• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕 23

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
84
89
18
Madurai
முழி பிதுங்கி கீழே விழுந்து கிடப்பவனை அடுத்து என்ன செய்வது என்றும் பயந்து நடுங்குபவளை சாமாளிக்கவும் வழி அறியாது நின்ற ஷிவானியின் யோசிக்க முனையும் மூளையை தடை செய்யும் விதமாக அஞ்சலியின் விசுமபல்...

முதலில் அஞ்சலியை சாமாதனம் படுத்த எண்ணியவள் அஞ்சலி ஒன்னும் இல்ல நீ நல்லாதா இருக்க அழுகாது என்ற தேற்ற முயன்றவளின் முயற்சியை முறியடித்து அரண்டு தன்னை விட்டு அகல மறுத்தவளை தன்னில் இருந்து விலக்கி அஞ்சு இப்படியே எவ்வளவு நேரம உட்கார போற நா உன்ன நம்புறேன் உன் மேல தப்பு இல்லனு அவனை தனியா எதிர்த்த உனக்கு எதுக்கு பயம் என அவளை எழ வைத்து தண்ணீர் பருக கொடுத்தவள் அமைதியா இரு பாத்துக்கலாம்...

ஷிவி...ஷிவி அவன் எழுந்துக்கவே மாட்டுறான் பயமா இருக்க நா வேணும்னு பண்ணல என அவள் கரம் பற்றி மீண்டும் தெம்ப தொடங்கியவளின் கரம் பற்றி அமைதியா இரு ஒன்னும் இல்லை நா பாத்துக்குறேன் என சிரமப்பட்டு அடக்கியவள் மெல்ல அவன் அருகே சென்று மூக்கில் கை வைத்து அவன் சுவாசம் சோதித்தவளின் கரங்களில் தீண்டாது போன அவன் சுவாசத்தில் சற்று மிரண்டாலும்...நிலை மொத்தமும் அவள் தலையில் சுழன்றதில் எந்த பாவத்தையும் வெளிப்படையாக காட்ட முடியாத நிலை அவளுக்கு...

தன் கண்கள் வீசும் மெல்லிய பயம் திரண்ட பார்வை கூட அஞ்சலியை பயமுறுத்தும் என்பதை உணர்ந்தவள் முகத்தில் எதையும் காட்டியிருக்கவில்லை...தன் வார்த்தைக்கு செவி மடித்து நடப்பவை அதைத்தையும் திகிலாக நின்றவளை மேற்கொண்டு அச்சத்தில் தள்ள விரும்பாது சுழ்நிலை மொத்ததையும் தன் கையில் எடுத்தாள் அவள்...

மூச்சை இழுத்து விட்டு தன்னை சமன் செய்து கொண்டவள் மூளை அடுத்த சிந்தனைக்கு முட்டு கட்டை போட்டு மந்தமாகியதில் துரிதமாக அடுத்து அடுத்து செயல்பட தினறிவளுக்கு சுழ்நிலை மூளைக்கு அப்பாற்பட்டு அடுத்த செயலை துரிதப்படுத்த உந்தியதில் வீட்டை வேகவேகமாக நோட்டமிட்டு வழி தேடினாள்...

வீட்டுக்கு பின் புறவாசலில் மண்டி இருந்த பொருட்கள் மேல் அவை சேதப்படாமல் இருக்க விரித்து இருந்த தார்பாயை எடுத்து வந்து அவன் மேல் போர்த்தி சற்றி மறைத்தவளை கண்ட அஞ்சலி ஷிவி என்ன பண்ண போற இவன ஏன் மறைக்கிற என கேட்டவளை பார்த்து வேற என்ன இங்கையே பிணத்தை படுக்க வச்சு விசிறி விட சொல்லுறியா என்றவள் அவனை சிரமப்பட்டு இழுத்து கொண்டு போய் புறவாசலில் பொருட்களுக்கு இடையில் இருந்து சிறு சந்தில் அவனை தள்ளி மேலே பொருள் வைத்து மறைத்து வந்தவளுக்கு இப்போது அவனை பதுக்கி வைத்தாயிற்று என்ற விஷயம் நிம்மதி அளித்தாலும் அடுத்து நடக்கும் விஷயத்தை முன்பே யூகித்து திட்டமிட தெரிந்திருக்கவில்லை...

நேராக அவளிடம் வந்தவள் உங்க சித்தி எப்போ வராங்க என்றதை தொடர்ந்து இன்னைக்கு என்று பதில் அளித்தவளை பக்கம் கிடந்த நாற்காலியில் அமர்த்தி அவள் கண்களில் உறைந்து இருந்த கண்ணீரை துடைத்து நீ பயப்படாதே உங்க சித்தி வந்து எது கேட்டாலும் பயத்தை முகத்துல காட்டிராது சரியா என்றவளை மறித்து மீணடும் கண்ணீர் வழிய அப்போ அவன் அவனை என்ன பண்ண என கேட்டவளிடம்...

தெரியல பாப்போம் பீளிஸ் நீ முதல்ல கொஞ்சம் உன்னை சமாளிச்சுகோ எப்படியாவது நீ சென்னைக்கு போய்று என்றவளிடம் வீட்டுல பிணத்த மறைச்சுட்டு நா எப்படி போறது என மேற்கொண்டு ஏதோ கூற வர...

உஷ் என அவள் வாயில் விரல் வைத்து அவள் பேச்சை இடைவெட்டி நீ எந்த தப்பும் பண்ணாத போது எதுக்கு பயப்புடுற இவனை எப்படியாவது யாருக்கும் தெரியாம டிஸ்போஸ் பண் வேண்டியது என பொறுப்பு என்றவளுக்கும் எங்கு ஆரம்பித்து எந்த வழியில் கொண்டு சென்று முற்று புள்ளி வைப்பது என தெரியாத போதும் அப்போதைக்கு அவளோடு சேர்த்து தன்னையும் சமாளித்து கொள்ள அந்த வார்த்தை தேவைபடுவதாய்..

மாலை வந்துவிடுவேன் என கூறிய நேரத்திற்கு வீட்டிற்குள் நுழைந்திருந்தாள் தேவகி...வீட்டில் எப்போதும் இல்லாது அஞ்சலியுடன் இருந்த ஷிவானியை சந்தேகமாக பார்த்து நகர்ந்தவர் அஞ்சலியின் கலவரம் படிந்த முகத்தை சரிவர கவனித்திருக்கவில்லை...தேவையே என்றாலும் அவள் முகத்தை பார்க்க விரும்பாதவளுக்கு அவள் முகத்தில் படிந்து இருக்கும் கலவரத்தை கண்டிருக்க வாய்ப்பு இல்லையே...

ஒருவழியாக அந்த நாளை பயத்தோடு நெட்டி தள்ளியிருந்தாள் அவள்...மணிக்கு ஒரு முறை புறவாசலை பார்த்தே நாளை கிடத்தியவளுக்கு மறு நாள் உதயமாவதற்குள் உயிர் பல முறை கூட்டை விட்டு செல்ல ஒத்திகை பார்ப்பதாய்...ஷிவானி இல்லாமல் போனால் அது நிதர்சனமாகி போயிருக்கும் என்பதில் ஐயம் இல்லை...

மறுநாள் தான் அஞ்சலி ஊருக்கு புறப்படும் நாள் அதை காரணமாக வைத்து காலையிலேயே இங்கு வந்த ஷிவானி அவளை ஒட்டி கொண்டே திரிவதை பார்த்த தேவகி ஏதோ சந்தேகமாக பட்டது ஏனெனில் எப்போதும் வாசலோடு நின்று பேசிவிட்டு நகர்பவள் இன்று வீட்டிற்குள் வந்ததின் காரணத்தை அறிந்து கொள்ளும் ஆவலில் ஜாடை மாடையாக கேட்டிருந்தாள்...

என்னனு தெரியல ஒரு நாய் அது பாட்டுக்கு வருது அதுவா குறைக்குது புதுசா இருக்கே என்னமோ பா ஒன்னும் புரியல என டிவியில் கண்பதித்து கூறியதை தெளிவாக கேட்டிருந்த ஷிவானி அஞ்சலியிடம் என்னமோ அஞ்சலி ஒருத்தி வேலை பாக்குறா ஆனால் சிலர் போற வர நாயை எல்லாம் பாத்து விரட்டி விடுற அளவுக்கு வெட்டியா இருக்காங்களா இல்ல வேலையாவே அதான் பண்ணுறாங்களா தெரியலை என அவளும் டிவியில் ஒடி கொண்டிருந்த நாடகத்தை பார்ப்பது போல் ஓர கண்ணால் தேவகியை பார்த்து வாரி விட....

அடுத்து பேச முடியாதபடிக்கு பேச்சால் கிடுக்கு போட்டவளை அவளால் முறைக்க முட்டும் தான் முடிந்தது...

அஞ்சலி போல் எல்லொரையும் சட்டென ஏறி மிதிக்க முடியாது என்பது வரை தெளிவாக உணர்ந்து ஷிவானியிடம் அதற்கு மேல் வாயை கொடுக்காமல் இறுக மூடி கொண்டவள் அதற்கு மேல் அங்கிருந்து மூக்கு உடைப்படுவதை விரும்பாமல் ஷிவானியை முறைத்து கொண்டே நகர்ந்திருந்தாள்...


ஊருக்கு கிளம்பும் வரையும் கூட நா தான் அவனை கொண்னுடேன் நா அவனை வெளியே தள்ள முயற்ச்சி செஞ்சு இருக்கனுமே தவிர இப்படி பண்ணுருக்க கூடாது என புலம்பியவளை முறைத்த ஷிவானி லூசு மாதிரி பேசாத நீ அப்படி பண்ணதால தான் உனக்கு ஒன்னும் இல்லை நீ எதையும் யோசிக்காம ஊருக்கு போ...எல்லாதையும் மறந்து நிம்மதியா இரு சரியா ஊருல அஞ்சனா அக்கா கிட்ட எல்லாம் பேசிட்டேன் அவுங்க உன்ன பாதுப்பாங்க.... இப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை அப்படி மைன்ட பீக்ஸ் பண்ணிக்கோ என பல அறிவுறை கொடுத்து அஞ்சலியை ஊருக்கு கிளப்பிருந்தாள் அவள்..‌

ஊருக்கு கிளம்பி நின்றவளை யாரும் வந்து போய்டு வா என்று கூறி வழி அனுப்பி வைக்காது போகும் அளவு கூட நெஞ்சின் ஈரம் வற்றி போனதோ எல்லாரும் அவர் அவர் அறையில் அடைந்து கொண்டு வெளியே வந்தார்கள் இல்லை....ஆரவமோ அவள் நலத்தின் மேல் அக்கறை இல்லாதவர்களிடம் கரிசணம் எதிர் பார்ப்பதும் அப்பத்தம் தானே என்பதே உணர்ந்தாலோ என்னமோ தன் சித்தப்பாவிடம் மட்டும் கூறி கொண்டு அவருக்கு பல பத்திரம் கூறி விடைப்பெற்றாள் அஞ்சலி...



ஷிவானியின் பேச்சில் தெளிவடைந்தவள் சற்று நிம்மதியாகவே பயணத்தை மேற்கொண்டு இருந்தாள்...

அடிக்கடி வீட்டில் நிலை கொள்ளாது ஊர் சுற்றி திரியும் வெற்றி இரண்டு நாட்களாக வீட்டிற்கு வராமல் போனது ஒன்றும் தேவகிக்கு முக்கியமாக படாது போனதில் அவன் எங்கே என்ற கேள்வியை அஞ்சலியடம் முன் வைக்க தேவையற்று போனது....இதன் பின் அனைத்தும் நாம் அறிந்தவையே....

அனைத்தையும் சரணிடம் ஒப்பித்து முடித்த பின்னும் கூட சில விசயம் புலப்படாது அப்போ அவனோட பாடிய என்ன பன்னீங்க என்ற கேள்வியை முன் வைத்து புருவத்தை ஏற்றி இறக்கியவனை பார்த்து...அது எங்களுக்கே தெரியலை...

உச் என சலித்தவன் கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க உங்களுக்கே தெரியாதுனா எப்படி நீங்க தான மறைச்சு வச்சது அதுவும் இல்லாம செத்தவன் எழுந்து ஒடவா போறான்...

அவன் கேட்டதை தொடர்ந்து அவனுக்கு உயிர் இருக்கானு பார்த்து மறைச்சு வச்சது நான் தான் அப்பறம் நைட் யாருக்கும் தெரியாம வண்டி ஏற்பாடு பண்ணி அவனை கொண்டு போய் டிஸ்போஸ் பண்ணலாம்னு நெனச்சு அங்க போய் பார்த்த அப்போ அவன் அங்க இல்லை ஆனால் நா அவன் மேல சுத்தி இருந்த தார்பாய் அதே எடத்துல இருந்துச்சு அதுனால அவன யாரும் எங்களுக்க தெரியாம தூக்கி இருக்க வாய்ப்பு இல்லை ..அப்படினா அவன் உயிரோட தான் இருக்கனும் என்று மொத்ததையும் அவனிடம் கூறியிருந்தவள் கடைசியாக அஞ்சலி பத்திரம் என்று கூறி விடைப்பெற்றாள்..


அவளிடம் பெற்ற அத்தனை தகவல்களையும் எழுத்து பிறழாமல் அதர்ஷனிடம் கூறி தன் கடமை முடிந்தது என அடுத்து அவனை வட்டமடிக்கும் வேலையை பார்க்க நகர்ந்து இருந்தான் அவன்..

இதை அனைத்தையும் மன கண்ணில் ஒடவிட்டபடி அஞ்சலியை நெஞ்சில் சாய்து தூக்கத்தை தொலைத்து விட்டத்தை வெறித்திருந்தான் அதர்ஷன்...

நினைவுகளை பின்னோட்டி யோசித்து இருந்தவனின் நினனைவோடு ஒட்டுனியாக அவள் பட்ட துன்பத்தை கேட்டறிந்ததும் வந்து விரிந்ததில் துடித்து போனவன் தன் நெஞ்சில் சாய்ந்து தூங்கியவளை பக்கவாட்டாக இறுக்கி தன் துடிப்பிற்கு இதம் தேடியும் அவள் வலிகளுக்கு மயிலிறகால் வருடி காயத்தை துடைத்து ஏறியவும் முனைந்தானோ...

தன் அழுத்ததில் விழித்தெழ போனவளை தட்டி கொடுத்து இதமாக நெற்றி முத்தம் இட்டு அரவணைத்து கொண்டதில் தூக்கத்தை தொடர்ந்து அதை நீட்டிக்கும் முன் அவன் இமை கொட்டாத குறுகுறு பார்வையின் குறுகுறுப்பில் மொத்தமாக உறக்கம் களைந்து எழுவதை பார்த்தவன் அதே நிலையில் தூங்குவதை போல் பாசாங்கு செய்தான் கள்ளன் அவன்...

கண் விழித்ததும் தன் முகம் அருகில் இருந்த அவன் முகம் பார்த்து அவள் இதழில் படர்ந்த மென்னகை நிமிடங்கள் கடக்க மங்கி போனது நேற்றைய நினைவில்...


நேற்று ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்திருந்த போது வீட்டின் மெயின் கேட் ஒரத்தில் இருந்து ஒர் உருவம் தன்னை தொலைப்பதை உணர்ந்தவள் இருட்டில் புலப்படாததில் உற்று நோக்க அவளுக்கு சிரமம் அளிக்காமல் வெளிச்சத்திற்கு தன் முகத்தை கொண்டு வந்து சிரித்த உருவத்தை பார்த்த போது மிரண்டு எழுந்து நின்றாள்...

உடல் மொத்தமும் வியர்க்க நின்றவளுக்கு சப்த நாடியும் ஆட்டம் கண்டு கண்கள் கரித்து கண்ணீர் கொட்டியது அந்த உருவத்தை கண்டு...

தான் யார் செத்துவிட்டான் என நினைத்தாலோ அவனே தான் இதோ முன் நிற்கிறான் அவனை கண்டதும் தான் நிரபராதி என்று மனம் நிம்மதி கொள்ளாமல் மாறாக பயமே மிஞ்சியது...அதே குரூர புன்னகை கண்கள் தாங்கிய வெறி என அவ்வளவு தூரத்தில் இருந்த போதும் தெளிவாக அந்த கண்கள் கட்டிய உணர்ச்சியை கண்டு பயத்தில் சுருண்டாள் அஞ்சலி...

அவள் நேற்றைய விஷயத்தை நினைத்து முகம் சுணங்குவதை கண்டவன் தன் அனைப்பை இறுக்கி அவள் காதின் ஓரம் குனிந்து நா இருக்கேன் டா அம்மு என முனுமுனுக்க அவளும் அவள் அனைப்பில் இதமாக அடங்கி தெரியும் என அவனே எதிர்பார்திராத பதிலை கூறியது... காதல் மனதில் துளிர்விட்டு நிலைகொண்டதால் வந்த நம்பிக்கையோ...

தொடரும்......
 
Last edited:
  • Love
Reactions: Kameswari