையில் துவண்டாள்...


நாட்கள் எப்போதும் போல் தேவகியிடம் திட்டு அடி என சென்றது இதில் திக்ஷாவும் அவள் பங்கிற்கு அஞ்சலியை உருகுலைத்தால்...

ஒவ்வொரு நாள் இரவு அஞ்சி நடுங்கி வெற்றியின் துகில் உரிக்கும் பார்வையில் இருந்து தப்பிபதே பெரும் சவாலாய்‌‌‌ இருந்தது...

இதில் அனைத்திலும் இருந்து காப்பாத்த ஆபத்பாடவனாக வந்தவன் தான் செல்வா அவன் தன் சுயநலத்திற்கு செய்தது அஞ்சலிக்கு சாதகமாக போனது...அவள் சென்னைக்கு செல்லும் ஆஃபர் கொடுத்தது அவன் தானே..


அவளுக்கும் இந்த ஊரில் இருந்து தப்பித்து செல்வது நிம்மதிதான் ஆனால் தன் சித்தப்பா என்று நினைத்து தான் மறுத்தால்..ஆனால் அவளை பற்றி அனைத்தும் அறிந்த ஷிவானி அவளுக்கு நிதர்சனத்தை உணர்த்தி ஒருவழியாக அவளை சம்மதிக்க வைத்தால்...


அவள் ஊருக்கு செல்லும் இருநாட்களுக்கு முன் தேவகியும் திக்ஷாவும் எங்கோ சொந்ததில் திருமனம் என சென்று விட அவளும் அவள் சித்தப்பாவும் மட்டுமே இருந்தார்கள்..

அவர்கள் இருவரும் சென்று விட்டதால் வீட்டில் அத்தனை வேலை இருந்து இருக்கவில்லை அவளுக்க சித்தப்பாவை பார்த்து கொள்வதுதான் வேலை...

அவருக்கு உணவு அளித்து வேண்டிய மாத்திரை கொடுத்து சாப்பிட வைத்து அவரை ஒய்வு எடுக்க கூறி அந்த வேலையையும் முடித்தவள் புறவாசலில் தொங்கி கொண்டு இருந்த ஊஞ்சலில் ஆசையாக வெகு நாட்களுக்கு பின் அமர்ந்தாள் அஞ்சலி...

அந்த ஊஞ்சல் என்றால் அத்தனை பிடித்தம் அவளுக்கு ஆனால் சித்தி இருக்கும் போதும் ஆசை கொண்டு அந்த ஊஞ்சலை தொட்டு விட்டால் கூட வார்த்தையில் கோதறுவாள் என அந்த பக்கம் கூட செல்லாதவள் இப்போது ஆசை தீர தன் கால்கள் பூமியில் முத்தமிட நகர்த்தி ஆடியவளின் சந்தோசத்தை களைக்கவே அந்த சம்பவம் அரங்கேறி இருந்தது..


மதியம் தாழ தொடங்கி மாலையை நெருங்கும் நெரமதில் தெருவே நிஷப்த்தமாக காட்சி அளித்திருக்க..வீட்டினுள் ஆசை தீர உஞ்சலில் அமர்ந்து நயனம் சந்தோஷத்தில் மிளர ஆடி மகிழ்ந்தவளின் செவியை நிறைத்த கதவு தட்டும் சத்ததில்....

இப்போ யாரு வந்து இருக்கா என்று யோசித்து இருந்தவள் சிறிதும் நிதைத்திருக்கவில்லை தன்னை தூகில் உறித்து புசித்து விட துடிக்கும் மனித போர்வைக்குள் பதுங்கி இருந்த மிருகம் தான் வந்திருக்குமென...

அவளை துண்டாடி விழுங்க காத்திருந்த மிருகத்திற்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போல் அமைந்து போனது அஞ்சலி வீட்டில் தனித்து இருக்கிறாள் என்ற செய்தி....எல்லோரிடமும் தான் கல்யாணத்திற்கு போகிறேன் என தன் இரண்யிர ரூபாய் பட்டு புடவையை காட்டி பெருமை பட்டு கொள்ள அடித்த தம்பட்டம் ஒரு அப்பாவி பெண்ணை வாழ்வில் மீல முடியாத அழுத்தத்தில் தள்ளியது தான் பரிதாபம்...

மீண்டு கேட்ட கதவை தட்டும் சத்ததில் யோசனை களைந்தவள் எழுந்து சென்று கதவை திறந்த நொடி கண்கள் போதையில் தழைந்து உதடுகள் வக்கிர புன்னகை ஏந்த தள்ளாடி நின்றவனை கண்டதும் அதிர்ந்து மருண்ட போதும் மூளை தன்னை காத்துக்கொள்ள துரிதமாக செயல்பட்டதில் திறந்த வேகத்தில் கதவை மூட போனவளின் முயற்சியை முறியடித்து உள் நுழைந்து இருந்தான் வெற்றி...

வீட்டிற்குள் நுழைந்தவன் அஞ்சலி ஏன்டா பயப்புடுற மாமா தான ஒன்னும் பண்ண மாட்டேன் கிட்ட வா என குளறலாக தன்னை கண்டு மிரண்டு பின் நகர்ந்து சுவற்றில் முட்டி நின்றவளை பார்த்து கூற...அவளோ இதற்கு மேல் எங்கே போவது என தெரியாமல் தன் வாழ்வு மொத்தமும் முடியும் இறுதி நொடிகள் என முடிவு செய்தவளுக்கு வீட்டில் இருக்கும் சித்தப்பா கூட தன்னை காப்பாற்ற முடியாது போன அபலை நிலை...எழுந்த நிற்க சாத்திய படாது தேகம் அவளை காத்து உறுதுணையாக உடன் நிற்க மட்டும் சாத்திய படவா போகிறது....

பீளிஸ் கிட்ட வராத என்றவளின் குரலை ஆழ்ந்து வாங்குவதை போல் பாவம் காட்டியவன் நீ கெஞ்சும் போது கூட அழகு தான் வா என அவள் திமிற திமிற இழுத்து படரபோனவன் விரல் பட்ட இடம் எல்லாம் நெருப்பாக கொதித்து சிதைந்து போகாத குறை....

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை போல் எங்கு இருந்து தான் திடிரென அத்தனை பல கொண்டாளோ தல்லாடி நின்றவனை முழு மூச்சாக கீழே சாய்தவள் பக்கம் இருந்த ஹெங்கரில் தொங்கிய பெல்டை எடுத்து அவன் தெளிந்து எழும் முன் வழுவாக காலால் அவன் வயிற்றை மிதித்து கொண்டு பெல்டை அவன் கழுத்தை சுற்றி இறுக்கி அவன் மயக்கம் ஆன பின் தான் பொங்கி எழுந்த ருத்தர கலியாக நின்றவள் ஓய்ந்து அமர்ந்தாள்...

அந்நேரம் அஞ்சலியிடம் மாட்டி கொண்ட முக்கியமான பைலை வாங்க வந்த ஷிவானி வீடு திறந்து இருப்பதை பார்த்து சற்று தயங்கி அஞ்சலி என குரல் கொடுத்தபடி உள் நுழைந்தவள் தலையெல்லாம் கலைந்து கண்கள் சிவந்து கன்னம் பழுக்க சுவரில் சாய்ந்து மூச்சிறைக்க தன் முன் கிடந்தவனை கலவரமாக பார்த்து அமர்ந்து இருந்த அஞ்சலியை கண்டு திடுக்கிட்டாலும் உடனே தன்னை சுதாரித்து கொண்டு மெல்ல அஞ்சலி தோள் தொட்டு அவளை சுயம் மீட்டு வந்திருந்தாள் ஷிவானி...

மெல்ல அவள் பக்கம் திருப்பிய அஞ்சலி அவள் என்ன நடந்தது என கேட்க வரும் முன் அவளை அனைத்து கொண்டு கதறியவளுக்கு இவளும் தன்னை குற்றவாளியாக நினைத்து விடுவாளோ என்ற பயத்தில் தான் இந்த அனைப்பும் கதறலுமோ...

ஷிவி ஷிவி ந..நா வேணும்னு பண்ணல அவன் தான் என கீழே சரந்திருந்தவனை கை காட்டியவள் அவன் எங்க எங்கலாம் தொட்டான் தெரியுமா கன்னத்துலையுல் அடிச்சிட்டான் வலிக்கிது என சிறு பிள்ளை போல் தன் சிவத்திருந்த கன்னதை காட்டியவளிடம் என்ன என்று விசாரிப்பது...கண்டிப்பா அவள் மேல் சந்தேகம் இல்லை ஆனால் என்னானது இவளுக்கு எதுவும் தவறாக நடந்து விடவில்லையே என்ற தவிப்பு மட்டுமே..‌

தன்னை இறுக்கி பிடித்து கொண்டிருந்தவளின் சிவந்த கன்னம் வருடி ஒன்னும் இல்ல பயப்படாத என ஆறுதல் கூறிவளுக்கும் அடுத்து என்ன செய்வது என தெரியவில்லை...பயந்து இருக்கும் இவளை சமாளிப்பதா அல்லது தங்கள் முன் கிடப்பவனை அடுத்து என்ன செய்வது என தெரியாமல் முழி பிதுங்கி நின்றாள் அவள்....

தொடரும்..
 
Last edited:
  • Love
Reactions: Kameswari