• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕 59 (முடிவுரை பார்ட் -1)..

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
90
146
33
Madurai
மின்னல் பூமித்தாயை முத்தமிட கள்ளன் போல் நொடி பொழுதினில் வந்து தழுவி முத்தமிட்டு செல்வது போல் நாட்களில் நகர்வு அத்தனை வேகமாக கடந்திருந்தது எல்லொருக்கும்...

வேகமான நகர்வின் காரணமாக இரண்டு வருடமே முடிவடைந்திருந்தது..

தேவாவின் காதலின் சமாச்சாரங்களும் வீரின் காதல் சமாச்சாரங்களும் குடும்பம் மொத்ததிற்கு தெரிந்திருந்தும் பெண் வீட்டார்கள் தங்கள் பிள்ளைகளை ஒரு ஒரு காரணத்தோடு கொஞ்ச நாட்கள் தங்கள் பிள்ளைகளை தங்களொடே வைத்து கொண்டு விட்டு பின் ஆறு மாதங்கள் செல்ல அவர்கள் விருப்பப்படியே திருமனம் செய்து வைக்கலாம் என்றவர்கள் செய்து வைத்த முடிவு சிரமம் இல்லாம் சீக்கிரமே மாறி போனது சிறுவர்களின் லூட்டியில்...

பொதுவாக மற்றவரின் இடையில் எனக்கு உரிமை உண்டு என தன் இஷ்டத்திற்கு கண்டிப்படி காதல் லீலைகளை புரியவில்லை என்றாலும் மறைவான இடத்தில் நடைப்பெறும் லீலைகளை தடுப்பார் யாரும் இல்லை என்பதால் விரசம் இல்லாத செல்ல கொஞ்சல்கலும் அடிக்கடி கூட்டத்தின் முன்பு பார்வை பரிமாற்றங்களும் பெரியவர்களை சற்று சலிப்படைய செய்தது...

எப்பா போதும் டா விட்டா பார்வையிலேயே கல்யாணம் பண்ணி புள்ள குட்டி பெத்துறுவீங்க போல என்று இத்தனை நாட்கள் அவர்கள் பார்வைகளை கண்ணுற்ற அதர்ஷன் அதற்கு டெஸிக்காஸ்டாகும் ஒரே பிரோகிராமை பார்க்க விரும்பாத அதர்ஷன் தான் பெரியவர்களிடம் பேசி அவர்கள் எடுத்த முடிவை தடம்புரல செய்து இரண்டே மாதங்களில் இருவரின் கல்யாணங்களலயும் படு பேஷாக முடித்து வைக்க ஏற்பாடு செய்திருந்தான்...

தங்கள் கல்யானத்தின் போது கேலி செய்தவர்களை பழி வாங்கியே தீர வேண்டும் என அதர்ஷனும் அஞ்சலியும் கங்கனம் கட்டி கொண்டு திரிந்ததாய் பாவம் புது மணமக்கள்களை அவர்களே தப்பு தான் தப்பு தான் உங்க பவர் தெரியமல் உங்க கிட்ட வால் ஆட்டுனது தப்பு தான் என கையெடுத்து கும்பிட்டு வேண்டும் அளவிற்கு புருஷனும் பொண்டாட்டியுமாக கூட்டு சேர்ந்து கொண்டு தாளித்து விட்டனர் அவர்களை...

பாவம் அவர்கள் கெஞ்சிய பிறகாவது விட்டார்களா என்றால் அதான் இல்லை இன்னும் லூட்டி அதிகமாகி போனது...

வாங்கிய கேலி பேச்சுகளையும் கண்டல்களையும் திருப்பி செய்ய வேண்டும் என்ற பெரிய மனதோடு எப்படி எப்படி நாத்தனார் கொடுமை பண்ணுவிங்களோ எங்க இப்போ பண்ணுங்க பார்ப்போ இப்போ உங்களுக்கு மார்கெட் இல்லை ஆனா நாங்க அப்படி இல்லை இப்போ தான் நாங்க மார்கெட்ல பீக் தெரியும்ல என்றவளை பார்த்து...

வாயை பிளந்த இரு பெண்களும் அக்கா அக்கானு பாசமா கூப்பிட்டியேடி இப்போ அன்னியா டிராஸ்பார்ம் ஆனது அதை எல்லாம் மறந்தா எப்படி என்றவர்களை பார்த்து நீங்க மட்டும் பாவம் பாத்தீங்கலா என்றவள் அவள் இரு பாசமலர்களையும் விட்டு வைக்கவில்லை...

அதில் இருவரும் ஆத்தா பரதேவதை இதை எல்லாம் நிறுத்திக்க கூடாதா இவுங்க கூட சேர்ந்து ஆச்சியையும் அப்பனையும் களைச்சது தப்பு தான் அதுக்குனு இப்பிடியா என்றவனை பார்த்து...

ஒஒ இன்னும் வேணுமா இருங்க என்றவள் அவர்களுக்கு ஆப்பு வைக்கவே தன் கனவனையும் கூட்டு சேர்த்து கொண்டாள்...

இதழை பிதுக்கி கொண்டு ஆது மாமா இவுங்க எல்லாம் என்ன கேலி பண்ணுறாங்க என்னனு கேளுங்க என அங்கே சில விஷயங்களை சரி பார்த்து கொண்டிருந்த தன் கனவனிடம் வாகாக கோர்த்து விட்டதில் அவனும் கிளம்பி வந்து விட்டான்...

எவன்டா அவன் என் பொண்ணாட்டியை களைச்சவன் என்று வந்தவன் தன் மனைவி இதழ் பிதுக்கி புகார் வாசிக்கும் கோலத்தை பார்த்து கிறங்கினாலும் மனைவி கொடுத்த புகாரை முதலில் விசாரக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அவர்கள் புறம் திரும்பியவன் எவன்டா அது என்றவனை பார்த்த தேவா...

அண்ணா இது எல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலை இப்படி புது கப்பல்ஸை வச்சு செய்றீங்கலே உங்களுக்கு இது அநியாயமா தெரியலை இரண்டு சமத்து பயன்களை நீங்க களைச்சு தள்ளுறது தப்பா படலை என்றவனை பார்த்து இல்லை என்று படக்கென கூறியதில் அஞ்சனாவே பக்கென சிரித்து விட்டிருந்தாள்...

ஏன்டி உன் புருஷனை அவர் களைக்கிறாரு நீ என்னடானா சிரிக்கிற என மனைவியை பார்த்து முறைத்தவனை பார்த்து நீங்க தானே டைலாக் பேசி மாட்டுனீங்க அப்போ நீங்க தான் உங்களை காப்பாத்திக்கனும் உங்களை காப்பாத்த வந்து நா மாட்டிக்கவா என்னால முடியாதுபா என் பாடி தாங்காது என கவுன்டர் கொடுத்த அஞ்சனாவின் பேச்சை கேட்டு அங்கே மீண்டும் கொள்ளென ஓர் சிரிப்பலை பரவியது...

அம்மு நீ வாடா பாவம் பசங்க ரொம்ப பயந்து போய் இருக்காங்க நம்ம கொஞ்ச அவுங்களுக்கு ரெஸ்ட் கொடுத்துட்டு நம்மளும் ரெஸ்ட் எடுத்துட்டு அப்பறமா வருவோம் என அவளை அழைத்து சென்ற அதர்ஷனை பார்த்த வீர்...

என்னது கொஞ்ச நேரம் கலிச்சு மீண்டுமா என வாயவிட்டே புலம்பியிருந்தான்...


என்னதான் கேலியும் கிண்டளுமாக அவர்களை வாரி விட்டாலும் ஆண்கள் இருவருக்கும் எந்த குறையும் தெரியாதபடி அண்ணன் அண்ணியாக முன் நின்று தாய் தந்தை ஸ்தானத்தில் உரிமையாக அனைத்தையும் எடுத்து செய்த இருவரையும் நினைத்து இருவரின் நெஞ்சத்திலும் பூ மழை சாரலாக தேன் வார்த்து தித்தித்தது..‌

கல்யானத்திற்கு கொஞ்ச நொடிகளுக்கு முன் வரையும் கூட நெஞ்சோடு அழுத்திய தங்களுக்கு யாரும் இல்லையே என்ற ஏக்கம் அவர்கள் செய்கையில் முற்றிலுமாகவே மறைந்து போனது...

அவர்களுக்கு பக்க துனையாக நின்று கல்யானத்தை வெகு சிறப்பாக முடித்து வைத்த அதர்ஷன் தம்பதியினர் வீட்டிற்கு வந்த சில நேரத்தில் வீர் மற்றும் தேவாவை தனியாக அழைத்து சென்று அவர்கள் கையில் தனிதனியாக ஒரு சில கொப்புகளை தினித்திருந்தனர்...


அதனை பிரித்து பார்த்த இருவரும் முதலில் அதர்ஷனை உன்றி பார்த்து விட்டு அஞ்சலி புறம் திரும்பியவர்கள் என்னது இது அஞ்சலி என் கேட்கவும் பதில் கூற வந்த அதர்ஷனை தடுத்து தானே பதில் அளித்திருந்தாள்...

அண்ணா எங்க கல்யானத்தை அப்போ நீங்க செஞ்ச நாங்க எதுவும் மறுக்காம ஏத்துக்கிட்டோம்ல அதே மாதிரி உங்க கல்யானத்துக்கு எங்களோட கிப்ட் அதுனால சந்தோஷமா ஏத்துக்கோங்க என்றவளை பார்த்த வீர்...

வேறும் நம்மக்குள் வேறும் கொடுக்கல் வாங்கல் உறவு‌ மட்டும் தானா நாங்க உன் அண்ணனா நினச்சு தான எங்களால முடிஞ்ச சின்ன கிப்ட்டா உனக்கு கொடுத்தோம் ஆனா நீ அதை சரிக்கட்டுற மாதிரி இப்படி எங்க கைல கொடுக்குறது சரியா...மறைமுகமாக எங்களை வீட்ட விட்டும் போக சொல்லுற அதான என்றவனை அவரசரமாக தடுத்தவள்...

அண்ணா உங்கள் பெயர்ல ஒரு கம்பெனி எழுதி வச்சதுக்கும் தேவா அண்ணா பெயர்ல ஒரு அக்கெடமி அமைச்சு கொடுத்ததுக்கும் காரணம் உங்களை வீட்ட விட்டு துரத்தனும்ங்கற எண்ணம் இல்லை அதே மாதிரி உங்களை வெளிய விடுற ஐடியாவும் இல்லை...

வீர் அண்ணாக்கு எப்போதுமே என் புருசனுக்கு துனையா இருக்க ஆசை தான்னு தெரியும் இருந்தாலும் எத்தனை நாள் புருஷனோட நிழல்லையே அவரோட சொந்த கம்பெனி வைக்கனும்ங்கற அசைய போதச்சுகிட்டு வேலை பாப்பாரு அதே மாதிரி தான் நீங்களும் உங்களுக்கு சொந்தமா ஒரு அக்கெடமி வச்சு எல்லாருக்கும் தற்காப்பு கலை சொல்லி தர தான ஆசை ஆனா நீங்களும் சும்மா ஆப்பிஸ்ல ஆப்பிஸ் பாய் மாதிரி எதுக்கு சுத்தி வரனும்...

இப்போ இது எல்லாம் சாதரனமா தோன்றினாலும் பிறக்ககாலத்துல நம்ம ஆசைப்படி செய்ய முடியலையேனு நீங்க கவலைப்பட கூடாதுனு தான் இது மத்தபடி உங்களை வெளிய அனுப்புற ஐடியாலா இல்ல என்று நீளமாக விளக்கம் கூறியவளை இருவரும் பிரம்மிப்பாகவே பார்த்தனர் இத்தனை நாள் தங்களுக்கு தங்கையாக தொற்றம் காட்டியவள் இப்போது அன்னையாக திகழ்ந்தகருந்தாள்...


தங்கள் மனதில் இருந்த விஷயங்களை பக்காவாக அறிந்து கொண்டு நிறவேற்றிவளின் பரிசை அதற்கு மேல் புறக்கனிக்க தோன்றாது ஏற்று கொண்டனர் இருவரும்...

அதர்ஷன் மற்றேம் அஞ்சலிக்கு கிடைத்த உண்மையான சொந்தமான இவ்விருவரை தங்களோடே தக்கவைத்து பாதுகாத்து கொள்ள கொஞ்ச மெனக்கிட வேண்டும் என்பதற்கும் தான் இதை முழு மனதோட செய்திருந்தனர்...

காதல் என்ற ஒற்றை வார்த்தை சீர் குழைந்து எல்லொரின் வாழ்வையும் சீர் செய்ததாய் சந்தோசத்தை மட்டுமே இப்போது அள்ளி தெளித்ததிருந்தது..

யாரும் இல்லை என்று கவலை கொண்டவர்கள் இப்போது குடும்பஸ்தர்களாகி போனதில் முன்பு போல் கவலை கொள்ள தான் நேரம் இன்றி போனது மற்றபடி அமுக்கு டுமுக்கு அமால் டுமால் தான்...


இரு தம்தியினருக்கும் திருமனமாகிய அடுத்த முன்று மாதங்களில் கருவுற்றிருந்த ரிதன்யாவிற்கு போட்டியாக மறு மாதமே கருவுற்று போன அஞ்சனாவையும் பார்த்து மனதோடு தனக்கு இன்னும் குழந்தை இல்லையே என அஞ்சலி ஏக்கம் கொண்ட போதும் இருவரையும் எண்ணி பூரித்தே போயிருந்தாள் அவள்...

ஏழு மாதங்கள் தொட்ட போதும் இரு பெண்களும் தன் தாயகத்திற்கு செல்லாது தன் கணவனோடே தங்கி கொண்டதில் அஞ்சலி தான் மிகவும் மகிழ்ந்து போனாள் ஏணினில் அவர்கள் சென்று விட்டாள் இப்போது அவர்கள் வயிற்றில் கை வைத்து உணர்ந்து கொள்ளும் குழந்தையின் ஸ்பரிசம் எல்லாம் கிடைக்காது விட்டு போகுமே என...


ஒன்பதாவது மாதத்தில் இரு பெண்களுக்கும் தனி தனியாக பெரும் அளவு கொண்டாடபட்ட போதும் அஞ்சலி ஆரவமாகவும் துள்ளளோடுமே கலந்து கொண்டிருந்தாள்...

அவர்கள் பெரும் வட்ட குடும்பத்தாரும் அஞ்சலிக்கு குழந்தை இல்லை என்பதை காரணம் காட்டி விலக்கி வைக்கவில்லை என்றாலும் வீட்டிற்கு வரும் பல்வேறு மாதிரியான மனிதர்கள் அதனை அப்படி விட்டு விடும் மனம் பாவம் இன்றி வார்த்தையால் குத்தி கொண்டிருந்தற்கு அதர்ஷன் பதிலடி தரும் முன் அஞ்சலி மயங்கி சரந்திருந்தாள்...

மயங்கி சரிந்தவளை கையில் ஏந்தி கொண்டு அறக்க பறக்க ஒடி சென்று மருத்துவமனை அடைந்து அவளை அனுமதித்தவன் பதற்றமாகவே அமர்ந்திருந்தான்...

சிறிது நேரம் செல்ல வெளி வந்த மருத்தவர் அதர்ஷன் கொஞ்சம் வாங்க என தன் அறை கூட்டி சென்று அமர வைப்பதற்குள் என்னச்சு மேடம் அஞ்சலி ஏன் மயங்கினா ஏதாவது பிரச்சனையா என பல கேள்விகள் கேட்டு குடைந்தவனை பார்த்து..

அதர்ஷன் முதல்ல கொஞ்சம் கேளுங்க என்ற அந்த கைனோ மெல்ல பேச்சை அராம்பித்தார் அவுங்க பிரக்னன்டா இருங்காங்க என்று கூறி அடுத்து தொடர வரும் இங்கே ஒருவனுக்கு காற்றில் மிதப்பது போலான நிலை...

தனக்கும் தன் அம்முவுக்குமான குழந்தை என் ஜாடையை கொண்டிருக்குமா அல்லது அவள் ஜாடையில் இருக்குமா கண்டிப்பா அம்முவின் குட்டி மினிச்சராக தன் அம்முவை தூக்கி கொண்டே திரிய முடியாத குறையை இந்த குட்டி நிறைவேற்றுவாள் என பல கற்பனைகளோடு மிதந்தவன் அவர் முகத்தில் படர்ந்த கலவரத்தை கவனிக்க தவறியிருந்தான்...

மெல்ல மிஸ்டர் அதர்ஷன் என இழுத்தவர் இதுக்கு முன்னாடி அவுங்களுக்கு எதுவும் வயித்துல பிரச்சனை இருந்துச்சா என்று கேட்கவும் ஆம் என தலை அசைத்து கத்தி குத்தி பட்டதை பற்றி கூறவும் தலை அசைத்து கொண்டவர்...

என்னால எவ்வளவுக்கு இந்த பிரெக்னேன்சிய சாத்தியப்படுத்த முடியும்னு தெரியலை எனவும் கனவுகள் மெல்ல களைவது போலான பிரம்மையோடு கண்களை குறுக்கியவனை பார்த்து மேலும் அவரே தொடர்ந்தார்...

அவுங்க வயித்துல காயம் பட்டதுனால குழந்தையோடு வளர்ச்சிக்கு ஏத்தமாதிரி போக போக விரிவடையுமானு கொஞ்சம் சந்தேகம் தான் அதுனால இதை மேக்ஸிமம் அபார்ட் பண்ணுறது நல்லது என கூறவும் தன்னை மீறி ஏய் என கத்தியவனை பார்த்து அவர் திடுக்கிட்டாலும் அவனின் நிலையும் அவருக்கு புரியாமல் இல்லை...

மிஸ்டர் ஜெஸ்ட் காம் டவுன் எனவும் அப்படியே அமர்ந்தபடியே தன் உடம்பை குறுக்கி கொண்டவன் குழந்தை போல் இதழை பிதுக்கி தேம்பினாலும் சாமர்த்தியமாக கண்ணீரை வெளி சிந்தாது அடக்கியவனை பார்த்து...

நீங்க பர்ஸ்ட் காம் ஆகிட்டு அவுங்களை பார்த்து அவுங்களுக்கும் நிலைமைய எடுத்து சொல்லி புரிய வச்சு அடுத்த அடுத்த பண்ண வேண்டிய பார்மெலட்டிஸ்கு தயாராகுங்க என கூறியதும் தன்னை சற்று கட்டுபடுத்தி கொண்டு எழுந்து நின்றவன் மெல்ல திடுக்கிட்டு அடித்து கொள்ளும் மனதை இறுகி பிடித்து கொண்டை அஞ்சலியை அனுமதித்த அறையினுள் நுழைந்தவன் அவளுக்கு ஏதிராக போடப்பட்டிருந்த இருக்கையில் இடம் பிடித்து கொண்டு அவளை பார்வையால் தழுவியவனுக்கு அவளிடம் எதில் ஆரம்பித்து பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்தி புரிய வைக்க என தவித்திருந்தான்...

அவன் எண்ணி இருந்ததை போலவே அவள் எழுந்த பின் தன் கருவறையில் சிறு மொட்டாக உதித்த கருவை நினைத்து ஆனந்தம் அடைந்ததோடு அடுத்து அடுத்து அதர்ஷன் அடுக்கிய விளக்கங்களை ஏற்று கொள்ள விருப்பமன்றி களைக்க அனுமதிக்கவே மாட்டேன் என மருத்துவமனையையே கலவரமாக்கியிருந்ததில் நொந்தே போனான் அதர்ஷன் வர்மா...

தொடரும்...
 
Last edited:
  • Like
Reactions: Maheswari